.

புதன், ஏப்ரல் 03, 2019

பதிவுலக அன்பர்கள் அனைவருக்கும் ஓர் அதிஅவசரச் செய்தி!

Google for Tamil
ன்பிற்கும் மதிப்பிற்கும் இனிய பதிவுலகத் தமிழர்கள் அனைவருக்கும் நேச வணக்கம்!

நண்பர்களே, தமிழுக்கு ஆட்சென்சு சேவை வந்து விட்ட செய்தி உங்கள் அனைவருக்கும் தெரியும் என நினைக்கிறேன். சரியாகக் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 9ஆம் நாள் அந்த இனிய அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதையொட்டி ஆண்டுதோறும் ‘கூகுள் பார் தமிழ்’ எனும் நிகழ்ச்சியை நடத்தி வருகிறது கூகுள் நிறுவனம். போன மாதம் 30ஆம் நாள் இது தொடர்பாக கூகுள் நிறுவனத்திலிருந்து கைலாஷ் என்பவர் எனக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அதன் திரைச்சொட்டு (Screenshot) இதோ!

Google for Tamil 2019 - Mail Notification

நண்பர்களே! ‘கூகுள் பார் தமிழ்’ என்பது இணையத்தில் தமிழ் ஆக்கங்களை ஊக்குவிக்கவும் மேம்படுத்தவும் அதன் மூலம் பொருள் ஈட்டவும் உதவுவதற்காக கூகுள் மேற்கொண்டுள்ள ஒரு சீரிய முயற்சி!

எங்கோ அமெரிக்காவில் உள்ள ஆங்கில நிறுவனம் ஒன்று தமிழுக்காக இப்படி ஒரு முயற்சியை மேற்கொண்டிருக்கும்பொழுது குறைந்தது அதில் கலந்து கொள்வதன் மூலமாவது அவர்களை ஆதரிக்க வேண்டியது நம் கடமை இல்லையா? அதனால்தான், இதோ இந்தப் பதிவு மூலம் உங்களுக்கும் இது குறித்துத் தெரிவிக்க விரும்புகிறேன்.

இது பற்றிக் கைலாஷ் அவர்களிடம் நான் பேசியில் சற்று முன் உரையாடியபொழுது, இதில் கூகுள் ஆட்சென்சு பயனர்கள் மட்டுமின்றி பிளாகர் மூலம் வலைப்பூவோ (blog) இணையத்தளமோ (website) தமிழில் நடத்தும் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம் என்று தெரிவித்தார்.

எனவே வாய்ப்பிருக்கும் அனைவரும் தவறாமல் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இந்தத் தமிழ்சால் முயற்சியை ஊக்குவிக்க வேண்டுகிறேன்.

நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முதலில் ஒரு படிவத்தைப் பூர்த்தி செய்து அனுப்பி வைக்க வேண்டும். படிவத்தின் இணைப்பு: https://forms.gle/MTMF4mSvqmTihUXc9

இவ்வாறு பதிவு செய்து கொண்டவர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 100 பேருக்கு அழைப்பிதழ் அனுப்பப்படும். அதன் பின் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம்.

முக்கியமான செய்தி! மேற்கண்ட இணைப்பு இன்று வரை மட்டுமே செயல்படும்! எனவே உடனடியாகப் பதிவு செய்து கொள்ளுங்கள்! நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பியுங்கள்!

இற்றைப்படுத்தல் (Update): மேற்கண்ட இணைப்பு தொடர்ந்து செயல்பட்டே வருகிறது. விரும்புபவர்கள் தொடர்ந்து பதிவு செய்யலாம்.

❀ ❀ ❀ ❀ ❀

பதிவுகள் உடனுக்குடன் மின்னஞ்சலில் வந்து சேர...

முகநூல் வழியே கருத்துரைக்க

15 கருத்துகள்:

 1. திருமிகு முத்துநிலவன் ஐயாவின் தளத்திலேயும் அறிந்தேன்... நன்றி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்லது ஐயா, பதிவு செய்து விட்டீர்களா? உங்களுக்கு வாட்சப்பு மூலமும் அனுப்பியிருந்தேன். யார் கலந்து கொள்ளாவிட்டாலும் நீங்களும் முத்துநிலவன் ஐயாவும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது மிக முக்கியமானது எனக் கருதுகிறேன். நீங்கள் இருவரும் கலந்து கொண்டால் பதிவுலகமே கலந்து கொண்டது போலத்தான்.

   நீக்கு
 2. ஏற்கனவே சென்னையிலும் கோவையிலும் நடைபெற்ற நிகழ்வுகளுக்கு IndiBlogger மூலம் எனக்கு அழைப்பு வந்தது. சென்னைக்கான அழைப்பு தாமதமாக வந்ததால் கலந்துகொள்ள இயலவில்லை.

