.

திங்கள், ஏப்ரல் 08, 2019

ஏன் தோற்கடிக்கப்பட வேண்டும் பா.ஜ.க? - வாக்களிக்கும் முன் நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய சில உண்மைகள்

Why BJP Should be Defeated? - Must known facts about Modi Government
ப்பொழுதும் கட்சிகளைப் பார்த்துத்தான் சொல்வார்கள் ‘இஃது அவர்களுக்கு வாழ்வா – சாவா தேர்தல்’ என்று. ஆனால் வரலாற்றிலேயே முதல் முறையாக மக்களுக்கு வாழ்வா சாவா எனத் தீர்மானிப்பதாக அமைந்திருக்கிறது வரவிருக்கும் 2019 நாடாளுமன்றத் தேர்தல்!

ஆம்! இந்தத் தேர்தலில் பா.ஜ.க., தோற்றால்தான் மக்கள் பிழைக்க முடியும்.

அப்படி என்ன இதுவரை இல்லாத அளவுக்குக் கேடுகெட்ட ஆட்சியைத் தந்து விட்டார் மோடி எனச் சிலர் கேட்கலாம். (அப்படியெல்லாம் கேட்கக் கூடத் தமிழ்நாட்டில் ஆட்கள் இருக்கிறார்களா என நினைக்காதீர்கள்! நிறையவே இருக்கிறார்கள் ). இந்த ஆட்சியால் நாட்டுக்கும் மக்களுக்கும் ஏற்பட்டுள்ள பாதிப்பு எப்பேர்ப்பட்டது என்பதைப் புரிந்து கொள்ளப் பெரிய பொருளாதார மேதைகளின் ஆய்வறிக்கைகளோ, அரசியல் அறிஞர்களின் அலசல்களோ தேவையில்லை! ஒன்றே ஒன்றைச் சிந்தித்துப் பார்த்தாலே போதும்!

எண்ணிப் பாருங்கள், மோடி அரசு அறிவித்த பணமதிப்பகற்றம் (demonetization), சரக்கு மற்றும் சேவை வரி (GST) போன்ற நடவடிக்கைகளுக்குப் பின்னர் உங்கள் நண்பர்கள், உறவினர்கள், அக்கம் பக்கத்தினர் போன்றவர்களில் யாரேனும் ஒருவராவது வேலைவாய்ப்பையோ தொழிலையோ இழந்திருக்கிறார்களா இல்லையா?...

நீங்கள் நினைத்துக் கொண்டிருப்பீர்கள் உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு மட்டும்தான் இது நடந்திருக்கிறது என்று. இல்லை! யாரைக் கேட்டாலும் இதைத்தான் சொல்கிறார்கள். நாம் அடிக்கடி பார்ப்பவர்கள், எப்பொழுதாவது ஒருமுறை சந்திப்பவர்கள் என அனைவரிடமும் இந்த ஆட்சியால் தங்களுக்கு ஏற்பட்ட அல்லது தங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு ஏற்பட்ட பொருளாதாரப் பாதிப்பைப் பற்றி ஒரு கதை இருக்கிறது நம்மிடம் சொல்ல. இந்தளவுக்கு நாட்டின் ஒவ்வொரு தனி மனிதர் மீதுமான பொருளாதாரத் தாக்குதலை இதுவரை இச்சமூகம் கண்டதில்லை.

முன்பு ஆட்சி செய்தவர்கள் மட்டும் என்ன பெரிய ஒழுக்க சிகாமணிகளா என்றால், கண்டிப்பாக இல்லை. இதற்கு முன் இந்நாட்டை எத்தனையோ முறை காங்கிரசு ஆண்டிருக்கிறது; வாச்பாய் அவர்கள் தலைமையில் பா.ஜ.க-வே கூட ஆண்டிருக்கிறது. அந்த ஆட்சிகளின் மீதும் நமக்கு எத்தனையோ பெரிய குற்றச்சாட்டுகள் உள்ளன. ஆனால் அவற்றுக்கும் இன்றைய மத்திய ஆட்சி மீதான குற்றச்சாட்டுகளுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன!

அன்றைய ஆட்சிகளிலும் மொழித் திணிப்பு இருந்தது. ஆனால் மத்திய அரசுப் பாடத்திட்டப் பள்ளிகள் அனைத்திலும் சமற்கிருத வாரம் கொண்டாடுமாறு சுற்றறிக்கை அனுப்பும் அளவுக்கு இல்லை.

