.

செவ்வாய், பிப்ரவரி 26, 2019

தி.மு.க., தேர்தல் அறிக்கைக்கான எனது பரிந்துரைகள்! - மக்கள் பார்க்கவும் வலுச் சேர்க்கவும்!

Stalin invites ideas and expectations of People for Tamil Nadu development
தி.மு.க., பற்றிய என் கருத்து என்ன என்பது என்னைத் தெரிந்தவர்களுக்கும் என் எழுத்துக்களை அறிந்தவர்களுக்கும் நன்றாகவே தெரியும். ஆனாலும் "தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையை வடிவமைப்பதில் மக்களும் கலந்து கொள்ளலாம். தமிழ்நாட்டை முன்னேற்ற ஒரு வாய்ப்பு" என்கிற ஸ்டாலினின் அழைப்பைக் கண்டதும் எந்தத் தயக்கமும் இன்றி நான் உடனே தீர்மானித்து விட்டேன், என் எதிர்பார்ப்புகளையும் எழுதி அனுப்புவது என்று. தனித் தமிழீழத் திருநாட்டுக்கான பொது வாக்கெடுப்பு, இலங்கைக்கு எதிராகப் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்பு என நான் முன்வைக்கும் இந்த அதிரடிப் பரிந்துரைகளையெல்லாம் தி.மு.க., ஏற்குமா இல்லையா என்பது அப்புறம். ஆனால் இதை மட்டும் நாம் செய்யாமல் விட்டுவிட்டால் நாளைக்கு இதே தி.மு.க-வினர் என்ன சொல்வார்கள் தெரியுமா நண்பர்களே? 

"நாங்கள் எங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கை வடிவமைப்பையே மக்களிடம் ஒப்படைத்தோம். ஆனால் யாருமே தனி ஈழம் பற்றியோ, அது தொடர்பான இன்ன பிற கோரிக்கைகளையோ முன்வைக்கவில்லை" என்பார்கள். அதற்காகவாவது, அப்படி ஒரு சொல்லுக்கு இடமளித்து விடக்கூடாது என்பதற்காகவாவது, ஈழம் போன்ற தமிழர் உரிமைப் பிரச்சினைகளில் தமிழ் மக்களுக்கு இருக்கும் அக்கறையைத் தி.மு.க-வுக்கு உணர்த்த வேண்டும் என்பதற்காகவாவது அவர்களின் அழைப்பை ஏற்பது என்று முடிவெடுத்து எழுதியும் அனுப்பி விட்டேன். இதோ மக்களாகிய உங்கள் பார்வைக்கும் அவற்றை முன்வைத்துள்ளேன்.

என்னுடைய இந்த முடிவு சரிதான் என உங்களுக்கும் தோன்றினால், அருள் கூர்ந்து இதே கோரிக்கைகளை நீங்களும் எழுதி dmkmanifesto2019@dmk.in எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்! அல்லது துவிட்டர் (twitter), பேசுபுக்கு (facebook) ஆகியவற்றில் உள்ள #DMKmanifesto2019 எனும் சிட்டையில் (hashtag) பகிருங்கள்! தமிழர் எதிர்காலத்துக்கான இந்த முயற்சிக்கு வலுச் சேர்த்து உதவுங்கள்! அதற்கு முன் இதோ என் பரிந்துரைகளைப் படித்து விடுங்கள்!
☟    ☟    ☟
தி.மு.க., தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு வணக்கம்!

உங்கள் தேர்தல் அறிக்கை வடிவமைப்பில் பங்கேற்க மக்களான எங்களுக்கும் வாய்ப்பளித்தமைக்கு முதலில் நன்றி! நீங்கள் அறிவித்தபடியே முதலில் என் புதுமையான எண்ணம் ஒன்றை இங்கே தெரிவிக்கிறேன். அதன் பின் என் எதிர்பார்ப்புக்களையும் பட்டியலிடுகிறேன்.

