.

வெள்ளி, ஆகஸ்ட் 28, 2020

என் யுவர் கோட் (Your Quote) கவிதைகள்

Your E.Bhu.Gnaanapragaasan in YourQuote
லகத் தமிழ் உள்ளங்களே!

எப்படி இருக்கிறீர்கள் அனைவரும்?

கொரோனா ஊரடங்கு காரணமாக ஏற்பட்ட சில சிக்கல்களால் வெகு நாட்களாக வலைப்பூப் பக்கம் வர முடியவில்லை. அனைவரும் நலமா?

இந்த ஊரடங்குக் காலக்கட்டத்தில் யுவர் கோட் எனும் புதிய ஒரு சமுக ஊடகத்தில் இணைந்தேன். நம் பதிவுலகின் குட்டிப் பதிவரும் நம் அனைவரின் பேரன்புக்குரிய பதிவுலக இணையர் மைதிலி - கஸ்தூரிரெங்கன் ஆகியோரின் மகளுமான நிறைமதிவதனா அவர்கள்தாம் இந்த ஊடகத்தை எனக்கு அறிமுகப்படுத்தினார்.

ஆம்! நான் அவரை வலைப்பூ எழுத அழைத்தது போய், அவர் என்னை சமுக ஊடங்களுக்கு எழுத அழைக்கும் காலம் வந்து விட்டது. நாம் பார்த்த குட்டிப் பிள்ளைகள் வளர்ந்து விட்டார்கள்! 💗

நிறைமதியின் அன்பு அழைப்புக்காகத்தான் யுவர் கோட் பயன்படுத்தத் தொடங்கினேன். ஆனால் தொடங்கிய பின் எனக்கே மிகவும் பிடித்துப் போய்விட்டது. துவிட்டர் (twitter) போலச் சிறு சிறு பதிவுகளை எழுத அருமையான களம்! வெறும் பனுவல் (text) பதிவுகள் அல்ல; படக்கோப்புகளாகவே (images) பதிவுகளை வெளியிடலாம்! அதற்கான படங்களையும் இந்தக் குறுஞ்செயலியே (app) இலவயமாக வழங்குகிறது. நீங்கள் இணையத்தில் எழில் கொஞ்சும் படங்களின் பின்னணியிலான கவிதைகள், துணுக்குகள், மேற்கோள்கள் (quotes) போன்றவற்றைப் பார்த்திருப்பீர்கள். அப்படிப்பட்ட படங்களை நாமும் ஒரே நிமிடத்தில் உருவாக்கிக் கொள்ள இந்தக் குறுஞ்செயலி உதவுகிறது.

இனி நாமும் நம் கவிதைகள், மேற்கோள்கள் போன்றவற்றை அழகிய படக்கோப்புகளாக உருவாக்கி நம் பெயருடனே இணையத்தில் பகிரலாம்; வாட்சப் நிலைப்பாட்டுப் படங்களாகக் காட்சிப்படுத்தலாம். இதில் உள்ள ஒத்திசைவு (Collabaration) எனும் வசதி மூலம் நண்பர்களுடன் இணைந்து பதிவு எழுதலாம்.  ஒரு பதிவுக்கான தலைப்பைக் கொடுத்து அது பற்றி மற்றவர்களை எழுதத் தூண்டலாம். இதன் மூலம் மற்ற எந்த சமுக ஊடகத்தையும் விட இதில் நண்பர்களைச் சேர்த்தல் மிக எளிது. தவிர, நன்றாக எழுதும் நண்பர்களுக்கு நாம் சான்றுரை (testimonial) வழங்கி ஊக்குவிக்கும் வசதியும் உண்டு.

இப்படிப் பல்வேறு வகைகளிலும் மிகவும் புதுமையாக இருக்கிறது இந்த யுவர் கோட்! நீங்களும் பயன்படுத்திப் பாருங்கள்!

இதோ யுவர் கோட்டில் நான் எழுதிய சில கவிதைகள் இங்கே உங்கள் பார்வைக்கு! 👇

பதிவர் பரிந்துரை

’எல்லாரும் அர்ச்சகராகலாம்’ சட்டம் சரியா? - கோயில் பூசையில் தமிழர் உரிமைகள்! மிரள வைக்கும் ஆய்வு

பார்ப்பனர் அல்லாதோரின் கோயில் பூசை உரிமைக்காகப் பாடுபட்ட தமிழ் முன்னோடிகள் முன்குறிப்பு : பார்ப்பனரல்லாத 36 பேரைக் கோயில் பூசாரிகளாக ...

