.

செவ்வாய், ஆகஸ்ட் 26, 2014

பார்ப்பனர்களின் பாட்டன் சொத்துக்களா கோயில்களும் இறையியலும்?!

Koozh and Karuvaadu Sauce
ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அம்மனுக்குக் கூழும் கருவாடும் படைத்து வழிபடும் தமிழர்கள் கிறுக்கர்களா?

பொதுவாக, என் சொந்த வாழ்க்கைச் சோகங்களைப் பொதுப்படையாகப் பகிர்வது எனக்குப் பிடிக்காது. அப்படி ஏதும் எழுதக்கூடாது எனும் உறுதியோடுதான் இந்த வலைப்பூவையே தொடங்கினேன். ஆனால், என்னையும் இப்படி ஒரு பதிவு எழுத வைத்து விட்டது அண்மையில் நேர்ந்த ஒரு நிகழ்வு!

என் அம்மாவுக்குக் கடவுள் நம்பிக்கை உண்டு. ஆனால், அன்றாடம் கோவிலுக்குச் செல்லும் வழக்கமெல்லாம் கிடையாது; எப்பொழுதாவது ஒருமுறைதான். மற்றபடி, வீட்டிலேயே வழிபாடு நடத்துவதோடு சரி.

வெகு நாட்களுக்குப் பிறகு, கடந்த 10.08.2014 - ஞாயிறன்று உள்ளூர் குணாளம்மன் கோயிலில் கூழ் வார்க்கிறார்கள் என்று கேள்விப்பட்டு, “இதுவரை நான் கூழ் ஊற்றும்பொழுது ஒருமுறை கூடக் கோயிலுக்குப் போனதில்லை. இன்று போகப் போகிறேன்” என்று ஆவலாகக் கூறிக் கிளம்பினார். திரும்பி வந்தவர் கண்களில் நான் கண்ணீரைத்தான் பார்க்க முடிந்தது.


கோயிலுக்கு வெளியே இறையன்பர்கள் கூழ் வார்த்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். அம்மா அதை வாங்கிக் கொண்டு கோயிலுக்குள் நுழைய முற்படும்பொழுது, கோயிலின் பார்ப்பனப் பூசாரி அவரை உள்ளே விட மறுத்திருக்கிறார். கூழுடன் கருவாட்டுக் குழம்பும் தருவார்கள் இல்லையா? அத்தோடு உள்ளே நுழையக் கூடாதாம். “நான் குழம்பு ஏதும் வாங்கவில்லை. வெறும் கூழ் மட்டும்தான் வாங்கியிருக்கிறேன்” என்று கூறியும் அந்த ஆள் உள்ளே விடவில்லை. அப்பொழுதுதான் அம்மா கவனித்திருக்கிறார்; கூழ் வாங்கிய பின் யாருமே கோயிலுக்குள் நுழைவதில்லையாம். முதலில், அம்மனைத் திருக்கண்டு (தரிசித்து) விட்டுப் பிறகு கூழ் வாங்கிக் கொண்டு நேராக வீட்டுக்குத்தான் செல்கிறார்களாம். இதுதான் அங்கு வழக்கமாம். இதுவரை கூழ் வார்க்கும்பொழுது கோயிலுக்குச் சென்றதில்லை என்பதால் அம்மாவுக்கு இது தெரியவில்லை.

எனவே, அம்மா தன் கூழ் அடங்கிய பையைக் கோயில் வாசலில் இருந்த பூக்காரச் சிறுவனிடம் தந்துவிட்டு, “என்ன, இப்படிச் செய்கிறாரே அந்த ஐயர்?” என்று கேட்டதற்கு, “அட, ஆமாம் ஆண்ட்டி! அவர் எப்பொழுதுமே அப்படித்தான்” என்று பூக்காரச் சிறுவனும் அம்மாவின் கணிப்பை உறுதிப்படுத்தியிருக்கிறான். ‘இதென்ன கொடுமையாக இருக்கிறதே!’ என்று எண்ணியபடி, மீண்டும் கோயிலுக்குள் சென்று, அம்மனைத் திருக்கண்டுவிட்டு, பூவைக் கொடுத்து அம்மனுக்குச் சாற்றும்படி கேட்டதற்கு, பூவைக் கையில் வாங்கவே மறுத்து விட்டாராம் அந்த ஐயர்! கருவாட்டுக் குழம்போடு படைக்கப்பட்ட கூழைத் தொட்ட கையால் வாங்கிய பூ இல்லையா? அதனால் அதைச் சாற்ற மாட்டாராம்!

மீண்டும் மீண்டும் அம்மா வலியுறுத்தவே, “ஏய்! வாங்கிப் போடுடா அதை” என்று முகத்திலடித்தாற் போல் சொல்லியிருக்கிறான் அந்தப் பூசாரி. திகைத்துப் போன அம்மா, மனம் கசந்து, பூவை வாங்கிக் கொள்ள வந்த உதவிப் பூசாரியிடம் அதைக் கொடுக்காமல், அவர் கொடுத்த குங்குமத்தையும் மறுதலித்து, வெளியே இருந்த நாகாத்தம்மனுக்குப் பூவைச் சாற்றிவிட்டு வருத்தத்துடன் திரும்பியவர், வீட்டில் இருந்த எங்களிடம் சொல்லிக் கண்ணீர் விட்டார்.

தெரியாமல்தான் கேட்கிறேன், கோயில் என்ன அந்தப் பூசாரியின் பாட்டன் சொத்தா? ஒரு கடவுளுக்குப் படைத்ததை அந்தக் கடவுளின் கோயிலுக்குள்ளேயே கொண்டு வரக்கூடாது என்று சொல்லும் இப்படியொரு கொடுமை உலகின் எந்த மூலையிலாவது, வேறு எந்த இனத்துக்காவது நடக்க முடியுமா? கூழ் மட்டும்தானே வாங்கினேன் என்று என் அம்மா கேட்டது இருக்கட்டும்; அதில் கருவாட்டுக் குழம்பே இருந்திருந்தாலும் அதைக் கோயிலுக்குள் கொண்டு வரக்கூடாது என்று அந்தப் பூசாரி எப்படிச் சொல்லலாம்? சைவமோ இறைச்சியோ; ஆக மொத்தம் அதே கோயிலுக்குள் இருக்கும் அம்மனுக்குப் படைக்கப்பட்டதுதானே அது? அதை அந்தக் கோயிலுக்குள்ளேயே கொண்டு வர அந்தப் பூசாரி எப்படித் தடுக்கலாம்? எந்தப் பொருளாக இருந்தாலும் கடவுளுக்குப் படைக்கப்பட்ட பிறகு அது படையல்தானே (பிரசாதம்)? அதைத் தடுத்திருக்கிறானென்றால் என்ன பொருள்? ‘கடவுளைத் தொட்டு வழிபாடு செய்யும் உரிமையுள்ள எங்களைத் தவிர மற்றவர்கள் படையலைக் கடவுள் ஏற்பதில்லை. ஆகையால், அது படையல் பொருள் இல்லை; வெறும் இறைச்சித் தின்பண்டம்தான்’ என்றுதானே பொருளாகிறது? அப்படியானால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஆடி மாதத்தில் அம்மனுக்குக் கூழ் படைத்துக் கொண்டாடிக் கொண்டிருக்கும் தமிழர்கள் கிறுக்குப் பயல்களா?

கோயிலுக்குள் இன்னின்ன பொருட்களைத்தான் கொண்டு போக வேண்டும், இன்னின்ன பொருட்கள் கூடாது எனப் பட்டாங்கு (சாத்திரம்) ஏதும் இருக்கிறதா? அப்படியே இருந்தாலும் அம்மன், சிவன், முருகன், திருமால் போன்ற தமிழ்க் கடவுள்களின் கோயில்களுக்கு அஃது எப்படிப் பொருந்தும்?

பார்ப்பனர்கள், ஐயப்பன் கோயிலுக்குள் சட்டையைக் கழற்றி விட்டுத்தான் வர வேண்டும் என்கிறீர்களா? சரி, கேட்கிறோம்!

ஆஞ்சனேயர் கோயிலுக்கு இப்படித்தான் வர வேண்டும் என்கிறீர்களா? ஆகட்டும்.

பிள்ளையார் கோயிலுக்குள் இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும் எனச் சொல்கிறீர்களா? செய்கிறோம்.

காரணம், இவையெல்லாம்* நீங்கள் கண்டுபிடித்த கடவுள்கள். யானைத் தலை, குதிரைத் தலை, பன்றித் தலை என்று நீங்களாக உருவாக்கினீர்களே உங்கள் கற்பனையில் சில கடவுள்களை? அந்தக் கோயில்களோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் நீங்கள் உங்கள் பட்டாங்குப் படாடோபங்களை! அதை விட்டு விட்டு அம்மன் கோயிலுக்குள் என்னென்ன கொண்டு போகலாம், கூடாது எனவெல்லாம் நீங்கள் சொல்லக்கூடாது! காரணம், அம்மன் முதற்கொண்டு மேற்படி பட்டியலில் நான் கூறிய கடவுள்களெல்லாம் ஏற்கெனவே ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இங்கே வழிபடப்பட்டு வருபவை. இந்தக் கடவுள்களுக்கு என்ன படைக்க வேண்டும், இந்தக் கோயில்களுக்குள் என்னென்ன கொண்டு செல்ல வேண்டும், இந்தக் கடவுள்களை எப்படி வழிபட வேண்டும் என்பது வரைக்கும் எங்களுக்குத்தான் தெரியும். அவற்றில் தலையிட உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்!


“என்ன இருந்தாலும், கோயிலுக்குள் புலாலைக் (Non-veg) கொண்டு
Food of Tamil God someone!
ஏதோ ஒரு தமிழ்க் கடவுளின் படையல்!
செல்வது என்பது...” எனச் சிலர் இழுக்கலாம். அப்படிப்பட்டவர்கள் முதலில் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்! புலால் சாப்பிடுவது சரியா தவறா, எத்தனையோ காய் கனிகள் இருக்கும்பொழுது தேவையில்லாமல் ஓர் உயிரைக் கொன்று தின்னலாமா என்கிற கோணங்களில் இதைப் பார்க்க முடியாது. அப்படிப் பார்த்தால் நானே சைவ உணவாளிதான். தமிழர் தலைநூலான திருக்குறளே புலால் உணவைக் கைவிடத்தான் வலியுறுத்துகிறது. துடிக்கத் துடிக்க, குருதி சிந்தச் சிந்த ஓர் உயிரைக் கொன்று உண்பது தவறு என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அஃது உணவுமுறை தொடர்பானது; இது சடங்கு, கடவுள் தொடர்பானது. அம்மன், கருப்பண்ணசாமி போன்ற தமிழ்க் கடவுள்களுக்கு இறைச்சி மட்டுமின்றி சாராயம், சுருட்டு வரை மனிதர் உட்கொள்ளும் அனைத்தையுமே படைப்பது வழக்கம்தான்.

உலகில் எத்தனையோ சமயங்கள் (Religions) இருக்கின்றன. அவற்றில் எத்தனையோ சடங்குகள் இருக்கின்றன. ஒரு சமயத்தில் போற்றுதலுக்கான செயலாகக் கருதப்படும் சடங்கு இன்னொரு சமயத்தில் தூற்றுதலாகக் கருதப்படலாம். ஒரு நாட்டில் வணக்கம் தெரிவிக்கும் முறையாகக் கடைப்பிடிக்கப்படுவது மற்றொரு நாட்டில் எதிர்ப்பைக் காட்டும் முறையாக இருக்கலாம். அது போலத்தான் இதுவும்; நாம் சாப்பிடும் எதுவாக இருந்தாலும் கடவுளுக்குப் படைப்பது தமிழர் வழிபாட்டு முறை; இறைக் கொள்கை. இதை இந்துச் சமயத்தின் கண்ணோட்டத்தில் பார்த்துத் தவறு எனச் சொல்வது முட்டாள்தனத்தின் உச்சம்!

 
எதுதான் சைவம்?

கருவாட்டுக் குழம்பு, இறைச்சி என்பதால் அதனோடு வைக்கப்பட்ட கூழ் கூடக் கோயிலுக்குள் வரக்கூடாது, அந்தக் கூழைத் தொட்ட கையால் வாங்கிய பூவைக் கூட அம்மனுக்குச் சாற்ற மாட்டேன் என்றாரே அந்தப் பார்ப்பனர், தெரியாமல்தான் கேட்கிறேன், பார்ப்பனர்கள் கோயிலுக்குள் எந்த இறைச்சிப் பொருளையும் கொண்டு செல்வதில்லையா? பார்ப்பனர்களின் படையலில் இறைச்சி ஏதும் இடம் பெறுவதில்லையா?

