.

வெள்ளி, ஜனவரி 01, 2016

இன்ட்லி! - தமிழ்ப் பதிவர்களுக்கு ஓர் எச்சரிக்கை!


Stopped Tamil Aggregators

ன்பார்ந்த பதிவுலகத் தோழர்களே! அனைவருக்கும் நேச வணக்கம்!

இந்நாட்களில் தமிழ்த் திரட்டிகள் பலவும் அடுத்தடுத்து மூடப்பட்டு வருகின்றன. இவ்வரிசையில் அண்மையில் சேர்ந்திருப்பது ‘இன்ட்லி’! பல்லாயிரக்கணக்கான பயனர்களுடன் முதல் தரத் திரட்டிகளுள் ஒன்றாக இருந்த ‘இன்ட்லி’யெல்லாம் மூடப்படும் என்று நினைத்துக் கூடப் பார்த்ததில்லை. ஆனால், அதுவும் நடந்து விட்டது!

‘இன்ட்லி’யின் சேவையைப் பயன்படுத்தாதவர்களின் எண்ணிக்கை இணையத்தில் வெகு குறைவு. அவர்களுள் பலர் இன்றும் அந்தத் தளத்தின் நிரலிகளை (HTML scripts) வலைப்பூவிலிருந்து நீக்காமல் வைத்திருப்பதைக் காண்கிறேன். அந்தத் தளமே இப்பொழுது இணையத்தில் இல்லாததால் அதன் நிரலிகள் முற்றிலும் செயலிழந்து விட்டன நண்பர்களே! அவற்றை நீங்கள் இன்னும் நீக்காமல் வைத்திருப்பதால் உங்கள் வலைப்பூக்கள் திறக்க மிக மிகத் தாமதம் ஆகிறது. வேண்டுமானால், உங்கள் வலைப்பூவுக்குச் சென்று, அதிலிருக்கும் ஏதாவது ஓர் இடுகையைத் திறந்து பாருங்கள்!

என்ன, காத்திருந்து காத்திருந்து உங்களுக்கே அலுப்பாக இருக்கிறதா? இஃது உங்கள் வலைப்பூவுக்கு வருபவர்களின் எண்ணிக்கையை வெகுவாகப் பாதிக்கும்! எனவே, ‘இன்ட்லி’யின் வாக்குப்பட்டை, பின்பற்றுவோர் செயலி (follower widget) ஆகியவற்றை உடனடியாக உங்கள் வலைப்பூவிலிருந்து நீக்கி விடுமாறு எச்சரிக்கவே இந்தப் பதிவு!

‘இன்ட்லி’ வாக்குப்பட்டையை நீக்க

௧) முதலில், உங்கள் பிளாக்கர் கணக்கில் நுழையுங்கள் (Log in).

௨) அடுத்து, உங்கள் பயனர் பலகையிலுள்ள (Dashboard) உங்கள் வலைப்பூவின் பெயர் மீது சொடுக்குங்கள்.

௩) இப்பொழுது வரும் பக்கத்தில், இடப்புறப் பட்டியலில் உள்ள ‘டெம்பிளேட்’ (Template) எனும் பிரிவைச் சொடுக்குங்கள்.

௪) அடுத்து வரும் பக்கத்தில் இருக்கும் ‘காப்புப்பிரதி / மீட்டமை’ (Backup / Restore) பொத்தானை அழுத்துங்கள்.

௪) அடுத்து வரும் தத்தலில் (tab) உள்ள ‘முழு டெம்ப்ளேட்டையும் பதிவிறக்கு’ (Download full template) பொத்தானைச் சொடுக்கி உங்களுடைய வலைப்பதிவின் இப்பொழுதைய முழு வடிவத்தையும் ஒரு நகலாகக் கணினியில் தரவிறக்கிச் சேமித்துக் கொள்ளுங்கள்.

௫) பிறகு, அந்தத் தத்தலை மூடிவிட்டு, ‘HTMLஐ திருத்து’ (Edit HTML) பொத்தானை அழுத்துங்கள்.

௬) இப்பொழுது புதிதாக வந்திருக்கும் HTML பெட்டிக்குள் சுட்டியால் (Mouse) ஒருமுறை சொடுக்கிவிட்டு Ctrl+F கொடுங்கள்.

௭) இப்பொழுது HTML பெட்டிக்குள் குட்டிப் பெட்டி ஒன்று வந்திருக்கும். அதனுள் ta.indli.com என்று தட்டெழுதுங்கள்.

௮) இப்பொழுது, ‘இன்ட்லி’ வாக்குப்பட்டையின் நிரலை (script) நீங்கள் பார்க்கலாம். இது பின்வருமாறு இருக்கும்.

<td><script type='text/javascript'> button=&quot;hori&quot;; lang=&quot;ta&quot;; submit_url =&quot;<data:post.canonicalUrl/>&quot; </script> <script src='http://ta.indli.com/tools/voteb.php' type='text/javascript'/></td>

௯) இந்த நிரலைத் தொடக்கம் முதல் முடிவு வரை மொத்தமாக, அதே நேரம் எச்சரிக்கையாக முழுவதுமாய் அழித்து விடுங்கள்.

௯.௧) நிரலின் தொடக்கத்திலும் முடிவிலும் சிவப்பு எழுத்தில் காட்டப்பட்டிருப்பவை சில வலைப்பூக்களில் இருக்கும், சிலவற்றில் இருக்க மாட்டா. இருந்தால், அவற்றையும் சேர்த்து அழித்துவிடுங்கள்; இல்லாவிட்டால், கவலைப்படத் தேவையில்லை. வாக்குப்பட்டைகளை ஒரே வரிசையில் கொண்டு வருவதற்கான ஏற்பாட்டைச் செய்து வைத்திருப்பவர்களின் வலைப்பூக்களில் மட்டுமே இவை காணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அதைச் செய்யும் வழிமுறை இங்கே - திரட்டிகளின் ஓட்டுப் பட்டைகளை ஒரே வரிசையில் அமைப்பது எப்படி?

௧௦) அவ்வளவுதான், ‘டெம்ப்ளேட்டைச் சேமி’ (Save Template) பொத்தானை அழுத்தி, மாற்றம் சேமிக்கப்பட்டதும் மூடிவிடுங்கள்.

