.

வியாழன், ஜனவரி 14, 2016

ஏறு தழுவலுக்காகப் பொங்கலைத் தவிர்க்காதீர்கள்! தமிழ்ப் பகைவர்களுக்கு வெற்றியை அளிக்காதீர்கள்!



Jallikattu - The oldest tradition of Tamils

லகத் தமிழ் நெஞ்சங்களே! அனைவருக்கும் நேச வணக்கம்!

ஏறு தழுவல் (ஜல்லிக்கட்டு) மீதான தடையால் புண்பட்டுப் போயிருக்கின்றன தமிழ் அன்புள்ளங்கள்! இருக்கிற கொந்தளிப்பைப் பார்த்தால் பலர் இந்த முறை பொங்கலே கொண்டாடாமல் விட்டுவிடுவார்கள் போலிருக்கிறது! அப்படி ஏதேனும் எண்ணம் இருந்தால் அருள் கூர்ந்து மாற்றிக் கொள்ளுங்கள் தமிழர்களே! காரணம், அது நம் எதிரிகளுக்குத்தான் வெற்றி!

பீட்டா (PETA) போன்ற விலங்கு நல அமைப்புகளும் மற்றுமுள்ளோரும் ஏறு தழுவலைத் தடை செய்ய இவ்வளவு ஆர்வம் காட்டுவதற்குப் பின்னணியில் பல வணிகக் காரணங்கள் இருப்பதாகத் தகவல்கள் கசிந்து வருவது உண்மைதான். அவையெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், தமிழர் மரபு - பண்பாட்டு அடையாளங்களை அழிக்கும் நோக்கமும் இதனுள் இருப்பது நாம் அறியாததில்லை. எனவே, ஏறு தழுவல் எனும் ஒரு மரபு அடையாளத்துக்காக நாம் பொங்கலையே தவிர்த்தால் தமிழர் திருநாள், உழவர் பண்டிகை, தமிழ்ப் புத்தாண்டு முதலான இன்ன பிற அடையாளங்களையும் நாமே விட்டுக் கொடுத்ததாக ஆகி விடும் தோழர்களே! தமிழ் இன அடையாளங்களை அழிக்கத் துடிக்கும் அற்பர்களுக்கு இது மேலும் வெற்றியையும் மகிழ்ச்சியையும் அளிப்பதாகத்தான் இருக்கும்.

ஆகவே, முன்னெப்பொழுதையும் விட இந்தாண்டுப் பொங்கலை இன்னும் சிறப்பாகக் கொண்டாடுவோம்! ஏறு தழுவல் எங்கும் போய்விடாது. அதற்கான ஒப்புதல் கிடைக்கும்பொழுது கிடைக்கட்டும்! அதற்காக மற்ற அடையாளங்களை நாமே அழித்துக் கொள்ள வேண்டா!

தமிழ்ப் பகைவர்களின் மருள் நெஞ்சை அடுப்பாக்கி
அவர்தம் வயிற்றெரிச்சலையே நெருப்பாக்கி
எதிரிகளின் காதுகள் செவிடுபடக் குலவையிட்டு
ஏறுதழுவல் குறித்த விழிப்புணர்வை உலகுக்கே படையலிட்டு
தமிழர் இல்லந்தோறும் பொங்கல் பொங்கட்டும்!
தமிழ் மரபின் சிறப்புக்கள் ஒளிருக திக்கெட்டும்!

Happy Pongal!


உலகத் தமிழர்கள் அனைவர்க்கும் உள்ளம் கனிந்த
போகி, பெரும் பொங்கல், மாட்டுப் பொங்கல், திருவள்ளுவர் திருநாள்,
தமிழ்ப் புத்தாண்டு, காணும்பொங்கல் நல்வாழ்த்துக்கள்! 

படங்கள்: நன்றி ஜல்லிக்கட்டு Jallikattu, நகர்முரசு,

பதிவின் கருத்துக்கள் சரி எனத் தோன்றினால் கீழ்க்காணும் வாக்குப்பட்டைகள் மூலம் மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்களேன்! கூடவே, உங்கள் செம்மையான கருத்துக்களுக்கும் காத்திருக்கிறேன்! தமிழில் எழுத வசதியில்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது கீழே 'தமிழ்ப் பலகை'! தனிப்பட ஏதும் தெரிவிக்க விரும்பினால், அதற்கு அடுத்து உள்ள 'அணுக' படிவத்தைப் பயன்படுத்தலாம்!  
 

