.

திங்கள், நவம்பர் 27, 2017

மாவீரர் திருநாள் – நாம் செலுத்த வேண்டிய உண்மையான அஞ்சலி இதுதான்!

Tamil Eelam National Heroes Day 2017

லகெங்கும் வாழும் தமிழ்மிகு நெஞ்சங்களே!

இன்று மாவீரர் திருநாள்! இன்னுயிர்ச் சொந்தங்களைக் காக்கத் தன்னுயிர் துச்சமென நீத்த காவல் தெய்வங்களின் நாள்! உரிமைப் போருக்காக உயிராயுதம் ஏந்திய ஈகச் செம்மல்களின் நாள்! உலக வல்லரசுகள் எல்லாம் ஒன்று திரண்டு வந்தும் இறுதி வரை களமாடிய மாவீரத் திலகங்களின் நாள்!

இப்பேர்ப்பட்ட நாளில் அப்பேர்ப்பட்ட வீரப் பெருமக்களுக்காக நாம் செய்யப் போவது என்ன? வழக்கம் போல் மெழுகுத்திரி ஏற்றியும் பாமாலை போற்றியும், மலர்கள் தூவியும் மேடைகளில் கூவியும், அறிக்கை விடுத்தும் கண்ணீர் உகுத்தும் – இப்படியேதான் நாம் காலத்தை ஓட்டப் போகிறோமா? இவை தவிர வேறேதும் நம்மால் செய்ய முடியாதா?

தமிழர்களுக்கு ஒரு தனிநாடு வேண்டும் என்பதற்காகத் தங்கள் உயிரைக் காணிக்கையாக்கியவர்கள் மாவீரர்கள். தமிழீழத்தை வென்றெடுத்து அந்த வெற்றியை அவர்களுக்குக் காணிக்கையாக்குவதே நாம் அவர்களுக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலி!

இதோ, சிங்கள வல்லூறுகள் மீண்டும் இன்னொரு தமிழின அழித்தொழிப்புக்குத் திட்டம் தீட்டத் தொடங்கி விட்டன. ‘ஒரே நாடு – ஒரே இனம்’ எனும் தங்கள் நெடுங்காலக் கொள்கையைத் தற்பொழுது அதிகாரப்பூர்வமாகவே அமலாக்க முயன்று வருகிறது இலங்கைப் பேரினவாத அரசு. இது தமிழினத்தைச் சட்டப்படியாகவே ஒழிப்பதற்கான நடவடிக்கை எனக் கொந்தளிக்கிறார்கள் தமிழ்ப் பற்றாளர்களும், மனிதநேய ஆர்வலர்களும். போர் என்ற பெயரில் பச்சையான இனப்படுகொலையை இலங்கை நடத்தியபொழுதே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பன்னாட்டு சமூகம், இப்படிச் சட்டத்தின் பெயரால் அதைச் செய்தால் பெயருக்குக் கூடக் கண்டு கொள்ளாது என்பது நாம் அறியாததில்லை. ஆக, இனியும் வெறுமே அஞ்சலிக் கூட்டங்களும் விழிப்புணர்வு மாநாடுகளும் கண்டன ஆர்ப்பாட்டங்களும் நடத்திக் கொண்டிராமல் தமிழீழ விடுதலைக்கான அரசியல் – சட்ட முயற்சிகளை வேகப்படுத்தியாக வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.

ஈழப் பிரச்சினைக்காகத் தமிழர் தரப்பிலிருந்து மேற்கொள்ளப்பட்ட உச்சக்கட்ட நடவடிக்கை எனப் பார்த்தால், ஐ.நா–விலும் பன்னாட்டு மனித உரிமை ஆணையத்திலும் இனப்படுகொலை குறித்து நாம் எடுத்துரைத்ததுதான். தமிழர்களுக்காகப் பேச உலகில் எந்த நாடும் இல்லாத நிலையில் பசுமைத் தாயகம், நாடு கடந்த தமிழீழ அரசு போன்ற இயக்கங்களும் வைகோ, அன்புமணி இராமதாசு, திருமுருகன் காந்தி போன்ற தனிப்பட்ட மனிதர்களும் மட்டுமே சேர்ந்து இந்த உயரத்துக்கு இந்தப் பிரச்சினையை எடுத்துச் சென்றதே பெரிதுதான். கண்டிப்பாக அது பாராட்டுக்குரியது என்பதில் ஐயமில்லை. ஆனால், இது மட்டும் போதாது; போதவே போதாது!

