ரஜினிகாந்த்! ஏறக்குறைய கால் நூற்றாண்டுக் காலமாகத் தமிழ்நாட்டு அரசியல் வானில் கண்ணாமூச்சி காட்டிக் கொண்டிருக்கும் நட்சத்திரம்! அரசியல் பற்றி நான்கு வார்த்தைகள் இவர் கூடுதலாகப் பேசினாலும் பேசினார், மொத்தத் தமிழ்நாடும் திசைக்கு ஒரு விதமாய் எகிறிக் குதிக்கிறது! “அவர் வந்தால் வரவேற்போம்” என இப்பொழுதே துண்டு போடுகின்றன சில கட்சிகள். “வந்தால் எதிர்ப்போம்” என இதற்குள்ளாகவே முட்டி முறுக்குகின்றன வேறு சில கட்சிகள். “வந்தால் வெல்வாரா தோற்பாரா” என விவாத மேடையே நடத்தத் தொடங்கி விட்டன ஊடகங்கள். சமூக வலைத்தளங்களிலோ அவருக்காகக் காவடி தூக்குவது முதல் கழுவி ஊற்றுவது வரை எல்லாம் நடக்கின்றன.
எப்படியோ, இருபத்து நான்கு ஆண்டுகளாக வருவாரா, மாட்டாரா என்பது மட்டுமே சர்ச்சையாக இருந்தது மாறி, வந்தால் நல்லதா, கெட்டதா என்கிற அடுத்த கட்டத்துக்குச் சென்றிருக்கிறது சிக்கல். அந்த வகையில் ரஜினிக்கும் ரஜினி விசிறிகளுக்கும் மட்டுமில்லாமல் ரஜினியை மையப்படுத்தித் தமிழ்நாட்டு அரசியலில் நிலவும் குழப்பத்துக்கும் இது நல்ல முன்னேற்றம்தான். ஆனால்,