.

வெள்ளி, பிப்ரவரி 26, 2016

இன்னும் ஓரிரு நாட்களில்...



நேசத்துக்குரிய நண்பர்களே! 

வரும் சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி,
✓ மக்கள் நலனில் உண்மையாக அக்கறையுள்ள கட்சி எது?...

✓ முதன்மையான கட்சிகளின் வெற்றி வாய்ப்புகள் எப்படி?...

✓ தமிழ் மக்களின் இன்றைய தேவை என்ன?...

✓ தமிழ்நாட்டுத் தேர்தலில் வெற்றிக்கான காரணிகள் யாவை?...

✓ யார் வெற்றி பெற்றால் என்ன ஆகும்?...

✓ யாருக்கு வாக்களித்தால் நன்மை நடக்கும்?...
- இவை அத்தனையையும் ஒரு சராசரித் தமிழ் வாக்காளனின் பார்வையிலிருந்து துவைத்துக் காயப்போடும் புதிய குறுந்தொடர் 

*** தேர்தல் - 2016 ***

உங்கள் அகச் சிவப்புத் தமிழில்!... இன்னும் ஓரிரு நாட்களில். படிக்கத் தவறாதீர்கள்! 

❀ ❀ ❀ ❀ ❀

பி.கு: என்னப்பா, பெரிய விகடன், குமுதம் அளவுக்கு முன்னோட்டம் கொடுக்கிறாயே என்கிறீர்களா? அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. பதிவு போட்டு வெகு நாட்களாகி விட்டதே, அதனால்தான். மற்றபடி இந்தத் தொடர் உண்மையிலேயே உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். அதற்கு நான் உறுதியளிக்கிறேன்! தவறாமல் படியுங்கள்! உங்கள் மேலான கருத்துக்களைத் தெரிவியுங்கள்!

திங்கள், பிப்ரவரி 01, 2016

என் எழுத்துக்கு உங்கள் மதிப்பீடு என்ன?

My Article in Pratilipi contest

அன்பிற்கினிய நண்பர்களே! நேச வணக்கம்!

பிரதிலிபி தளம் பார்த்திருப்பீர்கள். தமிழ் உட்பட ஐந்து இந்திய மொழிகளில் சேவையாற்றும் புதிய தளம். பல வகைப் படைப்புகளும் மின்னூல்களும் வெளியிடுவது, பல்வேறு மின்னிதழ்களை ஒரே இடத்தில் படிக்கத் தருவது, இணைய எழுத்தாளர்களை அடையாளம் காட்டுவது எனப் பல நல்ல பணிகளைச் செய்து வருகிறது.

பிரதிலிபியும் - அகம் மின்னிதழும் இணைந்து நடத்திய ‘ஞயம்பட வரை’ எனும் கட்டுரைப் போட்டியில் நானும் கலந்து கொண்டுள்ளேன். “இன்றைய தமிழர்களின் வாழ்வில் தாய்மொழிக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் என்ன, அதனை அதிகரிக்க என்னென்ன வழிமுறைகளைக் கையாளலாம்” - இது கட்டுரையின் கருப்பொருள். வெற்றி பெற்ற கட்டுரையைத் தீர்மானிக்கும் முன் எல்லாக் கட்டுரைகளும் தற்பொழுது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. மக்கள் தரும் தரக்குறியீடும் நடுவர்களின் தீர்ப்பும் சேர்ந்தே வெற்றிக் கட்டுரையைத் தீர்மானிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தரக்குறியீடு என்றால் 5 விண்மீன் குறியீடுகள் இருக்கும்; அவற்றுள் 5-ஆவதை அழுத்தினால் படைப்பு அருமை (Great); 4-ஆவதை அழுத்தினால் நன்று (Good); 3-ஐ அழுத்தினால் தேவலாம் (Average); 2 எனில் தகுதியற்றது (Poor); 1 எனில் வீண் (Very Poor) என்பதை உங்களில் பலரும் அறிவீர்கள். இவற்றுள் எனக்கு நீங்கள் என்ன தரக்குறியீட்டைத் தருவீர்கள் என்பதை அறிய மிகவும் ஆவலாக உள்ளேன்!

