.

புதன், ஏப்ரல் 01, 2026

வீட்டிலிருந்தே வாக்களிக்க வேண்டுமா? - மாற்றுத்திறனாளிகள், முதியோர் ஆகியோருக்கு முக்கிய அறிவிப்பு

E.Bhu.Gnaanapragaasan with Postal Ballot form

 📢 அன்புக்குரிய மாற்றுத்திறனாளித் தோழர்களே!


உங்களுக்கான அஞ்சல் வாக்குப் படிவத்தைத் தாக்கல் செய்து விட்டீர்களா? இதோ நான் செய்துவிட்டேன், பாருங்கள்! 😎

மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் போன்றோர் வீட்டிலிருந்தே அஞ்சல் வழியில் வாக்களிப்பதற்கான வசதி 2019ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த வசதியைப் பெற நாம் நமது பகுதியின் வாக்குச்சாவடி நிலை அலுவலரைத் (BLO) தொடர்பு கொள்ள வேண்டும். 🤙🏽

அவரை எப்படித் தொடர்பு கொள்வது? 📞

அண்மையில் நாம் அனைவரும், வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தத்துக்காக (SIR) நம் விவரங்களைப் படிவத்தில் நிரப்பிக் கொடுத்தோம் இல்லையா? அப்பொழுது நம் ஒவ்வொருவருக்கும் இரண்டு படிவங்கள் வழங்கப்பட்டன என்பது உங்களுக்கு நினைவிருக்கும் என நினைக்கிறேன். அவற்றுள் ஒரு படிவத்தை நிரப்பி அரசிடம் தாக்கல் செய்தோம். இன்னொரு படிவத்தை ஆதாரத்துக்காக நாமே வைத்துக் கொண்டோம். அந்தப் படிவத்தில் தொடக்கத்திலேயே - தாளின் உச்சியில் - அவரவர் பகுதியின் வாக்குச்சாவடி நிலை அலுவலர் எண் குறிப்பிடப்பட்டிருக்கும்.

அந்த எண்ணைத் தொடர்பு கொண்டு, நீங்கள் 40%க்கு மேல் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளியாக இருந்தால் அல்லது 85 வயதுக்கு மேற்பட்ட முதியவராக இருந்தால் அஞ்சல் வாக்களிக்க விரும்புவதாகச் சொல்லி அதற்கான 12D படிவத்தைக் கேளுங்கள்!

நான் கேட்டேன். எங்கள் பகுதி அலுவலர் வீட்டுக்கே வந்து படிவத்தைக் கொடுத்து, நிரப்பிய பின்னர் வீட்டுக்கே வந்து வாங்கிக் கொண்டும் சென்று, படிவத்தை உயரலுவலரிடம் தாக்கல் செய்த பின்னர் என்னைக் கைப்பேசியில் அழைத்து அதைத் தெரிவிக்கவும் செய்தார். அவருக்கு என் அன்பு நன்றி! 🥰

நீங்களும் படிவம் கேட்டு வாங்குங்கள்!
உங்கள் வாக்கைத் தவறாமல் பதிவு செய்யுங்கள்! 👆🏽

வாக்களிப்பது நம் உரிமை மட்டுமில்லை
கடமையும் கூட! 🙏🏽

மேலும் விவரங்களுக்கு இந்தக் காணொளியைப் பாருங்கள் - https://youtu.be/38aDwWHD4Vs?si=sP0lg1LTOS5rR-uU

⚠️ முக்கியக் குறிப்பு: தோழர்களே! இதற்கான கடைசி நாள் ஏப்ரல்3️⃣. அதற்குப் பின் செய்ய முடியாது. ஏப்ரல் 23 அன்றுதானே தேர்தல் என நினைத்துப் பொறுமையாக இருந்து விடாதீர்கள்!

இந்தப் பதிவைப் பகிர்ந்து முதியோர், மாற்றுத்திறனாளிகள் போன்றோருக்கு நீங்களும் உதவலாமே! 

