.
ஜெயலலிதா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜெயலலிதா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, பிப்ரவரி 24, 2017

காலம் கடந்த தண்டனை விடுதலைக்குச் சமம்! - சொத்துக் குவிப்பு வழக்கு முடிவும் நீதியரசர்களுக்கான வேண்டுகோளும்!



“1947-இலிருந்து இன்னிய தேதி வரைக்கும் எத்தனை அரசியல்வாதிங்க மேல எத்தனை எத்தனை கேஸ் போட்டிருப்பாங்க! எவனாவது ஒரு அரசியல்வாதி தண்டனைய அனுபவிச்சிருப்பானா? கேஸ் முடியிற வரைக்கும் நல்லா ஆண்டு அனுபவிச்சுச் செத்தும் போயிருவான்... கேஸ் பைல்ல மூட்டைப்பூச்சிதான் குஞ்சு பொரிக்கும்!”

‘முதல்வன்’ திரைப்படத்தில் சுஜாதா அவர்கள் எழுதிய உரையாடல்! அவருடைய நினைவு நாள் வருகிற இதே பிப்ரவரி மாதம் வெளிவந்திருக்கும் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு இதைத்தான் நினைவுபடுத்துகிறது!

சனி, டிசம்பர் 17, 2016

தமிழ்நாட்டை ஒருபொழுதும் விட்டுக் கொடுக்காத தனித் தலைவி!

Jayalalitha
ஜெயலலிதா! – ஆயிரக்கணக்கான ஆண் விண்மீன்கள் ஒளி வீசிய அரசியல் வானில் ஒற்றைப் பெண்ணாய் உலா வந்த நிலா!

இவரைப் பற்றிக் குறை சொல்ல வேண்டுமானால் அடுக்கிக் கொண்டே போகலாம். அகந்தை அரசியல், அடாவடி ஆட்சி, பழிவாங்கும் போக்கு, பொதுமக்களை நடத்திய முறை, நேர்மை அலுவலர்களைப் பந்தாடிய விதம், ஊழல் குற்றச்சாட்டுகள், இன்னும் எத்தனையோ...

ஆனால், ஒன்றே ஒன்றை மட்டும் மறுக்க முடியாது. அதுதான், அடுத்தவர்களிடத்தில் தமிழ் மக்களை விட்டுக் கொடுக்காத இவருடைய குணம்!

கன்னடர் என்று முத்திரை குத்தினோம். ஆனால், மற்ற யாரை விடவும் காவிரிப் பிரச்சினையில் இவர்தான் ஈடு இணையற்ற கடுமை காட்டினார்.

1993-இல் காவிரிப் பிரச்சினைக்காக உண்ணாநிலைப் போராட்டம் நடத்தியதில் தொடங்கி, கடைசியாக 2013-இல் நடுவர் மன்றத் தீர்ப்பை அரசிதழில் வெளியிடச் செய்தது வரை காவிரிப் பிரச்சினையில் ஒருபொழுதும் கருநாடகத்துக்காக விட்டுக் கொடுக்காமல் இறுதி வரை உறுதி காத்தவர் ஜெயலலிதா. கன்னடர்கள் இவர் படத்தையும் கொடும்பாவியையும் கொளுத்திக் கொந்தளிக்கும் அளவுக்கு அவர்களின் வெறுப்பை அறுவடை செய்தார். எந்த அளவுக்குக் கன்னடர்கள் இவரை வெறுத்தார்கள் என்பது குறிப்பிட்ட நேரத்தில் கீச்சகத்தில் (twitter) வலம் வந்தவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

முல்லை பெரியாறு அணைப் பிரச்சினையிலும் மலையாளிகளிடம் தமிழர் உரிமையைச் சொட்டுக் கூட விட்டுத் தரவில்லை ஜெயலலிதா அவர்கள்.

அணை வலுவிழந்து விட்டது, நீர் தேக்கும் அளவைக் குறைத்தே ஆக வேண்டும் என்று ஒட்டுமொத்த மலையாள மாநிலமும் மல்லுக்கட்டியது. ஆனால், உச்சநீதிமன்றத்தில் உண்மை நிலையை எடுத்துக்காட்டி, கேரள அரசு அரசியல்ரீதியாகவும் சட்டரீதியாகவும் செய்த எல்லாச் சூழ்ச்சிகளையும் தவிடு பொடியாக்கினார். அணையின் நீர்த் தேக்க அளவான 142 அடியில் ஓர் அங்குலம் கூடக் குறைய விடாமல் இறுக்கிப் பிடித்தார். தவிர, “இரு மாநிலங்களும் ஒப்புக் கொண்டால்தான் இனி புதிய அணைகள் கட்ட முடியும். கேரள அரசு தன் முடிவைத் தமிழ்நாடு அரசு மீது திணிக்க முடியாது. அணைக்கு நடுவண் தொழில்நுட்பப் படைப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்” என்றெல்லாம் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்புகளைப் பெற்று இனி எக்காலத்திலும் முல்லை பெரியாறு அணை விதயத்தில் கேரளம் வாலாட்ட முடியாத அளவுக்குத் தமிழ்நாட்டின் உரிமையை ஆணித்தரமாக நிலைநாட்டினார்.

வழக்கு, நீதிமன்றம் போன்றவற்றில் மட்டுமில்லை, முல்லை பெரியாறு அணை பற்றிப் பொய்ப் பரப்புரை செய்ய வந்த ஒரு திரைப்படத்தைக் கூட விட்டு வைக்கவில்லை ஜெ அவர்கள்.

Jayalalitha in anger
முல்லை பெரியாறு அணை பற்றி ‘டேம் 999’ என்று பொய் மூட்டையாக ஒரு திரைப்படத்தை எடுத்து அதைத் தமிழ்நாட்டிலேயே திரையிடவும் மலையாளிகள் முயன்றபொழுது, அதைத் தடை செய்தார். தணிக்கைத்துறையால் சான்றிதழ் வழங்கப்பட்ட ஒரு திரைப்படத்தை அரசு எப்படி வெளியிட மறுக்கலாம் என்று கேள்வி எழுப்பப்பட்டபொழுது, “என் மாநிலச் சட்டம் ஒழுங்கைச் சீர்குலைக்கும் என்றால் தடை போடத்தான் செய்வேன்” என்று சீறினார்.

‘இந்தியாவின் இரும்புப் பெண்மணி’யான இந்திரா காந்தியே அரசியல் சூழல்களுக்குப் பணிந்து கச்சத் தீவைத் தாரை வார்த்து விட்ட நிலையில், இந்தத் ‘தமிழ்நாட்டின் இரும்புப் பெண்மணி’ அதை மீட்க உச்சநீதிமன்றம் வரை போனார். அண்டை நாட்டு உறவு, வெண்டைக்காயின் வரவு என்றெல்லாம் நடுவண் அரசுகள் கதை பேச, இதே போன்ற வேறொரு சிக்கலில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பைச் சுட்டிக்காட்டி “நீங்கள் கச்சத் தீவைக் கொடுத்ததே சட்டப்படி செல்லாது” என்று கடைக்காலிலேயே கை வைத்தார்!

பூச்சிக்கொல்லிகள், வேதி உரங்கள் ஆகியவற்றின் மூலம் இந்தியர்களின் உடலையே வேதிக் குவியலாக மாற்றியது போதாதென்று, அடுத்ததாக நம் மரபணுவையே மாற்ற மரபணு மாற்றப் பயிர்களைப் பரப்புவதற்கு நடுவண் காங்கிரசு அரசு துடித்தபொழுது அதைத் தமிழ்நாட்டுக்குள் காலடி வைக்கவே இடம் தராமல் விரட்டியடித்தார்.

எல்லாவற்றுக்கும் மேலாக, ஈழப் பிரச்சினையில், தமிழினத் தலைவர் என்று புகழப்பட்ட கருணாநிதியும் பிரபாகரனின் நண்பர் என்று கூறப்படும் எம்.ஜி.ஆரும் கூடச் செய்யாததை ஜெயலலிதா செய்தார். ‘தனி ஈழத்துக்குப் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்’ என்று தமிழ்நாட்டுச் சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்து ஒருமனதாக நிறைவேற்றினார்! ‘இலங்கையை நட்பு நாடு எனச் சொல்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும்’ என்று நடுவணரசுக்கே அறிவுரை கூறினார். போதாததற்கு, ‘தமிழர்கள் மீதான அடக்குமுறையை நிறுத்தும் வரை இலங்கை மீது இந்தியா பொருளாதாரத் தடை போட வேண்டும்’ என்றும் தனித் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி உலகையே திரும்பிப் பார்க்க வைத்தார்.

ஜெயலலிதாவின் இந்த வரலாறு காணா நடவடிக்கைகளைப் பார்த்த இலங்கையின் பாதுகாப்புச் செயலாளனும் தமிழினப் படுகொலையை முன்னின்று நடத்தியவனுமான கோத்தபயா இராசபக்ச, “ஜெயலலிதா இப்படிப்பட்ட தீர்மானங்களைக் கொண்டு வருவது அரசியல் ஆதாயம் தேடும் முயற்சி. தமிழகம் என்பது இந்தியாவுக்குள் இருக்கும் ஒரு மாநிலம்தான். ஆனால், இந்தியா போன்ற நாடுகள் எல்லாம் எங்களுக்குத்தான் ஆதரவாக இருக்கின்றன” என்றெல்லாம் படபடத்தான்.

இப்படி, எழுத்தளவிலான முயற்சிகளோடு நின்று விடாமல், அடுத்து செயல் அளவிலும் சிங்கள நாட்டின் சிண்டை உரசினார் ஜெயலலிதா. “தமிழ்நாட்டில் நடக்கும் ஐ.பி.எல் மட்டைப்பந்துப் போட்டிகளில் இலங்கையைச் சேர்ந்த வீரர்கள், நடுவர்கள், அமைப்பாளர்கள் என யாரும் கலந்து கொள்ளக்கூடாது. மீறிக் கலந்து கொள்வதாக இருந்தால் இங்கு நடத்த விட முடியாது!” என்று கொந்தளித்தார். ஐ.பி.எல் ஆட்சிமன்றக் குழு இவருக்குப் பணிந்து இலங்கையைச் சேர்ந்த யாரையும் அந்தப் போட்டிகளில் பங்கேற்கச் செய்வதில்லை என்ற முடிவுக்கு வந்தது.