மதிப்பிடும் முறை:

நேரம் இருக்கும்பொழுது இந்தச் சுட்டியை அழுத்துங்கள் - http://www.pratilipi.com/read?id=5754811414740992

என் கட்டுரை வெளியாகியுள்ள பக்கம் வரும். முதலில், கட்டுரையை முழுவதுமாகப் படித்துப் பாருங்கள்! பின்னர், கட்டுரையின் தலைப்புக்கு முன்பு உள்ள அம்புக்குறியை அழுத்தினீர்களானால் தரக்குறியிடுவதற்கான பக்கம் வரும். அங்கே கட்டுரையின் தலைப்பு, அதன் கீழே என் பெயர், வெளியான நாள் முதலான விவரங்கள் இருக்கும். அதாவது, நீங்கள் மேலே பார்க்கும் படத்தைப் போல இருக்கும். இவற்றுடன் 5 விண்மீன் பொத்தான்களும் இருக்கும். என்னையோ, எனக்கும் உங்களுக்கும் இடையிலான நட்பு - உறவு போன்றவற்றையோ மனதில் கொள்ளாமல், கட்டுரையின் தரத்தை மட்டுமே கருத்தில் கொண்டு இந்த ஐந்தில் நீங்கள் எதை அழுத்தினாலும் எனக்கு ஒப்புதலே! தரக்குறியிடும் இடத்திலேயே கட்டுரையை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொள்வதற்கும்,
உங்கள் கருத்தைப் பதிவு செய்வதற்கும் வசதிகள் உண்டு. விரும்பினால் நீங்கள் அவற்றையும் செய்யலாம்.

மதிப்பீட்டைப் பதிவு செய்யக் கடைசி நாள்: 28.02.2016.

 இது தமிழுக்காக எனது இன்னொரு முயற்சி! - இதற்கு
நீங்கள் அளிக்கும் மதிப்பீடே எனக்கான மகிழ்ச்சி! 

படம்: நன்றி பிரதிலிபி.

கீழ்க்காணும் வாக்குப்பட்டைகள் மூலம் இதை மற்றவர்களுடனும் பகிர்ந்து உங்கள் நண்பனின் வெற்றிக்கு உதவலாமே?
 

வியாழன், ஜனவரி 14, 2016

ஏறு தழுவலுக்காகப் பொங்கலைத் தவிர்க்காதீர்கள்! தமிழ்ப் பகைவர்களுக்கு வெற்றியை அளிக்காதீர்கள்!



Jallikattu - The oldest tradition of Tamils

உலகத் தமிழ் நெஞ்சங்களே! அனைவருக்கும் நேச வணக்கம்!

ஏறு தழுவல் (ஜல்லிக்கட்டு) மீதான தடையால் புண்பட்டுப் போயிருக்கின்றன தமிழ் அன்புள்ளங்கள்! இருக்கிற கொந்தளிப்பைப் பார்த்தால் பலர் இந்த முறை பொங்கலே கொண்டாடாமல் விட்டுவிடுவார்கள் போலிருக்கிறது! அப்படி ஏதேனும் எண்ணம் இருந்தால் அருள் கூர்ந்து மாற்றிக் கொள்ளுங்கள் தமிழர்களே! காரணம், அது நம் எதிரிகளுக்குத்தான் வெற்றி!

பீட்டா (PETA) போன்ற விலங்கு நல அமைப்புகளும் மற்றுமுள்ளோரும் ஏறு தழுவலைத் தடை செய்ய இவ்வளவு ஆர்வம் காட்டுவதற்குப் பின்னணியில் பல வணிகக் காரணங்கள் இருப்பதாகத் தகவல்கள் கசிந்து வருவது உண்மைதான். அவையெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், தமிழர் மரபு - பண்பாட்டு அடையாளங்களை அழிக்கும் நோக்கமும் இதனுள் இருப்பது நாம் அறியாததில்லை. எனவே, ஏறு தழுவல் எனும் ஒரு மரபு அடையாளத்துக்காக நாம் பொங்கலையே தவிர்த்தால் தமிழர் திருநாள், உழவர் பண்டிகை, தமிழ்ப் புத்தாண்டு முதலான இன்ன பிற அடையாளங்களையும் நாமே விட்டுக் கொடுத்ததாக ஆகி விடும் தோழர்களே! தமிழ் இன அடையாளங்களை அழிக்கத் துடிக்கும் அற்பர்களுக்கு இது மேலும் வெற்றியையும் மகிழ்ச்சியையும் அளிப்பதாகத்தான் இருக்கும்.