என் புதினத்தை வாங்க

என் புதினத்தை வாங்க
மேலே உள்ள படத்தை அழுத்துங்கள்
பதிவுகளை உடனுக்குடன் பெற

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

வாட்சாப் தடத்தில் (Channel)...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு (1) 13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (9) அஞ்சல் வாக்கு (1) அஞ்சலி (22) அணு உலை (2) அப்பா மகள் பாசம் (1) அம்பிகை செல்வகுமார் (1) அம்மணம் (1) அமேசான் (6) அயல்நாட்டுத் தமிழர் (1) அரசியல் (91) அழைப்பிதழ் (7) அற்புதம்மாள் (2) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (43) ஆசிரியர் (1) ஆட்சென்ஸ் (1) ஆணவப்படுகொலை (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இங்கிலாந்து (1) இசுரேல் (2) இட ஒதுக்கீடு (4) இணையம் (19) இந்தித் திணிப்பு (3) இந்தியா (25) இரசியா (1) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இலக்கணம் (3) இலங்கை (1) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (23) இனம் (46) ஈழம் (44) உக்கிரேன் (1) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (24) எழுவர் விடுதலை (1) ஐ.நா (5) ஒருங்குறி (1) கடவுள் (1) கதை (4) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (12) கலைச்சொல்லாக்கம் (1) கவிஞர் தாமரை (1) கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் (2) கவிஞர் ரேவதி (1) கவிதை (19) காங்கிரஸ் (6) காசா (2) காணொளி (8) காதல் (3) காந்தியம் (1) கார்த்திக் சுப்புராஜ் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (5) கிரந்தம் (1) கீச்சுகள் (2) கீழடி (2) குழந்தைகள் (10) குறள் (2) கூகுள் (2) கையொப்பம் (2) கோட்பாடு (9) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (16) சந்திப்பு (1) சமயம் (12) சமற்கிருதம் (2) சமூகநீதி (4) சரிதா (1) சாதி (11) சிங்களர் (1) சித்திரக்கதைகள் (1) சிவகார்த்திகேயன் (1) சிறுவர் இலக்கியம் (5) சீமான் (7) சுற்றுச்சூழல் (6) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (3) சொத்துக்குவிப்பு (1) தங்கிலீஷ் (1) தந்தைமை (1) தமிழ் (37) தமிழ் தேசியம் (5) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (20) தமிழர் (48) தமிழர் பெருமை (20) தமிழறிஞர் முத்துநிலவன் (1) தமிழின் சிறப்பு (4) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (2) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (6) தாலி (1) தி.மு.க (11) திரட்டிகள் (4) திராவிடம் (9) திருமுருகன் காந்தி (1) திரைப்படம் (2) திரையுலகம் (10) திறனாய்வு (1) தினகரன் (1) துருவ் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (10) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தேர்தல்-2021 (2) தேர்தல்-2026 (1) தொலைக்காட்சி (2) தொழில்நுட்பம் (10) தோழர் தியாகு (1) நட்பு (13) நிகழ்வுகள் (5) நிர்மலா சீதாராமன் (1) நினைவேந்தல் (10) நீட் (5) நூல்கள் (11) நூற்றாண்டு (1) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (3) பதிவர் உதவிக்குறிப்புகள் (10) பதிவுலகம் (24) பராசக்தி (2) பா.ம.க (2) பா.ஜ.க (31) பார்ப்பனியம் (14) பாலஸ்தீனம் (2) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (10) பீட்டா (1) புதிய வேளாண் சட்டம் (1) புதினம் (1) புறநானூறு (1) புனைவுகள் (11) பெண்ணியம் (7) பெரியார் (3) பேரறிவாளன் (2) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (6) பொதுவுடைமை (2) பொதுவுடைமைக் கட்சி (2) பொருளாதாரம் (2) பொழிவு (2) போட்டி (1) போர் (3) போராட்டம் (10) ம.ந.கூ (2) மகான் (1) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (11) மடோன் அஷ்வின் (1) மணிவண்ணன் (1) மதிப்புரை (6) மதுவிலக்கு (2) மருத்துவம் (7) மன்சூரா பீவி (1) மாநாடு (1) மாநாடுகள் (1) மாய இயல்பியம் (2) மாவீரர் நாள் (3) மாற்றுத்திறனாளிகள் (3) மிஷ்கின் (1) மீம்ஸ் (7) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (3) மேனகா காந்தி (1) மொழியரசியல் (4) மொழியறிவியல் (3) மோடி (11) யுவர் கோட் (1) யோகிபாபு (1) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) ராஜீவ் படுகொலை (1) வரலாறு (25) வாழ்க்கைமுறை (20) வாழ்த்து (7) வானதி சீனிவாசன் (1) விக்ரம் (1) விடுதலை (6) விடுதலைப்புலிகள் (13) விருது (1) விஜய் (1) விஜய் சேதுபதி (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (7) வை.கோ (6) வைரமுத்து (2) ழகரம் (1) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டாலின் (1) ஸ்டெர்லைட் (2) ஹமாஸ் (2) ஹீலர் பாஸ்கர் (1) Bhagavath Gita (1) BJP (1) Casteism (1) Cauvery (1) Dalit (1) Genocide (3) Hindu (1) Karnataka (1) Magical Realism (1) Manisha (1) Modi (1) Notion Press (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (2) Religion (1) Scheduled Castes (1) Sexual Harassment (1) Tamilnadu (1) Tamils (1) Tanglish (1) Unicode (1) Unicode Consortium (1) UP (1) Women (1) Yogi Adityanath (1)

முகரும் வலைப்பூக்கள்