முதலில், சைவம் என்பது எது? புலால் (Non-veg) என்பது எது? இதற்கான வரையறை என்ன? எனக்குத் தெரிந்த வரை இதற்குத் தெளிவான வரையறை ஏதும் கிடையாது. நான் பெரிதும் மதிக்கும் சில அறிஞர்கள், “ஓர் உயிரை முழுமையாகக் கொன்று சமைப்பதுதான் புலால். எனவே, மீன்கறி, ஆட்டுக்கறி, கோழிக்கறி போன்றவை புலால். செடி கொடிகளுக்கும் உயிர் உண்டு என்றாலும் நாம் அவற்றை முழுமையாகக் கொன்று உண்பதில்லை. அவற்றிலிருந்து இலை, காய், கனி போன்றவற்றை மட்டும் பறித்து உண்கிறோம்; அவ்வளவுதான். இப்படிப் பறிப்பதால் அவற்றுக்குச் சிறு துன்பம் ஏற்படக்கூடுமே தவிர, அவை உயிரிழப்பதில்லை. எனவே, காய், கனி போன்றவற்றை வைத்துச் சமைக்கப்படும் உணவுகள் சைவம்” என்கிறார்கள். பொதுமக்களின் கருத்தும் இப்படித்தான் இருக்கிறது; செடி, மரம் போன்றவற்றிலிருந்து பெறப்படுபவற்றைக் கொண்டு சமைக்கப்படும் உணவுகள் சைவம்; முழுமையாக ஓர் உயிரைக் கொன்று சமைப்பது புலால் என்பதாக.

அப்படிப் பார்த்தால், வெல்லம் எப்படி ஐயா கிடைக்கிறது? முழுக் கரும்பை வேரோடு பிடுங்கி – அதாவது, கரும்பு எனும் ஓர் உயிரைக் கொன்று – சாறெடுத்து, அதிலிருந்து பெறப்படுவதுதானே வெல்லம்? அதில்தானே சர்க்கரைப் பொங்கல் செய்து ‘தளிகை’ என்றும், ‘அக்காரவடிசில்’ என்றும் கண்ணனுக்கும் பெருமாளுக்கும் படைக்கிறீர்கள்?

Turmeric and Kumkum
இஃது ஓர் எடுத்துக்காட்டுத்தான். இந்த வகையில் பார்த்தால் கீரைகள், கிழங்கு வகைகள், வெங்காயம், பூண்டு, இஞ்சி எனப் பல பொருட்கள் புலால்தான். இவற்றைத்தான் பார்ப்பனர்கள் உட்பட நாம் அனைவரும் சாப்பிடுகிறோம், கடவுளுக்குப் படைக்கிற உணவுப் பொருட்களிலும் பயன்படுத்துகிறோம். எல்லாவற்றுக்கும் மேலாக, புனிதப் பொருட்களில் தலையாயதாகக் கருதப்படும் மஞ்சள் கூட இந்த வகையில் பார்த்தால் புலால்தான்; அதிலிருந்து செய்யப்படும் குங்குமம் கூடப் புலால்தான். மரத்தை வேரோடு வெட்டி வீழ்த்தி, இரண்டாகப் பிளந்து, உள்ளிருக்கும் வைரத்திலிருந்து அரைத்தெக்கப்படும் சந்தனமும் புலால்தான். இவற்றையெல்லாம்தான் ஈடு இணையற்ற புனிதப் பொருட்களாகக் கடவுளின் திருவடி முதல் திருமுடி வரை சாற்றி, முழுக்காட்டி (அபிசேகம் செய்து) இறைவனின் அருட்பொருளாக (பிரசாதம்) நாம் தலைவணங்கிப் பெற்று வருகிறோம்!

சாவை விடக் கொடியது சித்திரவதை. அதனால்தான், தூக்குத் தண்டனையை ஒழிக்க மறுக்கும் அரசுகள் கூட எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பே சித்திரவதைத் தண்டனைகளை ஒழித்து விட்டன. அப்படிப் பார்க்கும்பொழுது, மீன்கறி, ஆட்டுக்கறி போன்றவற்றை விடப் பால்தான் மிக மிக மிக மோசமான புலால் உணவுப்பொருள். பிடிபட்ட சிறிது நேரத்திலேயே உயிரை விட்டு விடுகிறது மீன். கோழி, ஆடு போன்றவை கூட வெட்டுப்பட்ட சில நொடிகளில் போய்ச் சேர்ந்து விடுகின்றன. ஆனால், இந்த மாடுகள் படும் பாடு இருக்கிறதே!... நினைத்தாலே கண்ணீர் வரும்.

பால் என்பது மாடு தன் கன்றுக்காகச் சுரப்பது. அதை நாம் பிடுங்கிக் குடிப்பது முதல் கொடுமை! “கன்றுக்கு இரண்டு காம்புகளை விட்டுவிட்டு, மிச்ச இரண்டு காம்புகளில்தான் கறக்கிறோம்” என்று இதற்கு ஒரு படத்தில் விளக்கமும் அளிப்பார் நடிகர் இராமராசன். ஒருவேளை பழங்காலத்தில் அப்படி ஒரு வழக்கம் இருந்திருக்கலாம். இன்றைக்கு அப்படியா? எல்லாப் பாலையும் ஒட்டக் கறந்துவிட்டுக் கன்றைப் பட்டினி போட்டே கொல்கிறார்கள். அப்படி அது செத்ததும், கன்றைப் பார்க்காமல் மாடு பால் தராது என்பதால், கன்றின் தோலை உரித்து, அதனுள் வைக்கோல் திணித்து, அந்தப் பொம்மையைக் காட்டிப் பாலைக் கறக்கிறார்கள். ஆனால் அப்படிச் செய்தாலும், அது தன் கன்று இல்லை; வெறும் பொம்மைதான் என மாட்டுக்குத் தெரியுமாம். அந்த வைக்கோல் கன்றைப் பார்த்துக் கண்ணீர் விட்டபடிதான் அது பாலையே தருமாம். இவை தவிர, பாலுக்காக ஊசி போடுவது, பால் கறக்காவிட்டால் கொதிக்கக் கொதிக்க வெந்நீரை அதன் மேல் ஊற்றுவது எனப் பாலுக்காக எப்பேர்ப்பட்ட சித்திரவதைகளையெல்லாம் மாடுகள் படுகின்றன தெரியுமா? எல்லாவற்றுக்கும் மேலாக, இக்காலத்தில் எவனும் மாட்டுக்கு வயிறார உணவளிப்பதும் கிடையாது. மேய்ச்சல் நிலங்களும் அருகி வருவதால், முதலில் சுவரொட்டிகளைத் (posters) தின்ற மாடுகள் இன்று அதுவும் கிடைக்காமல் நெகிழி (Plastic), தகரம் எனக் கண்ட குப்பைகளையும் தின்று வயிறு வீங்கிச் சாகின்றன. போதாததற்கு, ஒவ்வொரு வீடாக நின்று மாடுகள் கழுநீருக்காக “அம்மா!... அம்மா!...” என்று இறைஞ்சும் அவலத்தை சென்னைப் புறநகர்ப் பகுதிகளில் பார்க்கலாம்.


Sacred Cow?

மாட்டை ‘கோமாதா’ என்றும், அதன் உடம்பில் முப்பத்து முக்கோடி தேவர்களும், முனிவர்களும், திருமால், இலக்குமி என எல்லாக் கடவுள்களும் வரிசை கட்டி வாழ்வதாகவும் கூறும் பார்ப்பனர்கள், இவ்வளவு கொடுமைகளும் செய்து பெறப்படும் பாலைத்தான் நீங்களும் பருகி, கடவுள் தலையிலும் ஊற்றுகிறீர்கள்! இதுதான் சைவ வழிபாடா? பால் சைவமா?
 

கோயில்களும் பார்ப்பனர்களும்

கோயில், வழிபாடு, சடங்கு எனக் கடவுள் தொடர்பான எதுவாக இருந்தாலும் பார்ப்பனர்கள் வைத்ததுதான் சட்டம் என ஆக்கி வைத்திருக்கும் நம் தமிழ் மக்களை முதலில் செவிட்டிலேயே வைக்க வேண்டும்! மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் கைபர் கணவாய் வழியாக இங்கே பிழைக்க வந்தவர்களாக அறியப்படுபவர்கள் பார்ப்பனர்கள். ஆனால், தமிழர் வரலாறு பத்தாயிரம் ஆண்டுகளுக்கும் தொன்மையானது. (பார்க்க: தமிழர்கள் இவ்வளவு பழமையானவர்களா? – மலைக்க வைக்கும் ஆய்வு முடிவுகள்!) அவர்கள் வருவதற்கு முன் நாம் இறை வழிபாடு செய்ததில்லை? அவர்கள் வருகைக்கு முன் இங்கே கடவுள்கள் இருந்ததில்லை? அப்புறம் ஏன் எப்பொழுது பார்த்தாலும் இவ்விதயங்களில் அவர்கள் சொல்வதையே இறுதித் தீர்ப்பாகக் கருதுகிறீர்கள்? கொஞ்சமாவது அறிவு வேண்டா?

இப்படிச் சொன்னால், “நாங்கள் ஒன்றும் அப்படி நாடோடிகளாகப் பிழைக்க வந்தவர்கள் அல்லர். அது நம்மைப் பிரித்தாள்வதற்காக வெள்ளைக்காரன் கட்டிய கதை” எனச் சிலர் கூறலாம். சரி, அந்தக் கதையை விடுவோம். வரலாற்றை எடுத்துக் கொள்வோம்!

காலங்காலமாகவே தமிழ்நாட்டுக் கோயில்களில் தமிழர்கள்தாம் பூசாரிகளாக இருந்ததாகவும், 8ஆம் நூற்றாண்டில்தான் முதன் முதலாகப் பார்ப்பனர்கள் தமிழ்நாட்டுக் கோயில்களுக்குள் நுழைந்து வழிபாடுகளைச் செய்யத் தொடங்கியதாகவும் வரலாறு கூறுகிறது. தஞ்சைக் கல்வெட்டுக்கள் இதற்குச் சான்றுரைக்கின்றன. (பார்க்க: பார்ப்பனர்கள் அர்ச்சகர்களான வரலாறு).

கோயிலை எப்படிக் கட்டுவது என்பது பற்றிய நூல்களே தமிழிலிருந்துதான் வடமொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டதாக ‘விசய் தொலைக்காட்சி’யின் உலகப்புகழ் நிகழ்ச்சியான ‘நீயா நானா’வில் வெளிப்படையாகப் போட்டுடைத்தார் 1400 கோயில்களுக்குக் குடமுழுக்குச் (கும்பாபிசேகம்) செய்வித்திருப்பவரும், அறநிலையத்துறை மூலமாக ஓதுவார்களுக்குப் பயிற்சி அளித்தவருமான சத்தியவேல் முருகனார் அவர்கள்.கருவறைக்குள் நுழைந்து வழிபாடு செய்ய அனைவருக்கும் ஆகம விதிப்படியே உரிமை உள்ளது என்றும், இன்னும் பற்பல அரிய வரலாற்று உண்மைகளையும் வெளிப்படுத்திய குறிப்பிட்ட அந்த 'நீயா நானா' நிகழ்ச்சியின் விழியம் இதோ!

உண்மைகள் இப்படியிருக்க, எங்கள் எள்ளுப்பாட்டனும் (தாத்தாவுக்குத் தாத்தா) கொள்ளுப்பாட்டனும் (தாத்தாவுக்கு அப்பா) திரைகடலோடித் திரவியம் தேடித் தங்கள் வியர்வையால் கடலை உப்பாக்கிக் கொண்டு வந்த செல்வத்தில் எங்கள் அப்பன், பாட்டன் கட்டிய கோயில்களுக்குள் நேற்று வந்து நீங்கள் புகுந்து கொண்டு இன்று எங்களையே உள்ளே விட மறுப்பதா? என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்?