இவை மட்டுமல்லாமல், எந்த விடுதலைப்புலிகள் இயக்கத்துக்குத் தான் தடை கொண்டு வந்ததாகக் காலமெல்லாம் பெருமை பேசினாரோ, அதே விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களாகக் கருதப்படும் இராஜீவ் கொலைக் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார்.

அவர்களை விடுதலை செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தவுடன், “இப்படிப்பட்ட நிலையில் நடுவணரசின் கருத்தைக் கேட்டு விட்டுத்தான் மாநில அரசு விடுதலை செய்ய வேண்டும் எனச் சட்டத்தில் இருப்பதால் கேட்கிறேன். மூன்று நாட்களுக்குள் இது குறித்து நடுவணரசு பதிலளிக்க வேண்டும்! இல்லாவிட்டால் தமிழ்நாடு அரசே விடுதலை செய்யும்” என்று தடாலடியாக நடுவணரசுக்கே கெடு வைத்தார். ஆனால், சட்டத்துக்கே புறம்பாக, மீண்டும் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து எழுவர் விடுதலைக்கு இடைக்காலத் தடை பெற்றது சோனியா தலைமையிலான நயவஞ்சக நடுவணரசு.

Chief Minister Jayalalitha

இப்படி, சிங்களக் காடையர் முதல் வடநாட்டு ஆரியர் வரை, சித்தராமையா முதல் கோத்தபயா வரை யாரிடமும் தமிழ்நாட்டை விட்டுக் கொடுக்காத முதல்வராகத் திகழ்ந்தார் ஜெயலலிதா அவர்கள். ஒரு தலைவருக்குண்டான அடிப்படைத் தகுதியே அதுதான். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவராக இருந்தாலும் சரி, ஒற்றையாட்சித் தலைவராக (சர்வாதிகாரியாக) இருந்தாலும் சரி, ஆட்சியாளர் என்பவர் ஒருபொழுதும் மக்களை விட்டுக் கொடுத்து விடக்கூடாது! அதுதான் இன்றியமையாதது! தனிப்பட்ட முறையில் அவர் எப்படி மக்களை நடத்துகிறார் என்பது வேறு; ஆனால், வெளியாட்களிடத்தில் தன் மக்களை விட்டுத் தராமல் சரியான பிரதிநிதியாக நடந்து கொள்ள வேண்டும்! அப்படிப்பட்டவர்தான் உண்மையான மக்கள் பிரதிநிதியாக இருக்க முடியும்! அந்த வகையில் ஜெயலலிதாவுக்கு நிகரான ஒரு (தமிழ்) மக்கள் பிரதிநிதி தமிழ்நாட்டில் வேறு யாருமே இப்பொழுது இல்லை என்றால் அது மிகையாகாது.

ஈழப் பிரச்சினையைப் பொறுத்த வரையில், தொடக்கக் காலத்தில் ஜெயலலிதா பல தவறுகளை இழைத்தவர்தாம். இந்தியாவில் அடைக்கலம் தேடி வரும் மற்ற நாட்டு மக்களெல்லாரும் மகிழ்ச்சியாகவும் விடுதலையாகவும் வாழ்கையில், ஈழத் தமிழர்கள் மட்டும் இன்றும் தனியாக முகாம்களில் சிறை வைக்கப்பட்டுக் குற்றவாளிகளைப் போலக் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள் என்றால் அதற்கு ஜெ-வும் ஒரு முதன்மைக் காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாதுதான். ஆனால், ஒரு வகையில் பார்த்தால் அதுவும் தமிழ்நாட்டு மக்களின் பிரதிநிதி என்கிற முறையிலான நடவடிக்கைதான் என்பதாகப் புரிந்து கொள்ளலாம்.

இராஜீவ் படுகொலைக்கு முன்பு வரை தமிழ்நாட்டில் தனி ஈழக் கோரிக்கைக்கும், விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கும் பேராதரவு இருந்தது. ஆனால், அந்த நிகழ்வுக்குப் பின் நிலைமை அப்படியே தலைகீழானது. இராசீவ் கொடூரமாகக் கொல்லப்பட்ட விதமும் அதனால் தமிழ்நாட்டின் மீது விழுந்த பழியும் சேர்ந்து மக்களின் சிந்தனையையே முடக்கி விட்டதால் விடுதலைப்புலிகள் இயக்கத்தையே இங்குள்ள மக்கள் வெறுக்கும் அளவுக்குப் போனார்கள். அதனால், அந்த நேரத்தில் தமிழ்நாட்டு முதல்வராக வந்த ஜெயலலிதாவும் மக்கள் எண்ணத்தை எதிரொலிக்கும் வகையில் நடந்து கொண்டார்.

ஆனால், 2011-இன் நிலைமையே வேறு. இராசீவைக் கொன்றது விடுதலைப்புலிகள்தானா என்பதே சரியாகத் தெரியாத நிலையில், அப்படிப்பட்ட ஐயத்துக்குரிய குற்றச்சாட்டை முன்னிட்டுத் தங்கள் கண்ணெதிரிலேயே மொத்த இனமும் கொன்று குவிக்கப்பட்டதைத் தமிழ்நாட்டு மக்கள் பார்த்துக் கதறித் துடித்து வந்த நேரம் அது. ஒரே ஒரு மனிதனின் உயிரை விட இலட்சக்கணக்கான மக்களின் உயிரும் மானமும் வாழ்வும் வருங்காலமுமே பெரிது என்பதை உணர்ந்து மக்கள் தெருவில் இறங்கிப் போராடிக் கொண்டிருந்த வேளை அது. எனவே, அந்த நேரத்தில் மீண்டும் முதல்வரான ஜெயலலிதா மக்களின் அன்றைய மனநிலைக்கேற்ப மாறி நடந்தார். ஜெயலலிதா தமிழினத் தலைவர் ஒன்றும் இல்லை. தமிழ்நாட்டு முதல்வர் மட்டும்தான். ஆகவே, தமிழ்நாட்டு மக்களின் அவ்வப்பொழுதைய மனநிலைகளுக்கேற்ப அவர் நடந்து கொண்டார்.

ஆம்! ஜெயலலிதா சிறந்த தலைவரோ இல்லையோ, அருமையான அரசியலாளரோ இல்லையோ, நல்ல ஆட்சியாளரோ இல்லையோ, ஆனால் மிகச் சிறப்பான மக்கள் பிரதிநிதி, தமிழர் பிரதிநிதி! மாநில அரசுகளின் அதிகாரங்களைக் குறைப்பதிலும், அதன் மூலம் தேசிய இனங்களுக்கு இந்தியாவில் இருக்கும் கொஞ்சநஞ்ச உரிமைகளையும் பறிப்பதிலும் காங்கிரசை விடப் பத்து மடங்கு தீவிரமாகச் செயல்படும் பா.ஜ.க போன்ற ஒரு கட்சி ஆட்சியில் இருக்கும் இன்றைய நாளில் நமக்குத் தேவை இப்படி எதற்காகவும் அசைந்து கொடுக்காத ஒருவரின் தலைமைதான். இப்படிப்பட்ட ஒரு நேரத்தில் ஜெ அவர்களை நாம் இழந்திருப்பது தமிழ்நாட்டுக்கும் தமிழ் இனத்துக்குமே கூட ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என்பதில் அணுவளவும் ஐயமில்லை!

காவிரி தந்த கலைச்செல்வியாய்த்
தமிழ்நாட்டுக்குள் நுழைந்தவரே!
காவிரியைத் தந்த புரட்சித்தலைவியாய்
மண்ணைவிட்டு மறைந்தவரே!
ஒருபொழுதும் எவரிடத்தும் எங்களை
எதற்காகவும் விட்டுத் தராத தங்களை
போற்றிச் செலுத்துகிறோம் அஞ்சலி! - இது

செவ்வாய், மே 10, 2016

தி.மு.க, அ.தி.மு.க அல்லாத ஓர் ஆட்சி வேண்டுமா? - இதோ நடைமுறைக்கு ஏற்ற ஒரு தீர்வு! | A Practical Solution for TN Election 2016


Atrocities of DMK and ADMK

தேர்தல் - 2016 (பகுதி - 4) 

தி.மு.க-வுக்கும் அ.தி.மு.க-வுக்கும் ஏன் வாக்களிக்கக் கூடாது எனச் சொல்லி நான் தனிப்பதிவு ஏதும் எழுத வேண்டியதில்லை. தலைப்பை மட்டும் கொடுத்துக் கீழே வெறுமையாக விட்டுவிட்டால் போதும்; மக்களே வந்து எழுதிக் குவித்து விடுவார்கள். அந்த அளவுக்கு இந்த இரு கட்சிகள் மீதும் மக்கள் வெறுப்பில் இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் சாராய ஆறு பெருக்கெடுக்கத் திறப்பு விழா நடத்தியது தி.மு.க என்றால், மாநிலமே அந்தப் பேரலையில் மூழ்க டாஸ்மாக் கொண்டு வந்தது அ.தி.மு.க! தமிழினப் படுகொலை நேரத்தில் தமிழர்களுக்கு துரோகம் இழைத்தவர் கருணாநிதி என்றால், அந்தப் படுகொலைக்கு மூலக் காரணமாக இருந்த விடுதலைப்புலிகள் மீதான தடையைக் கொண்டு வந்தவர் -இன்றும் அதற்காகப் பெருமையடித்துக் கொள்ளும்- ஜெயலலிதா! ஏழு தமிழர் விடுதலை விவகாரம் தன் கையில் இருந்தபொழுது அதை சாமர்த்தியமாகக் கை கழுவியது தமிழினத்தலைவரின் அரசு என்றால், ஒருபுறம் அவர்களுக்காக உச்சநீதிமன்றத்தில் வழக்காடிக் கொண்டே மறுபுறம் சாகக் கிடந்த தகப்பனாரைப் பார்ப்பதற்குக் கூட நளினிக்குச் சிறைவிடுப்பு (parole) தரக்கூடாதென்று உயர்நீதிமன்றத்தில் வாதாடியது ஈழத்தாயின் அரசு!