ஆகவே, முன்னெப்பொழுதையும் விட இந்தாண்டுப் பொங்கலை இன்னும் சிறப்பாகக் கொண்டாடுவோம்! ஏறு தழுவல் எங்கும் போய்விடாது. அதற்கான ஒப்புதல் கிடைக்கும்பொழுது கிடைக்கட்டும்! அதற்காக மற்ற அடையாளங்களை நாமே அழித்துக் கொள்ள வேண்டா!

தமிழ்ப் பகைவர்களின் மருள் நெஞ்சை அடுப்பாக்கி
அவர்தம் வயிற்றெரிச்சலையே நெருப்பாக்கி
எதிரிகளின் காதுகள் செவிடுபடக் குலவையிட்டு
ஏறுதழுவல் குறித்த விழிப்புணர்வை உலகுக்கே படையலிட்டு
தமிழர் இல்லந்தோறும் பொங்கல் பொங்கட்டும்!
தமிழ் மரபின் சிறப்புக்கள் ஒளிருக திக்கெட்டும்!

Happy Pongal!


உலகத் தமிழர்கள் அனைவர்க்கும் உள்ளம் கனிந்த
போகி, பெரும் பொங்கல், மாட்டுப் பொங்கல், திருவள்ளுவர் திருநாள்,
தமிழ்ப் புத்தாண்டு, காணும்பொங்கல் நல்வாழ்த்துக்கள்! 

படங்கள்: நன்றி ஜல்லிக்கட்டு Jallikattu, நகர்முரசு,

பதிவின் கருத்துக்கள் சரி எனத் தோன்றினால் கீழ்க்காணும் வாக்குப்பட்டைகள் மூலம் மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்களேன்! கூடவே, உங்கள் செம்மையான கருத்துக்களுக்கும் காத்திருக்கிறேன்! தமிழில் எழுத வசதியில்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது கீழே 'தமிழ்ப் பலகை'! தனிப்பட ஏதும் தெரிவிக்க விரும்பினால், அதற்கு அடுத்து உள்ள 'அணுக' படிவத்தைப் பயன்படுத்தலாம்!  
 

வெள்ளி, ஜனவரி 01, 2016

இன்ட்லி! - தமிழ்ப் பதிவர்களுக்கு ஓர் எச்சரிக்கை!


Stopped Tamil Aggregators

அன்பார்ந்த பதிவுலகத் தோழர்களே! அனைவருக்கும் நேச வணக்கம்!

இந்நாட்களில் தமிழ்த் திரட்டிகள் பலவும் அடுத்தடுத்து மூடப்பட்டு வருகின்றன. இவ்வரிசையில் அண்மையில் சேர்ந்திருப்பது ‘இன்ட்லி’! பல்லாயிரக்கணக்கான பயனர்களுடன் முதல் தரத் திரட்டிகளுள் ஒன்றாக இருந்த ‘இன்ட்லி’யெல்லாம் மூடப்படும் என்று நினைத்துக் கூடப் பார்த்ததில்லை. ஆனால், அதுவும் நடந்து விட்டது!

‘இன்ட்லி’யின் சேவையைப் பயன்படுத்தாதவர்களின் எண்ணிக்கை இணையத்தில் வெகு குறைவு. அவர்களுள் பலர் இன்றும் அந்தத் தளத்தின் நிரலிகளை (HTML scripts) வலைப்பூவிலிருந்து நீக்காமல் வைத்திருப்பதைக் காண்கிறேன். அந்தத் தளமே இப்பொழுது இணையத்தில் இல்லாததால் அதன் நிரலிகள் முற்றிலும் செயலிழந்து விட்டன நண்பர்களே! அவற்றை நீங்கள் இன்னும் நீக்காமல் வைத்திருப்பதால் உங்கள் வலைப்பூக்கள் திறக்க மிக மிகத் தாமதம் ஆகிறது. வேண்டுமானால், உங்கள் வலைப்பூவுக்குச் சென்று, அதிலிருக்கும் ஏதாவது ஓர் இடுகையைத் திறந்து பாருங்கள்!

செவ்வாய், டிசம்பர் 22, 2015

ஏறு தழுவல் (ஜல்லிக்கட்டு) மீதான தடையும் சில திகைப்பூட்டும் உண்மைகளும்!



Why Don't Ban PETA India

தமிழர்களின் மொழி, பண்பாடு, மரபுசார் அடையாளங்கள் போன்றவற்றை அழிப்பதென்றால் அவனவனுக்கு சர்க்கரைப் பொங்கலாய்த் தித்திக்கிறது! அப்படிப்பட்டவர்களின் பட்டியலில் புதிதாகச் சேர்ந்துள்ளது பெடா இந்தியா (PETA India) எனும் அமைப்பு.

