.

வியாழன், ஜூன் 22, 2017

கமல்ஹாசனின் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் ஏன் இத்தனை இல்லுமினாட்டி குறியீடுகள்?

Kamal haasan's various poses in Tamil Bigg Boss TV show
‘கமல்ஹாசன் இல்லுமினாட்டி உறுப்பினர்’ என்று முதன் முதலில் கேள்விப்பட்ட பொழுது கைக்கொட்டிச் சிரித்தவர்களில் நானும் ஒருவன்தான். ஆனால், விஜய் தொலைக்காட்சியில் அவர் தொகுத்து வழங்கவிருக்கும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் விளம்பரத்தைப் பார்த்த பிறகு அப்படிச் சிரிக்க முடியவில்லை! அந்த அளவுக்கு அதில் இல்லுமினாட்டி கூறுகள் நிறைந்து கிடக்கின்றன.

‘இல்லுமினாட்டி’ பற்றி உங்களில் பலரும் ஏற்கெனவே கேள்விப்பட்டிருப்பீர்கள். “உண்மையில் இந்த உலகை ஆள்வது அந்தந்த நாட்டு அரசுகள் அல்ல. 13 அரசக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்தாம் பின்னணியில் இருந்து மொத்த உலகையும் ஆட்டுவிக்கிறார்கள். அந்த 13 குடும்பங்களின் கமுக்கக் (இரகசிய) குழுவுக்குப் பெயர்தான் இல்லுமினாட்டி (Illuminati). அரசியல், அறிவியல், கலை, இறையியல் (ஆன்மிகம்) எனப் பல துறைகளிலும் உள்ள பெரும்புள்ளிகள் இந்த இயக்கத்தின் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். பிரீமேசன் (freemason) எனப்படும் இந்த உறுப்பினர்கள் மூலம்தான் உலகெங்கும் கிளை பரப்பி இல்லுமினாட்டிகள் ஆண்டு வருகிறார்கள். உலகின் முதன்மையான அரசியல் முடிவுகள் அனைத்தும் இவர்கள் சொல்படிதான் நடக்கின்றன” எனவெல்லாம் என்னென்னவோ சொல்கிறார்கள்.

இங்குள்ள சிலர், ரூபாய்த்தாள்கள் மதிப்பிழந்ததாக அறிவிக்கப்பட்டது முதல் தங்கள் வீட்டுக்குப் பால் வராதது வரை எதற்கெடுத்தாலும் இல்லுமினாட்டி மீதே பழி சொல்லித் திரிவதால் இது ஏதோ வேலையற்றவர்களின் கட்டுக்கதை என நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். உண்மையில் இல்லுமினாட்டிகள் பற்றி வெளிநாடுகளில் மிகவும் தீவிரமாக விவாதிக்கப்படுகிறது. எழுத்தாளர்கள், அறிஞர்கள் போன்ற பலர் இல்லுமினாட்டிகள் இருப்பதாக நம்புகிறார்கள். இணையத்தின் அறிவுக் களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இல்லுமினாட்டி பற்றிக் கட்டுரைகள் உள்ளன.

இவற்றையெல்லாம் நம்புவதும் புறக்கணிப்பதும் அவரவர் விருப்பம். ஆனால், இல்லுமினாட்டிகள் மீதான குற்றச்சாட்டுகள் அவ்வளவு எளிதில் புறக்கணிக்கக்கூடியவை அல்ல. எடுத்துக்காட்டாக, திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் போன்றவற்றில் பார்வையாளர்கள் உணராத வகையில் சில குறியீடுகளை மறைமுகமாகக் காட்டி பொதுமக்களின் ஆழ்மனதில் சில தவறான எண்ணங்களைப் பதிய வைப்பதாகச் சொல்லும் குற்றச்சாட்டுக்கு அடுக்கடுக்கான விழிய (video), ஒளிப்படச் சான்றுகள் உள்ளன. இது மாயக்கலையில் (Magic) பரவலாகப் பயன்படுத்தப்படும் முறைதான் என்பதால் நம்பத்தகாததும் இல்லை! இப்படி ஒரு குற்றச்சாட்டில் ஏற்கெனவே சிக்கிய டிஸ்னி நிறுவனம் அதற்காக விளக்கம் தர வேண்டிய அளவுக்குப் போனது சிக்கல்.

எதற்காக இவற்றையெல்லாம் சொல்கிறேன் என்றால், இல்லுமினாட்டி தொடர்பான குற்றச்சாட்டுகளை வெறும் புரளி என அவ்வளவு எளிதில் நாம் ஒதுக்கி விட முடியாது என்கிற கருத்தை முன்வைக்கத்தான். இப்பொழுது பிக் பாஸ் (Bigg Boss) தொடர்பான விதயத்துக்குச் செல்வோம்.