பழைய தலைமையமைச்சர்களும் (பிரதமர்கள்) வேளாண் பெருமக்களின் போராட்டங்களைப் பாராமுகமாகத்தான் கடந்தார்கள். ஆனால் போராடிப் போராடி வெறுத்துப் போய்க் கடைசியில் உழவர்கள் அவிழ்த்துப் போட்டு விட்டு ஆடையில்லாமல் போகும் வரை விட்டதில்லை.

முந்தைய ஆட்சிகளும் பெருமுதலாளிகளுக்குச் சாமரம் வீசுவதைத்தான் முழுநேரப் பணியாக வைத்திருந்தன. ஆனால் பெற்றோல், தீசல் (Diesel) என எரிபொருட்களின் விலையைத் தனியார் நிறுவனங்களே முடிவு செய்யச் சொல்லி நாட்டின் மொத்த விலைவாசியையும் தீர்மானிக்கும் பொறுப்பை ஓரிரு தனி மனிதர்களிடம் தந்து விட்டு வேடிக்கை பார்த்ததில்லை.

முன்பு இருந்த மத்திய ஆட்சியாளர்களும் தங்களுக்கு வாக்களிக்காத மாநிலங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையோடுதான் நடத்தினார்கள். ஆனால் தலைமைச் செயலாளர்களையும் ஆளுநர்களையும் வைத்துக் கொல்லைப்புற வழியாக ஆட்சி நடத்தும் அளவுக்கு மக்களாட்சி அமைப்பைக் காலின் கீழே போட்டு மிதித்ததில்லை.

கடந்த அரசுகளும் சட்டம், நீதி போன்றவற்றை மதிக்காமல்தான் நடந்தன. ஆனால் நீதித்துறை, மத்திய புலனாய்வுச் செயலகம் (CBI), சேம வங்கி (reserve bank) போன்றவற்றிலெல்லாம் குழப்பத்தை ஏற்படுத்தி அவற்றை மறைமுகமாகத் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்ததில்லை. பல்வேறு தன்னாட்சி அமைப்புகளிடமும் பரவலாக இருக்கும் அரசியல் அதிகாரம் மொத்தத்தையும் தலைமையமைச்சர் எனும் ஒற்றை மனிதரின் கையில் ஒப்படைத்து இதை ஓராதிக்க (autocratic) நாடாக மாற்றியதில்லை.

எல்லாவற்றுக்கும் மேலாக, இதுவரை இங்கே எந்த ஆட்சியாளனும் போராடும் மக்களை ஒடுக்குவதற்குத் துப்பாக்கிக் குண்டுகளைப் பயன்படுத்தியதில்லை!

உடனே, தூத்துக்குடியில் தமிழ்நாடு காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டுக்கு மத்திய அரசை எப்படிக் குற்றம் சொல்லலாம் எனக் கொதிக்காதீர்கள்! நடந்த அந்த அரசுத் தீவிரவாதத்துக்கு உத்தரவிட்டவர் யார் என்பது மக்களுக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம். ஆனால் இன்றைய தமிழ்நாடு அரசில் எப்படி, யார் மூலமாக ஆட்சி நடைபெறுகிறது என்பதை அறிந்த, உள்விவகாரம் புரிந்த அனைவருக்கும் அது தெரியும்.

ஆம் நண்பர்களே, இதுவரை இருந்த மத்திய ஆட்சிகள் மீது மக்களுக்கு இருந்த குற்றச்சாட்டெல்லாம் அவை மக்களுக்கு எதிரான அரசுகள் என்பது மட்டும்தான். ஆனால் இது, மக்களின் குருதி குடித்த அரசு! சொந்த நாட்டு மக்களின் உதிரச் சுவை பார்த்த அரசு! சுவை கண்ட நாக்கு சும்மா இருக்காது! அதே சுவையை மீண்டும் மீண்டும் கேட்கும்! அப்படிக் கேட்காமலிருக்க வேண்டுமானால் அந்த நாக்கில் ஒருமுறை சூடு போட்டுத்தான் ஆக வேண்டும்! அதற்கான வாய்ப்புதான் இந்தத் தேர்தல்!

இப்படியெல்லாம் சொல்வதால் என்னைத் தி.மு.க-காரன் எனவோ காங்கிரசு ஆதரவாளன் எனவோ நினைத்து விடாதீர்கள்!