ஈழத் தமிழ் மக்களின் தனிநாட்டுக் கனவு நிறைவேற வேண்டுமானால், அப்படி ஒரு கோரிக்கையை அவர்கள் ஏன் வலியுறுத்துகிறார்கள் என்பதற்கான காரணத்தை நாம் பன்னாட்டு சமூகத்தின் முகத்தில் அறையும்படி முன் வைக்க வேண்டும்! அந்தக் கோரிக்கை சரியானதுதான் என்பதற்கான பன்னாட்டு அமைப்பு ஒன்றின் ஏற்பிசைவை (அங்கீகாரம்) நாம் பெற்றாக வேண்டும்! அதற்கு ஒரே வழி, நடந்த இனப்படுகொலைக்கு நீதி கேட்டுப் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தின் கதவைத் தட்டுவதுதான்!

பெரும்பாலோர், ஒரு நாட்டின் மீது வழக்குத் தொடுக்க இன்னொரு நாட்டினால்தான் முடியும் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், பன்னாட்டு நீதிமன்றத்தில்தான் இப்படி ஒரு கட்டுப்பாடு இருக்கிறது. பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் அப்படி இல்லை [பன்னாட்டு நீதிமன்றம் (International Court of Justice) என்பது வேறு; பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றம் (International Criminal Court) என்பது வேறு!). பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தைப் பொறுத்த வரை தனி ஒரு மனிதர் கூட அங்கே வழக்குத் தாக்கல் செய்ய முடியும்! (பார்க்க: கீழே உள்ள படம்!) 
How can people report crimes to the ICC?
படத்தைப் பெரிதாக்கிப் பார்க்கப் படத்தின் மீது சொடுக்குக!
இது குறித்து முழுமையான விவரங்களுக்கு அழுத்துங்கள் இங்கே!

எனவே, இனியும் ஐ.நா–வையோ மனித உரிமை ஆணையத்தையோ நம்பிக் கொண்டிராமல் இனப்படுகொலை குறித்துத் தமிழ் அமைப்புகளே நேரிடையாக வழக்குத் தொடுக்க வேண்டும்!

இதனால் தமிழினத்தை அழித்த இனவெறியர்களுக்குத் தண்டனை கிடைக்கிறதோ இல்லையோ, கண்டிப்பாக நடந்தது இனப்படுகொலைதான் என்பதும், அதை நடத்தியது இலங்கை அரசுதான் என்பதும் மெய்ப்பிக்கப்படும். அது மட்டும் நடந்து விட்டால் அந்தத் தீர்ப்பை வைத்தே நாம் தமிழீழப் பொதுவாக்கெடுப்புக் கோரலாம். “சொந்த நாட்டு மக்களை அரசே கொன்று குவிக்கும் ஒரு நாட்டில் அந்த மக்கள் எப்படி வாழ முடியும்?” எனப் பன்னாட்டு அவையில் நாம் குரல் உயர்த்திக் கேட்கலாம். “இப்படிப்பட்ட ஓர் அரசமைப்பிடமிருந்து அந்த மக்கள் விடுதலை கோருவதில் என்ன தவறு?” என உலக நாடுகளின் முகத்துக்கு நேராகக் கேள்வி எழுப்பலாம். ஐ.நா–வின் அமைப்புகளுள் ஒன்றான பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றமே தீர்ப்பளித்த பிறகு எவனும்/எவளும் அதை எதிர்த்துப் பேச முடியாது. அதன் பின் அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா என எதன் உதவியும் நமக்குத் தேவையும் கிடையாது.