புதியதோர் எண்ணம்

தமிழர்களின் இன்றைய எல்லா வீழ்ச்சிகளுக்கும் முழுமுதல் காரணம் பார்ப்பனியம்தான் என்றால் அஃது எள்ளளவும் மிகையாகாது. அப்படிப்பட்ட பார்ப்பனியம் இங்கே கடை விரிக்கத் தொடங்கியதே சமயத்தின் (religion) மூலமாகத்தான் என்பது வரலாறு. தமிழருக்கெனத் தனியே கடவுள் கொள்கைகள், வழிபாட்டு முறைகள் என எல்லாம் இருந்தும் அவை அனைத்தையும் உறிஞ்சி எடுத்து இந்துச் சமயத்துக்குள் ஊசி ஏற்றியவர்கள், பின்னர் அந்த இந்துச் சமயத்தையே தமிழர் சமயமாக இங்கு பரப்பினார்கள். அந்தப் பண்பாட்டு திணிப்பை, அடையாள அழிப்பைத் தமிழர்களும் ஏற்றுக் கொண்டதால்தான் இந்துச் சமயத்தின் இழிவுகளான வருணம், சாதி, பெண்ணடிமைத்தனம் முதலான அனைத்தும் தமிழர் தலையிலும் வந்து உட்கார்ந்து விட்டன. இவற்றையெல்லாம் சரி செய்ய சாதி ஒழிப்பு நடவடிக்கைகள், பெண் விடுதலை முன்னெடுப்புகள் எனத் தனித் தனியே பல நடவடிக்கைகளை நாம் காலங்காலமாக மேற்கொண்டு வந்தாலும், குறிப்பிட்ட அந்தப் பண்பாட்டுத் திணிப்புக்கு எதிராகத் தனி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது; அந்தக் கடமை இன்னும் அப்படியே பாக்கியிருக்கிறது!

எனவே தமிழர்களின் வீழ்ச்சிகள் அத்தனைக்கும் மூலக் காரணமான இந்துச் சமய அடையாளத்தைத் தமிழர்கள் மீதிருந்து அகற்றும் வகையில் தமிழர்கள் இந்துக்கள் அல்ல என்கிற சட்டம் கொண்டு வரப்பட வேண்டும்! கருநாடகத்தில் இலிங்காயத்துகள் தனிச் சமயமாக அறிவிக்கப்பட்டது போலத் தமிழர்களும் தனிச் சமயத்தவராகச் சட்டப்படி அறிவிக்கப்பட வேண்டும். இனி படிவங்களை நிரப்பும் பொழுது ‘சமயம்’ என்கிற பத்தியில் ‘தமிழர்’ என்றே குறிப்பிடும் உரிமை தமிழருக்கு அளிக்கப்பட வேண்டும். தமிழர்களின் அடையாளம் மாற்றப்பட்டதால் உண்டான அடிமைத்தனங்கள், பிற்போக்குத்தனங்கள், மூடநம்பிக்கைகள் போன்றவற்றிலிருந்து வெளியேற வாய்ப்புகள் இருப்பது போலவே குறிப்பிட்ட அந்தத் தவறான அடையாளத்திலிருந்து வெளியேறும் வாய்ப்பும் சட்டப்படி வழங்கப்பட வேண்டும். அடையாள அரசியலால் ஏற்படுத்தப்பட்ட பன்னெடுங்கால இழிவு, அடையாள அரசியல் நடவடிக்கை மூலமே துடைக்கப்பட வேண்டும்.

இதுவே நான் முன்வைக்க விரும்பும் புதுமை எண்ணம்!

அடுத்து என் எதிர்பார்ப்புகள் இங்கே

மருத்துவப் பொது நுழைவுத் தேர்வு (NEET) விலக்கப்பட வேண்டும்! அதுவும், ஒட்டுமொத்த நாட்டின் நல்வாழ்வுக்கே வேட்டு வைக்கும் இந்தத் தேர்வு முறை வெறும் தமிழ்நாட்டளவில் இல்லாமல் தேசிய அளவிலேயே என்றென்றைக்குமாக அகற்றப்பட வேண்டும்!

கருணாநிதி அவர்களின் நெடுங்காலக் கனவாக விளங்கிய மாநிலத் தன்னாட்சி அமல்படுத்தப்பட வேண்டும்! இதன் அடையாளமாக நாட்டின் பாதுகாப்பு, நாணய அச்சடிப்பு ஆகிய இரண்டைத் தவிர கல்வி, பொருளாதாரம் முதலான அத்தனை துறைகளும் அதிகாரங்களும் மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும்! இந்தியாவின் பற்பல மாநிலங்கள் எல்லைப் பகுதியிலேயே அமைந்துள்ளதால் நாட்டின் பல மாநிலங்களுக்கு அண்டை நாடுகளுடன் தனிப்பட்ட முறையிலான தொடர்புகள் தொன்று தொட்டு நிலவி வருகின்றன. இவற்றையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் மத்திய அரசுகள் வெளியுறவு விவகாரங்களில் தான்தோன்றித்தனமாக எடுக்கும் முடிவுகளே ஈழத் தமிழினப் படுகொலை போன்ற பல கொடுமைகளுக்குக் காரணமாகின்றன. இதனால் மாநிலக் கட்சிகளுக்கும் மக்களிடையே கெட்ட பெயர் ஏற்படுகிறது. எனவே வெளியுறவுத்துறையும் மாநிலப் பட்டியலில் கொண்டு வரப்படுவது இன்றியமையாததாகிறது!