இப்பொழுது மீண்டும் உங்கள் வலைப்பூவுக்குச் சென்று, ஏதேனும் ஒரு பதிவைத் திறந்து பாருங்கள்! சில நொடிகளில் வந்து விடுகிறதா?...

‘இன்ட்லி பின்பற்றுவோர் செயலி’யைப் பக்கப்பட்டியிலிருந்து நீக்க

இதே போல, ‘இன்ட்லி’யின் பின்பற்றுவோர் செயலி’யையும் (follower widget) உடனே நீக்கி விடுங்கள் நண்பர்களே! இது பொதுவாகப் பக்கப்பட்டியில் (sidebar) தனிச் செயலியாகத்தான் இணைக்கப்படும். எனவே, நீக்குவது எளிதுதான். ஒருவேளை நீங்கள் பிளாகருக்குப் புதியவராயிருந்து, உங்களுக்கு இது தெரியாது என்றால் இதற்கான வழிமுறையை அறியத் தொடர்ந்து படிக்கலாம். மற்றவர்கள் கட்டுரையின் அடுத்த உட்தலைப்புக்குச் செல்லலாம்.

௧) முதலில், உங்கள் பிளாக்கர் கணக்கில் நுழைந்து (Log in) பயனர் பலகையிலுள்ள (Dashboard) உங்கள் வலைப்பூவின் பெயர் மீது சொடுக்குங்கள்.

௨) இப்பொழுது வரும் பக்கத்தில், இடப்புறப் பட்டியலில் உள்ள ‘தளவமைப்பு’ (Layout) எனும் பிரிவைச் சொடுக்குங்கள்.

௩) இப்பொழுது உங்கள் வலைப்பூவுடைய வரைபடம் அப்படியே உங்களுக்குக் காட்டப்படும். அதில் ‘இன்ட்லி பின்பற்றுவோர் செயலி’ எங்கே இருக்கிறது என்று பார்த்து, அதிலுள்ள ‘மாற்று’ (Edit) எனும் இணைப்பைச் சொடுக்குங்கள்.

௪) இப்பொழுது வரும் தத்தலில் (tab) இருக்கும் ‘அகற்று’ (Remove) எனும் பொத்தானைச் சொடுக்குங்கள்.

௫) அவ்வளவுதான், ‘ஒழுங்கமைப்பைச் சேமி’ (Save arrangement) பொத்தானை அழுத்தி, மாற்றத்தைச் சேமித்து விடுங்கள்.

இப்பொழுது வலைப்பூவின் ஏதேனும் ஒரு பதிவைத் திறந்து பார்த்தீர்களானால், தளத்தின் வேகம் வெகுவாக உயர்ந்திருப்பதை உணரலாம்.

‘இன்ட்லி பின்பற்றுவோர் செயலி’யைத் தளத்தின் உட்பகுதியிலிருந்தே நீக்க

ஒருவேளை நீங்கள் தப்பித் தவறி, ‘பின்பற்றுவோர் செயலி’யைப் பக்கப்பட்டியில் இணைக்காமல், தளத்தின் வார்ப்புருவுக்குள்ளேயே (template) சேமித்து இணைத்திருந்தீர்களானால், அதை நீக்கும் வழிமுறைகள் இனி. இது தேவைப்படாதவர்கள் அடுத்த உட்தலைப்பிலிருந்து தொடரலாம்.

௧) மேலே, ‘இன்ட்லி’ வாக்குப்பட்டையை நீக்கச் சொல்லப்பட்ட வழிமுறைகளில் ௧ முதல் ௭ வரையிலான படிநிலைகளைப் பின்பற்றுங்கள்.

௨) இப்பொழுது, ‘இன்ட்லி பின்பற்றுவோர் செயலி’யின் நிரலை (script) நீங்கள் பார்க்கலாம். இது பின்வருமாறு இருக்கும்.

<iframe id="indlifollow" src="http://ta.indli.com/tools/followerbox.php?u=sppudu&amp;w=250&amp;r=4&amp;s=light&amp;b=&amp;h=yes" style="height: 407px; width: 250px; "allowtransparency="true" frameborder="0"

௩) இந்த நிரலைத் தொடக்கம் முதல் முடிவு வரை மொத்தமாக, அதே நேரம் எச்சரிக்கையாக முழுவதுமாய் அழித்து விடுங்கள்.

௪) அவ்வளவுதான், ‘டெம்ப்ளேட்டைச் சேமி’ (Save Template) பொத்தானை அழுத்தி, மாற்றம் சேமிக்கப்பட்டதும் மூடிவிடுங்கள். தளத்தின் வேகம் உயர்ந்திருக்கும்.

திரட்டிகளின் தோல்வி!

தமிழ்ப் பதிவர்கள் நாம் நம் எழுத்துக்களை மக்களின் பார்வைக்குக் கொண்டு செல்லத் பெரிதும் நம்பியிருப்பது ‘திரட்டி’களைத்தாம். ஆனால், அவையே தொடர்ந்து இயங்க முடியாமல் தோற்றுப் போவதென்பது இணையத் தமிழ் ஊடகத்தின் எதிர்காலம் குறித்துப் பெரிதும் கவலை ஏற்படுத்துவதாக உள்ளது. ‘உலவு’, ‘உடான்ஸ்’, ‘நிகண்டு’ போன்ற திரட்டிகள் மூடப்பட்டது கூடப் பெரிய விதயமாகத் தோன்றவில்லை. காரணம், வணிகக் கருத்தாக்கம் (Business Idea) ஒன்று புதிதாக உருவானதும் பலரும் அதில் ஆர்வம் காட்டுவதும், எதிர்பார்த்த அளவு அது பலனளிக்காவிட்டால், புதிதாக வந்தவர்கள் உடனே மூட்டை முடிச்சுக்களைக் கட்டிக் கொண்டு கிளம்புவதும் வழக்கானதே. ஆனால், ‘இன்ட்லி’, ‘தமிழ்வெளி’, ‘தமிழ் 10’ என எண்ணிலடங்காப் பயனர்களைப் பெற்றிருந்த முன்னணித் திரட்டிகள் கூட ஒவ்வொன்றாகத் தங்கள் சேவையை நிறுத்திக் கொண்டு வருவது எதிர்பாராத திகைப்பை அளிக்கிறது!

