.

சனி, நவம்பர் 26, 2016

மாவீரர் திருநாள் என்பது என்ன?


Salutation!

மாவீரர் திருநாள் என்பது என்ன? ல்லறைகளில் மலர் வளையம் சார்த்துவதா? கண்ணீருடன் மெழுகுத்திரி ஏந்துவதா? ஈகியரின் படங்களுக்குப் பூமாலை போடுவதா? அவர்தம் வீரம் பற்றி இணையத்தில் பாமாலை பாடுவதா? உண்ணாநிலை இருப்பதா? ஊர்வலம் நடப்பதா? அல்லது, சமூக ஊடகங்களில் மேதகு.பிரபாகரன் அவர்களின் படத்தை நம் படமாய் ஒருநாள் வைத்துக் கொள்வதா?...

இதுவா அஞ்சலி?... இதற்காகவா அவர்கள் உயிர் நீத்தார்கள்?... இவற்றையெல்லாம் எதிர்பார்த்தா அந்த சந்தனப் பேழைகள் சாவினைத் தழுவினர்?...

இல்லை; கண்டிப்பாக இல்லை! மாவீரர் ஒருவருக்கு நாம் செலுத்தக்கூடிய உண்மையான அஞ்சலி என்பது அவர் எந்தக் காரணத்துக்காக உயிரை நீத்தாரோ அந்தக் குறிக்கோளை அவருக்காக நாம் நிறைவேற்றி வைப்பதுதான்!

“எங்களுக்காக, இந்த சமூகத்துக்காக இன்னுயிர் தந்தவனே/ளே! இதோ, உன் குறிக்கோளை உன் தம்பி, தங்கைகள் வென்றெடுத்து விட்டதைப் பார்!” என்று பெருமையோடு இந்தப் புனித நாளில் நாம் அந்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினால், அது மரியாதை!... அதுதான் மரியாதை!!

ம்! தமிழீழ விடுதலைக்காகக் குரல் கொடுப்பது தொடரட்டும்!தே நேரம், முதலில், தமிழ்நாட்டில் இருக்கும் ஈழத் தமிழர்களின் விடுதலைக்கு என்ன செய்தோம் என்பதையும் சிந்திப்போம்!...

இனப்படுகொலையாளர்களைச் சிறையில் தள்ளுவதற்கான கோரிக்கைக்கு வலுச் சேர்ப்போம்! கூடவே, ஏற்கெனவே சிறையில் வாடும் இராசீவ் படுகொலைக் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவிப்பதும் நம் கடமையே என்பதை உணர்வோம்!...

மிழினத் தலைவர் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்பதற்குக் காலம் பதில் சொல்லட்டும். ஆனால், அவர் திரும்பி வந்து, இத்தனை நாட்களாக என்ன செய்தீர்கள் எனக் கேட்டால் அதற்கு நாம் என்ன பதில் சொல்து என்பதற்கும் ஆயத்தமாவோம்!...

கடமைகள் நிறைய இருக்கின்றன நண்பர்களே! வெறுமே போராட்டங்களாலும் ஆர்ப்பாட்டங்களாலும் உணர்ச்சி வசப்படுவதாலும் உரக்கப் பேசுவதாலும் எதையும் உருப்படியாகச் செய்து விட முடியாது. சட்ட முன்னெடுப்புகள், அரசியல் காய்நகர்த்தல்கள் என நாம் முழுமையாய்ப் பயன்படுத்தாத பல வாய்ப்புகள் இன்னும் திறந்தே கிடக்கின்றன!

சிந்திப்போம்! செயல்படுவோம்! சிறப்படைவோம்!
வாழ்க தமிழ்! வெல்க தமிழர்! 💪
மாவீரர்களுக்கு வீர வணக்கம்! 🙏
தமிழ்ப் பெருந்தலைவர் பிரபாகரன் அவர்களுக்குப்
பணிவன்பார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்! 🌹

 
🌸 🌸 🌸 🌸 🌸
படம்: நன்றி ஈழப் பார்வை.
விழியம்: நன்றி வாகை தொலைக்காட்சி.

பதிவர் பரிந்துரை

’எல்லாரும் அர்ச்சகராகலாம்’ சட்டம் சரியா? - கோயில் பூசையில் தமிழர் உரிமைகள்! மிரள வைக்கும் ஆய்வு

பார்ப்பனர் அல்லாதோரின் கோயில் பூசை உரிமைக்காகப் பாடுபட்ட தமிழ் முன்னோடிகள் முன்குறிப்பு : பார்ப்பனரல்லாத 36 பேரைக் கோயில் பூசாரிகளாக ...

தொடர...

மின்னஞ்சலில் தொடரப் பெட்டியில் மின்னஞ்சல் முகவரி தருக↓

அனுப்புநர்:FeedBurner

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

அ.தி.மு.க (7) அஞ்சலி (20) அணு உலை (2) அம்மணம் (1) அரசியல் (73) அழைப்பிதழ் (5) அறிவியல் (1) அன்புமணி (1) அனுபவம் (26) ஆட்சென்ஸ் (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இட ஒதுக்கீடு (3) இணையம் (18) இந்தித் திணிப்பு (1) இந்தியா (21) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (14) இனம் (45) ஈழம் (36) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (22) ஐ.நா (5) கதை (2) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (8) கவிஞர் தாமரை (1) கவிதை (14) காங்கிரஸ் (5) காணொலி (1) காவிரிப் பிரச்சினை (6) கீச்சுகள் (2) குழந்தைகள் (7) குறள் (1) கூகுள் (1) கையொப்பம் (2) கோட்பாடு (7) சசிகலா (1) சட்டம் (12) சமயம் (9) சமூகநீதி (4) சாதி (7) சித்திரக்கதைகள் (1) சிறுவர் இலக்கியம் (4) சீமான் (6) சுற்றுச்சூழல் (5) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (2) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (19) தமிழ் தேசியம் (4) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (11) தமிழர் (37) தமிழர் பெருமை (11) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (1) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (2) தாலி (1) தி.மு.க (7) திரட்டிகள் (3) திராவிடம் (4) திருமுருகன் காந்தி (1) திரையுலகம் (8) தினகரன் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (8) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தொலைக்காட்சி (1) தொழில்நுட்பம் (7) தோழர் தியாகு (1) நட்பு (7) நிகழ்வுகள் (1) நிர்மலா சீதாராமன் (1) நீட் (3) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (1) பதிவர் உதவிக்குறிப்புகள் (7) பதிவுலகம் (14) பா.ம.க (2) பா.ஜ.க (21) பார்ப்பனியம் (11) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (6) பீட்டா (1) புறநானூறு (1) புனைவுகள் (10) பெண்ணியம் (4) பெரியார் (3) பொங்கல் (3) பொதுவுடைமைக் கட்சி (1) பொருளாதாரம் (1) போராட்டம் (7) ம.ந.கூ (2) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (9) மதுவிலக்கு (1) மருத்துவம் (5) மாற்றுத்திறனாளிகள் (2) மீம்ஸ் (3) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (2) மேனகா காந்தி (1) மோடி (8) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) வரலாறு (18) வாழ்க்கைமுறை (12) வாழ்த்து (3) வானதி சீனிவாசன் (1) விடுதலை (3) விடுதலைப்புலிகள் (10) விருது (1) விஜய் (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (5) வை.கோ (4) வைரமுத்து (2) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டெர்லைட் (2) ஹீலர் பாஸ்கர் (1) Cauvery (1) Karnataka (1) Open Letter (1) Politics (1) Tamilnadu (1) Tamils (1)

முகரும் வலைப்பூக்கள்