கமல் காட்டும் முத்திரை

Kamal hassan shows Illuminati sign for Bigg Boss TV show

சர்ச்சில் முதலான அமெரிக்கக் குடியரசுத் தலைவர்கள் (பெரும்பாலானோர்), மைக்கேல் ஜாக்சன் போன்ற மேலை நாட்டுக் கலைஞர்கள் என வெளிநாட்டினர் மீது மட்டுமே இருந்து வந்த இல்லுமினாட்டி குற்றச்சாட்டு, அண்மைக் காலமாகத் தமிழ்நாட்டுக் கலைஞர்கள் மீதும் சுமத்தப்பட்டு வருகிறது. ரஜினி, தனுஷ், அநிருத், ஏமி ஜாக்சன் என அந்தப் பட்டியல் நீள்கிறது. எந்த அடிப்படையில் இவர்களை இவ்வாறு குற்றம் சாட்டுகிறார்கள் எனப் பார்த்தால், இவர்கள் அனைவருமே ஏதாவது ஒரு ஒளிப்படத்தில் (photo) ஏதேனும் ஒரு இல்லுமினாட்டி முத்திரையைக் காட்டியிருக்கிறார்கள் என்பதால்தான். அதே போன்ற ஒரு முத்திரையை பிக் பாஸ் நிகழ்ச்சியின் விளம்பரத்தில் வெளிப்படையாகக் காட்டியிருக்கிறார் கமல்ஹாசன் அவர்கள்.

விளம்பரத்தில் கமல் அவர்கள் ஆள்காட்டி விரலைக் கட்டை விரலோடு சேர்த்து வட்ட வடிவமாகப் பிடித்துத் தன் கண் மீது வைத்துக் காட்டுவார் (பார்க்க: மேலே உள்ள படம்). இல்லுமினாட்டிகளின் முத்திரைகளிலேயே உச்சக்கட்டப் புகழ் வாய்ந்தது இதுதான்! இது தவிர இன்னும் சில இல்லுமினாட்டி முத்திரைகளையும் காட்டியுள்ளார். இப்படி முத்திரை காட்டியதால்தான் மேற்சொன்ன கலைஞர்கள், அமெரிக்கக் குடியரசுத் தலைவர்கள் முதலான அனைவர் மீதும் இல்லுமினாட்டி என்கிற முத்திரை விழுந்தது. அதையேதான் இந்த விளம்பரத்தில் கமலும் செய்கிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் சின்னம்

The similarity between Illuminati sign in American Dollar and the Logo of Bigg Boss TV show

பிக் பாஸ் நிகழ்ச்சி விளம்பரத்தில் ஒரு கண்ணின் படம் காட்டப்படும். இது இல்லுமினாட்டிகளின் சின்னம் என்பது உலகறிந்த கதை. “அமெரிக்காதான் இல்லுமினாட்டிகளின் தலைநகரம். அமெரிக்காவுக்கு நாணயத்தை அச்சிட்டுக் கொடுப்பதே அவர்கள்தாம். அதனால்தான் இல்லுமினாட்டிகளின் சின்னமான ஒற்றைக் கண் படம் அமெரிக்க டாலரின் பின்னால் இடம் பெற்றுள்ளது” என்கிறார்கள் இல்லுமினாட்டிகள் இருக்கிறார்கள் என்பதை நம்புபவர்கள். உலகில் எத்தனையோ பொருட்கள் இருக்க, ஏன் இந்த ஒற்றைக் கண் படத்தை இந்த நிகழ்ச்சியின் சின்னமாகத் தேர்ந்தெடுத்தார்கள் என்பது அடுத்த கேள்வி.

உடனே சிலர், “நிகழ்ச்சியின் முழக்கமே ‘நான் உங்களைக் கண்காணிக்கிறேன்’ (I will be watching you) என்பதுதானே? அதற்குக் கண் படத்தை வைக்காமல் வேறு எதை வைப்பார்கள்?” என்று கேட்கலாம். அடுத்த செய்தியே அதுதான். அதாவது, இந்த நிகழ்ச்சியின் விளம்பரச் சொலவம் (caption).

பிக் பாஸ் நிகழ்ச்சியின் விளம்பர வாசகம்

“14 பிரபலங்கள்! 30 காமிராக்கள்! 100 நாட்கள்! ஓடவும் முடியாது; ஒளியவும் முடியாது” என்று நிகழ்ச்சி பற்றி விளக்கும் கமல், கடைசியாக “ஐ வில் பீ வாட்ச்சிங் யூ” என்கிறார்.

அமெரிக்க டாலரின் பின்னால் இருக்கும் அந்த ஒற்றைக் கண் படத்துக்குக் “கடவுள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்” என்பது பொதுவாகச் சொல்லப்படும் பொருள். ஆனால், “அது கடவுளின் கண் இல்லை. சாத்தானின் கண். சாத்தானை வழிபடுபவர்களான இல்லுமினாட்டிகள் நம் அனைவரையும் கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் அதன் பொருள்” என்பது இல்லுமினாட்டி கோட்பாட்டை நம்புபவர்களின் கூற்று.

விளம்பரத்தில் இதையேதான் கொஞ்சம் மாற்றிச் சொல்கிறார் கமல். கமலகாசன் இல்லுமினாட்டி இயக்கத்தைச் சேர்ந்தவர் என்கிற கோணத்தில் பார்த்தால், அவர் சொல்வதன் பொருள் என்ன?... “இல்லுமினாட்டிகளாகிய நாங்கள் உங்களைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறோம்” என்பதுதானே? ஆக, இந்த நிகழ்ச்சியின் விளம்பரச் சொலவம் கூட அப்படிக்கு அப்படியே இல்லுமினாட்டிகளுடைய சின்னத்தின் எழுத்து வடிவம்தான்!

நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் நாள் கூடவா?!!

வரும் 25.06.2017 முதல் ஒளிபரப்பாக இருக்கிறது பிக் பாஸ் நிகழ்ச்சி. இந்த நாளின் எண்களைத் தனித் தனியே பிரித்துக் கூட்டிப் பார்த்தால் [2+5+0+6+2+0+1+7] கூட்டுத்தொகை 23 என வருகிறது. இல்லுமினாட்டிகளால் பயன்படுத்தப்படும் சாத்தானின் எண்கள் எனக் குறிப்பிடப்படுபவையான 666, 13, 6 ஆகியவற்றின் வரிசையில் இன்னொரு முதன்மையான எண் 23!