இறைச்சியையும் அதை உண்பவர்களையும் எப்பொழுதுமே கீழ்ப் பார்வை பார்ப்பவர்களே! நீங்கள் என்ன, பண்பாட்டளவிலேயே (culturally) புலாலைப் புறக்கணித்தவர்களா? தொடக்கம் முதலே மரக்கறியாளர்களா நீங்கள்? இல்லை!

மறைக்காலம் (வேதகாலம்) முதலே பார்ப்பனர்களும் இறைச்சி – குறிப்பாக மாட்டிறைச்சி - உண்ணும் பழக்கம் உடையவர்கள்தாம் என்பதற்கு மகாபாரதம் முதலான பல நூல்களில் சான்றுகள் உள்ளன. உண்பற்காக மட்டுமின்றி, விருந்தாளியை வரவேற்கவும், வேள்விகளில் (யாகம்) பலியிடவும் கூட மாடுகளையும் மற்றும் பல வகைதொகையான உயிரினங்களையும் கொல்லும் பழக்கத்தைப் பார்ப்பனர்கள் கடைப்பிடித்ததற்கு ஏராளமான சான்றுகள் பண்டை நூல்களில் உண்டு. இவற்றையெல்லாம் திரட்டி ‘புனிதப் பசு என்னும் கட்டுக்கதை’ எனும் பெயரில் நூலே எழுதியிருக்கிறார் புகழ்பெற்ற வரலாற்று ஆய்வாளர் துவிஜேந்திர நாராயண ஜா. (பார்க்க: மாட்டுக்கறி சாப்பிடுவது இந்திய வழக்கம் - பிரண்ட்லைன்). பல்வேறு வகையான வேள்விகள் பற்றிப் பேச்சு வரும்பொழுது எந்தெந்த வேள்விகளில் என்னென்ன உயிரினங்களைப் பலியிட வேண்டும் என்று இன்றும் இந்து சமயப் பெருமக்கள் விரிவாகவே எடுத்துரைக்கின்றனர். (அசுவமேதம், வாஜபேயம் எனக் குறிப்பிட்ட வேள்விகளின் பெயர்களை கூகுளில் இட்டுத் தேடிப் பாருங்கள்!)

ஆக, நீங்கள் கொன்று நெருப்பில் போட்டால் நேராகக் கடவுள் காலடியில் விழுவது, நாங்கள் கொன்று படைத்தால் மட்டும் கோயிலுக்குள் எடுத்து வரக்கூடத் தகுதியற்ற தசைப் பிண்டமாக மாறி விடுமா? சாதித் திமிர்தானே இது?
 

தொன்மக் கதைகள் (புராணங்கள்) கூறுவது என்ன?

ஆய்வாளர்கள் எழுதிய வரலாற்றை விடுங்கள்! பார்ப்பனர்கள் முதற்கொண்டு இறையன்பர்கள் அனைவரும் ஒருபொழுதும் ஐயமின்றி ஏற்றுக் கொள்ளும் தொன்மக் கதைகளின் (புராணம்) கண்ணோட்டத்தில் இதை அணுகுவோம்!


உள்ளன்போடு எதைப் படைத்தாலும், எப்படி வழிபட்டாலும் கடவுள் ஏற்றுக் கொள்ளும் என்பதை உணர்த்துவதுதானே கண்ணப்ப நாயனார் கதை? இல்லையென்றால், காரைக்கால் அம்மையாருக்குக் காட்சியளித்தபொழுதோ, இராசசேகர பாண்டியனுக்காகக் கால் மாற்றி ஆடியபொழுதோ, சம்பந்தருக்கு உமையவள் பாலூட்டியபொழுதோ, சுந்தரருக்காகத் தூது போனபொழுதோ அந்தந்த நாயன்மார்கள் மூலமாக மட்டுமே அந்தத் திருவிளையாடல்களைப் பற்றி வெளியுலகுக்குத் அறிவிக்க வைத்த ஈசன் கண்ணப்பரிடம் நிகழ்த்திய திருவிளையாடலை மட்டும் கோயில் பட்டர் பார்க்கும்படி செய்தது ஏன்? நாள்தோறும் இறைவன் முன் பன்றிக்கறி இருப்பதைக் கண்டு அருவெறுப்படைந்து வந்த அந்தப் பட்டருக்கு, இறையன்பர்கள் உண்மையான அன்போடு எதைப் படைத்தாலும் தனக்கு அஃது உகந்ததுதான் என்கிற உண்மையை உணர்த்துவதற்காகத்தானே? (கண்ணப்ப நாயனார் கதை – தெரியாதவர்கள் படிக்க).

Brahmin priest watching and realize the devotion of Kannappa as the order of Lord Siva! - A sculpture in Mayilai Kapaaleesar temple
சிவபெருமான் ஆணைக்கு இணங்க சிவாச்சாரியார், கண்ணப்பரின் இறையன்பை மறைந்திருந்து கண்டுணரும் காட்சி - மயிலை கபாலீசர் கோயிலில் சிற்பமாக!

இந்துச் சமயத்தின் இணையற்ற பேராசானாக நீங்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் ஆதி சங்கரரைக் கடவுள் சண்டாளர் ஒருவரின் காலில் விழுந்து வணங்க வைத்தது ஏன்? நான்மறைகளும் அனைத்துப் பட்டாங்குகளும் படித்தும் ‘அனைவரும் சமம்’ என்கிற அடிப்படை நீதியை அவர் உணராததால்தானே? (பார்க்க: நாய் என்று திட்டினால் சந்தோஷப்படுங்கள்!)

இப்படிக் கடவுளே வந்து எத்தனை முறை சொன்னாலும் பார்ப்பனர்களே இன்னும் நீங்கள் திருந்தாதது ஏன்? எவ்வளவுதான் வறுமையும் நோயும் தாண்டவமாடினாலும், ஒவ்வோர் ஆண்டும் கடன் வாங்கியாவது கடவுளுக்குத் தவறாமல் அந்தக் கூழையும் கருவாட்டுக் குழம்பையும் வைத்து வழிபடும் நாங்கள் கோயிலுக்குள் வரத் தகுதியற்றவர்களா, அல்லது இப்படி இத்தனை முறை கடவுள் நேரில் வந்து கூறியும் சாதி, உணவுமுறை, தூய்மை எனப் பல வகைகளிலும் ஏற்றத்தாழ்வுகளைக் கைவிட மறுக்கும் நீங்கள் கோயிலுக்குள் நுழைய அருகதையற்றவர்களா? சிந்தியுங்கள் பார்ப்பனர்களே!

முதலில் தமிழ்நாடு அரசு இவை பற்றியெல்லாம் சிந்திக்க வேண்டும்!

வட இந்தியாவில் மக்கள் நேரடியாகவே கருவறைக்குள் நுழைந்து கடவுளைத் தொட்டு, முழுக்காட்டி, படையலிட்டு, பூச்சாற்றி வழிபடுகிறார்கள். ஆனால், தென்னாட்டில் இன்றும் பொதுமக்கள் கோயில் நடையில்தான் நிறுத்தப்படுகிறார்கள். அப்படியானால், வட இந்தியாவில் இருப்பவர்களெல்லாரும் உயர்ந்தவர்கள், நாமெல்லாரும் இழிபிறப்புக்களா?

தமிழ்க் கடவுள்கள் எல்லாமே ஒரு காலத்தில் நடுகற்களாக வெட்டவெளியில் வழிபடப்பட்டவைதாமே? இன்றும் பல ஊர்களில் அந்தந்தக் கடவுளைக் குலக்கடவுளாகக் கொண்ட குடும்பத்தினரோ, சமூகத்தினரோ, ஊர் மக்களோ வந்து தங்கள் கடவுளைத் தங்கள் கையாலேயே தொட்டுக் கும்பிட்டு, படையலிட்டு, பலியிட்டு, ஆடிப் பாடிப் போகிற வழக்கம் உண்டுதானே? மொழுமொழு நடுகல் மூக்கும் விழியும் பெற்றுச் சிலையாகி விட்டால், வெறும் பலிக்கல் தாமரை பொறித்த பலிப்பீடமாகி விட்டால், திறந்தவெளித் திடல் கூட கோபுரமாகி விட்டால் அந்த மக்களுக்கே அந்தக் கோயிலில் நுழையவோ, அந்தக் கடவுளைத் தொடவோ தகுதியில்லாமல் போய்விடுமா என்பதைத் தமிழ்நாட்டு முதல்வர் அவர்கள் சிந்திக்க முன் வர வேண்டும்!

எனவே, எல்லோரும் அர்ச்சகராகலாம் என்பதை விடுத்து, யார் வேண்டுமானாலும் கருவறைக்குள் நுழைந்து, கடவுளைத் தொட்டு வழிபடலாம் எனத் தமிழ்நாடு அரசு சட்டம் இயற்ற வேண்டும்! அப்பொழுதுதான் 1200 ஆண்டுகளாகத் தலைவிரித்தாடும் இந்த இறைத்தரகர்களின் கொட்டம் அடங்கும்!


பி.கு: பார்ப்பனர்களாகப் பிறந்த அனைவரையுமே இழித்துரைப்பதில்லை இந்தக் கட்டுரையின் நோக்கம். ‘தமிழ்த் தாத்தா’ என அழைக்கப்படுபவரே பார்ப்பனர்தான் என்பதை நான் அறியாதவனில்லை. அகத்தியர் முதல் சுஜாதா வரை தமிழுக்காகவும் தமிழருக்காகவும் பார்ப்பனர்கள் செய்திருக்கும் சேவைகளை நான் மறந்தவனுமில்லை. அவ்வளவு ஏன்? என் நண்பர்கள் பலரே பார்ப்பனர்கள்தாம். எனவே, பார்ப்பனர்களை எவ்வகையிலும் பிரித்துப் பார்க்கவோ, பழித்துப் பேசவோ நான் இதை எழுதவில்லை. அப்படி ஒரு தேவையும் எனக்கில்லை! மாறாக, இத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் தன்னைத் தமிழராக உணராமல், பார்ப்பனர் எனும் சாதியினராகவோ, ஆரியர் எனும் இனத்தவராகவோ உணரவே விரும்புகிற, இனம், சாதி, உணவு, தூய்மை போன்ற பலவற்றின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகளைக் கடைப்பிடிக்கிற பார்ப்பனர்களை மட்டுமே நான் சாடியிருக்கிறேன். சுருங்கச் சொன்னால், இது பார்ப்பனர்களுக்கு எதிரான பதிவு இல்லை; பார்ப்பனியத்துக்கு எதிரான பதிவு மட்டுமே! ஒருவேளை அப்படி இல்லாமல், பார்ப்பனர்களையே தனிப்பட்ட முறையில் தாக்குவது போல் பதிவின் எந்த இடத்திலாவது வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டிருக்குமானால், அஃது என் மொழியாளுமைக் குறைபாடே தவிர, திட்டமிட்ட முயற்சி இல்லை!
❀ ❀ ❀ ❀ ❀

* மாந்தர்கள் தவிர மற்ற அனைத்தும் அஃறிணையே எனும் தொல்காப்பியக் கூற்றுப்படி இப்பதிவில் கடவுள்கள் ஒருமையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

நன்றி:

படங்கள்: ௧.அனல் மேலே பனித்துளி, ௨.பெரியார் பிஞ்சு, ௩.யாழ், ௪.மாலைமலர், ௫.என் எண்ணங்கள் எழுத்துக்களாய் 

விழியம்: ஸ்டார் விசய் தொலைக்காட்சி


தொடர்புடைய இடுகை:
சாதியம் தமிழ்ப் பண்பாடா? - நடந்து வரும் சாதிக் கலவரங்களையொட்டித் தமிழ் மக்களுக்கு ஒரு கேள்வி!


பதிவின் கருத்துக்கள் சரி என உங்களுக்குத் தோன்றினால், இது உண்மையிலேயே பயனுள்ள பதிவு என நீங்கள் கருதினால் கீழ்க்காணும் வாக்குப்பட்டைகள் மூலம் இதை மற்றவர்களுக்கும் பரப்பலாமே!

 பதிவுகளை உடனுக்குடன் பெறக் கீழ்க்காணும் பொத்தானைச் சொடுக்கி
வாட்சாப் தடத்தில் (Whatsapp Channel) இணையுங்கள்!!

