ஆம் நண்பர்களே, சூரியனையோ மாடுகளையோ அல்ல. உண்மையில் உழவர்களை வணங்கித்தான் நாம் இந்தப் பொங்கலை மட்டுமின்றி, இனி வரும் பொங்கல் திருநாட்களையும் கொண்டாட வேண்டும்! ஏன் எனக் கேட்கிறீர்களா? சொல்கிறேன்.
அந்தக் காலத்தில் வெயில், மழை போன்ற இயற்கைக் கூறுகளை நம்பி உழவுத்தொழில் செய்தோம்; அதனால் அவற்றின் மூலம் கிடைத்த விளைச்சலைச் சூரியனுக்குப் படையலிட்டு வணங்கினோம். ஆனால் இன்று நம் வேளாண்மை முழுக்க முழுக்கச் செயற்கைப் பாசன முறைகளை நம்பித்தான் இருக்கிறது. குறிப்பாக, காவிரி! அந்தக் காவிரி நீர் - காவிரி மேலாண்மை ஆணையம் - நமக்குக் கிடைக்கக் காரணம் நம் அய்யாக்கண்ணு ஐயா முதலான உழவர் பெருமக்களும் அவர்கள் நடத்திய தொடர் போராட்டங்களும்தாம்.
என்னதான் தமிழ்நாடு அரசு வழக்குத் தொடுத்து வாதாடினாலும் அப்படி வழக்குத் தொடுக்கவும் அந்த வழக்கின் பின்னுள்ள வலியை நீதிபதிகள் உணர்ந்து ஆணையம் அமைக்குமாறு தீர்ப்பளிக்கவும் காரணமாக இருந்தவை நம் உழவர் பெருமக்கள் கடந்த ஆண்டு நடத்திய பதற வைக்கும் போராட்டங்கள்தாம்.
ஆம்! இன்று நமக்குக் கிடைக்கும் இந்தச் சோறும் நீரும் இயற்கை நமக்கு அளித்த கொடைகள் அல்ல. இயற்கை நமக்களித்த இவற்றின் மீதான நம் உரிமையை நிலைநாட்ட நம் உழவர்கள் உயிரை இழந்து, மண்ணில் புதைந்து, ஆடை துறந்து, மானம் மறந்து பெரும் போராட்டங்கள் மூலம் வென்றெடுத்தவை. ஆனாலும் இன்னும் இந்தப் போராட்டங்கள் முடிந்த பாடில்லை.
சாணவளித் (மீத்தேன்) திட்டம், நீரகக் கரிமத் (ஹைட்ரோ கார்பன்) திட்டம், கெயில் திட்டம், சல்லிக்கட்டுத் தடை எல்லாம் போய் இப்பொழுது எட்டு வழிச் சாலைத் திட்டம், உயரழுத்த மின்கோபுரத் திட்டம் போன்றவை புதிதாகக் கிளம்பியிருக்கின்றன. எல்லாப் பக்கமிருந்தும் அழுத்தம் கொடுத்து எப்படியாவது உழவர்களை அவர்களின் நிலங்களிலிருந்து வெளியேற்றி விட வேண்டும் என மத்திய - மாநில அரசுகள் முயல்வது பச்சையாகத் தெரிகிறது!

இந்தச் செயற்கைப் பேரிடர்களெல்லாம் போதாதென, ஒரே நாளில் வேளாண்குடிகளின் வாழ்க்கை மொத்தத்தையும் வாரி வாயில் போட்டுக் கொண்ட கஜா புயல் போன்ற இயற்கைப் பேரிடர்கள் வேறு. இவ்வளவையும் தாங்கிக் கொண்டு இன்றும் நமக்காக ஏர் பிடிக்கும் உழவர் பெருமக்களை நினைத்தால் நெஞ்சம் விம்முகிறது!
உண்மையில் நம் தமிழ் உழவர்கள் ஒவ்வொருவரும் படை வீரர்களை விடப் பன்மடங்கு தீரம் மிகுந்தவர்கள். படை வீரர்கள் கூடச் சொந்த நாட்டின் பின்புல வலிமையைக் கொண்டு ஒரே ஓர் எதிரி நாட்டைத்தான் எதிர்த்துப் போராடுவார்கள். ஆனால் நம் உழவாண்மைத் தோழர்களோ சொந்த நாட்டை மட்டுமில்லாது அதற்குப் பின்னணியில் இருக்கும் அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளையும், இவற்றுக்கும் பின்னால் அணிவகுத்திருக்கும் உலகின் பணக்காரப் பெருமுதலைகளையும் ஒரே நேரத்தில், எந்தப் பின்புலமும் இல்லாமல் எதிர்த்துப் போராடி வருகிறார்கள்!
எட்டு வழிச் சாலைக்காக நிலத்தை அளவீடு செய்ய வந்த அதிகாரிகளைப் பார்த்து "நிலத்தை விட்டு வெளியேறாவிட்டால் கழுத்தை அறுத்துக் கொள்வேன்" என மழிதகட்டைக் (பிளேடு) குரல்வளையில் வைத்துக் கொண்டு நரம்பு புடைக்கக் கத்திய அந்த உழவர் மகளை மறக்க முடியுமா? உதிரம் சிந்தாத இந்தப் போர், உதிரம் சிந்தும் உண்மைப் போரை விட எந்த விதத்திலும் குறைந்ததில்லை.

இப்படிப் பெரும் போர் நடாத்தி, அரும்பாடுபட்டு நமக்கு ஒவ்வொரு நெல்மணியையும் விளைவித்துத் தரும் நம் வேளாண் பெருமக்கள்தாம் நமக்கு உண்மையில் சூரியனையும் வேறெந்த இயற்கை ஆற்றலையும் விட மேலானவர்கள்; வணங்கத் தக்கவர்கள்!
எனவே பெய்தும் கெடுத்துப் பெய்யாமலும் கெடுக்கும் இயற்கையை விட்டுவிட்டு தன்னையே விதைத்து நமக்கு உணவிடும் உழவர்களை நினைத்துக் கொண்டாடுவோம் இந்தப் பொங்கலை! தமிழர் திருநாளை!
உலகத் தமிழ் உறவுகள் அனைவருக்கும் உளமார்ந்த
போகி, பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு, திருவள்ளுவர் நாள், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல்

நல்வாழ்த்துக்கள்!
❀ ❀ ❀ ❀ ❀
படம்: நன்றி விகடன்.
தொடர்புடைய பதிவுகள்:
✎ இந்தியா எனும் முதலாளி கண்டெடுத்த பலியாடா விவசாயி?
✎ My Dear Karnataka People! – An open letter to Karnataka people from Tamilnadu people with some important facts!
✎ தமிழ்நாட்டு உழவர்கள் ஆடையில்லாப் போராட்டம்! - யாருக்குத் தலைக்குனிவு?
✎ இறைச்சி அரசியல் – பாதிக்கப்படப் போவது இசுலாமியர்களா பார்ப்பனர்களா?

பதிவுகளை உடனுக்குடன் பெறக் கீழ்க்காணும் பொத்தானைச் சொடுக்கி
வாட்சாப் தடத்தில் (Whatsapp Channel) இணையுங்கள்!!
0 comments:
கருத்துரையிடுக