.

சனி, டிசம்பர் 14, 2019

13ஆம் உலகில் ஒரு காதல் பற்றி எழுத்தாளர் தேமொழி அவர்களின் மதிப்புரை (Review)!

13aam ulagil oru kaadhal Book Review

ட்புக்கினியவர்களே! 

நான் எழுதிய 13ஆம் உலகில் ஒரு காதல் புதினம் பற்றி அண்மையில் எழுத்தாளரும் தமிழ்த் தொண்டருமான தேமொழி அவர்கள் ‘சிறகு’ இதழில் ஒரு மதிப்புரை (review) வழங்கியிருந்தார். படித்த உடனேயே உள்ளக் கிளர்ச்சியால் என் உடம்பையே படபடக்கச் செய்த அந்தக் கட்டுரை, அன்னாருக்கு நெஞ்சம் நெகிழ்ந்துருகும் நன்றியுடன் இதோ உங்கள் பார்வைக்கு! 

ஒரு நிமிடம்! கட்டுரைக்குள் செல்லும் முன் ஒரு முக்கிய தகவல்! புதினத்தைப் படித்துக் கருத்துரைக்க இன்றுதான் (14.12.2019) கடைசி நாள் என்று குறிப்பிட்டிருந்தேன். அது தவறு நண்பர்களே! தவறான தகவலுக்காக மீண்டும் என்னைப் பொறுத்தருள வேண்டும்! இந்த மாதக் கடைசி வரை நேரம் இருக்கிறது.

எனவே இதுவரை நூலைப் படிக்காதவர்கள் இனியாவது படித்து டிசம்பர் 31, 2019 அன்றுக்குள் உங்கள் மேலான கருத்துக்களையும் தரக்குறியீடுகளையும் அமேசானில் வழங்கி இந்தப் போட்டியில் என்னை வெல்லச் செய்ய வேண்டுகிறேன்! நூலை வாங்க - https://amzn.to/2qFuL4z

நூலை எப்படி வாங்கிப் படிப்பது, எப்படிக் கருத்து அளிப்பது என்பது பற்றிய விவரங்கள் 13ஆம் உலகில் ஒரு காதல் - என் முதல் புதினம்! வெற்றி பெறக் கை கொடுப்பீர்! எனும் கட்டுரையில் உள்ளன. 

மிக்க நன்றி! இனி மதிப்புரை உங்கள் பார்வைக்கு!

❤ ❤ ❤ ❤ ❤ 


தமிழில் அறிவியல் படைப்புகள் வெளியிடுபவர் எண்ணிக்கை குறைவு. அறிவியல் அடிப்படையில் கற்பனை செய்து அறிவியல் புதினம் உருவாக்குவோர் எண்ணிக்கை அதனினும் மிக மிகக் குறைவு. ஜூல்ஸ்வெர்ன், எச்.ஜி. வெல்ஸ் போன்ற மேலைநாட்டு அறிவியல் புதின எழுத்தாளர் போன்ற ஒரு படைப்பாளிகள் வரிசை தமிழ் மொழியில் இல்லை. அறிவியல் புதினம் என்றால் எழுத்தாளர் சுஜாதா பெயர் மட்டுமே அனைவருக்கும் சட்டென நினைவு வரும் அளவிற்கு ஒரு வறட்சி நிலை தமிழ் இலக்கியத்தில்.

தனது “13ஆம் உலகில் ஒரு காதல்” என்ற நூலின் மூலம் இக்குறையை நீக்க முயன்றுள்ளார் இ.பு.ஞானப்பிரகாசன். இவர் ‘நமது களம்’ இணைய இதழில் துணையாசிரியர், மொழிபெயர்ப்பாளர், பல இதழ்களிலும் இவரது படைப்புகள் வெளிவந்துள்ளன. அமேசான் கிண்டில் நடத்தும் ‘Pen to Publish 2019′ போட்டியில் கலந்துகொண்டு ஆசிரியர் எழுதியுள்ள இந்த நூலை அவர் தமது முதல் புதினம் என்று குறிப்பிட்டாலும் விறுவிறுப்பாகக் கதை சொல்லும் எழுத்தின் நடையும், தொய்வில்லாது கதையை நடத்திச் செல்லும் பாங்கும் ஒரு சிறந்த அறிவியல் புதின எழுத்தாளர் தமிழ் இலக்கிய உலகில் உருவாகியுள்ளார் என்றே கட்டியம் கூறுகின்றன. 