Aga Sivappu Thamizh Whatsapp Channel

முகநூல் வழியே கருத்துரைக்க

49 கருத்துகள்:

 1. வணக்கம் தங்கள் இடுகையில் கோபம் அதிகமாக தெரிகறது . தங்கள் தாயை அவமான படுத்தியாக உங்கள் கோபம் நியாமானது தான் எந்த பிரசாதம் வாங்கிய பின் கோயில் உள் செல்ல மாட்டார்கள் .விபூதி குங்குமம் வாங்கிய பின் பிரசாதம் சாப்பிட்டு வெளிய சென்று விடுவார்கள் இது உண்மை இதற்கு இவ்வளவு கோபமான சொற்கள் வேண்டாம் .ஹிந்து பூஜை மூறை படி நீங்கள் ஒரு கோவிலை உருவாக்கினாள் உங்கள் இஷ்டபடி யாரும் பூஜை செயலாம் நன்றி வணக்கம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்கள் குறிப்பிடுகிற 'பிரசாதம்' கடவுளை வழிபட்ட பின் பூசாரியின் கையால் தரப்படுவது. வழிபாடு முடிந்து விட்டதால், அதை வாங்கிக் கொண்டு வெளியே செல்கிறோம்; அது முறை. ஆனால், இந்த நிகழ்வில் என் அம்மா கடவுளை வழிபடவே அனுமதிக்கப்படவில்லை என்பதுதான் இங்கே என் சீற்றத்துக்குக் காரணம். கோயிலுக்குள் அம்மன் கூழுடன் நுழைய அவர் அனுமதிக்கப்படாததும், அந்தக் கூழை வெளியே கொடுத்த பிறகு மட்டுமே அவர் உள்ளே அனுமதிக்கப்பட்டதும், அந்தக் கூழைத் தொட்ட கையால் வாங்கிய பூவை அந்தப் பார்ப்பனர் பெற மறுத்ததும் என அனைத்தும் படிப்படியே விளக்கப்பட்டுள்ளன. அவ்வளவையும் படித்துவிட்டு, ஏதோ முறையாகத்தான் எல்லாம் நடந்திருக்கின்றன என்பது போல் நீங்கள் கருத்திட்டிருப்பது பிரச்சினையைத் திசை திருப்பும் முயற்சி! மேலும், இந்து முறைப்படி நானே ஒரு கோயிலை அமைத்துக் கொண்டால் அதில் என் விருப்பப்படி யார் வேண்டுமானாலும் வழிபாட்டை நிகழ்த்திக் கொள்ளலாம் என்று கூறியிருக்கிறீர்கள். அப்படியானால், ஏற்கெனவே இருக்கும் கோயில்களில், நான் கூறியுள்ளபடி அம்மனுக்குப் படைத்த அசைவப் படையலோடு உள்ளே நுழையக் கூடாது என்கிறீர்கள்; அப்படித்தானே? அப்படிக் கூறுவது தவறு என்பதைத்தான் தொடக்கம் முதல் இறுதி வரை பதிவில் விளக்கியுள்ளேன். ஏற்கெனவே இருக்கும் கோயில்களே தமிழர்கள் கட்டியவைதாம். அவை எல்லாவற்றிலும் நீங்கள் வந்து புகுந்து கொண்டு எங்களை வேறு கோயில் கட்டிக் கொள்ளச் சொல்கிறீர்களா? இதைத்தான், 'கரையான் புற்றெடுக்க, கருநாகம் குடிபுக' என்பார்கள். இப்படியெல்லாம் நீங்கள் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் பேசுவீர்கள், ஆனால் நாங்கள் சினம் கொள்ளக்கூடாது, அப்படித்தானே? அதற்கு வேறு எவனாவது காதில் பூ வைத்துக் கொண்டிருப்பவனாகப் பாருங்கள்! என்னிடத்தில் வேண்டா! உரிமைகள் மறுக்கப்படும்பொழுது சீற்றம் எழத்தான் செய்யும். அடுத்தவர்களை அடக்க முயலுபவர்கள் அதன் பின் விளைவான இந்தக் கருத்துத் தாக்குதல்களையும் எதிர்கொள்ள ஆயத்தமாக இருக்கத்தான் வேண்டும்!

   நீக்கு
  2. உணவு பொருளை தொட்டவுடன் கை கழுவி செல்வதே மரபு. உங்கள் அம்மா என்றில்லாமல் மற்றொரு பார்பனன் இவ்வாறு வந்தாலும் இதே வரவேற்புதான் கிடைக்கும். பல கேரளா கோவில்களில் கோவில் நுழைவிடம் அருகே கை கால் கழுவ தண்ணீர் குழாய்களை கான்கலாம்.
   இங்கு போய் கை கழுவி விட்டு வா என்றால், எங்கே தண்ணீர் என்ற கேள்வி வரும். அடுத்த முறை இதை நீங்கள் பரீட்சித்து பார்க்காமே. (கையில் ஒரு தண்ணீர் பாட்டில் உடன் சென்று ) . உங்கள் கோபமும் தணியும்.

   நீக்கு
  3. முதலில் நீங்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும் ராமா அவர்களே! தமிழர்களுக்குத் தூய்மையாக இருப்பது பற்றி யாரும் கற்பிக்க வேண்டியதில்லை. ஆறு, அருவி, ஊருணி, வாய்க்கால், கிணறு, குளம், குட்டை, கடல் என நீர்நிலைகளுக்கே நானாவிதப் பெயர்கள் சூட்டிய தமிழர்கள் நீருடனே விளையாடி வளர்ந்தவர்கள். நீர் விளையாட்டுப் பற்றிப் பழந்தமிழ் இலக்கியங்கள் பேசுகின்றன. பதினெட்டு இடங்களில் திருநீற்றை அணிந்து கொண்டாலே குளித்ததற்குச் சமம் என்று கூறும் பார்ப்பனர்கள் தமிழர்களுக்குத் தூய்மை பற்றி எடுத்துரைத்துக்க முயல்வது மடமை! உணவைத் தொட்டால் கை கழுவ வேண்டும் என்பது கூடத் தெரியாத அழுக்கர்கள் இல்லை நாங்கள். என் அம்மா உணவைத் தொடவில்லை. பாத்திரத்தில் வாங்கிப் பையில் வைத்துக் கொண்டார், அவ்வளவுதான். ஒருவேளை, உணவுப் பாத்திரத்தைத் தொட்டதற்கே கை கழுவ வேண்டும் என்கிறீர்களா? அப்படியானால் அதற்கும் என் பதில் இதோ!

   நீங்கள் கூறியதைச் சோதித்துப் பார்க்கத் தேவையே எழவில்லை! விடை கிடைத்து விட்டது! திரு.துளசிதரன் அவர்கள் என் இணைய நண்பர். தமிழ் உணர்வாளர். அவரே இந்தப் பதிவுக்கு எதிர்மறையாகக் கருத்திடவே எனக்கே ஐயம் ஏற்பட்டு, பொதுவாகவே எந்தப் பிரசாதமாக இருந்தாலும், பிரசாதம் வாங்கிய பிறகு மக்கள் கோயிலுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவதில்லை என்கிறார்களே, உண்மையா என்று என் அம்மாவிடம் கேட்டேன். (துளசிதரன் அவர்களிடம் நான் எழுப்பிய சர்க்கரைப் பொங்கல் சர்ச்சை பற்றிக் குறிப்பிடாமலேயே). என் அம்மா சற்றும் தாமதியாமல் அளித்த பதில், "ஏன், பெருமாள் கோயிலில் சர்க்கரைப் பொங்கல் வாங்கிய பின் உள்ளே அனுமதிக்கிறார்களே, அது மட்டும் என்னவாம்?" என்பது! இங்கே உள்ளே பெருமாள் கோயிலில், வரிசையாக இறையன்பர்களை நிற்க வைத்து, அவர்கள் கைகளில் பார்ப்பன இறைத் தொண்டர்கள் தொப்புத் தொப்பென்று சர்க்கரைப் பொங்கலைச் சற்றும் மரியாதையின்றி விசிறுவதையும், பலர் அதை வாங்கிய பிறகு உள்ளே நுழைந்தாலும், அர்ச்சகர் அது பற்றி எதுவும் சொல்லாமல் அவர்களுக்குச் சடாரி சார்த்தி, வழிபாடு செய்வித்து அனுப்புவதையும் தான் எத்தனையோ முறை பார்த்திருப்பதாக என் அம்மா கூறுகிறார். நீங்கள் வேண்டுமானால் சோதித்துப் பாருங்களேன் நேரில் வந்து!

   நீக்கு
 2. நிதானமாக படிக்கவேண்டிய விசயங்கள் பிறகு கருத்துரை இடுகிறேன் நண்பரே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆகட்டும் நண்பரே! இது ஒரு முக்கியமான பதிவு! பொறுமையாகப் படித்துவிட்டு உங்கள் செம்மையான கருத்துக்களைப் பதியுங்கள்! உங்களுக்குப் இந்தப் பதிவு பிடித்திருந்தால், இதன் கருத்துக்கள் சரி எனத் தோன்றினால் மேற்கண்ட இணைப்புகள் மூலம் சமூக வலைத்தளங்கள், திரட்டிகள் ஆகியவற்றிலும் பதிவைப் பகிர்ந்து மற்றவர்களையும் சென்றடைய உதவுங்கள்! நன்றி!

   நீக்கு
 3. தமிழகத்தில் கோவில்களில் பார்ப்பனர்களின் அதிகாரமும்,காசு பறிப்பும் சொல்லி மாளாது.
  தங்கள் தாயார் கூழை வெளியே வைத்தபின் அர்ச்சகர், நடந்து கொண்ட முறை மிகத் தவறு.
  எத்தனையோ பேர், வயிறு நிறைய புலாலுண்ட பின் , ஒரு வாழி தண்ணீரைத் தலையில் ஊற்றி விட்டு கோவிலுள் போகிறார்களே!
  அவர்களை இந்தப் பார்ப்பனர் என்ன? செய்கிறார்கள்.
  கருவறையுள் காமக்களியாட்டம் செய்த காஞ்சிபுரம் மச்சேஸ்வரர் கோவில் அர்ச்சகர் தேவநாதனை ஏற்ற , சங்கரராமனைக் கோவிலுக்குள்ளேயே வெட்டிக் கொல்லக் கூலி கொடுத்த சங்கராச்சாரியை ஏற்ற தெய்வம் , இந்தக் கூழை ஏற்காதா?
  கோடிக்கணக்கான பட்டுப்புழுக்களை வென்னீரில் துடிக்கத் துடிக்கக் கொன்று நெய்த பட்டைத் தான் தானும் உடுத்து, தெய்வத்துக்கும் சாத்துகிறானே! இந்தப் பார்ப்பான் .
  இது நம் தவறு , இறைவனை வீட்டில் வணங்கி , கோவில் சென்றால் தட்டில் காசு போடாமல் எல்லோரும் கும்பிட்டு விட்டு, கோவிலுக்கு கொடுக்கும் பணத்தை தான தர்மம் செய்தால் இவர்கள் திருந்த வாய்ப்புண்டு.
  ஊரை ஏமாற்ற அவர்கள் ஒற்றுமையாகச் செயற்படுவது போல், இவர்களைத் திருத்த
  நாம் ஒற்றுமையாவோமா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //கோடிக்கணக்கான பட்டுப்புழுக்களை வென்னீரில் துடிக்கத் துடிக்கக் கொன்று நெய்த பட்டைத் தான் தானும் உடுத்து, தெய்வத்துக்கும் சாத்துகிறானே! இந்தப் பார்ப்பான்// - பல ஆண்டுகளாக நான் சிந்தித்துக் கொண்டிருந்த இந்தக் கோணத்தை இந்தப் பதிவில் குறிப்பிட மறந்து விட்டேன். கருத்துரையில் நீங்கள் குறிப்பிட்டிருக்கிறீர்கள். மிக்க நன்றி யோகன்! தொடர்ந்து படியுங்கள்! உங்கள் செம்மையான கருத்துக்களைப் பதியுங்கள்! மேற்கண்ட இணைப்புகள் மூலம் சமூக வலைத்தளங்கள், திரட்டிகள் ஆகியவற்றிலும் பதிவைப் பகிர்ந்து சரியான கருத்துடையதாக நீங்கள் கருதும் இந்தப் பதிவு மற்றவர்களையும் சென்றடைய உதவுங்கள்! நன்றி!

   நீக்கு
 4. உங்களின் உள்ளூர்க் கோயிலில் அதுவும் பாரம்பரியமாக கருவாட்டையும் கூழையும் அம்மனுக்குப் படைத்த கோயிலுக்கு பார்ப்பனப் பூசாரியை நியமித்த, உங்கள் ஊர்க்காரர்களிடம் இந்தப் பிரச்சனையைப் பற்றி முதலில் பேசினீர்களா?

