.
வரலாறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வரலாறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, பிப்ரவரி 13, 2026

பொள்ளாச்சியில் 200 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது பொய்யா? இதோ ஆதாரம் - 'தி இந்து' நாளிதழே, மன்னிப்புக் கேள்!

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்பொழுது பொள்ளாச்சியில் 200 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாகப் 'பராசக்தி' படத்தில் காட்டியிருப்பது பொய் என்று சொல்லியிருக்கிறார் முன்னாள் இந்தியப் படை அலுவலர் (Ex-Army officer) தேவசகாயம் (இணைப்பு - tinyurl.com/DevasagayamInterview)

தி இந்து நாளிதழில் கடந்த சனவரி 17 அன்று வெளியாகியிருக்கும் மேற்படி செவ்வியில் (interview) அவர்  மேலும் கூறுகையில், "இயந்திரத் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டதாகச் சொல்வதும் பொய். போல்ட்-ஆக்சன் .303 ரைஃபிள் வகைத் துப்பாக்கிகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டன. இறந்தோர் எண்ணிக்கை 10 மட்டுமே" என்கிறார்.

அப்படியானால் இது என்ன தோழர்களே?👇🏽

13.02.1965 dated 'The Indian Express' says light machine guns used in Pollachi Massacre

இங்கே படத்தில் நீங்கள் பார்ப்பது 'பொள்ளாச்சிப் படுகொலை' எனக் குறிப்பிடப்படும் மேற்கண்ட கொடூர நிகழ்வு நடந்த மறுநாள் (13.02.1965) வெளியான தி இந்தியன் எக்சுபிரசு நாளேட்டின் முகப்புப் பக்கம். (இணைப்பு: tinyurl.com/Feb13-1965-IE)

இதில் "எளிய-இயந்திரத் துப்பாக்கிச் சூடு [Light machine gun (LMG) fire]" என்று தெள்ளத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதைப் பாருங்கள்!

"அப்படியே இருந்தாலும் எண்ணிக்கை தவறுதானே? நீ காட்டும் இந்தியன் எக்சுபிரசு நாளேட்டிலேயே உயிரிழந்தோர் 10 பேர் என்றுதானே குறிப்பிடப்பட்டிருக்கிறது. தேவசகாயமும் அதே எண்ணிக்கையைத்தானே கூறுகிறார்? அப்படியானால் அவர் சொல்வது சரிதானே?" என்று நீங்கள் கேட்கலாம்.

இயந்திரத் துப்பாக்கியைப் பயன்படுத்தி மக்கள் கூட்டத்தைப் பார்த்துச் சுட்டால் வெறும் 10 பேர் மீதுதானா படும்? இதை நான் கேட்கவில்லை, அதே செவ்வியில் தேவசகாயமே சொல்கிறார்.

"நாங்கள் இயந்திரத் துப்பாக்கியைப் பயன்படுத்தியிருந்தால் சில பல நூறு சுற்றுகள் சுடக்கூடிய அவை நூற்றுக்கணக்கானோரைக் கொன்றிருக்கும்" என்கிறார்.

இயந்திரத் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டது உண்மைதான் என்று மறுநாளே வெளியான செய்தித்தாள் மூலம் இப்பொழுது நமக்கு உறுதியாகிவிட்டதால் இயந்திரத் துப்பாக்கிச் சூட்டின் விளைவு பற்றி இவர் சொல்லும் கருத்தையும் இணைத்துப் பார்க்கும்பொழுது கொல்லப்பட்டோர் எண்ணிக்கை நூற்றுக்கணக்கில் இருந்திருக்கும் என்ற முடிவுக்குத்தானே நாம் வர வேண்டியிருக்கிறது? என்ன இருந்தாலும், இவ்வளவு பெரிய கலவரம் நடந்த மறுநாளே கொல்லப்பட்டோர் எண்ணிக்கை செய்தித்தாளில் சரியாக வரும் என நாம் எதிர்பார்க்க முடியாது இல்லையா?

சரியாக இதே நாளில் 61 ஆண்டுகளுக்கு முன் வெளியான இந்த நாளிதழ் இப்பொழுதும் இணையத்தில் கிடைக்கிறது. உண்மை இப்படி வெட்டவெளியில் இருக்கும்பொழுது, இவை எதையுமே ஆராயாமல் முன்னாள் படைவீரர் என்பதற்காக, ஒருவர் சொன்னதை அப்படியே வெளியிட்டுப் பொய்த்தகவல் பரப்பிய தி இந்து நாளிதழ் தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும்!

இப்படி விரல்நுனியில் அனைத்து விவரங்களும் கிடைக்கும் இந்தத் தகவல் ஊழியிலேயே (information era) இவன்கள் இப்படிப் பச்சைப் பொய்யை வாய்கூசாமல் சொல்கிறான்களே, இப்படி எந்த வசதியுமே இல்லாத அந்தக் காலத்தில் இவன்கள் என்னென்ன பொய்களைச் சொல்லியிருப்பான்கள்? எப்பேர்ப்பட்ட உண்மைகளையெல்லாம் மூடி மறைத்திருப்பான்கள்?😡

அனைத்தையும் வெளியில் கொண்டு வரத் தேவை இன்னும் பல 'பராசக்திகள்'! தீ பரவட்டும்!🔥

படம்: நன்றி தி இந்தியன் எக்சுபிரசு, கூகுள் புக்சு

வெள்ளி, ஜனவரி 02, 2026

திருத்தணி சிராஜ் தாக்குதல்! - திரைப்படங்களுக்கு எந்தப் பங்குமே இல்லையா?


திருத்தணியில் வடமாநிலத் தொழிலாளர் சிராஜ் தாக்கப்பட்ட வேதனையில் வெளியிடும் காணொளி! 😟😢

திரைப்படங்களைக் குற்றம் சாட்டுவது என் நோக்கமில்லை. உண்மையில் திரைப்படங்கள் மீதான நம்பிக்கைதான் இப்படி ஒரு காணொளியை வெளியிட என்னைத் தூண்டியது.

நான் சொல்லியிருப்பது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

உங்கள் கருத்துக்களை எனக்குத் தெரிவியுங்கள்!

சனி, ஜூன் 14, 2025

கீழடியின் தொடக்கக்காலம் கி.மு.580 எனப் பறைசாற்றும் கரிம ஆய்வுகள்!... - TOI கட்டுரைக்கு என் மொழிபெயர்ப்பு

Keeladi excavation area - Aerial view
கீழடி - வான்வழிப் பார்வை

இந்தியாவின் இரண்டாவது நகர்மயமாக்கம்: கீழடியின் தொடக்கக்காலம் கி.மு.580 எனப் பறைசாற்றும் கரிம ஆய்வுகள்! கங்கைச் சமவெளிக்கு இணையான பழமை வாய்ந்தது கீழடி என்பது உறுதியாகி விட்டது!

மூலம்: A.ரகு ராமன் | டைம்ஸ் ஆஃப் இந்தியா (13.06.2025)
இணைப்பு: https://tinyurl.com/fdmdmvf4
மொழிபெயர்ப்பு: இ.பு.ஞானப்பிரகாசன்

மதுரையில் உள்ள கீழடி அகழ்வாய்வுத் தளம் தமிழ்நாட்டின் பண்டைய வரலாற்றில் இன்னொரு புதிய வாசலைத் திறந்து வைத்துள்ளது. அமெரிக்காவின் பீட்டா அனலிட்டிக்ஸ் ஆய்வுக்கூடம் நடத்திய கதிர்க்கரிமக் காலக்கணக்கீட்டால் (Radiocarbon dating), இத்தளம் கி.மு.6-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என உறுதி செய்யப்பட்டுள்ளது. இது கங்கைச் சமவெளியின் நகரமயமாக்கலுடன் ஒத்த காலகட்டத்தைச் சேர்ந்ததாகும்.

2017-18 அகழ்வாய்வுப் பருவம் முதல் தமிழ்நாடு தொல்லியல் துறை தேர்ந்தெடுத்த 29 கதிர்க்கரிம மாதிரிகளுள் (Radiocarbon samples) மிகப் பழமையானது கி.மு.580-ஐச் சேர்ந்ததாகவும் அண்மையிலானது கி.பி.200-ஐச் சேர்ந்ததாகவும் உள்ளது.

இங்கு கண்டெடுக்கப்பட்ட பொருட்கள், கி.மு.6-ஆம் நூற்றாண்டுக்கும் கி.பி.2-ஆம் நூற்றாண்டுக்கும் இடையில் ஏறக்குறைய 800 ஆண்டுகள் நகரம் மற்றும் தொழில்மயமான குடியிருப்பு தொடர்ச்சியாக இங்கே செழித்திருந்ததைக் காட்டுகின்றன. இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ள சங்கக் காலத்தைச் சேர்ந்த பெரிய செங்கல் கட்டுமானங்கள் சங்க இலக்கியங்களில் விவரிக்கப்பட்டுள்ள நகரமயமாக்கலுக்கு ஆதாரமாக விளங்குகின்றன.

“செங்கல் கட்டுமானங்களுக்கு மேல் கிடைத்த பெரும்பாலான மாதிரிகள் கி.மு.3ஆம் நூற்றாண்டுக்குப் பிந்தையவை. ஆனால் கீழே கிடைத்த மாதிரிகள் கி.மு.6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை” என்கிறார் தமிழ்நாடு தொல்லியல் துறையின் ஆலோசகரான தொல்லியலாளர் கே.ராஜன் அவர்கள். “இதனால் கீழடி, இந்தியாவின் இரண்டாவது நகரமயமாக்கலாகவும் கங்கைச் சமவெளியுடன் இணையாக வைத்துக் கருதத்தக்கதாகவும் அமைந்துள்ளது. கதிர்க்கரிமக் காலக்கணக்கீடு செய்யப்பட்ட 29 மாதிரிகளுள் 12 மாதிரிகள் அசோகன் காலத்துக்கு முந்தையதான கி.மு.3ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாக உள்ளன.”

மேலும், கொந்தகை பகுதியைச் சேர்ந்த இடுகாட்டில் அகழ்ந்தெடுக்கப்பட்ட ஒரு மண்டையோட்டின் மீது முப்பரிமாணத் தொழில்நுட்பத்தையும் (3D technology) உடற்கூற்றளவியல் அளவீடுகளையும் (anthropometric measurements) பயன்படுத்தி ஆராயும் தொல்லியலாளர்கள், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் கீழடியில் வாழ்ந்த பண்டைத் தமிழர்களின் முக அமைப்பைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் மேலும் ஒரு படி முன்னேறி இருப்பதாகத் தெரிகிறது.

“அந்த மண்டையோட்டைக் கொண்டு அதற்குரியவரின் வயது, உணவுமுறை, பாலினம், அவருடைய உண்மை முகம் ஆகியவற்றை நாங்கள் மறுகட்டமைப்புச் (reconstruction) செய்வோம்” என்கிறார் ராஜன்.

கி.மு.580-ஐச் சேர்ந்த கீழடி வாழ்க்கை முறையை மறுகட்டமைக்கும் இந்தப் பணிக்காக இந்திய நிறுவனங்கள், வெளிநாட்டு நிறுவனங்கள் என 20-க்கும் மேற்பட்ட ஆய்வு நிறுவனங்களுடன் தமிழ்நாடு தொல்லியல் துறை இணைந்து பணியாற்றி வருகிறது. இவற்றுள் பிரிட்டனின் லிவர்பூல் பல்கலைக்கழகம், இத்தாலியின் பீசா பல்கலைக்கழகம், சிகாகோவிலுள்ள ஃபீல்டு அருங்காட்சியகம், புதுச்சேரி பிரெஞ்சு நிறுவனம், காந்திநகர் இந்தியத் தொழில்நுட்பக் கழகம் (IIT), டெக்கன் கல்லூரி உள்ளிட்டவை அடங்கும்.