The connection between Illuminaties and the number 23

எனக்குத் தெரிந்த வரை சொன்னேன். இன்னும் இதுபோல் எத்தனை இல்லுமினாட்டி கூறுகள் இந்நிகழ்ச்சியின் விளம்பரத்திலும் இது தொடர்பான இன்ன பிறவற்றிலும் மறைந்திருக்கின்றனவோ தெரியவில்லை.

Single Eye Illuminati pose of Bigg Boss TV show anchors in all languages
கமல்ஹாசன் நடத்தும் இந்த பிக் பாஸ் நிகழ்சியில் மட்டுமில்லை, இதற்கு முன்பு நடத்தப்பட்ட இந்தி பிக் பாஸ், கன்னட பிக் பாஸ் ஆகியவற்றிலும் மேற்படி குறியீடுகள் அனைத்தும் இருக்கின்றன. அந்த நிகழ்ச்சிகளிலும் ஒற்றைக் கண் படம்தான் சின்னமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது; அந்த நிகழ்ச்சிகளின் தொகுப்பாளர்களும் கண் மீது விரல் வைத்து முத்திரை பிடிக்கிறார்கள்; எல்லாவற்றுக்கும் மேலாக, அந்த நிகழ்ச்சிகளும் தமிழ் பிக் பாஸ் போலவே இல்லுமினாட்டிகளோடு தொடர்புடைய எண்கள் வரும் நாளில்தான் தொடங்கப்பட்டிருக்கின்றன. (இந்தி பிக் பாஸ் தொடங்கிய நாள் 3.11.2006. கூட்டுத்தொகை 13. அதாவது 13 அரசக் குடும்பங்களை நினைவூட்டும் எண். அல்லது, சாத்தானின் எண். கன்னட பிக் பாஸ் தொடங்கப்பட்ட நாள் 24.3.2013. கூட்டுத்தொகை 15; 1+5 = 6. சாத்தான் எண்).

ஆக, இந்த நிகழ்ச்சி முதன் முதலில் ஒளிபரப்பாகத் தொடங்கிய பொழுது என்ன மாதிரியான குறியீடுகள் பயன்படுத்தப்பட்டனவோ அவையே அந்த நிகழ்ச்சியின் பிறமொழி ஒளிபரப்புகளிலும் தொடர்கின்றன என்பதாக மிக எளிதான ஒரு விளக்கத்தை இதற்கு நாம் கற்பித்துக் கொள்ளலாம். ஆனால், ஒவ்வொரு மொழியிலும் நிகழ்ச்சி தொடங்கும் நாள் கூடக் குறிப்பிட்ட எண்களில் மட்டுமே அமையுமாறு பார்த்துக் கொள்வது அவ்வளவு தற்செயலானதா என்ன?

ஆனால் அதே நேரம், இவற்றையெல்லாம் நான் எழுதுவதற்குக் காரணம் கமல் அவர்கள் மீதோ, விஜய் தொலைக்காட்சி மீதோ குற்றம் சாட்டுவதற்காக இல்லை. இப்பொழுது பிரச்சினை கமலஹாசன் பிரீமேசனா இல்லையா, இந்த நிகழ்ச்சி இல்லுமினாட்டிகளால் நடத்தப்படுவதா இல்லையா என்பவை அல்ல. இருக்கிறதா இல்லையா எனத் தெரியாத, ஆனால் உலகெங்கும் மிகுந்த குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருக்கிற ஓர் இயக்கத்தோடு தொடர்புடையவையாகக் கருதப்படும் குறியீடுகளை இந்த அளவுக்கு வெளிப்படையாக ஒரு தொலைக்காட்சியில் காட்டுவது சரியா என்பதுதான்.

இப்படி ஓர் இயக்கம் இல்லை என்பதாக வைத்துக் கொண்டால், இல்லாத ஓர் இயக்கத்தை நினைவூட்டும் விதமான இந்தக் குறியீடுகளைப் பயன்படுத்துவதும் நிகழ்ச்சி ஒளிபரப்பு நாள் கூடக் குறிப்பிட்ட இயக்கத்தோடு தொடர்புடையதாக இருக்கும்படி அமைத்துக் கொள்வதும் அந்த உலகளாவிய பெரும்புரளிக்கு வலுச் சேர்ப்பதாக அமைகிறது. அந்த வகையில் இது மிகவும் தவறு!

ஒருவேளை, இல்லுமினாட்டி இருப்பது உண்மைதான் என்றால், நடந்து முடிந்த பல்வேறு பேரழிவுகளுக்கும் நடந்து கொண்டிருக்கும் அரசியல் சீர்கேடுகளுக்கும் காரணமானவர்களாகக் குற்றம் சாட்டப்படும் அவ்வளவு கொடுமையான ஓர் இயக்கத்தைத் தமிழ்நாட்டில் பரப்பும் விதமாக அவர்கள் குறியீடுகளை இந்நிகழ்ச்சியில் காட்டியிருப்பது பொறுத்துக் கொள்ள முடியாத குற்றம். அந்த வகையிலும் இது மிகத் தவறானது!

