.
கருணாநிதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கருணாநிதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், ஆகஸ்ட் 20, 2018

கருணாநிதி மீதான ஈழ துரோகக் குற்றச்சாட்டு! - பழி துடைக்க உடன்பிறப்புகள் செய்ய வேண்டியது என்ன?

Treacherous accusation against Karunanidhi on Eelam Genocide! - What are the DMK people to do?
தவறு செய்பவர் தலைவராகவே இருந்தாலும் எதிர்க்க வேண்டும் எனும் கொள்கை காரணமாகப் பிறந்த கட்சி தி.மு.க. ஆனால் இன்று, செய்தவர் உங்கள் தலைவர் என்பதற்காக, ஒரு மாபெரும் குற்றத்தை நியாயப்படுத்துவதையே முழு நேரப் பணியாக வைத்துக் கொண்டிருக்கிறீர்கள் அவர்தம் உயிரினும் மேலான உடன்பிறப்புக்கள்!

அண்மையில் தி.மு.க., தலைவர் கருணாநிதி மறைந்ததையொட்டி, ஈழத் தமிழினப்படுகொலையின் பொழுது அவர் நடந்து கொண்ட விதம் சரியே என நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள் திராவிடவாத அன்பர்கள். கருணாநிதி கவலைக்கிடமாக இருந்தபொழுதே இது குறித்து உங்களுக்கும் தமிழ்த் தேசியவாதிகளுக்கும் இணையத்தில் சொற்போர் துவங்கி விட்டது என்றாலும், இப்பொழுது இன்னும் தீவிரமடைந்திருக்கிறது. இதில் தாள முடியாத வேதனை என்னவென்றால், நான் மிக மிக மிக மதிக்கிற வலையுலக நண்பர்கள் பலரும் கூட இந்த நியாயப்படுத்தும் இழிசெயலைத் தயங்காமல் செய்கிறீர்கள் என்பதுதான்!

தோழர்களே, தமிழர்களான நம்மைப் பொறுத்த வரையில், கருணாநிதி என்பவர் வெறும் அரசியல்வாதியோ முதலமைச்சரோ கட்சித் தலைவரோ மட்டுமில்லை; இவை எல்லாவற்றையும் தாண்டி அவர் மீதும் அவர் ஆளுமை மீதும் அவர் தமிழ் மீதும் அவர் குடும்பத்தினர் மீதும் தனிப்பட்ட முறையில் உணர்வார்ந்த ஒரு பிணைப்பு நம் அனைவருக்கும் உண்டு; அஃது எனக்கும் இருந்தது உண்டு. ஆனால் அதற்காக, அவர் மீதான இவ்வளவு பெரிய குற்றச்சாட்டையும் போகிற போக்கில் புறங்கையால் தட்டி விட முடியுமா என்ன?

செவ்வாய், மே 10, 2016

தி.மு.க, அ.தி.மு.க அல்லாத ஓர் ஆட்சி வேண்டுமா? - இதோ நடைமுறைக்கு ஏற்ற ஒரு தீர்வு! | A Practical Solution for TN Election 2016


Atrocities of DMK and ADMK

தேர்தல் - 2016 (பகுதி - 4) 

தி.மு.க-வுக்கும் அ.தி.மு.க-வுக்கும் ஏன் வாக்களிக்கக் கூடாது எனச் சொல்லி நான் தனிப்பதிவு ஏதும் எழுத வேண்டியதில்லை. தலைப்பை மட்டும் கொடுத்துக் கீழே வெறுமையாக விட்டுவிட்டால் போதும்; மக்களே வந்து எழுதிக் குவித்து விடுவார்கள். அந்த அளவுக்கு இந்த இரு கட்சிகள் மீதும் மக்கள் வெறுப்பில் இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் சாராய ஆறு பெருக்கெடுக்கத் திறப்பு விழா நடத்தியது தி.மு.க என்றால், மாநிலமே அந்தப் பேரலையில் மூழ்க டாஸ்மாக் கொண்டு வந்தது அ.தி.மு.க! தமிழினப் படுகொலை நேரத்தில் தமிழர்களுக்கு துரோகம் இழைத்தவர் கருணாநிதி என்றால், அந்தப் படுகொலைக்கு மூலக் காரணமாக இருந்த விடுதலைப்புலிகள் மீதான தடையைக் கொண்டு வந்தவர் -இன்றும் அதற்காகப் பெருமையடித்துக் கொள்ளும்- ஜெயலலிதா! ஏழு தமிழர் விடுதலை விவகாரம் தன் கையில் இருந்தபொழுது அதை சாமர்த்தியமாகக் கை கழுவியது தமிழினத்தலைவரின் அரசு என்றால், ஒருபுறம் அவர்களுக்காக உச்சநீதிமன்றத்தில் வழக்காடிக் கொண்டே மறுபுறம் சாகக் கிடந்த தகப்பனாரைப் பார்ப்பதற்குக் கூட நளினிக்குச் சிறைவிடுப்பு (parole) தரக்கூடாதென்று உயர்நீதிமன்றத்தில் வாதாடியது ஈழத்தாயின் அரசு!

இவை மட்டுமா? மின் தட்டுப்பாடு, வேளாண்துறைச் (agriculture) சீரழிவு, தமிழ் மீனவர் மீதான தாக்குதல்கள், ஜல்லிக்கட்டு போன்ற பண்பாட்டு அடையாளங்கள் நசுக்கப்படுதல், அணு உலைத் திட்டம் - நுண்நொதுமித் (நியூட்ரினோ) திட்டம் எனப் பேரழிவுத் திட்டங்கள் திணிக்கப்படுதல், அண்டை மாநிலங்கள் - நடுவணரசு முதல் உலக நாடுகள் வரை யாருமே தமிழர்களை மனிதர்களாகக் கூட மதிக்காத நிலைமை, இயற்கைச் சமநிலையின் சீர்குலைவு என இவ்வளவுக்கும் காரணம், இவற்றையெல்லாம் கண்டு கொள்ளாத தி.மு.க, அ.தி.மு.க அரசுகளே இங்கு திரும்பத் திரும்ப ஆட்சிக்கு வருவது. எனவே, இத்தனை பிரச்சினைகளும் தீர வேண்டுமானால் அதற்கு உடனடித் தேவை ஆட்சி மாற்றம்! யாருக்கு வாக்களித்தால் அந்த ஆட்சி மாற்றம் ஏற்படும் என்பதுதான் இந்தத் தேர்தலின் ஒரே கேள்வி! பதில்?...