பா.ஜ.க-வின் தாமரையில் சிவந்திருப்பது தூத்துக்குடித் தமிழர்களின் குருதி என்றால், காங்கிரசின் கையில் காயாமலிருப்பது ஈழத் தமிழர்களின் குருதி! அவ்வளவுதான் வேறுபாடு!

தமிழினப் படுகொலை நடந்து கொண்டிருந்தபொழுதே வந்த 2009 மக்களவைத் தேர்தலில் நாம் தி.மு.க - காங்கிரசுக் கூட்டணியை மண்ணைக் கௌவச் செய்திருந்தால் ஈழத்தில் தாங்கள் செய்த கொடுமை தமிழ்நாட்டு மக்களை எந்தளவுக்குக் கடும் சீற்றத்துக்கு ஆளாக்கியிருக்கிறது என்பது அவர்களுக்குப் புரிந்திருக்கும்; இனப்படுகொலையும் பாதியிலேயே நின்றிருக்கவும் கூடும். அதை நாம் செய்யத் தவறியதால்தான் தாங்கள் செய்தது எப்பேர்ப்பட்ட அட்டூழியம் என்பதையே இன்று வரை அவர்கள் உணராமல் திரிகிறார்கள்.

அதே தவற்றை மறுபடியும் நாம் செய்து விடக்கூடாது தமிழர்களே! அன்றைக்குக் காங்கிரசு-தி.மு.க கூட்டணி நம் கடல் தாண்டிய சொந்தங்களை அழித்துக் கொண்டே வாக்குக் கேட்டு வந்தது போல், தூத்துக்குடியில் நம் கடலோர உறவுகளைச் சுட்டுக் கொன்று விட்டு இதோ நம்மிடம் வாக்குக் கேட்டு வருகிறது பா.ச.க-அ.தி.மு.க கூட்டணி! அப்பொழுது காங்கிரசுக்கு மறு வாய்ப்பு அளித்து நாம் செய்த மாபெரும் வரலாற்றுப் பிழையை இந்த முறையும் நாம் தொடர்ந்தால் தூத்துக்குடியில் தாங்கள் செய்தது எப்பேர்ப்பட்ட குற்றம் என்பதை இன்றைய அரசும் உணராமல் போகும்!

எனவே அதை உணர்த்துவதற்காகவாவது இந்தத் தேர்தலில் பா.ஜ.க., கூட்டணியை நாம் தோற்கடித்தே ஆக வேண்டும்! வேளாண்மை, மேலாண்மை, அரசு, ஆட்சி, அதிகாரம், செல்வாக்கு என அத்தனை வகையிலும் அத்தனை துறையிலும் இதுவரை இல்லாத அளவுக்குப் பெரும் தவறுகளை இழைத்திருக்கும் இந்த அரசுக்கு இது குறித்த நம் எதிர்ப்பைப் பதிவு செய்வதற்காகவாவது இந்தத் தேர்தலில் நரேந்திர மோதியை நாம் வீட்டுக்கு அனுப்பியே தீர வேண்டும்! அப்படி நாம் செய்யாமல் விட்டால் இந்த ஐந்தாண்டுகளில் பா.ஜ.க., செய்த அத்தனை குற்றங்களுக்கும் கிடைக்கும் மாபெரும் ஏற்பிசைவு (recognition) அதுவாகத்தான் இருக்கும்! எதிர்காலத்தில் அமையும் அரசுகளும் இதே போன்ற ‘நல்லாட்சி’யைத் தொடர அதுவே சிறந்த ஊக்குவிப்பாகவும் இருக்கும்! அப்படி நடக்காமல் தடுக்க வேண்டுமானால், பா.ஜ.க., கூட்டணிக்கு எதிராக இருக்கும் ஒரே வலிமை வாய்ந்த கூட்டணியான தி.மு.க-காங்கிரசுக் கூட்டணியை ஆதரிப்பதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை.

புரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே, இது பெருமுதலாளிகளுக்கான காலம் (Corporate Era)! குடிமக்களின் கையிலிருக்கும் கடைசிக் காசையும் பிடுங்கி, பெருமுதலாளிகள் வீட்டு நாய்க்கு எலும்புத்துண்டு வாங்கத் தாரை வார்க்கும் பெருந்தலைவர்கள்தாம் உலகின் பல நாடுகளையும் இன்று ஆண்டு வருகிறார்கள். எனவே அவருக்கு வாக்களித்தால் நாடு அப்படியே பூத்துக் குலுங்கி விடும் எனவோ இவருக்கு வாக்களித்தால் அப்படியே காய்த்துக் கனிந்து விடும் எனவோ சொல்லும் அளவுக்கு இங்கு யாரும் இல்லை. அதுவும் இந்தத் தேர்தலில் கண்டிப்பாக இல்லை!