இணையத்தில் புதிய தொழில் வாய்ப்புகள் - அதுவும், தமிழ் சார்ந்த வாய்ப்புகள் - நிறையவே உள்ளன. தமிழ் இளைஞர்கள் தொழில், வேலைவாய்ப்பு ஆகியவற்றை மெய்யுலகில் மட்டுமே இன்னும் இன்னும் தேடிக் கொண்டிராமல், மெய்நிகர் (online) உலகிலும் கொஞ்சம் முயன்று பார்க்க முன்வந்தால் ‘திரட்டி’கள் போன்ற இழப்புத் தரும் தொழில் வாய்ப்புகளை இலாபம் ஈட்டும் வழிகளாக மாற்றலாம். அதன் மூலம் தங்கள் எதிர்காலத்தையும் வளப்படுத்திக் கொண்டு தமிழின் எதிர்காலத்தையும் உறுதி செய்யலாம்.

எனவே, தமிழ்ப் பதிவுலகின் சார்பாகவும், உலகத் தமிழர்களின் சார்பாகவும் தமிழ் இளைஞர்களை இணையம் சார்ந்த தொழில்களைத் தொடங்க வருமாறு அன்போடு அழைக்கிறேன்! 

❀ ❀ ❀ ❀ ❀


படம்: நன்றி அந்தந்தத் திரட்டிகள்.

பதிவு பிடித்திருந்தால் கீழ்க்காணும் வாக்குப்பட்டைகள் மூலம் மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்களேன்! கூடவே, உங்கள் செம்மையான கருத்துக்களுக்கும் காத்திருக்கிறேன்! தமிழில் எழுத வசதியில்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது கீழே 'தமிழ்ப் பலகை'! தனிப்பட ஏதும் தெரிவிக்க விரும்பினால், அதற்கு அடுத்து உள்ள 'அணுக' படிவத்தைப் பயன்படுத்தலாம்!

 பதிவுகளை உடனுக்குடன் பெறக் கீழ்க்காணும் பொத்தானைச் சொடுக்கி
வாட்சாப் தடத்தில் (Whatsapp Channel) இணையுங்கள்!!

Aga Sivappu Thamizh Whatsapp Channel

முகநூல் வழியே கருத்துரைக்க

45 கருத்துகள்:

 1. ஒரு நல்ல எச்சரிக்கை மணியை ஒலிக்கச் செய்துள்ளீரிகள். வலைப்பதிவர்களுக்கு பயனுள்ள தகவல். நன்றி. (நான் ஆரம்பத்தில் தமிழ் இண்ட்லியில் உறுப்பினராக மட்டும் இருந்தேன்; அப்புறம் விலகி விட்டேன்)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் பாராட்டுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா! நான் வலைப்பூ தொடங்கும் முன்பே, இணையத்துக்கு வந்த புதிதிலேயே 'இன்ட்லி'யில் உறுப்பினராகி விட்டேன். கடைசி வரை பயன்படுத்திக் கொண்டும் இருந்தேன். நிறைய பேரைத் தளத்துக்குக் கொண்டு வரும் திரட்டிகளில் அதுவும் ஒன்று. அஃது இல்லாதது வருத்தமாய் இருக்கிறது.

   நீக்கு
 2. தற்போதைக்கு "தமிழ் மணம்" திரட்டி ஒன்று தான் தமிழ்ச் சேவைக்கு உதவுகிறது. "தமிழ் மணம்" போன்று வேறு ஏதாவது நல்ல தமிழ்த் திரட்டி சேவையில் உள்ளதா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் கருத்துக்கு நன்றி ராமராவ் அவர்களே!

   ஆம்! 'தமிழ்மணம்' தவிர மற்ற திரட்டிகளிலிருந்து நம் தளத்துக்கு வருபவர்கள் மிகவும் அரிதுதான். ஆனால், இப்படித் திரட்டிகளில் இணைப்பதன் மூலம் நம் தளத்துக்கான வெளியிணைப்புகள் எண்ணிக்கை உயர்வதால் கூகுள் தேடலில் நம் தளம் முன்னுக்கு வர உதவுகிறது. திரட்டிகளைப் பொறுத்த வரை, இப்பொழுதுக்குத் 'தமிழ்மண'த்துக்கு அடுத்தபடி நம் தளத்துக்கு மக்களை அழைத்து வரும் திரட்டி 'தமிழ் பி.எம் (http://tamilbm.com)'. முயன்று பாருங்களேன்!

   நீக்கு
 3. பயனுள்ள தகவல் நானும் இதை சொல்ல நினைத்தேன். பலருடைய தளங்கள் இன்ட்லியால் திறபதற்கு நீண்ட நேரம் ஆனது முன்பு ஒரு முறை இதேபோன்று ஒரு சிக்கல் ஏற்பட்டது.பின்னர் சரி செய்யப்பட்டது. இன்ட்லியால் ஒரு இன்னல் என்று பதிவு கூட எழுதி இருந்தேன். மீண்டும் இன்ட்லி புத்தாக்கம் பெறுமா என்பது ஐயமே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மூத்த வலைப்பதிவரான உங்கள் பாராட்டுக்கும் விரிவான கருத்துரைக்கும் நன்றி ஐயா! ஆம்! நீங்கள் கூறுவது உண்மைதான். அண்மைக்காலமாகத் திரட்டிகள் மூலம் வலைப்பூவுக்கு வருபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டதாகத் தெரிவதால் மீண்டும் 'இன்ட்லி' வர வாய்ப்பிருப்பது போலத் தெரியவில்லை.

   நீக்கு
 4. இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
  இனிய 2016 இல் எல்லாம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஐயா! தங்கள் வாழ்த்துக்கும் அன்பிற்கும் மிக்க நன்றி! நானும் என் அன்பார்ந்த நல்வாழ்த்துக்களைத் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் நண்பர்கள் ஆகியோருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்!