திங்கள், ஏப்ரல் 18, 2016

தேர்தல் - 2016 (3) | பா.ஜ.க-வுக்கு வாக்களிப்பதில் உள்ள ஆபத்துகள் - ஒரு பார்வை!


Tamilnadu BJP leaders

தமிழ்நாட்டில் தேசியக் கட்சி ஒன்று - அதுவும் பா.ஜ.க - ஆட்சிக்கு வருவது என்பதெல்லாம் தமிழிசை சௌந்தர்ராஜனின் கனவில் கூட நடக்காத கதை என்பது அனைவரும் அறிந்ததே! ஆனால், அதற்காகத் தமிழ்நாட்டில் தேசியக் கட்சிகளுக்குச் செல்வாக்கே இல்லை எனப் பொருளாகாது. அதிலும் கருணாநிதியும் ஜெயலலிதாவும் அடுத்தடுத்து அளித்து வரும் ‘பொற்கால’ ஆட்சிகளால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள வெறுப்பும், நதிநீர்ப் பங்கீடு போன்ற அண்டை மாநிலங்களுடனான பிரச்சினைகளில் இவர்கள் அடைந்துள்ள முழுத் தோல்வியும், இதே இடத்தில் தேசியக் கட்சி ஒன்று இருந்திருந்தால் நம் பிரச்சினைகள் தீர்ந்திருக்குமோ என்கிற எண்ணத்தை மக்களிடையே அண்மைக் காலமாகத் தளிர் விட வைத்துள்ளன. இந்த அபாயகரமான மூட நம்பிக்கையை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டியது காலத்தின் கட்டாயம். எனவே, பா.ஜ.க-வுக்கு வாக்களிப்பதில் உள்ள ஆபத்துகளை மொத்தமாகப் பார்ப்போம்.

மாற்றுத் தேர்வா பா.ஜ.க?

செவ்வாய், டிசம்பர் 15, 2015

இயற்கைப் பேரழிவும் வரலாற்றுப் பேரிழிவும்



Humanity blossomed by floods

இருப்பதிலேயே மிகவும் எளிதாகக் கையாளக்கூடிய இயற்கைச் சீற்றம் மழை! காரணம் நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு போலத் திடீரெனத் தாக்கக்கூடியது இல்லை அது. எப்பொழுது பெய்யும், எப்படிப் பெய்யும் என எல்லாவற்றையும் முன்கூட்டியே அறிந்து கொண்டு வெகு பொறுமையாக மூட்டை முடிச்சுகளைக் கட்டிக் கொண்டு தப்பலாம். ஆனால், அதைக் கூட ஒழுங்காகக் கையாளத் தெரியாத அரசால் இலட்சக்கணக்கான மக்கள் நடுத்தெருவுக்கு வந்தனர் கடந்த வார வெள்ளத்தின்பொழுது!

போனது போகட்டும், அல்லல்பட்டு நிற்கும் மக்களைக் காப்பாற்றவாவது செய்தார்களா

ஞாயிறு, மே 17, 2015

தமிழினப் படுகொலை ஆறாம் ஆண்டு நினைவேந்தலும் காத்திருக்கும் கடமைகளும்!





நேற்று பார்த்தது போல் இருக்கிறது அந்தக் குருதி கொப்பளிக்கும் காட்சிகளை!

இன்றும் ஓயவில்லை அந்த மரண ஓலமும் அழுகையும்!

இன்னும் காயவில்லை ஒன்றரை லட்சம் பேரைப் பறிகொடுத்த உள்ளக் காயம்!

ஆனால் அதற்குள், இதோ, தமிழினம் அழிக்கப்பட்டு நாளையோடு முழுதாக ஆறு ஆண்டுகள் முடியப் போகின்றன! 

கடந்த (ஐந்தாமாண்டு) நினைவஞ்சலி நாளில் தமிழினப் படுகொலையைப் பின்னின்று நடத்திய காங்கிரசை வீழ்த்திய ஆறுதலுடன் நாம் மெழுகுத்திரி ஏற்றினோம். இந்த ஆண்டோ அதை முன்னின்று நிகழ்த்திய இராசபக்சவையே வீழ்த்திவிட்டு அதைக் கடைப்பிடிக்கிறோம்.

ஆக, ஈழப் பிரச்சினையில் ஒவ்வோர் ஆண்டும் ஓரளவாவது முன்னேற்றம் காண்கிறோம் என்பது ஆறுதலானது. ஆனால், இந்தப் பிரச்சினை குறித்த நம் நிலைப்பாடுகள், செயல்பாடுகள், நடவடிக்கைகள் ஆகியவற்றில் நாம் இன்னும் பெரிதாக எந்த முன்னேற்றத்தையும் எட்டவில்லை என்பதே உண்மை!

முதலில், இப்பேர்ப்பட்ட பேரழிப்புக்குப் பின் நாம் அடைந்திருக்க வேண்டிய முதன்மையான முன்னேற்றம் ஒற்றுமை!

ஒன்றில்லை, இரண்டில்லை பத்து நாடுகள் சேர்ந்து நம் இனத்தை அழித்திருக்கின்றன. பதினைந்து நாடுகள் அதற்கு ஆதரவாக நின்றிருக்கின்றன. அதாவது, நாம் வாழும் உலகின் ஒரு கணிசமான பகுதியே நம் அழிவை விரும்புகிறது! இப்பேர்ப்பட்ட நிலைமையில் நாம் எந்த அளவுக்கு ஒற்றுமைப்பட்டிருக்க வேண்டும்? எவ்வளவு உறுதியாக ஒருங்கிணைந்து, கைகோத்து நிற்க வேண்டும்? ஆனால், இப்பொழுது வரை, இந்த இனப்படுகொலை நினைவு நாளைக் கடைப்பிடிப்பதில் கூட நம்மிடையே ஒற்றுமை இல்லை! சிலர் மே 17, சிலர் மே 18, சிலர் மே 19 என ஆளுக்கொரு நாளில் அஞ்சலி செலுத்துகிறோம். கண்ணெதிரே இனத்தையே பலி கொடுத்த பின்னும் தமிழர் நம் ஒற்றுமை இவ்வளவுதான்!

