.

வெள்ளி, நவம்பர் 27, 2015

மண்ணானாலும் தமிழீழத்து மண்ணாவேன்!Tamil Marty's Day - 2015

‘மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்’ எனும் இறையுணர்வுப் பாடலை ஈழத் தமிழுணர்வுப் பாடலாய் மாற்றி இந்த ‘மாவீரர் திருநா’ளில் என் தமிழஞ்சலியாய்ச் சாற்றுகிறேன்!

பல்லவி

மண்ணானாலும் தமிழீழத்து மண்ணாவேன் - ஒரு
மரமானாலும் பதுங்கும் குழிமேல் பனையாவேன் - நான்

மண்ணானாலும் தமிழீழத்து மண்ணாவேன் - ஒரு
மரமானாலும் பதுங்கும் குழிமேல் பனையாவேன்
கல்லானாலும் துயிலும் இல்லக் கல்லாவேன் - கருங்
கல்லானாலும் துயிலும் இல்லக் கல்லாவேன் - பசும்
புல்லானாலும் கரிகாலன் கை வில்லாவேன் - நான்

மண்ணானாலும் தமிழீழத்து மண்ணாவேன் - ஒரு
மரமானாலும் பதுங்கும் குழிமேல் பனையாவேன்

உருவடி -

பொருளானாலும் விடுதலைக்கே எரிபொருளாவேன் - வெறும்
கரியானாலும் தமிழை எழுதத் துணையாவேன்
பேச்சானாலும் தமிழர் உரிமைப் பேச்சாவேன் - தமிழ்ப்
பேச்சானாலும் தமிழர் உரிமைப் பேச்சாவேன் - விடும்
மூச்சானாலும் ஈழத்துக்காய் நான்விடுவேன் - நான்

மண்ணானாலும் தமிழீழத்து மண்ணாவேன் - ஒரு
மரமானாலும் பதுங்கும் குழிமேல் பனையாவேன்

உருவடி -

சொல்லானாலும் மானம் என்னும் சொல்லாவேன் - உதிர்
சருகானாலும் தமிழ் மண்ணுக்கே உரமாவேன்
துகளானாலும் பகைவர் விழிக்கு வினையாவேன் - தூசித்
துகளானாலும் பகைவர் விழிக்கு வினையாவேன் - தனி
உயிரானாலும் மீண்டும் நற்றமிழ்ப் பயிராவேன் - நான்

மண்ணானாலும் தமிழீழத்து மண்ணாவேன் - ஒரு
மரமானாலும் பதுங்கும் குழிமேல் பனையாவேன் 

(நான் இதே நாளில் (27/11/2015) அகரமுதல தனித்தமிழ் இதழில் எழுதியது).

❀ ❀ ❀ ❀ ❀

படம்: நன்றி தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவம்.

பதிவு பிடித்திருந்தால் கீழ்க்காணும் வாக்குப்பட்டைகள் மூலம் மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்களேன்! கூடவே, உங்கள் செம்மையான கருத்துக்களுக்கும் காத்திருக்கிறேன்! தமிழில் எழுத வசதியில்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது கீழே 'தமிழ்ப் பலகை'! தனிப்பட ஏதும் தெரிவிக்க விரும்பினால், அதற்கு அடுத்து உள்ள 'அணுக' படிவத்தைப் பயன்படுத்தலாம்! 
 

 பதிவுகளை உடனுக்குடன் பெறக் கீழ்க்காணும் பொத்தானைச் சொடுக்கி
வாட்சாப் தடத்தில் (Whatsapp Channel) இணையுங்கள்!!

Aga Sivappu Thamizh Whatsapp Channel

முகநூல் வழியே கருத்துரைக்க

18 கருத்துகள்:

 1. நல்ல கருத்துள்ள மாற்று வரிகள் நன்று நண்பரே மிகவும் ரசித்தேன்
  தமிழ் மணம் 2

  பதிலளிநீக்கு
 2. அருமையாக இருக்கின்றது தோழர்/சகோ! பாடியும் பார்த்துவிட்டோம்....ரொம்ப அழகாகப் பொருந்தி வார்த்தைகளுடன் மிக மிக அருமையாகப் படைத்துள்ளீர்கள். பாராட்டுகள். வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாடியே பார்த்துவிட்டீர்களா! மிக்க மகிழ்ச்சி! உங்கள் விளக்கமான பாராட்டுக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி துளசி ஐயா, கீதா அம்மணி!