ஆக, இல்லுமினாட்டி என்கிற இயக்கம் இருக்கிறதோ இல்லையோ, அதை நினைவூட்டும் விதமான குறியீடுகளை இந்நிகழ்ச்சியில் பயன்படுத்தியிருப்பது கண்டிப்பாகத் தவறானது! கமல்ஹாசன் போன்ற பொறுப்புள்ள கலைஞர் ஒருவர் இப்படிப்பட்ட முயற்சிகளுக்குத் துணை போவது நல்லதில்லை. இது வருங்காலத் தலைமுறையினருக்கு – குறிப்பாக, கலைஞர்களுக்கு - தவறான வழிகாட்டலாக அமையும்.

எனவே, விஜய் தொலைக்காட்சி உடனடியாக இந்நிகழ்ச்சியிலுள்ள இல்லுமினாட்டியை நினைவூட்டும் கூறுகளை நீக்க வேண்டும்! கமல்ஹாசன் அவர்கள் இதை வலியுறுத்த வேண்டும்!
❀ ❀ ❀ ❀ ❀

படங்கள்: நன்றி விஜய் தொலைக்காட்சி, கிரவுண்டு சீரோ, ஸ்பிரெட்ஷர்ட்டு, கில்லுமினாட்டி, வயாகாம் 18 ஊடக நிறுவனம்.

தொடர்புடைய பதிவுகள்: 
கலையுலகில் கமலியல்! (Kamalism in Tamil Cinema!) - கமல்ஹாசன் வைர விழாப் பிறந்தநாள் சிறப்பு விழியம் முழுமையான உரையுடன் (with full script)! 
 
பதிவின் கருத்துக்கள் சரி எனத் தோன்றினால் கீழ்க்காணும் வாக்குப்பட்டைகள் மூலம் மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்களேன்! கூடவே, உங்கள் செம்மையான கருத்துக்களுக்கும் காத்திருக்கிறேன்! தமிழில் எழுத வசதியில்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது கீழே 'தமிழ்ப் பலகை'! தனிப்பட ஏதும் தெரிவிக்க விரும்பினால், அதற்கு அடுத்து உள்ள 'அணுக' படிவத்தைப் பயன்படுத்தலாம்!

 பதிவுகளை உடனுக்குடன் பெறக் கீழ்க்காணும் பொத்தானைச் சொடுக்கி
வாட்சாப் தடத்தில் (Whatsapp Channel) இணையுங்கள்!!

Aga Sivappu Thamizh Whatsapp Channel

முகநூல் வழியே கருத்துரைக்க

24 கருத்துகள்:

  1. இந்த விளம்பரத்தில் இவ்வளவு இருக்கின்றனவா...?

    அடியேனும் ஒரு சாத்தான் - அன்பிற்கு...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் ஐயா! எனக்கு இல்லுமினாட்டிகள் பற்றி நிறையத் தெரியாது. அவ்வளவாக அந்தக் கோட்பாட்டின் மீது நம்பிக்கையும் கிடையாது. அப்படிப்பட்ட எனக்கே இதில் இத்தனை குறியீடுகள் தென்படுகின்றன என்றால், இவை பற்றி நிறையத் தெரிந்தவர்களுக்கு இன்னும் நிறையவே புரிபடும். ஆனால், எப்பொழுது பார்த்தாலும், எதற்கெடுத்தாலும் ’இல்லுமினாட்டி... இல்லுமினாட்டி’ எனப் புலம்பும் யாரும் இது பற்றி விரிவாகப் பதியக் காணோம். அதனால்தான் நான் எழுத வேண்டியதாகிப் போயிற்று.

      வழக்கம் போல் முதல் ஆளாக வந்து கருத்திட்ட சாத்தானுக்கு நன்றி! :-)

      நீக்கு
  2. எத்துணை பெரிய ஆய்வுக்கட்டுரை இது. சாதாரண விளம்பரம் என தட்டிபோகாமல் அதை வைத்து ஆராய்ந்து எழுதியதில் உண்மைகளாயிருப்பதும் உண்மை. இலுமினாட்டிகளின் உலகமாகி ரெம்ப நாள் ஆகி விட்டது ஐயா.எல்லோரும் ஆட்டுவிக்கப்படுகின்றார்கள். எது நடக்க வேண்டுமோ அது நடந்தே தீரும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நட்பிற்கினிய நிஷா அவர்களுக்கு நேச வணக்கம்! உங்கள் முதல் வருகைக்கு என் அன்பான வரவேற்பை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.

      அந்த அளவுக்கு இது பெரிய ஆராய்ச்சிக் கட்டுரையெல்லாம் இல்லை. இல்லுமினாட்டிகள் பற்றி வெகு காலத்துக்கு முன்பே தெரியும். தெரிந்த செய்திகளைப் பற்றி இணையத்தில் தேடி மேலும் கொஞ்சம் உறுதிப்படுத்திக் கொண்டு எழுதி விட்டேன். அவ்வளவுதான். இல்லுமினாட்டிகள் இருப்பது உண்மை என நான் அவ்வளவாக நம்பவில்லை. அதே நேரம், கணிசமானோர் அதை நம்புகிறார்கள். அது தொடர்பான செய்திகள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் மேலும் அந்தச் செய்திகளுக்கு வலுச் சேர்க்கும் வகையில் அல்லது அந்தக் குழு உண்மையிலேயே இருக்கிறது என்றால் அதற்கு ஆள் சேர்க்கும் வகையில் கமல் போன்ற பெருங்கலைஞர் ஒருவர் இப்படி நடந்து கொள்வது தவறு என்பதே என் கருத்து.

