சங்கர மட இளைய பீடாதிபதி விஜயேந்திர சரசுவதி தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்திருப்பது தமிழ் மக்கள் அனைவரையும் கொதிக்கச் செய்திருக்கிறது.
அதே நேரம், தமிழ்த்தாயை அவர் அவமதிக்கவே இல்லை; கடவுளாக மதித்து நடந்து கொண்டார் எனவும், ஆண்டாள் சர்ச்சையை மறக்கடிக்கவே இது ஊதிப் பெருக்கப்படுகிறது எனவும் பல்வேறு விளக்கங்கள் அளிக்கப்படுகின்றன.
இந்த விளக்கங்களைத் தோலுரித்து உள்ளே இருக்கும் உண்மை நிறத்தை வெளிக்காட்டவே வினா-விடை பாணியிலான இப்பதிவு! அறத்தின் துணிவிருந்தால் திறத்தின் உரமிருந்தால் எதிர்த் தரப்பு இதற்கு விடையளித்துப் பார்க்கட்டும்!
கேள்வி-௧: தமிழ்த்தாய் வாழ்த்தின்போது விசயேந்திரர் எழுந்து நிற்காதது தற்செயலாகக் கூட இருக்கலாமே? அதை ஏன் ஒரு பிரச்சினையாக ஆக்க வேண்டும்?