  கோவை நிகழ்வுக்கான அழைப்பு உரிய தேதியில் கிடைத்தது. Alexa Rank, Indi Blogger போன்றவற்றின் தரவரிசையில் முன்னணியில் இருந்த என் வலைப்பக்கம்[இப்போது முடக்கியுள்ளேன்] தேர்வாகவில்லை. அண்மையில், புதிய தளம் தொடங்கி 17 பதிவுகள் மட்டுமே எழுதியுள்ளேன். இதுவும் தேர்வுசெய்யப்படுவதற்கு வாய்ப்பில்லை.

  விளம்பரங்கள் பெறுவதற்கான தகுதிகள் எவை என்பது தெளிவாக வரையறுக்கப்பட்டால் நல்லது.

  இப்போதைய அறிவிப்பும் வரவேற்கத்தக்கதே. வாய்ப்புள்ளவர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்கலாம்.

  நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் விரிவான கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே!

   விளம்பரம் பெறுவதற்கான தகுதிகள் மற்றும் இன்ன பிற விவரங்கள் குறித்து நம் ‘பிளாக்கர் நண்பன்’ அப்துல் பாசித் அவர்கள் நன்றாக எழுதியுள்ளார். பாருங்களேன்! இதோ இணைப்பு - https://www.bloggernanban.com/2018/02/adsense-for-tamil-blogs-sites.html

   தங்கள் முதல் வருகை கண்டு மிக்க மகிழ்ச்சி! தொடர்ந்து படியுங்கள்! உங்கள் செம்மையான கருத்துக்களைப் பதியுங்கள்!

   நீக்கு
 3. பதில்கள்
  1. மிக்க மகிழ்ச்சி! அடுத்த தடவையிலிருந்து தங்கள் மேலான கருத்துக்களைப் பெயருடன் பதிந்தால் இன்னும் மகிழ்வேன்.

   நீக்கு
 4. அன்பர்கள் அனைவருக்கும், இற்றைப்படுத்தப்பட்ட (Updated News) ஒரு செய்தி! Google for தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகப் பதிவு செய்து கொள்ள மேலே கட்டுரையில் நான் தந்திருந்த இணைப்பு நேற்று வரை மட்டுமே செயல்படும் என்று குறிப்பிட்டிருந்தேன் (அப்படித்தான் எனக்குச் சொல்லப்பட்டது). ஆனால் இல்லை; இன்றும் அது தொடர்ந்து செயல்படவே செய்கிறது. எனவே பதிவு செய்யத் தவறிய அனைவரும் உடனே செய்து விடுமாறு கேட்டுக் கொள்கிறேன்!

  பதிலளிநீக்கு
 5. பதில்கள்
  1. இற்றைத் தகவலை யாரும் பார்க்க மாட்டார்கள் என்று நினைத்தேன். பார்த்து மறுமொழியும் அளித்தமைக்கு மிக்க நன்றி ஐயா!

   நீக்கு
 6. சுடச் சுடப் பகிர்ந்த நற்செய்தி
  பாராட்டுகள்
  நிகழ்வில் பங்கெடுப்போருக்கு வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி ஐயா! என்றைக்காவது சென்னைக்கு வந்தால் கட்டாயம் என்னை வந்து சந்திக்க வேண்டுகிறேன்! என் எண் உங்களிடம் இருக்கிறதே!

   நீக்கு
 7. சகோ நல்ல தகவல். அன்றே நீங்கள் சொன்னதாலும், என்னால் கலந்து கொள்ள முடியாது என்பதாலும் வரவில்லை.

  நாங்கள் இன்னும் முடிவுசெய்யவில்லை அதனால் பதிவு செய்யவில்லை சகோ.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆகட்டும் சகோ! ஆனால் விரைவில் நீங்கள் ஆட்சென்ஸ் கணக்கில் இணைய வேண்டுகிறேன். நீங்கள் இணைந்தால் உங்களைப் பார்த்துப் பலரும் இணைவார்கள். மற்றபடி இதில் இணைய வேண்டிய தேவை என்ன என்பது தாங்கள் அறிந்ததே! இருந்தாலும் நாம் தனிப்படப் பேசியதை இங்கு பொதுவிலும் சொல்லி வைக்கிறேன்.

   நம்மில் பலர் வலைப்பூ மூலம் பணம் ஈட்டுவதில் ஆர்வம் இல்லாததால் ஆட்சென்சில் இணையாமல் இருக்கிறார்கள். அவர்களுக்குப் பணத்தின் மீது ஆர்வம் இல்லாமல் இருக்கலாம். அது பாராட்டுக்குரியதுதான். ஆனால் ஆட்சென்சு என்பது தமிழுக்குக் கிடைத்திருக்கும் ஒரு பெரிய ஏற்பிசைவு (recognition). இணையம் எனும் புதிய தலைமுறை ஊடகத்தில் தமிழ் மொழிக்கு இருக்கும் சந்தை மதிப்பை இது காட்டுகிறது. எனவே நமக்குப் பணம் வேண்டுமோ வேண்டாவோ, அதைப் பற்றிக் கவலைப்படாமல் அனைவரும் இதில் இணைவதன் மூலம் தமிழுக்குக் கிடைத்திருக்கும் இந்தப் புதிய ஏற்பிசைவை வரவேற்க வேண்டும். அப்படி நாம் செய்யாமல், பயன்படுத்த யாரும் முன்வராத காரணத்தால் இந்தச் சேவை நிறுத்தப்பட்டால் அது தமிழர்களான நமக்குத்தான் பெரும் தலைக்குனிவு என்பதை நம்மவர்கள் உணர வேண்டும்.

