உலகத் தமிழ் உள்ளங்களே!
உங்கள் விருப்பத்துக்குரிய ‘13ஆம் உலகில் ஒரு காதல்’ புதினம் நேற்று அமேசானின் அதிகம் விற்பனையாகும் அறிவியல் புனைவு கிண்டில் பதிப்பு நூல்கள் (Science fiction Kindle version Books) பட்டியலில் முதல் 100க்குள் இடம் பிடித்தது! மேலே உள்ள படத்தைப் பாருங்கள்!

இதற்கு முழுக் காரணம் உங்கள் பேராதரவுதான்! அதற்கு நன்றியறிதலாகவும் இதைக் கொண்டாடும் வகையிலும் உங்களுக்குப் பிடித்தமான இந்தப் புதினம் இன்று முதல் இலவசம்! ஆம்! இதுவரை கிண்டில் அன்லிமிட்டெட் திட்ட உறுப்பினர்களுக்கு மட்டும் இலவசமாக இருந்து வந்த நூல் இப்பொழுது முழுக்கவே இலவசம்!!
ஏற்கெனவே காசு கொடுத்து வாங்கிய நண்பர்கள் இதற்காக என் மீது சினம் கொள்ளாமல் தங்களுக்குப் பிடித்த இந்த நூல் இதன் மூலம் இன்னும் பலருக்கும் சென்று சேர இருப்பது குறித்து மகிழ்ந்து வாழ்த்த வேண்டுகிறேன்!
ஏற்கெனவே காசு கொடுத்து வாங்கிய நண்பர்கள் இதற்காக என் மீது சினம் கொள்ளாமல் தங்களுக்குப் பிடித்த இந்த நூல் இதன் மூலம் இன்னும் பலருக்கும் சென்று சேர இருப்பது குறித்து மகிழ்ந்து வாழ்த்த வேண்டுகிறேன்!
இந்தச் சலுகையால் நூலை வாங்குவது இப்பொழுது மிக மிக எளிதாகி விட்டது. வெறும் மூன்றே மூன்று சொடுக்குகள் போதும்! வாங்கி விடலாம்.
2) இப்பொழுது வரும் பக்கத்தில் ‘Buy Now’ பொத்தானை அழுத்துங்கள்!
3) உள்நுழையச் (Login) சொல்லும். உங்கள் அமேசான் கணக்கின் மின்னஞ்சல் முகவரி அல்லது கைப்பேசி எண் ஆகிய இரண்டில் ஏதேனும் ஒன்றையும் அமேசான் கணக்கின் கடவுச்சொல்லையும் இட்டுப் பொத்தானை அழுத்துங்கள்.
இப்பொழுது நூலை வாங்கியதற்காக உங்கள் பெயரைக் குறிப்பிட்டு நன்றி எனக் காட்டும். அவ்வளவுதான்! நீங்கள் புதினத்தை வாங்கி விட்டீர்கள்!
இனி கூகுள் பிளே ஸ்டோருக்குள் சென்று Kindle எனத் தேடியெடுத்து அந்தக் குறுஞ்செயலியை உங்கள் ஆன்டிராய்டு கைப்பேசியில் நிறுவி விட்டால், மேலே சொன்னபடி உங்கள் அமேசான் கணக்கு விவரங்களைக் கொடுத்து அதில் உள்நுழைந்து லைப்ரரி எனும் பிரிவில் கதையைப் படிக்கலாம்.
ஆன்டிராய்டு கைப்பேசி மட்டுமில்லை ஆப்பிள் கைப்பேசி, ஆன்டிராய்டு மற்றும் ஆப்பிள் குளிகைகள் (tablets), விண்டோஸ் மற்றும் மேக் கணினிகள், கிண்டில் மின்-படிப்பான் (Kindle E-Reader) ஆகிய கருவிகளிலும் கிண்டில் குறுஞ்செயலி (Kindle app) வழியே நீங்கள் இந்த நூலைப் படிக்க முடியும்.
விரையுங்கள்! இந்தச் சலுகை (இந்திய நேரப்படி) டிசம்பர் 08, 2019 அன்று மதியம் 1.29 வரை மட்டுமே!
ஏற்கெனவே நூலை வாங்கியவர்களுக்கு ஒரு முக்கியமான தகவல் மற்றும் வேண்டுகோள்!
நூல் பற்றிக் குறிப்பிட்ட சிலர் மட்டுமே கருத்துத் தெரிவிக்க முடியும் என்று முந்தைய பதிவில் எழுதியிருந்தேன். பொறுத்தருள வேண்டும்! அது முற்றிலும் தவறான தகவல்! நூலை வாங்கும் யார் வேண்டுமானாலும் உங்கள் கருத்தையும் தரக்குறியீட்டையும் தாராளமாக அளிக்கலாம்.