 பதிவுகளை உடனுக்குடன் பெறக் கீழ்க்காணும் பொத்தானைச் சொடுக்கி
வாட்சாப் தடத்தில் (Whatsapp Channel) இணையுங்கள்!!

Aga Sivappu Thamizh Whatsapp Channel

முகநூல் வழியே கருத்துரைக்க

17 கருத்துகள்:

  1. 2016 தைப்பொங்கல் நாளில்
    கோடி நன்மைகள் தேடி வர
    என்றும் நல்லதையே செய்யும்
    தங்களுக்கும்
    தங்கள் குடும்பத்தினருக்கும்
    உங்கள் யாழ்பாவாணனின்
    இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஐயா! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் நண்பர்கள் உறவினர்கள் ஆகியோருக்கும் என் அன்பார்ந்த பொங்கல், மாட்டுப் பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு, காணும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

      நீக்கு
  2. வணக்கம் நண்பரே..

    கொண்டாடவேண்டும் என்று தான் நினைத்தேன். ஆனால் முடியவில்லையே. இந்த தடை, பண்டிகை நாளன்று இல்லத்தில் இழவு விழுந்தததை போல் அல்லவா மனதை மாற்றியுள்ளது.

    பதிவிற்கு நன்றி. பொங்கல் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயா! உங்களைப் போல் இப்படி எத்தனை பேர் துக்கத்தில் ஆழ்ந்திருக்கிறீர்கள் என்பதை அறிவேன். அதற்காகத்தான் இப்படி ஒரு பதிவு. நம் சோர்வு நம் எதிரிகளுக்கு மேலும் வெற்றியை அளித்துவிடக்கூடாது என்பதற்காகவாவது பொங்கலை அவர்கள் வயிறெரியக் கொண்டாடுவோம் ஐயா!

      உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் நண்பர்கள் உறவினர்கள் ஆகியோருக்கும் என் அன்பார்ந்த பொங்கல், மாட்டுப் பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு, காணும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

      நீக்கு
  3. பதில்கள்
    1. மிக்க நன்றி ஐயா! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் நண்பர்கள் உறவினர்கள் ஆகியோருக்கும் என் அன்பார்ந்த பொங்கல், மாட்டுப் பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு, காணும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

      நீக்கு
  4. பதில்கள்
    1. மிக்க நன்றி ஐயா! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் நண்பர்கள் உறவினர்கள் ஆகியோருக்கும் என் அன்பார்ந்த பொங்கல், மாட்டுப் பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு, காணும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

      நீக்கு
  5. அகச்சிவப்பு தமிழர்க்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் மற்றும் சிவப்பு தமிழரின் அன்பு நண்பர்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆகா! மிக்க நன்றி ஐயா! வலிபோக்கும் வல்லவருக்கும் அவர்தம் குடும்பத்தினர், நண்பர்கள், வலைப்பூ நேயர்கள் ஆகியோருக்கும் அன்பார்ந்த பொங்கல், மாட்டுப் பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு, காணும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

      நீக்கு
  6. உண்மைதான் சகோ. நீங்கள் சொல்லியிருக்கும் கருத்து மிகவும் சரியே. உழவர் திருநாள் என்பது மிக மிக முக்கியம். அவர்கள் இல்லை என்றால் நாம் எல்லாம் எங்கே செல்லுவது...உழவுக்கும் உழவருக்கும் வந்தனை செய்வோம். செய்தோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இசைவான கருத்துக்கு மிக்க நன்றி ஐயா, அம்மணி! ஆனால், அப்பேர்ப்பட்ட உழவர் திருநாளை இன்று உழவர்களே தவிர்த்து விடுவார்களோ என்று அஞ்சியே இந்தப் பதிவு. அன்பார்ந்த பொங்கல், மாட்டுப் பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு, காணும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