டெக்கன் கல்லூரி, கீழடியில் கண்டெடுக்கப்பட்ட விலங்குகளின் எலும்புகளைப் பகுப்பாய்வு (analysis) செய்து வருகிறது. காளைகள், எருமைகள், ஆடுகள், மாடுகள், செம்மறி ஆடுகள், நாய்கள், பன்றிகள், மறிமான்கள், புள்ளி மான்கள் ஆகிய விலங்குகளின் எலும்புகள் அகழ்வில் வெளிவந்துள்ளன. மதுரை காமராஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் பண்டைய மனித மரபணுக்கள் (ancient human DNA), விலங்கு மரபணுக்கள் (animal DNA) ஆகியவற்றைப் பகுப்பாய்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆய்வு கீழடியிலும் கீழடி மண்டலத்தைச் சேர்ந்த கொந்தகை எனும் ஊரிலும் வாழ்ந்த பண்டைய குடிமக்களின் குடிபெயர்ச்சி, இனக்கலப்பு ஆகியவற்றைப் புரிந்து கொள்ள உதவுகிறது.

இந்த அறிவியல் அடிப்படையிலான அணுகுமுறை மூலம் ஒரே தளத்தில் இருந்து 29 காலக் கணிப்புகள் கிடைத்துள்ளன.

கீழடியில் கண்டெடுக்கப்பட்டுள்ள தமிழி (Tamil-Brahmi) எழுத்துக்களுடன் கூடிய பானை ஓடுகள், தமிழி எழுத்துமுறையின் தோற்றத்தை கி.மு.6-ஆம் நூற்றாண்டுக்கு இட்டுச் சென்றுள்ளன. இங்கு கிடைத்துள்ள தங்கத்தாலான, தந்தத்தாலான கலைப்பொருட்கள் (artefacts) பண்டைய தமிழர்கள் செல்வச் செழிப்புடன் வாழ்ந்ததைச் சுட்டிக்காட்டுகின்றன.

கீழடி, எழுத்தறிவுடன் கூடிய ஒரு நகரமயமான குடியிருப்பாகவும் கலைஞர்களின் சமுகமாகவும் திகழ்ந்ததை இது காட்டுகிறது” என்கிறார் மாநிலத் தொல்லியல் துறைத் துணை இயக்குனர் ஆர்.சிவானந்தம் அவர்கள். “இது, கிழக்குக் கடற்கரைத் துறைமுகமான அழகன்குளத்தையும் மேற்குக் கடற்கரைத் துறைமுகமான முசிறியையும் மதுரை வழியாக இணைக்கும் பண்டைய வணிகப் பாதையில் அமைந்திருந்த ஒரு தொழிற்சாலை மையம்.” எனினும் இந்நகரத்தின் மூலப் பெயர் இதுவரை தெரியவில்லை.

சங்க இலக்கியங்கள் வெளிநாட்டு வணிகம், நகைகள், மணிக்கற்கள் (gemstones), மாநகரங்கள், தெருக்கள், அரண்மனை போன்ற கட்டடங்கள் பற்றிப் பேசுகின்றன. “அவையெல்லாம் கற்பனைக் கதைகளல்ல, பண்டைத் தமிழரின் உண்மையான வாழ்க்கை என்பதைக் கீழடி நிலைநாட்டிவிட்டது” என்கிறார் இந்தியவியல் ஆராய்ச்சியாளர் ஆர்.பாலகிருஷ்ணன் அவர்கள்.

கீழடியில் சுடுமண்ணாலான, தந்தத்தாலான தாயக்கட்டைகளைச் செவ்வக வடிவிலும் கனச்சதுர வடிவிலும் தொல்லியலாளர்கள் கண்டெடுத்துள்ளனர். “இவை சங்க இலக்கியத்தின் எட்டுத்தொகை நூல்களுள் ஆறாவதான கலித்தொகையில் குறிப்பிடப்பட்டுள்ளன” என்கிறார் பாலகிருஷ்ணன்.

“கி.மு.6-ஆம் நூற்றாண்டு வரலாற்றைக் காட்டுவது கீழடி மட்டுமில்லை. கொடுமணல், பொருந்தல், சிவகளை, ஆதிச்சநல்லூர், கொற்கை ஆகியவற்றிலும் இதே காலக்கட்டத்தைச் சேர்ந்த காலக்கணிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன” என்கிறார் ராஜன். “கொற்கையில் கி.மு.785 எனும் காலக் கணிப்பும் கிடைத்துள்ளது. இதன் மூலம் சங்கக்கால நகரமயமாக்கல் மிகவும் பரந்துபட்டிருந்தது என்பது உறுதியாகியுள்ளது.”

கீழடியில் 10 பருவங்களாக அகழ்வாய்வு நடைபெற்று வந்தாலும், 110 ஏக்கர் அளவில் அமைந்த பண்பாட்டுக் குவியல்களுள் ஆய்வாளர்கள் இதுவரை 4% மட்டுமே அகழ்ந்துள்ளனர். எனவே மாநில அரசு அகழ்வாய்வுகளைத் தொடர்ந்து நடத்தத் திட்டமிட்டுள்ளது. மேலும், கண்டுபிடிப்புகளைக் காட்சிப்படுத்த ஒரு அருங்காட்சியகம் தொடங்கப்பட்டுள்ளது. கூடவே, இந்தியாவிலேயே முதன்முறையாக நிகழ்கள அருங்காட்சியகம் (onsite museum) ஒன்றும் அமைக்கப்பட உள்ளது.

“பல காலமாகத் தொல்லியல் சார்ந்த அலட்சியத்தால் தமிழ்நாடு பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கீழடி தமிழர்களிடையே ஆர்வத் தீயைப் பற்ற வைத்துள்ளது” என்கிறார் பாலகிருஷ்ணன். “தமிழ்நாட்டின் தொல்லியல் புரிதலை மாற்றிய முதல் தளமே கீழடிதான்” என்கிறார் ராஜன்.

கீழடி சர்ச்சை

கீழடியில் நடந்த முதல் இரண்டு அகழ்வாய்வுகளுக்குத் (2014-2016) தலைமையேற்றவரான தொல்லியலாளர் கே.அமர்நாத் இராமகிருஷ்ணன் அவர்கள் கீழடி கி.மு.8ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி.3ஆம் நூற்றாண்டு வரையில் செயல்பட்டதாக 2023ஆம் ஆண்டு இந்தியத் தொல்லியல் ஆய்வகத்துக்கு (ASI) அறிக்கை அளித்தார். ஆனால் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ASI இந்தக் காலக்கணிப்பை எதிர்த்தது. இந்த இடத்தைக் கி.மு.300 வரையிலானதாகக் காலக்கணிப்புச் செய்வதுதான் (அதாவது குறைத்து மதிப்பிடுவதுதான்) சரியாக இருக்கும் என்று கூறியதோடு அதற்கேற்ப அறிக்கையைத் திருத்துமாறும் இராமகிருட்டிணனிடம் கோரியது. ஆனால் இராமகிருட்டிணன் தனது கண்டுபிடிப்பில் உறுதியாக இருந்தார்.

இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் (10.06.2025) ஒன்றியப் பண்பாட்டு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் கஜேந்திரன் சிங் செகாவத் அவர்கள் இந்த அறிக்கை துறைசார்ந்த வகையில் போதுமான அளவு துணைபுரிவதாக இல்லை என்றும் அறிவியல் சார்ந்த மதிப்பீடுகள் இன்னும் தேவை என்றும் தெரிவித்தார்.

ஏன் கீழடி முக்கியமானது?

  • சங்கக் காலத்தைச் (வரலாற்றின் தொடக்கக்காலம்) சேர்ந்த செங்கல் கட்டுமானங்களின் மிச்சங்கள் காணப்படுகின்றன.

தமிழ்நாட்டின் அரிக்கமேடு, காவிரிப்பட்டினம், கொற்கை போன்ற மற்ற சில அகழ்வாய்வுத் தளங்களைப் போலவே கீழடியிலும்,

  • அடுக்குகளுடன் கூடிய செங்கல் கட்டுமானங்கள்
  • தொட்டி போன்ற வசதிகளுடன் கூடிய வடிகால் அமைப்புகள்
  • இரட்டைச் சுவர்களுடன் கூடிய உலைகள்
  • சுடுமண் உறைகிணறுகள்

எனப் பற்பல வகைகளிலான கட்டுமானங்கள் கிடைத்துள்ளன.

கதிர்க்கரிமக் காலக்கணிப்பு (radiocarbon dating) எப்படிச் செயல்படுகிறது?

உயிரினங்கள் காற்றில் உள்ள கரிமத்தை (Carbon) உறிஞ்சுகின்றன. இவ்வாறு உறிஞ்சப்படும் கரிமத்துள் கதிர்க்கரிம ஓரகத்தனிமமான (radioactive isotope) C-14-உம் அடங்கும். அதே உயிரினங்கள் இறந்த பிறகு, C-14 உறிஞ்சப்படுவது நின்று அந்த உயிரினம் குறிப்பிட்ட விகிதத்தில் சிதையத் தொடங்கும். ஆகவே எஞ்சியுள்ள C-14 அணுக்களைக் கணக்கிட்டு அந்த உயிரினம் இறந்த காலத்தை மதிப்பீடு செய்ய முடியும். இதற்கு முடுக்கப் பொருண்மை அலைமாலையியல் (Accelerator Mass Spectrometry) எனும் முறை பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்தத் தொழில்நுட்பத்தில் C-14 அணுக்கள் நேரடியாக எண்ணிக் கணக்கிடப்படுகின்றன. வெறும் 1 கிராம் மாதிரியைப் பயன்படுத்தி ±30 ஆண்டுகள் அளவுக்குத் துல்லியமான காலக் கணிப்பை இதன் மூலம் பெறலாம்.

கீழடியில் கண்டெடுத்த பொருட்கள்

  • அகழப்பட்ட பரப்பளவு: 90 மீ., நீளம் 60 மீ., அகலம்.
  • பொருட்கள்: கண்ணாடி, சிப்பி, தந்தம், முத்து மற்றும் சுடுமண் மணிகள்
  • முத்திரைகள்
  • தாயக்கட்டைகள்
  • அடையாளம் தெரியாத செம்பு நாணயங்கள்
  • தங்க நகைகள்.

திங்கள், பிப்ரவரி 21, 2022

நட்சத்திர எழுத்தில் பெயர் சூட்டுவது தமிழர் வழக்கமா? - ஒரு நறுக்குச் சுருக்கான ஆய்வு

Naming a child with the letter of birth star is really a Tamil culture?
ப்பொழுதெல்லாம் வலைத்தள ஊடகங்களில், குழந்தைக்குச் சூட்டுவதற்குத் தமிழில் நல்ல பெயர் பரிந்துரைக்குமாறு பலரும் அடிக்கடி கேட்கிறார்கள். பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது! அதே நேரம், இப்படிக் கேட்பவர்களில் பலர் குழந்தை பிறந்த நாள்மீனைத் (நட்சத்திரம்) தெரிவித்து, அதற்குரிய எழுத்தில் தொடங்கும் பெயராகக் கேட்பதையும் பார்க்கிறோம்.

அதாவது இந்தியச் சோதிட முறையில் குறிப்பிடப்படும் 27 நாள்மீன்களில் (நட்சத்திரங்களில்) ஒவ்வோர் நாள்மீனுக்கும் உரியவையாகச் சில எழுத்துக்கள் குறிப்பிடப்படுகின்றன; அந்த எழுத்துக்களில் தொடங்குமாறு பெயர் வைப்பது சிறப்பானது என நம்பும் நம் மக்கள் அப்படிப்பட்ட பெயர்களை இணையத்தில் தேடித் துழாவுகிறார்கள். குறிப்பிட்ட எழுத்துக்களில் பெயர் கிடைக்காவிட்டால் அவற்றுக்கு மாற்றாகச் சோதிடம் பரிந்துரைக்கும் தொடர் எழுத்துக்களிலாவது கிடைக்குமா எனத் தவிக்கிறார்கள்.

இப்படி நாள்மீன் எழுத்தில் பெயர் வைப்பது தமிழ் மரபா?...