முன்பை விட இப்பொழுதுதான் இன்னும் சாதியப் பிரிவினைகள் வலுப்பட்டிருக்கின்றன. தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் பள்ளி மாணவர்கள் கூடக் கையில் அவரவர் சாதிக் கட்சியை நினைவூட்டும் நிறத்திலான கயிறுகளை அணிந்து பள்ளிக்குச் செல்கிறார்கள் எனத் தெரிய வரும்பொழுது நெஞ்சம் விட்டுப் போகிறது. (நன்றி: ஆனந்த விகடன் இதழ் 26.03.2015).

மக்கள்தான் இப்படி என்றால், இவர்களை ஒற்றுமைப்படுத்த வேண்டிய தலைவர்களோ இதற்கும் ஒரு படி மேலே போய் திராவிடமா, தமிழ் தேசியமா எனக் கருத்தியல் அடிப்படையில் தங்களுக்குள்ளேயே பிரிந்து நிற்கிறார்கள்.

உலகமே தங்களுக்கு எதிராக நிற்கும் நிலையிலும் அந்தப் பாதுகாப்பற்ற நிலைமை பற்றித் துளியும் கவலையில்லாமல் நாம் இன்னும் நமக்குள்ளேயே இப்படி இடையறாமல் அடித்துக் கொண்டிருக்கிறோம் என்றால், நம்மை விட அடிமுட்டாள்கள் உலகில் வேறு யாராவது இருப்பார்களா?

செய்ய வேண்டியது என்ன? கடமை – ௧ (1)

ஞாயிறு, மே 18, 2014

2014 நாடாளுமன்றத் தேர்தல் முடிவும் 5ஆம் ஆண்டு நினைவேந்தலும் - சில விளக்கங்கள், சில சிந்தனைகள், சில திட்டங்கள்!


Genocide Rememberance!Genocide Rememberance!

ஆயிற்று!
அப்படி இப்படி என ஐந்து ஆண்டுகள் ஓடி விட்டன!

ஆனால், கடந்த நான்கு ஆண்டுகளாக இல்லாத வகையில், இந்த முறை நாம் நம் மெழுகுத்திரிகளைக் கண்களில் நீரோடு மட்டுமில்லாமல், உதட்டில் சிறு புன்னகையோடும் ஏற்றலாம். தமிழினப் படுகொலைக்குப் பழிவாங்கி விட்ட நிறைவில்! காங்கிரசை வீழ்த்திய மகிழ்வில்!

ஆம், வெளிவந்திருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள், இந்தத் தமிழினப் படுகொலை நினைவேந்தல் நாளை ஒட்டி நமக்குக் கிடைத்திருக்கும் பெரும் பரிசு! சிறந்த ஆறுதல்! கடந்த ஐந்தாண்டுக்காலத் தமிழர் போராட்டங்களின் பெருவெற்றி!

இது காங்கிரசுக்கு வாழ்வா சாவா தேர்தல் எனக் காரணங்களோடு விளக்கினார் தலைசிறந்த அரசியல் நோக்கரான ப.திருமாவேலன் அவர்கள், தமிழின் தனிப்பெரும் ஊடகமான ஆனந்த விகடனில். அப்படிப் பார்த்தால், இந்தத் தேர்தலில் காங்கிரசை நாம் சாகடித்து விட்டோம் என்றே சொல்லலாம். ராஜீவ் கொலைப் பழியை அதில் தொடர்பே இல்லாத தமிழர்கள் மீது சுமத்தியதோடில்லாமல், அந்த ஒற்றை மனிதன் கொல்லப்பட்டதற்காக நம் இனத்தையே அழித்த காங்கிரசு, இப்பொழுது அதுவும் அழிந்து விட்டது எனச் சொல்லக்கூடிய அளவுக்கு ஒரு வீழ்ச்சியை அடைந்திருக்கிறது! தமிழர்களின் இந்தக் கனவை நனவாக்கிய இந்திய உடன்பிறப்புகளுக்கு முதலில் கோடானுகோடி நன்றி! 

நாடாளுமன்றத் தேர்தலில் ஈழப் பிரச்சினை எதிரொலித்ததா? சான்றுகள் என்ன?

திங்கள், மார்ச் 31, 2014

யாருக்கு அளிக்கலாம் வாக்கு? - வாக்காளப் பெருமக்களுக்கான ஒரு தேர்தல் திட்டம்!



Rare chance hss come!

வந்துவிட்டது நாடாளுமன்றத் தேர்தல்! பத்தாண்டுக்கால அட்டூழியக் காங்கிரசு ஆட்சிக்கு முடிவு கட்ட நமக்குக் கிடைத்திருக்கும் ஓர் அரிய வாய்ப்பு! இதை நாம் எப்படிப் பயன்படுத்திக் கொள்ளப் போகிறோம், பயன்படுத்திக் கொள்ளப் போகிறோமா இல்லையா என்பதே இப்பொழுது நம் முன் உள்ள பெரிய கேள்வி.

தெருவில் கிடக்கிற சொறிநாய் கூடக் குறிப்பிட்ட நேரத்துக்கு மேல்
குரைத்துக் கொண்டே இருந்தால் என்ன ஏதெனப் பார்ப்பார்கள். ஆனால், ஈழத் தமிழர்களைக் காப்பாற்றச் சொல்லி ஏறத்தாழ ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக
Did not vote for Tamils but asking Tamils vote!
நாம் நடத்தி வரும் போராட்டங்களை இதுவரை செருப்பளவுக்காவது மதித்திருக்கிறதா இந்த இந்திய அரசு? இப்பொழுது கூட, இலங்கைக்கு எதிராக ஐ.நா-வில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இலங்கைக்கு ஆதரவாக மூன்று முறைகளுக்கு மேல் திருத்தி விட்டு, அப்படியும் அந்த இற்றுப் போன தீர்மானத்துக்கு வாக்களிக்கக் கூட விருப்பமில்லாமல் அந்த வாக்கெடுப்பைப் புறக்கணித்து விட்டுத்தான் நம்மிடம் வாக்குக் கேட்க வருகிறார்கள் காங்கிரசார்!