      நீக்கு
  7. விவசாயத்தை அழிக்க என்னென்ன முடியுமோ அவ்வளவையும் செய்கிறார்கள். இப்போ மாட்டை நம்மிடம் இருந்து பிரிக்கிறார்கள். இது என் recent fb status உழுத மாட்டுக்கு நன்றி சொல்லத்தானே மாட்டுப்பொங்கல்?? அம்புட்டு நியூஸ் ளையும் பசுமாட்டுக்கு பூஜை செய்வதாய் காட்டுகிறார்கள். அட, இதுகூட சோசியல் மேட்டர் அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்....நந்திக்கு லட்டு, ஜாங்கிரி படைப்பதாய் கட்டுகிறார்கள். ஹ்ம்ம்.... பீட்டா மக்களே இப்போ திருப்தியா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிகச் சரியாகச் சொன்னீர்கள் சகோ! நானும் பார்த்துக் கொண்டே இருக்கிறேன்; ஏறு தழுவல் விவகாரத்தில் பா.ச.க கொஞ்சம் ஆர்வம் காட்டியதோ இல்லையோ, உடனே இதற்கு இந்து சமயச் சாயம் பூசத் தொடங்கி விட்டார்கள். கேட்டால், விளையாட்டின்பொழுது முதலில் கோயில் காளைதான் விடப்படுகிறது, கோயிலுக்குக் காளைகளை அழைத்துப் போய்க் கடவுளைக் கும்பிட்டு விட்டுத்தான் ஏறுதழுவலைத் தொடங்குகிறார்கள் எனவெல்லாம் காரணம் காட்டுகிறார்கள். நல்லவேளை, பொங்கலுக்கு எப்பொழுதும் கதிரவனுக்குத்தான் படையல் இடுகிறார்கள்; எனவே, தமிழ்நாட்டில் இருக்கும் எல்லாருமே தி.மு.க வாக்காளர்கள்தான் எனச் சொல்லாமல் விட்டார்களே! அந்த வரைக்கும் தப்பித்தோம்!

      ஆனால், பீட்டாவுக்கு இத்தோடு நிறைவு கிடைக்காது சகோ! அவர்கள் கணக்கு வேறு. அது வணிகமும், தமிழ் சமூகத்தையே கையேந்த வைக்கும் உணவு அரசியலும் பின்னணியாய்க் கொண்டது. அந்த நோக்கம் நிறைவேறும் வரை அவர்கள் ஓயப் போவதில்லை.

      நீக்கு
  8. வணக்கம் ஐயா!

    தங்களது கவிதை கொதிக்கிறது.

    எனக்கு இப்பொழுதெல்லாம் அடிமை மனோபாவத்திற்குத் தமிழர்கள் பெரிதும் பழகிவிட்டார்கள் என்றே தோன்றுகிறது.

    காலம் மாறட்டும்!

    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிதை பற்றிய பாராட்டுக்கு மிக்க நன்றி ஐயா! ஆனால், எனக்கென்னவோ அடிமை மனப்பான்மை அண்மைக்காலமாகப் பெரிதும் தகர்ந்து விட்டதாய்த் தோன்றுகிறது. தமிழினப் படுகொலைக்கு முன்பு வரை பொதுவாக, போராட்டம் - இனம் - மொழி எனவெல்லாம் பேசுவதையே கீழ்ப் பார்வையில் பார்ப்பார்கள். ஆனால், இப்பொழுது மக்கள் பெரிதும் மாறியிருக்கிறார்கள்.

      மிக்க நன்றி! வணக்கம்!