தமிழீழ விடுதலை என்பது கண்டிப்பாக ஆகப் பெரிய இலக்குதான். ஆனால், இயலவே இயலாததில்லை. ஆகவே, தொடர்ந்தும் உலக நாடுகளையும் பன்னாட்டு அமைப்புகளையும் எதிர்பார்க்காமல் தமிழ் அமைப்புகள் நேரிடையாகச் சட்ட நடவடிக்கையில் இறங்க வேண்டும்! தமிழினத்துக்கு நடந்த கொடுமையின் தீவிரத்தை வரலாற்றுப் பக்கங்களில் பதிவு செய்ய வேண்டும்! அதை வைத்து ஈழத் தமிழ்ச் சொந்தங்களின் பெருங்கனவை நிறைவேற்ற வேண்டும்! புலிகளின் தாகத்தைத் தணிவிக்க வேண்டும்! 

அதுதான்...
தமிழர்களுக்காகவே தங்கள் வாழ்வைத் தத்தம் செய்த மாவீரர்களுக்கும்
தமிழர்கள் என்பதற்காகவே குருதி தோயக் கொல்லப்பட்ட நம் உயிர்ச் சொந்தங்களுக்கும்
தமிழினத்தில் தோன்றிய காரணத்துக்காக வயிற்றிலேயே வதைபட்ட நம் பிஞ்சுகளுக்கும்
நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி! 

International Criminal Court and Tamils

(நான் ‘அகரமுதலதனித்தமிழ் இதழில் எழுதியது, சில மாற்றங்களுடன்)
❀ ❀ ❀ ❀ ❀
படங்கள்: நன்றி ௧) வாகை தொலைக்காட்சி, ௨) ஜஸ்டிஸ் ஹப், ௩) விக்கிப்பீடியா, ௪) கெட்டி இமேஜசு.

தொடர்புடைய பதிவுகள்:
மாவீரர் திருநாள் என்பது என்ன?

பதிவின் கருத்துக்கள் சரி எனத் தோன்றினால் கீழ்க்காணும் வாக்குப்பட்டைகள் மூலம் மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்களேன்! கூடவே, உங்கள் செம்மையான கருத்துக்களுக்கும் காத்திருக்கிறேன்! தமிழில் எழுத வசதியில்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது கீழே 'தமிழ்ப் பலகை'! தனிப்பட ஏதும் தெரிவிக்க விரும்பினால், அதற்கு அடுத்து உள்ள 'அணுக' படிவத்தைப் பயன்படுத்தலாம்!

 பதிவுகளை உடனுக்குடன் பெறக் கீழ்க்காணும் பொத்தானைச் சொடுக்கி
வாட்சாப் தடத்தில் (Whatsapp Channel) இணையுங்கள்!!

Aga Sivappu Thamizh Whatsapp Channel

முகநூல் வழியே கருத்துரைக்க

4 கருத்துகள்:

  1. கட்டுரை நன்றாக இருக்கிறது. ஆம் சகோ இன்று கூட தோழி அதிரா அவர்கள் அவர்கள் தனக்குப் பிரியமான வளர்ப்பு விலங்குகளைப் பற்றி அவற்றுடனானத் தன் அனுபவங்களை எழுதியிருந்தார். அதன் இடையே இடையே அவர்கள் மகிழ்ச்சியாக இருந்த அந்த வேளையில் திடீரென அறிவிப்பு வந்ததாம் இன்னும் இரண்டு மணி நேரத்தில் எல்லோரும் ஊரை விட்டு வெளியேற வேண்டும்.....இராணுவம் முன்னேறி வந்து கொண்டிருக்கிறது என்று. அவர்கள் இருந்த பகுதி யாழ்! நான் சிறு வயதில் பார்த்த இடங்கள். மூன்றாம் வகுப்பு வரை இலங்கையில் தான் இருந்தேன். அவர்கள் சிறிய பெட்டிகளில் முக்கியமானவற்றை எடுத்துக் கொண்டு வெளியேறினார்களாம்...எங்கு என்றெல்லாம் எழுதவில்லை.அதன் பின் பல மாதங்கள் கழித்து அந்த வீட்டிற்கு வந்தார்களாம். ஆனால் இவர் வந்து பார்த்துவிட்டு அங்கு தங்கவில்லையாம் போய்விட்டாராம். அம்மா அப்பா அங்குதான் தங்கினார்களாம். வந்த போது வீடு தூசியுடன் அன்று வைத்து விட்டுப் போன பொருட்கள் அப்படியே இருந்தனவாம். வளர்த்த நாயும் பூனையும் அப்படியே அன்று போலவே அங்கு படுத்துக் கிடந்தனவாம். அவரது க்யூட்டெக்ஸ் காய்ந்து கிடந்ததாம் மேசை எல்லாம் தூசியுடன்....

