ஒரு சிக்கலுக்கான தீர்வு ஒரு முறையாவது நடைமுறைக்குக் கொண்டு வரப்படாத வரை
அதை மீண்டும் மீண்டும் முன்வைக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.
அப்படி ஒரு நினைவூட்டல்தான் இது!
மறுபடியும் இனப்படுகொலை! இந்த முறை தெருவில் ஓடுவது இசுலாமியர் உதிரம்! கொன்று குவித்து ஈன வெறியாட்டம் போட்டுக் கொண்டிருக்கிறது இசுரேல்! கூடச் சேர்ந்து ஆடுகிறது எப்பொழுதும் போல் அமெரிக்கா!
இசுரேலுக்கும் பாலத்தீனத்துக்கும் அப்படி என்னதான் சிக்கல்? ஏன் இந்தப் போர்? இப்படிக் கேட்பவர்கள் பேராசிரியர் ராசன் குறை எழுதியுள்ள “ஆரிய மாயையும், இசுரேல் உருவாக்கமும் – வரலாற்று விபரீதங்கள்” எனும் கட்டுரையைப் படிக்கலாம். மற்றவர்கள் மேற்கொண்டு இந்தக் கட்டுரையைத் தொடரலாம்.