இவை மட்டுமா? மின் தட்டுப்பாடு, வேளாண்துறைச் (agriculture) சீரழிவு, தமிழ் மீனவர் மீதான தாக்குதல்கள், ஜல்லிக்கட்டு போன்ற பண்பாட்டு அடையாளங்கள் நசுக்கப்படுதல், அணு உலைத் திட்டம் - நுண்நொதுமித் (நியூட்ரினோ) திட்டம் எனப் பேரழிவுத் திட்டங்கள் திணிக்கப்படுதல், அண்டை மாநிலங்கள் - நடுவணரசு முதல் உலக நாடுகள் வரை யாருமே தமிழர்களை மனிதர்களாகக் கூட மதிக்காத நிலைமை, இயற்கைச் சமநிலையின் சீர்குலைவு என இவ்வளவுக்கும் காரணம், இவற்றையெல்லாம் கண்டு கொள்ளாத தி.மு.க, அ.தி.மு.க அரசுகளே இங்கு திரும்பத் திரும்ப ஆட்சிக்கு வருவது. எனவே, இத்தனை பிரச்சினைகளும் தீர வேண்டுமானால் அதற்கு உடனடித் தேவை ஆட்சி மாற்றம்! யாருக்கு வாக்களித்தால் அந்த ஆட்சி மாற்றம் ஏற்படும் என்பதுதான் இந்தத் தேர்தலின் ஒரே கேள்வி! பதில்?...

திங்கள், ஏப்ரல் 18, 2016

தேர்தல் - 2016 (3) | பா.ஜ.க-வுக்கு வாக்களிப்பதில் உள்ள ஆபத்துகள் - ஒரு பார்வை!


Tamilnadu BJP leaders

மிழ்நாட்டில் தேசியக் கட்சி ஒன்று - அதுவும் பா.ஜ.க - ஆட்சிக்கு வருவது என்பதெல்லாம் தமிழிசை சௌந்தர்ராஜனின் கனவில் கூட நடக்காத கதை என்பது அனைவரும் அறிந்ததே! ஆனால், அதற்காகத் தமிழ்நாட்டில் தேசியக் கட்சிகளுக்குச் செல்வாக்கே இல்லை எனப் பொருளாகாது. அதிலும் கருணாநிதியும் ஜெயலலிதாவும் அடுத்தடுத்து அளித்து வரும் ‘பொற்கால’ ஆட்சிகளால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள வெறுப்பும், நதிநீர்ப் பங்கீடு போன்ற அண்டை மாநிலங்களுடனான பிரச்சினைகளில் இவர்கள் அடைந்துள்ள முழுத் தோல்வியும், இதே இடத்தில் தேசியக் கட்சி ஒன்று இருந்திருந்தால் நம் பிரச்சினைகள் தீர்ந்திருக்குமோ என்கிற எண்ணத்தை மக்களிடையே அண்மைக் காலமாகத் தளிர் விட வைத்துள்ளன. இந்த அபாயகரமான மூட நம்பிக்கையை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டியது காலத்தின் கட்டாயம். எனவே, பா.ஜ.க-வுக்கு வாக்களிப்பதில் உள்ள ஆபத்துகளை மொத்தமாகப் பார்ப்போம்.

மாற்றுத் தேர்வா பா.ஜ.க?

செவ்வாய், டிசம்பர் 15, 2015

இயற்கைப் பேரழிவும் வரலாற்றுப் பேரிழிவும்



Humanity blossomed by floods

ருப்பதிலேயே மிகவும் எளிதாகக் கையாளக்கூடிய இயற்கைச் சீற்றம் மழை! காரணம் நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு போலத் திடீரெனத் தாக்கக்கூடியது இல்லை அது. எப்பொழுது பெய்யும், எப்படிப் பெய்யும் என எல்லாவற்றையும் முன்கூட்டியே அறிந்து கொண்டு வெகு பொறுமையாக மூட்டை முடிச்சுகளைக் கட்டிக் கொண்டு தப்பலாம். ஆனால், அதைக் கூட ஒழுங்காகக் கையாளத் தெரியாத அரசால் இலட்சக்கணக்கான மக்கள் நடுத்தெருவுக்கு வந்தனர் கடந்த வார வெள்ளத்தின்பொழுது!

போனது போகட்டும், அல்லல்பட்டு நிற்கும் மக்களைக் காப்பாற்றவாவது செய்தார்களா

திங்கள், ஆகஸ்ட் 10, 2015

ஏன் இயலாது மதுவிலக்கு? – தடைகளைத் தகர்க்கும் வகைகளும், அமல்படுத்தும் முறைகளும்




Students Struggle

மூகநலக் கோரிக்கை ஒன்றை வலியுறுத்தி அணைந்த காந்தியவியலாளர் ஒருவரின் உயிர்த்தீ இன்று பெருநெருப்பாக மீள்தெறிப்புக் கண்டு தமிழ்நாடு முழுவதையும் தகிக்கத் தொடங்கியிருக்கிறது!

நம் சமூகத்தில் எந்த ஒரு நல்ல மாற்றம் ஏற்பட வேண்டுமெனினும் யாராவது ஒருவரைப் பலி கொடுத்தாக வேண்டும்! தமிழினப் படுகொலை குறித்த விழிப்புணர்வுக்கு முத்துக்குமார் அவர்கள்; இராஜீவ் படுகொலையில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை விடுவிக்கச் செங்கொடி அவர்கள்; அவ்வளவு ஏன், இந்த மாநிலத்துக்குத் தமிழ்நாடு எனப் பெயர் சூட்டக் கூட சங்கரலிங்கனார் அவர்களைப் பலி கொடுக்க வேண்டியிருந்தது. இவ்வரிசையில் மதுவிலக்கு எனும் கோரிக்கையை வலியுறுத்தித் தன் உயிரையே விட்டிருக்கிறார் காந்தியவியலாளர் சசிபெருமாள் அவர்கள்!

இன்றில்லை, நேற்றில்லை, ௪௬ (46) ஆண்டுகளாக, அதாவது ஏறத்தாழ
Gandhist Sasiperumal
அரை நூற்றாண்டாக மதுவிலக்கை வலியுறுத்திப் போராடி வந்திருக்கிறார் சசிபெருமாள் ஐயா. இறுதியில், அந்தக் கோரிக்கைக்காகத் தன் உயிரையும் ஈந்து விட்டார். ஆனாலும், இன்று வரை, இதை நான் தட்டெழுதிக் கொண்டிருக்கும் இந்த நொடி வரை அவர் கோரிக்கை பற்றிப் “பரிசீலிக்கப்படும்” எனவோ, “விரைவில் முடிவெடுக்கப்படும்” எனவோ நாகரிகத்துக்காகக் கூட ஓர் அறிக்கை வெளியிட முன்வரவில்லை தமிழ்நாடு அரசு. குறைந்தது, அவரது இந்த ஈகைச் (தியாகம்) சாவு குறித்து நம் முதல்வர் அவர்கள் ஓர் இரங்கலறிக்கை கூட வெளியிட்டதாகத் தெரியவில்லை. தன் கட்சியைச் சேர்ந்தவர்கள் எனும் ஒரே காரணத்துக்காக, சமூகத்துக்கு இதுவரை ஒரு துரும்பைக் கூடக் கிள்ளிப் போடாத எத்தனையோ பேர்களின் உயிரிழப்புக் குறித்து அன்றாடம் இரங்கல் அறிக்கை வெளியிடும் ஜெயலலிதா அவர்களுக்கு இந்தச் சமூகத்துக்காகப் போராடிப் போராடிக் கடைசியில் தன் உயிரையே விட்டவருக்கு இரங்கல் தெரிவிக்க மனம் இல்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, சசிபெருமாள் அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்திப் போராட்டத்தில் ஈடுபட்ட அவர் குடும்பத்தினரையும் அரசு கைது செய்து ஆள் நடமாட்டமில்லாத இடத்தில் விட்டது அட்டூழியத்தின் உச்சம்!

ஆனால், அரசு எனும் இரும்பு இயந்திரத்தை அசைக்க முடியாத சசிபெருமாள் அவர்களின் ஈகை, மக்கள் மனத்தை உருக்கி விட்டது. இதோ, மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி இன்று பல்வேறு கட்சிகளும் இயக்கங்களும் மட்டுமல்லாமல் கல்லூரி மாணவர்களும் போராட்டக் களத்தில் குதித்துள்ளார்கள். ஆக, சசிபெருமாள் அவர்களின் கனவு நிறைவேறும் நாள் தொலைவில் இல்லை என நாம் நம்பலாம்.

ஆனாலும், தமிழ்நாடே திரண்டு போராடுகிறது என்பதற்காக நினைத்த மாத்திரத்தில்

ஞாயிறு, மே 17, 2015

தமிழினப் படுகொலை ஆறாம் ஆண்டு நினைவேந்தலும் காத்திருக்கும் கடமைகளும்!





நேற்று பார்த்தது போல் இருக்கிறது அந்தக் குருதி கொப்பளிக்கும் காட்சிகளை!

இன்றும் ஓயவில்லை அந்த மரண ஓலமும் அழுகையும்!

இன்னும் காயவில்லை ஒன்றரை லட்சம் பேரைப் பறிகொடுத்த உள்ளக் காயம்!