இதுதான் தமிழர்களின் பெயர் சூட்டும் முறையா?...

இதோ, பார்க்கலாம்!...


தமிழரசர் முதல் கவியசர் வரை – ஒரு பெயரியல் அலசல்

இது தமிழர் வழக்கமா என்பதை நாம் அறிய வேண்டுமானால் பண்டைக் காலம் முதல் அண்மைக்காலம் வரையான பலரின் பெயர்களை ஆய்வுக்குட்படுத்த வேண்டும். ஆனால் அதில் உள்ள பெரிய சிக்கல் என்னவெனில், நமக்குக் கிடைக்கும் பெரும்பாலான வரலாற்றுக் குறிப்புகள் மன்னர்களைப் பற்றியவைதாம்; வரலாற்றிலோ மன்னர்களின் பட்டப்பெயர், பட்டமேற்புப் (பட்டாபிசேகம்) பெயர் போன்றவைதாம் காணப்படுகின்றனவே தவிர இயற்பெயர்கள் பெரும்பாலும் கிடைப்பதில்லை. இயற்பெயர் தெரிந்த மன்னர்கள் - அல்லது மன்னரல்லாத பிறர் - பற்றிய விவரங்களிலோ அவர்களின் பிறந்த நாள்மீன் பற்றிய குறிப்பு இல்லை. இரண்டு விவரங்களும் ஒன்றாய்க் கிடைப்பது மிக மிகச் சிலரைப் பற்றித்தாம். அப்படிச் சிலரின் பெயர்களைப் பற்றி மட்டும் இங்கு காண்போம்.

❖ முதலாம் இராசராச சோழன்:

சனி, பிப்ரவரி 20, 2021

English ஆங்கிலம்தான். ஆனால் Facebook முகநூல் இல்லை! - ஒலிபெயர்ப்பு ஓர் அறிமுகம்

Do not use Grantha in Tamil


"வக்கற்ற மொழியா தமிழ்? தமிழில் ஏன் இல்லை வல்லின எழுத்து வகைகள்? – சில புல்லரிக்கும் தகவல்கள்" என்ற என் கட்டுரையில் தமிழிலேயே ஜகர, ஸகர ஒலிகள் உண்டு என்று ஆதாரத்துடன் எழுதியிருந்தேன். முடிவில் "தமிழிலேயே இப்படி ஜ, ஸ எல்லாம் இருக்கிறது என்றால் ஏன் கிரந்த எழுத்துக்களை நாம் உருவாக்கி வைத்திருக்கிறோம்?" என்று கேட்டு அதற்கான விடையைத் தனிப்பதிவாக எழுதுவதாய்ச் சொல்லியிருந்தேன். இதோ உலகத் தாய்மொழி நாளின் சிறப்புப் பதிவாக அக்கட்டுரை பின்வருமாறு! 
 
☟    ☟    ☟ 

செவ்வாய், மே 05, 2020

ழகரத்துக்கு ஆபத்து! - ஒருங்குறிக் கூட்டமைப்பின் (Unicode Consortium) தான்தோன்றித்தனமான முடிவு

Zha is in Danger because of the arbitrary decision of Unicode Consortium

மிழின் தனித்தன்மை, அடையாளம், பெருமை என்றெல்லாம் காலங்காலமாக நாம் போற்றுவது சிறப்பு எழுத்தான ழகரம்.

அப்பேர்ப்பட்ட தமிழ்ச் சொத்தைப் போகிற போக்கில் பிள்ளையார் கோயில் கொழுக்கட்டை போல் தெலுங்குக்குத் தூக்கிக் கொடுத்திருக்கிறது ஒருங்குறிக் கூட்டமைப்பு (Unicode Consortium)!

உண்மையாகத்தான் சொல்கிறேன் நண்பர்களே! இதோ கீழே பாருங்கள்!

புதன், மார்ச் 25, 2020

“மண்ணையும் பெண்ணையும் தொட்டால் வெட்டு” என்பதுதான் தமிழ்ப் பண்பாடா?

The New Love Birds seperated by caste
காக்கை, குருவி, ஈ, எறும்பு என அஃறிணை உயிர்களுக்குக் கூட விரும்பும் துணையுடன் வாழ இவ்வுலகில் உரிமை இருக்கிறது. ஆனால் இந்நாட்டிலோ மனிதர்களுக்கு அஃது இல்லை.

தருமபுரியின் இளவரசன்-திவ்யா முதல் இன்றைய இளமதி-செல்வன் வரை சாதியின் பெயரால் காதலர்களைப் பிரிப்பது இங்கு தொலைக்காட்சி நெடுந்தொடர் போல அன்றாடக் கதையாகி விட்டது.

போதாததற்கு, தமிழ் மக்களிடம் மிகுந்த செல்வாக்குடைய ஊடகமான திரைப்படமும் காதலுக்கு எதிரான கருத்துக்களையும் வன்முறைகளையும் பரப்ப இப்பொழுது பயன்படுத்தப்படுகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, பள்ளிக்குப் போகும் வயதிலேயே பிள்ளைகள் காதலிப்பது போல் படம் எடுத்து அதையே பெரிய காப்பியம் போலப் பீற்றிக் கொண்டது நம் திரையுலகம். இன்று அதுவே, படிக்கும் இளைஞர்கள் கையிலிருந்து நூலைப் பிடுங்கி விட்டு “மண்ணையும் பொண்ணையும் தொட்டா வெட்டு” என சாதித் துருவேறிய அரிவாளைத் திணிக்கிறது!

இப்படிக் காதலுக்கு எதிராகச் செயல்படும் அனைவருமே அதற்குப் பண்பாடு, ஒழுக்கம், கற்பு போன்றவற்றைக் காரணம் காட்டுகிறார்கள். 
 
அப்படியானால் காதல் தமிழ்ப் பண்பாடு இல்லையா?...

காதலிப்பது ஒழுக்கம் கெட்ட செயலா?...

காதல் திருமணம் கற்புநெறிக்கு எதிரானதா?...


எனும் கேள்விகள் இதனால் இயல்பாகவே எழுகின்றன!

இவற்றுக்கு விடை காணச் சங்க இலக்கிய நூல்களில் ஒன்றான ‘கலித்தொகை’ நமக்கு உதவும் என நினைக்கிறேன்.

சங்க இலக்கிய நூல்கள் மொத்தம் பதினெட்டு இருந்தாலும் அவற்றுள் பண்டைக் காலத் தமிழர்களின் ஒழுக்க வழக்கங்கள், மரபுகள், இயல்புகள், அந்தக் காலத்தின் தன்மை, இயற்கைச் சூழல் என அனைத்தையும் அறியச் சிறந்த நூலாகப் பரிந்துரைக்கப்படுவது கலித்தொகைதான்.

அப்படிப்பட்ட தமிழர் காலப்பெட்டகத்திலிருந்து (time capsule) இதோ ஒரு காட்சி.

செவ்வாய், ஜனவரி 14, 2020

இப்படியும் கொண்டாடலாம் காணும் பொங்கல்! – சமயவாதம் தகர்க்கும் ஒரு புது முயற்சி

Pongal Wishes gif

காணும் பொங்கல் - தமிழ் மக்களின் உறவுச் சங்கிலிக்கு உயவு (lubrication) கூட்டும் திருநாள்!

நாம் சிறுவர்களாக இருந்த காலத்தில், இந்நாளில் மாமா, அத்தை, சித்தி, சித்தப்பா போன்றோர் குடும்பத்துடன் நம் வீட்டுக்கு வருவார்கள். பொங்கல் பரிசாக அன்பளிப்புகள், தின்பண்டங்கள் போன்றவை தருவார்கள். பொங்கல் இனாம் எனும் பெயரில் செலவுக்குக் காசும் கொடுப்பார்கள். மாமா பிள்ளைகளுடனும் சித்திக் குழந்தைகளுடனும் கரும்பு கடித்தபடி குதூகலமாய் ஊர் சுற்றுவோம்.

சொந்தக்காரர்களுக்கு மட்டுமில்லாமல், வேளாண் கூலித் தொழிலாளிகள், அடிமட்டத் தொழில்கள் செய்யும் தோழர்கள் போன்றோருக்கும் இனாம் கொடுத்து மகிழ்விப்போம். தமிழ் இனத்தின் மூத்த முதுகுடிகளான மலைக் குறவர்கள் கூட இந்த நாளன்று மலையிலிருந்து இறங்கி வந்து விடுவார்கள். மலையில் தாங்கள் பிடித்துப் பழக்கிய கரடி போன்ற விலங்குகளை வைத்து வித்தை காட்டிக் காசு கேட்பார்கள். நாம் காசு கொடுத்தால் அதைக் கூடச் சும்மா வாங்காமல் மறுகையாக மலைத்தேன், மூங்கிலரிசி என நாம் கொடுத்த காசை விடப் பன்மடங்கு மதிப்பு மிக்க பொருட்களை வழங்கிச் செல்வார்கள்.

இப்படிக் காணாதவற்றையெல்லாம் காணும் திருவிழாவாக இருந்ததால்தான் காணும் பொங்கல் எனப் பெற்றது இத்திருநாள். ஆனால் இவையெல்லாம் எண்பதுகள் வரையான கதை.

இன்றோ காணும் பொங்கல் என்றாலே கடற்கரைக்கும் திரைப்படத்துக்கும் பல்லடுக்கு வணிக வளாகங்களுக்கும் செல்வதுதான் என்றாகி விட்டது. காலத்துக்கேற்ப வழக்கங்களும் மரபுகளும் மாறுவது இயல்பே. அதுவும் பொங்கல் பண்டிகையே பழையன கழிதலும் புதியன புகுதலும்தாம் வளர்ச்சி எனும் பேருண்மையை உணர்த்துவதுதான்!

ஆனால் மாற்றம் என்பது தான், தன் குடும்பம் என்பதாகச் சுருங்காமல் பொதுநலன் சார்ந்ததாக விரிவடைந்தால் அது அந்தச் சமுகத்தின் அடுத்த கட்ட வளர்ச்சியாக அமையும். அப்படித் தமிழர் விழாவான காணும் பொங்கலிலும் இன்றைய வாழ்க்கை முறைக்கேற்ப ஒரு சிறு மாற்றத்தைக் கொண்டு வந்தால் என்ன என்று தோன்றியதன் விளைவே இக்கட்டுரை.

வேளாண் பொருளாதாரத்தையே மையமாகக் கொண்டிருந்தது நம் பழைய தமிழ்நாடு. உழவர்கள் மட்டுமில்லாமல் எல்லாத் தொழிலாளர்களுமே பொழுதோடு வேலையை முடித்துக் கொண்டு வீடு திரும்பி மாலை முழுதும் குடும்பத்துடன் கழித்த நாட்கள் அவை. அதனால் பொங்கல் விடுமுறைகளையும் மொத்தமாகக் குடும்பத்துடனே கழிக்காமல் அதில் ஒரு நாளைச் சொந்தங்களைப் புதுப்பித்துக் கொள்வதற்காக ஒதுக்கும் வழக்கம் தோன்றியது.

ஆனால் அன்றாடம் பணி முடிந்து வீடு திரும்பவே முன்னிரவாகி விடும் இன்றைய வாழ்க்கைமுறையில் கணவனும் மனைவியும் குழந்தைகளும் தங்களுக்குள் முகம் பார்த்துப் பழகுவதே இப்படிப்பட்ட விடுமுறை நாட்களில்தான். எனவே அந்தக் காலத்து அதே கொண்டாட்ட முறைகளை இன்று எதிர்பார்க்க முடியாதுதான்.

மேலும் ஊரகப் பொருளாதாரத்தின் ஆணி வேரான உழவுத்தொழிலும் அதைச் சார்ந்த பிற தொழில்களும் பெரிதும் நசிவடைந்து பிழைப்புக்காகப் பெரும்பாலானோர் நகரங்களுக்கும் மாநகரங்களுக்கும் குடிபெயர்ந்து விட்டனர். ஆகவே காணும் பொங்கலுக்காக வெகு தொலைவில் இருக்கும் சொந்த ஊரில் வாழும் உறவுகளைத் தேடிச் சென்று கொண்டாடித் திரும்புவது இன்று அவ்வளவு எளிதில்லை.