  பார்ப்பனர்களை உங்களின் ஊர்க்கோயில்களில் பூசாரிகளாக அமர்த்தினாலே கருத்து, நீங்கள் அந்தக் கோயிலை ஆகமவிதிகளுக்குட்படுத்தி, அவர்களிடம் பூசை செய்யும் பொறுப்பைக் கொடுக்கிறீர்கள் என்பது தான். அல்லது வைதீக பார்ப்பனர்களைப் பூசைக்கு அமர்த்தும் போது. அந்தக் கோயிலின் பாரம்பரிய சடங்குகளில் மாற்றங்கள் எதையும் ஏற்படுத்தாமல, அதன் படி ஒழுக சம்மதிக்கிறார்களா என்பதை எழுத்தில் பெற்றுக் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் பலரிடம் சமக்கிருதத்தில் பார்ப்பனர்கள் பூசை செய்தால் தான் சாமிக்கு விளங்கும் அல்லது எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள் அல்லது அவர்களின் கோயிலையும் அவர்களையும் சாதியில் குறைவாக நினைத்துக் கொள்வார்கள் என்ற எண்ணம் உண்டு. அதனால் தான் சில கிராமங்களில் தமிழ்ப்பூசாரிகள் கூட, ஒரு சில சமக்கிருத மந்திரங்களைப் பாடமாக்கி வைத்துக் கொண்டு பூசை செய்வதை நான் அவதானித்தேன். தமிழ்நாட்டில் பார்ப்பனர்கள் தமிழை, தேவாரங்களை, தமிழர்களின் பண்பாடு, பாரம்பரியங்களை மட்டுமல்ல, தமிழர்களையும் நீ, வா, போ, தள்ளு, தள்ளு, என்று மதிக்காமல் திமிராக நடந்து கொள்வதற்கும் காரணம், அவர்களல்ல, தமிழ்நாட்டுத் தமிழர்கள் தான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சீற்றமிகு பதிவுக்கு அதே சீற்றத்துடன் பதிலளித்ததற்கு நன்றி வியாசன் அவர்களே! நீங்கள் கூறுகிறபடி நான் மேற்கொண்டு அப்படி எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. நீங்கள் கூறுகிறபடியெல்லாம் செய்ய வேண்டுமானால் மக்களிடம் இந்தக் கருத்துக்கு ஆதரவு இருக்க வேண்டும். காலம் காலமாகப் பார்ப்பனர்களைக் கடவுள்களின், இறையியலின் அதாரிட்டிகளாகக் கருதும் நம் மக்கள் இப்படி ஒரு பிரச்சினையைக் கிளப்பினால் கண்டிப்பாக ஆதரவளிக்க மாட்டார்கள்! அந்தப் பூசாரியின் பக்கம்தான் அவர்களும் பேசுவார்கள். தமிழ்நாட்டில், தமிழுரிமைக்காகக் குரல் கொடுப்பது அவ்வளவு எளிதில்லை நண்பரே! இப்பொழுதுதான் இணைய உலகிலேயே விழிப்புணர்வைப் பரப்புகிறோம்; இனிமேல்தான் பொதுவெளிக்குச் செல்ல முடியும். இன்னும் கொஞ்ச காலம் போக வேண்டும்!

   நீக்கு
  2. //தமிழ்நாட்டில் பார்ப்பனர்கள் தமிழை, தேவாரங்களை, தமிழர்களின் பண்பாடு, பாரம்பரியங்களை மட்டுமல்ல, தமிழர்களையும் நீ, வா, போ, தள்ளு, தள்ளு, என்று மதிக்காமல் திமிராக நடந்து கொள்வதற்கும் காரணம், அவர்களல்ல, தமிழ்நாட்டுத் தமிழர்கள் தான்// - நூற்றிலொரு வார்த்தை!

   நீக்கு
 5. ஐயா! நல்ல பதிவு! இதில் இரண்டு விடயங்கள் எங்கள் தாழ்மையான கருத்து. கடவுளின் முன் எல்லோரும் சமமே. தெய்வ வழிபாடு மறுக்கப்பட்டால் அது மிகவும் கேவலமான ஒரு இழி செயல். தங்கள் கோபம் தார்மீகக் கோபமே!

  இரண்டாவது, எந்தப் பிரசாதமாக இருந்தாலும், அது சைவமாக இருந்தாலும் சரி, அசைவமாக இருந்தாலும் சரி....பிரசாதத்துடன் எந்தக் கோயிலுக்குள்ளும் செல்வதாகத் தெரியவில்லை, அது பார்ப்பனர்கள் நடத்தும் கோயிலோ, பார்ப்பனர்கள் அல்லாதவர் பூசாரியாக இருக்கும் கோயிலோ எதுவானாலும் மக்கள் பிரசாதத்துடன் உள் நுழைவதில்லை.....அனுபவம்.

  அந்தப் பூசாரியின் செயல் கண்டிக்கப்பட வேண்டியதே. அவர் அதை மிகவும் நயம் பட உரைத்து, வழிபாட்டை அனுமதி செய்திருக்க வேண்டும். தாங்களே ஒரு இடுகையில் சொல்லியிருப்பது போல....மொழியும், வார்த்தைகளும் எவ்வளவு முக்கியம் என்பது. அதுதானே பல பிரச்சினைகளை உருவாக்குகின்றது இந்த சமூகத்தில்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஐயா! உங்களிடமிருந்து இப்படி ஒரு பதிலை நான் எதிர்பார்க்கவில்லை. மேலே ஜெய பாலசங்கர் கூறியிருப்பது போலத்தான் நீங்களும் கூறியிருக்கிறீர்கள். ஐயா! நீங்கள் கூறுகிற பிரசாதம் என்பது, கடவுளை வழிபட்டு முடித்த பின் பெறப்படுவது! ஆகையால் அதை எடுத்துக் கொண்டு நாம் வெளியே செல்வது இயல்பு. வழிபாடுதான் முடிந்து விட்டதே, கோயிலுக்கு நாம் எதற்காக வந்தோமோ அந்த நோக்கம் நிறைவேறி விட்டதே, அதனால்தான் நாம் அத்துடன் வெளியில் வந்து விடுகிறோம். ஆனால், நீங்கள் கூறியுள்ளபடி பார்த்தால், கோயில் பிரசாதத்துடன் கோயிலுக்குள் செல்லக்கூடாது என்பது போல் இருக்கிறது. உண்மையிலேயே அப்படி ஏதேனும் மரபு இருக்கிறதா? எனக்குத் தெரியாது. இருந்தால் சொல்லுங்கள் ஏற்றுக் கொள்கிறேன். அதற்கேற்பப் பதிவில் மாற்றம் செய்யவும் நான் ஆயத்தமாகவே உள்ளேன். பெரும்பாலும், பிரசாதம் என்பது கோயிலுக்குள்ளேதான் தரப்படுகிறது என்பதால், அதைப் பெற்ற பின் வெளியேதான் போக முடியும். அதனால்தான் பிரசாதம் பெற்ற பின் கோயிலுக்குள்ளே யாரும் நுழைவதில்லையே தவிர, பிரசாதம் பெற்ற பிறகு கோயிலுக்குள் நுழையக்கூடாது என்பதற்காக இல்லை என்பது என் கருத்து. ஆடி மாதங்களில் கூழ் வார்ப்பவர்கள் அதைக் கோயிலுக்கு வெளியேதான் வழங்குகிறார்கள். அதாவது, இங்கு பிரசாதம் கோயிலுக்கு வெளியே. ஆகவே, அதைப் பெற்ற பிறகு கோயிலுக்குள் நுழைவதில் என்ன தவறு?

   சரி, உங்கள் வாதப்படியே வருகிறேன். பெருமாள் கோயில்களில் பெரும்பாலும் சர்க்கரைப் பொங்கலைப் பிரசாதமாகத் தருகிறார்கள். இதுவும் கோயிலுக்கு வெளியே வழங்கப்படுவதுதான். நான் கோயிலுக்குப் போகிறேன் என வைத்துக் கொள்ளுங்கள். வழிபாடெல்லாம் முடித்து விட்டு, பூசாரியிடமும் பிரசாதம் பெற்றுக் கொண்டு, வெளியே சர்க்கரைப் பொங்கலும் வாங்கிக் கொண்டு வெளியே வரும்பொழுது என் நண்பன் எதிர்ப்படுகிறான். அவன் அப்பொழுதுதான் கோயிலுக்குள் நுழைகிறான்; என்னையும் உடன் வரச் சொல்கிறான் என்றால், அந்தச் சர்க்கரைப் பொங்கல் பிரசாதத்துடன் மீண்டும் தரிசனத்துக்குச் செல்ல முனைந்தால் நான் அர்ச்சகரால் தடுக்கப்படுவேனா? உங்கள் கூற்றுப்படி பார்த்தால் தடுக்கப்பட வேண்டும். ஆனால், தடுக்கப்படுவேனா? கனிவு கூர்ந்து பதிலளிக்க வேண்டுகிறேன்!

   நீக்கு
  2. அப்படியே ஒருவேளை நீங்கள் கூறுகிறபடி ஒரு மரபு இருந்தாலும், அந்தக் காரணத்துக்காக என் அம்மா தடுக்கப்படவில்லை என்பது, கோயிலுக்கு வெளியே கூழை வைத்துவிட்டு உள்ளே நுழைந்த பின்னும் வழிபாடு செய்ய அவர் அனுமதிக்கப்படாததிலிருந்தே உணர முடியும்!

   நீக்கு
 6. உங்களின் ‘போர்க்குணம்’ எனக்குப் பிடித்திருக்கிறது.

  இனியும் எழுதுங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாராட்டுக்கு மிக்க நன்றி ஐயா! தொடர்ந்து படியுங்கள்! உங்கள் செம்மையான கருத்துக்களைப் பதியுங்கள்! மேற்கண்ட இணைப்புகள் மூலம் சமூக வலைத்தளங்கள், திரட்டிகள் ஆகியவற்றிலும் பதிவைப் பகிர்ந்து உங்களுக்குப் பிடித்த இந்தப் பதிவு மற்றவர்களையும் சென்றடைய உதவுங்கள்! நன்றி!

   நீக்கு
 7. வணக்கம் நண்பரே....
  முதலில் ஒருவிசயத்தை நினைவு படுத்த கடமைப்பட்டு இருக்கிறேன் தமிழனுக்கு மறதி கூடுதலாகிகொண்ண்ண்ண்ண்டே..... வருகிறது

  ‘’மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் கைபர் கணவாய் வழியாக இங்கே பிழைக்க வந்தவர்களாக அறியப்படுபவர்கள் பார்ப்பனர்கள்’’

  உண்மைதான் நேற்று ஒரு பெண்ணை அநியாயமாக கற்பழித்து கொன்று விட்டார்கள் என்றால் உடன் கூடுவார்கள் அரசாங்கத்தை எதிர்க்க... மறுநாள் அதே இடத்தில் சினிமா ஸூட்டிங் குஷ்பு வருகிறார் என்று அறிவித்தால் போதும் உடன் மறந்து விடுவான் காரணம் இவண் தமிழன் வாய்ப் பேச்சில்தான் வீர்ன் தமிழன், தமிழன் சிந்தித்தால் இன்றைக்கு கூத்தாடிகள் நாட்டை ஆளமுடியுமா ? இறைபயம் என்பது இப்பொழுது யாருக்குமே கிடையாது நண்பரே எனது 13 வது வயதிலே கோவில் கர்ப்பக்கிரஹத்திலே பூசாரியோடு சண்டை போட்டவன் நான் எனது கேள்விக்கு பதில் சொல்லாமல் வெளியே தள்ளினார்கள் அன்று சிறுவன் என்றும் பாராமல் ஆனால் இன்று அம்மா வேதனைப்பட வேண்டிய அவசியமே இல்லை பாரத்தை இறைவன்மேல் போட்டு விட்டு போக வேண்டியதுதான் இறைவனுக்கு தெரியாததா நீதி ? எந்த மதமானாலும் சரி இறையச்சமுள்ள ஒரு மனிதனை காண்பியுங்கள் பார்ப்போம் பால் சைவமா ? அசைவமா ? என்பது எனது நெடுங்கால ஐயங்களில் ஒன்று தாங்கள் சொன்ன அனைத்து தாவரங்களிலும் உயிர் இருக்கிறது உண்மையே பால் மட்டும் எப்படி ? சைவமாகும் ரத்தத்தில் விளைவது தானே பால் ரத்தம் அசைவம் என்றால் பாலும் அசைவமே எல்லாமே குழறுபடிகள்தான் இதனைக்குறித்து ஆலோசிக்க மனிதனுக்கு நேரமில்லை காரணம் எல்லோருமே ஓடிக்கொண்டே இருக்கிறார்கள் முடிவு தெரியாமல்,, கடைசியில் தாங்கள் கொடுத்துள்ள குறிப்பு சிரிப்புதான் வருகிறது நண்பரே... அது இதுதான்.