      //எது நடக்க வேண்டுமோ அது நடந்தே தீரும்// - என்னவோ, நல்லதாக நடந்தால் சரி.

      நீக்கு
    2. உலக்ச்சம்பவங்களின் தொடர்ச்சியை காணும் போது எவரோ ஏதோ ஒன்று பின்னனியில் இருந்து ஆட்டுவிப்பது உண்மை என புரிய வைக்கின்ம்றது அல்லவா? அப்படி ஆட்டுவிப்பவர்களை இலுமினாட்டிகள் என சொல்வதும் உண்மை தான். அதை விட நீங்கள் கவனிக்க வேண்டியது இந்த 666 எனும் இலக்கங்களின் தொடர்ச்சியாக மனிதர்களுக்கும் இனி பெயரில்லாமல் இலக்கமிடப்படுதல். அதை பல நாடுகள் ஏற்கனவே செய்ய ஆரம்பித்து விட்டது. இப்போதெல்லாம் மனிதர்களை அடையாளப்படுத்த அவன் கண்ணை அல்லது உடல் அங்கங்களை ஸ்கேன் செய்தும் அவனுக்கு இலக்கமிட்டுமே தானே அடையாள அட்டை கொடுக்கின்றார்கள். இந்தியாவின் ஆதார் அட்டை கூட அவ்வகையில் தான் வரும் என நினைக்கின்றேன்.

      இந்த இலுமினாட்டிகளின் நிலையான இருப்பிடம் தான் சில பல நேரம் குழப்பத்தினை தருகின்றதே தவிர அவர்கள் இருப்பதும் அவர்களின் அட்டகாசங்களும் பொய்யல்ல. இத்தாலியிலிருந்து என்கின்றார்கள் இல்லை அமேரிக்கா என்ப்கின்றார்கள், இஸ்ரேலை சொல்கின்றார்கள், ஆனால் உலகம் முழுதும் பரவிக்கொண்டே இருக்கின்றார்கள்.

      நீக்கு
    3. நான் இங்கே முதல் தடவை தான் வருகின்றேன் என்பதும் ஆச்சரியம் எப்படி உங்கள் வலைப்பூ என் பார்வையில் படாமல் போனது?

      நீக்கு
    4. இல்லுமினாட்டிகள் இருப்புப் பற்றிய உங்கள் கருத்துக்கள் அத்தனையும் ஏற்றுக் கொள்ள வேண்டியவையே நிஷா அவர்களே! ஆனால், இவையெல்லாமே ஏரணமான (logical) வாதங்கள் மட்டும்தானே? உறுதியான சான்றுகள் அல்லவே! அதனால்தான் நம்ப முடியவில்லை என்கிறேன். மேலும், உலகையே பின்னின்று ஆட்டுவிக்கும் ஆற்றல் அமெரிக்க அரசு என்பதுதான் கண்ணுக்குத் தெரியும் உண்மையாக இருக்கிறது, இல்லையா? அப்படியிருக்க, அதையும் தாண்டிக் கண்ணுக்குத் தெரியாத ஒரு குழு இருப்பதாக நாம் ஏன் கற்பனை செய்து கொள்ள வேண்டும் என்கிற கேள்வியும் எழுகிறது. :-) பார்ப்போம், கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள். அப்படி ஏதேனும் இருந்தால் உண்மை ஒருநாள் வெளியில் வந்தே தீரும்.

      நீக்கு
    5. //நான் இங்கே முதல் தடவை தான் வருகின்றேன் என்பதும் ஆச்சரியம் எப்படி உங்கள் வலைப்பூ என் பார்வையில் படாமல் போனது?// - அதனாலென்ன, இனி தொடர்ந்து வாருங்கள்! உங்கள் செம்மையான கருத்துக்களைத் தாருங்கள்! :-)

      நீக்கு
  3. # எனக்கு கம்மினாட்டி தான் தெரியும், இல்லுமினாட்டி தெரியாது என்று நினைத்தேன்!!!! அந்த வார்த்தைதான் எனக்குப் புதிது. அதன் சாரம் ஏற்கெனவே நான் மயன் காலண்டர் முதல் டாவின்சி கோட் முதல் பல இடங்களிலும் கேள்விப்பட்டிருக்கிறேன்.

    # அப்படி இல்லாத ஒரு குழு என்று வைத்துக் கொண்டால் கூட தேதி, சின்னம் என்று இப்படி அமைப்பதுவும் ஒரு விளம்பர யுக்தியாக இருக்குமோ!

    # இந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்ன பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டார்கள் என்பதை பின்தான் நான் அறியவேண்டும்.

    # சாதாரணமாக அந்த ஆப்பிளைத் தின்று பகுத்தறிவு கொண்டவன் ஆதிமனிதன், தின்ன வைத்தவன் சாத்தான் என்று படித்த நினைவு. மனிதர்களை சிந்திக்காமல், பொம்மை போல இருக்கச் செய்யாமல் பகுத்தறிவு பெற அந்த ஆப்பிள் உதவியது என்றும் படித்த நினைவு. லியனார்டோ முதல் சில அமெரிக்க ஜனாதிபதிகள் வரை நிறைய பிரபலங்கள் இவ்வகை நம்பிக்கை கொண்டவர்கள் என்றும் (அரைகுறையாகப்) படித்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //எனக்கு கம்மினாட்டி தான் தெரியும், இல்லுமினாட்டி தெரியாது என்று நினைத்தேன்!!!!// - :-D

      //அப்படி இல்லாத ஒரு குழு என்று வைத்துக் கொண்டால் கூட தேதி, சின்னம் என்று இப்படி அமைப்பதுவும் ஒரு விளம்பர யுக்தியாக இருக்குமோ// - அட ஆமாம்! அப்படியும் இருக்கலாம் இல்லையா?