இதை விட ஓர் இனத்தை அவமானப்படுத்த முடியுமா?

இப்படிப்பட்ட அரசுக்குப் பாடம் புகட்ட வேண்டாமா?

இனி தமிழர்களிடம் வம்பு வைத்துக் கொண்டால் நாம் இந்திய அரசாட்சியை நினைத்துப் பார்க்கவே முடியாது எனும் பீதியை இந்தக் காங்கிரசுக்காரர்களுக்கு ஏற்படுத்த வேண்டாமா?

தமிழர்களைப் பகைத்துக் கொண்டதால் காங்கிரசு அடையவிருக்கும் படுதோல்வியைப் பார்த்து இனி வரும் இந்திய ஆட்சியாளர்கள் தமிழர்களை எண்ணி மிரள வேண்டாமா?

மண்ணுலகிலேயே நரகத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் நம் ஈழத் தமிழ்ச் சொந்தங்கள் மீள வேண்டாமா?

அப்படியானால், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நாம் நம் வாக்குகளைத் திட்டமிட்டுச் சரியாகப் பயன்படுத்த வேண்டும்! அதற்கு ஒரு கூர்மையான திட்டத்தை முன்வைப்பதே இந்தப் பதிவின் நோக்கம்!

யாருக்கு வாக்களிப்பது?

இத்தனை ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு இந்த முறை இது கொஞ்சம் சிக்கலான கேள்வியாகத்தான் ஆகி விட்டது தமிழ்நாட்டில்.

கடலில் தூக்கிப் போட்டாலும் கட்டுமரமாக மிதந்து வந்து காப்பாற்றுவார் என்று தமிழர்கள் நாம் காலங்காலமாய் நம்பிய கருணாநிதி, தமிழர்களையே பிணமாக்கிக் கட்டுக் கட்டாக அடுக்கிச் சிங்களர்கள் எரித்தபொழுதும் மரம் போலத்தான் பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால், இப்பொழுது அந்தக் காங்கிரசைக் கழற்றி விட்டுத் தேர்தலைச் சந்திக்க வந்திருக்கிறார்.

அதே நேரம், ‘போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள்’ என்ற, அதுவரை உலகில் யாருக்குமே தெரியாத பேருண்மையை () நமக்கு உணர்த்த முயன்ற ஜெயலலிதா இன்று அனைத்து விதங்களிலும் ஈழ ஆதரவாளராய் மாறி நிற்பதாகக் கூறுகிறார்!


சரி, தமிழர் பிரச்சினைகள் அனைத்துக்காகவும் தொடக்கக் காலம் முதல் போராடி வரும் வை.கோ அவர்களுக்கு வாக்களிக்கலாமா எனப் பார்த்தால் அவர் போட்டியிடுவதோ வெறும் எட்டே தொகுதிகள்!

ஆகவே, இவர்களில் யாரை நம்பி அல்லது யாரை எதிர்த்து எப்படியென வாக்களிப்பது என்பது இந்த நாடாளுமன்றத் தேர்தலில் நம்மைப் பெரும் குழப்பத்துக்கு ஆளாக்கியிருப்பதில் வியப்பில்லை. இந்தக் குழப்பத்தைத் தீர்த்துக் கொண்டு தெளிவாக வாக்களிக்க நமக்குத் தேவை ஒரு பன்னோக்குத் திட்டம் (Master Plan). ஏன், கட்சிகள் மட்டும்தான் கூட்டணி, வாக்கு வங்கி எனப் பலவற்றையும் பற்றி ஆராய்ந்து திட்டமிட்டுத் தேர்தலைச் சந்திக்க வேண்டுமா? வாக்காளர்களான நாமும் ஒவ்வொரு கட்சி, கூட்டணி பற்றியும் அவர்களின் நிலைப்பாடு, கொள்கை, உறுதிமொழி, குறிப்பிட்ட பிரச்சினைகளில் அவர்களின் கடந்த கால நடவடிக்கை, எதிர்காலப் போக்கு என அனைத்தைப் பற்றியும் விரிவாக அலசி ஒரு முடிவுக்கு வரலாம் வாருங்கள்!

திங்கள், ஜனவரி 13, 2014

வெண்ணெய் திரளும் வேளையில் பானையை உடைத்துவிடாதீர்கள்! – தமிழினத் தலைவர்களுக்குக் கை கூப்பிய வேண்டுகோள்!

Obligation!


பேரன்பிற்கும் தனிப்பெருமதிப்பிற்கும் உரிய, தமிழினத்தின் உண்மைத் தலைவர்களான வை.கோ, சீமான், பழ.நெடுமாறன், தமிழருவி மணியன், விடுதலை இராசேந்திரன், கொளத்தூர் மணி, பெ.மணியரசன், தோழர் தியாகு ஆகியோருக்கும் சேவ் தமிழ்சு இயக்கம், மே பதினேழு இயக்கம், தமிழீழவிடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு ஆகியோருக்கும் நேசமிகு வணக்கங்கள்!

ஈழப் பிரச்சினை பற்றியும் தமிழினத்தின் இன்ன பிற பிரச்சினைகள் பற்றியும் நீங்கள் யாரும் நான் சொல்லித் தெரிந்துகொள்ள வேண்டியதில்லை. ஆனால், நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் இந்த நேரத்தில் உங்களில் சிலருடைய நடவடிக்கையும் பேச்சும் ஏற்படுத்தியுள்ள கவலையே இந்தக் கோரிக்கை மடலுக்குக் காரணம்! இது, ஞானப்பிரகாசன் எனும் தனி மனிதனின் வேண்டுகோள் இல்லை; தலைவர்களான உங்களிடம் உலகத் தமிழர்கள் அனைவர் சார்பிலும் முன்வைக்கப்படும் தேர்தல் நேரத்துப் பணிவார்ந்த விண்ணப்பம்! எனவே, கனிவு கூர்ந்து நீங்கள் அனைவரும் உங்கள் பொன்னான நேரத்தைச் சற்று ஒதுக்கி இதை முழுமையாகப் படித்துப் பார்க்குமாறு அன்புடன் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்!