ஆனால் அதற்குள், இதோ, தமிழினம் அழிக்கப்பட்டு நாளையோடு முழுதாக ஆறு ஆண்டுகள் முடியப் போகின்றன! 

கடந்த (ஐந்தாமாண்டு) நினைவஞ்சலி நாளில் தமிழினப் படுகொலையைப் பின்னின்று நடத்திய காங்கிரசை வீழ்த்திய ஆறுதலுடன் நாம் மெழுகுத்திரி ஏற்றினோம். இந்த ஆண்டோ அதை முன்னின்று நிகழ்த்திய இராசபக்சவையே வீழ்த்திவிட்டு அதைக் கடைப்பிடிக்கிறோம்.

ஆக, ஈழப் பிரச்சினையில் ஒவ்வோர் ஆண்டும் ஓரளவாவது முன்னேற்றம் காண்கிறோம் என்பது ஆறுதலானது. ஆனால், இந்தப் பிரச்சினை குறித்த நம் நிலைப்பாடுகள், செயல்பாடுகள், நடவடிக்கைகள் ஆகியவற்றில் நாம் இன்னும் பெரிதாக எந்த முன்னேற்றத்தையும் எட்டவில்லை என்பதே உண்மை!

முதலில், இப்பேர்ப்பட்ட பேரழிப்புக்குப் பின் நாம் அடைந்திருக்க வேண்டிய முதன்மையான முன்னேற்றம் ஒற்றுமை!

ஒன்றில்லை, இரண்டில்லை பத்து நாடுகள் சேர்ந்து நம் இனத்தை அழித்திருக்கின்றன. பதினைந்து நாடுகள் அதற்கு ஆதரவாக நின்றிருக்கின்றன. அதாவது, நாம் வாழும் உலகின் ஒரு கணிசமான பகுதியே நம் அழிவை விரும்புகிறது! இப்பேர்ப்பட்ட நிலைமையில் நாம் எந்த அளவுக்கு ஒற்றுமைப்பட்டிருக்க வேண்டும்? எவ்வளவு உறுதியாக ஒருங்கிணைந்து, கைகோத்து நிற்க வேண்டும்? ஆனால், இப்பொழுது வரை, இந்த இனப்படுகொலை நினைவு நாளைக் கடைப்பிடிப்பதில் கூட நம்மிடையே ஒற்றுமை இல்லை! சிலர் மே 17, சிலர் மே 18, சிலர் மே 19 என ஆளுக்கொரு நாளில் அஞ்சலி செலுத்துகிறோம். கண்ணெதிரே இனத்தையே பலி கொடுத்த பின்னும் தமிழர் நம் ஒற்றுமை இவ்வளவுதான்!

முன்பை விட இப்பொழுதுதான் இன்னும் சாதியப் பிரிவினைகள் வலுப்பட்டிருக்கின்றன. தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் பள்ளி மாணவர்கள் கூடக் கையில் அவரவர் சாதிக் கட்சியை நினைவூட்டும் நிறத்திலான கயிறுகளை அணிந்து பள்ளிக்குச் செல்கிறார்கள் எனத் தெரிய வரும்பொழுது நெஞ்சம் விட்டுப் போகிறது. (நன்றி: ஆனந்த விகடன் இதழ் 26.03.2015).

மக்கள்தான் இப்படி என்றால், இவர்களை ஒற்றுமைப்படுத்த வேண்டிய தலைவர்களோ இதற்கும் ஒரு படி மேலே போய் திராவிடமா, தமிழ் தேசியமா எனக் கருத்தியல் அடிப்படையில் தங்களுக்குள்ளேயே பிரிந்து நிற்கிறார்கள்.

உலகமே தங்களுக்கு எதிராக நிற்கும் நிலையிலும் அந்தப் பாதுகாப்பற்ற நிலைமை பற்றித் துளியும் கவலையில்லாமல் நாம் இன்னும் நமக்குள்ளேயே இப்படி இடையறாமல் அடித்துக் கொண்டிருக்கிறோம் என்றால், நம்மை விட அடிமுட்டாள்கள் உலகில் வேறு யாராவது இருப்பார்களா?

செய்ய வேண்டியது என்ன? கடமை – ௧ (1)

ஞாயிறு, மே 18, 2014

2014 நாடாளுமன்றத் தேர்தல் முடிவும் 5ஆம் ஆண்டு நினைவேந்தலும் - சில விளக்கங்கள், சில சிந்தனைகள், சில திட்டங்கள்!


Genocide Rememberance!Genocide Rememberance!

யிற்று!
அப்படி இப்படி என ஐந்து ஆண்டுகள் ஓடி விட்டன!

ஆனால், கடந்த நான்கு ஆண்டுகளாக இல்லாத வகையில், இந்த முறை நாம் நம் மெழுகுத்திரிகளைக் கண்களில் நீரோடு மட்டுமில்லாமல், உதட்டில் சிறு புன்னகையோடும் ஏற்றலாம். தமிழினப் படுகொலைக்குப் பழிவாங்கி விட்ட நிறைவில்! காங்கிரசை வீழ்த்திய மகிழ்வில்!

ஆம், வெளிவந்திருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள், இந்தத் தமிழினப் படுகொலை நினைவேந்தல் நாளை ஒட்டி நமக்குக் கிடைத்திருக்கும் பெரும் பரிசு! சிறந்த ஆறுதல்! கடந்த ஐந்தாண்டுக்காலத் தமிழர் போராட்டங்களின் பெருவெற்றி!

இது காங்கிரசுக்கு வாழ்வா சாவா தேர்தல் எனக் காரணங்களோடு விளக்கினார் தலைசிறந்த அரசியல் நோக்கரான ப.திருமாவேலன் அவர்கள், தமிழின் தனிப்பெரும் ஊடகமான ஆனந்த விகடனில். அப்படிப் பார்த்தால், இந்தத் தேர்தலில் காங்கிரசை நாம் சாகடித்து விட்டோம் என்றே சொல்லலாம். ராஜீவ் கொலைப் பழியை அதில் தொடர்பே இல்லாத தமிழர்கள் மீது சுமத்தியதோடில்லாமல், அந்த ஒற்றை மனிதன் கொல்லப்பட்டதற்காக நம் இனத்தையே அழித்த காங்கிரசு, இப்பொழுது அதுவும் அழிந்து விட்டது எனச் சொல்லக்கூடிய அளவுக்கு ஒரு வீழ்ச்சியை அடைந்திருக்கிறது! தமிழர்களின் இந்தக் கனவை நனவாக்கிய இந்திய உடன்பிறப்புகளுக்கு முதலில் கோடானுகோடி நன்றி! 

நாடாளுமன்றத் தேர்தலில் ஈழப் பிரச்சினை எதிரொலித்ததா? சான்றுகள் என்ன?

வெள்ளி, ஏப்ரல் 11, 2014

யாருக்கு அளிக்கலாம் வாக்கு? - வாக்காளப் பெருமக்களுக்கான தேர்தல் திட்டம் (இறுதிப் பகுதி)


Parliament Election-2014

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நாம் யாருக்கு வாக்களிக்கலாம் என்பது பற்றி அலசும் இந்தத் தொடரில் தி.மு.க-வுக்கும் விடுதலைச் சிறுத்தைகளுக்கும் ஏன் வாக்களிக்கக்கூடாது என்பது பற்றிக் கடந்த பதிவில் பார்த்தோம். மிச்சக் கட்சிகள் பற்றி இந்த இறுதிப் பதிவில்...

தமிழர்களுக்கு மட்டும்தான் எதிரியா காங்கிரசு?
Avoid Congress!

காங்கிரசு எதிர்ப்பு என்பதே தமிழ்ப் பற்றின் காரணமாக எழுவதுதான் என்று பெரும்பாலோர் நினைக்கிறார்கள். தவறு! அதுவும் ஒரு காரணம்; அது மட்டுமே காரணமில்லை.

தமிழர்கள் மட்டுமில்லை, இந்தியாவில் எந்தப் பகுதியில் எத்தனை மக்கள் செத்தாலும் அது பற்றிக் காங்கிரசுக்கு எந்த வித அக்கறையும் கிடையாது என்பதற்கு மிக அண்மைக்கால எடுத்துக்காட்டுதான் மரபணு மாற்றுப் பயிர்களுக்கு இந்திய அரசு வழங்கியுள்ள ஒப்புதல். அது மட்டுமா?
See the Cruelty of Endosulfan!
கருவிலிருக்கும் குழந்தைகள் உட்பட வருங்காலத் தலைமுறையையே அழித்துவிடக்கூடிய எண்டோசல்பான் போன்ற தடை செய்யப்பட்ட பூச்சி மருந்து நிறுவனங்களுக்கு ஆதரவாக உலக அரங்கில் குரல் கொடுப்பது, சொந்த நாட்டு மக்களின் நிலங்களைப் பிடுங்கி வெளிநாட்டு நிறுவனங்களுக்குத் தாரை வார்ப்பது, அயல்நாட்டு நிறுவனங்களுக்காக இந்தியாவின் இயற்கை வளங்களையும் சுற்றுச்சூழலையும் சீரழிப்பது, அதைத் தட்டிக் கேட்கும் மக்களை இராணுவத்தை வைத்துக் கொல்வது, குப்பையில் தூக்கிப் போட வேண்டிய தரத்திலுள்ள போர்க் கப்பல்களையும், விமானங்களையும் வாங்கி அந்த இராணுவ வீரர்களையும் அழிப்பது எனக் காசு கொடுத்தால் எப்பேர்ப்பட்ட கொடூரத்தையும் யாருக்கும் செய்யத் தயங்காத காங்கிரசு, தமிழர்களுக்கோ, இந்திய மக்களுக்கோ மட்டுமில்லை, மனித இனத்துக்கே, உலக உயிரினங்கள் அனைத்துக்குமே தீங்கு விளைவிக்கும் கட்சி!!

