திராவிடர் கழகம் நடத்திய ‘தாலி அகற்றிக் கொள்ளும் போராட்டம்’, ஊடகபாணியில் கூறுவதானால் “தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது”. பன்னெடுங்காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிற ஒரு மரபை எதிர்த்தால் சமூகத்தில் பரபரப்பு ஏற்படத்தான் செய்யும்; அஃது இயல்பு. ஆனால், அந்தப் பரபரப்பையும் தாண்டி இந்து சமய அமைப்புகளிடமும் அந்தக் கட்சிகளிடமும் காணப்படுகிறதே ஒரு பதற்றம், அஃது ஏன்?
தமிழ்நாட்டில் தாலி, கற்பு போன்றவற்றைப் பற்றி யாராவது ஏதாவது பேசினால் உடனே போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் எழுவது வாடிக்கைதான். முன்பு, தமிழ்ப் பெண்களின் கற்பு குறித்து நடிகை குஷ்பு பேசியபொழுது நடந்த ஆர்ப்பாட்டங்களையும் கண்டனங்களையும் யாரும் மறந்திருக்க முடியாது. ஆனால், அவையெல்லாம் எந்தக் கட்சிச் சார்பும் இல்லாமல், பொதுமக்களால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்கள். ஆனால், இந்தத் ‘தாலி அகற்றிக் கொள்ளும் நிகழ்ச்சி’க்கு எதிராக நடக்கும் எல்லாக் கண்டன ஆர்ப்பாட்டங்களும் இந்து சமய அமைப்புகளால் மட்டுமே நேரடியாக நடத்தப்படுகின்றன என்பது இங்கு நாம் சிந்திக்க வேண்டிய ஒன்று!
தாலி என்கிற கோட்பாட்டுக்கு (concept) மக்களிடையே இன்றும் பழைய ஆதரவு அப்படியே இருக்குமானால், முன்பு குஷ்புக்கு எதிராக நடந்தது போல் இப்பொழுதும் பொதுமக்களே திரண்டு வீரமணி அவர்களுக்கு எதிராகவும் திராவிடர் கழகத்துக்கு எதிராகவும் கலகத்தில் இறங்கியிருப்பார்கள். ஆனால், அப்படி எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை. (நடந்திருந்தால் இன்றைய ஊடகப் பெருவெளிச்சத்திலிருந்து அது தப்பியிருக்காது). நடந்த அத்தனை ஆர்ப்பாட்டங்களும் பா.ஜ.க, இந்து முன்னணி போன்ற சமயச்சார்புக் கட்சிகளாலேயே நடத்தப்பட்டிருப்பதும், மக்கள் அமைதி காப்பதும், தாலி இன்று அவ்வளவு ஒன்றும் பெரிய புனிதச் சின்னமாக நம் மக்களால் கருதப்படவில்லை என்பதாகவே எண்ண வைக்கின்றன.
இப்படி, மக்களே அமைதியாக இருக்கும்பொழுது இந்து சமயக் கட்சிகள் மட்டும் இதற்காகக் குதியோ குதி எனக் குதிப்பது அவர்களின் உண்மை முகத்தை அவர்களே அம்பலப்படுத்திக் கொள்வதாகத்தான் இருக்கிறது.
தாலி அகற்றிக் கொள்ளும் நிகழ்ச்சியை நடத்துபவர்களை வக்கிரம் பிடித்தவர்கள் என்றும், தி.க-வினர் அனைவருமே எந்தவிதமான ஒழுக்கமோ கட்டுப்பாடோ இல்லாதவர்கள் என்றும், நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தாலியை அகற்றிக் கொண்ட பெண்கள் குடும்பப் பெண்களே இல்லை என்றும், இன்னும் இன்னும் பல்வேறு விதங்களிலும் ஒழுக்கமும் பண்பாடும் மணக்க மணக்கப் பல அருமையான கருத்துக்களைத் திருவாய்மலர்ந்து (!) அருளியிருக்கிறார்கள் இந்து சமய அமைப்புகளைச் சேர்ந்த தமிழிசை சௌந்தரராஜன், எச்.ராஜா, இராம.கோபாலன் முதலானோர். தவிர, பெரியார் படத்தைச் செருப்பால் அடிப்பது, அதன் மீது சிறுநீர் கழிப்பது போன்ற அருஞ்செயல்களின் மூலம் இவர்கள் நாகரிகத்தின் உச்
உடனே, “ஏன், பெரியார் மட்டும் ராமரைச் செருப்பால் அடிக்கவில்லையா? பிள்ளையார் சிலைக்குச் செருப்பு மாலை அணிவித்து ஊர்வலம் விடவில்லையா? அது மட்டும் நாகரிகமா?” என நம் நண்பர்கள் கேட்கலாம். நியாயமான கேள்வி! ஆனால், அப்படிக் கேட்பவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்! ராமர், பிள்ளையார் போன்ற கடவுள்