தமிழ்நாட்டையே பாலைவனமாக்கக் கூடிய சாணவளி (methane) எடுத்தல், கெயில் எரிவளிக் குழாய் பதித்தல், எட்டு வழிச் சாலை போன்ற திட்டங்கள் அத்தனையும் கைவிடப்பட வேண்டும்! தஞ்சை கழிமுகப் (Delta) பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டு, அப்பகுதியில் வேளாண் நிலங்களுக்கு ஊறு செய்யும் வகையில் எந்தத் திட்டமும் இனி கொண்டு வர முடியாதபடி சட்டப் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும்!

தாசுமாக்கில் (TASMAC) மக்களின் உயிரைக் குடிக்கும் மது வகைகளுக்கு மாறாக உடலுக்கும், நாட்டுப்புறப் பொருளாதாரத்துக்கும் நலம் தரும் கள் விற்பனை தொடங்கப்பட வேண்டும்! மது விற்பனை படிப் படியாகக் குறைக்கப்பட்டு கள் மட்டுமே விற்பனை செய்ய இலக்கு தீர்மானிக்கப்பட வேண்டும்! அதே நேரம் தாசுமாக்கு விற்பனைக்கான சட்ட நெறிகள் கடுமையாக அமல்படுத்தப்பட்டு வழிபாட்டுத் தளங்கள், கல்விக்கூடங்கள் போன்றவற்றின் அருகில் சட்டப்புறம்பாக நடைபெற்று வரும் கடைகளை மூடுவது போன்ற நடவடிக்கைகள் உடனே மேற்கொள்ளப்பட வேண்டும்! அத்துடன் குடிநோயாளிகளைக் குணப்படுத்த அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் குடிமீட்புச் சிறப்புப் பிரிவு தொடங்கப்பட வேண்டும்!

தீவிரவாதத்திலும் வன்முறையிலும் ஈடுபடும் இசுலாமிய அமைப்புகள் தடை செய்யப்படுவது போலவே அத்தகைய செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் ஆர்.எசு.எசு., (RSS) அமைப்பும் தடை செய்யப்பட வேண்டும்! இந்துச் சமயப் பரப்பல் மூலம் தமிழ், திராவிட அடையாளங்களை அழிக்கத் தொடர்ச்சியாக முயன்று வரும் பா.ச.க-வுக்கு ஒரு கடிவாளமாகவாவது இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கைப் படையினரால் கைது செய்யப்படுவதையும் தாக்கப்படுவதையும் நிறுத்த, நம் மீனவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, அவர்கள் அனைவருக்கும் துப்பாக்கி சுடும் பயிற்சியும் ஆளுக்கொரு துப்பாக்கியும் வழங்கப்பட வேண்டும்! மேலும் மீனவ மக்களின் வாழ்வாதாரத்தையே முற்றிலும் அழிக்கக்கூடிய சாகர்மாலா திட்டம் கைவிடப்பட வேண்டும்! 

28 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறைத்தண்டனை பட்டு வரும் இராசீவு கொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப் பெற வேண்டும். பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் முகத்தில் இனியாவது மகிழ்ச்சியைப் பார்க்க வேண்டும். செங்கொடியின் உயிர் ஈகம் (தியாகம்) வீணாகாமல் காக்கப்பட வேண்டும்!

தமிழ்நாட்டின் ஏதிலியர் முகாம்களில் வாழ்நாளெல்லாம் சிறைக் கைதிகளைப் போல் கிடக்கும் ஈழத் தமிழ் மக்கள் இனியாவது விடுதலைக் காற்றை மூச்செடுக்க வழி செய்யும் வகையில் ஏற்கெனவே அங்கு இருப்பவர்களுக்கும் இனி வரும் தமிழ் ஏதிலியர்களுக்கும் (refugees) இந்தியக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும்!