   உங்கள் கருத்துக்கு நன்றி சகோ!

   நீக்கு

பதிவர் பரிந்துரை

’எல்லாரும் அர்ச்சகராகலாம்’ சட்டம் சரியா? - கோயில் பூசையில் தமிழர் உரிமைகள்! மிரள வைக்கும் ஆய்வு

பார்ப்பனர் அல்லாதோரின் கோயில் பூசை உரிமைக்காகப் பாடுபட்ட தமிழ் முன்னோடிகள் முன்குறிப்பு : பார்ப்பனரல்லாத 36 பேரைக் கோயில் பூசாரிகளாக ...

பதிவுகளை உடனுக்குடன் பெற

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (8) அஞ்சலி (20) அணு உலை (2) அம்பிகை செல்வகுமார் (1) அம்மணம் (1) அமேசான் (5) அரசியல் (83) அழைப்பிதழ் (6) அற்புதம்மாள் (1) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (34) ஆட்சென்ஸ் (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இங்கிலாந்து (1) இட ஒதுக்கீடு (4) இணையம் (19) இந்தித் திணிப்பு (1) இந்தியா (24) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இலக்கணம் (3) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (19) இனம் (44) ஈழம் (41) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (23) ஐ.நா (5) ஒருங்குறி (1) கதை (2) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (9) கவிஞர் தாமரை (1) கவிதை (16) காங்கிரஸ் (6) காணொளி (4) காதல் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (4) கிரந்தம் (1) கீச்சுகள் (2) குழந்தைகள் (8) குறள் (1) கூகுள் (2) கையொப்பம் (2) கோட்பாடு (7) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (16) சமயம் (10) சமற்கிருதம் (1) சமூகநீதி (4) சாதி (9) சித்திரக்கதைகள் (1) சிறுவர் இலக்கியம் (4) சீமான் (7) சுற்றுச்சூழல் (6) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (2) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (26) தமிழ் தேசியம் (5) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (13) தமிழர் (42) தமிழர் பெருமை (15) தமிழின் சிறப்பு (2) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (2) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (3) தாலி (1) தி.மு.க (10) திரட்டிகள் (4) திராவிடம் (7) திருமுருகன் காந்தி (1) திரையுலகம் (8) தினகரன் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (9) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தேர்தல்-2021 (2) தொலைக்காட்சி (1) தொழில்நுட்பம் (10) தோழர் தியாகு (1) நட்பு (9) நிகழ்வுகள் (2) நிர்மலா சீதாராமன் (1) நினைவேந்தல் (9) நீட் (4) நூல்கள் (4) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (3) பதிவர் உதவிக்குறிப்புகள் (9) பதிவுலகம் (19) பா.ம.க (2) பா.ஜ.க (28) பார்ப்பனியம் (13) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (8) பீட்டா (1) புதிய வேளாண் சட்டம் (1) புறநானூறு (1) புனைவுகள் (10) பெண்ணியம் (5) பெரியார் (3) பேரறிவாளன் (1) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (4) பொதுவுடைமைக் கட்சி (1) பொருளாதாரம் (2) பொழிவு (1) போராட்டம் (9) ம.ந.கூ (2) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (9) மணிவண்ணன் (1) மதிப்புரை (1) மதுவிலக்கு (1) மருத்துவம் (6) மாவீரர் நாள் (2) மாற்றுத்திறனாளிகள் (2) மீம்ஸ் (6) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (2) மேனகா காந்தி (1) மொழியரசியல் (1) மொழியறிவியல் (1) மோடி (11) யுவர் கோட் (1) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) ராஜீவ் படுகொலை (1) வரலாறு (21) வாழ்க்கைமுறை (15) வாழ்த்து (4) வானதி சீனிவாசன் (1) விடுதலை (4) விடுதலைப்புலிகள் (12) விருது (1) விஜய் (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (7) வை.கோ (5) வைரமுத்து (2) ழகரம் (1) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டெர்லைட் (2) ஹீலர் பாஸ்கர் (1) Bhagavath Gita (1) BJP (1) Casteism (1) Cauvery (1) Dalit (1) Genocide (1) Hindu (1) Karnataka (1) Manisha (1) Modi (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (2) Religion (1) Scheduled Castes (1) Sexual Harassment (1) Tamilnadu (1) Tamils (1) Unicode (1) Unicode Consortium (1) UP (1) Women (1) Yogi Adityanath (1)

முகரும் வலைப்பூக்கள்