   நீக்கு
 5. இனிய புது வருட வாழ்த்துக்கள். இந்த ஆண்டு முழுவதும் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கட்டும். அன்புடன் துரை சாமி ஜெயச்சந்திரன்.
  Happy and prosperous New Year

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஐயா! தங்கள் வாழ்த்துக்கும் அன்பிற்கும் மிக்க நன்றி! நானும் என் அன்பார்ந்த நல்வாழ்த்துக்களைத் தங்களுக்கும் தங்கள் இல்லத்தினர் நண்பர்கள் ஆகியோருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்!

   நீக்கு
  2. தொடர்ந்து படியுங்கள்! உங்கள் செம்மையான கருத்துக்களைப் பதியுங்கள்! மேற்கண்ட இணைப்புகள் மூலம் சமூக வலைத்தளங்கள், திரட்டிகள் ஆகியவற்றிலும் பதிவைப் பகிர்ந்து உங்களுக்குப் பிடித்த இந்தப் பதிவு மற்றவர்களையும் சென்றடைய உதவுங்கள்! நன்றி!

   நீக்கு
 6. நன்றி நண்பரே பிளாக் பற்றிய பதிவிக்கு,,,தொடருங்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் பதிவுகள் பலவும் படித்திருக்கிறேன், வாக்களித்திருக்கிறேன். தொழில்நுட்பப் பதிவரான நீங்களே என் தொழில்நுட்பப் பதிவை வந்து படித்திருப்பது கண்டு மிகவும் மகிழ்கிறேன்! நன்றி நண்பரே! தொடர்ந்து படியுங்கள்! உங்கள் செம்மையான கருத்துக்களைப் பதியுங்கள்! மேற்கண்ட இணைப்புகள் மூலம் சமூக வலைத்தளங்கள், திரட்டிகள் ஆகியவற்றிலும் பதிவைப் பகிர்ந்து உங்களுக்குப் பிடித்த இந்தப் பதிவு மற்றவர்களையும் சென்றடைய உதவுங்கள்! நன்றி!

   நீக்கு
 7. பதில்கள்
  1. நன்றி ஐயா! நானும் என் அன்பார்ந்த நல்வாழ்த்துக்களைத் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் நண்பர்கள் ஆகியோருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்!

   நீக்கு
 8. நன்றிங்க, ஞானப்பிரகாசன் அவர்களே!

  என்னிடம் ஒரு குறைபாடு உண்டு. பயன்படாமல்ப் போனதும் எதையும் எளிதில் தூக்கி எறிவதில்லை! இப்போது உங்கள் பதிவின் உதவியால் "இன்ட்லி"யை அகற்றிவிட்டேன். நன்றி.

  இன்ட்லி யை தமிழிஷ் என்று சொல்லி ஆரம்பித்தார்கள். அத்திரட்டி ஆரம்பித்து, வளர்ந்து, பின் மறைந்ததையும் பார்த்தாச்சு.

  ஆக ஒரு திரட்டியின் தோற்றம், வாழ்வு, மறைவு எல்லாவற்றையும் பார்த்து விட்டதால் நம(என)க்கு வலையுலகில் வயதாகிவிட்டதென்று அர்த்தம்.:)

  வலையுலகில் ரொம்ப காலம் இருந்தாச்சு போல இருக்கு. :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. :-) ஐயா! உங்களுக்கு இருக்கும் அந்தக் குறைபாடு எனக்கும் உண்டு. ஆனால், என்ன செய்வது ஐயா, இப்படிப்பட்ட நல்ல பழக்கங்களை (!) இணையவுலகில் கடைப்பிடிக்கத் தொழில்நுட்பம் நமக்கு இடமளிப்பதில்லையே! :-)

   ஆம்! 'தமிழிஷ்' என்ற பெயரில் 'இன்ட்லி' இயங்கத் தொடங்கியபொழுதுதான் நானும் அதை முதன்முதலில் பார்த்தேன். அப்பொழுது என்னிடம் வலைப்பூ கிடையாது, கணினி கிடையாது, எனக்கென்று மின்னஞ்சல் முகவரி கூடக் கிடையாது. இன்றும் இந்தியாவையே கலக்கிக் கொண்டிருக்கும் இரண்டாம் தலைமுறைத் தொழில்நுட்பத்தைச் சேர்ந்த கைப்பேசியில்தான் இணையம் எனக்கு முதன்முதலில் அறிமுகமாயிற்று. அப்பொழுது, தமிழ்ப் படைப்புகள் பலவற்றையும் பட்டியலாகப் பார்த்துத் தேர்ந்தெடுத்துப் படிக்க 'தமிழிஷ்' பயனுள்ளதாயிருந்தது. ஒருமுறைதான் அப்படிப் பயன்படுத்தினேன். அடுத்த முறை வந்து பார்த்தால் 'தமிழிஷ்' என்றொரு தளமே இல்லை. கூகுளில் தேடினாலும் "கூகுளிலிருந்து 'தமிழிஷ்' தேடி வந்திருக்கும் பயனர் அவர்களே" என்று 'இன்ட்லி'தான் வரவேற்றது. 'தமிழிஷ்'தான் 'இன்ட்லி' எனப் பெயர் மாறிவிட்டதோ என்று அப்பொழுது எழுந்த ஐயம், ஏறத்தாழ நான்கு ஆண்டுகள் கழித்து இன்று உங்கள் மூலம்தான் தீர்ந்தது என்பதைத் தெரிவிப்பதற்காக இவற்றையெல்லாம் சொல்கிறேன்.

   ஆனால், எத்தனை ஆண்டுகள் போனால் என்ன? பழமை ஏற ஏறத்தானே வைரத்துக்கு மதிப்பு! அது போலத்தான் நீங்களும். மூத்த வலைப்பதிவரான உங்கள் முதல் வருகை குறித்து என் உளமார்ந்த மகிழ்ச்சியையும் நல்வரவையும் தெரிவித்து மகிழ்கிறேன்! தொடர்ந்து படியுங்கள்! உங்கள் செம்மையான கருத்துக்களைப் பதியுங்கள்! மேற்கண்ட இணைப்புகள் மூலம் சமூக வலைத்தளங்கள், திரட்டிகள் ஆகியவற்றிலும் பதிவைப் பகிர்ந்து உங்களுக்குப் பிடித்த இந்தப் பதிவு மற்றவர்களையும் சென்றடைய உதவுங்கள்! நன்றி!

