‘காற்றுக்கென்ன
வேலி’, ‘உச்சிதனை முகர்ந்தால்’ என்று ஈழப் பிரச்சினையைப் பற்றி, குறிப்பாக விடுதலைப்புலிகளைப்
பற்றித் தமிழில் உண்மையான திரைப்படங்களை வழங்கிய துணிச்சல் மிக்க இயக்குநர்
புகழேந்தி தங்கராஜ் அவர்கள்! தனித் தமிழீழத் திருநாடு கேட்டுத் தமிழ்நாடு முழுக்க
மாணவர்கள் போராடிக் கொண்டிருந்த அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வேளையில் அவரிடம்
நான் பணியாற்றும் ‘நிலாச்சாரல்’ மின்
இதழுக்காகக் கைப்பேசி வழியே நேர்காணல் ஒன்று மேற்கொண்டேன். அப்பொழுதைய
சூழ்நிலையில் இதழால் அதை முழுமையாக வெளியிட முடியவில்லை. எனவே, இதோ என்
வலைப்பூவில் அதன் முழுமையான வடிவம்...
ஈழப்
பிரச்சினையை வைத்துத் தமிழில் தீவிரமான திரைப்படங்களை வழங்கியவர் தாங்கள்தான்.
இப்பொழுது தமிழீழத்துக்காக எழுச்சி பெற்றிருக்கும் தமிழ்நாட்டு மாணவர்
போராட்டங்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
இப்பொழுது
ஏற்பட்டிருக்கிற மாணவர் போராட்டங்களை ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பே
எதிர்பார்த்தவர்களில் நானும் ஒருவன். இப்பொழுது ஏற்பட்டிருக்கும் இந்த
மாற்றத்துக்குப் பரவலாக நம்பப்படுகிற மாதிரி, தம்பி பாலச்சந்திரனின் முகம், அந்தச் சிறுவர்களுக்கு இழைக்கப்பட்ட
கொடுமை - அது ஒரு பெரிய காரணமாக இருக்கிறது. தமிழ் மக்கள் எளிதில்
உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள். தமிழ் மாணவர்கள் இந்த (பாதிக்கப்பட்ட) குழந்தைகளின்
முகத்தைப் பார்த்து இவ்வளவு எழுச்சியை, எதிர்ப்பை வெளியிட்டிருப்பது சரியான நேரத்தில் காலம்
கருதிச் செய்யும் செயல் என்றுதான் நான் நினைக்கிறேன். ஒரு இலட்சத்து இருபதாயிரம்
விடுதலைப் போராளிகள் இந்த இனப்படுகொலையில் இறந்ததாக ஒரு கணக்கு இருக்கிறது. அந்த
ஒரு இலட்சத்து இருபதாயிரம் விடுதலைப்புலிகளுடைய, போராளிகளுடைய உயிர்த் தியாகத்தால் கூட எழுப்ப முடியாத
ஒரு மிகப்பெரிய எழுச்சியை இந்தப் பன்னிரண்டு வயதுக் குழந்தையுடைய உருவம், அந்தக் குழந்தையுடைய பார்வை
எழுப்பியிருக்கிறது. (குரல் கம்முகிறது).
தம்பி
பாலச்சந்திரன் இறந்து விட்டான் என்பது போன ஆண்டே தெரியும். இருந்தால்கூட, அப்பொழுது அந்தக் குழந்தையுடைய விழிகளை
நாம் பார்க்கவில்லை. இப்பொழுது நாம் பார்க்கும் அந்தப் பார்வையில் இருக்கும்
ஒளியும்,
நம்பிக்கையும் இரண்டு நிச்சயங்களை நமக்கு உணர்த்தியிருக்கின்றன. ஒன்று, 19ஆம் தேதி கொல்லப்பட்ட பாலச்சந்திரனின்
முகத்தில் 17ஆம் தேதி தன் தந்தை கொல்லப்பட்டதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்பது
பெரிதும் குறிப்பிடத்தக்கது. அது நமக்கு ஒரு வரலாற்று உண்மையை, சிங்கள அரசாங்கம் திட்டமிட்டுச் செய்து
வருகிற ஒரு பிரச்சாரம் எவ்வளவு பொய் என்பதை நமக்கு உணர்த்துவதாக இருக்கிறது.
அடுத்ததாக, அந்த
விழிகளில் காணப்படக்கூடிய ஒளி நம் மாணவர்களை உசுப்பி எழுப்பியிருக்கிறதென
நம்புகிறேன்.
நன்றி
ஐயா! புகைப்படத்தில் பாலச்சந்திரனின் கண்களில் இருக்கும் ஒளியை வைத்து, தமிழினத் தலைவர் மேதகு.பிரபாகரன் அவர்கள்
இன்னும் இருக்கிறார் என்பதை நாம் அறியக்கூடும் என்ற மிக முக்கியமான ஒரு தகவலை
நீங்கள் இந்தப் பதில் மூலம் தமிழ் மக்களுக்குச் சொல்லியிருக்கிறீர்கள். இதுவரை
யாரும் இந்தக் கோணத்தைச் சொல்லவில்லை. அடுத்ததாக ஐயா, இது தாமதமான போராட்டம் எனத் தனிமனிதர்கள்
முதல் ஊடகத்தினர் வரை பலரும் தொடர்ந்து கூறி வருகிறார்கள். அது பற்றி உங்கள்
கருத்து...?