   நீக்கு
 3. வார்த்தைகளின் கோர்வையும் அர்த்தமும் இணைந்து இசைந்து உருவான ஆக்கம்!

  பதிலளிநீக்கு
 4. பக்தி பாடலை தேச பக்தி (ஈழ தேசம்) பாடலாக மாற்றிய விதம் அருமை சகா!!!

  பதிலளிநீக்கு
 5. வாழ்த்துக்கள் ஐயா! பாடல் வரிகள் நன்று.

  பழம்பெருமை பேசிப்பேசி
  பாழாகிப் போனான் என்றார்க்கு
  புதுப்பெருமை சொல்லவந்தான்
  புவிமீது ஈழத்தான்!

  மாவீரர் நினைவில் நனைவோம்!
  தமிழ் ஈழத்தை மிகவிரைவில் பெறுவோம்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் உணர்வுமிகு வரிகளுக்கும் மிக்க நன்றி ஐயா! உங்கள் முதல் வருகைக்கு என் உளமார்ந்த வரவேற்பு! தொடர்ந்து படியுங்கள்! உங்கள் செம்மையான கருத்துக்களைப் பதியுங்கள்! மேற்கண்ட இணைப்புகள் மூலம் சமூக வலைத்தளங்கள், திரட்டிகள் ஆகியவற்றிலும் பதிவைப் பகிர்ந்து உங்களுக்குப் பிடித்த இந்தப் பதிவு மற்றவர்களையும் சென்றடைய உதவுங்கள்! நன்றி!

   நீக்கு
 6. காலத்தை வென்றவர்கள்.

  மாவீரப் பிள்ளைகளே!
  வணக்கம் செய்கின்றோம்!
  உமக்கு,
  வாழ்த்துத் தருகின்றோம்!

  ஆண்டு பல ஆனாலும்,
  எங்கள் இதயத்தில்...
  ஆழப் பதிந்திருக்கும்
  வீரப் பிள்ளைகளே!

  உமக்கு,
  வணக்கம் செய்கின்றோம்!
  வாழ்த்துத் தருகின்றோம்!

  எமக்காக,
  ஈழ நிலமெல்லாம் நடந்தீர்!
  இன்னல்கள் பல சுமந்தீர்!

  பசி துறந்தீர்!
  நோய்மறந்து எங்களுக்காய்,
  போர்க்களத்தில் சமரிட்டீர்!

  கண்விழித்து நிலம் காத்தீர்!
  ஓயாமல் விடுதலைக்காய்,
  நீருழைத்தீர்!
  தாயீழம் மீட்க வென்று,
  தவ மிருந்து போரிட்டு...
  வெற்றிகளைக் குவித்தீர்!

  ஆண்டு பல ஆனாலும்,
  அழியாது நீர் இருப்பீர்!
  யோதி என எங்களுக்குள்,
  நின்று ஒளி தருவீர்!

  நீர் மீட்ட ஈழமதை,
  நாம் காப்போம்!
  உம் பெயரை,
  ஈழமெங்கும் நாம் விதைப்போம்!

  காலத்தை வென்றவரே!
  கனவுகளைக் கொண்டவரே!

  நனவாகும் காலத்தை,
  நாம் தருவோம் உங்களுக்கு!
  அது வரைக்கும்,
  நன்றியினைத் தருகின்றோம்...
  நாயகரே உங்களுக்கு!

  நீண்ட வரலாற்றில்,
  நிலை எடுப்பீர்!
  நில்லாமல்,
  காலமது உம் பெயரைக் கூவும்!
  நாளை வரும் ஈழமது...
  உம் செயலை,
  கைகுவித்துப் போற்றும்!
  கடவுளென வரலாறு,
  உம் பெயரைப் பதிக்கும்!
  கடைசிவரை தமிழினம்,
  உம்பெயரைத் துதிக்கும்!

  பதிலளிநீக்கு
 7. காலத்தை வென்றவர்கள்.

  மாவீரப் பிள்ளைகளே!
  வணக்கம் செய்கின்றோம்!
  உமக்கு,
  வாழ்த்துத் தருகின்றோம்!

  ஆண்டு பல ஆனாலும்,
  எங்கள் இதயத்தில்...
  ஆழப் பதிந்திருக்கும்
  வீரப் பிள்ளைகளே!