செவ்வாய், டிசம்பர் 15, 2015

இயற்கைப் பேரழிவும் வரலாற்றுப் பேரிழிவும்



Humanity blossomed by floods

இருப்பதிலேயே மிகவும் எளிதாகக் கையாளக்கூடிய இயற்கைச் சீற்றம் மழை! காரணம் நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு போலத் திடீரெனத் தாக்கக்கூடியது இல்லை அது. எப்பொழுது பெய்யும், எப்படிப் பெய்யும் என எல்லாவற்றையும் முன்கூட்டியே அறிந்து கொண்டு வெகு பொறுமையாக மூட்டை முடிச்சுகளைக் கட்டிக் கொண்டு தப்பலாம். ஆனால், அதைக் கூட ஒழுங்காகக் கையாளத் தெரியாத அரசால் இலட்சக்கணக்கான மக்கள் நடுத்தெருவுக்கு வந்தனர் கடந்த வார வெள்ளத்தின்பொழுது!

போனது போகட்டும், அல்லல்பட்டு நிற்கும் மக்களைக் காப்பாற்றவாவது செய்தார்களா

வெள்ளி, நவம்பர் 27, 2015

மண்ணானாலும் தமிழீழத்து மண்ணாவேன்!



Tamil Marty's Day - 2015

‘மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்’ எனும் இறையுணர்வுப் பாடலை ஈழத் தமிழுணர்வுப் பாடலாய் மாற்றி இந்த ‘மாவீரர் திருநா’ளில் என் தமிழஞ்சலியாய்ச் சாற்றுகிறேன்!

புதன், நவம்பர் 11, 2015

அந்த ஒரு துளி!



Boy in wheelchair watching something sad
மழையில் கொட்டமிடும்
நண்பர்களை
ஏக்கத்துடன் பார்த்திருக்கும்
சக்கர நாற்காலிச் சிறுவனின்
பாதத்தை முத்தமிடுகிறது
எங்கிருந்தோ தெறித்து விழும்
ஒற்றை மழைத்துளி! 

(நான் 0௯.௧௧.௨0௧௫ (9/11/2015) அன்றைய கீற்று இதழில் எழுதியது).

❀ ❀ ❀ ❀ ❀
படம்: நன்றி ரிவர்வியூ சர்ச்

பதிவு பிடித்திருந்தால் கீழ்க்காணும் வாக்குப்பட்டைகள் மூலம் மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்களேன்! கூடவே, உங்கள் செம்மையான கருத்துக்களுக்கும் காத்திருக்கிறேன்! தமிழில் எழுத வசதியில்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது கீழே 'தமிழ்ப் பலகை'! தனிப்பட ஏதும் தெரிவிக்க விரும்பினால், அதற்கு அடுத்து உள்ள 'அணுக' படிவத்தைப் பயன்படுத்தலாம்!