    அவர்கள் இரண்டு மணி நேரத்தில் வெளியேற வேண்டியச் சூழல் அப்புறம்...என்ன ஆனார்கள்...எப்படி எங்குத் தங்கினார்கள் என்றேலாம் தெரியவில்லை...வேண்டாம் ....இதுவே மனது கனத்துவிட்டது சகோ...அதன் பின் நான் அவர் தளத்தில் சென்று கருத்திடவில்லை. இலங்கைத் தமிழில் தான் எழுதி வருவார். பின்னூட்டங்களும் மிக மிக நகைச்சுவையாகச் சிறு பிள்ளை போல எழுதுவார். மனம் கனத்துவிட்டது...அவரிடமே சொல்லி வந்துவிட்டேன். முடியவில்லை. இப்போது அவர் ஸ்காட்லாந்தில் நல்லபடியாக இருந்து வருகிறார் என்றாலும் அவர் ஊரைப் பற்றி அவரது சிறு வயது நினைவுகளை எழுதுவார். அந்தக் காட்சிகள் மனதில் விரிய...மனம் என்னவோ செய்தது சகோ..

    நாங்களும் 1970ல் வந்து விட்டோம் பிரச்சனைகளின் துவக்கத்தில். என் அப்பா 1975ல் வந்தார் பிரச்சனைகள் வலுத்ததும்....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ! நீங்கள் இலங்கையில் இருந்தவரா?! சொல்லவே இல்லையே!

      ஆம்! ஈழத் தமிழர்களின் வாழ்க்கைப் பதிவுகள் உள்ளத்தைக் கனக்கச் செய்பவை. படிக்கும் நமக்கே இப்படி இருக்கிறதென்றால் அவற்றை அனுபவித்த அவர்களுக்கு எப்படியிருக்கும்! இதற்கு ஒரு விடிவு வேண்டும்! அதற்காகத்தான் எனக்குத் தோன்றும் வழிகளையெல்லாம் தொடர்ந்து எழுதி வருகிறேன். யாராவது, எங்காவது, எப்பொழுதாவது, இவற்றில் எதையாவது படித்துவிட்டு நடவடிக்கை எடுத்து விட மாட்டார்களா... ஈழத் தமிழர்களின் வாழ்க்கை மலர்ந்து விடாதா... இந்த ஏக்கத்தோடுதான் இத்தகைய பதிவுகளை மீண்டும் மீண்டும் எழுதி வருகிறேன். பார்ப்போம் சகோ! எல்லாவற்றுக்கும் முடிவு என்பது உண்டுதானே?