மேலே உள்ள https://amzn.to/2qFuL4z இணைப்பு வழியாக மீண்டும் போனால் அந்தப் பக்கத்தின் கீழ்ப் பகுதியில் ஏற்கெனவே அளிக்கப்பட்ட கருத்துக்கள், தரக்குறியீடுகள் இருக்கும். அவற்றின் கீழே Write a product review என இரண்டு பொத்தான்கள் இருக்கும். இரண்டில் எதை வேண்டுமானாலும் அழுத்தலாம். அழுத்தினால் அடுத்து வரும் பக்கத்தில் முதலில் ஐந்து விண்மீன்கள் (Stars) இருக்கும். உங்களுக்கு எந்த அளவுக்குக் கதையைப் பிடித்திருக்கிறதோ அந்த அளவுக்கு அதிகமான விண்மீன்களை அழுத்துங்கள். சில நொடிகள் காத்திருந்தால் Submitted எனக் காட்டும். அவ்வளவுதான் நீங்கள் எனக்குத் தரக்குறியீடு அளித்து விட்டீர்கள்.
பின்னர் அடுத்த கட்டத்தில் கருத்தை எழுதி, அதன் அடுத்த கட்டத்தில் கருத்துக்கான தலைப்பை எழுதி முடிவில் உள்ள Submit பொத்தானை அழுத்தினால். உங்கள் கருத்துக்களும் பதிவாகி விடும்.
கருத்துக்களை ஆங்கிலத்தில் மட்டுமே பதிவு செய்ய முடியும். ஆங்கிலம் தெரியாதவர்கள் தமிழ்க் கருத்தையே ஆங்கில எழுத்துக்களால் எழுதலாம். அப்படிச் செய்யப் பிடிக்காதவர்கள் வெறும் தரக்குறியீடு மட்டும் அளித்து உதவலாம்.
இதுவரை நூலைப் படித்த அனைவரும் தவறாமல் இதைச் செய்து உதவ வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறேன்!

அசத்துங்க தலைவரே...
பதிலளிநீக்குஊருக்கு வந்தவுடன் எனது விமர்சனம் வரும்... நன்றி...
என்ன!! தலைவரா!! இதெல்லாம் பெரிய சொல் ஐயா! என்றும் எங்கள் தலைவர் - பதிவுலகின் தலைவர் - தாங்கள்தாம்!
நீக்குஉங்கள் விமர்சனத்துக்காகக் காத்திருப்பேன். கூடவே உங்கள் கருத்துக்களையும் தரக்குறியீட்டையும் அமேசானில் பதிவு செய்தால் எனக்கு மிக உதவியாக இருக்கும்.
வாழ்த்துகள்
பதிலளிநீக்குமிக்க நன்றி ஐயா! இந்த வெற்றிக்குத் தாங்களும் முக்கிய காரணம். நூல் பற்றித் தாங்கள் எழுதிய அந்தப் பதிவு எனக்குக் கருவூலம்! மிக்க நன்றி ஐயா!
நீக்குநட்பூக்களே! அமேசான் கிண்டிலின் Pen to Publish 2019 போட்டி இன்றோடு முடிகிறது. இரவுக்குள் அதிகக் கருத்தும் தரக்குறியீடும் (ratings) பெறும் நூல்கள் மட்டுமே நடுவர்கள் பார்வைக்குத் தேர்வாகும். எனவே 13ஆம் உலகில் ஒரு காதல் பற்றி உங்கள் கருத்துக்களையும் தரக்குறியீடுகளையும் உடனே பதிந்து என் வெற்றிக்கு உதவ வேண்டுகிறேன்!
பதிலளிநீக்குநீங்கள் நூலை வாங்கப் போன https://amzn.to/2qFuL4z எனும் அதே இணைப்பு வழியாக மீண்டும் போனால் அந்தப் பக்கத்தின் கீழ்ப் பகுதியில் Write a product review என ஒரு பொத்தான் இருக்கும். அதை அழுத்தினால் அடுத்து வரும் பக்கத்தில் முதலில் ஐந்து விண்மீன்கள் (Stars) இருக்கும். உங்களுக்கு எந்த அளவுக்குக் கதையைப் பிடித்திருக்கிறதோ அந்த அளவுக்கு அதிகமான விண்மீன்களை அழுத்துங்கள். சில நொடிகள் காத்திருந்தால் Submitted எனக் காட்டும். அவ்வளவுதான் நீங்கள் தரக்குறியீடு அளித்து விட்டீர்கள்.
பின்னர் அடுத்த கட்டத்தில் கருத்துக்கான தலைப்பை எழுதி அதன் அடுத்த கட்டத்தில் கருத்தை எழுதி, முடிவில் உள்ள Submit பொத்தானை அழுத்தினால். உங்கள் கருத்துக்களும் பதிவாகி விடும்.
கருத்துக்களை ஆங்கிலத்தில் மட்டுமே பதிவு செய்ய முடியும். ஆங்கிலம் தெரியாதவர்கள் தமிழ்க் கருத்தையே ஆங்கில எழுத்துக்களால் எழுதலாம். அப்படிச் செய்யப் பிடிக்காதவர்கள் வெறும் தரக்குறியீடு மட்டுமாவது அளித்து என்னை மகிழ்விக்கலாம்.
இதுவரை நூலைப் படித்த அனைவரும் தவறாமல் இதைச் செய்து உதவ வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறேன்!
மிக்க நன்றி!