ராகுல் ஆட்சிக்கு வந்தால் நாட்டையே புரட்டிப் போட்டு விடுவார் என இங்கே சில இளைஞர்கள் எதிர்பார்க்கிறீர்கள். தமிழர் பிரச்சினைகளில் அவருடைய நிலைப்பாடு என்ன என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். நீங்கள் நினைப்பது போல் அவர் நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் எண்ணற்ற திட்டங்களைத் தீட்டி வைத்துக் கொண்டு காத்துக் கிடக்கும் நல்லவர், வல்லவர் என்றே வைத்துக் கொள்வோம். ஒன்றா, இரண்டா, மூன்றா... கடந்த பத்து ஆண்டுகளாக அவருடைய கட்சிதானே இங்கே ஆண்டது? புதிதாக என்ன செய்தார் அவர்? சிந்தித்தீர்களா? கேட்டால் அவர் கையிலா அதிகாரம் இருந்தது என்பீர்கள். அவர் அம்மாதானே நாட்டையே வழிநடத்தினார் இந்தப் பத்தாண்டுகளில்? பெற்ற தாயையே தன் வழிக்குக் கொண்டு வர முடியாதவர் நூற்றுக்கணக்கான நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், கூட்டணித் தலைவர்கள் அத்தனை பேரையும் தன் வழிக்குக் கொண்டு வந்து, தன் திட்டங்களையெல்லாம் நிறைவேற்றி ஒரு சிறப்பான நல்லாட்சியை வாரி வழங்கி விடுவார் என எப்படி எதிர்பார்க்கிறீர்கள்? 67 ஆண்டுக்கால இந்திய வரலாற்றில் இந்த அளவுக்கு மக்களைச் சீரழித்த, நாட்டைக் குட்டிச் சுவராக்கிய ஓர் ஆட்சியை இந்தியா சந்தித்ததே கிடையாதே, அப்படிப்பட்ட இந்த ஆட்சியைத் திருத்தவோ, இதன் மனித விரோதப் போக்குக்கு எதிராகவோ ஒரு வார்த்தையாவது அவர் வாய் திறந்து இதுவரையில் பேசியதுண்டா? அப்படிப்பட்டவர் தான் ஆட்சிக்கு வந்தால் மட்டும் கிழித்துக் கீரை விதை நட்டு விடுவாரா? கொஞ்சமாவது சிந்தியுங்கள் நண்பர்களே!

“உங்களுக்குப் பிடித்த தலைவர் யார்எனக் கேட்டால் பெண் எனும் ஒரே காரணத்துக்காக சோனியாவின் பெயரைச் சொல்லும் இளம்பெண்களே! சோனியா என்ன செய்தார் என்பது தெரியுமா? ஈழத்தில் இனப்படுகொலை நடந்தபொழுது அவர் நடந்து கொண்ட விதம் உங்களுக்குத் தெரியுமா? ஆயிரக்கணக்கான பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆட்படுத்தப்பட்டுக் கொல்லப்படுகிறார்கள் என்று கூறியபொழுது, “அதெல்லாம் அந்த நாட்டு உள்விவகாரம். அதில் நாம் என்ன செய்ய முடியும்?என்று கூறி விட்டு இரண்டாயிரம் கோடியையும், அளவற்ற இராணுவத் தளவாடங்களையும், ஆயுதங்களையும் அள்ளிக் கொடுத்து அந்தக் கொடுமை தொடர வழி செய்தவர் அவர் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஈழ இனப்படுகொலையை நிறுத்த அமெரிக்கா களமிறங்கத் தீர்மானித்தபொழுது ஒரே ஒரு தொலைபேசி அழைப்பு மூலம் அதைத் தடுத்து நிறுத்தியவர் அவர் என்பது தெரியுமா? தீவிரவாத ஒழிப்பு எனும் பெயரில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் வன்முறைகளை வேடிக்கை பார்ப்பவர் அவர் என்பது உங்களுக்குத் தெரியுமா? பெண்களுக்கு எதிராகவும், மனிதநேயத்துக்கு எதிராகவும் இவ்வளவு கொடுமைகளைச் செய்த, செய்கிற ஒருவருக்குப் பெண் என்னும் ஒரே காரணத்துக்காக வாக்களிக்கப் போகிறீர்களா? சிந்தியுங்கள்!

தமிழர்கள் மட்டுமில்லை, ஆறாம் அறிவு கொண்ட எந்த மனிதப் பிறவியும் காங்கிரசுக்கு வாக்களிக்க மாட்டார்!

பொதுவுடைமைக் கட்சிகள் (எ) காங்கிரசு! (Communists alias Congress)

Communism with Capitalism

நேர்மை, அர்ப்பணிப்பு, கொள்கையில் உறுதி, மக்களுக்காகக் களமிறங்கிப் போராடுதல் என இந்திய அரசியலில் வழக்கொழிந்து விட்ட அரிய குணங்களையெல்லாம் இன்றும் கடைப்பிடிப்பவர்கள் நம் சிவப்புத் துண்டுத் தோழர்கள்! ஈழத்து இனப்படுகொலையின்பொழுது கூட அதற்காக இங்கே முதன்முதலில் குரல் எழுப்பிய கட்சி இந்தியப் பொதுவுடைமைக் (இந்தியக் கம்யூனிஸ்டு) கட்சிதான் என்பது எக்காலத்திலும் தமிழர்கள் மறக்கக்கூடாத ஒன்று!

ஆனால், மூன்றாம் அணிக்கு வாக்களிப்பது பற்றி நினைத்துக் கூடப் பார்க்க முடியாமல் தடுக்கிற ஒரே காரணம் அவர்களுடைய காங்கிரஸ் ஆதரவு!

மதச்சார்பின்மை எனும் ஒரே ஒரு காரணத்துக்காக, காங்கிரஸ் எப்பேர்ப்பட்ட மோசமான ஆட்சியை நடத்தினாலும் பொதுவுடைமைக் கட்சிகளின் (Communists) அவர்களுக்குத்தான் ஆதரவளிக்கின்றன!

2004 நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிக்கு அடுத்தபடியாக மிக அதிகமான தொகுதிகளை வென்ற பொதுவுடைமைக் கட்சிகள், காங்கிரசோ பா.ஜ.க-வோ ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்காக மக்கள் தங்களுக்கு அளித்த அந்தப் பெரும் வெற்றியைக் காங்கிரசை ஆட்சியில் அமர்த்தவே பயன்படுத்தின.

ஆனாலும், 2009 நாடாளுமன்றத் தேர்தலிலும் கணிசமான தொகுதிகளில் மக்கள் இவர்களை நம்பி வாக்களித்தார்கள். ஆனால், மறுபடியும் பொதுவுடைமைக் கட்சிகள் தங்கள் ஆதரவைக் காங்கிரசுக்குத்தான் வழங்கின. இதற்கு எதற்காக மூன்றாவது அணி? நேரடியாகக் காங்கிரசுக்கே வாக்களித்து விடலாமே?

இது விதயத்தில் தி.மு.க-வுக்கும் பொதுவுடைமைக் கட்சிகளுக்கும் பெரிதாக வேறுபாடு எதுவும் இல்லை. இவர்களுக்கு வாக்களிப்பதும் காங்கிரசுக்கு வாக்களிப்பதும் ஒன்றேதான். எனவே, ஆட்சி மாற்றத்தை விரும்பும் யாரும் பொதுவுடைமைக் கட்சிகளுக்கு, மூன்றாவது அணிக்கு வாக்களிக்க மாட்டார்கள்!

வாக்களிக்கலாமா ஆம் ஆத்மிக்கு?

தேசிய அளவில் பார்க்கும்பொழுது காங்கிரசு, பா.ஜ.க இரண்டுக்கும் சரியான மாற்று ஆம் ஆத்மிதான் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. ஆனால், எந்தத் தமிழ்க் கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் இந்தத் தேர்தலைச் சந்திக்கும் அவர்களுக்கு நாம் வாக்களித்தால், நாளை ஆட்சிக்கு வந்த பின், தமிழர் பிரச்சினைகளில் அவர்கள் தவறான போக்கைக் கையாண்டால் அவர்களுக்கு எடுத்துச் சொல்வது யார், தமிழர் சார்பாக அவர்களுடன் பேசுவது யார் என்பது பெரிதும் அச்சுறுத்துகிற கேள்வி.

இதையும் மீறி நாம் அவர்களுக்கு வாக்களித்தாலும், முதன்முறை நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்கிற அவர்கள், அதுவும் எந்தக் கூட்டணியும் இல்லாமல் நாடு முழுவதும் தனித்துப் போட்டியிடும் அவர்கள், தமிழ்நாடு தவிர்த்த மற்ற மாநிலங்களில் போதுமான எண்ணிக்கையில் தொகுதிகளைக் கைப்பற்றாவிட்டால் அவர்களை நம்பி வாக்களிக்கும் நம் நிலைமை?... ஈழப் பிரச்சினை, காவிரிப் பிரச்சினை, முல்லைப் பெரியாறு பிரச்சினை, தமிழ் மீனவர் பிரச்சினை, வேளாண் நிலத்தில் எரிகுழாய் பதித்தல் எனத் தமிழர் பிரச்சினைகள் அனைத்தும் உச்சத்தில் இருக்கும் வேளையில் வெல்வார்களா மாட்டார்களா எனத் தெரியாத ஒரு கட்சிக்கு வாக்களித்து, நடுவணரசைக் கைப்பற்ற ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே கிடைக்கிற வாய்ப்பை நழுவ விடலாமா?

The two Musketeers!அதே நேரம், இன்னொன்றையும் நாம் சிந்திக்க வேண்டும்!
தமிழர் பிரச்சினைகளில் மிக முக்கியமான, மேற்கண்ட பட்டியலில் இல்லாத ஒன்று ‘கூடங்குளம் அணுமின் நிலையப் பிரச்சினை!அதை வழிநடத்துகிற சுப.உதயகுமாரன் அவர்கள் இந்தத் தேர்தலில் ஆம் ஆத்மி சார்பில் போட்டியிடுவதை நாம் மறக்கக்கூடாது!