இலங்கையில் தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட இன அழிப்புக்கு நீதி வேண்டிப் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட வேண்டும்! ஒரு நாட்டின் மீது இன்னொரு நாடுதான் வழக்குத் தொடுக்க முடியும் எனும் கட்டுப்பாடு பன்னாட்டு நீதிமன்றத்தில் (International Court of Justice) மட்டும்தான் இருக்கிறது; பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் (International Criminal Court - ICC) இந்தக் கட்டுப்பாடு இல்லை. தனி மனிதர் கூட அங்கே ஒரு நாட்டுக்கு எதிராக வழக்குத் தொடுக்க முடியும் (பார்க்க: படம்). எனவே தமிழினப் படுகொலைக்கு நீதி கோரி உடனடியாக அங்கே வழக்குத் தாக்கல் செய்யப்பட வேண்டும். 

Who can file a case in International Criminal Court (ICC)?

இலங்கையில் தமிழ் மக்களின் கண்ணீரும் உதிரமும் வெள்ளமாய் ஓடுவதை நிறுத்த உடனடியாகத் தமிழீழத்துக்கான பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்! அரை நூற்றாண்டுக்கும் மேலாக நீடிக்கும் இந்தத் துயரத்துக்கு ஒன்றரை இலட்சம் பேரின் உயிர்த் தியாகத்துக்குப் பிறகாவது விடிவு பிறக்க வேண்டும். இதற்காக ஐ.நா-வில் சொல்லி உரிய பாதுகாப்புடன் முறையான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.

நாட்டின் கணிசமான பகுதிகளைத் துப்பாக்கி முனையில் கட்டுப்படுத்தி வைத்திருக்கும் நாடு, உலகின் மாபெரும் மக்களாட்சி நாடு எனப் பீற்றிக் கொள்வது வெட்கங்கெட்டதனம்! எனவே காசுமீரத்திலும் வடகிழக்கு மாநிலங்களிலும் அமலில் இருக்கும் ஆயுதப்படைச் சிறப்பு அதிகாரச் சட்டம் நீக்கப்பட வேண்டும். ஆம், ஈழம் முதல் காசுமீரம் வரையான நம் உடன்பிறப்புகள் அத்தனை பேரும் அமைதியாக வாழ வழிவகை செய்யப்பட வேண்டும்!

மீண்டும் நன்றி!


இவண்:
நாள்: 23.02.2019                                                                                                                                                                                                                      - இ.பு.ஞானப்பிரகாசன் 

 பதிவுகளை உடனுக்குடன் பெறக் கீழ்க்காணும் பொத்தானைச் சொடுக்கி
வாட்சாப் தடத்தில் (Whatsapp Channel) இணையுங்கள்!!

Aga Sivappu Thamizh Whatsapp Channel

முகநூல் வழியே கருத்துரைக்க

4 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. மிக்க நன்றி ஐயா! இன்று மாலை தி.மு.க., தேர்தல் அறிக்கைக் குழுவிலிருந்து மறுமொழியும் அனுப்பியிருக்கிறார்கள். அனைத்துக் கோரிக்கைகளும் அவர்கள் பரிசீலனைக்கு வந்திருப்பதாகவும், வலைப்பூவையும் வந்து பார்வையிட்டதாகவும் ஆலோசனைக்குப் பிறகு தேவைப்படும் மாற்றங்களுடன் தேர்தல் அறிக்கையில் இணைக்கப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார்கள். பார்ப்போம்! ஏதோ என்னாலானது. நன்றி!