இப்படிப்பட்ட உலக அரசியல் சூழலில் மக்களான நாம் செய்யக்கூடியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். இடையிடையே வரும் இத்தகைய தேர்தல்கள் மூலம் ஆளுங்கட்சியின் மீதான நம் எதிர்ப்பையோ ஆதரவையோ பதிவு செய்வதுதான். மிகவும் கேடுகெட்ட ஆட்சியாக இருந்தால் எதிர்ப்பைப் பதிவு செய்து, அடுத்த ஆட்சி இதை விட அதிகமாக ஆடாதபடி தட்டி வைக்கலாம். கொஞ்சம் தேவலையான ஆட்சியாக இருந்தால் மீண்டும் வாய்ப்பளித்து இதை விடச் சீர்கெட்டுப் போகாமல் தடுக்கலாம்.

மக்களாட்சியின் ஈடு இணையற்ற ஆற்றலான வாக்களிப்புக்கு இன்றைய காலக்கட்டத்தில் வலிமையே இவ்வளவுதான். இதைக் கூட நாம் செய்யாமல் விட்டுவிட்டால்... வேண்டா நண்பர்களே! நினைத்துக் கூடப் பார்க்க முடியாத விளைவை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

எனவே 
எச்சரிக்கையாக வாக்களியுங்கள்! 
உங்கள் எதிர்காலத்தை 
எண்ணிப் பார்த்து வாக்களியுங்கள்! 
கண்டிப்பாக வாக்களியுங்கள்!
❀ ❀ ❀ ❀ ❀
(நான் கீற்று இதழில் ௩-௪-௨௦௧௯ அன்று எழுதியது)

படம்: நன்றி இன்ஹெட்லைன்

கீச்சு: நன்றி தமிழறிஞர் கே.ஆர்.எஸ்.


தொடர்புடைய பதிவுகள்:
தி.மு.க., தேர்தல் அறிக்கைக்கான எனது பரிந்துரைகள்! - மக்கள் பார்க்கவும் வலுச் சேர்க்கவும்! 
தேர்தல் - 2016 (3) | பா.ஜ.க-வுக்கு வாக்களிப்பதில் உள்ள ஆபத்துகள் - ஒரு பார்வை!

பதிவின் கருத்துக்கள் சரி எனத் தோன்றினால் கீழ்க்காணும் வாக்குப்பட்டைகள் மூலம் மற்றவர்களுடனும் பகிர்ந்து இந்தக் கொடிய ஆட்சி மாற உதவுங்களேன்! கூடவே, உங்கள் செம்மையான கருத்துக்களுக்கும் காத்திருக்கிறேன்! தமிழில் எழுத வசதியில்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது கீழே 'தமிழ்ப் பலகை'! தனிப்பட ஏதும் தெரிவிக்க விரும்பினால், அதற்கு அடுத்து உள்ள 'அணுக' படிவத்தைப் பயன்படுத்தலாம்!

 பதிவுகளை உடனுக்குடன் பெறக் கீழ்க்காணும் பொத்தானைச் சொடுக்கி
வாட்சாப் தடத்தில் (Whatsapp Channel) இணையுங்கள்!!

Aga Sivappu Thamizh Whatsapp Channel

முகநூல் வழியே கருத்துரைக்க

10 கருத்துகள்:

  1. சரியான பார்வை...

    ஜனநாயகம் தழைக்க வேண்டும்... இல்லையெனில் சர்வாதிகாரம் தான்...

    இன்னொன்றையும் சொல்கிறேன்... சாதாரண மக்களுக்கு தன்னாட்சி ஆணையங்கள் மீது நம்பிக்கை இருந்தது... அவைகள் இந்த ஐந்து வருட காலத்தில் சிறிது சிறிதாக அடிமையாக்கப்பட்டு விட்டது... அந்த துறை வல்லுநர்களே செயலற்று போய் உள்ளார்கள் என்று சொல்வதை விட தகர்க்கப்பட்டுள்ளார்கள்... அவற்றில் சில :-