      //சாதாரணமாக அந்த ஆப்பிளைத் தின்று பகுத்தறிவு கொண்டவன் ஆதிமனிதன், தின்ன வைத்தவன் சாத்தான் என்று படித்த நினைவு. மனிதர்களை சிந்திக்காமல், பொம்மை போல இருக்கச் செய்யாமல் பகுத்தறிவு பெற அந்த ஆப்பிள் உதவியது என்றும் படித்த நினைவு. லியனார்டோ முதல் சில அமெரிக்க ஜனாதிபதிகள் வரை நிறைய பிரபலங்கள் இவ்வகை நம்பிக்கை கொண்டவர்கள் என்றும் (அரைகுறையாகப்) படித்திருக்கிறேன்// - அரைகுறையாக என்று நீங்கள் கூறினாலும் இவை அனைத்துமே சரிதான். அதனால்தான் எனக்கும் சாத்தான் மீது பெரிய வெறுப்பு ஏதும் இல்லை. அது மட்டுமின்றி, தமிழர் பண்பாடு - பழக்க வழக்கம் - சடங்கு - பூசை முறை ஆகியவையும் இல்லுமினாட்டிகள், சாத்தான் பற்றிய இந்தக் கோட்பாட்டுக்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு. (இதைப் படித்துவிட்டு எவனா/ளாவது என்னை பிரீமேசன் எனச் சொல்லாமல் இருந்தால் சரி. :-))

      உங்கள் விரிவான, பொருளாழ்ந்த கருத்துக்களுக்கு மிக்க நன்றி ஐயா!

      நீக்கு
  4. சகா! இந்த இல்லுமினாட்டிகள், குறியீடுகள் குறித்து ஓரளவு தெரியும் என்றாலும், உலகை 13 அரச குடும்பங்கள்தான் ஆள்கின்றன என்று சமீபகாலத்தில் சொல்லப்பட்டாலும், அதன் பின் இத்தனை விடயங்கள் இருக்கின்றன என்பது பற்றி இப்போதுதான் தங்கள் பதிவின் மூலம்தான் அறிகிறேன். கிறித்தவர்கள் அடிக்கடிச் சொல்லுவது, இவ்வுலகம் சாத்தான்களின் கையில் போக இருக்கிறது அதனை அனுமதிக்கக் கூடாது. ஜெபியுங்கள், ஆண்டவரின் கையில் போக வேண்டும்' என்றெல்லாம் பரப்புரைகளும் செய்யப்படுவதைப் பார்த்திருக்கிறேன். அப்படியென்றால் அவர்கள் சொல்லும் சாத்தான்கள் இந்த இல்லுமினாட்டிகள் தானா? ஒரு வேளை அவர்கள் நம்பும் அந்தசாத்தானின் எண்கள் என்று சொல்லப்படுபவை அனைத்தும் இந்த இல்லுமினாட்டிகள் பின்பற்றுவதால் அப்படி ஓர் எண்ணம் வந்ததா?

    இதுவரை யாரும் பேசாத இல்லுமினாட்டிகள் பற்றி அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். தொலைக்காட்திப் பெட்டி இல்லாததால் கமலின் நிகழ்ச்சி பற்றித் தெரியவில்லை. உங்கள் தகவலின் படி பார்த்தால் அதில் இன்னும் நிறைய இருக்கும் போல....பார்ப்போம்..நீக்குகிறார்களா என்று!!

    அறிந்த விடயத்தைப் பற்றி மேலும் பல அறிய முடிந்தமைக்கு மிக்க நன்றி சகா!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இந்த இல்லுமினாட்டிகள், குறியீடுகள் குறித்து ஓரளவு தெரியும் என்றாலும், உலகை 13 அரச குடும்பங்கள்தான் ஆள்கின்றன என்று சமீபகாலத்தில் சொல்லப்பட்டாலும், அதன் பின் இத்தனை விடயங்கள் இருக்கின்றன என்பது பற்றி இப்போதுதான் தங்கள் பதிவின் மூலம்தான் அறிகிறேன்// - இன்னும் கூட நிறைய உண்டு சகா! எல்லாமே வெறும் கோட்பாடுகள்தாம். நம்பிக்கைகள்தாம். போதுமான சான்று கிடையாது. அப்புறம் பேசும்பொழுது சொல்கிறேன்.

      //அப்படியென்றால் அவர்கள் சொல்லும் சாத்தான்கள் இந்த இல்லுமினாட்டிகள்தானா?// - இல்லை சகா! சாத்தானை வழிபடுகிறவர்களின் கமுக்கக் குழுதான் இல்லுமினாட்டி. இல்லுமினாட்டிகளே சாத்தான் இல்லை.

      //இதுவரை யாரும் பேசாத இல்லுமினாட்டிகள் பற்றி அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்// - ஐயோ இல்லை சகா! நிறைய பேர் இது பற்றித் தங்கள் மனம் போன போக்கில் அள்ளி விடுகிறார்கள். அதனால்தான் அப்படிப்பட்டவர்களின் முயற்சிக்கு மேலும் தூபம் போடும் விதமாய் இப்படிச் செய்யாதீர்கள் என நான் எழுத வேண்டியதாய்ப் போயிற்று.