ஒரு புறம் பார்த்தால், மேலே கண்டபடி, ஈழத் தமிழர்களுக்காகப் பல தலைவர்களும் அமைப்புகளும் இன்று உண்மையாகப் போராடி வரும் வேளையில், இவர்கள் யார் கருத்தையும் கேட்காமல் தலைவர் வை.கோ அவர்கள் தனியாகப் போய் பா.ஜ.க-வுடன் கூட்டணி பேசுகிறீர்கள்!

அவர் அங்கு போய்ச் சேர முதன்மைக் காரணராக விளங்கிய ஐயா தமிழருவி மணியன் அவர்களோ, மேற்கொண்டு அந்தக் கூட்டணியில் நீங்கள் சேர்க்க இருக்கும் கட்சிகள் பட்டியலில் மேற்படி உண்மைத் தமிழுணர்வுக் கட்சிகள் எதையுமே குறிப்பிடாமல், இன்றும் காங்கிரசுடன் கூட்டணி வைக்க அலையும் பா.ம.க-வையும் தே.மு.தி.க-வையும் போய்க் குறிப்பிடுகிறீர்கள்!

அண்ணன் சீமான் அவர்களோ, “காங்கிரசு, பா.ஜ.க ஆகியவற்றுடன் யார் கூட்டணி வைத்தாலும் துரத்தித் துரத்தித் தோற்கடிப்போம்” எனச் சூளுரைக்கிறீர்கள்!

கருணாநிதியைத் தமிழினத் தலைவனாகக் காலங்காலமாக நம்பி இனத்தையே வாரிக் கொடுத்துவிட்ட தமிழ் நெஞ்சங்களுக்கு இந்தக் காட்சிகள் எந்த அளவுக்கு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுபவையாக இருக்கின்றன என்பதைத் தலைவர்களே உங்களால் உணர முடிகிறதா?

செவ்வாய், டிசம்பர் 17, 2013

வை.கோ பா.ஜ.க-வுடன் கூட்டணி வைப்பது சரியா? – ஓர் அலசல்!

MDMK-BJP_alliance

பாரதிய ஜனதாவுடனான தலைவர் வை.கோ அவர்களின் கூட்டணியையும், தமிழருவி மணியன் முதலான தமிழர் தலைவர்களின் இன்றைய பா.ஜ.க ஆதரவு நிலைப்பாட்டையும் விமரிசிக்கும் அனைவரிடமும் நான் கேட்க விரும்பும் ஒரே கேள்வி இதுதான். 

இதை விட்டால் வேறென்ன வழி இருக்கிறது? 

'எரிகிற கொள்ளியில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி' என்பதுதான் இன்றும் நாம் ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் முறையாக இருக்கிறது எனும்பொழுது, கூட்டணி மட்டும் புத்தர்களுடனும் காந்திகளுடனும் வைத்துக்கொள்ள வேண்டும் என நாம் எப்படி எதிர்பார்க்க முடியும்?

ஆம், பா.ஜ.க-தான் சிறந்த தேர்வு எனச் சொல்லவில்லை. மற்றவையெல்லாம் அதைவிட ஆபத்தானவை என்பதுதான் விதயமே!

ஒரு புறம், முள்ளிவாய்க்கால் பேரழிவை நிகழ்த்திய காங்கிரசு; மறு புறம், முள்ளிவாய்க்கால் முற்றம் இடித்த ஜெயலலிதா; இன்னொரு புறம், இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி இருக்கிறதா இல்லையா என்பது கூடத் தெரியாத இரசியா தனி ஈழத்தை எதிர்க்கிறது என்பதற்காகத் தாங்களும் தனி ஈழத்தை எதிர்க்கும் அறிவுக் கொழுந்துகளான பொதுவுடைமைத் தோழர்கள். பா.ஜ.க-வுக்குப் பதிலாக இவர்களில் யாரைத் தேர்ந்தெடுக்கச் சொல்கிறீர்கள் நண்பர்களே?

திங்கள், ஜூலை 15, 2013

தமிழ் மாணவர் போராட்டம் நாடாளுமன்றத் தேர்தலில் கண்டிப்பாக எதிரொலிக்கும்! – இயக்குநர்.புகழேந்தி தங்கராஜ் ஆவேச நேர்காணல்!

Director.Pugazhendhi Thangaraj


‘காற்றுக்கென்ன வேலி’, ‘உச்சிதனை முகர்ந்தால்’ என்று ஈழப் பிரச்சினையைப் பற்றி, குறிப்பாக விடுதலைப்புலிகளைப் பற்றித் தமிழில் உண்மையான திரைப்படங்களை வழங்கிய துணிச்சல் மிக்க இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் அவர்கள்! தனித் தமிழீழத் திருநாடு கேட்டுத் தமிழ்நாடு முழுக்க மாணவர்கள் போராடிக் கொண்டிருந்த அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வேளையில் அவரிடம் நான் பணியாற்றும் ‘நிலாச்சாரல்’ மின் இதழுக்காகக் கைப்பேசி வழியே நேர்காணல் ஒன்று மேற்கொண்டேன். அப்பொழுதைய சூழ்நிலையில் இதழால் அதை முழுமையாக வெளியிட முடியவில்லை. எனவே, இதோ என் வலைப்பூவில் அதன் முழுமையான வடிவம்... 

ஈழப் பிரச்சினையை வைத்துத் தமிழில் தீவிரமான திரைப்படங்களை வழங்கியவர் தாங்கள்தான். இப்பொழுது தமிழீழத்துக்காக எழுச்சி பெற்றிருக்கும் தமிழ்நாட்டு மாணவர் போராட்டங்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? 