பதிவுகளை உடனுக்குடன் பெற

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (9) அஞ்சலி (20) அணு உலை (2) அம்பிகை செல்வகுமார் (1) அம்மணம் (1) அமேசான் (5) அரசியல் (86) அழைப்பிதழ் (6) அற்புதம்மாள் (2) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (35) ஆட்சென்ஸ் (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இங்கிலாந்து (1) இட ஒதுக்கீடு (4) இணையம் (19) இந்தித் திணிப்பு (1) இந்தியா (24) இரசியா (1) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இலக்கணம் (3) இலங்கை (1) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (20) இனம் (44) ஈழம் (42) உக்கிரேன் (1) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (24) எழுவர் விடுதலை (1) ஐ.நா (5) ஒருங்குறி (1) கடவுள் (1) கதை (2) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (10) கவிஞர் தாமரை (1) கவிதை (17) காங்கிரஸ் (6) காணொளி (4) காதல் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (4) கிரந்தம் (1) கீச்சுகள் (2) குழந்தைகள் (9) குறள் (2) கூகுள் (2) கையொப்பம் (2) கோட்பாடு (8) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (16) சமயம் (10) சமற்கிருதம் (2) சமூகநீதி (4) சாதி (9) சிங்களர் (1) சித்திரக்கதைகள் (1) சிறுவர் இலக்கியம் (4) சீமான் (7) சுற்றுச்சூழல் (6) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (2) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (27) தமிழ் தேசியம் (5) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (13) தமிழர் (43) தமிழர் பெருமை (16) தமிழின் சிறப்பு (2) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (2) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (4) தாலி (1) தி.மு.க (11) திரட்டிகள் (4) திராவிடம் (8) திருமுருகன் காந்தி (1) திரையுலகம் (8) தினகரன் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (9) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தேர்தல்-2021 (2) தொலைக்காட்சி (1) தொழில்நுட்பம் (10) தோழர் தியாகு (1) நட்பு (10) நிகழ்வுகள் (2) நிர்மலா சீதாராமன் (1) நினைவேந்தல் (10) நீட் (5) நூல்கள் (4) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (3) பதிவர் உதவிக்குறிப்புகள் (10) பதிவுலகம் (20) பா.ம.க (2) பா.ஜ.க (29) பார்ப்பனியம் (13) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (9) பீட்டா (1) புதிய வேளாண் சட்டம் (1) புறநானூறு (1) புனைவுகள் (10) பெண்ணியம் (5) பெரியார் (3) பேரறிவாளன் (2) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (4) பொதுவுடைமை (1) பொதுவுடைமைக் கட்சி (1) பொருளாதாரம் (2) பொழிவு (1) போர் (1) போராட்டம் (9) ம.ந.கூ (2) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (9) மணிவண்ணன் (1) மதிப்புரை (1) மதுவிலக்கு (1) மருத்துவம் (7) மாவீரர் நாள் (2) மாற்றுத்திறனாளிகள் (2) மீம்ஸ் (7) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (3) மேனகா காந்தி (1) மொழியரசியல் (1) மொழியறிவியல் (1) மோடி (11) யுவர் கோட் (1) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) ராஜீவ் படுகொலை (1) வரலாறு (22) வாழ்க்கைமுறை (16) வாழ்த்து (4) வானதி சீனிவாசன் (1) விடுதலை (5) விடுதலைப்புலிகள் (12) விருது (1) விஜய் (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (7) வை.கோ (6) வைரமுத்து (2) ழகரம் (1) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டெர்லைட் (2) ஹீலர் பாஸ்கர் (1) Bhagavath Gita (1) BJP (1) Casteism (1) Cauvery (1) Dalit (1) Genocide (1) Hindu (1) Karnataka (1) Manisha (1) Modi (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (2) Religion (1) Scheduled Castes (1) Sexual Harassment (1) Tamilnadu (1) Tamils (1) Unicode (1) Unicode Consortium (1) UP (1) Women (1) Yogi Adityanath (1)

முகரும் வலைப்பூக்கள்