இந்தியாவில் காந்தியடிகளுக்கு அடுத்தபடியாக இந்த அளவுக்குக் கூடுதலான எண்ணிக்கையிலான மக்களை, இப்படி ஆண்டுக்கணக்காக ஒரே இலக்கை நோக்கிச் சிந்தாமல், சிதறாமல் அறப் போராட்டத்தில் ஈடுபட வைத்த மாமனிதர் சுப.உதயகுமாரனைத் தவிர வேறு யாரும் கிடையாது! ஆனால், மூன்றாண்டு காலப் போராட்டத்துக்குப் பிறகும் அணுமின் நிலையத்தினால் ஏற்படும் ஆபத்துகள் பற்றி நம் மக்களுக்குத் துளியும் விழிப்புணர்வு ஏற்படவில்லை என்பதுதான் வேதனை! பல் முளைக்காத பச்சைக் குழந்தை கூட ஒருமுறை சுட்டுக்கொண்டால் மறுபடியும் நெருப்பைத் தொடாது. ஆனால், செர்னோபில், புகுஷிமா என அடுத்தடுத்து அணு உலைகளின் கோர முகத்தைப் பார்த்த பின்னும் நாம் அணு உலைகள் பாதுகாப்பானவை என நம்புகிறோம் என்றால் என்ன சொல்வது!

“கூடங்குள அணுமின் நிலைய அணுஉலை ரியாக்டர்களில் நீண்டகாலப் பயன்பாட்டிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் உறுதி செய்யப்படவில்லை. குளிரூட்டும் முறை பழுதடைந்தால் அதைச் சரி செய்துகொள்ளக்கூடிய பாதுகாப்புகள் முறையாக வடிவமைக்கப்படவில்லை. புக்குஷிமா அணுமின் நிலையத்தில் வெடிப்பு ஏற்பட்டதற்கு இந்தக் குறைபாடுதான் முக்கிய காரணம். குளிரூட்டும் சாதனங்களின் முக்கிய கருவிகள் மிகவும் பலவீனமாகவே வடிவமைக்கப்பட்டுள்ளன. பூமியதிர்வுகளால் ஏற்படக்கூடிய ஆபத்துகளைக் கவனத்தில் கொள்ளப்படாமல்தான் இந்த அணுஉலை வடிவமைக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கம் நேர்ந்தால் தானாகவே செயல்பாடுகளை நிறுத்திக் கொள்ளும் வசதிகள் இதில் இல்லை!” -  இப்படியெல்லாம் கூறுவது நான் இல்லை,

செவ்வாய், பிப்ரவரி 18, 2014

மூவர் தூக்குத் தண்டனைத் தள்ளுபடியும் தமிழர் கடமைகளும்!




வெற்றி!...


வெற்றி!...


வெற்றி!...


நீதியின் வெற்றி!


நேர்மையின் வெற்றி!


பொறுமையின் வெற்றி!


அறப் போராட்டத்தின் வெற்றி!


மறத் தமிழரின் வெற்றி!


முதுமையிலும் சாதிக்க


முடியும் எனக் காட்டியுள்ள


அற்புதம்மாளின் வெற்றி!


தாய் அவருக்குத் தோள் கொடுத்த


தமிழ்ப் பிள்ளைகளின் வெற்றி!


பல காலமாய்ப் போராடிய


தலைவர் வை.கோ-வின் வெற்றி!


இளந்தலைமுறையைத் தட்டியெழுப்பிய


அண்ணன் சீமானின் வெற்றி!


புதிய புயல்களாய்ப் புறப்பட்டுள்ள


இன்ன பிற தமிழ்த் தலைவர்களின் வெற்றி!


உலகெங்குமுள்ள


மனித உரிமை ஆர்வலர்களின் வெற்றி!


மரண தண்டனை எதிர்ப்பாளர்களின் வெற்றி!

எல்லோருக்கும் மேலாய்

இந்த அண்ணன்கள் விடுதலைக்காய்

உயிர் விளக்கேற்றிய

ஈகி செங்கொடியின் வெற்றி இது!


இவர்கள் குற்றமே செய்யவில்லை என்பதை


உறுதிப்படுத்த முடிந்திருந்தால்


இன்னும் களிகூர்ந்திருக்கும் இந்த மன்பதை!




ஆனாலும் இது வெற்றிதான்!


ஆறுதல் மிகத் தரும் பெற்றிதான்!


கொண்டாடுவோம்!


கொண்டாடுவோம்!


தமிழ் மக்களுக்கு இனிப்புகள் வழங்கி...


காங்கிரசார் செவிடுபட எக்காளம் முழங்கி...


தோழர்களை அணைத்து...


ஆனந்தக் கண்ணீர் உகுத்து...


பட்டாசுகள் வெடித்து...


தப்பட்டை அடித்து...


கொண்டாடுவோம் இன்று!


இது நம்


முதல் வெற்றி என்று!...




ஆம்...

செவ்வாய், டிசம்பர் 17, 2013

வை.கோ பா.ஜ.க-வுடன் கூட்டணி வைப்பது சரியா? – ஓர் அலசல்!

MDMK-BJP_alliance

பாரதிய ஜனதாவுடனான தலைவர் வை.கோ அவர்களின் கூட்டணியையும், தமிழருவி மணியன் முதலான தமிழர் தலைவர்களின் இன்றைய பா.ஜ.க ஆதரவு நிலைப்பாட்டையும் விமரிசிக்கும் அனைவரிடமும் நான் கேட்க விரும்பும் ஒரே கேள்வி இதுதான். 

இதை விட்டால் வேறென்ன வழி இருக்கிறது? 

'எரிகிற கொள்ளியில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி' என்பதுதான் இன்றும் நாம் ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் முறையாக இருக்கிறது எனும்பொழுது, கூட்டணி மட்டும் புத்தர்களுடனும் காந்திகளுடனும் வைத்துக்கொள்ள வேண்டும் என நாம் எப்படி எதிர்பார்க்க முடியும்?

ஆம், பா.ஜ.க-தான் சிறந்த தேர்வு எனச் சொல்லவில்லை. மற்றவையெல்லாம் அதைவிட ஆபத்தானவை என்பதுதான் விதயமே!

ஒரு புறம், முள்ளிவாய்க்கால் பேரழிவை நிகழ்த்திய காங்கிரசு; மறு புறம், முள்ளிவாய்க்கால் முற்றம் இடித்த ஜெயலலிதா; இன்னொரு புறம், இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி இருக்கிறதா இல்லையா என்பது கூடத் தெரியாத இரசியா தனி ஈழத்தை எதிர்க்கிறது என்பதற்காகத் தாங்களும் தனி ஈழத்தை எதிர்க்கும் அறிவுக் கொழுந்துகளான பொதுவுடைமைத் தோழர்கள். பா.ஜ.க-வுக்குப் பதிலாக இவர்களில் யாரைத் தேர்ந்தெடுக்கச் சொல்கிறீர்கள் நண்பர்களே?

வியாழன், ஆகஸ்ட் 08, 2013

முதல்வர் மறந்த வாக்குறுதி - மீனவர்களுக்கு நிரந்தரத் தீர்வு!


Jayalalitha's Election Report


தமிழ்நாட்டு மீனவர்கள் 65 பேரை இலங்கை அரசு கூண்டோடு பிடித்துச் சென்று மூன்று நாட்கள் கூட முழுமையாக முடியாத நிலையில், அடுத்ததாக ‘இந்திய அரசின் கடலோரக் காவல்படையே’ நேரடியாக வந்து காரைக்கால் மீனவத் தமிழர்களை நடுக்கடலில் வைத்துத் தாக்கியிருக்கிறது!

இதை அறிந்ததும், “இத்தனை நாட்களாக, இலங்கைக் கடற்படைதான் மீனவர்களைத் தாக்கியது. இப்பொழுது, இந்தியக் கடலோரக் காவல்படையும் அதையே செய்கிறதென்றால்... தவறு மீனவர்கள் பக்கம்தான் இருக்கும் போலிருக்கிறதே” எனக் கருத்து தெரிவிக்கத் தொடங்கியிருக்கிறார்கள், விவரம் புரியாத அப்பாவிகள் சிலர்!

தெரியாமல்தான் கேட்கிறேன், மீனவர்கள் என்பவர்கள் யார்? அவர்களும் நம்மைப் போல இதே நாட்டில், நாம் வாழும் இதே அரசியல், சமூகச் சூழலில் வாழ்பவர்கள்தானே? காவல்துறை அலுவலர் கோபத்தோடு ஓர் அதட்டல் போட்டாலே தொடை உதறத் தொடங்கிவிடுகிற நம்மைப் போன்ற சராசரித் தமிழ்க் குடிமக்கள்தானே அவர்களும்? கடலோரக் காவல்படையினர், அதுவும் துப்பாக்கிகளோடு வரும்பொழுது, உண்மையிலேயே தங்கள் பக்கம் தவறு இருந்திருந்தால் மீனவர்கள் உடனே அஞ்சிப் பின்வாங்கத் தொடங்கியிருக்க மாட்டார்களா? சிந்தித்துப் பாருங்கள்!

உண்மையில் அங்கு நடந்தது என்ன என்பது உங்களுக்குத் தெரிய வந்ததா?

திங்கள், ஜூலை 15, 2013

தமிழ் மாணவர் போராட்டம் நாடாளுமன்றத் தேர்தலில் கண்டிப்பாக எதிரொலிக்கும்! – இயக்குநர்.புகழேந்தி தங்கராஜ் ஆவேச நேர்காணல்!