உலகம் தழுவிய மனிதநேயம் கொண்டாட விரும்பும் ஒரு தமிழ்ப்பற்றாளரின் அறிவியல் கற்பனை அதையன்றி வேறெதைக் கதையின் கருவாகக் கொண்டிருக்கும்? கதையின் தலைவி மகிழினி எடுக்கும் முடிவு உலகம் கடந்த மனிதநேயத்திற்கான ஓர் எடுத்துக்காட்டு. ஞானப்பிரகாசனின் தாய்மொழிப் பற்றும் தமிழினக் கனவுகளும் அத்துடன் இணைந்ததில் 13ஆம் உலகமான வேற்றுலகில் வாழும் மனிதர்களின் நலனுக்காக, அவர்களின் அறிவியல் ஆய்வுகளுக்காகத் தன்னையே ஒப்புக்கொடுக்கவும் தயங்காதவளாக மகிழினி உருவாகியுள்ளாள். 

“மகிழினி அவன் கையை உதறி விட்டுப் பறக்கும் தட்டின் உடைந்த சன்னல் வழியாக வெளியே பாய்ந்தாள்!” என்று ஆர்வமூட்டும் துவக்கத்துடன் கதை துவங்கிப் பின்னோக்கிச் சென்று அவள் அந்த முடிவெடுக்க என்ன காரணம் என்று கூறும் கதை அமைப்பு. 

துறுதுறுப்பும், அறிவுக்கூர்மையும், துணிச்சலும் நிரம்பிய இதழியல் மாணவி மகிழினி தனது பயணத்தின் இடையில் பல ஆண்டுகளாகச் சென்றிராத தனது சொந்த கிராமமான கோட்டைப்பட்டினத்தில் உள்ள தாத்தா பாட்டியின் வீட்டிற்குச் செல்கிறாள். அங்கு இயற்கை உழவில் ஈடுபாடு கொண்டுள்ள விவசாயக் கல்லூரிப் பட்டதாரியான தனது சிறுவயதுத் தோழன் மதியைச் சந்தித்து, அவனுடன் சென்று ஊரில் உள்ள தனது மற்ற சிறுவயது தோழர்களையும் சந்தித்து அளவளாவி மகிழ்கிறாள். “முதல் கேள்வியே தப்பு. ஏலியன்ஸ் இருக்காங்களான்னு கேக்கக்கூடாது. எங்க இருக்காங்கன்னு கேளு!” என்று கூறும் ஓய்வுபெற்ற அறிவியல் பேராசிரியரான மதியின் தாத்தாவையும் சந்திக்கிறாள். 

மீண்டும் அவள் தொடர்வண்டியில் தனது பயணத்தைத் தொடர்கையில் மகிழினி வேற்றுலகில் வாழும் மனிதர்களால் கடத்தப்பட்டுவிட்டாள் என்பதை மதியின் தாத்தா கண்டுபிடித்து மகிழினியைக் காப்பற்ற முயல்கிறார். அவருடன் சென்ற மதி தனது காதலி மகிழினியைக் காப்பாற்ற தானும் வேற்றுலகிற்குக் கடத்தப்படும் திட்டத்திற்கு முன்வருகிறான். வேற்றுலகின் அரசியல் போராட்டத்திலும் சிக்கிக்கொண்டு இருவரும் பகடைக்காய்களாகவும் மாறுகிறார்கள். 

மகிழினியின் நோக்கம் நிறைவேறுகிறதா? மதியின் காதல் வெற்றிபெறுகிறதா? என்பதுதான் கதையின் முடிவு. மகிழினியைக் காதலிக்கும் மதி அவள் நலனுக்காகத் தன்னையும் தனது வாழ்வையும் பணயம் வைக்கத் தயங்காத வீரத் திருமகனாகச் சுடர் விடுகிறான். கதை மாந்தர்களின் பெயர்கள் நல்ல தமிழ்ப் பெயர்களாக மகிழினி, மதி எனவும், அதிலும் வேற்றுலக மனிதர்களின் பெயர்கள் ழகரன், கொற்றவன், இன்முகை, கமழ்நன், செழினி, மின்மதி என தூய தமிழ்ப் பெயர்களாக அமைந்தாலும் அவையாவும் கதையின் கருவினால் சிறப்பாகக் கதையில் பொருந்தி விடுகிறது. 