      //பார்ப்போம்..நீக்குகிறார்களா என்று!!// - அது மட்டும் நடக்காது.

      நீக்கு
  5. இது போன்ற நிகழ்ச்சிகள் psychological warfare. மக்கள் மனங்களை மழுங்கடிக்கும் மறைமுகப் போர். ஒட்டு கேட்பதில், உளவு பார்ப்பதில் என்ன தவறிருக்கிறது என்ற கருத்தைத் திணிக்க மூளைச் சலவை செய்யப்படுகிறது. நல்ல நிகழ்ச்சிகளை நாம்தான் தேர்வு செய்து பார்க்க வேண்டும். நீங்கள் சொல்வது போல் இலுமினாட்டிகள் இருக்கிறார்களோ இல்லையோ, தெரிந்தேதான் இக்குறியீடுகளை பயன்படுத்துகிறார்கள். இது ஒரு வகை விளம்பர யுக்தி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் கருத்தையும் நோக்கத்தையும் மிகச் சரியாகப் புரிந்து கொண்டு கருத்துரைத்தமைக்கு மிக்க நன்றி நண்பரே!

      //இது போன்ற நிகழ்ச்சிகள் psychological warfare. மக்கள் மனங்களை மழுங்கடிக்கும் மறைமுகப் போர். ஒட்டு கேட்பதில், உளவு பார்ப்பதில் என்ன தவறிருக்கிறது என்ற கருத்தைத் திணிக்க மூளைச் சலவை செய்யப்படுகிறது// - நான் சிந்திக்காத கோணம்! மிக்க நன்றி!

      நீக்கு
  6. FreeMason என்ற குழுவினர் சாத்தான் வழிபாடு செய்பவர்கள் என்று தகவல் உண்டு. தியஸாபிக்கல் சொசைட்டியினரும் black magic-கில் ஈடுபடுபவர்கள் என்று நீண்ட விவாதங்கள் உண்டு. அதே வகையினரா இந்த இல்லுமினாட்டிகள் என்று தெரியவில்லை. சாத்தான்கள் வசம் போய்விடாதபடி கமலை யாராவது காப்பாற்றியாக வேண்டுமே! கௌதமியும் இப்போது அவரோடு இல்லை..... - இராய செல்லப்பா சென்னையில் இருந்து.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நகைச்சுவை கலந்த உங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி ஐயா! மிகவும் ரசித்தேன்!

      நீக்கு
  7. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரே! இக்கட்டுரை முழுக்க முழுக்க ஊடக அறம் சார்ந்த ஒன்றுதானே தவிர, சமய நம்பிக்கை சார்ந்தது இல்லை. இல்லுமினாட்டிகள் கடவுளைக் கும்பிட்டாலும் சாத்தானைக் கும்பிட்டாலும் அதனால் எனக்கு எந்தக் கவலையும் இல்லை. அவர்கள் ஊடகத்தையும் அரசியலையும் இன்ன பிறவற்றையும் எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்பது பற்றி மட்டுமே என் கவலை. அந்த அடிப்படையில்தான் இந்தக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது. எனவே, சமயம் சார்ந்த, மூட நம்பிக்கையைத் தூண்டும் விதத்தில் அமைந்திருக்கிற உங்கள் கருத்தை நீக்க வேண்டியவனாய் இருக்கிறேன். அதற்காக என் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

      நீக்கு
  8. உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி! உங்கள் முதல் வருகைக்கு என் உளமார்ந்த நல்வரவு! தொடர்ந்து படியுங்கள் உங்கள் செம்மையான கருத்துக்களைப் பதியுங்கள்! உங்களுக்குப் பிடித்த இந்தப் பதிவு மற்றவர்களுக்கும் சென்று சேர மேற்கண்ட கட்டுரையின் இறுதியில் உள்ள வாக்குப்பொத்தான்களை அழுத்துங்கள்! நன்றி! வணக்கம்!

    பதிலளிநீக்கு
  9. அமெரிக்க அரசையே கட்டுபடுத்தும் ஒரு அமைப்பு உண்டென்றால் அது CIA யேதான் ,இல்லுமினாட்டிகள் பின் புலத்தில் அதுதான் இருக்க வாய்ப்புண்டு :)
    த ம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பகவான்ஜி ஐயா! வெகு நாட்களுக்குப் பிறகு உங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி! உங்கள் ஊகம் சுவையானது. ஆனால், இல்லுமினாட்டி பற்றி எழுதுபவர்கள் சி.ஐ.ஏ., உட்பட அனைத்துக்கும் பின்புலத்திலிருந்து ஆட்டுவிக்கும் ஆற்றலாக இல்லுமினாட்டி இயக்கத்தை வருணிக்கிறார்கள். உங்கள் கருத்துக்கும் வாக்குக்கும் மிக்க நன்றி!

      நீக்கு
  10. பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்கவில்லை.... அவை பற்றிய பதிவுகளையும் படிக்கவில்லை... இப்போதுதான்.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிக்பாசு பற்றிய பதிவுகளைப் படிக்காத நீங்கள் அது பற்றிய என் பதிவை மட்டும் படித்துக் கருத்துரைத்திருப்பது கண்டு பெருமைப்படுகிறேன்! மிக்க நன்றி ஐயா! நானும் என் குடும்பத்தினரும் அந்த நிகழ்ச்சியைத் தொடக்கத்தில் பார்த்தோம். பின்னர், அதன் போக்கு மிகவும் தவறாக இருந்ததால் பார்ப்பதை நிறுத்தி விட்டோம்.

