மாவீரர் திருநாள் என்பது என்ன? கல்லறைகளில் மலர் வளையம் சார்த்துவதா? கண்ணீருடன் மெழுகுத்திரி ஏந்துவதா? ஈகியரின் படங்களுக்குப் பூமாலை போடுவதா? அவர்தம் வீரம் பற்றி இணையத்தில் பாமாலை பாடுவதா? உண்ணாநிலை இருப்பதா? ஊர்வலம் நடப்பதா? அல்லது, சமூக ஊடகங்களில் மேதகு.பிரபாகரன் அவர்களின் படத்தை நம் படமாய் ஒருநாள் வைத்துக் கொள்வதா?...
இதுவா அஞ்சலி?... இதற்காகவா அவர்கள் உயிர் நீத்தார்கள்?... இவற்றையெல்லாம் எதிர்பார்த்தா அந்த சந்தனப் பேழைகள் சாவினைத் தழுவினர்?...
இல்லை; கண்டிப்பாக இல்லை! மாவீரர் ஒருவருக்கு நாம் செலுத்தக்கூடிய உண்மையான அஞ்சலி என்பது அவர் எந்தக் காரணத்துக்காக உயிரை நீத்தாரோ அந்தக் குறிக்கோளை அவருக்காக நாம் நிறைவேற்றி வைப்பதுதான்!
“எங்களுக்காக, இந்த சமூகத்துக்காக இன்னுயிர் தந்தவனே/ளே! இதோ, உன் குறிக்கோளை உன் தம்பி, தங்கைகள் வென்றெடுத்து விட்டதைப் பார்!” என்று பெருமையோடு இந்தப் புனித நாளில் நாம் அந்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினால், அது மரியாதை!... அதுதான் மரியாதை!!
ஆம்! தமிழீழ விடுதலைக்காகக் குரல் கொடுப்பது தொடரட்டும்! அதே நேரம், முதலில், தமிழ்நாட்டில் இருக்கும் ஈழத் தமிழர்களின் விடுதலைக்கு என்ன செய்தோம் என்பதையும் சிந்திப்போம்!...
இனப்படுகொலையாளர்களைச் சிறையில் தள்ளுவதற்கான கோரிக்கைக்கு வலுச் சேர்ப்போம்! கூடவே, ஏற்கெனவே சிறையில் வாடும் இராசீவ் படுகொலைக் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவிப்பதும் நம் கடமையே என்பதை உணர்வோம்!...
தமிழினத் தலைவர் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்பதற்குக் காலம் பதில் சொல்லட்டும். ஆனால், அவர் திரும்பி வந்து, இத்தனை நாட்களாக என்ன செய்தீர்கள் எனக் கேட்டால் அதற்கு நாம் என்ன பதில் சொல்வது என்பதற்கும் ஆயத்தமாவோம்!...
கடமைகள் நிறைய இருக்கின்றன நண்பர்களே! வெறுமே போராட்டங்களாலும் ஆர்ப்பாட்டங்களாலும் உணர்ச்சி வசப்படுவதாலும் உரக்கப் பேசுவதாலும் எதையும் உருப்படியாகச் செய்து விட முடியாது. சட்ட முன்னெடுப்புகள், அரசியல் காய்நகர்த்தல்கள் என நாம் முழுமையாய்ப் பயன்படுத்தாத பல வாய்ப்புகள் இன்னும் திறந்தே கிடக்கின்றன!
சிந்திப்போம்! செயல்படுவோம்! சிறப்படைவோம்!
வாழ்க தமிழ்! வெல்க தமிழர்! 💪
மாவீரர்களுக்கு வீர வணக்கம்! 🙏
தமிழ்ப் பெருந்தலைவர் பிரபாகரன் அவர்களுக்குப்
பணிவன்பார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்! 🌹
🌸 🌸 🌸 🌸 🌸
படம்: நன்றி ஈழப் பார்வை. விழியம்: நன்றி வாகை தொலைக்காட்சி.
பதிவுகளை உடனுக்குடன் பெறக் கீழ்க்காணும் பொத்தானைச் சொடுக்கி
வாட்சாப் தடத்தில் (Whatsapp Channel) இணையுங்கள்!!
தங்கள் உள்ளத்து எண்ணங்களே
பதிலளிநீக்குஎங்கள் உள்ளத்து இருப்பும்
ஈழவர் உள்ளத்தில் என்றும்
மாவீரர் நினைவுகள் தானே!
நன்றி ஐயா! யாராவது இதைத் தவறாகப் புரிந்து கொண்டு கண்டனம் தெரிவிப்பார்களோ என்று சிறிது கவலைப்பட்டேன். ஈழத் தமிழரான தாங்களே இதை ஆதரித்துக் கருத்திட்டது இந்தப் பதிவுக்கும் அதன் காட்டமான கருத்துக்கும் கிடைத்த நற்சான்றிதழ். நன்றி ஐயா!
நீக்குவீரமான எழுத்து! மலர்வளையங்களால் ஆகப்போவது ஒன்றும் இல்லைதான்! வீரர்களின் லட்சியம் நிறைவேறச் செய்வதே உண்மையான அஞ்சலி! நன்றி!
பதிலளிநீக்குமிக்க நன்றி ஐயா! மனதில் ஆண்டுக்கணக்காக அரித்துக் கொண்டிருந்ததைச் சொன்னேன். உங்கள் பாராட்டுக்கும் உவப்பான கருத்துக்கும் நன்றி!
நீக்கு