“மனித இனம் இங்க பாதுகாப்பா வாழறதுக்காக, பல காலத்துக்கு முன்னாடியே யாரோ அணுகுண்டு வீசி அதுங்களை அழிச்சிருக்காங்க” என்று அறிவியல் தாத்தா கூறும் டயனோசார்களின் அழிவு குறித்த ஊகம் பரிணாமவியல் காலக்கோட்டில் நெருடுகிறது. டயனோசார்களின் அழிவுக்குப் பிறகு சுமார் 65 மில்லியன் ஆண்டுகள் கடந்த பின்னரே புவியின் மனித இனம் தோன்றியது என்பதே அறிவியல். 

தமிழி எழுத்து, சீன அதிபரின் மாமல்லை வருகை, ஐயப்பன் கோயிலில் நுழையப் பெண்களுக்குத் தடை, ஈழப்போர் என்ற தற்கால நிகழ்வுகளை ஒட்டிய செய்திகள் இடம் பெறுவது ஆர்வத்தைக் கதையில் ஊன்ற வைக்கிறது. “பேரலல் வேர்ல்டுங்கிறீங்க? அப்புறம் எப்படி இவ்ளோ பெரிய டிஃபரன்ஸ்?” என்று மகிழினி கேட்கையில், தமிழ்பேசும் வேற்றுலகின் மனிதர், “அதற்குக் காரணம் தாய்மொழிப் பண்பாட்டை மறக்காத எங்கள் வாழ்க்கை முறை. சாதி, சமயம் எல்லாம் வேண்டா என்று பெரியார் என்று ஒருவர் வந்து சொல்லும் வரை நீங்கள் கேட்கவில்லை” என்று விளக்கம் கூறுவது கருத்தைக் கவரும் ஒரு குறிப்பு. 

“இரவு வானம், பஞ்சு மெத்தை மேலே மறந்து விட்டுப் போன கைப்பேசி போல் முழு நிலா மேகத்தில் படுத்துக் கிடக்க” என்ற கற்பனையும், “ஒரே நேரத்தில் அத்தனை பேரையும் கொத்தாகக் கைது செய்யுங்கள்! குண்டுகள் தீர்ந்து போனால் அப்புறம் துப்பாக்கியைக் கண்டு அஞ்ச வேண்டியதில்லை. எளிதாகக் கைப்பற்றலாம்” என்ற உவமையும் ஆசிரியரின் எழுத்துத் திறனுக்குச் சான்றுகள்.
 
மனிதர்கள் வேற்றுலகிற்குக் கடத்தப்படும் நோக்கம் குறித்து மகிழினியும் மதியும் வேறு வேறு மனிதர்களால் விளக்கம் பெறும்பொழுது அதைத் திரைப்படப் பாணியில் வெட்டி வெட்டி வெவ்வேறு காட்சிகளாக அமைக்கும் பாணியை ஆசிரியர் பயன்படுத்தியுள்ள முறை, இக்கதை திரைப்படமாக உருவாக்கப்பட்டாலும் சிறப்பாகவே அமையும் என்ற எண்ணத்தை எழுப்பத் தவறவில்லை. கதையும் தமிழ்ப்பட மசாலாக் கூறுகளுடனும் சிறப்பான கதைமாந்தர்கள் உருவாக்கமும் கொண்டுள்ளதாகவே அமைந்துள்ளது. 

கற்பனைக்கு எடுத்தாண்ட கதையின் திருப்பங்களும் நிகழ்வுகளும் ஏரண அடிப்படையிலும் அறிவியல் அடிப்படையிலும் பொருந்துகின்றன. மேலும் நமக்கு வரக்கூடிய ஐயங்களைக் கதை மாந்தர்களே கேட்டுத் தெளிவு பெறும் வகையில் விளக்கம் தரும் முறையும் ஒரு சிறப்பான முயற்சி. நம்பிக்கை தரும் வகையில், பாராட்டப்படவேண்டிய எழுத்து நடையில், சிறப்பாகக் கதை கூறும் அறிவியல் புதின எழுத்தாளர் ஒருவர் உருவாகியுள்ளார் என நாம் மகிழலாம், இ.பு.ஞானப்பிரகாசனுக்குப் பாராட்டுகள்.


நான் கனவிலும் எதிர்பார்க்காத இப்பேர்ப்பட்ட ஒரு மதிப்புரையை வழங்கிய 
தேமொழி அவர்களுக்கு நெஞ்சம் ததும்பி வழியும் நன்றி!

