கன்னடர்கள் எரித்ததும் தமிழர்கள் உடைத்ததும் |
இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டபொழுது எல்லா மாநில மக்களுமேதான் அதற்காக வெள்ளையரிடம் அடி வாங்கினார்கள். ஆனால், நாடு விடுதலையடைந்த பின்பும் இந்த நாட்டில் அடி வாங்கிக் கொண்டே இருப்பவர்கள் காஷ்மீரிகள், வடகிழக்கு மாநில மக்கள், தமிழர்கள் ஆகிய மூன்று தரப்பினர்தாம்!
அண்டை மாநிலங்களில் தமிழர்கள் மீதான தாக்குதல் என்பது வழக்கமாகிப் போன ஒன்று. காவிரியில் தமிழ்நாடு தண்ணீர் கேட்டால், தமிழ்நாட்டுப் பதிவு எண் கொண்ட ஊர்திகளை அடித்து நொறுக்குவது; முல்லைப் பெரியாற்றில் தமிழ்நாட்டுக்கு சாதகமாகத் தீர்ப்பு வந்தால் கேரளாவில் உள்ள தமிழ்ப் பெண்களிடம் பாலியல் அத்துமீறல் நடத்தித் தங்கள் வீரத்தைக் காட்டுவது; தமிழர்கள் கூலிக்குச் செம்மரம் வெட்டினால் அவர்களையே வெட்டிக் கொன்று போடுவது; இவைதாம் தமிழர்களிடம் பக்கத்து மாநில மக்கள் காலங்காலமாக நடந்து கொள்ளும் விதம். ஆனால், இத்தனைக்கும் பதிலடியாக ஒருமுறையாவது தமிழர்கள் இங்குள்ள அண்டை மாநிலத்தவர்கள் மீது ஒரு துரும்பையாவது கிள்ளிப் போட்டதுண்டா?...