   நீக்கு
 9. பதில்கள்
  1. ஆம் நண்பரே! ஆனால், கவலைப்படாதீர்கள்! பழையன கழிந்தால் புதியன புகும்! உங்கள் முதல் வருகைக்கு என் உளமார்ந்த நல்வரவு! தொடர்ந்து படியுங்கள்! உங்கள் செம்மையான கருத்துக்களைப் பதியுங்கள்! மேற்கண்ட இணைப்புகள் மூலம் சமூக வலைத்தளங்கள், திரட்டிகள் ஆகியவற்றிலும் பதிவைப் பகிர்ந்து உங்களுக்குப் பிடித்த இந்தப் பதிவு மற்றவர்களையும் சென்றடைய உதவுங்கள்! நன்றி!

   நீக்கு
 10. இண்ட்லியில் பதிய முடியவில்லையே என்று நினைத்துக் கொண்டிருந்தேன்! நின்று போன விஷயம் தெரியாது! உபயோகமான தகவல்! நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் கருத்துரைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி நண்பரே!

   நீக்கு
 11. சகோ! ரொம்ப நன்றி சகோ! நல்ல பதிவு. எல்லோருக்கும் மிகவும் பயனுள்ள பதிவு! அன்று நீங்கள் சொன்ன போது எடுத்துச் செய்ய நினைத்து அப்படியே மறந்து போக, இன்று உங்கள் பதிவு கண்டு மீண்டும் நினைவு கூர்ந்து உங்கள் உதவியுடன் செய்துவிட்டேன். மிக்க நன்றி சகோ!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களுக்கு உதவ முடிந்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி சகோ! பாராட்டுக்கு நன்றி!

   நீக்கு
 12. பயனுள்ள அழகிய விளக்கம் நண்பரே நான் முன்பு கணக்கு துவங்கியதோடு நிறுத்தி விட்டேன் உபயோகம் இல்லாத காரணத்தால் கடவுச்சொல்லும் நினைவில் இல்லை.
  தமிழ் மணம் 2

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓ அப்படியா? அதனால் பிழையில்லை நண்பரே! அந்தத் தளத்தின் நிரலியைப் பயன்படுத்துவது மட்டும்தான் ஆபத்து. மற்றபடி, வேறொன்றுமில்லை. பாராட்டுக்கும் வாக்குக்கும் மிக்க நன்றி!

   நீக்கு
 13. இப்புத்தாண்டில் அனைவரின் நல்லெண்ணங்களும் நல்ல நிகழ்வுகளாய் ஈடேறி, மன நிம்மதியும் உடல் நலமும் நீடிக்க வேண்டுகிறேன்.

  - சாமானியன்
  saamaaniyan.blogspot.ftr

  எனது புத்தாண்டு பதிவு... " மனிதம் மலரட்டும் ! "
  http://saamaaniyan.blogspot.fr/2016/01/blog-post.html
  தங்களுக்கு நேரமிருப்பின் படித்து, கருத்திட வேண்டுகிறேன். நன்றி

  பதிலளிநீக்கு
 14. உங்கள் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கு நன்றி சாமானியன் ஐயா! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் நண்பர்கள் ஆகியோருக்கும் கூட என் அன்பார்ந்த ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! கண்டிப்பாக உங்கள் பதிவைப் படிக்க வருகிறேன்.

  பதிலளிநீக்கு
 15. அய்யா...

  திரட்டிகளின் தோல்விக்கு காரணமாக நான் பல பதிவுகளில் பின்னூட்டமிட்ட ஒன்றினை இங்கும் பதிய விரும்புகிறேன்...

  இன்ட்லி தொடங்கி தமிழ்மணம்வரை அனைத்து திரட்டிகளுமே தானியங்கி வகைகளை சார்ந்தது என்பது என் கருத்து. இவை நல்ல நோக்கம் கொண்டவர்களால் உருவாக்கப்பட்டவைதான் என்றாலும், இத்திரட்டிகளில் முழு நேர அல்லது அன்றாட மனித கண்கானிப்பு கிடையாது. " இத்தனை வாக்குகள் வந்தால் இந்த தளத்தை இத்தனையாவது இடத்துக்கு அனுப்பு " என்பது போன்ற நிரலி கட்டளைகளால் ஆனது.

  முழு நேர பணியாக இல்லாமல் சேவை நோக்குடன் ஆரம்பிக்கப்படும் இத்திரட்டிகள் ஒரு கட்டத்தில் நிரலிகளால் இயங்கும் தானியங்கிகளாகி விடுகின்றன.

  உலகின் வேறு எந்த மொழியையும் விட தமிழ் வலைப்பூக்களின் உலகம் பெரிது. தமிழ் வலைப்பூக்கள் அனைத்தையும் அட்டவணைப்படுத்தி, அவற்றின் சிறந்த பதிவுகளை வெளியிட்டு, சிறப்பாய் செயல்படும் வலைஞர்களிடம் பதிவுகள் கேட்டு பிரசுரிக்கும் ஒரு வலைதளம் உருவாகுமானால், அந்நிகழ்வு தமிழ் வலைப்பூக்கள் அடுத்த கட்டத்துக்கு நகர்வதற்கு உதவும்.

  மற்றப்படி இத்திரட்டிகளால் பெரிதாக எந்த பலனும் இருப்பதாக தோன்றவில்லை.

  ( எனது இந்த யூகத்தில் தவறு இருப்பதாக தோன்றினால் சுட்டிக்காட்டுங்கள். )

  நன்றி
  சாமானியன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஐயா! தங்கள் சிந்தனை மிக்க கருத்துக்கும் அதை இங்கே தெரிவித்தமைக்கும் முதலில் நன்றி!