      நீக்கு

என் புதினத்தை வாங்க

என் புதினத்தை வாங்க
மேலே உள்ள படத்தை அழுத்துங்கள்
பதிவுகளை உடனுக்குடன் பெற

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

வாட்சாப் தடத்தில் (Channel)...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு (1) 13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (9) அஞ்சலி (21) அணு உலை (2) அம்பிகை செல்வகுமார் (1) அம்மணம் (1) அமேசான் (6) அயல்நாட்டுத் தமிழர் (1) அரசியல் (91) அழைப்பிதழ் (7) அற்புதம்மாள் (2) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (40) ஆட்சென்ஸ் (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இங்கிலாந்து (1) இசுரேல் (2) இட ஒதுக்கீடு (4) இணையம் (19) இந்தித் திணிப்பு (1) இந்தியா (25) இரசியா (1) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இலக்கணம் (3) இலங்கை (1) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (23) இனம் (46) ஈழம் (44) உக்கிரேன் (1) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (24) எழுவர் விடுதலை (1) ஐ.நா (5) ஒருங்குறி (1) கடவுள் (1) கதை (3) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (11) கலைச்சொல்லாக்கம் (1) கவிஞர் தாமரை (1) கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் (2) கவிஞர் ரேவதி (1) கவிதை (19) காங்கிரஸ் (6) காசா (2) காணொளி (4) காதல் (2) காந்தியம் (1) கார்த்திக் சுப்புராஜ் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (5) கிரந்தம் (1) கீச்சுகள் (2) குழந்தைகள் (10) குறள் (2) கூகுள் (2) கையொப்பம் (2) கோட்பாடு (9) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (16) சந்திப்பு (1) சமயம் (12) சமற்கிருதம் (2) சமூகநீதி (4) சரிதா (1) சாதி (10) சிங்களர் (1) சித்திரக்கதைகள் (1) சிவகார்த்திகேயன் (1) சிறுவர் இலக்கியம் (4) சீமான் (7) சுற்றுச்சூழல் (6) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (3) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (31) தமிழ் தேசியம் (5) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (16) தமிழர் (45) தமிழர் பெருமை (17) தமிழறிஞர் முத்துநிலவன் (1) தமிழின் சிறப்பு (3) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (2) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (5) தாலி (1) தி.மு.க (11) திரட்டிகள் (4) திராவிடம் (9) திருமுருகன் காந்தி (1) திரைப்படம் (2) திரையுலகம் (9) திறனாய்வு (1) தினகரன் (1) துருவ் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (9) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தேர்தல்-2021 (2) தொலைக்காட்சி (2) தொழில்நுட்பம் (10) தோழர் தியாகு (1) நட்பு (13) நிகழ்வுகள் (5) நிர்மலா சீதாராமன் (1) நினைவேந்தல் (10) நீட் (5) நூல்கள் (10) நூற்றாண்டு (1) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (3) பதிவர் உதவிக்குறிப்புகள் (10) பதிவுலகம் (24) பா.ம.க (2) பா.ஜ.க (30) பார்ப்பனியம் (14) பாலஸ்தீனம் (2) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (10) பீட்டா (1) புதிய வேளாண் சட்டம் (1) புறநானூறு (1) புனைவுகள் (10) பெண்ணியம் (6) பெரியார் (3) பேரறிவாளன் (2) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (5) பொதுவுடைமை (2) பொதுவுடைமைக் கட்சி (2) பொருளாதாரம் (2) பொழிவு (2) போட்டி (1) போர் (3) போராட்டம் (10) ம.ந.கூ (2) மகான் (1) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (10) மடோன் அஷ்வின் (1) மணிவண்ணன் (1) மதிப்புரை (5) மதுவிலக்கு (2) மருத்துவம் (7) மாநாடு (1) மாநாடுகள் (1) மாய இயல்பியம் (1) மாவீரர் நாள் (3) மாற்றுத்திறனாளிகள் (2) மிஷ்கின் (1) மீம்ஸ் (7) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (3) மேனகா காந்தி (1) மொழியரசியல் (2) மொழியறிவியல் (2) மோடி (11) யுவர் கோட் (1) யோகிபாபு (1) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) ராஜீவ் படுகொலை (1) வரலாறு (22) வாழ்க்கைமுறை (17) வாழ்த்து (6) வானதி சீனிவாசன் (1) விக்ரம் (1) விடுதலை (6) விடுதலைப்புலிகள் (13) விருது (1) விஜய் (1) விஜய் சேதுபதி (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (7) வை.கோ (6) வைரமுத்து (2) ழகரம் (1) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டெர்லைட் (2) ஹமாஸ் (2) ஹீலர் பாஸ்கர் (1) Bhagavath Gita (1) BJP (1) Casteism (1) Cauvery (1) Dalit (1) Genocide (3) Hindu (1) Karnataka (1) Magical Realism (1) Manisha (1) Modi (1) Notion Press (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (2) Religion (1) Scheduled Castes (1) Sexual Harassment (1) Tamilnadu (1) Tamils (1) Unicode (1) Unicode Consortium (1) UP (1) Women (1) Yogi Adityanath (1)

முகரும் வலைப்பூக்கள்