  உமக்கு,
  வணக்கம் செய்கின்றோம்!
  வாழ்த்துத் தருகின்றோம்!

  எமக்காக,
  ஈழ நிலமெல்லாம் நடந்தீர்!
  இன்னல்கள் பல சுமந்தீர்!

  பசி துறந்தீர்!
  நோய்மறந்து எங்களுக்காய்,
  போர்க்களத்தில் சமரிட்டீர்!

  கண்விழித்து நிலம் காத்தீர்!
  ஓயாமல் விடுதலைக்காய்,
  நீருழைத்தீர்!
  தாயீழம் மீட்க வென்று,
  தவ மிருந்து போரிட்டு...
  வெற்றிகளைக் குவித்தீர்!

  ஆண்டு பல ஆனாலும்,
  அழியாது நீர் இருப்பீர்!
  யோதி என எங்களுக்குள்,
  நின்று ஒளி தருவீர்!

  நீர் மீட்ட ஈழமதை,
  நாம் காப்போம்!
  உம் பெயரை,
  ஈழமெங்கும் நாம் விதைப்போம்!

  காலத்தை வென்றவரே!
  கனவுகளைக் கொண்டவரே!

  நனவாகும் காலத்தை,
  நாம் தருவோம் உங்களுக்கு!
  அது வரைக்கும்,
  நன்றியினைத் தருகின்றோம்...
  நாயகரே உங்களுக்கு!

  நீண்ட வரலாற்றில்,
  நிலை எடுப்பீர்!
  நில்லாமல்,
  காலமது உம் பெயரைக் கூவும்!
  நாளை வரும் ஈழமது...
  உம் செயலை,
  கைகுவித்துப் போற்றும்!
  கடவுளென வரலாறு,
  உம் பெயரைப் பதிக்கும்!
  கடைசிவரை தமிழினம்,
  உம்பெயரைத் துதிக்கும்!

  பதிலளிநீக்கு
 8. காலத்தை வென்றவர்கள்.

  மாவீரப் பிள்ளைகளே!
  வணக்கம் செய்கின்றோம்!
  உமக்கு,
  வாழ்த்துத் தருகின்றோம்!

  ஆண்டு பல ஆனாலும்,
  எங்கள் இதயத்தில்...
  ஆழப் பதிந்திருக்கும்
  வீரப் பிள்ளைகளே!

  உமக்கு,
  வணக்கம் செய்கின்றோம்!
  வாழ்த்துத் தருகின்றோம்!

  எமக்காக,
  ஈழ நிலமெல்லாம் நடந்தீர்!
  இன்னல்கள் பல சுமந்தீர்!

  பசி துறந்தீர்!
  நோய்மறந்து எங்களுக்காய்,
  போர்க்களத்தில் சமரிட்டீர்!

  கண்விழித்து நிலம் காத்தீர்!
  ஓயாமல் விடுதலைக்காய்,
  நீருழைத்தீர்!
  தாயீழம் மீட்க வென்று,
  தவ மிருந்து போரிட்டு...
  வெற்றிகளைக் குவித்தீர்!

  ஆண்டு பல ஆனாலும்,
  அழியாது நீர் இருப்பீர்!
  யோதி என எங்களுக்குள்,
  நின்று ஒளி தருவீர்!

  நீர் மீட்ட ஈழமதை,
  நாம் காப்போம்!
  உம் பெயரை,
  ஈழமெங்கும் நாம் விதைப்போம்!

  காலத்தை வென்றவரே!
  கனவுகளைக் கொண்டவரே!

  நனவாகும் காலத்தை,
  நாம் தருவோம் உங்களுக்கு!
  அது வரைக்கும்,
  நன்றியினைத் தருகின்றோம்...
  நாயகரே உங்களுக்கு!

  நீண்ட வரலாற்றில்,
  நிலை எடுப்பீர்!
  நில்லாமல்,
  காலமது உம் பெயரைக் கூவும்!
  நாளை வரும் ஈழமது...
  உம் செயலை,
  கைகுவித்துப் போற்றும்!
  கடவுளென வரலாறு,
  உம் பெயரைப் பதிக்கும்!
  கடைசிவரை தமிழினம்,
  உம்பெயரைத் துதிக்கும்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கவிதைக்குக் கவிதையையே பதிலுரையாய்த் தந்த ஐயா அவர்களுக்கு உளமார்ந்த நன்றி! தங்கள் உணர்வுமிகு வரிகள் அந்த நினைவில் வாழும் நல்லிதயங்களுக்குச் சிறந்த அஞ்சலியாய் அமைந்திருக்கின்றன! மிக்க நன்றி!