இல்லை
Better late than
never! சரியான நேரத்தில் மாணவர்கள்
களமிறங்கியிருக்கிறார்கள். 2007 வரை, உலகம் முழுக்க இருக்கிற தமிழ் இளைஞர்களில், குறிப்பாகத் தமிழ் மாணவர்களில்
பெரும்பாலானோர் விடுதலைப்புலிகள் இயக்கத்தையும் அதன் தலைவர் பிரபாகரனையும் பற்றித்
தவறான புரிதலுடன் இருந்தார்கள். புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தின் பிள்ளைகளே கூடத்
தங்கள் தேசிய இனத் தலைவனுடைய உண்மையான முகத்தைப் புரிந்து கொள்ளாமல், ஊடகங்கள் மூலம் பரப்பப்பட்ட பொய்ப்
பிரச்சாரங்களை நம்பி இருந்தார்கள். இது மறுக்க முடியாத உண்மை! தங்களுடைய தேசியத்
தலைவனைப் பற்றி அவர்கள் புரிந்துகொண்டதே 2008-09க்குப் பிறகுதான்; அதுவும், குறிப்பாக முத்துக்குமாருடைய மரணத்துக்குப் பிறகுதான்
அந்த மாணவர்கள் சிலிர்த்து எழுந்து நின்று “எங்களுடைய தேசியத் தலைவர் பிரபாகரன்” என்று பிரகடனப்படுத்தினார்கள். இது 2009
பிப்ரவரியில் நடந்தது. அதற்குக் காரணம் என்னவென்றால், அதற்கு முன்பு அவர்கள் பிரபாகரனைப் பற்றி
ஊடகங்கள் பரப்பியிருந்த பொய்ப் பிரச்சாரத்தைத்தான் நம்பியிருந்தார்கள். குறிப்பாக, ஆங்கில ஊடகங்களை. ஆங்கில ஊடகங்கள்
மூலமாகத்தான் அவர்களுக்குச் செய்தி போய்ச் சேர்ந்தது. அவர்கள் பிரபாகரனைத்
தீவிரவாதி என்றுதான் ஆங்கில ஊடகங்கள் மூலமாகத் தெரிந்து வைத்திருந்தார்கள்.
2008க்குப் பிறகுதான், தங்கள்
மண்ணில் மிஞ்சியிருக்கிற தங்கள் உறவுகளுக்குப் பாதுகாப்பாகத் தங்கள் உயிரையும்
கொடுக்கத் தயாராக இருந்த போராளிகளுடைய தலைவன்தான் பிரபாகரன் என்பது, 2009க்குப் பிறகுதான் அந்தக்
குழந்தைகளுக்கே தெரிய வந்தது. அதற்குப் பிறகுதான் தங்கள் தலைவரைப் பற்றித் தவறாகப்
புரிந்து கொண்டிருந்த அந்த மாணவர்கள் “எங்கள் தேசியத் தலைவர் பிரபாகரன்” என்று சொல்லி, பிரபாகரனின் எழுத்துக்களைத் தங்கள்
உணர்வில் தாங்கி,
புலிகளுடைய கொடிகளுடன் வலம் வரத் தொடங்கினார்கள். இது 2009இலேதான் நடந்தது. ஆக, புலம் பெயர்ந்த தமிழ்ச் சொந்தங்களுடைய
குழந்தைகளே அப்படி இருக்கையில், இங்கே இருக்கிற தமிழ் மாணவர்களுக்கு அந்த எழுச்சி ஒரு
நான்கு ஆண்டுகள் கழித்து ஏற்பட்டிருப்பது என்பது தாமதமானது என நினைக்க முடியாது!
இப்பொழுது ஏற்பட்டிருக்கிற இந்த மாணவர் எழுச்சி உலகெங்கும் தமிழ் உணர்வை
நிமிர்த்தி நம்பிக்கையோடு உட்கார வைத்திருக்கிறது. இன்றைக்குத்தான் முதன்முறையாகத்
தமிழ்நாட்டின் வீதிகள் எங்கும் புலிகளுடைய கொடியும், பிரபாகரன் என்கிற பெயரும், “தமிழினத்தின் அடையாளம் பிரபாகரன்!
தமிழீழத்தின் அடையாளம் விடுதலைப்புலிகள்”என்கிற
முழக்கமும் இப்பொழுதுதான் கேட்கத் தொடங்கியிருக்கிறது. எனவே, இது தாமதமானது என நான் நினைக்கவே இல்லை.
சரியான நேரத்தில் மாணவர்கள் களமிறங்கியிருக்கிறார்கள்.