இப்பொழுது ஏற்பட்டிருக்கிற மாணவர் போராட்டங்களை ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பே எதிர்பார்த்தவர்களில் நானும் ஒருவன். இப்பொழுது ஏற்பட்டிருக்கும் இந்த மாற்றத்துக்குப் பரவலாக நம்பப்படுகிற மாதிரி, தம்பி பாலச்சந்திரனின் முகம், அந்தச் சிறுவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமை - அது ஒரு பெரிய காரணமாக இருக்கிறது. தமிழ் மக்கள் எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள். தமிழ் மாணவர்கள் இந்த (பாதிக்கப்பட்ட) குழந்தைகளின் முகத்தைப் பார்த்து இவ்வளவு எழுச்சியை, எதிர்ப்பை வெளியிட்டிருப்பது சரியான நேரத்தில் காலம் கருதிச் செய்யும் செயல் என்றுதான் நான் நினைக்கிறேன். ஒரு இலட்சத்து இருபதாயிரம் விடுதலைப் போராளிகள் இந்த இனப்படுகொலையில் இறந்ததாக ஒரு கணக்கு இருக்கிறது. அந்த ஒரு இலட்சத்து இருபதாயிரம் விடுதலைப்புலிகளுடைய, போராளிகளுடைய உயிர்த் தியாகத்தால் கூட எழுப்ப முடியாத ஒரு மிகப்பெரிய எழுச்சியை இந்தப் பன்னிரண்டு வயதுக் குழந்தையுடைய உருவம், அந்தக் குழந்தையுடைய பார்வை எழுப்பியிருக்கிறது. (குரல் கம்முகிறது).

தம்பி பாலச்சந்திரன் இறந்து விட்டான் என்பது போன ஆண்டே தெரியும். இருந்தால்கூட, அப்பொழுது அந்தக் குழந்தையுடைய விழிகளை நாம் பார்க்கவில்லை. இப்பொழுது நாம் பார்க்கும் அந்தப் பார்வையில் இருக்கும் ஒளியும், நம்பிக்கையும் இரண்டு நிச்சயங்களை நமக்கு உணர்த்தியிருக்கின்றன. ஒன்று, 19ஆம் தேதி கொல்லப்பட்ட பாலச்சந்திரனின் முகத்தில் 17ஆம் தேதி தன் தந்தை கொல்லப்பட்டதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்பது பெரிதும் குறிப்பிடத்தக்கது. அது நமக்கு ஒரு வரலாற்று உண்மையை, சிங்கள அரசாங்கம் திட்டமிட்டுச் செய்து வருகிற ஒரு பிரச்சாரம் எவ்வளவு பொய் என்பதை நமக்கு உணர்த்துவதாக இருக்கிறது. அடுத்ததாக, அந்த விழிகளில் காணப்படக்கூடிய ஒளி நம் மாணவர்களை உசுப்பி எழுப்பியிருக்கிறதென நம்புகிறேன். 

நன்றி ஐயா! புகைப்படத்தில் பாலச்சந்திரனின் கண்களில் இருக்கும் ஒளியை வைத்து, தமிழினத் தலைவர் மேதகு.பிரபாகரன் அவர்கள் இன்னும் இருக்கிறார் என்பதை நாம் அறியக்கூடும் என்ற மிக முக்கியமான ஒரு தகவலை நீங்கள் இந்தப் பதில் மூலம் தமிழ் மக்களுக்குச் சொல்லியிருக்கிறீர்கள். இதுவரை யாரும் இந்தக் கோணத்தைச் சொல்லவில்லை. அடுத்ததாக ஐயா, இது தாமதமான போராட்டம் எனத் தனிமனிதர்கள் முதல் ஊடகத்தினர் வரை பலரும் தொடர்ந்து கூறி வருகிறார்கள். அது பற்றி உங்கள் கருத்து...? 

இல்லை Better late than never! சரியான நேரத்தில் மாணவர்கள் களமிறங்கியிருக்கிறார்கள். 2007 வரை, உலகம் முழுக்க இருக்கிற தமிழ் இளைஞர்களில், குறிப்பாகத் தமிழ் மாணவர்களில் பெரும்பாலானோர் விடுதலைப்புலிகள் இயக்கத்தையும் அதன் தலைவர் பிரபாகரனையும் பற்றித் தவறான புரிதலுடன் இருந்தார்கள். புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தின் பிள்ளைகளே கூடத் தங்கள் தேசிய இனத் தலைவனுடைய உண்மையான முகத்தைப் புரிந்து கொள்ளாமல், ஊடகங்கள் மூலம் பரப்பப்பட்ட பொய்ப் பிரச்சாரங்களை நம்பி இருந்தார்கள். இது மறுக்க முடியாத உண்மை! தங்களுடைய தேசியத் தலைவனைப் பற்றி அவர்கள் புரிந்துகொண்டதே 2008-09க்குப் பிறகுதான்; அதுவும், குறிப்பாக முத்துக்குமாருடைய மரணத்துக்குப் பிறகுதான் அந்த மாணவர்கள் சிலிர்த்து எழுந்து நின்று “எங்களுடைய தேசியத் தலைவர் பிரபாகரன்” என்று பிரகடனப்படுத்தினார்கள். இது 2009 பிப்ரவரியில் நடந்தது. அதற்குக் காரணம் என்னவென்றால், அதற்கு முன்பு அவர்கள் பிரபாகரனைப் பற்றி ஊடகங்கள் பரப்பியிருந்த பொய்ப் பிரச்சாரத்தைத்தான் நம்பியிருந்தார்கள். குறிப்பாக, ஆங்கில ஊடகங்களை. ஆங்கில ஊடகங்கள் மூலமாகத்தான் அவர்களுக்குச் செய்தி போய்ச் சேர்ந்தது. அவர்கள் பிரபாகரனைத் தீவிரவாதி என்றுதான் ஆங்கில ஊடகங்கள் மூலமாகத் தெரிந்து வைத்திருந்தார்கள். 2008க்குப் பிறகுதான், தங்கள் மண்ணில் மிஞ்சியிருக்கிற தங்கள் உறவுகளுக்குப் பாதுகாப்பாகத் தங்கள் உயிரையும் கொடுக்கத் தயாராக இருந்த போராளிகளுடைய தலைவன்தான் பிரபாகரன் என்பது, 2009க்குப் பிறகுதான் அந்தக் குழந்தைகளுக்கே தெரிய வந்தது. அதற்குப் பிறகுதான் தங்கள் தலைவரைப் பற்றித் தவறாகப் புரிந்து கொண்டிருந்த அந்த மாணவர்கள் “எங்கள் தேசியத் தலைவர் பிரபாகரன்” என்று சொல்லி, பிரபாகரனின் எழுத்துக்களைத் தங்கள் உணர்வில் தாங்கி, புலிகளுடைய கொடிகளுடன் வலம் வரத் தொடங்கினார்கள். இது 2009இலேதான் நடந்தது. ஆக, புலம் பெயர்ந்த தமிழ்ச் சொந்தங்களுடைய குழந்தைகளே அப்படி இருக்கையில், இங்கே இருக்கிற தமிழ் மாணவர்களுக்கு அந்த எழுச்சி ஒரு நான்கு ஆண்டுகள் கழித்து ஏற்பட்டிருப்பது என்பது தாமதமானது என நினைக்க முடியாது! இப்பொழுது ஏற்பட்டிருக்கிற இந்த மாணவர் எழுச்சி உலகெங்கும் தமிழ் உணர்வை நிமிர்த்தி நம்பிக்கையோடு உட்கார வைத்திருக்கிறது. இன்றைக்குத்தான் முதன்முறையாகத் தமிழ்நாட்டின் வீதிகள் எங்கும் புலிகளுடைய கொடியும், பிரபாகரன் என்கிற பெயரும், “தமிழினத்தின் அடையாளம் பிரபாகரன்! தமிழீழத்தின் அடையாளம் விடுதலைப்புலிகள்”என்கிற முழக்கமும் இப்பொழுதுதான் கேட்கத் தொடங்கியிருக்கிறது. எனவே, இது தாமதமானது என நான் நினைக்கவே இல்லை. சரியான நேரத்தில் மாணவர்கள் களமிறங்கியிருக்கிறார்கள். 