    1. சி.பி.ஐ.
    2. சுப்ரீம் கோர்ட்
    3. ரிசர்வ் வங்கி
    4. தேர்தல் ஆணையம்

    இன்னும் பல...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றாகச் சொன்னீர்கள் ஐயா! இதையும் பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன். அரசியல் நோக்கர்களும் சமூக ஆர்வலர்களும் இந்த ஆட்சி செய்த மாபெரும் குற்றமாக இதைத்தான் பார்க்கிறார்கள். இந்த முறை மீண்டும் பா.ஜ.க., ஆட்சிக்கு வந்தால் தன்னாட்சி அமைப்புகளின் அதிகாரங்கள் நீர்த்துப் போனதன் தொடர்ச்சியாக இந்நாடு மொத்தமாய் ஓராதிக்கத்தின் (சர்வாதிகாரம்) கீழ் கொண்டு வரப்படும் என எச்சரிக்கிறார்கள். எனவேதான் தி.மு.க-வும் காங்கிரசும் நம் இனத்தையே அழித்தவர்கள் என்றாலும், இப்பொழுதுக்கு பா.ஜ.க-வை அகற்ற வேறு வழியில்லை என்பதால் அவர்களுக்குத்தான் வாக்களித்துத் தொலைத்தாக வேண்டும் என்பதை என் கருத்தாகப் பதிவு செய்துள்ளேன். தங்களைப் போலவே நம் மற்ற உணர்வாள நண்பர்களும் புரிந்து கொள்வார்கள் என நம்புகிறேன். விரிவான கருத்துக்கு மிக்க நன்றி ஐயா!

      நீக்கு
  2. பாஜக தோல்வி அடையவேண்டும்
    ஆனால்
    அதுக்காக திருட்டு திமுகவுக்கு வோட் போட முடியாதது
    தினகரன் எவ்வளவோ மேல்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லது நண்பரே! உங்கள் கருத்துக்கு மாறுபாடான கட்டுரை எனத் தெரிந்தும் படித்து விட்டு அப்படியே போகாமல் மதித்துக் கருத்திட்ட உங்கள் நாகரிகத்துக்கு முதலில் நன்றி!

      உங்களுக்கு அ.ம.மு.க., மீது இருப்பது போல் எனக்கும் நாம் தமிழர் மீது கொஞ்சம் ஒட்டுதல் உண்டு. ஆனால் மக்களும் மக்களாட்சியும் வரலாறு காணாத உச்சக்கட்ட நெருக்கடியில் சிக்கியிருக்கும் இன்றைய சூழலில் புதியவர்களுக்கு வாக்களிப்பது போன்ற சோதனை முயற்சிகளில் ஈடுபடுவது மாபெரும் இக்காக (risk) அமையும் என்பதே என் கருத்து. அதனால்தான் கட்டுரையில் அப்படி ஒரு முடிவைச் சொல்லியிருக்கிறேன். மற்றபடி உங்கள் விருப்பம்! அதில் நான் தலையிடவில்லை. என் கருத்தைச் சொன்னேன், அவ்வளவுதான்.

      மிக்க நன்றி!

      நீக்கு
  3. என் உள்ளக்குமுறல்களை எல்லாம் இந்த பதிவின் வடிவில் பார்க்கிறேன் ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆகா! இதை விடப் பெரிய பாராட்டு வேறென்ன வேண்டும்!! மிக்க நன்றி ஐயா! இதுதான் தங்கள் முதல் வருகை என நினைக்கிறேன். தொடர்ந்து படியுங்கள்! உங்கள் செம்மையான கருத்துக்களைப் பதியுங்கள்! தங்களுக்குப் பிடித்த இந்தப் பதிவு மற்றவர்களையும் சென்றடைந்து இந்தப் பதிவின் நோக்கம் நிறைவேற மேலே உள்ள சமூக ஊடகப் பொத்தான்களை அழுத்திப் பகிர்ந்து கொள்ளுங்கள்!

      நீக்கு
  4. பதில்கள்
    1. மிக்க நன்றி பாலா! உன் பாராட்டு கிடைப்பது அரிதானது. மிக்க மகிழ்ச்சி!