ஆனால் உறவு என்றால் நம் குடும்பத்தைச் சேர்ந்த உறவுகள் மட்டும்தானா?

நம் அக்கம் பக்கத்தில் இசுலாமியம், கிறித்தவம், சமணம் எனப் பிற சமயங்களைச் சேர்ந்த உடன்பிறப்புகள் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள். அவர்கள் வீட்டுக்கு இந்நாளில் சென்று அவர்களுக்குப் பொங்கல் பரிசுகளை வழங்கி மகிழ்வித்தால் என்ன? காணும் பொங்கலை அவர்களோடு செலவிட்டால் என்ன? “யாதும் ஊரே! யாவரும் கேளிர்” என்ற கணியன் பூங்குன்றனாரின் வழி வந்த நாம் அதை வெறும் வாய்ச்சொல்லாக இல்லாமல் வாழ்வியலாகவும் கடைப்பிடித்தால் என்ன?

சொல்லப் போனால், தமிழர்களுக்கு இது புதிது ஒன்றும் இல்லை!

காலம் காலமாகவே பொங்கலை நாம் சமய எல்லைகள் கடந்து அனைவரோடும் சேர்ந்துதான் கொண்டாடி வருகிறோம். காரணம் பலரும் நினைப்பது போல் இஃது இந்துச் சமயத்தைச் சார்ந்த விழா இல்லை. எந்தச் சமயமும் தமிழ் / இந்திய மண்ணுக்குள் காலடி வைக்கும் முன்பிருந்தே தமிழ் மக்கள் வெறும் இனக் குழுவாக வாழ்ந்த காலம் தொட்டே கொண்டாடப்பட்டு வரும் அறுவடைத் திருவிழா.

உலகம் முழுவதும் இப்படி மொத்தம் 77 அறுவடைத் திருவிழாக்கள் இருப்பதாகக் கட்டற்ற இணையக் கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியா பட்டியலிடுகிறது. அவற்றுள் இந்தியாவில் மட்டுமே 25 விழாக்கள்! அவற்றில் பொங்கல் விழா பற்றி “இந்தியாவின் தமிழ்நாட்டிலும் பிற பகுதிகளிலும் வாழும் தமிழ் மக்கள் கொண்டாடும் திருவிழா” என்றுதான் பதிவு செய்யப்பட்டிருக்கிறதே தவிர சமயத்தின் பெயர் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

உண்மையில் தென் தமிழகத்தைச் சேர்ந்த தமிழ் இசுலாமியர் வீடுகளில் பெரும்பொங்கல் அன்றைக்குச் சருக்கரைப் பொங்கலுடன் பதினாறு வகைக் காய்கறிகள் சமைத்துச் சிறப்பு விருந்தாகக் குடும்பத்தோடு உண்டு மகிழும் பழக்கம் உண்டு.

கிறித்தவர்களோ ‘சமத்துவப் பொங்கல்’ எனும் பெயரில் தேவாலயங்களிலேயே கரும்புடன் பொங்கல் வைத்துக் கொண்டாடுகிறார்கள்!

கல்லூரிகளில் பொங்கல் விடுமுறை துவங்குவதற்கு முன் நாள் மாணவர்-மாணவியர் அனைவரும் தங்களுக்குள் இருக்கும் சமய வேறுபாடுகளைக் கருத்தில் கொள்ளாமல் ஒற்றுமையாகச் சேர்ந்து கல்லூரி வளாகத்திலேயே பொங்கல் வைத்துக் குலவையிட்டு ஒன்றாகக் கூடி உண்டு களிப்பதையும் நாம் ஆண்டுதோறும் பார்த்து வருகிறோம். 

Equity Pongal in educational institutions

எல்லாவற்றுக்கும் மேலாக, தென் தமிழகத்தில் இசுலாமியத் தமிழர்களுக்கும் இந்து போன்ற பிற சமுகத் தமிழர்களுக்கும் இடையே மாமன் – மைத்துனன், சித்தப்பா – சித்தி, தாத்தா, அப்பு, சீயான் எனக் குடும்ப உறவுமுறைகளே கூட இன்றும் உள்ளன! உலகில் வேறெங்குமே காண முடியாத, தமிழ் மண்ணுக்கு மட்டுமே உரிய தனிச்சிறப்பு இஃது என்கிறார் வரலாற்று ஆய்வாளர் கோம்பை எஸ்.அன்வர்.

ஆக, தமிழர் திருநாளான பொங்கல் மட்டுமில்லை, தமிழர்களின் உறவுமுறைகளே கூடக் காலம் காலமாகச் சமய எல்லைகள் கடந்து கொண்டாடப்பட்டு வருபவைதாம்!

தமிழகத்தின் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மட்டுமே காணப்படும் இந்த உறவுமுறையைத் தமிழ்நாடு முழுவதுமே பரவலாக்க, உலகில் தமிழ் மக்கள் வாழும் எல்லா இடங்களிலும் தழைக்கச் செய்யக் காணும் பொங்கல் ஒரு சிறப்பான தேர்வு.

சொந்த ஊரில் வாழ்கிற உறவுகளைத் தேடிச் சென்று பார்க்க முடியவில்லை என்பதற்காகக் காணும் பொங்கலை வெறும் கேளிக்கைப் பூங்காக்களில் கழிக்காமல் அக்கம் பக்கத்திலுள்ள மற்ற சமயத்து மக்களோடு செலவிட்டால் தமிழ் மண்ணுக்கே உரிய இந்தச் சமயம் கடந்த உறவுமுறைப் பெருமை காலத்துக்கும் தொடரும்; தமிழர் தனிப்பெரும் விழாவான பொங்கல் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஊறி என்றென்றும் நீடிக்கும்.

அதற்காக மட்டுமில்லை, எல்லாச் சமயத்தினரும் உதிரம் சிந்திப் பெற்றுத் தந்த விடுதலையை அடித்தளமாகக் கொண்டு கட்டியெழுப்பப்பட்டது இந்நாடு; ஆனால் இந்து எனும் ஒற்றைச் சமயத்துக்கான நாடாக இதை மாற்ற இப்பொழுது முழு வீச்சில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்படிப்பட்ட நேரத்தில் சமயம் கடந்த இத்தகைய உறவுமுறைகளை நம் அடுத்த தலைமுறைக்கு நினைவூட்டுவதும் கட்டிக் காப்பதும் காலத்தின் கட்டாயம்!

எனவே இனியும் காணும் பொங்கலை வெறும் சொந்தங்களுக்கு இடையிலான உறவைப் புதுப்பிக்கும் விழாவாக இல்லாமல் வழிவழியாக இங்கே சாதி – சமய எல்லைகள் கடந்து நிலவி வரும் உறவுமுறைகளை மீட்டெடுக்கும் விழாவாகக் கொண்டாடுவோம்! நாடெங்கும் பரப்பப்படும் சமயவாதப் பெருந்தீயை அன்பெனும் மாமழையால் அணைத்துக் காட்டுவோம்! 

அனைவர்க்கும் அன்பு கமழும் போகி, பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு,
திருவள்ளுவர் நாள், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
Kaanum Pongal - The celebration that lubricating the relationship chain of Tamils
(காணும் பொங்கலுக்காக நான் தினச்செய்தி நாளிதழில் எழுதியது).

படங்கள்: நன்றி Giphy.com, நியூசு 7.

தொடர்புடைய பதிவுகள்:

புதன், அக்டோபர் 02, 2019

கீழடி! – தமிழ் நாகரிகமா, திராவிட நாகரிகமா?

Is Keezhadi a Tamil civilization or Dravidian civilization
மிழ் வரலாற்றுத் துறையிலேயே ஒரு நன்னம்பிக்கை முனையாக வெளியாகியிருக்கிறது கீழடி அகழ்வாராய்ச்சியின் நான்காம் கட்ட ஆய்வு அறிக்கை!

இதுவரை கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகள், செப்பேடுகள், இலக்கியங்கள், சில பல அகழ்வாராய்ச்சிகள் மூலமாக மட்டுமே தமிழின் பழமையை நிலைநாட்டி வந்தோம். ஆனால் இப்பொழுது இவை அனைத்துக்கும் ஆதாரமாக, இவற்றையெல்லாம் தூக்கிச் சாப்பிடும் வகையில் ஒரு நகரமே கிடைத்திருக்கிறது கீழடியில்! தமிழ் மக்கள் துள்ளிக் குதித்துக் கொண்டாட வேண்டிய நேரம் இது! இதுவே இந்துச் சமயத்துக்கு ஆதரவாக இப்படி ஏதாவது ஓர் ஆய்வு முடிவு வெளியாகியிருந்தால் இந்நேரம் அவர்கள் தங்களுக்குள் உள்ள எல்லா வேறுபாடுகளையும் மறந்து கொண்டாடித் தீர்த்திருப்பார்கள். ஆனால் நாமோ இப்பொழுதும் திராவிட – தமிழ்த் தேசியச் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறோம்; அதுவும் கீழடியை வைத்தே!

திராவிடம் என்றால் என்ன என்பது பற்றி நம் மக்களுக்குப் பாடத்திட்டத்திலேயே கற்பித்திருந்தால் இன்று வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு தறுவாயில் அதைச் சீர்குலைக்கும் அளவுக்கு இப்படி ஓர் அடையாளக் குழப்பமும் தலைக்குனிவும் நமக்கு ஏற்பட்டிருக்காது. எனவே இப்பொழுதாவது திராவிடம் எனும் கோட்பாடு பற்றி, கீழடியை திராவிட நாகரிகம் எனச் சொல்வது சரியா என்பது பற்றித் தீர ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வரலாம் வாருங்கள்.

திராவிடம் என்பது என்ன?

தமிழ் மொழியின் இன்னொரு பெயரே திராவிடம். பண்டைக் காலத்திலிருந்தே தமிழ் மக்கள் அயல்நாடுகளோடு வணிகத் தொடர்பு வைத்திருந்தது நாம் அறிந்ததே. அதனால் அந்தக் காலத்திலேயே தமிழ் இனம் உலகெங்கும் அறிமுகமாகி இருந்தது. ஆதலால் அன்றைக்கே வெளிநாடுகளில் தமிழர்களையும் தமிழகத்தையும் குறிக்கச் சொற்கள் உருவாயின. ஆனால் ழகரம் அயல்நாட்டு மொழிகளில் இல்லாததால் அவர்கள் மொழியின் பலுக்கலுக்கேற்பத் (உச்சரிப்புக்கேற்ப) தமிழகம் என்பதை ‘தமிரிகா’ (Damirica), ‘திமிரிகே’ (Dimirike) என்று பலவாறாகவும் தமிழர் என்பதை ‘திரவிடா / திராவிடர்’ (Dravida / Dravidians) என்றும் குறிப்பிட்டனர். இதையொட்டி திராவிடர்கள் பேசும் மொழியான தமிழும் அவர்கள் பலுக்கலில் ‘திரவிடம் / திராவிடம்’ ஆனது!

ஆக திராவிடம் - தமிழ் இரண்டும் ஒன்றே! தமிழின் இன்னொரு பெயர்தான் அது!

இதற்கு ஆதாரம்...?

நிறையவே உண்டு!

முதலில் மொழி அடிப்படையில் பார்ப்போம். மொழியியலில் சொற்பிறப்பியல் (Etymology) என்பதாகவே ஒரு துறை உண்டு. ஒரு சொல் எப்படி, எதிலிருந்து, எவ்வாறு உருவாகிறது என்பதை ஆணி வேர் வரை சென்று அலசும் மொழி அறிவியல் இது.