   நீக்கு
 9. வணக்கம்.

  மெட்டிற்குப் பாட்டெழுதுதல் ஒரு கலை.

  அதிலும் கச்சிதமாகப் பொருந்தும் சொற்களுடன் பொருளாழம் மிக்கதாக எழுதுதல் கடினம்.

  அது உங்களுக்குக் கைவருகிறது.

  இந்தத் திரைப்படப் பாடலைக் கேட்டிருக்கிறேனே ஒழிய, அதிகம் உள்சென்று ஆய்ந்ததில்லை.

  தங்களது வீறு கொள் ஈழக்கவிதையையும் , அந்தப் பாடலையும் ஒப்பு நோக்க, இத்திரைப்படப்பாடலுக்கும் மூலம், நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் குலசேகர ஆழ்வானின் பாடல் எனத் தோன்றுகிறது.

  அவர் திருவேங்கடம் பற்றிச் சொல்லுமிடத்து,

  “ஊனேறு செல்வத் துடற்பிறவி யான்வேண் டேன்!
  ஆனேறேழ் வென்றா னடிமைத் திறமல்லால்
  கூனேறு சங்க மிடத்ததான்தன் வேங்கடத்து
  கோனேரி வாழும் குருகாய்ப் பிறப்பேனே“

  “செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
  நெடியானே வேங்கடவா நின்கோயி லின்வாசல்
  அடியாரும் வானவரு மரம்பையரும் கிடந்தியங்கும்
  படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே“

  எனுமாறு தொடர்ந்து அங்குள்ள குருகாய், படியாய், மரமாய், மலையாய், ஆறாய், புதராய்.எல்லாம் ஆக மாட்டேனா என்று வேண்டியபடி சென்று அதன் உச்சமாய், என் வேண்டுதல்படி இவையாக நான் மாறாவிட்டாலும் பரவாயில்லை. அம்மலைமேல் ஏதேனும் ஒரு பொருளாக ஆவது நான் ஆக மாட்டேனா என ஏங்கி,
  இறுதியாய்,


  “செம்பவள வாயான் திருவேங் கடமென்னும்
  எம்பெருமான் பொன்மலைமே லேதேனு மாவேனே“

  எனப் பாடிய வரிகளை உங்களின் பாடலின் ஊடாக நினைவு கூர்கிறேன்.

  தொடருங்கள்.

  நன்றி.

  பதிலளிநீக்கு
 10. தங்கள் பாராட்டைப் பெருமகிழ்ச்சியுடன் சிரமேற் கொள்கிறேன் ஐயா! நாலாயிர திவ்யப் பிரபந்தத்தின் மேற்'படி' பாடலை நானும் பாடநூலில் படித்திருக்கிறேன். இன்னும் மறக்கவும் இல்லை. மேற்கண்ட முருகன் பாடலையும் எத்தனையோ முறை சிறு அகவையிலிருந்து கேட்டே வருகிறேன். ஆனால், இவை இரண்டையும் இணைத்துப் பார்க்க எனக்குத் தோன்றவில்லை பாருங்கள்! சுவையான ஒப்பீடு ஐயா! தங்கள் பாராட்டுக்களுக்கும் விரிவான அருமையான கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா!