என் புதினத்தை வாங்க

என் புதினத்தை வாங்க
மேலே உள்ள படத்தை அழுத்துங்கள்
பதிவுகளை உடனுக்குடன் பெற

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

வாட்சாப் தடத்தில் (Channel)...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு (1) 13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (9) அஞ்சல் வாக்கு (1) அஞ்சலி (25) அணு உலை (2) அப்பா மகள் பாசம் (1) அம்பிகை செல்வகுமார் (1) அம்மணம் (1) அமேசான் (6) அயல்நாட்டுத் தமிழர் (1) அரசியல் (91) அழைப்பிதழ் (7) அற்புதம்மாள் (2) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (46) ஆசிரியர் (1) ஆட்சென்ஸ் (1) ஆணவப்படுகொலை (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) ஆய்வு (1) இங்கிலாந்து (1) இசுரேல் (2) இட ஒதுக்கீடு (4) இணையம் (19) இந்தித் திணிப்பு (3) இந்தியா (25) இரசியா (1) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இலக்கணம் (3) இலங்கை (1) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (23) இனம் (46) ஈழம் (44) உக்கிரேன் (1) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (24) எழுவர் விடுதலை (1) ஐ.நா (5) ஒருங்குறி (1) கடவுள் (1) கண்ணதாசன் (1) கதை (4) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (12) கலைச்சொல்லாக்கம் (1) கவிஞர் தாமரை (1) கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் (2) கவிஞர் ரேவதி (1) கவிதை (20) காங்கிரஸ் (6) காசா (2) காணொளி (8) காதல் (3) காந்தியம் (1) கார்த்திக் சுப்புராஜ் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (5) கிரந்தம் (1) கீச்சுகள் (2) கீழடி (2) குழந்தைகள் (10) குறள் (2) கூகுள் (2) கையொப்பம் (2) கோட்பாடு (9) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (16) சந்திப்பு (1) சமயம் (12) சமற்கிருதம் (2) சமூகநீதி (4) சரிதா (1) சாதி (11) சாலமன் பாப்பையா (1) சிங்களர் (1) சித்திரக்கதைகள் (1) சிவகார்த்திகேயன் (1) சிறுவர் இலக்கியம் (5) சீமான் (7) சுற்றுச்சூழல் (6) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (3) சொத்துக்குவிப்பு (1) தங்கிலீஷ் (1) தந்தைமை (1) தமிழ் (40) தமிழ் தேசியம் (5) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (20) தமிழர் (48) தமிழர் பெருமை (20) தமிழறிஞர் முத்துநிலவன் (1) தமிழின் சிறப்பு (4) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (2) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (6) தாலி (1) தி.மு.க (11) திரட்டிகள் (4) திராவிடம் (10) திருக்குறள் (1) திருமுருகன் காந்தி (1) திரைப்படம் (4) திரையுலகம் (12) திறனாய்வு (1) தினகரன் (1) துருவ் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (10) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தேர்தல்-2021 (2) தேர்தல்-2026 (1) தொலைக்காட்சி (2) தொழில்நுட்பம் (10) தோழர் தியாகு (1) நட்பு (13) நிகழ்வுகள் (5) நிர்மலா சீதாராமன் (1) நினைவேந்தல் (10) நீட் (5) நூல்கள் (11) நூற்றாண்டு (1) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (3) பதிவர் உதவிக்குறிப்புகள் (10) பதிவுலகம் (24) பராசக்தி (2) பா.ம.க (2) பா.ஜ.க (31) பாக்யராஜ் (1) பார்ப்பனியம் (14) பாரதிராஜா (1) பாலஸ்தீனம் (2) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (10) பீட்டா (1) புதிய வேளாண் சட்டம் (1) புதினம் (1) புறநானூறு (1) புனைவுகள் (12) பெண்ணியம் (7) பெரியார் (3) பேரறிவாளன் (2) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (6) பொதுவுடைமை (2) பொதுவுடைமைக் கட்சி (2) பொருளாதாரம் (2) பொழிவு (2) போட்டி (1) போர் (3) போராட்டம் (10) ம.ந.கூ (2) மகான் (1) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (11) மடோன் அஷ்வின் (1) மணிவண்ணன் (1) மதிப்புரை (6) மதுவிலக்கு (2) மருத்துவம் (7) மன்சூரா பீவி (1) மாநாடு (1) மாநாடுகள் (1) மாய இயல்பியம் (2) மாவீரர் நாள் (3) மாற்றுத்திறனாளிகள் (3) மிஷ்கின் (1) மீம்ஸ் (7) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (3) மேனகா காந்தி (1) மொழியரசியல் (4) மொழியறிவியல் (3) மோடி (11) யுவர் கோட் (1) யோகிபாபு (1) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) ராஜீவ் படுகொலை (1) வரலாறு (25) வாழ்க்கைமுறை (21) வாழ்த்து (7) வானதி சீனிவாசன் (1) விக்ரம் (1) விடுதலை (6) விடுதலைப்புலிகள் (13) விருது (1) விஜய் (1) விஜய் சேதுபதி (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (7) வை.கோ (6) வைரமுத்து (2) ழகரம் (1) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டாலின் (1) ஸ்டெர்லைட் (2) ஹமாஸ் (2) ஹீலர் பாஸ்கர் (1) Bhagavath Gita (1) BJP (1) Casteism (1) Cauvery (1) Dalit (1) Genocide (3) Hindu (1) Karnataka (1) Magical Realism (1) Manisha (1) Modi (1) Notion Press (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (2) Religion (1) Scheduled Castes (1) Sexual Harassment (1) Tamilnadu (1) Tamils (1) Tanglish (1) Unicode (1) Unicode Consortium (1) UP (1) Women (1) Yogi Adityanath (1)

முகரும் வலைப்பூக்கள்