Director.Pugazhendhi Thangaraj


காற்றுக்கென்ன வேலி’, ‘உச்சிதனை முகர்ந்தால்என்று ஈழப் பிரச்சினையைப் பற்றி, குறிப்பாக விடுதலைப்புலிகளைப் பற்றித் தமிழில் உண்மையான திரைப்படங்களை வழங்கிய துணிச்சல் மிக்க இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் அவர்கள்! தனித் தமிழீழத் திருநாடு கேட்டுத் தமிழ்நாடு முழுக்க மாணவர்கள் போராடிக் கொண்டிருந்த அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வேளையில் அவரிடம் நான் பணியாற்றும் நிலாச்சாரல்மின் இதழுக்காகக் கைப்பேசி வழியே நேர்காணல் ஒன்று மேற்கொண்டேன். அப்பொழுதைய சூழ்நிலையில் இதழால் அதை முழுமையாக வெளியிட முடியவில்லை. எனவே, இதோ என் வலைப்பூவில் அதன் முழுமையான வடிவம்... 

ஈழப் பிரச்சினையை வைத்துத் தமிழில் தீவிரமான திரைப்படங்களை வழங்கியவர் தாங்கள்தான். இப்பொழுது தமிழீழத்துக்காக எழுச்சி பெற்றிருக்கும் தமிழ்நாட்டு மாணவர் போராட்டங்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? 

இப்பொழுது ஏற்பட்டிருக்கிற மாணவர் போராட்டங்களை ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பே எதிர்பார்த்தவர்களில் நானும் ஒருவன். இப்பொழுது ஏற்பட்டிருக்கும் இந்த மாற்றத்துக்குப் பரவலாக நம்பப்படுகிற மாதிரி, தம்பி பாலச்சந்திரனின் முகம், அந்தச் சிறுவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமை - அது ஒரு பெரிய காரணமாக இருக்கிறது. தமிழ் மக்கள் எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள். தமிழ் மாணவர்கள் இந்த (பாதிக்கப்பட்ட) குழந்தைகளின் முகத்தைப் பார்த்து இவ்வளவு எழுச்சியை, எதிர்ப்பை வெளியிட்டிருப்பது சரியான நேரத்தில் காலம் கருதிச் செய்யும் செயல் என்றுதான் நான் நினைக்கிறேன். ஒரு இலட்சத்து இருபதாயிரம் விடுதலைப் போராளிகள் இந்த இனப்படுகொலையில் இறந்ததாக ஒரு கணக்கு இருக்கிறது. அந்த ஒரு இலட்சத்து இருபதாயிரம் விடுதலைப்புலிகளுடைய, போராளிகளுடைய உயிர்த் தியாகத்தால் கூட எழுப்ப முடியாத ஒரு மிகப்பெரிய எழுச்சியை இந்தப் பன்னிரண்டு வயதுக் குழந்தையுடைய உருவம், அந்தக் குழந்தையுடைய பார்வை எழுப்பியிருக்கிறது. (குரல் கம்முகிறது).

தம்பி பாலச்சந்திரன் இறந்து விட்டான் என்பது போன ஆண்டே தெரியும். இருந்தால்கூட, அப்பொழுது அந்தக் குழந்தையுடைய விழிகளை நாம் பார்க்கவில்லை. இப்பொழுது நாம் பார்க்கும் அந்தப் பார்வையில் இருக்கும் ஒளியும், நம்பிக்கையும் இரண்டு நிச்சயங்களை நமக்கு உணர்த்தியிருக்கின்றன. ஒன்று, 19ஆம் தேதி கொல்லப்பட்ட பாலச்சந்திரனின் முகத்தில் 17ஆம் தேதி தன் தந்தை கொல்லப்பட்டதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்பது பெரிதும் குறிப்பிடத்தக்கது. அது நமக்கு ஒரு வரலாற்று உண்மையை, சிங்கள அரசாங்கம் திட்டமிட்டுச் செய்து வருகிற ஒரு பிரச்சாரம் எவ்வளவு பொய் என்பதை நமக்கு உணர்த்துவதாக இருக்கிறது. அடுத்ததாக, அந்த விழிகளில் காணப்படக்கூடிய ஒளி நம் மாணவர்களை உசுப்பி எழுப்பியிருக்கிறதென நம்புகிறேன். 

நன்றி ஐயா! புகைப்படத்தில் பாலச்சந்திரனின் கண்களில் இருக்கும் ஒளியை வைத்து, தமிழினத் தலைவர் மேதகு.பிரபாகரன் அவர்கள் இன்னும் இருக்கிறார் என்பதை நாம் அறியக்கூடும் என்ற மிக முக்கியமான ஒரு தகவலை நீங்கள் இந்தப் பதில் மூலம் தமிழ் மக்களுக்குச் சொல்லியிருக்கிறீர்கள். இதுவரை யாரும் இந்தக் கோணத்தைச் சொல்லவில்லை. அடுத்ததாக ஐயா, இது தாமதமான போராட்டம் எனத் தனிமனிதர்கள் முதல் ஊடகத்தினர் வரை பலரும் தொடர்ந்து கூறி வருகிறார்கள். அது பற்றி உங்கள் கருத்து...? 

இல்லை Better late than never! சரியான நேரத்தில் மாணவர்கள் களமிறங்கியிருக்கிறார்கள். 2007 வரை, உலகம் முழுக்க இருக்கிற தமிழ் இளைஞர்களில், குறிப்பாகத் தமிழ் மாணவர்களில் பெரும்பாலானோர் விடுதலைப்புலிகள் இயக்கத்தையும் அதன் தலைவர் பிரபாகரனையும் பற்றித் தவறான புரிதலுடன் இருந்தார்கள். புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தின் பிள்ளைகளே கூடத் தங்கள் தேசிய இனத் தலைவனுடைய உண்மையான முகத்தைப் புரிந்து கொள்ளாமல், ஊடகங்கள் மூலம் பரப்பப்பட்ட பொய்ப் பிரச்சாரங்களை நம்பி இருந்தார்கள். இது மறுக்க முடியாத உண்மை! தங்களுடைய தேசியத் தலைவனைப் பற்றி அவர்கள் புரிந்துகொண்டதே 2008-09க்குப் பிறகுதான்; அதுவும், குறிப்பாக முத்துக்குமாருடைய மரணத்துக்குப் பிறகுதான் அந்த மாணவர்கள் சிலிர்த்து எழுந்து நின்று எங்களுடைய தேசியத் தலைவர் பிரபாகரன்என்று பிரகடனப்படுத்தினார்கள். இது 2009 பிப்ரவரியில் நடந்தது. அதற்குக் காரணம் என்னவென்றால், அதற்கு முன்பு அவர்கள் பிரபாகரனைப் பற்றி ஊடகங்கள் பரப்பியிருந்த பொய்ப் பிரச்சாரத்தைத்தான் நம்பியிருந்தார்கள். குறிப்பாக, ஆங்கில ஊடகங்களை. ஆங்கில ஊடகங்கள் மூலமாகத்தான் அவர்களுக்குச் செய்தி போய்ச் சேர்ந்தது. அவர்கள் பிரபாகரனைத் தீவிரவாதி என்றுதான் ஆங்கில ஊடகங்கள் மூலமாகத் தெரிந்து வைத்திருந்தார்கள். 2008க்குப் பிறகுதான், தங்கள் மண்ணில் மிஞ்சியிருக்கிற தங்கள் உறவுகளுக்குப் பாதுகாப்பாகத் தங்கள் உயிரையும் கொடுக்கத் தயாராக இருந்த போராளிகளுடைய தலைவன்தான் பிரபாகரன் என்பது, 2009க்குப் பிறகுதான் அந்தக் குழந்தைகளுக்கே தெரிய வந்தது. அதற்குப் பிறகுதான் தங்கள் தலைவரைப் பற்றித் தவறாகப் புரிந்து கொண்டிருந்த அந்த மாணவர்கள் எங்கள் தேசியத் தலைவர் பிரபாகரன்என்று சொல்லி, பிரபாகரனின் எழுத்துக்களைத் தங்கள் உணர்வில் தாங்கி, புலிகளுடைய கொடிகளுடன் வலம் வரத் தொடங்கினார்கள். இது 2009இலேதான் நடந்தது. ஆக, புலம் பெயர்ந்த தமிழ்ச் சொந்தங்களுடைய குழந்தைகளே அப்படி இருக்கையில், இங்கே இருக்கிற தமிழ் மாணவர்களுக்கு அந்த எழுச்சி ஒரு நான்கு ஆண்டுகள் கழித்து ஏற்பட்டிருப்பது என்பது தாமதமானது என நினைக்க முடியாது! இப்பொழுது ஏற்பட்டிருக்கிற இந்த மாணவர் எழுச்சி உலகெங்கும் தமிழ் உணர்வை நிமிர்த்தி நம்பிக்கையோடு உட்கார வைத்திருக்கிறது. இன்றைக்குத்தான் முதன்முறையாகத் தமிழ்நாட்டின் வீதிகள் எங்கும் புலிகளுடைய கொடியும், பிரபாகரன் என்கிற பெயரும், “தமிழினத்தின் அடையாளம் பிரபாகரன்! தமிழீழத்தின் அடையாளம் விடுதலைப்புலிகள்என்கிற முழக்கமும் இப்பொழுதுதான் கேட்கத் தொடங்கியிருக்கிறது. எனவே, இது தாமதமானது என நான் நினைக்கவே இல்லை. சரியான நேரத்தில் மாணவர்கள் களமிறங்கியிருக்கிறார்கள். 

சரி ஐயா! அடுத்து, மாணவர்களில் பலர், தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பையும், இலங்கை மீது சுதந்திரமான பன்னாட்டு விசாரணையையும் கோரி இந்தியா தீர்மானம் கொண்டு வரவேண்டும் எனப் போராடுகிறார்களே, இது சரியா? 

ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்! மாணவர்கள் போராடத் தொடங்கியது அமெரிக்கத் தீர்மானம் மோசடி என்று சொல்லித்தான். ஊடகங்கள் கண்முன்பாகத்தான் மாணவர்கள் அந்தத் தீர்மானத்தை எரித்தார்கள். எரித்துவிட்டு மாணவர்கள் சொன்னார்கள் அமெரிக்கத் தீர்மானம் மோசடி, இந்தியாவே தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று. ஆனால், நம் ஊடகங்கள் கடைசி நிமிடம் வரை அமெரிக்கத் தீர்மானத்தை ஆதரிக்கக் கோரி மாணவர்கள் உண்ணாவிரதம் என்று செய்தி போட்டார்களே, ஏன்? இந்த ஊடகங்களுக்குத் தெரியாதா? அவர்கள் படப்பிடிப்புக் கருவிக்கு முன்பாகத்தானே மாணவன் அமெரிக்கத் தீர்மானத்தை எரிக்கிறான்? ஆக, மாணவர்கள் வெளிப்படையாக அறிவித்த பின்பும் ஊடகங்கள் தவறாகச் சித்தரிக்க முயன்றார்கள். மாணவர்கள் எழுப்பிய கோரிக்கை, இந்திய நாடாளுமன்றத்திலே பதிவு செய்யப்பட்ட கோரிக்கை! அமெரிக்கத் தீர்மானம் மோசடி என்று ஆன பிறகு, இந்தியாவே ஒரு தீர்மானத்தைத் தனியாகக் கொண்டு வர வேண்டும் என்று இந்திய நாடாளுமன்றத்திலே சொல்லப்பட்டதும், பின்னர் மாணவர்கள் அதை வலியுறுத்தியதும் இந்தியாவின் துரோக முகத்தை அம்பலப்படுத்துவதற்காக, இந்தியாவுக்கு நெருக்கடி கொடுப்பதற்காகச் சொல்லப்பட்ட வார்த்தைகள். இந்தியா அப்படி ஒரு தீர்மானத்தைக் கொண்டு வராது என்பது மாணவத் தம்பிகளுக்கு நிச்சயமாகத் தெரியும்! இருந்தாலும், இந்தத் துரோக இந்தியாவை மேலும் அம்பலப்படுத்த வேண்டும் என்பதற்காக அந்தக் கோரிக்கையை முன்வைத்தார்கள். அது எப்படிப்பட்ட தீர்மானமாக இருக்க வேண்டும் என்பதிலும் மாணவர்கள் தெளிவாக இருந்தார்கள். போர்க்குற்றம் என்பதோடில்லை, நடந்தது இனப்படுகொலை; நடந்த இனப்படுகொலையை உலக நாடுகள் கண்டிக்க வேண்டும்; அந்த இனப்படுகொலையைப் பற்றிச் சர்வதேச நீதி விசாரணை வேண்டும் என்று இந்தியா தனியாகத் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்பது மாணவர்களின் கோரிக்கையாக இருந்தது. இதெல்லாம் இந்தியாவின் துரோக முகத்தை அம்பலப்படுத்துகிற மாணவர்களின் நடவடிக்கை. அந்த நடவடிக்கையால்தான் இன்று இந்தியா முழுமையாக அம்மணமாகி நிற்கிறது தமிழ்ச் சமூகத்துக்கு எதிரே! 

மிகச் சரியான வார்த்தை ஐயா! ஆனால், ஈழத் தமிழர்களுக்காக இந்தியா இதுவரை ஒரு துரும்பையும் கிள்ளிப் போட்டதில்லை. மாறாக, அவர்களை அழிக்கத்தான் உதவியிருக்கிறது. இப்பொழுதும், அமெரிக்கா கொண்டு வந்த இந்தத் தீர்மானத்தின் பல அம்சங்களை இந்தியா தலையிட்டு இலங்கைக்கு ஆதரவாகத் திருத்தி விட்டது. தீர்மானத்தில் தொடக்கத்தில் இருந்த அளவுக்கு வீரியம் கூட வாக்கெடுப்பின்பொழுது இல்லை. இந்நிலையில் மாணவர்களின் கோரிக்கைப்படி, ஒருவேளை, இந்தியா தானே ஈழத் தமிழர்களுக்காக ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தால் அது எப்படி இருக்கும் என நினைக்கிறீர்கள்? 

அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பாவா? இந்தியா என்பது வெட்கங்கெட்ட, மானங்கெட்ட ஒரு நாடு என்பது உறுதியாகிவிட்டது. நான்

என் புதினத்தை வாங்க

என் புதினத்தை வாங்க
மேலே உள்ள படத்தை அழுத்துங்கள்
பதிவுகளை உடனுக்குடன் பெற

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

வாட்சாப் தடத்தில் (Channel)...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு (1) 13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (9) அஞ்சல் வாக்கு (1) அஞ்சலி (25) அணு உலை (2) அப்பா மகள் பாசம் (1) அம்பிகை செல்வகுமார் (1) அம்மணம் (1) அமேசான் (6) அயல்நாட்டுத் தமிழர் (1) அரசியல் (91) அழைப்பிதழ் (7) அற்புதம்மாள் (2) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (45) ஆசிரியர் (1) ஆட்சென்ஸ் (1) ஆணவப்படுகொலை (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இங்கிலாந்து (1) இசுரேல் (2) இட ஒதுக்கீடு (4) இணையம் (19) இந்தித் திணிப்பு (3) இந்தியா (25) இரசியா (1) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இலக்கணம் (3) இலங்கை (1) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (23) இனம் (46) ஈழம் (44) உக்கிரேன் (1) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (24) எழுவர் விடுதலை (1) ஐ.நா (5) ஒருங்குறி (1) கடவுள் (1) கதை (4) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (12) கலைச்சொல்லாக்கம் (1) கவிஞர் தாமரை (1) கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் (2) கவிஞர் ரேவதி (1) கவிதை (20) காங்கிரஸ் (6) காசா (2) காணொளி (8) காதல் (3) காந்தியம் (1) கார்த்திக் சுப்புராஜ் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (5) கிரந்தம் (1) கீச்சுகள் (2) கீழடி (2) குழந்தைகள் (10) குறள் (2) கூகுள் (2) கையொப்பம் (2) கோட்பாடு (9) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (16) சந்திப்பு (1) சமயம் (12) சமற்கிருதம் (2) சமூகநீதி (4) சரிதா (1) சாதி (11) சாலமன் பாப்பையா (1) சிங்களர் (1) சித்திரக்கதைகள் (1) சிவகார்த்திகேயன் (1) சிறுவர் இலக்கியம் (5) சீமான் (7) சுற்றுச்சூழல் (6) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (3) சொத்துக்குவிப்பு (1) தங்கிலீஷ் (1) தந்தைமை (1) தமிழ் (39) தமிழ் தேசியம் (5) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (20) தமிழர் (48) தமிழர் பெருமை (20) தமிழறிஞர் முத்துநிலவன் (1) தமிழின் சிறப்பு (4) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (2) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (6) தாலி (1) தி.மு.க (11) திரட்டிகள் (4) திராவிடம் (9) திருக்குறள் (1) திருமுருகன் காந்தி (1) திரைப்படம் (3) திரையுலகம் (12) திறனாய்வு (1) தினகரன் (1) துருவ் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (10) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தேர்தல்-2021 (2) தேர்தல்-2026 (1) தொலைக்காட்சி (2) தொழில்நுட்பம் (10) தோழர் தியாகு (1) நட்பு (13) நிகழ்வுகள் (5) நிர்மலா சீதாராமன் (1) நினைவேந்தல் (10) நீட் (5) நூல்கள் (11) நூற்றாண்டு (1) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (3) பதிவர் உதவிக்குறிப்புகள் (10) பதிவுலகம் (24) பராசக்தி (2) பா.ம.க (2) பா.ஜ.க (31) பாக்யராஜ் (1) பார்ப்பனியம் (14) பாரதிராஜா (1) பாலஸ்தீனம் (2) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (10) பீட்டா (1) புதிய வேளாண் சட்டம் (1) புதினம் (1) புறநானூறு (1) புனைவுகள் (12) பெண்ணியம் (7) பெரியார் (3) பேரறிவாளன் (2) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (6) பொதுவுடைமை (2) பொதுவுடைமைக் கட்சி (2) பொருளாதாரம் (2) பொழிவு (2) போட்டி (1) போர் (3) போராட்டம் (10) ம.ந.கூ (2) மகான் (1) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (11) மடோன் அஷ்வின் (1) மணிவண்ணன் (1) மதிப்புரை (6) மதுவிலக்கு (2) மருத்துவம் (7) மன்சூரா பீவி (1) மாநாடு (1) மாநாடுகள் (1) மாய இயல்பியம் (2) மாவீரர் நாள் (3) மாற்றுத்திறனாளிகள் (3) மிஷ்கின் (1) மீம்ஸ் (7) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (3) மேனகா காந்தி (1) மொழியரசியல் (4) மொழியறிவியல் (3) மோடி (11) யுவர் கோட் (1) யோகிபாபு (1) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) ராஜீவ் படுகொலை (1) வரலாறு (25) வாழ்க்கைமுறை (21) வாழ்த்து (7) வானதி சீனிவாசன் (1) விக்ரம் (1) விடுதலை (6) விடுதலைப்புலிகள் (13) விருது (1) விஜய் (1) விஜய் சேதுபதி (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (7) வை.கோ (6) வைரமுத்து (2) ழகரம் (1) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டாலின் (1) ஸ்டெர்லைட் (2) ஹமாஸ் (2) ஹீலர் பாஸ்கர் (1) Bhagavath Gita (1) BJP (1) Casteism (1) Cauvery (1) Dalit (1) Genocide (3) Hindu (1) Karnataka (1) Magical Realism (1) Manisha (1) Modi (1) Notion Press (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (2) Religion (1) Scheduled Castes (1) Sexual Harassment (1) Tamilnadu (1) Tamils (1) Tanglish (1) Unicode (1) Unicode Consortium (1) UP (1) Women (1) Yogi Adityanath (1)

முகரும் வலைப்பூக்கள்