சரி ஐயா! அடுத்து, மாணவர்களில் பலர், ‘தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பையும், இலங்கை மீது சுதந்திரமான பன்னாட்டு விசாரணையையும் கோரி இந்தியா தீர்மானம் கொண்டு வரவேண்டும்’ எனப் போராடுகிறார்களே, இது சரியா? 

ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்! மாணவர்கள் போராடத் தொடங்கியது ‘அமெரிக்கத் தீர்மானம் மோசடி’ என்று சொல்லித்தான். ஊடகங்கள் கண்முன்பாகத்தான் மாணவர்கள் அந்தத் தீர்மானத்தை எரித்தார்கள். எரித்துவிட்டு மாணவர்கள் சொன்னார்கள் “அமெரிக்கத் தீர்மானம் மோசடி, இந்தியாவே தீர்மானம் கொண்டு வர வேண்டும்” என்று. ஆனால், நம் ஊடகங்கள் கடைசி நிமிடம் வரை ‘அமெரிக்கத் தீர்மானத்தை ஆதரிக்கக் கோரி மாணவர்கள் உண்ணாவிரதம்’ என்று செய்தி போட்டார்களே, ஏன்? இந்த ஊடகங்களுக்குத் தெரியாதா? அவர்கள் படப்பிடிப்புக் கருவிக்கு முன்பாகத்தானே மாணவன் அமெரிக்கத் தீர்மானத்தை எரிக்கிறான்? ஆக, மாணவர்கள் வெளிப்படையாக அறிவித்த பின்பும் ஊடகங்கள் தவறாகச் சித்தரிக்க முயன்றார்கள். மாணவர்கள் எழுப்பிய கோரிக்கை, இந்திய நாடாளுமன்றத்திலே பதிவு செய்யப்பட்ட கோரிக்கை! அமெரிக்கத் தீர்மானம் மோசடி என்று ஆன பிறகு, இந்தியாவே ஒரு தீர்மானத்தைத் தனியாகக் கொண்டு வர வேண்டும் என்று இந்திய நாடாளுமன்றத்திலே சொல்லப்பட்டதும், பின்னர் மாணவர்கள் அதை வலியுறுத்தியதும் இந்தியாவின் துரோக முகத்தை அம்பலப்படுத்துவதற்காக, இந்தியாவுக்கு நெருக்கடி கொடுப்பதற்காகச் சொல்லப்பட்ட வார்த்தைகள். இந்தியா அப்படி ஒரு தீர்மானத்தைக் கொண்டு வராது என்பது மாணவத் தம்பிகளுக்கு நிச்சயமாகத் தெரியும்! இருந்தாலும், இந்தத் துரோக இந்தியாவை மேலும் அம்பலப்படுத்த வேண்டும் என்பதற்காக அந்தக் கோரிக்கையை முன்வைத்தார்கள். அது எப்படிப்பட்ட தீர்மானமாக இருக்க வேண்டும் என்பதிலும் மாணவர்கள் தெளிவாக இருந்தார்கள். போர்க்குற்றம் என்பதோடில்லை, நடந்தது இனப்படுகொலை; நடந்த இனப்படுகொலையை உலக நாடுகள் கண்டிக்க வேண்டும்; அந்த இனப்படுகொலையைப் பற்றிச் சர்வதேச நீதி விசாரணை வேண்டும் என்று இந்தியா தனியாகத் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்பது மாணவர்களின் கோரிக்கையாக இருந்தது. இதெல்லாம் இந்தியாவின் துரோக முகத்தை அம்பலப்படுத்துகிற மாணவர்களின் நடவடிக்கை. அந்த நடவடிக்கையால்தான் இன்று இந்தியா முழுமையாக அம்மணமாகி நிற்கிறது தமிழ்ச் சமூகத்துக்கு எதிரே! 

மிகச் சரியான வார்த்தை ஐயா! ஆனால், ஈழத் தமிழர்களுக்காக இந்தியா இதுவரை ஒரு துரும்பையும் கிள்ளிப் போட்டதில்லை. மாறாக, அவர்களை அழிக்கத்தான் உதவியிருக்கிறது. இப்பொழுதும், அமெரிக்கா கொண்டு வந்த இந்தத் தீர்மானத்தின் பல அம்சங்களை இந்தியா தலையிட்டு இலங்கைக்கு ஆதரவாகத் திருத்தி விட்டது. தீர்மானத்தில் தொடக்கத்தில் இருந்த அளவுக்கு வீரியம் கூட வாக்கெடுப்பின்பொழுது இல்லை. இந்நிலையில் மாணவர்களின் கோரிக்கைப்படி, ஒருவேளை, இந்தியா தானே ஈழத் தமிழர்களுக்காக ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தால் அது எப்படி இருக்கும் என நினைக்கிறீர்கள்? 

அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பாவா? இந்தியா என்பது வெட்கங்கெட்ட, மானங்கெட்ட ஒரு நாடு என்பது உறுதியாகிவிட்டது. நான்

என் புதினத்தை வாங்க

என் புதினத்தை வாங்க
மேலே உள்ள படத்தை அழுத்துங்கள்
பதிவுகளை உடனுக்குடன் பெற

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

வாட்சாப் தடத்தில் (Channel)...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு (1) 13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (9) அஞ்சல் வாக்கு (1) அஞ்சலி (25) அணு உலை (2) அப்பா மகள் பாசம் (1) அம்பிகை செல்வகுமார் (1) அம்மணம் (1) அமேசான் (6) அயல்நாட்டுத் தமிழர் (1) அரசியல் (91) அழைப்பிதழ் (7) அற்புதம்மாள் (2) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (46) ஆசிரியர் (1) ஆட்சென்ஸ் (1) ஆணவப்படுகொலை (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) ஆய்வு (1) இங்கிலாந்து (1) இசுரேல் (2) இட ஒதுக்கீடு (4) இணையம் (19) இந்தித் திணிப்பு (3) இந்தியா (25) இரசியா (1) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இலக்கணம் (3) இலங்கை (1) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (23) இனம் (46) ஈழம் (44) உக்கிரேன் (1) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (24) எழுவர் விடுதலை (1) ஐ.நா (5) ஒருங்குறி (1) கடவுள் (1) கண்ணதாசன் (1) கதை (4) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (12) கலைச்சொல்லாக்கம் (1) கவிஞர் தாமரை (1) கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் (2) கவிஞர் ரேவதி (1) கவிதை (20) காங்கிரஸ் (6) காசா (2) காணொளி (8) காதல் (3) காந்தியம் (1) கார்த்திக் சுப்புராஜ் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (5) கிரந்தம் (1) கீச்சுகள் (2) கீழடி (2) குழந்தைகள் (10) குறள் (2) கூகுள் (2) கையொப்பம் (2) கோட்பாடு (9) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (16) சந்திப்பு (1) சமயம் (12) சமற்கிருதம் (2) சமூகநீதி (4) சரிதா (1) சாதி (11) சாலமன் பாப்பையா (1) சிங்களர் (1) சித்திரக்கதைகள் (1) சிவகார்த்திகேயன் (1) சிறுவர் இலக்கியம் (5) சீமான் (7) சுற்றுச்சூழல் (6) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (3) சொத்துக்குவிப்பு (1) தங்கிலீஷ் (1) தந்தைமை (1) தமிழ் (40) தமிழ் தேசியம் (5) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (20) தமிழர் (48) தமிழர் பெருமை (20) தமிழறிஞர் முத்துநிலவன் (1) தமிழின் சிறப்பு (4) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (2) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (6) தாலி (1) தி.மு.க (11) திரட்டிகள் (4) திராவிடம் (10) திருக்குறள் (1) திருமுருகன் காந்தி (1) திரைப்படம் (4) திரையுலகம் (12) திறனாய்வு (1) தினகரன் (1) துருவ் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (10) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தேர்தல்-2021 (2) தேர்தல்-2026 (1) தொலைக்காட்சி (2) தொழில்நுட்பம் (10) தோழர் தியாகு (1) நட்பு (13) நிகழ்வுகள் (5) நிர்மலா சீதாராமன் (1) நினைவேந்தல் (10) நீட் (5) நூல்கள் (11) நூற்றாண்டு (1) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (3) பதிவர் உதவிக்குறிப்புகள் (10) பதிவுலகம் (24) பராசக்தி (2) பா.ம.க (2) பா.ஜ.க (31) பாக்யராஜ் (1) பார்ப்பனியம் (14) பாரதிராஜா (1) பாலஸ்தீனம் (2) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (10) பீட்டா (1) புதிய வேளாண் சட்டம் (1) புதினம் (1) புறநானூறு (1) புனைவுகள் (12) பெண்ணியம் (7) பெரியார் (3) பேரறிவாளன் (2) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (6) பொதுவுடைமை (2) பொதுவுடைமைக் கட்சி (2) பொருளாதாரம் (2) பொழிவு (2) போட்டி (1) போர் (3) போராட்டம் (10) ம.ந.கூ (2) மகான் (1) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (11) மடோன் அஷ்வின் (1) மணிவண்ணன் (1) மதிப்புரை (6) மதுவிலக்கு (2) மருத்துவம் (7) மன்சூரா பீவி (1) மாநாடு (1) மாநாடுகள் (1) மாய இயல்பியம் (2) மாவீரர் நாள் (3) மாற்றுத்திறனாளிகள் (3) மிஷ்கின் (1) மீம்ஸ் (7) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (3) மேனகா காந்தி (1) மொழியரசியல் (4) மொழியறிவியல் (3) மோடி (11) யுவர் கோட் (1) யோகிபாபு (1) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) ராஜீவ் படுகொலை (1) வரலாறு (25) வாழ்க்கைமுறை (21) வாழ்த்து (7) வானதி சீனிவாசன் (1) விக்ரம் (1) விடுதலை (6) விடுதலைப்புலிகள் (13) விருது (1) விஜய் (1) விஜய் சேதுபதி (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (7) வை.கோ (6) வைரமுத்து (2) ழகரம் (1) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டாலின் (1) ஸ்டெர்லைட் (2) ஹமாஸ் (2) ஹீலர் பாஸ்கர் (1) Bhagavath Gita (1) BJP (1) Casteism (1) Cauvery (1) Dalit (1) Genocide (3) Hindu (1) Karnataka (1) Magical Realism (1) Manisha (1) Modi (1) Notion Press (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (2) Religion (1) Scheduled Castes (1) Sexual Harassment (1) Tamilnadu (1) Tamils (1) Tanglish (1) Unicode (1) Unicode Consortium (1) UP (1) Women (1) Yogi Adityanath (1)

முகரும் வலைப்பூக்கள்