  முதலில் தமிழ்நாடு அரசு இவை பற்றியெல்லாம் சிந்திக்க வேண்டும்!

  எப்படி நண்பரே இவர்களுக்கு இதுவா முக்கியம் இறைபயம் இவர்களுக்கு மட்டும் வந்து விடுமா ? நண்ரே தங்களது கோபத்தை ஆதங்கத்தை காட்டியவிதம் பொதுநலமே இதில் யாரும் தங்கள்மீது குறைசொல்ல வேண்டிய அவசியம் இருக்காது என்பதே எமது கருத்து, தங்களது பதிவுக்கு இப்பொழுதுதான் வருகிறேன் இனி கண்டிப்பாக தொடர்வேன்,,, நன்றி.

  குறிப்பு-தாங்கள் கொடுத்துள்ள உள்பதிவுகளுக்குள் நான் இன்னும் போகவே இல்லை போவேன், திரும்பியும் வருவேன்.
  அன்புடன்
  கில்லர்ஜி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் விரிவான கருத்துக்கு நன்றி நண்பரே! 13 அகவையிலேயே கோயில் கருவறையில் பூசாரியோடு சண்டை போட்டீர்களா! வியப்பாக இருக்கிறது! இது பற்றி ஏதும் பதிவு எழுதியிருக்கிறீர்களா? இருந்தால் அனுப்புங்களேன்! விவரம் அறிய ஆவல்.

   //வாய்ப் பேச்சில்தான் வீரன் தமிழன்// - என்ன, இப்படிச் சொல்லி விட்டீர்கள்! ஈழத்தில் விடுதலைப்புலிகளும் அண்மையில் இங்கே நம் மாணவப் புலிகளும் காட்டிய வீரத்தை மறந்து விட்டீர்களா? தமிழன் வாய் வீரன் இல்லை; உண்மையிலேயே வீரன்தான். அதனால்தான் அவனோடு நேரடியாக மோத முடியாமல், இப்படிக் கடவுள், சாதி போன்ற பலவற்றின் மூலம் கொல்லைப்புறமாக வந்து அடக்கி விட்டார்கள்!

   தமிழ்நாடு அரசுக்கு நான் கோரிக்கை விடுத்திருப்பது சிரிப்பை வரவழைப்பதாகக் கூறியிருந்தீர்கள். அவர்களுக்கு இவையெல்லாம் முதன்மையானவையாகத் தோன்றா எனும் உங்கள் கூற்று நூற்றுக்கு நூறு உண்மைதான் என்றாலும், எந்த ஒரு கோரிக்கையாக இருந்தாலும், அது பெரும்பான்மை மக்களின் ஆதரவை மட்டும் பெற்றுவிட்டால், அதை நிறைவேற்றி வைப்பதன் மூலமாக அவர்களின் வாக்குகளை அள்ளலாம் என்பதில் இன்றைய முதல்வர் தெளிவாக உள்ளார். அவருக்கு விருப்பமில்லாத நிலையிலும், ஈழப் பிரச்சினையில் தொடர்ந்து அவர் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதே இதற்குச் சான்று. எனவே, இந்தக் கோரிக்கையையும் பெரும்பாலான மக்கள் ஆதரிக்கும்படி நாம் செய்துவிட்டால் போதும்; இந்தப் பன்னெடுங்கால சக மனித அவமதிப்பு முறை கட்டாயம் ஒழியும் என்பதே என் நம்பிக்கை!

   இறைவன் மீது பாரத்தைப் போட்டுவிட்டு அமைதி கொள்ளும்படி என் அம்மாவுக்குக் கூறியிருந்தீர்கள். தங்கள் அன்புக்கு மிக்க நன்றி!

   //தாங்கள் கொடுத்துள்ள உள்பதிவுகளுக்குள் நான் இன்னும் போகவே இல்லை போவேன், திரும்பியும் வருவேன்// - மிக்க மகிழ்ச்சி! தொடர்ந்து படியுங்கள்! உங்கள் செம்மையான கருத்துக்களைப் பதியுங்கள்! மேற்கண்ட இணைப்புகள் மூலம் சமூக வலைத்தளங்கள், திரட்டிகள் ஆகியவற்றிலும் பதிவைப் பகிர்ந்து உங்களுக்குப் பிடித்த இந்தப் பதிவு மற்றவர்களையும் சென்றடைய உதவுங்கள்! நன்றி!

   நீக்கு
  2. வணக்கம் நண்பரே...
   13 வது வயதுச்சண்டை பதிவாக எழுதி 3 வருடமாக இன்னும் வெளியிடாமல் வைத்திருக்கிறேன் காரணம் ஒரு பதிவை எழுத தொடங்கினேன் அது ஹனுமார் வால்போல என்னையறியாமல் நீண்ண்ண்ண்டு விட்டது பிறகு அதை பார்ட், பார்ட்டாக பிரித்து வைத்துள்ளேன் மொத்தம் 5 பதிவுகள் ஆகிவிட்டது இதில் நான் சொன்ன விசயம் கடைசி பதிவாகத்தான் இட முடியும் காரணம் மத பந்தப்பட்டவை ஒன்றுக்கொன்று கோர்த்து விட்டது ‘’மனிதமூளை’’ என்று தொடங்கிய பதிவு ‘’பழனியாண்டி’’ என்ற 5 வது பதிவோடு முடிகிறது சரி இன்றே இடலாமே எனக்கேட்பது புரிகிறது இருக்குமிடம் வாஸ்து சரியில்லை நண்பா, ஆகவே நான் நமது இந்தியாவுக்கு வந்தவுடன் முதல் பதிவே இதுதான் பயப்படவேண்டாம். நான் இந்தியாவுக்கு நிரந்தரமாக வரவேண்டிய காலம் வெகு விரைவில், தங்களது பதிவை தொடர்ந்தால் ? இந்த கத்துக்குட்டியும் நிறைய கற்றுக்கொள்ளலாம் என்பதை புரிந்து கொண்டேன் தாங்களும் கடைக்கண் கண்டால் சந்தோசமே...

   //வாய்ப் பேச்சில்தான் வீரன் தமிழன்//
   நண்பா. தமிழன் நடிகைக்கு கோயில் கட்டுகிறானே மனம் வெம்பி புடைக்கிறது நண்பா...

   //இன்றைய முதல்வர் தெளிவாக உள்ளார்//

   இருக்கட்டும், இருக்கட்டும், மக்கள் தெளிவில்லையே நண்பா... நெஞ்சு வெடித்துவிடும்போல் இருக்கிறது நண்பா...
   நாம் நிறைய பேசலாமா ? நண்பா.

   நீக்கு
  3. //வந்தவுடன் முதல் பதிவே இதுதான்// - மிகவும் நல்லது!

   //இந்தியாவுக்கு நிரந்தரமாக வரவேண்டிய காலம் வெகு விரைவில்// - மிக்க மகிழ்ச்சி நண்பரே! இப்பொழுதே என் நல்வரவைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

   //தங்களது பதிவை தொடர்ந்தால் ? இந்த கத்துக்குட்டியும் நிறைய கற்றுக்கொள்ளலாம் என்பதை புரிந்து கொண்டேன் தாங்களும் கடைக்கண் கண்டால் சந்தோசமே// - அடேங்கப்பா! இது உங்களுக்கே கொஞ்சம் மிகையாகத் தோன்றவில்லையா? நானும் உங்களைப் போல் கற்றுக்குட்டிதான் நண்பா!

   //தமிழன் நடிகைக்கு கோயில் கட்டுகிறானே மனம் வெம்பி புடைக்கிறது நண்பா// - அட, அப்படியும் சிலர், இப்படியும் சிலர், அவ்வளவுதானே! எல்லோரும் விடுதலைப்புலிகள் போல் வீரர்களும் இல்லை; எல்லோருமே நடிகைக்குக் கோயில் கட்டும் கிறுக்கர்களும் இல்லை. சரியா நான் சொல்வது?

   //மக்கள் தெளிவில்லையே நண்பா... நெஞ்சு வெடித்துவிடும்போல் இருக்கிறது நண்பா...
   நாம் நிறைய பேசலாமா ? நண்பா// - தாராளமாக! ஸ்கைப்பில் தொடர்பு கொள்ளலாமா?

   நீக்கு
 8. விழியம்!!!!!
  அத்தனை கோபத்திலும் சொல்லவந்ததை திருத்தமாக சொல்லிவிட்டீர்கள் சகோ!! கொஞ்சம் கோபம் குறைந்த பின் எழுதி இருந்தால் இன்னும் கட்டுரையில் பொதுத்தன்மை வந்திருக்குமோ என்பது என் தனிப்பட்ட தாழ்மையான கருத்து. ஒரு விந்தை என்வென்றால் துளசி சகா தான் உங்களை எனக்கு அறிமுகம் செய்து படித்துப்பாருங்கள் இவர் அட்டகாசமாய் எழுதுறார் என்று சொன்னதே:)) இப்போ அவர் முரண்படும் இந்த பதிவில் நான் உடன்படுகிறேன்:))
  எனக்கு ஒரு ஐயம் சகா, கருகாடு தொட்ட கையால் தந்த பிரசாதத்தை வாங்காத அந்த குருக்கள் அசைவம் சாப்பிடும் எந்த மனிதரும் கையால் தொட்டு தரும் தட்சணையை வாங்கமாட்டாரோ? கேட்ட பணத்துக்கு தோஷம் இல்லை அது லக்ஷ்மி என்பார்களோ? உணவு எல்லாம் அன்னலட்சுமி ஆச்சே ?? ஒருவேளை அசைவ உணவுகென்று தனியே டிபார்மண்ட் ஒதுக்கி பிடாரி, காளி என இன்சார்ஜ் கொடுத்திருப்பார்களோ?? ரொம்ப பெரியாரியம் பேசுனா இது குடும்ப பெண்ணு இல்லைன்னு சொல்லிடுவாங்க , எனக்கெதுக்கு பொல்லாப்பு. நான் போய் தமிழ்மணம் வாக்கை போட்டுட்டு அப்டியே கிளம்புறேன். நீங்க தொடர்ந்து கலக்குங்க:)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //உணவு எல்லாம் அன்னலட்சுமி ஆச்சே ?? ஒருவேளை அசைவ உணவுகென்று தனியே டிபார்மண்ட் ஒதுக்கி பிடாரி, காளி என இன்சார்ஜ் கொடுத்திருப்பார்களோ??// - அட அட அடா! பிய்த்து விட்டீர்கள் சகோ!

   //ரொம்ப பெரியாரியம் பேசுனா இது குடும்ப பெண்ணு இல்லைன்னு சொல்லிடுவாங்க// - சொன்னால் சொல்லிவிட்டுப் போகட்டுமே! உங்கள் நையாண்டி அருமை!

   உங்கள் பாராட்டுக்களுக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி! தொடர்ந்து படியுங்கள்! உங்கள் செம்மையான கருத்துக்களைப் பதியுங்கள்!

   நீக்கு
  2. ஆனால், இன்னும் கட்டுரையில் பொதுத்தன்மை வந்திருக்க வேண்டும் என்றுவிட்டீர்களே! :-(

   நீக்கு
  3. உங்கள் வளர்ச்சிக்கு பயன்படும் இதுபோன்ற நடுநிலையான கருத்துக்களை சொல்லலாம் தானே சகோ:))

   நீக்கு
  4. கண்டிப்பாக அம்மணி! தாராளமாக நீங்கள் இப்படிப்பட்ட கருத்துக்களை, விமரிசனங்களைக் கூறலாம்! கூற வேண்டும்! ஆனால் இதை, இதைவிட எப்படிப் பொதுத்தன்மையுடன் எழுத வேண்டும் என எனக்குப் புரியவில்லையே; அந்த அளவுக்கு நான் இன்னும் எழுத்தாற்றலை வளர்த்துக் கொள்ளவில்லையே என்கிற ஆதங்கத்தையே வெளிப்படுத்தினேன், வேறொன்றுமில்லை!