      நீக்கு

என் புதினத்தை வாங்க

என் புதினத்தை வாங்க
மேலே உள்ள படத்தை அழுத்துங்கள்
பதிவுகளை உடனுக்குடன் பெற

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

வாட்சாப் தடத்தில் (Channel)...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு (1) 13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (9) அஞ்சலி (21) அணு உலை (2) அம்பிகை செல்வகுமார் (1) அம்மணம் (1) அமேசான் (6) அயல்நாட்டுத் தமிழர் (1) அரசியல் (90) அழைப்பிதழ் (7) அற்புதம்மாள் (2) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (38) ஆட்சென்ஸ் (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இங்கிலாந்து (1) இசுரேல் (2) இட ஒதுக்கீடு (4) இணையம் (19) இந்தித் திணிப்பு (1) இந்தியா (25) இரசியா (1) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இலக்கணம் (3) இலங்கை (1) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (23) இனம் (46) ஈழம் (44) உக்கிரேன் (1) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (24) எழுவர் விடுதலை (1) ஐ.நா (5) ஒருங்குறி (1) கடவுள் (1) கதை (3) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (11) கலைச்சொல்லாக்கம் (1) கவிஞர் தாமரை (1) கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் (2) கவிதை (18) காங்கிரஸ் (6) காசா (2) காணொளி (4) காதல் (2) காந்தியம் (1) கார்த்திக் சுப்புராஜ் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (5) கிரந்தம் (1) கீச்சுகள் (2) குழந்தைகள் (10) குறள் (2) கூகுள் (2) கையொப்பம் (2) கோட்பாடு (9) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (16) சமயம் (12) சமற்கிருதம் (2) சமூகநீதி (4) சரிதா (1) சாதி (10) சிங்களர் (1) சித்திரக்கதைகள் (1) சிவகார்த்திகேயன் (1) சிறுவர் இலக்கியம் (4) சீமான் (7) சுற்றுச்சூழல் (6) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (3) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (30) தமிழ் தேசியம் (5) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (16) தமிழர் (45) தமிழர் பெருமை (17) தமிழின் சிறப்பு (3) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (2) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (5) தாலி (1) தி.மு.க (11) திரட்டிகள் (4) திராவிடம் (9) திருமுருகன் காந்தி (1) திரைப்படம் (2) திரையுலகம் (9) திறனாய்வு (1) தினகரன் (1) துருவ் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (9) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தேர்தல்-2021 (2) தொலைக்காட்சி (2) தொழில்நுட்பம் (10) தோழர் தியாகு (1) நட்பு (12) நிகழ்வுகள் (5) நிர்மலா சீதாராமன் (1) நினைவேந்தல் (10) நீட் (5) நூல்கள் (8) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (3) பதிவர் உதவிக்குறிப்புகள் (10) பதிவுலகம் (23) பா.ம.க (2) பா.ஜ.க (30) பார்ப்பனியம் (14) பாலஸ்தீனம் (2) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (9) பீட்டா (1) புதிய வேளாண் சட்டம் (1) புறநானூறு (1) புனைவுகள் (10) பெண்ணியம் (6) பெரியார் (3) பேரறிவாளன் (2) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (5) பொதுவுடைமை (1) பொதுவுடைமைக் கட்சி (1) பொருளாதாரம் (2) பொழிவு (2) போட்டி (1) போர் (3) போராட்டம் (10) ம.ந.கூ (2) மகான் (1) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (10) மடோன் அஷ்வின் (1) மணிவண்ணன் (1) மதிப்புரை (4) மதுவிலக்கு (2) மருத்துவம் (7) மாநாடு (1) மாநாடுகள் (1) மாய இயல்பியம் (1) மாவீரர் நாள் (3) மாற்றுத்திறனாளிகள் (2) மிஷ்கின் (1) மீம்ஸ் (7) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (3) மேனகா காந்தி (1) மொழியரசியல் (2) மொழியறிவியல் (2) மோடி (11) யுவர் கோட் (1) யோகிபாபு (1) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) ராஜீவ் படுகொலை (1) வரலாறு (22) வாழ்க்கைமுறை (17) வாழ்த்து (5) வானதி சீனிவாசன் (1) விக்ரம் (1) விடுதலை (6) விடுதலைப்புலிகள் (13) விருது (1) விஜய் (1) விஜய் சேதுபதி (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (7) வை.கோ (6) வைரமுத்து (2) ழகரம் (1) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டெர்லைட் (2) ஹமாஸ் (2) ஹீலர் பாஸ்கர் (1) Bhagavath Gita (1) BJP (1) Casteism (1) Cauvery (1) Dalit (1) Genocide (3) Hindu (1) Karnataka (1) Magical Realism (1) Manisha (1) Modi (1) Notion Press (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (2) Religion (1) Scheduled Castes (1) Sexual Harassment (1) Tamilnadu (1) Tamils (1) Unicode (1) Unicode Consortium (1) UP (1) Women (1) Yogi Adityanath (1)

முகரும் வலைப்பூக்கள்