இதன் அடிப்படையில் தமிழ் எனும் சொல்தான் வெளிநாட்டுப் பலுக்கல்களுக்கேற்ப தமிசு > தமிள் > தமிளா > தமிலா எனக் கொஞ்சம் கொஞ்சமாய் மருவிக் காலப்போக்கில் ரகர ஒலிப்பு இடையில் சேர்ந்து அல்லது சேர்க்கப்பட்டும் மகரம் வகரமாகத் திரியும் திராவிட ஒலிப்பியல்பு காரணமாகவும் ‘திராவிடம்’ ஆனது என்று எழுத்து வேறு ஒலிப்பு வேறாக – அக்கு வேறு ஆணி வேறாக – பிட்டுப் பிட்டு வைக்கிறார் உலகப் புகழ்மிகு இந்திய இலக்கிய மற்றும் மொழியியல் ஆராய்ச்சியாளர் கமில் சுவலபில் அவர்கள்.

இது, இன்ன பிற அறிஞர்களின் இது போன்ற விளக்கங்கள் காரணமாய்த் தமிழ் எனும் சொல்தான் ‘திராவிடம்’ எனும் சொல்லுக்கு மூலம் என்று உலகமே ஏற்றுக் கொண்டுள்ளது.¹

அடுத்து வரலாற்று ஆதாரங்கள்!

²பொ.ஊ. 1ஆம் (1st CE / கி.பி. 1) ஆண்டைச் சேர்ந்த ‘செங்கடல் செலவு’ (Periplus of the Erythraean Sea) எனும் கிரேக்கக் கடல் வழிப் பயணக் கையேடு அதன் பழமை காரணமாக உலகளவில் அரிய வரலாற்று ஆவணமாகக் கருதப்படுகிறது. செங்கடல் பகுதியில் உள்ள நாடுகளையும் அரசாட்சிகளையும் பற்றிப் பல குறிப்புகள் கொண்ட இந்நூலில் சேர நாட்டைச் சேர்ந்த தொண்டி, முசிறி ஆகிய பண்டைத் தமிழகப் பகுதிகளைப் பற்றி எழுதப்பட்டுள்ள இடத்தில் தமிழகம் எனும் சொல் ‘தமிரிகா’ (Damirica) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. “இந்த தமிரிகா என்பது தென்னிந்திய திராவிடர்களான தமிழர்களின் நாடு” என்றே ஒரு குறிப்பும் 1912ஆம் ஆண்டு வெளிவந்த அதன் ஆங்கில மொழிபெயர்ப்பில் காணப்படுகிறது.

Names, routes and locations of the Periplus of the Erythraean Sea


இதே போல் பொ.ஊ. 150ஆம் ஆண்டைச் சேர்ந்த கிரேக்கப் புவியியல் கணித மேதை தாலமி (Ptolemy) தனது ‘புவியியல் வழிகாட்டி’ (Geōgraphikḕ Hyphḗgēsis) எனும் நூலில் தமிழ்நாட்டை ‘திமிரிகே’ (Dimirike) என்று குறிப்பிட்டுள்ளார்.

இவற்றுக்கெல்லாம் முன்னதாக, ³பொ.ஊ.மு. 425ஆம் (425 BCE / கி.மு. 1) ஆண்டில் – அதாவது 2400 ஆண்டுகளுக்கு முன்னர் – வரலாற்று ஆசிரியர் எரடோடசு (Herodotus) அவர்கள் “திராவிடர்களின் நிறம் எத்தியோப்பியர்களைப் பெரிதும் ஒத்திருக்கிறது” என்று ஓர் ஆவணத்தில் குறிப்பிட்டிருப்பதாக அதன் மொழிபெயர்ப்புகள் காட்டுகின்றன.

அவ்வளவு ஏன், சேர – சோழ – பாண்டியர் ஆகிய தமிழ் மூவேந்தர்களே தங்கள் ஆவணங்களில் நம் தமிழ் நிலத்தை திராவிட தேசம் என்றுதான் குறிப்பிட்டிருக்கிறார்கள் என்று ‘செங்கடல் செலவு’ நூலின் குறிப்புகள் பகுதி அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்துள்ளது. (பார்க்க

செவ்வாய், செப்டம்பர் 17, 2019

பெரியார் மீண்டும் பிறக்காமலிருக்க நீங்கள் செய்ய வேண்டியது என்ன? - பெரியாரின் 141ஆவது பிறந்தநாள் சிறப்புப் பதிவு

What should you do if you don't want Periyar to born again?
லகத்தைப் பொறுத்த வரை பெரியார் என்பவர் மாபெரும் சிந்தனையாளர், புரட்சியாளர், பகுத்தறிவாளர், பெண்ணியவாதி, சீர்திருத்தவாதி எனப் பல முகங்கள் கொண்டவர். ஆனால் யாருக்காக இறுதி மூச்சு வரை அவர் போராடினாரோ அந்தத் தமிழ் மக்களிடம் பெரியார் யார் எனக் கேட்டால் உடனே வரும் மறுமொழி “அவர் இறைமறுப்பாளர்” என்பதுதான்.

பெரியார் பற்றிய நம் மக்களின் புரிதல் இவ்வளவுதான்! அதனால்தான் அவரது இறை மறுப்பு நிலைப்பாட்டையே ஒரு பெரிய குற்றச்சாட்டாக இன்றும் சொல்லிக் கொண்டு திரிகிறார்கள் பலர்.

உண்மையில் இது மிகவும் சிறுபிள்ளைத்தனமானது. அப்படிப் பார்த்தால் உலகின் போக்கையே மாற்றிய மாபெரும் அறிஞர்கள், அறிவியலாளர்கள், தலைவர்கள் பலரும் இறை மறுப்பாளர்களே. அதற்காக அவர்கள் எல்லோரையும் நாம் வெறுத்து விட்டோமா?

உலகப் புகழ் பெற்ற போராளியான சே குவேரா இறைமறுப்பாளர்தாம். அதற்காக அவர் படம் பொறித்த கொசுவச்சட்டையை (T-Shirt) நாம் அணிவதில்லையா?

உளவியல் பகுப்பாய்வின் தந்தை (Father of psychoanalysis) எனப் போற்றப்படும் சிகமண்ட்டு பிராய்டு (Sigmund Freud) கடவுள் மறுப்பாளர்தாம். அதற்காக உளவியல் படிக்கும் இறை நம்பிக்கையுள்ள மாணவர்கள் அவருடைய கோட்பாடுகளை, சிந்தனைகளைப் படிக்காமல் புறக்கணித்து விடுகிறார்களா?

கதிரியக்கத்தைக் கண்டுபிடித்தவர்களுள் ஒருவரான பியரி கியூரி கடவுள் மறுப்புக் கொள்கை உடையவர்தாம். அதற்காக நாம் புற்றுநோய் வந்தால் கதிரியக்கப் பண்டுதம் (radioactivity treatment) வேண்டா என்கிறோமா?

“இரந்துதான் (பிச்சை எடுத்துத்தான்) உயிர் வாழ வேண்டும் என்ற நிலையில்தான் கடவுள் சிலரை இவ்வுலகில் படைத்திருக்கிறான் என்றால் அப்படிப் படைத்த கடவுளும் அவர்களைப் போலவே இரந்து திரிந்து அழியட்டும்” என்று கடவுளுக்கே தெறுமொழி (சாபம்) இட்டவர் வள்ளுவர். அதற்காகத் திருக்குறளை நாம் தூக்கி எறிந்து விட்டோமா?

உண்மையில் பெரியார் தமிழ் மண்ணுக்கும் மக்களுக்கும் செய்த தொண்டுகளின் பட்டியல் மிகப் பெரியது! தீண்டாமைக்கு எதிராகப் போராடினார், பெண்ணுரிமைக்காகப் பாடுபட்டார், தேவதாசி முறை ஒழிப்புக்குத் துணை நின்றார், தமிழ் எழுத்துக்களைச் சீர்திருத்தினார், தமிழர்களுக்கென ஒரு தனி அரசியல் பெருவழியை வகுத்தளித்தார், எல்லாவற்றுக்கும் மேலாக, கடவுள் நம்பிக்கையை எதிர்த்த பெரியார்தாம் கோடிக்கணக்கான மக்கள் கோயிலுக்குள் சென்று தாங்கள் நம்பும் கடவுளை வழிபடவும் உரிமை பெற்றுத் தந்தார்!

இன்னும் இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம். பொறுப்பான அரசியல் தலைவராக அவர் தன் துறைக்கு அளித்த பங்களிப்புகள் இவ்வளவு இருக்க, எப்பொழுது பார்த்தாலும் அவரை இறைமறுப்பாளர் எனும் ஒற்றைப் புள்ளிக்குள்ளேயே சிறை வைக்கப் பார்க்கிறோமே ஏன்?

சே குவேரா, பிராய்டு, கியூரி, திருவள்ளுவர் போன்றோரையெல்லாம் கடவுள் பற்றிய அவர்களின் நிலைப்பாடு குறித்துப் பொருட்படுத்தாமல் துறை சார்ந்த அவர்களின் பங்களிப்பை மட்டும் கருத்தில் கொண்டு கொண்டாடும் நாம் பெரியாரை மட்டும் மீண்டும் மீண்டும் கடவுள் மறுப்பாளர் என ஒதுக்கி வைப்பது ஏன்?

Periyar's Pilliyar Doll Demolishing Riot

நீங்கள் கேட்கலாம், “மற்ற இறைமறுப்பாளர்களைப் போலப் பெரியார் கடவுள் இல்லை என்று சொன்னதோடு மட்டுமா நிறுத்தினார்? பிள்ளையார் சிலையை உடைப்பது, ராமரைச் செருப்பால் அடிப்பது எனக் கடவுள் உருவங்களை இழிவுபடுத்தினாரே! அப்படிப்பட்டவரை மற்ற கடவுள் மறுப்பாளர்களை ஏற்பது போல் எப்படி எளிதில் ஏற்க முடியும்?” என்று.

ஆம்! பெரியார் அப்படியெல்லாம் செய்தார்தான்; மறுக்கவில்லை. ஆனால் ஏன் செய்தார்? கடவுளை இழிவுபடுத்தவா?

நாம் ஒருவரை இழிவுபடுத்த வேண்டுமானால் முதலில் அப்படி ஒருவர் இருக்க வேண்டும் அல்லது இருப்பதாக நாம் நம்பவாவது வேண்டும். ஆனால் பெரியாரோ கடவுளே இல்லை எனும் கொள்கை கொண்டவர். இல்லாத ஒருவரை (அல்லது இல்லாதவர் என அவரால் நம்பப்பட்டவரை) அவரால் எப்படி இழிவுபடுத்த முடியும்? இது கேட்கவே மடத்தனமாக இல்லையா?

சிலர், இந்துக்களை, அதிலும் பார்ப்பனர்களைப் புண்படுத்தத்தான் பெரியார் அப்படியெல்லாம் செய்தார் எனக் குற்றம் சுமத்துகிறார்கள்.

எந்தத் தமிழ் மக்களுக்காகப் பெரியார் காலமெல்லாம் பேச்சு, எழுத்து, போராட்டம் என எல்லாவற்றையும் நடத்தி வந்தாரோ அவர்கள் அத்தனை பேரும் அன்றும் சரி, இன்றும் சரி தங்களை இந்துக்கள் என்றுதான் கருதிக் கொண்டிருக்கிறார்கள். அப்படியிருக்க அவர்களைப் புண்படுத்திப் பெரியாருக்கு என்ன பலன்? அப்படிச் செய்தால் அவர் மீது மக்களுக்கு வெறுப்புத்தானே வரும்? அப்புறம் அவர் சொல்வதையெல்லாம் அவர்கள் எப்படிக் கேட்பார்கள்?

தவிர, பார்ப்பனர்களைப் புண்படுத்த வேண்டுமானால் அவர்களை மட்டும் நினைவூட்டும் குறியீடுகள் எத்தனையோ இருக்கின்றன; பூணூல், கீதை, மனுநீதி, வேள்விக் குண்டம் எனவெல்லாம். அவற்றில் ஒன்றைத்தான் பெரியார் தேர்ந்தெடுத்திருப்பாரே ஒழிய, தமிழர்களும் சேர்ந்து வணங்கும் கடவுள் உருவங்கள் மீதா கை வைப்பார்?