      நீக்கு

என் புதினத்தை வாங்க

என் புதினத்தை வாங்க
மேலே உள்ள படத்தை அழுத்துங்கள்
பதிவுகளை உடனுக்குடன் பெற

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

வாட்சாப் தடத்தில் (Channel)...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு (1) 13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (9) அஞ்சலி (21) அணு உலை (2) அம்பிகை செல்வகுமார் (1) அம்மணம் (1) அமேசான் (6) அயல்நாட்டுத் தமிழர் (1) அரசியல் (91) அழைப்பிதழ் (7) அற்புதம்மாள் (2) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (40) ஆட்சென்ஸ் (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இங்கிலாந்து (1) இசுரேல் (2) இட ஒதுக்கீடு (4) இணையம் (19) இந்தித் திணிப்பு (1) இந்தியா (25) இரசியா (1) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இலக்கணம் (3) இலங்கை (1) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (23) இனம் (46) ஈழம் (44) உக்கிரேன் (1) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (24) எழுவர் விடுதலை (1) ஐ.நா (5) ஒருங்குறி (1) கடவுள் (1) கதை (3) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (11) கலைச்சொல்லாக்கம் (1) கவிஞர் தாமரை (1) கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் (2) கவிஞர் ரேவதி (1) கவிதை (19) காங்கிரஸ் (6) காசா (2) காணொளி (4) காதல் (2) காந்தியம் (1) கார்த்திக் சுப்புராஜ் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (5) கிரந்தம் (1) கீச்சுகள் (2) குழந்தைகள் (10) குறள் (2) கூகுள் (2) கையொப்பம் (2) கோட்பாடு (9) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (16) சந்திப்பு (1) சமயம் (12) சமற்கிருதம் (2) சமூகநீதி (4) சரிதா (1) சாதி (10) சிங்களர் (1) சித்திரக்கதைகள் (1) சிவகார்த்திகேயன் (1) சிறுவர் இலக்கியம் (4) சீமான் (7) சுற்றுச்சூழல் (6) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (3) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (31) தமிழ் தேசியம் (5) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (16) தமிழர் (45) தமிழர் பெருமை (17) தமிழறிஞர் முத்துநிலவன் (1) தமிழின் சிறப்பு (3) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (2) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (5) தாலி (1) தி.மு.க (11) திரட்டிகள் (4) திராவிடம் (9) திருமுருகன் காந்தி (1) திரைப்படம் (2) திரையுலகம் (9) திறனாய்வு (1) தினகரன் (1) துருவ் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (9) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தேர்தல்-2021 (2) தொலைக்காட்சி (2) தொழில்நுட்பம் (10) தோழர் தியாகு (1) நட்பு (13) நிகழ்வுகள் (5) நிர்மலா சீதாராமன் (1) நினைவேந்தல் (10) நீட் (5) நூல்கள் (10) நூற்றாண்டு (1) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (3) பதிவர் உதவிக்குறிப்புகள் (10) பதிவுலகம் (24) பா.ம.க (2) பா.ஜ.க (30) பார்ப்பனியம் (14) பாலஸ்தீனம் (2) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (10) பீட்டா (1) புதிய வேளாண் சட்டம் (1) புறநானூறு (1) புனைவுகள் (10) பெண்ணியம் (6) பெரியார் (3) பேரறிவாளன் (2) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (5) பொதுவுடைமை (2) பொதுவுடைமைக் கட்சி (2) பொருளாதாரம் (2) பொழிவு (2) போட்டி (1) போர் (3) போராட்டம் (10) ம.ந.கூ (2) மகான் (1) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (10) மடோன் அஷ்வின் (1) மணிவண்ணன் (1) மதிப்புரை (5) மதுவிலக்கு (2) மருத்துவம் (7) மாநாடு (1) மாநாடுகள் (1) மாய இயல்பியம் (1) மாவீரர் நாள் (3) மாற்றுத்திறனாளிகள் (2) மிஷ்கின் (1) மீம்ஸ் (7) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (3) மேனகா காந்தி (1) மொழியரசியல் (2) மொழியறிவியல் (2) மோடி (11) யுவர் கோட் (1) யோகிபாபு (1) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) ராஜீவ் படுகொலை (1) வரலாறு (22) வாழ்க்கைமுறை (17) வாழ்த்து (6) வானதி சீனிவாசன் (1) விக்ரம் (1) விடுதலை (6) விடுதலைப்புலிகள் (13) விருது (1) விஜய் (1) விஜய் சேதுபதி (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (7) வை.கோ (6) வைரமுத்து (2) ழகரம் (1) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டெர்லைட் (2) ஹமாஸ் (2) ஹீலர் பாஸ்கர் (1) Bhagavath Gita (1) BJP (1) Casteism (1) Cauvery (1) Dalit (1) Genocide (3) Hindu (1) Karnataka (1) Magical Realism (1) Manisha (1) Modi (1) Notion Press (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (2) Religion (1) Scheduled Castes (1) Sexual Harassment (1) Tamilnadu (1) Tamils (1) Unicode (1) Unicode Consortium (1) UP (1) Women (1) Yogi Adityanath (1)

முகரும் வலைப்பூக்கள்