   நீக்கு
 9. இன்றைய 03.09.2014 வலைச்சரத்தில் தங்களைப்பற்றி வாழ்த்துக்கள் நண்பா.....

  பதிலளிநீக்கு
 10. சரியான பதிலடி, இப்படித்தான் இவனுங்களுக்கு பதில் தரணும். கோவில் கும்பாபிசேகமே, வேலையாட்கள் தொட்டு வேலை செய்த தீட்டை கழிக்க, அதையும் நம்மாளுங்க குடும்பத்தோடு போய் பார்த்து காசு கொடுத்துவிட்டு வருவான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் பாராட்டுக்கும் கருத்துக்கும் நன்றி அன்பரே! தொடர்ந்து படியுங்கள்! உங்கள் செம்மையான கருத்துக்களைப் பதியுங்கள்! மேற்கண்ட இணைப்புகள் மூலம் சமூக வலைத்தளங்கள், திரட்டிகள் ஆகியவற்றிலும் பதிவைப் பகிர்ந்து உங்களுக்குப் பிடித்த இந்தப் பதிவு மற்றவர்களையும் சென்றடைய உதவுங்கள்! நன்றி!

   நீக்கு
 11. ‘’அன்பு நண்பரே வணக்கம், விருது ஒன்றினைத் தங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளேன்’’ பெற்றுக்கொள்ளவும்.
  அன்புடன்
  கில்லர்ஜி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் அன்பு என்னைத் திக்குமுக்காடச் செய்கிறது. விருதுக்கு மிக்க நன்றி நண்பரே! விரைவில் அதன் நெறிமுறைகளை நிறைவு செய்கிறேன்! மிக்க மகிழ்ச்சி!

   நீக்கு
 12. well your article is interesting. i am a non brahmin. but i have observed brahmins are generally good pious ninnety nine percent vegetarians. do not fight with fellow citizens do not cheat do not harm never indulge in honourable killing during intercaste marriages ninety prcent do not go to taasmac studies hard goes abroad when brahmins were in teaching jobs good teaching existed. Pl recall abdul kalams obervation about his teacher sivasubbramanya iyer.... i know many hardcore atheists who give their flats to brahmin tenants for obvious reasons..... best wishes...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் பாராட்டுக்கு முதலில் நன்றி! இந்தப் பதிவுக்கான பதிலாக நீங்கள் பார்ப்பனர்களின் ஒழுக்கமான வாழ்க்கை முறையைப் பற்றி எழுதியிருப்பது எனக்கு வியப்பைத் தரவில்லை. பார்ப்பனியத்தை எதிர்த்து எழுதினால் எல்லோரும் பார்ப்பனர்களை எதிர்ப்பதாகத்தான் தவறாகப் புரிந்து கொள்கிறார்கள். ஒரு கருத்தியலை எதிர்ப்பதற்கும் அந்தக் கருத்தைப் பின்பற்றும் தனிமனிதர்களை எதிர்ப்பதற்குமான வேறுபாட்டைப் புரிந்து கொள்ளக்கூடியவர்கள் இங்கு வெகு குறைவே! நீங்களும் அதற்கு விலக்கில்லை! பார்ப்பனர்களின் ஒழுக்கமான வாழ்க்கை முறை பற்றிய உங்கள் கருத்துக்கள் அனைத்தையுமே நான் ஏற்கிறேன். என் நண்பர்களில் பெரும்பாலோரே பார்ப்பனர்கள்தாம். மீண்டும் தெளிவாகக் கூறுகிறேன், நான் இந்தப் பதிவு மூலம் எதிர்த்துரைத்திருப்பது பார்ப்பனியத்தை, பார்ப்பனியத்தை, பார்ப்பனியத்தை மட்டுமே! பார்ப்பனர்களை இல்லை, இல்லை, இல்லவே இல்லை! பார்ப்பனர்களின் தமிழுணர்வைத் தமிழர்களோடு ஒப்பிட்டு மெச்சும் ஒரு கருத்தும் என்னிடம் உண்டு. விரைவில் ஏதேனும் ஒரு கட்டுரையில் நீங்கள் அதையும் இங்கே படிக்கலாம்!

   ஆனால் அதே நேரம், நாத்திகர்கள் பார்ப்பனர்களுக்கு வீட்டை வாடகைக்குக் கொடுப்பது பற்றி நீங்கள் பழிப்பது எனக்குச் சிரிப்பை வரவழைக்கிறது. இதையே கொஞ்சம் மாற்றி, தான் நாத்திகர் என்பதற்காக ஒருவர் பார்ப்பனர்களுக்குத் தன் வீட்டை வாடகைக்குத் தர மறுத்தால் என்ன கூறுவீர்கள் என்றும் சிந்தித்துப் பாருங்களேன்! சுவையான கருத்து உங்களுக்குத் தோன்றலாம்.

   நீக்கு
 13. wes hould remember that in any tamilnadu villages temples where sacrifices of animals /birds do take place brahmin priests would not come forward to work. the reason is obvious.how can you blame them besides thousands of nonbrahmins visit sabarimala headed by non brahmin gurus only. and in all the ares in chennai and in other places nonvegetarian items are not sold along with vegetables nonvegetarian shops/butchers are found only in the corners. nobody blames anybody for that. besides thousands of non brahmins also observe vegetarianism during certain periods. during those periods they are more strict than brahmins avoid onions garlic also.
  agraharams are already empty/occupied by nri muslims. let us not torture a community just like politicians. let us not forget the contributions of stalwart brahmins like bharatiar parithimal kalaignar u.v saminathaier ki.va jaganathan marxist leaders rammoorthy ramani gopu and many stalwarts.from brahmin community. ofcourse i admit that in brahmins also undesirable people exist. after all which community people are pure hundred percent. infosys narayanamoorthy cognizant lakshmi narayanan tcs chandrasekaran and many giant software communities are headed by brahmins gave jobs to lacs of people every year without caste factor. many dalts mbcs are working in abroad in software companies let us be united and move india forward sir.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //wes hould remember that in any tamilnadu villages temples where sacrifices of animals /birds do take place brahmin priests would not come forward to work. the reason is obvious.how can you blame them besides thousands of nonbrahmins visit sabarimala headed by non brahmin gurus only// - இந்த வரிகள் புரியவில்லை. தமிழில் எழுதினால் பதிலளிக்க இயலும். எழுதுபவர் தமிழராகவே இருந்தாலும், ஆங்கிலத்தில் எழுதினார் என்றால், அந்தப் பதிவில் யாரும் தமிழில் கருத்திட மாட்டீர்கள்; தமிழ் நன்றாகத் தெரிந்தாலும். ஆனால், தமிழ்ப் பதிவில் ஆங்கிலத்தில் கருத்துரைக்கும்பொழுது உங்களுக்கெல்லாம் அந்தக் கூச்சம் இருக்காது. உங்களைப் போன்றவர்களுக்காகத்தான் கீழே 'தமிழ்ப் பலகை' என ஒன்று வைத்திருக்கிறேன். அதைப் பயன்படுத்தி இந்தக் கருத்தைத் தமிழில் தெரிவியுங்கள் பதிலளிக்கிறேன்.

   நீக்கு
  2. மற்றபடி, இந்தக் கருத்தில் நீர் கேட்டிருக்கும் மற்ற எல்லாக் கேள்விகளுக்கும், கீழே உமது அடுத்த கருத்துரைக்கான பதிலில் விளக்கம் கூறப்பட்டிருக்கிறது.

   நீக்கு
 14. even in koyambedu market in chennai andin otherareas non veg items like KARUVADU beef etc separate selling place exists.karuvadu beef are not sold along with ladies finger tomato potatos does it mean that the shopkeeper insults karuvadu eatingpeople. no the shopkeeper knows that there are lots of vegetarians on any day not necessarily brahmins would cme to purchase only vegetables in vegetableshop. this is common sense sir. even in non vegetarians there are many who would never touch beef cows nandu erol etc. orthodoxmuslis woulduse only HALAL n.v food. yourmother mustbe an innocent village woman whohad taken karuvattu item . just like cheap politicians do ot indulge in abusing a community who would never oppose your views but always think good things in their lives. good wishes.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முதலில் என் அம்மாவைப் பற்றிப் பேசவோ, விமரிசிக்கவோ உமக்கு எந்த உரிமையும் இல்லை எனக் கடுமையாக எச்சரிக்கிறேன்!! அவர் நீர் கூறுவது போல் பட்டிக்காட்டு அப்பாவியும் இல்லை; கருவாட்டைக் கோயிலுக்குள் கொண்டு போக அவர் முயலவும் இல்லை.

   //கோயிலுக்கு வெளியே இறையன்பர்கள் கூழ் வார்த்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். அம்மா அதை வாங்கிக் கொண்டு கோயிலுக்குள் நுழைய முற்படும்பொழுது, கோயிலின் பார்ப்பனப் பூசாரி அவரை உள்ளே விட மறுத்திருக்கிறார். கூழுடன் கருவாட்டுக் குழம்பும் தருவார்கள் இல்லையா? அத்தோடு உள்ளே நுழையக் கூடாதாம். “நான் குழம்பு ஏதும் வாங்கவில்லை. வெறும் கூழ் மட்டும்தான் வாங்கியிருக்கிறேன்” என்று கூறியும் அந்த ஆள் உள்ளே விடவில்லை.// - இந்த வரிகளைப் படிக்கவே இல்லையா? தொடக்கத்திலேயே இருக்கும் இந்த வரிகளைக் கூடப் படிக்காமலே கருத்துச் சொல்ல வந்து விட்டீரா?

   சென்னையிலேயே பிறந்து வளர்ந்த, படித்த, ரசனை, அறிவு அனைத்திலும் உயர்ந்த, நாகரிகம் மிக்க பெண்மணி என் அம்மா! அதே நேரம், பட்டிக்காட்டில் இருப்பவர்களெல்லாரும் நீர் நினைப்பது போல் ஒன்றுமறியாத முட்டாள்களும் இல்லை. அண்மைக்காலமாக, மரம் ஏறும் கருவி, களை பிடுங்கும் கருவி, வெட்டழைப்பு (missed call) மூலம் வீட்டிலிருந்தபடியே வெகு தொலைவு தள்ளி இருக்கும் வயற்காட்டு இறைப்பானை (motor pump) இயக்கும் கருவி என ஏராளமான புதிய கண்டுபிடிப்புகளையும், புதுப்புனைவுகளையும் படிக்காத நாட்டுப்புறத் தமிழர்கள் செய்திருக்கிறார்கள் என்பதை நீர் தெரிந்து கொள்ள வேண்டும்!

   நீக்கு
  2. அடுத்து நீர் புரிந்து கொள்ள வேண்டியது, கடையில் விற்கப்படுகிற அசைவப் பொருட்களுக்கும் கடவுளுக்குப் படைக்கப்பட்ட அசைவப் பொருளுக்குமான வேறுபாடு. பதிவின் சாராம்சமே அதுதான்!

   எந்த ஒரு பொருளாக இருந்தாலும் அது கடவுளுக்குப் படைக்கப்பட்டு விட்டால், இறைவனின் அருள் கொண்ட இறைப்பொருளாக -அதாவது பிரசாதமாக- அது மாறி விடுகிறது என்பதுதான் கடவுள் நம்பிக்கையாளர்களின் கொள்கை. அதனால்தான் வெறும் சோற்றை எந்தச் சலனமும் இன்றி வாங்குகிற நாம், கடவுளுக்குப் படைக்கப்பட்ட உணவாக இருந்தால் இரு கை நீட்டிக் குவித்துப் பணிவுடன் பெற்றுக் கொள்கிறோம். இதே போல, அசைவப் பொருளாகவே இருந்தாலும் கடவுளுக்குப் படைக்கப்பட்ட பின்னர் அதையும் இறையுணவாகத்தானே (பிரசாதம்) கருத வேண்டும்? மாறாக, கடவுளுக்குப் படைத்த பின்னும் அதை வழக்கமான அசைவத் தீனிப் பண்டமாகக் கருதலாமா என்பதுதான் கேள்வி. பார்ப்பனர்கள் அல்லது பார்ப்பனிய ஆதரவாளர்கள் என்னதான் சொல்ல வருகிறீர்கள்? கடவுளுக்கே படைத்ததாக இருந்தாலும் அசைவம் அசைவம்தான், அதன் தீட்டுப் போகாது என்றா? அல்லது, கடவுள் அருள் பெற்ற பொருளாகவே இருந்தாலும் அசைவம் என்றால் நாங்கள் ஏற்க மாட்டோம் என்றா? இல்லைதானே? அந்த அளவுக்குக் கடவுளையோ கடவுள் தன்மையையோ எதிர்க்கும் தன்மை கொண்டவர்கள் இல்லை நீங்கள். ஆக, இதன் மூலம் நீங்கள் கூற விரும்புவது, ‘கடவுளைத் தொட்டு வழிபாடு செய்யும் உரிமையுள்ள எங்களைத் தவிர மற்றவர்கள் படையலைக் கடவுள் ஏற்பதில்லை. ஆகையால், அது படையல் பொருள் இல்லை; வெறும் இறைச்சித் தின்பண்டம்தான்’ என்பதுதானே? அதனால்தான் கேட்கிறேன், கோயில்களும் இறையியலும் உங்கள் பாட்டன் சொத்துக்களா என்று.