ஆக, இவை அனைத்தும் தவறு! உண்மையான காரணம் என்ன தெரியுமா?

திங்கள், ஆகஸ்ட் 20, 2018

கருணாநிதி மீதான ஈழ துரோகக் குற்றச்சாட்டு! - பழி துடைக்க உடன்பிறப்புகள் செய்ய வேண்டியது என்ன?

Treacherous accusation against Karunanidhi on Eelam Genocide! - What are the DMK people to do?
வறு செய்பவர் தலைவராகவே இருந்தாலும் எதிர்க்க வேண்டும் எனும் கொள்கை காரணமாகப் பிறந்த கட்சி தி.மு.க. ஆனால் இன்று, செய்தவர் உங்கள் தலைவர் என்பதற்காக, ஒரு மாபெரும் குற்றத்தை நியாயப்படுத்துவதையே முழு நேரப் பணியாக வைத்துக் கொண்டிருக்கிறீர்கள் அவர்தம் உயிரினும் மேலான உடன்பிறப்புக்கள்!

அண்மையில் தி.மு.க., தலைவர் கருணாநிதி மறைந்ததையொட்டி, ஈழத் தமிழினப்படுகொலையின் பொழுது அவர் நடந்து கொண்ட விதம் சரியே என நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள் திராவிடவாத அன்பர்கள். கருணாநிதி கவலைக்கிடமாக இருந்தபொழுதே இது குறித்து உங்களுக்கும் தமிழ்த் தேசியவாதிகளுக்கும் இணையத்தில் சொற்போர் துவங்கி விட்டது என்றாலும், இப்பொழுது இன்னும் தீவிரமடைந்திருக்கிறது. இதில் தாள முடியாத வேதனை என்னவென்றால், நான் மிக மிக மிக மதிக்கிற வலையுலக நண்பர்கள் பலரும் கூட இந்த நியாயப்படுத்தும் இழிசெயலைத் தயங்காமல் செய்கிறீர்கள் என்பதுதான்!

தோழர்களே, தமிழர்களான நம்மைப் பொறுத்த வரையில், கருணாநிதி என்பவர் வெறும் அரசியல்வாதியோ முதலமைச்சரோ கட்சித் தலைவரோ மட்டுமில்லை; இவை எல்லாவற்றையும் தாண்டி அவர் மீதும் அவர் ஆளுமை மீதும் அவர் தமிழ் மீதும் அவர் குடும்பத்தினர் மீதும் தனிப்பட்ட முறையில் உணர்வார்ந்த ஒரு பிணைப்பு நம் அனைவருக்கும் உண்டு; அஃது எனக்கும் இருந்தது உண்டு. ஆனால் அதற்காக, அவர் மீதான இவ்வளவு பெரிய குற்றச்சாட்டையும் போகிற போக்கில் புறங்கையால் தட்டி விட முடியுமா என்ன?

திங்கள், ஜனவரி 29, 2018

சங்கராச்சாரி செய்த தமிழ் அவமதிப்பு – தமிழர்கள் தொடுக்க வேண்டிய எதிர்வாதங்கள் என்ன?

Vijayendra Saraswathy Insulting Tamil Goddess and Respecting Indian National Anthem
ங்கர மட இளைய பீடாதிபதி விஜயேந்திர சரசுவதி தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்திருப்பது தமிழ் மக்கள் அனைவரையும் கொதிக்கச் செய்திருக்கிறது.

அதே நேரம், தமிழ்த்தாயை அவர் அவமதிக்கவே இல்லை; கடவுளாக மதித்து நடந்து கொண்டார் எனவும், ஆண்டாள் சர்ச்சையை மறக்கடிக்கவே இது ஊதிப் பெருக்கப்படுகிறது எனவும் பல்வேறு விளக்கங்கள் அளிக்கப்படுகின்றன.

இந்த விளக்கங்களைத் தோலுரித்து உள்ளே இருக்கும் உண்மை நிறத்தை வெளிக்காட்டவே வினா-விடை பாணியிலான இப்பதிவு! அறத்தின் துணிவிருந்தால் திறத்தின் உரமிருந்தால் எதிர்த் தரப்பு இதற்கு விடையளித்துப் பார்க்கட்டும்!

கேள்வி-௧: தமிழ்த்தாய் வாழ்த்தின்போது விசயேந்திரர் எழுந்து நிற்காதது தற்செயலாகக் கூட இருக்கலாமே? அதை ஏன் ஒரு பிரச்சினையாக ஆக்க வேண்டும்?

திங்கள், அக்டோபர் 23, 2017

’எல்லாரும் அர்ச்சகராகலாம்’ சட்டம் சரியா? - கோயில் பூசையில் தமிழர் உரிமைகள்! மிரள வைக்கும் ஆய்வு

The Tamil forefathers who fought for the Temple Worship Rights of Non-Brahmins
பார்ப்பனர் அல்லாதோரின் கோயில் பூசை உரிமைக்காகப் பாடுபட்ட தமிழ் முன்னோடிகள்
முன்குறிப்பு: பார்ப்பனரல்லாத 36 பேரைக் கோயில் பூசாரிகளாக அமர்த்தி வரலாறு படைத்துள்ளது கேரளம். ஆனால், இதற்கு முன்னோடியாக ‘அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்’ என்று சட்டமே இயற்றிய தமிழ்நாடு இன்னும் தூங்கிக் கொண்டிருக்கிறது. இதையொட்டி, பார்ப்பனரல்லாதோரின் கோயில் பூசை உரிமைகள் குறித்து உண்மையான தகவல்களை வெளிக்கொணரும் நோக்கில் ‘தமிழ்க் காப்புக் கழக’த் தலைவரும் ஆட்சித் தமிழறிஞருமான திருவள்ளுவன் இலக்குவனார் ஐயா அவர்கள் நடத்திய ‘நமக்குத் தேவை தமிழ்ப் பூசைகளும் தமிழ்ப் பூசாரிகளும்’ எனும் கட்டுரைப் போட்டியில் ஐயா அவர்களால் பாராட்டப் பெற்றதும் ‘இலக்குவனார் இலக்கிய இணையம்’ சார்பில் 30.01.2016 அன்று வள்ளல் மாம்பலம் ஆ.சந்திரசேகர் அவர்களால் உரூ.3000/- பரிசில் வழங்கப்பட்டதுமான சிறுவன் என் ஆய்வுக் கட்டுரையை இந்த நேரத்தில் உலகத் தமிழ் நெஞ்சங்களின் மேலான பார்வைக்கு விருந்தாக்க விழைகிறேன்! 

டவுளை நம்ப உலகில் உள்ள எல்லோருக்கும் உரிமை இருக்கும்பொழுது, அந்தக் கடவுளைப் பூசை செய்யவும் நம்புகிற எல்லோருக்கும் உரிமை இருப்பதுதானே முறை? ஆனால், இங்கு நடப்பது என்ன?...

கடவுள் மீது அன்பு (பக்தி) செலுத்த எல்லாரும் வேண்டும்; அந்தக் கடவுளுக்குக் கோயில் கட்ட எல்லா சாதியினரும் வேண்டும்; உண்டியலில் காசு போட எல்லாத் தரப்பு மக்களும் வேண்டும்; ஆனால், கடவுளின் அறைக்குள் (கருவறை = அகநாழிகை) செல்லவும் தொட்டுப் பூசை செய்யவும் மட்டும் குறிப்பிட்ட சிலருக்குத்தான் உரிமை! மனச்சான்றுள்ள மனிதர் யாராவது இதை ஏற்க முடியுமா? ஆனால், தமிழ்நாட்டின் பெரும்பாலான மக்கள் இதை மனமுவந்து ஏற்றுக் கொண்டுதான் வாழ்ந்து - வழிபட்டு வருகிறார்கள். ஆம்! பார்ப்பனரல்லாதாருக்கும் பூசை செய்யும் உரிமை வேண்டும் என்கிற கோரிக்கை பார்ப்பனரல்லாதவர்களிலேயே பெரும்பான்மை மக்களுக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை என்பதே உண்மை. “கோயில் பூசாரி போன்ற புனிதமான வேலைகளில் பார்ப்பனர்கள் இருப்பதே சரி” என்பதுதான் இங்குள்ள பெரும்பான்மை மக்களின் கருத்து.

இது சரியா? தமிழர்கள் கடவுளைப் பூசிக்கக்கூடாதா? அப்படிப் பூசிப்பது சமய நம்பிக்கைகளுக்கோ வேறு ஏதேனும் நெறிமுறைகளுக்கோ எதிரானதா? இது பற்றி சமயம் - சட்டம் - வரலாறு - குமுகம் (சமூகம்) - இறையியல் என எல்லாக் கோணங்களிலிருந்தும்  அலசுவதே இக்கட்டுரையின் மைய நோக்கம். கூடவே,

தமிழர்கள் இந்துக்களா?...

தமிழர் சமயத்துக்கும் இந்து சமயத்துக்கும் இடையிலான வேறுபாடுகள் என்ன?...
 
கோயில் பூசை முறைகளை உருவாக்கியவர்கள் தமிழர்களா பார்ப்பனர்களா?...

உலகில் எங்குமே இல்லாத வகையில் இந்தியாவில் மட்டும் தெய்வச் சிலைகளுக்குத் துணியாலான ஆடை ஏன்?...

தமிழர்களின் சாவுச் சடங்குகளுக்கும் கோயில் பூசைகளுக்கும் உள்ள தொடர்பு என்ன?...

தமிழர் இல்லங்களில் உள்ள ‘நடுவீடு’ என்பது என்ன?...

தமிழர்களின் நடுகல் வழிபாட்டு முறைக்கும் நடுவீட்டுக்கும் உள்ள தொடர்பு என்ன?...

இது போன்ற பல்லாண்டுக் காலக் கேள்விகள் அனைத்துக்குமான திடுக்கிடும் விடைகளையும் காணலாம் வாருங்கள்!...

புதன், மே 31, 2017

தமிழ்நாட்டு அரசியலில் ரஜினியின் தேவை என்ன? அக்கு வேறு ஆணி வேறாக ஓர் அலசல்

Rajini's Political Speech
ஜினிகாந்த்! ஏறக்குறைய கால் நூற்றாண்டுக் காலமாகத் தமிழ்நாட்டு அரசியல் வானில் கண்ணாமூச்சி காட்டிக் கொண்டிருக்கும் நட்சத்திரம்! அரசியல் பற்றி நான்கு வார்த்தைகள் இவர் கூடுதலாகப் பேசினாலும் பேசினார், மொத்தத் தமிழ்நாடும் திசைக்கு ஒரு விதமாய் எகிறிக் குதிக்கிறது! “அவர் வந்தால் வரவேற்போம்” என இப்பொழுதே துண்டு போடுகின்றன சில கட்சிகள். “வந்தால் எதிர்ப்போம்” என இதற்குள்ளாகவே முட்டி முறுக்குகின்றன வேறு சில கட்சிகள். “வந்தால் வெல்வாரா தோற்பாரா” என விவாத மேடையே நடத்தத் தொடங்கி விட்டன ஊடகங்கள். சமூக வலைத்தளங்களிலோ அவருக்காகக் காவடி தூக்குவது முதல் கழுவி ஊற்றுவது வரை எல்லாம் நடக்கின்றன.

எப்படியோ, இருபத்து நான்கு ஆண்டுகளாக வருவாரா, மாட்டாரா என்பது மட்டுமே சர்ச்சையாக இருந்தது மாறி, வந்தால் நல்லதா, கெட்டதா என்கிற அடுத்த கட்டத்துக்குச் சென்றிருக்கிறது சிக்கல். அந்த வகையில் ரஜினிக்கும் ரஜினி விசிறிகளுக்கும் மட்டுமில்லாமல் ரஜினியை மையப்படுத்தித் தமிழ்நாட்டு அரசியலில் நிலவும் குழப்பத்துக்கும் இது நல்ல முன்னேற்றம்தான். ஆனால்,

வியாழன், மே 18, 2017

தமிழினப் படுகொலை எட்டாம் ஆண்டு நினைவேந்தலும் நீதிக்கான புதிய வாய்ப்பும்!