      நீக்கு

என் புதினத்தை வாங்க

என் புதினத்தை வாங்க
மேலே உள்ள படத்தை அழுத்துங்கள்
பதிவுகளை உடனுக்குடன் பெற

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

வாட்சாப் தடத்தில் (Channel)...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு (1) 13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (9) அஞ்சலி (21) அணு உலை (2) அம்பிகை செல்வகுமார் (1) அம்மணம் (1) அமேசான் (6) அயல்நாட்டுத் தமிழர் (1) அரசியல் (91) அழைப்பிதழ் (7) அற்புதம்மாள் (2) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (40) ஆட்சென்ஸ் (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இங்கிலாந்து (1) இசுரேல் (2) இட ஒதுக்கீடு (4) இணையம் (19) இந்தித் திணிப்பு (1) இந்தியா (25) இரசியா (1) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இலக்கணம் (3) இலங்கை (1) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (23) இனம் (46) ஈழம் (44) உக்கிரேன் (1) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (24) எழுவர் விடுதலை (1) ஐ.நா (5) ஒருங்குறி (1) கடவுள் (1) கதை (3) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (11) கலைச்சொல்லாக்கம் (1) கவிஞர் தாமரை (1) கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் (2) கவிஞர் ரேவதி (1) கவிதை (19) காங்கிரஸ் (6) காசா (2) காணொளி (4) காதல் (2) காந்தியம் (1) கார்த்திக் சுப்புராஜ் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (5) கிரந்தம் (1) கீச்சுகள் (2) குழந்தைகள் (10) குறள் (2) கூகுள் (2) கையொப்பம் (2) கோட்பாடு (9) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (16) சந்திப்பு (1) சமயம் (12) சமற்கிருதம் (2) சமூகநீதி (4) சரிதா (1) சாதி (10) சிங்களர் (1) சித்திரக்கதைகள் (1) சிவகார்த்திகேயன் (1) சிறுவர் இலக்கியம் (4) சீமான் (7) சுற்றுச்சூழல் (6) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (3) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (31) தமிழ் தேசியம் (5) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (16) தமிழர் (45) தமிழர் பெருமை (17) தமிழறிஞர் முத்துநிலவன் (1) தமிழின் சிறப்பு (3) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (2) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (5) தாலி (1) தி.மு.க (11) திரட்டிகள் (4) திராவிடம் (9) திருமுருகன் காந்தி (1) திரைப்படம் (2) திரையுலகம் (9) திறனாய்வு (1) தினகரன் (1) துருவ் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (9) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தேர்தல்-2021 (2) தொலைக்காட்சி (2) தொழில்நுட்பம் (10) தோழர் தியாகு (1) நட்பு (13) நிகழ்வுகள் (5) நிர்மலா சீதாராமன் (1) நினைவேந்தல் (10) நீட் (5) நூல்கள் (10) நூற்றாண்டு (1) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (3) பதிவர் உதவிக்குறிப்புகள் (10) பதிவுலகம் (24) பா.ம.க (2) பா.ஜ.க (30) பார்ப்பனியம் (14) பாலஸ்தீனம் (2) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (10) பீட்டா (1) புதிய வேளாண் சட்டம் (1) புறநானூறு (1) புனைவுகள் (10) பெண்ணியம் (6) பெரியார் (3) பேரறிவாளன் (2) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (5) பொதுவுடைமை (2) பொதுவுடைமைக் கட்சி (2) பொருளாதாரம் (2) பொழிவு (2) போட்டி (1) போர் (3) போராட்டம் (10) ம.ந.கூ (2) மகான் (1) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (10) மடோன் அஷ்வின் (1) மணிவண்ணன் (1) மதிப்புரை (5) மதுவிலக்கு (2) மருத்துவம் (7) மாநாடு (1) மாநாடுகள் (1) மாய இயல்பியம் (1) மாவீரர் நாள் (3) மாற்றுத்திறனாளிகள் (2) மிஷ்கின் (1) மீம்ஸ் (7) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (3) மேனகா காந்தி (1) மொழியரசியல் (2) மொழியறிவியல் (2) மோடி (11) யுவர் கோட் (1) யோகிபாபு (1) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) ராஜீவ் படுகொலை (1) வரலாறு (22) வாழ்க்கைமுறை (17) வாழ்த்து (6) வானதி சீனிவாசன் (1) விக்ரம் (1) விடுதலை (6) விடுதலைப்புலிகள் (13) விருது (1) விஜய் (1) விஜய் சேதுபதி (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (7) வை.கோ (6) வைரமுத்து (2) ழகரம் (1) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டெர்லைட் (2) ஹமாஸ் (2) ஹீலர் பாஸ்கர் (1) Bhagavath Gita (1) BJP (1) Casteism (1) Cauvery (1) Dalit (1) Genocide (3) Hindu (1) Karnataka (1) Magical Realism (1) Manisha (1) Modi (1) Notion Press (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (2) Religion (1) Scheduled Castes (1) Sexual Harassment (1) Tamilnadu (1) Tamils (1) Unicode (1) Unicode Consortium (1) UP (1) Women (1) Yogi Adityanath (1)

முகரும் வலைப்பூக்கள்