 பதிவுகளை உடனுக்குடன் பெறக் கீழ்க்காணும் பொத்தானைச் சொடுக்கி
வாட்சாப் தடத்தில் (Whatsapp Channel) இணையுங்கள்!!

Aga Sivappu Thamizh Whatsapp Channel

முகநூல் வழியே கருத்துரைக்க

5 கருத்துகள்:

  1. வாழ்த்துகள் ஐயா...

    அடியேன் தான் தாமதம் போல... மன்னிக்கவும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயா! வழக்கம் போல் உங்கள் கருத்துதான் முதலில். ஆனால் இப்படி மன்னிப்பு, அடியேன் போன்ற கனமான சொற்களைப் பயன்படுத்தி என்னை வருத்தப்படுத்த வேண்டாவே! என்றும் நான் உங்கள் அன்பன்.

      நீக்கு
  2. அற்புதமான ஆய்வுரை இந்தப் புத்தகத்தை நானும் வாசித்துக் கொண்டிருக்கிறேன் ஆர்வத்தைத் தூண்டுகின்ற வரிகளும் வார்த்தை பிரயோகங்களும் இந்நாவலில் அமைந்திருக்கின்றன

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கௌசி அவர்களே! உங்கள் கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

      நீக்கு
  3. நட்பூக்களே! அமேசான் கிண்டிலின் Pen to Publish 2019 போட்டி இன்றோடு முடிகிறது. இரவுக்குள் அதிகக் கருத்தும் தரக்குறியீடும் (ratings) பெறும் நூல்கள் மட்டுமே நடுவர்கள் பார்வைக்குத் தேர்வாகும். எனவே 13ஆம் உலகில் ஒரு காதல் பற்றி உங்கள் கருத்துக்களையும் தரக்குறியீடுகளையும் உடனே பதிந்து என் வெற்றிக்கு உதவ வேண்டுகிறேன்!

    நீங்கள் நூலை வாங்கப் போன https://amzn.to/2qFuL4z எனும் அதே இணைப்பு வழியாக மீண்டும் போனால் அந்தப் பக்கத்தின் கீழ்ப் பகுதியில் Write a product review என ஒரு பொத்தான் இருக்கும். அதை அழுத்தினால் அடுத்து வரும் பக்கத்தில் முதலில் ஐந்து விண்மீன்கள் (Stars) இருக்கும். உங்களுக்கு எந்த அளவுக்குக் கதையைப் பிடித்திருக்கிறதோ அந்த அளவுக்கு அதிகமான விண்மீன்களை அழுத்துங்கள். சில நொடிகள் காத்திருந்தால் Submitted எனக் காட்டும். அவ்வளவுதான் நீங்கள் தரக்குறியீடு அளித்து விட்டீர்கள்.

    பின்னர் அடுத்த கட்டத்தில் கருத்துக்கான தலைப்பை எழுதி அதன் அடுத்த கட்டத்தில் கருத்தை எழுதி, முடிவில் உள்ள Submit பொத்தானை அழுத்தினால். உங்கள் கருத்துக்களும் பதிவாகி விடும்.

    கருத்துக்களை ஆங்கிலத்தில் மட்டுமே பதிவு செய்ய முடியும். ஆங்கிலம் தெரியாதவர்கள் தமிழ்க் கருத்தையே ஆங்கில எழுத்துக்களால் எழுதலாம். அப்படிச் செய்யப் பிடிக்காதவர்கள் வெறும் தரக்குறியீடு மட்டுமாவது அளித்து என்னை மகிழ்விக்கலாம்.

    இதுவரை நூலைப் படித்த அனைவரும் தவறாமல் இதைச் செய்து உதவ வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறேன்!

    மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு

என் புதினத்தை வாங்க

என் புதினத்தை வாங்க
மேலே உள்ள படத்தை அழுத்துங்கள்
பதிவுகளை உடனுக்குடன் பெற

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

வாட்சாப் தடத்தில் (Channel)...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு (1) 13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (9) அஞ்சலி (21) அணு உலை (2) அம்பிகை செல்வகுமார் (1) அம்மணம் (1) அமேசான் (6) அயல்நாட்டுத் தமிழர் (1) அரசியல் (90) அழைப்பிதழ் (7) அற்புதம்மாள் (2) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (40) ஆட்சென்ஸ் (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இங்கிலாந்து (1) இசுரேல் (2) இட ஒதுக்கீடு (4) இணையம் (19) இந்தித் திணிப்பு (1) இந்தியா (25) இரசியா (1) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இலக்கணம் (3) இலங்கை (1) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (23) இனம் (46) ஈழம் (44) உக்கிரேன் (1) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (24) எழுவர் விடுதலை (1) ஐ.நா (5) ஒருங்குறி (1) கடவுள் (1) கதை (3) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (11) கலைச்சொல்லாக்கம் (1) கவிஞர் தாமரை (1) கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் (2) கவிஞர் ரேவதி (1) கவிதை (19) காங்கிரஸ் (6) காசா (2) காணொளி (4) காதல் (2) காந்தியம் (1) கார்த்திக் சுப்புராஜ் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (5) கிரந்தம் (1) கீச்சுகள் (2) குழந்தைகள் (10) குறள் (2) கூகுள் (2) கையொப்பம் (2) கோட்பாடு (9) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (16) சந்திப்பு (1) சமயம் (12) சமற்கிருதம் (2) சமூகநீதி (4) சரிதா (1) சாதி (10) சிங்களர் (1) சித்திரக்கதைகள் (1) சிவகார்த்திகேயன் (1) சிறுவர் இலக்கியம் (4) சீமான் (7) சுற்றுச்சூழல் (6) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (3) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (31) தமிழ் தேசியம் (5) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (16) தமிழர் (45) தமிழர் பெருமை (17) தமிழறிஞர் முத்துநிலவன் (1) தமிழின் சிறப்பு (3) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (2) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (5) தாலி (1) தி.மு.க (11) திரட்டிகள் (4) திராவிடம் (9) திருமுருகன் காந்தி (1) திரைப்படம் (2) திரையுலகம் (9) திறனாய்வு (1) தினகரன் (1) துருவ் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (9) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தேர்தல்-2021 (2) தொலைக்காட்சி (2) தொழில்நுட்பம் (10) தோழர் தியாகு (1) நட்பு (13) நிகழ்வுகள் (5) நிர்மலா சீதாராமன் (1) நினைவேந்தல் (10) நீட் (5) நூல்கள் (10) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (3) பதிவர் உதவிக்குறிப்புகள் (10) பதிவுலகம் (24) பா.ம.க (2) பா.ஜ.க (30) பார்ப்பனியம் (14) பாலஸ்தீனம் (2) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (9) பீட்டா (1) புதிய வேளாண் சட்டம் (1) புறநானூறு (1) புனைவுகள் (10) பெண்ணியம் (6) பெரியார் (3) பேரறிவாளன் (2) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (5) பொதுவுடைமை (1) பொதுவுடைமைக் கட்சி (1) பொருளாதாரம் (2) பொழிவு (2) போட்டி (1) போர் (3) போராட்டம் (10) ம.ந.கூ (2) மகான் (1) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (10) மடோன் அஷ்வின் (1) மணிவண்ணன் (1) மதிப்புரை (5) மதுவிலக்கு (2) மருத்துவம் (7) மாநாடு (1) மாநாடுகள் (1) மாய இயல்பியம் (1) மாவீரர் நாள் (3) மாற்றுத்திறனாளிகள் (2) மிஷ்கின் (1) மீம்ஸ் (7) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (3) மேனகா காந்தி (1) மொழியரசியல் (2) மொழியறிவியல் (2) மோடி (11) யுவர் கோட் (1) யோகிபாபு (1) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) ராஜீவ் படுகொலை (1) வரலாறு (22) வாழ்க்கைமுறை (17) வாழ்த்து (5) வானதி சீனிவாசன் (1) விக்ரம் (1) விடுதலை (6) விடுதலைப்புலிகள் (13) விருது (1) விஜய் (1) விஜய் சேதுபதி (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (7) வை.கோ (6) வைரமுத்து (2) ழகரம் (1) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டெர்லைட் (2) ஹமாஸ் (2) ஹீலர் பாஸ்கர் (1) Bhagavath Gita (1) BJP (1) Casteism (1) Cauvery (1) Dalit (1) Genocide (3) Hindu (1) Karnataka (1) Magical Realism (1) Manisha (1) Modi (1) Notion Press (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (2) Religion (1) Scheduled Castes (1) Sexual Harassment (1) Tamilnadu (1) Tamils (1) Unicode (1) Unicode Consortium (1) UP (1) Women (1) Yogi Adityanath (1)

முகரும் வலைப்பூக்கள்