Eelam Tamil Genocide 8th Memorial
தோ, எட்டாவது ஆண்டும் முடிந்து விட்டது! ஆனால், நடந்த அந்த மாபெரும் கொடுமைக்கான நீதியை நாம் இன்னும் எட்டியபாடில்லை.

தமிழர்களாகப் பிறந்தது தவிர வேறு எந்தக் குற்றத்தையும் செய்யாத ஏதுமறியாப் பொதுமக்கள் பூவும் பிஞ்சும் காயும் கனியும் வேரும் விழுதுமாய்ச் செத்து மடிந்து இன்றோடு எட்டு ஆண்டுகள் முடிகின்றன. வியட்நாம் போரின்பொழுது, போரின் கொடுமையைக் காட்டும் விதமாக ஒரே ஒரு புகைப்படம் வெளிவந்ததற்கே கொதித்தெழுந்த உலக சமுதாயம், அதுபோல் எத்தனையோ நூற்றுக்கணக்கான படங்களும் விழியங்களுமே (videos) வெளிவந்தும் இன்று வரை ஈழத் தமிழர்களின் நிலைமையை வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறது. காரணம், என்ன?...

சனி, டிசம்பர் 17, 2016

தமிழ்நாட்டை ஒருபொழுதும் விட்டுக் கொடுக்காத தனித் தலைவி!

Jayalalitha
ஜெயலலிதா! – ஆயிரக்கணக்கான ஆண் விண்மீன்கள் ஒளி வீசிய அரசியல் வானில் ஒற்றைப் பெண்ணாய் உலா வந்த நிலா!

இவரைப் பற்றிக் குறை சொல்ல வேண்டுமானால் அடுக்கிக் கொண்டே போகலாம். அகந்தை அரசியல், அடாவடி ஆட்சி, பழிவாங்கும் போக்கு, பொதுமக்களை நடத்திய முறை, நேர்மை அலுவலர்களைப் பந்தாடிய விதம், ஊழல் குற்றச்சாட்டுகள், இன்னும் எத்தனையோ...

ஆனால், ஒன்றே ஒன்றை மட்டும் மறுக்க முடியாது. அதுதான், அடுத்தவர்களிடத்தில் தமிழ் மக்களை விட்டுக் கொடுக்காத இவருடைய குணம்!

கன்னடர் என்று முத்திரை குத்தினோம். ஆனால், மற்ற யாரை விடவும் காவிரிப் பிரச்சினையில் இவர்தான் ஈடு இணையற்ற கடுமை காட்டினார்.

1993-இல் காவிரிப் பிரச்சினைக்காக உண்ணாநிலைப் போராட்டம் நடத்தியதில் தொடங்கி, கடைசியாக 2013-இல் நடுவர் மன்றத் தீர்ப்பை அரசிதழில் வெளியிடச் செய்தது வரை காவிரிப் பிரச்சினையில் ஒருபொழுதும் கருநாடகத்துக்காக விட்டுக் கொடுக்காமல் இறுதி வரை உறுதி காத்தவர் ஜெயலலிதா. கன்னடர்கள் இவர் படத்தையும் கொடும்பாவியையும் கொளுத்திக் கொந்தளிக்கும் அளவுக்கு அவர்களின் வெறுப்பை அறுவடை செய்தார். எந்த அளவுக்குக் கன்னடர்கள் இவரை வெறுத்தார்கள் என்பது குறிப்பிட்ட நேரத்தில் கீச்சகத்தில் (twitter) வலம் வந்தவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

முல்லை பெரியாறு அணைப் பிரச்சினையிலும் மலையாளிகளிடம் தமிழர் உரிமையைச் சொட்டுக் கூட விட்டுத் தரவில்லை ஜெயலலிதா அவர்கள்.

அணை வலுவிழந்து விட்டது, நீர் தேக்கும் அளவைக் குறைத்தே ஆக வேண்டும் என்று ஒட்டுமொத்த மலையாள மாநிலமும் மல்லுக்கட்டியது. ஆனால், உச்சநீதிமன்றத்தில் உண்மை நிலையை எடுத்துக்காட்டி, கேரள அரசு அரசியல்ரீதியாகவும் சட்டரீதியாகவும் செய்த எல்லாச் சூழ்ச்சிகளையும் தவிடு பொடியாக்கினார். அணையின் நீர்த் தேக்க அளவான 142 அடியில் ஓர் அங்குலம் கூடக் குறைய விடாமல் இறுக்கிப் பிடித்தார். தவிர, “இரு மாநிலங்களும் ஒப்புக் கொண்டால்தான் இனி புதிய அணைகள் கட்ட முடியும். கேரள அரசு தன் முடிவைத் தமிழ்நாடு அரசு மீது திணிக்க முடியாது. அணைக்கு நடுவண் தொழில்நுட்பப் படைப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்” என்றெல்லாம் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்புகளைப் பெற்று இனி எக்காலத்திலும் முல்லை பெரியாறு அணை விதயத்தில் கேரளம் வாலாட்ட முடியாத அளவுக்குத் தமிழ்நாட்டின் உரிமையை ஆணித்தரமாக நிலைநாட்டினார்.

வழக்கு, நீதிமன்றம் போன்றவற்றில் மட்டுமில்லை, முல்லை பெரியாறு அணை பற்றிப் பொய்ப் பரப்புரை செய்ய வந்த ஒரு திரைப்படத்தைக் கூட விட்டு வைக்கவில்லை ஜெ அவர்கள்.

Jayalalitha in anger
முல்லை பெரியாறு அணை பற்றி ‘டேம் 999’ என்று பொய் மூட்டையாக ஒரு திரைப்படத்தை எடுத்து அதைத் தமிழ்நாட்டிலேயே திரையிடவும் மலையாளிகள் முயன்றபொழுது, அதைத் தடை செய்தார். தணிக்கைத்துறையால் சான்றிதழ் வழங்கப்பட்ட ஒரு திரைப்படத்தை அரசு எப்படி வெளியிட மறுக்கலாம் என்று கேள்வி எழுப்பப்பட்டபொழுது, “என் மாநிலச் சட்டம் ஒழுங்கைச் சீர்குலைக்கும் என்றால் தடை போடத்தான் செய்வேன்” என்று சீறினார்.

‘இந்தியாவின் இரும்புப் பெண்மணி’யான இந்திரா காந்தியே அரசியல் சூழல்களுக்குப் பணிந்து கச்சத் தீவைத் தாரை வார்த்து விட்ட நிலையில், இந்தத் ‘தமிழ்நாட்டின் இரும்புப் பெண்மணி’ அதை மீட்க உச்சநீதிமன்றம் வரை போனார். அண்டை நாட்டு உறவு, வெண்டைக்காயின் வரவு என்றெல்லாம் நடுவண் அரசுகள் கதை பேச, இதே போன்ற வேறொரு சிக்கலில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பைச் சுட்டிக்காட்டி “நீங்கள் கச்சத் தீவைக் கொடுத்ததே சட்டப்படி செல்லாது” என்று கடைக்காலிலேயே கை வைத்தார்!

பூச்சிக்கொல்லிகள், வேதி உரங்கள் ஆகியவற்றின் மூலம் இந்தியர்களின் உடலையே வேதிக் குவியலாக மாற்றியது போதாதென்று, அடுத்ததாக நம் மரபணுவையே மாற்ற மரபணு மாற்றப் பயிர்களைப் பரப்புவதற்கு நடுவண் காங்கிரசு அரசு துடித்தபொழுது அதைத் தமிழ்நாட்டுக்குள் காலடி வைக்கவே இடம் தராமல் விரட்டியடித்தார்.

எல்லாவற்றுக்கும் மேலாக, ஈழப் பிரச்சினையில், தமிழினத் தலைவர் என்று புகழப்பட்ட கருணாநிதியும் பிரபாகரனின் நண்பர் என்று கூறப்படும் எம்.ஜி.ஆரும் கூடச் செய்யாததை ஜெயலலிதா செய்தார். ‘தனி ஈழத்துக்குப் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்’ என்று தமிழ்நாட்டுச் சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்து ஒருமனதாக நிறைவேற்றினார்! ‘இலங்கையை நட்பு நாடு எனச் சொல்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும்’ என்று நடுவணரசுக்கே அறிவுரை கூறினார். போதாததற்கு, ‘தமிழர்கள் மீதான அடக்குமுறையை நிறுத்தும் வரை இலங்கை மீது இந்தியா பொருளாதாரத் தடை போட வேண்டும்’ என்றும் தனித் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி உலகையே திரும்பிப் பார்க்க வைத்தார்.

ஜெயலலிதாவின் இந்த வரலாறு காணா நடவடிக்கைகளைப் பார்த்த இலங்கையின் பாதுகாப்புச் செயலாளனும் தமிழினப் படுகொலையை முன்னின்று நடத்தியவனுமான கோத்தபயா இராசபக்ச, “ஜெயலலிதா இப்படிப்பட்ட தீர்மானங்களைக் கொண்டு வருவது அரசியல் ஆதாயம் தேடும் முயற்சி. தமிழகம் என்பது இந்தியாவுக்குள் இருக்கும் ஒரு மாநிலம்தான். ஆனால், இந்தியா போன்ற நாடுகள் எல்லாம் எங்களுக்குத்தான் ஆதரவாக இருக்கின்றன” என்றெல்லாம் படபடத்தான்.

இப்படி, எழுத்தளவிலான முயற்சிகளோடு நின்று விடாமல், அடுத்து செயல் அளவிலும் சிங்கள நாட்டின் சிண்டை உரசினார் ஜெயலலிதா. “தமிழ்நாட்டில் நடக்கும் ஐ.பி.எல் மட்டைப்பந்துப் போட்டிகளில் இலங்கையைச் சேர்ந்த வீரர்கள், நடுவர்கள், அமைப்பாளர்கள் என யாரும் கலந்து கொள்ளக்கூடாது. மீறிக் கலந்து கொள்வதாக இருந்தால் இங்கு நடத்த விட முடியாது!” என்று கொந்தளித்தார். ஐ.பி.எல் ஆட்சிமன்றக் குழு இவருக்குப் பணிந்து இலங்கையைச் சேர்ந்த யாரையும் அந்தப் போட்டிகளில் பங்கேற்கச் செய்வதில்லை என்ற முடிவுக்கு வந்தது.

இவை மட்டுமல்லாமல், எந்த விடுதலைப்புலிகள் இயக்கத்துக்குத் தான் தடை கொண்டு வந்ததாகக் காலமெல்லாம் பெருமை பேசினாரோ, அதே விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களாகக் கருதப்படும் இராஜீவ் கொலைக் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார்.

அவர்களை விடுதலை செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தவுடன், “இப்படிப்பட்ட நிலையில் நடுவணரசின் கருத்தைக் கேட்டு விட்டுத்தான் மாநில அரசு விடுதலை செய்ய வேண்டும் எனச் சட்டத்தில் இருப்பதால் கேட்கிறேன். மூன்று நாட்களுக்குள் இது குறித்து நடுவணரசு பதிலளிக்க வேண்டும்! இல்லாவிட்டால் தமிழ்நாடு அரசே விடுதலை செய்யும்” என்று தடாலடியாக நடுவணரசுக்கே கெடு வைத்தார். ஆனால், சட்டத்துக்கே புறம்பாக, மீண்டும் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து எழுவர் விடுதலைக்கு இடைக்காலத் தடை பெற்றது சோனியா தலைமையிலான நயவஞ்சக நடுவணரசு.