   நீக்கு
  3. கீழ்த்தரமான அரசியலாளன் போல் நான் நடந்து கொள்ளவில்லை. பாதிக்கப்பட்டவன், அல்லது பாதிக்கப்பட்டவரின் சார்பிலானவன் என்கிற வகையில் குறிப்பிட்ட சமூகத்தினர் செய்யும் அட்டூழியத்துக்கு எதிராகக் குரல் கொடுக்கிறேன், அவ்வளவுதான். அட்டூழியங்கள் செய்வது தவறில்லை; அதற்கு எதிராகக் குரல் எழுப்புவதுதான் தவறு; அதுதான் சமூகத்தைப் பாதிக்கிறது என்று கூறும் நீங்கள் நல்லவர்கள், இதை எதிர்க்கும் நான் கீழ்த்தரமான அரசியலாளனுக்கு ஒப்பானவன், அப்படித்தானே? படிப்பவர்கள் தீர்மானிக்கட்டும் இரண்டில் எது சரி என்பதை!

   நீக்கு
  4. பதிவு என எழுதினால் அது பற்றி விமரிசிக்கவும் கேள்வி எழுப்பவும் அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால், கேட்பவர்கள் பதிவை ஒருமுறையாவது முழுமையாகப் படித்து, புரிந்து கொண்டு கேட்டால் நன்றாக இருக்கும்.

   காலங்காலமாக அசைவப் பொருளைப் படைத்து வழிபடும் வழக்கம் உள்ள ஒரு கோயிலில், அசைவம் சாப்பிடாத ஒருவர் நேற்று வந்து புகுந்து கொண்டு அசைவத்தின் பக்கத்தில் வைக்கப்பட்ட பொருளைக் கூட இனி உள்ளே கொண்டு வரக்கூடாது எனப் புதுச் சட்டம் போடுவது நியாயமா என்பதுதான் பதிவின் சாராம்சம். இதைக் கூடப் புரிந்து கொள்ளாமல் பார்ப்பனர்கள் நல்லவர்கள், வல்லவர்கள், நாலும் தெரிந்தவர்கள் எனப் புகழ்வதும், பிறகு "பார்ப்பனர்கள் தவறு செய்வதை நான் மறுக்கவில்லை. எல்லோரும்தான் தவறு செய்கிறார்கள். யார்தான் இங்கு ஒழுங்கு" என்பதாகக் கருத்துரைப்பதும், கடவுளுக்குப் படைக்கப்பட்ட பொருளை இறைப்பொருளாக ஏன் கருதுவதில்லை என்ற கேள்விக்கு, அதே பொருள் கடையில் விற்கும்பொழுது எப்படி விற்கப்படுகிறது, எந்தச் சூழ்நிலைகளில் விற்கப்படுகிறது, எந்தெந்தக் காலக்கட்டங்களில் அதை உண்பது தவிர்க்கப்படுகிறது எனத் தொடர்பில்லாமல் கருத்துத் தெரிவிப்பதும் இன்ன பிறவும் பதிலளிக்க எரிச்சலூட்டுகின்றன! எது வேண்டுமானாலும் கேளுங்கள்! ஆனால், முழுமையாகப் படித்துப் புரிந்து கொண்டு கேளுங்கள்!

   நீக்கு
 15. வணக்கம்
  இன்றுதங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள்சென்று பார்வையிட இதோ முகவரி
  http://blogintamil.blogspot.com/2014/12/ar-2011.html?showComment=1419016437833#c8701066033669350162

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தகவலுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி நண்பரே! தொடர்ந்து படியுங்கள்! உங்கள் செம்மையான கருத்துக்களைப் பதியுங்கள்! மேற்கண்ட இணைப்புகள் மூலம் சமூக வலைத்தளங்கள், திரட்டிகள் ஆகியவற்றிலும் பதிவைப் பகிர்ந்து உங்களுக்குப் பிடித்த இந்தப் பதிவு மற்றவர்களையும் சென்றடைய உதவுங்கள்! நன்றி!

   நீக்கு
 16. தமிழராய் பிறந்தவர்கள் உணர்ந்து படிக்க வேண்டிய பதிவு.

  மாட்டு பால் எப்படி வருகிறது என்பதை அறிந்தால் நமக்கு மனம் நொந்து போகும்.
  நீங்கள் கூறிய அவலம் போக, மிசின் வைத்து பால் எடுக்கிறார்கள்.
  மாட்டின் காம்புகள் எவ்வளவு மென்மையாக தொட வேண்டிய ஒன்று.
  அதில் மிசின் பயன் படுத்த , மாட்டிற்கு ஏற்படும் வலிக்கு அளவே இருக்காது.
  அப்படி மாட்டை கொடுமை படுத்தி எடுக்கப்படும் பால் தேவையா.
  அதை கொண்டு போய் கல்லின் மேல் ஊற்றி விரயம் செய்தல் அதனினும் கொடுமை.
  பார்பனியம் என்பதற்கு அநீதி என்பதை தவிர வேறு பொருள் சொல்ல இயலாது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் பாராட்டுக்கும் கருத்துக்கும் நன்றி! தொடர்ந்து படியுங்கள்! உங்கள் செம்மையான கருத்துக்களைப் பெயருடன் பதியுங்கள்! மேற்கண்ட இணைப்புகள் மூலம் சமூக வலைத்தளங்கள், திரட்டிகள் ஆகியவற்றிலும் பதிவைப் பகிர்ந்து உங்களுக்குப் பிடித்த இந்தப் பதிவு மற்றவர்களையும் சென்றடைய உதவுங்கள்! நன்றி!

   நீக்கு
 17. ஓராண்டு கழிந்து இன்றுதான் வாசிக்க நேரிட்டது . உங்கள் குமுறலும் வினாக்களும் நியாயமானவை . எதிர்க் கருத்து உரைத்தவர்கள் திசை திருப்புகிறார்கள் .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //ஓராண்டு கழிந்து இன்றுதான் வாசிக்க நேரிட்டது// - அதனாலென்ன ஐயா? தங்கள் இசைவான கருத்துக்கு உளமார்ந்த நன்றி! யார் எப்படித் திசை திருப்பினாலும் நான் திசை திரும்ப மாட்டேன், என் கருத்துக்கு முறையான மாற்றுக் கருத்தை எடுத்து வைக்காத வரை. நன்றி மீண்டும்!

   நீக்கு

என் புதினத்தை வாங்க

என் புதினத்தை வாங்க
மேலே உள்ள படத்தை அழுத்துங்கள்
பதிவுகளை உடனுக்குடன் பெற

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

வாட்சாப் தடத்தில் (Channel)...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு (1) 13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (9) அஞ்சலி (21) அணு உலை (2) அம்பிகை செல்வகுமார் (1) அம்மணம் (1) அமேசான் (6) அயல்நாட்டுத் தமிழர் (1) அரசியல் (90) அழைப்பிதழ் (7) அற்புதம்மாள் (2) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (39) ஆட்சென்ஸ் (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இங்கிலாந்து (1) இசுரேல் (2) இட ஒதுக்கீடு (4) இணையம் (19) இந்தித் திணிப்பு (1) இந்தியா (25) இரசியா (1) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இலக்கணம் (3) இலங்கை (1) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (23) இனம் (46) ஈழம் (44) உக்கிரேன் (1) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (24) எழுவர் விடுதலை (1) ஐ.நா (5) ஒருங்குறி (1) கடவுள் (1) கதை (3) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (11) கலைச்சொல்லாக்கம் (1) கவிஞர் தாமரை (1) கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் (2) கவிஞர் ரேவதி (1) கவிதை (19) காங்கிரஸ் (6) காசா (2) காணொளி (4) காதல் (2) காந்தியம் (1) கார்த்திக் சுப்புராஜ் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (5) கிரந்தம் (1) கீச்சுகள் (2) குழந்தைகள் (10) குறள் (2) கூகுள் (2) கையொப்பம் (2) கோட்பாடு (9) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (16) சமயம் (12) சமற்கிருதம் (2) சமூகநீதி (4) சரிதா (1) சாதி (10) சிங்களர் (1) சித்திரக்கதைகள் (1) சிவகார்த்திகேயன் (1) சிறுவர் இலக்கியம் (4) சீமான் (7) சுற்றுச்சூழல் (6) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (3) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (31) தமிழ் தேசியம் (5) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (16) தமிழர் (45) தமிழர் பெருமை (17) தமிழின் சிறப்பு (3) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (2) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (5) தாலி (1) தி.மு.க (11) திரட்டிகள் (4) திராவிடம் (9) திருமுருகன் காந்தி (1) திரைப்படம் (2) திரையுலகம் (9) திறனாய்வு (1) தினகரன் (1) துருவ் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (9) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தேர்தல்-2021 (2) தொலைக்காட்சி (2) தொழில்நுட்பம் (10) தோழர் தியாகு (1) நட்பு (12) நிகழ்வுகள் (5) நிர்மலா சீதாராமன் (1) நினைவேந்தல் (10) நீட் (5) நூல்கள் (9) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (3) பதிவர் உதவிக்குறிப்புகள் (10) பதிவுலகம் (23) பா.ம.க (2) பா.ஜ.க (30) பார்ப்பனியம் (14) பாலஸ்தீனம் (2) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (9) பீட்டா (1) புதிய வேளாண் சட்டம் (1) புறநானூறு (1) புனைவுகள் (10) பெண்ணியம் (6) பெரியார் (3) பேரறிவாளன் (2) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (5) பொதுவுடைமை (1) பொதுவுடைமைக் கட்சி (1) பொருளாதாரம் (2) பொழிவு (2) போட்டி (1) போர் (3) போராட்டம் (10) ம.ந.கூ (2) மகான் (1) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (10) மடோன் அஷ்வின் (1) மணிவண்ணன் (1) மதிப்புரை (5) மதுவிலக்கு (2) மருத்துவம் (7) மாநாடு (1) மாநாடுகள் (1) மாய இயல்பியம் (1) மாவீரர் நாள் (3) மாற்றுத்திறனாளிகள் (2) மிஷ்கின் (1) மீம்ஸ் (7) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (3) மேனகா காந்தி (1) மொழியரசியல் (2) மொழியறிவியல் (2) மோடி (11) யுவர் கோட் (1) யோகிபாபு (1) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) ராஜீவ் படுகொலை (1) வரலாறு (22) வாழ்க்கைமுறை (17) வாழ்த்து (5) வானதி சீனிவாசன் (1) விக்ரம் (1) விடுதலை (6) விடுதலைப்புலிகள் (13) விருது (1) விஜய் (1) விஜய் சேதுபதி (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (7) வை.கோ (6) வைரமுத்து (2) ழகரம் (1) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டெர்லைட் (2) ஹமாஸ் (2) ஹீலர் பாஸ்கர் (1) Bhagavath Gita (1) BJP (1) Casteism (1) Cauvery (1) Dalit (1) Genocide (3) Hindu (1) Karnataka (1) Magical Realism (1) Manisha (1) Modi (1) Notion Press (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (2) Religion (1) Scheduled Castes (1) Sexual Harassment (1) Tamilnadu (1) Tamils (1) Unicode (1) Unicode Consortium (1) UP (1) Women (1) Yogi Adityanath (1)

முகரும் வலைப்பூக்கள்