  பதிலளிநீக்கு

என் புதினத்தை வாங்க

என் புதினத்தை வாங்க
மேலே உள்ள படத்தை அழுத்துங்கள்
பதிவுகளை உடனுக்குடன் பெற

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

வாட்சாப் தடத்தில் (Channel)...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு (1) 13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (9) அஞ்சலி (21) அணு உலை (2) அம்பிகை செல்வகுமார் (1) அம்மணம் (1) அமேசான் (6) அயல்நாட்டுத் தமிழர் (1) அரசியல் (90) அழைப்பிதழ் (7) அற்புதம்மாள் (2) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (39) ஆட்சென்ஸ் (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இங்கிலாந்து (1) இசுரேல் (2) இட ஒதுக்கீடு (4) இணையம் (19) இந்தித் திணிப்பு (1) இந்தியா (25) இரசியா (1) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இலக்கணம் (3) இலங்கை (1) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (23) இனம் (46) ஈழம் (44) உக்கிரேன் (1) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (24) எழுவர் விடுதலை (1) ஐ.நா (5) ஒருங்குறி (1) கடவுள் (1) கதை (3) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (11) கலைச்சொல்லாக்கம் (1) கவிஞர் தாமரை (1) கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் (2) கவிஞர் ரேவதி (1) கவிதை (19) காங்கிரஸ் (6) காசா (2) காணொளி (4) காதல் (2) காந்தியம் (1) கார்த்திக் சுப்புராஜ் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (5) கிரந்தம் (1) கீச்சுகள் (2) குழந்தைகள் (10) குறள் (2) கூகுள் (2) கையொப்பம் (2) கோட்பாடு (9) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (16) சமயம் (12) சமற்கிருதம் (2) சமூகநீதி (4) சரிதா (1) சாதி (10) சிங்களர் (1) சித்திரக்கதைகள் (1) சிவகார்த்திகேயன் (1) சிறுவர் இலக்கியம் (4) சீமான் (7) சுற்றுச்சூழல் (6) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (3) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (31) தமிழ் தேசியம் (5) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (16) தமிழர் (45) தமிழர் பெருமை (17) தமிழின் சிறப்பு (3) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (2) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (5) தாலி (1) தி.மு.க (11) திரட்டிகள் (4) திராவிடம் (9) திருமுருகன் காந்தி (1) திரைப்படம் (2) திரையுலகம் (9) திறனாய்வு (1) தினகரன் (1) துருவ் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (9) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தேர்தல்-2021 (2) தொலைக்காட்சி (2) தொழில்நுட்பம் (10) தோழர் தியாகு (1) நட்பு (12) நிகழ்வுகள் (5) நிர்மலா சீதாராமன் (1) நினைவேந்தல் (10) நீட் (5) நூல்கள் (9) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (3) பதிவர் உதவிக்குறிப்புகள் (10) பதிவுலகம் (23) பா.ம.க (2) பா.ஜ.க (30) பார்ப்பனியம் (14) பாலஸ்தீனம் (2) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (9) பீட்டா (1) புதிய வேளாண் சட்டம் (1) புறநானூறு (1) புனைவுகள் (10) பெண்ணியம் (6) பெரியார் (3) பேரறிவாளன் (2) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (5) பொதுவுடைமை (1) பொதுவுடைமைக் கட்சி (1) பொருளாதாரம் (2) பொழிவு (2) போட்டி (1) போர் (3) போராட்டம் (10) ம.ந.கூ (2) மகான் (1) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (10) மடோன் அஷ்வின் (1) மணிவண்ணன் (1) மதிப்புரை (5) மதுவிலக்கு (2) மருத்துவம் (7) மாநாடு (1) மாநாடுகள் (1) மாய இயல்பியம் (1) மாவீரர் நாள் (3) மாற்றுத்திறனாளிகள் (2) மிஷ்கின் (1) மீம்ஸ் (7) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (3) மேனகா காந்தி (1) மொழியரசியல் (2) மொழியறிவியல் (2) மோடி (11) யுவர் கோட் (1) யோகிபாபு (1) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) ராஜீவ் படுகொலை (1) வரலாறு (22) வாழ்க்கைமுறை (17) வாழ்த்து (5) வானதி சீனிவாசன் (1) விக்ரம் (1) விடுதலை (6) விடுதலைப்புலிகள் (13) விருது (1) விஜய் (1) விஜய் சேதுபதி (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (7) வை.கோ (6) வைரமுத்து (2) ழகரம் (1) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டெர்லைட் (2) ஹமாஸ் (2) ஹீலர் பாஸ்கர் (1) Bhagavath Gita (1) BJP (1) Casteism (1) Cauvery (1) Dalit (1) Genocide (3) Hindu (1) Karnataka (1) Magical Realism (1) Manisha (1) Modi (1) Notion Press (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (2) Religion (1) Scheduled Castes (1) Sexual Harassment (1) Tamilnadu (1) Tamils (1) Unicode (1) Unicode Consortium (1) UP (1) Women (1) Yogi Adityanath (1)

முகரும் வலைப்பூக்கள்