Chief Minister Jayalalitha

இப்படி, சிங்களக் காடையர் முதல் வடநாட்டு ஆரியர் வரை, சித்தராமையா முதல் கோத்தபயா வரை யாரிடமும் தமிழ்நாட்டை விட்டுக் கொடுக்காத முதல்வராகத் திகழ்ந்தார் ஜெயலலிதா அவர்கள். ஒரு தலைவருக்குண்டான அடிப்படைத் தகுதியே அதுதான். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவராக இருந்தாலும் சரி, ஒற்றையாட்சித் தலைவராக (சர்வாதிகாரியாக) இருந்தாலும் சரி, ஆட்சியாளர் என்பவர் ஒருபொழுதும் மக்களை விட்டுக் கொடுத்து விடக்கூடாது! அதுதான் இன்றியமையாதது! தனிப்பட்ட முறையில் அவர் எப்படி மக்களை நடத்துகிறார் என்பது வேறு; ஆனால், வெளியாட்களிடத்தில் தன் மக்களை விட்டுத் தராமல் சரியான பிரதிநிதியாக நடந்து கொள்ள வேண்டும்! அப்படிப்பட்டவர்தான் உண்மையான மக்கள் பிரதிநிதியாக இருக்க முடியும்! அந்த வகையில் ஜெயலலிதாவுக்கு நிகரான ஒரு (தமிழ்) மக்கள் பிரதிநிதி தமிழ்நாட்டில் வேறு யாருமே இப்பொழுது இல்லை என்றால் அது மிகையாகாது.

ஈழப் பிரச்சினையைப் பொறுத்த வரையில், தொடக்கக் காலத்தில் ஜெயலலிதா பல தவறுகளை இழைத்தவர்தாம். இந்தியாவில் அடைக்கலம் தேடி வரும் மற்ற நாட்டு மக்களெல்லாரும் மகிழ்ச்சியாகவும் விடுதலையாகவும் வாழ்கையில், ஈழத் தமிழர்கள் மட்டும் இன்றும் தனியாக முகாம்களில் சிறை வைக்கப்பட்டுக் குற்றவாளிகளைப் போலக் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள் என்றால் அதற்கு ஜெ-வும் ஒரு முதன்மைக் காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாதுதான். ஆனால், ஒரு வகையில் பார்த்தால் அதுவும் தமிழ்நாட்டு மக்களின் பிரதிநிதி என்கிற முறையிலான நடவடிக்கைதான் என்பதாகப் புரிந்து கொள்ளலாம்.

இராஜீவ் படுகொலைக்கு முன்பு வரை தமிழ்நாட்டில் தனி ஈழக் கோரிக்கைக்கும், விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கும் பேராதரவு இருந்தது. ஆனால், அந்த நிகழ்வுக்குப் பின் நிலைமை அப்படியே தலைகீழானது. இராசீவ் கொடூரமாகக் கொல்லப்பட்ட விதமும் அதனால் தமிழ்நாட்டின் மீது விழுந்த பழியும் சேர்ந்து மக்களின் சிந்தனையையே முடக்கி விட்டதால் விடுதலைப்புலிகள் இயக்கத்தையே இங்குள்ள மக்கள் வெறுக்கும் அளவுக்குப் போனார்கள். அதனால், அந்த நேரத்தில் தமிழ்நாட்டு முதல்வராக வந்த ஜெயலலிதாவும் மக்கள் எண்ணத்தை எதிரொலிக்கும் வகையில் நடந்து கொண்டார்.

ஆனால், 2011-இன் நிலைமையே வேறு. இராசீவைக் கொன்றது விடுதலைப்புலிகள்தானா என்பதே சரியாகத் தெரியாத நிலையில், அப்படிப்பட்ட ஐயத்துக்குரிய குற்றச்சாட்டை முன்னிட்டுத் தங்கள் கண்ணெதிரிலேயே மொத்த இனமும் கொன்று குவிக்கப்பட்டதைத் தமிழ்நாட்டு மக்கள் பார்த்துக் கதறித் துடித்து வந்த நேரம் அது. ஒரே ஒரு மனிதனின் உயிரை விட இலட்சக்கணக்கான மக்களின் உயிரும் மானமும் வாழ்வும் வருங்காலமுமே பெரிது என்பதை உணர்ந்து மக்கள் தெருவில் இறங்கிப் போராடிக் கொண்டிருந்த வேளை அது. எனவே, அந்த நேரத்தில் மீண்டும் முதல்வரான ஜெயலலிதா மக்களின் அன்றைய மனநிலைக்கேற்ப மாறி நடந்தார். ஜெயலலிதா தமிழினத் தலைவர் ஒன்றும் இல்லை. தமிழ்நாட்டு முதல்வர் மட்டும்தான். ஆகவே, தமிழ்நாட்டு மக்களின் அவ்வப்பொழுதைய மனநிலைகளுக்கேற்ப அவர் நடந்து கொண்டார்.

ஆம்! ஜெயலலிதா சிறந்த தலைவரோ இல்லையோ, அருமையான அரசியலாளரோ இல்லையோ, நல்ல ஆட்சியாளரோ இல்லையோ, ஆனால் மிகச் சிறப்பான மக்கள் பிரதிநிதி, தமிழர் பிரதிநிதி! மாநில அரசுகளின் அதிகாரங்களைக் குறைப்பதிலும், அதன் மூலம் தேசிய இனங்களுக்கு இந்தியாவில் இருக்கும் கொஞ்சநஞ்ச உரிமைகளையும் பறிப்பதிலும் காங்கிரசை விடப் பத்து மடங்கு தீவிரமாகச் செயல்படும் பா.ஜ.க போன்ற ஒரு கட்சி ஆட்சியில் இருக்கும் இன்றைய நாளில் நமக்குத் தேவை இப்படி எதற்காகவும் அசைந்து கொடுக்காத ஒருவரின் தலைமைதான். இப்படிப்பட்ட ஒரு நேரத்தில் ஜெ அவர்களை நாம் இழந்திருப்பது தமிழ்நாட்டுக்கும் தமிழ் இனத்துக்குமே கூட ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என்பதில் அணுவளவும் ஐயமில்லை!

காவிரி தந்த கலைச்செல்வியாய்த்
தமிழ்நாட்டுக்குள் நுழைந்தவரே!
காவிரியைத் தந்த புரட்சித்தலைவியாய்
மண்ணைவிட்டு மறைந்தவரே!
ஒருபொழுதும் எவரிடத்தும் எங்களை
எதற்காகவும் விட்டுத் தராத தங்களை
போற்றிச் செலுத்துகிறோம் அஞ்சலி! - இது

என் புதினத்தை வாங்க

என் புதினத்தை வாங்க
மேலே உள்ள படத்தை அழுத்துங்கள்
பதிவுகளை உடனுக்குடன் பெற

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

வாட்சாப் தடத்தில் (Channel)...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு (1) 13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (9) அஞ்சல் வாக்கு (1) அஞ்சலி (25) அணு உலை (2) அப்பா மகள் பாசம் (1) அம்பிகை செல்வகுமார் (1) அம்மணம் (1) அமேசான் (6) அயல்நாட்டுத் தமிழர் (1) அரசியல் (91) அழைப்பிதழ் (7) அற்புதம்மாள் (2) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (45) ஆசிரியர் (1) ஆட்சென்ஸ் (1) ஆணவப்படுகொலை (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இங்கிலாந்து (1) இசுரேல் (2) இட ஒதுக்கீடு (4) இணையம் (19) இந்தித் திணிப்பு (3) இந்தியா (25) இரசியா (1) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இலக்கணம் (3) இலங்கை (1) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (23) இனம் (46) ஈழம் (44) உக்கிரேன் (1) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (24) எழுவர் விடுதலை (1) ஐ.நா (5) ஒருங்குறி (1) கடவுள் (1) கதை (4) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (12) கலைச்சொல்லாக்கம் (1) கவிஞர் தாமரை (1) கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் (2) கவிஞர் ரேவதி (1) கவிதை (20) காங்கிரஸ் (6) காசா (2) காணொளி (8) காதல் (3) காந்தியம் (1) கார்த்திக் சுப்புராஜ் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (5) கிரந்தம் (1) கீச்சுகள் (2) கீழடி (2) குழந்தைகள் (10) குறள் (2) கூகுள் (2) கையொப்பம் (2) கோட்பாடு (9) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (16) சந்திப்பு (1) சமயம் (12) சமற்கிருதம் (2) சமூகநீதி (4) சரிதா (1) சாதி (11) சாலமன் பாப்பையா (1) சிங்களர் (1) சித்திரக்கதைகள் (1) சிவகார்த்திகேயன் (1) சிறுவர் இலக்கியம் (5) சீமான் (7) சுற்றுச்சூழல் (6) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (3) சொத்துக்குவிப்பு (1) தங்கிலீஷ் (1) தந்தைமை (1) தமிழ் (39) தமிழ் தேசியம் (5) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (20) தமிழர் (48) தமிழர் பெருமை (20) தமிழறிஞர் முத்துநிலவன் (1) தமிழின் சிறப்பு (4) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (2) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (6) தாலி (1) தி.மு.க (11) திரட்டிகள் (4) திராவிடம் (9) திருக்குறள் (1) திருமுருகன் காந்தி (1) திரைப்படம் (3) திரையுலகம் (12) திறனாய்வு (1) தினகரன் (1) துருவ் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (10) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தேர்தல்-2021 (2) தேர்தல்-2026 (1) தொலைக்காட்சி (2) தொழில்நுட்பம் (10) தோழர் தியாகு (1) நட்பு (13) நிகழ்வுகள் (5) நிர்மலா சீதாராமன் (1) நினைவேந்தல் (10) நீட் (5) நூல்கள் (11) நூற்றாண்டு (1) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (3) பதிவர் உதவிக்குறிப்புகள் (10) பதிவுலகம் (24) பராசக்தி (2) பா.ம.க (2) பா.ஜ.க (31) பாக்யராஜ் (1) பார்ப்பனியம் (14) பாரதிராஜா (1) பாலஸ்தீனம் (2) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (10) பீட்டா (1) புதிய வேளாண் சட்டம் (1) புதினம் (1) புறநானூறு (1) புனைவுகள் (12) பெண்ணியம் (7) பெரியார் (3) பேரறிவாளன் (2) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (6) பொதுவுடைமை (2) பொதுவுடைமைக் கட்சி (2) பொருளாதாரம் (2) பொழிவு (2) போட்டி (1) போர் (3) போராட்டம் (10) ம.ந.கூ (2) மகான் (1) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (11) மடோன் அஷ்வின் (1) மணிவண்ணன் (1) மதிப்புரை (6) மதுவிலக்கு (2) மருத்துவம் (7) மன்சூரா பீவி (1) மாநாடு (1) மாநாடுகள் (1) மாய இயல்பியம் (2) மாவீரர் நாள் (3) மாற்றுத்திறனாளிகள் (3) மிஷ்கின் (1) மீம்ஸ் (7) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (3) மேனகா காந்தி (1) மொழியரசியல் (4) மொழியறிவியல் (3) மோடி (11) யுவர் கோட் (1) யோகிபாபு (1) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) ராஜீவ் படுகொலை (1) வரலாறு (25) வாழ்க்கைமுறை (21) வாழ்த்து (7) வானதி சீனிவாசன் (1) விக்ரம் (1) விடுதலை (6) விடுதலைப்புலிகள் (13) விருது (1) விஜய் (1) விஜய் சேதுபதி (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (7) வை.கோ (6) வைரமுத்து (2) ழகரம் (1) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டாலின் (1) ஸ்டெர்லைட் (2) ஹமாஸ் (2) ஹீலர் பாஸ்கர் (1) Bhagavath Gita (1) BJP (1) Casteism (1) Cauvery (1) Dalit (1) Genocide (3) Hindu (1) Karnataka (1) Magical Realism (1) Manisha (1) Modi (1) Notion Press (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (2) Religion (1) Scheduled Castes (1) Sexual Harassment (1) Tamilnadu (1) Tamils (1) Tanglish (1) Unicode (1) Unicode Consortium (1) UP (1) Women (1) Yogi Adityanath (1)

முகரும் வலைப்பூக்கள்