   நீங்கள் கூறும் காரணம் இதுவரை நான் சிந்தித்திராதது. ஆனால், 'திரட்டி' என்றாலே யார் வேண்டுமானாலும் அதில் உறுப்பினராகி, தங்களுடைய எல்லாப் பதிவுகளையும் பகிர்ந்து கொள்ள முடிகிற இந்த முறையை மாற்ற முடியாதா என எண்ணியதுண்டு. இணையத்தில் இருக்கும் சிறப்பான பதிவுகளை மட்டும் தேடித் தேடித் தொகுத்து ஒரு தனித் திரட்டியை நாமே உருவாக்கினால் என்ன என்றும் ஆர்வம் / ஆர்வக்கோளாறு கொண்டதுண்டு. ஆனால், பின்னர் அஃதொரு தனி மனிதனால் ஆகக்கூடிய செயலில்லை என்று உணர்ந்து அந்த எண்ணத்தைக் கைவிட்டேன். ஆனால், பதிவுலகில் இன்றுள்ள பெரும்பான்மையோருக்கும் எல்லா விதங்களிலும் முன்னோடியாய்த் திகழும் திரு.விக்கிப்பீடியா இரவிசங்கர் அவர்கள் வெகு நாட்கள் முன்பே அதையும் முயன்று ஒரு கை பார்த்து விட்டிருக்கிறார் என்பது பின்னாளில் தெரிய வந்தது. 'மாற்று' எனும் பெயரில், தன் நண்பர்கள் சிலரோடு இணைந்து நல்ல பதிவுகளை மட்டும் ஓரிடத்தில் தொகுக்கும் புதுமையான 'திரட்டி' ஒன்றை அவர் சில ஆண்டுகள் முன்பே செய்து பார்த்திருக்கிறார். ஆனால், என்ன காரணமோ? அதுவும் தோல்வி! பார்க்க: http://maatru.net/

   மேலும், இதற்கென ஒருவரைப் (அல்லது சிலரைப்) பணியமர்த்தி, தரமுள்ள இடுகைகளை மட்டும் தொகுக்க வேண்டுமானால் அவருக்கு ஊதியம் கொடுக்க வேண்டும். அப்படி ஊதியம் கொடுத்துத் திரட்டி நடத்த வேண்டுமானால் அந்தளவுக்கு இணையத்தளத் தொழிலில் வருவாய் வர வேண்டும். எனவே, மீண்டும் மீண்டும் இந்தச் சிக்கல் அந்த இடத்திற்குத்தான் சென்று முடிகிறது. அதாவது, ஒன்று - கூகுள் ஆட்சென்சில் 'தமிழ்' இடம்பெற வேண்டும். அல்லது - தமிழ் இணையத்தளங்களுக்கு விளம்பரங்கள் பிடிக்க எனத் தனியாக ஒரு நிறுவனத்தைத் தொடங்க வேண்டும். உரியவர்கள் மனம் வைத்தால் இது முடியும். அதன் பின் பதிப்பகத்துறை, இதழ்த்துறை போல இணையத்துறையும் வருவாய் அளிக்கும் ஒரு வாய்ப்பாக மாறி, தமிழ் நிலைபெற மேலும் ஒரு புதிய களம் கிடைக்கும். கூடிய விரைவில் இது நிகழாவிட்டால் பதிப்பகத்துறையும் இதழ்த்துறையும் அடைந்து வரும் வீழ்ச்சி தமிழை முன்னெப்பொழுதும் இல்லாத அளவு பாதிக்கும். ஆனால், நம் மக்கள் அதுவரைக்கும் கைகட்டி வேடிக்கை பார்க்க மாட்டார்கள் என நம்புகிறேன்.

   அதே நேரம், இன்றைய நிலையிலும் திரட்டிகளால் பயன் இருப்பதாகவே தெரிகிறது. இன்றும் நம் தளங்களுக்கு நேயர்களை அழைத்து வருவதில் 'தமிழ்மணம்' குறிப்பிடத்தக்க அளவு பங்காற்றுகிறதே!

   தங்கள் கருத்தில் தவறு சுட்டும் அளவுக்கு நான் பெரியவன் அல்லேன். என் கருத்தைச் சொன்னேன், அவ்வளவே!

   நன்றி!

   நீக்கு
 16. பதில்கள்
  1. நன்றி நண்பரே! உங்கள் முதல் வருகைக்கு என் அன்பார்ந்த நல்வரவைத் தெரிவித்துக் கொள்கிறேன்! தொடர்ந்து படியுங்கள்! உங்கள் செம்மையான கருத்துக்களைப் பதியுங்கள்! மேற்கண்ட இணைப்புகள் மூலம் சமூக வலைத்தளங்கள், திரட்டிகள் ஆகியவற்றிலும் பதிவைப் பகிர்ந்து உங்களுக்குப் பிடித்த இந்தப் பதிவு மற்றவர்களையும் சென்றடைய உதவுங்கள்! நன்றி!

   நீக்கு
 17. இண்ட்லி மூலம் பதிவுகள் திறக்க நேரமானது மட்டுமல்ல, நிறைய வைரஸ் பிரச்னைகளும் தோன்றியதால் சில வருடங்களுக்கு முன்னாலேயே அதை நாங்கள் எடுத்து விட்டோம்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஐயா! மூத்த பதிவரான தங்கள் முதல் வருகைக்கு என் அன்பார்ந்த நல்வரவை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்! நான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் வலையுலகுக்கே வந்தேன். நான் பயன்படுத்திய வரை அப்படி ஏதும் பிரச்சினைகள் இல்லை. ஒருவேளை நீங்கள் கூறிய அந்தப் பிரச்சினைக்குப் பின் அதைச் சரி செய்திருப்பார்களோ என்னவோ! மூத்தவரான உங்கள் வருகை குறித்து மிக்க மகிழ்ச்சி! தொடர்ந்து படியுங்கள்! உங்கள் செம்மையான கருத்துக்களைப் பதியுங்கள்! மேற்கண்ட இணைப்புகள் மூலம் சமூக வலைத்தளங்கள், திரட்டிகள் ஆகியவற்றிலும் பதிவைப் பகிர்ந்து உங்களுக்குப் பிடித்த இந்தப் பதிவு மற்றவர்களையும் சென்றடைய உதவுங்கள்! நன்றி!