      நீக்கு
  11. நிறைய தகவல்கள் அறிந்தேன் நண்பரே
    பகிர்வுக்கு நன்றி. இவைகள் புரளியாக இருக்க வேண்டும் என்பது எமது அவா!

    பதிலளிநீக்கு

என் புதினத்தை வாங்க

என் புதினத்தை வாங்க
மேலே உள்ள படத்தை அழுத்துங்கள்
பதிவுகளை உடனுக்குடன் பெற

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

வாட்சாப் தடத்தில் (Channel)...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு (1) 13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (9) அஞ்சலி (21) அணு உலை (2) அம்பிகை செல்வகுமார் (1) அம்மணம் (1) அமேசான் (6) அயல்நாட்டுத் தமிழர் (1) அரசியல் (91) அழைப்பிதழ் (7) அற்புதம்மாள் (2) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (40) ஆட்சென்ஸ் (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இங்கிலாந்து (1) இசுரேல் (2) இட ஒதுக்கீடு (4) இணையம் (19) இந்தித் திணிப்பு (1) இந்தியா (25) இரசியா (1) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இலக்கணம் (3) இலங்கை (1) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (23) இனம் (46) ஈழம் (44) உக்கிரேன் (1) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (24) எழுவர் விடுதலை (1) ஐ.நா (5) ஒருங்குறி (1) கடவுள் (1) கதை (3) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (11) கலைச்சொல்லாக்கம் (1) கவிஞர் தாமரை (1) கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் (2) கவிஞர் ரேவதி (1) கவிதை (19) காங்கிரஸ் (6) காசா (2) காணொளி (4) காதல் (2) காந்தியம் (1) கார்த்திக் சுப்புராஜ் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (5) கிரந்தம் (1) கீச்சுகள் (2) குழந்தைகள் (10) குறள் (2) கூகுள் (2) கையொப்பம் (2) கோட்பாடு (9) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (16) சந்திப்பு (1) சமயம் (12) சமற்கிருதம் (2) சமூகநீதி (4) சரிதா (1) சாதி (10) சிங்களர் (1) சித்திரக்கதைகள் (1) சிவகார்த்திகேயன் (1) சிறுவர் இலக்கியம் (4) சீமான் (7) சுற்றுச்சூழல் (6) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (3) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (31) தமிழ் தேசியம் (5) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (16) தமிழர் (45) தமிழர் பெருமை (17) தமிழறிஞர் முத்துநிலவன் (1) தமிழின் சிறப்பு (3) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (2) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (5) தாலி (1) தி.மு.க (11) திரட்டிகள் (4) திராவிடம் (9) திருமுருகன் காந்தி (1) திரைப்படம் (2) திரையுலகம் (9) திறனாய்வு (1) தினகரன் (1) துருவ் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (9) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தேர்தல்-2021 (2) தொலைக்காட்சி (2) தொழில்நுட்பம் (10) தோழர் தியாகு (1) நட்பு (13) நிகழ்வுகள் (5) நிர்மலா சீதாராமன் (1) நினைவேந்தல் (10) நீட் (5) நூல்கள் (10) நூற்றாண்டு (1) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (3) பதிவர் உதவிக்குறிப்புகள் (10) பதிவுலகம் (24) பா.ம.க (2) பா.ஜ.க (30) பார்ப்பனியம் (14) பாலஸ்தீனம் (2) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (10) பீட்டா (1) புதிய வேளாண் சட்டம் (1) புறநானூறு (1) புனைவுகள் (10) பெண்ணியம் (6) பெரியார் (3) பேரறிவாளன் (2) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (5) பொதுவுடைமை (2) பொதுவுடைமைக் கட்சி (2) பொருளாதாரம் (2) பொழிவு (2) போட்டி (1) போர் (3) போராட்டம் (10) ம.ந.கூ (2) மகான் (1) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (10) மடோன் அஷ்வின் (1) மணிவண்ணன் (1) மதிப்புரை (5) மதுவிலக்கு (2) மருத்துவம் (7) மாநாடு (1) மாநாடுகள் (1) மாய இயல்பியம் (1) மாவீரர் நாள் (3) மாற்றுத்திறனாளிகள் (2) மிஷ்கின் (1) மீம்ஸ் (7) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (3) மேனகா காந்தி (1) மொழியரசியல் (2) மொழியறிவியல் (2) மோடி (11) யுவர் கோட் (1) யோகிபாபு (1) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) ராஜீவ் படுகொலை (1) வரலாறு (22) வாழ்க்கைமுறை (17) வாழ்த்து (6) வானதி சீனிவாசன் (1) விக்ரம் (1) விடுதலை (6) விடுதலைப்புலிகள் (13) விருது (1) விஜய் (1) விஜய் சேதுபதி (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (7) வை.கோ (6) வைரமுத்து (2) ழகரம் (1) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டெர்லைட் (2) ஹமாஸ் (2) ஹீலர் பாஸ்கர் (1) Bhagavath Gita (1) BJP (1) Casteism (1) Cauvery (1) Dalit (1) Genocide (3) Hindu (1) Karnataka (1) Magical Realism (1) Manisha (1) Modi (1) Notion Press (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (2) Religion (1) Scheduled Castes (1) Sexual Harassment (1) Tamilnadu (1) Tamils (1) Unicode (1) Unicode Consortium (1) UP (1) Women (1) Yogi Adityanath (1)

முகரும் வலைப்பூக்கள்