சரி
ஐயா! அடுத்து, மாணவர்களில்
பலர், ‘தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பையும், இலங்கை மீது சுதந்திரமான பன்னாட்டு
விசாரணையையும் கோரி இந்தியா தீர்மானம் கொண்டு வரவேண்டும்’ எனப் போராடுகிறார்களே, இது சரியா?
ஒன்றை
மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்! மாணவர்கள் போராடத் தொடங்கியது ‘அமெரிக்கத் தீர்மானம் மோசடி’ என்று சொல்லித்தான். ஊடகங்கள்
கண்முன்பாகத்தான் மாணவர்கள் அந்தத் தீர்மானத்தை எரித்தார்கள். எரித்துவிட்டு
மாணவர்கள் சொன்னார்கள் “அமெரிக்கத்
தீர்மானம் மோசடி,
இந்தியாவே தீர்மானம் கொண்டு வர வேண்டும்” என்று. ஆனால், நம் ஊடகங்கள் கடைசி நிமிடம் வரை ‘அமெரிக்கத் தீர்மானத்தை ஆதரிக்கக் கோரி
மாணவர்கள் உண்ணாவிரதம்’
என்று செய்தி போட்டார்களே, ஏன்? இந்த ஊடகங்களுக்குத் தெரியாதா? அவர்கள் படப்பிடிப்புக் கருவிக்கு
முன்பாகத்தானே மாணவன் அமெரிக்கத் தீர்மானத்தை எரிக்கிறான்? ஆக, மாணவர்கள் வெளிப்படையாக அறிவித்த பின்பும் ஊடகங்கள்
தவறாகச் சித்தரிக்க முயன்றார்கள். மாணவர்கள் எழுப்பிய கோரிக்கை, இந்திய நாடாளுமன்றத்திலே பதிவு
செய்யப்பட்ட கோரிக்கை! அமெரிக்கத் தீர்மானம் மோசடி என்று ஆன பிறகு, இந்தியாவே ஒரு தீர்மானத்தைத் தனியாகக்
கொண்டு வர வேண்டும் என்று இந்திய நாடாளுமன்றத்திலே சொல்லப்பட்டதும், பின்னர் மாணவர்கள் அதை வலியுறுத்தியதும்
இந்தியாவின் துரோக முகத்தை அம்பலப்படுத்துவதற்காக, இந்தியாவுக்கு நெருக்கடி கொடுப்பதற்காகச்
சொல்லப்பட்ட வார்த்தைகள். இந்தியா அப்படி ஒரு தீர்மானத்தைக் கொண்டு வராது என்பது
மாணவத் தம்பிகளுக்கு நிச்சயமாகத் தெரியும்! இருந்தாலும், இந்தத் துரோக இந்தியாவை மேலும்
அம்பலப்படுத்த வேண்டும் என்பதற்காக அந்தக் கோரிக்கையை முன்வைத்தார்கள். அது
எப்படிப்பட்ட தீர்மானமாக இருக்க வேண்டும் என்பதிலும் மாணவர்கள் தெளிவாக
இருந்தார்கள். போர்க்குற்றம் என்பதோடில்லை, நடந்தது இனப்படுகொலை; நடந்த இனப்படுகொலையை உலக நாடுகள் கண்டிக்க வேண்டும்; அந்த இனப்படுகொலையைப் பற்றிச் சர்வதேச
நீதி விசாரணை வேண்டும் என்று இந்தியா தனியாகத் தீர்மானம் கொண்டு வர வேண்டும்
என்பது மாணவர்களின் கோரிக்கையாக இருந்தது. இதெல்லாம் இந்தியாவின் துரோக முகத்தை
அம்பலப்படுத்துகிற மாணவர்களின் நடவடிக்கை. அந்த நடவடிக்கையால்தான் இன்று இந்தியா
முழுமையாக அம்மணமாகி நிற்கிறது தமிழ்ச் சமூகத்துக்கு எதிரே!
மிகச்
சரியான வார்த்தை ஐயா! ஆனால், ஈழத் தமிழர்களுக்காக இந்தியா இதுவரை ஒரு
துரும்பையும் கிள்ளிப் போட்டதில்லை. மாறாக, அவர்களை அழிக்கத்தான் உதவியிருக்கிறது.
இப்பொழுதும்,
அமெரிக்கா கொண்டு வந்த இந்தத் தீர்மானத்தின் பல அம்சங்களை இந்தியா தலையிட்டு
இலங்கைக்கு ஆதரவாகத் திருத்தி விட்டது. தீர்மானத்தில் தொடக்கத்தில் இருந்த
அளவுக்கு வீரியம் கூட வாக்கெடுப்பின்பொழுது இல்லை. இந்நிலையில் மாணவர்களின்
கோரிக்கைப்படி,
ஒருவேளை,
இந்தியா தானே ஈழத் தமிழர்களுக்காக ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தால் அது எப்படி
இருக்கும் என நினைக்கிறீர்கள்?
அத்தைக்கு
மீசை முளைத்தால் சித்தப்பாவா? இந்தியா என்பது வெட்கங்கெட்ட, மானங்கெட்ட ஒரு நாடு என்பது
உறுதியாகிவிட்டது. நான்