   நீக்கு
 18. vanakkam thozhare ennuduya blogai tamilmanathil inaikka muduiyavillai. tamilmanathil vegu mathangalaga tamilmanathin approvalukkaga kathirukkirathu enathu blog. tamilmanthil inaivathu kurithu vazhikal iruntha pakirnthukolungal. nandri. by kathir

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் நண்பரே!

   என்னை மதித்துக் கேட்டமைக்கு முதலில் என் நன்றி! 'தமிழ்மண'த்தில் இணைய வேண்டுமானால், அவர்களின் ஏற்பிசைவுக்காகக் (approval) காத்திருப்பது தவிர, வேறு வழியிருப்பதாக எனக்குத் தெரியவில்லை. என் தளமும் விண்ணப்பித்து ஏறத்தாழ அரை மாதம் ஆன பிறகுதான் சேர்த்துக் கொள்ளப்பட்டது. ஆனால், அதற்குள் நீங்கள் 'தமிழ்மண' வாக்குப்பட்டையை உங்கள் தளத்தில் இணைத்து வைக்கலாம். அஃது எப்படி என்பதை அறிய http://www.tamilmanam.net/tamilmanam/toolbar.html என்ற முகவரியிலுள்ள பக்கத்தைப் படித்துப் பாருங்கள்!

   உங்கள் தளத்தைத் 'தமிழ்மண'த்தில் இணைக்க விண்ணப்பித்தவுடன் அது தொடர்பாக உங்களுக்கு மின்னஞ்சல் வரும். வந்ததா? உங்கள் தளம் சரியான முறையில் விண்ணப்பம் ஆகியிருந்தால் http://www.tamilmanam.net/user_blog_status.php என்ற பக்கத்தில் காத்திருப்புப் பட்டியலில் உங்கள் தளமும் அதன் விவரங்களும் காட்டப்பபடும். அதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்! நான் தேடிப் பார்த்தேன். இளஞ்செழியன் கதிர் என்பவரின் பெயரில் 'குவியம்' என்றொரு வலைப்பூ காத்திருப்புப் பட்டியலில் இருக்கிறது. அதுதான் உங்களுடையதா?

   நீக்கு
 19. அன்புச் சகோவிற்கு வணக்கம். என் தளத்தில் இப்போது பிரச்சினை ஏதுமில்லை என்றறிய நிம்மதி. இன்டிலி, தமிழ் மணம் ஆகியவற்றின் நிரல்களை நீக்குவது பற்றிய இந்தப் பதிவு மிகவும் பயனுள்ளதாயிருந்தது. எனக்குத் தொழில் நுட்ப அறிவு சிறிதுமில்லை. இருந்தும் சின்னப் பிள்ளைக்குச் சொல்லிக் கொடுப்பது போல் நீங்கள் விளக்கியிருந்தது படித்து எந்தச் சந்தேகமும் எழாமல் நானே நீக்கிவிட்டேன். பீட்ஜிட்டில் மால்வேர் பரவுகிறது என்று நீங்கள் சொல்லித் தான் தெரிந்து கொண்டேன். தகுந்த நேரத்தில் எச்சரிக்கை செய்து பிரச்சினை ஏதும் வராமல் என் தளம் தப்பித்தது. உங்கள் அன்புக்கும், உதவிக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். மிக்க நன்றி சகோ!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி சகோ!

   பீட்ச்சிட்டில் கெடுவறை (malware) பரவுவதாக நான் உணர்ந்த அன்றுதான் உங்கள் தளத்தின் அந்தப் பதிவையும் படிக்க வந்தேன். அதனால் கையோடு உங்களுக்குச் சொல்லி விட்டேன். இன்னும் நிறைய நண்பர்களுக்குச் சொல்ல வேண்டியிருப்பதால் இதைப் பற்றி ஓர் எச்சரிக்கைக் கட்டுரை எழுதி ‘பிளாக்கர் நண்பன்’ தளத்துக்கு அனுப்பியுள்ளேன். அவரும் அதை ஏற்று வெளியிட்டு விட்டால் பீட்ச்சிட்டில் கெடுவறை பரவுவது 100% உறுதியாகி விடும்.

   உங்கள் பதிவுகளை நான் அவ்வளவாகப் படித்திராவிட்டாலும் ‘ஊமைக்கனவுகள்’ தளத்தில் நீங்கள் எழுதும் கருத்துக்களைப் பலமுறை படித்ததுண்டு. அதிலிருந்தே உங்கள் தமிழறிவையும் ஆர்வத்தையும் உணர்ந்திருக்கிறேன். உங்களைப் போன்ற ஒருவருக்கு உதவ முடிந்ததில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சி!

   நீக்கு
 20. நீண்ட மாதங்களுக்கு பிறகு எனது ப்ளாக் வந்தபோது பெரிய ஏமாற்றம் இருந்தது..சில திரட்டிகள் மூடப்பட்டிருந்தன..முக்கியமாக இண்ட்லி..நிறைய வாசகர்கள் கிடைத்தது அதன் மூலம்தான்..அந்த திரட்டியை தேடும் போதுதான் உங்கள் பதிவுக்கு வந்தேன்..மிக்க நன்றி சகோ..வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் முதல் வருகைக்கு என் உளமார்ந்த நல்வரவைத் தெரிவித்துக் கொள்கிறேன் சகோ! உங்களுக்கு இப்பதிவு மூலம் ஏதாவது உதவ முடிந்திருந்தால் அதுவே எனக்கு மிக்க மகிழ்ச்சி! தொடர்ந்து படியுங்கள்! உங்கள் செம்மையான கருத்துக்களைப் பதியுங்கள்! மேற்கண்ட இணைப்புகள் மூலம் சமூக வலைத்தளங்கள், திரட்டிகள் ஆகியவற்றிலும் பதிவைப் பகிர்ந்து உங்களுக்குப் பிடித்த இந்தப் பதிவு மற்றவர்களையும் சென்றடைய உதவுங்கள்! நன்றி!

   நீக்கு
 21. Ithu teriyama naan appo appo ta indli websie open aagutha illayanu kadanthu 3 varusama open panni parper sir.. nall websiete sir.. enn atthu deactivate aachunu terinchukulaama...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தெரியவில்லை நண்பரே! பொருளாதாரக் காரணமாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன். கட்டுரையின் இறுதியில் கூறியுள்ளபடி இளைஞர்கள் புதிய முறையில் பெரிய அளவில் இத்தகைய முயற்சிகளைத் தொடங்க முன்வந்தால் திரட்டித் தளங்கள் வெற்றி பெறலாம்.

