தமிழ்நாட்டில் தேசியக் கட்சி ஒன்று - அதுவும் பா.ஜ.க - ஆட்சிக்கு வருவது என்பதெல்லாம் தமிழிசை சௌந்தர்ராஜனின் கனவில் கூட நடக்காத கதை என்பது அனைவரும் அறிந்ததே! ஆனால், அதற்காகத் தமிழ்நாட்டில் தேசியக் கட்சிகளுக்குச் செல்வாக்கே இல்லை எனப் பொருளாகாது. அதிலும் கருணாநிதியும் ஜெயலலிதாவும் அடுத்தடுத்து அளித்து வரும் ‘பொற்கால’ ஆட்சிகளால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள வெறுப்பும், நதிநீர்ப் பங்கீடு போன்ற அண்டை மாநிலங்களுடனான பிரச்சினைகளில் இவர்கள் அடைந்துள்ள முழுத் தோல்வியும், இதே இடத்தில் தேசியக் கட்சி ஒன்று இருந்திருந்தால் நம் பிரச்சினைகள் தீர்ந்திருக்குமோ என்கிற எண்ணத்தை மக்களிடையே அண்மைக் காலமாகத் தளிர் விட வைத்துள்ளன. இந்த அபாயகரமான மூட நம்பிக்கையை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டியது காலத்தின் கட்டாயம். எனவே, பா.ஜ.க-வுக்கு வாக்களிப்பதில் உள்ள ஆபத்துகளை மொத்தமாகப் பார்ப்போம்.
மாற்றுத் தேர்வா பா.ஜ.க?

