   நீக்கு
  2. உங்கள் முதல் வருகைக்கு என் அன்பான நல்வரவைத் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து படியுங்கள்! உங்கள் செம்மையான கருத்துக்களைப் பதியுங்கள்! உங்களுக்குப் பயனளித்த இந்தப் பதிவு மற்றவர்களுக்கும் பலனளிக்க, பதிவின் முடிவில் உள்ள சமூக ஊடகப் பொத்தான்களைப் பயன்படுத்துங்கள்!

   நீக்கு
 22. வணக்கம்,

  www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இத் திரட்டியில் உங்கள் ஆக்கங்கள் பதிவிகளை பகிர்ந்து கொள்வதன் மூலம், அத் திரட்டி வளர்ச்சியுற உங்களின் ஒத்துழைப்பை வேண்டி நிற்கிறோம்...

  நன்றி..
  தமிழ்US

  பதிலளிநீக்கு

என் புதினத்தை வாங்க

என் புதினத்தை வாங்க
மேலே உள்ள படத்தை அழுத்துங்கள்
பதிவுகளை உடனுக்குடன் பெற

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

வாட்சாப் தடத்தில் (Channel)...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு (1) 13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (9) அஞ்சலி (21) அணு உலை (2) அம்பிகை செல்வகுமார் (1) அம்மணம் (1) அமேசான் (6) அயல்நாட்டுத் தமிழர் (1) அரசியல் (90) அழைப்பிதழ் (7) அற்புதம்மாள் (2) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (39) ஆட்சென்ஸ் (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இங்கிலாந்து (1) இசுரேல் (2) இட ஒதுக்கீடு (4) இணையம் (19) இந்தித் திணிப்பு (1) இந்தியா (25) இரசியா (1) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இலக்கணம் (3) இலங்கை (1) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (23) இனம் (46) ஈழம் (44) உக்கிரேன் (1) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (24) எழுவர் விடுதலை (1) ஐ.நா (5) ஒருங்குறி (1) கடவுள் (1) கதை (3) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (11) கலைச்சொல்லாக்கம் (1) கவிஞர் தாமரை (1) கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் (2) கவிஞர் ரேவதி (1) கவிதை (19) காங்கிரஸ் (6) காசா (2) காணொளி (4) காதல் (2) காந்தியம் (1) கார்த்திக் சுப்புராஜ் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (5) கிரந்தம் (1) கீச்சுகள் (2) குழந்தைகள் (10) குறள் (2) கூகுள் (2) கையொப்பம் (2) கோட்பாடு (9) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (16) சமயம் (12) சமற்கிருதம் (2) சமூகநீதி (4) சரிதா (1) சாதி (10) சிங்களர் (1) சித்திரக்கதைகள் (1) சிவகார்த்திகேயன் (1) சிறுவர் இலக்கியம் (4) சீமான் (7) சுற்றுச்சூழல் (6) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (3) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (31) தமிழ் தேசியம் (5) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (16) தமிழர் (45) தமிழர் பெருமை (17) தமிழின் சிறப்பு (3) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (2) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (5) தாலி (1) தி.மு.க (11) திரட்டிகள் (4) திராவிடம் (9) திருமுருகன் காந்தி (1) திரைப்படம் (2) திரையுலகம் (9) திறனாய்வு (1) தினகரன் (1) துருவ் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (9) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தேர்தல்-2021 (2) தொலைக்காட்சி (2) தொழில்நுட்பம் (10) தோழர் தியாகு (1) நட்பு (12) நிகழ்வுகள் (5) நிர்மலா சீதாராமன் (1) நினைவேந்தல் (10) நீட் (5) நூல்கள் (9) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (3) பதிவர் உதவிக்குறிப்புகள் (10) பதிவுலகம் (23) பா.ம.க (2) பா.ஜ.க (30) பார்ப்பனியம் (14) பாலஸ்தீனம் (2) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (9) பீட்டா (1) புதிய வேளாண் சட்டம் (1) புறநானூறு (1) புனைவுகள் (10) பெண்ணியம் (6) பெரியார் (3) பேரறிவாளன் (2) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (5) பொதுவுடைமை (1) பொதுவுடைமைக் கட்சி (1) பொருளாதாரம் (2) பொழிவு (2) போட்டி (1) போர் (3) போராட்டம் (10) ம.ந.கூ (2) மகான் (1) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (10) மடோன் அஷ்வின் (1) மணிவண்ணன் (1) மதிப்புரை (5) மதுவிலக்கு (2) மருத்துவம் (7) மாநாடு (1) மாநாடுகள் (1) மாய இயல்பியம் (1) மாவீரர் நாள் (3) மாற்றுத்திறனாளிகள் (2) மிஷ்கின் (1) மீம்ஸ் (7) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (3) மேனகா காந்தி (1) மொழியரசியல் (2) மொழியறிவியல் (2) மோடி (11) யுவர் கோட் (1) யோகிபாபு (1) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) ராஜீவ் படுகொலை (1) வரலாறு (22) வாழ்க்கைமுறை (17) வாழ்த்து (5) வானதி சீனிவாசன் (1) விக்ரம் (1) விடுதலை (6) விடுதலைப்புலிகள் (13) விருது (1) விஜய் (1) விஜய் சேதுபதி (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (7) வை.கோ (6) வைரமுத்து (2) ழகரம் (1) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டெர்லைட் (2) ஹமாஸ் (2) ஹீலர் பாஸ்கர் (1) Bhagavath Gita (1) BJP (1) Casteism (1) Cauvery (1) Dalit (1) Genocide (3) Hindu (1) Karnataka (1) Magical Realism (1) Manisha (1) Modi (1) Notion Press (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (2) Religion (1) Scheduled Castes (1) Sexual Harassment (1) Tamilnadu (1) Tamils (1) Unicode (1) Unicode Consortium (1) UP (1) Women (1) Yogi Adityanath (1)

முகரும் வலைப்பூக்கள்