எப்படி இருக்கிறீர்கள் அனைவரும்?
கொரோனா ஊரடங்கு காரணமாக ஏற்பட்ட சில சிக்கல்களால் வெகு நாட்களாக வலைப்பூப் பக்கம் வர முடியவில்லை. அனைவரும் நலமா?
இந்த ஊரடங்குக் காலக்கட்டத்தில் யுவர் கோட் எனும் புதிய ஒரு சமுக ஊடகத்தில் இணைந்தேன். நம் பதிவுலகின் குட்டிப் பதிவரும் நம் அனைவரின் பேரன்புக்குரிய பதிவுலக இணையர் மைதிலி - கஸ்தூரிரெங்கன் ஆகியோரின் மகளுமான நிறைமதிவதனா அவர்கள்தாம் இந்த ஊடகத்தை எனக்கு அறிமுகப்படுத்தினார்.
ஆம்! நான் அவரை வலைப்பூ எழுத அழைத்தது போய், அவர் என்னை சமுக ஊடங்களுக்கு எழுத அழைக்கும் காலம் வந்து விட்டது. நாம் பார்த்த குட்டிப் பிள்ளைகள் வளர்ந்து விட்டார்கள்! 💗
நிறைமதியின் அன்பு அழைப்புக்காகத்தான் யுவர் கோட் பயன்படுத்தத் தொடங்கினேன். ஆனால் தொடங்கிய பின் எனக்கே மிகவும் பிடித்துப் போய்விட்டது. துவிட்டர் (twitter) போலச் சிறு சிறு பதிவுகளை எழுத அருமையான களம்! வெறும் பனுவல் (text) பதிவுகள் அல்ல; படக்கோப்புகளாகவே (images) பதிவுகளை வெளியிடலாம்! அதற்கான படங்களையும் இந்தக் குறுஞ்செயலியே (app) இலவயமாக வழங்குகிறது. நீங்கள் இணையத்தில் எழில் கொஞ்சும் படங்களின் பின்னணியிலான கவிதைகள், துணுக்குகள், மேற்கோள்கள் (quotes) போன்றவற்றைப் பார்த்திருப்பீர்கள். அப்படிப்பட்ட படங்களை நாமும் ஒரே நிமிடத்தில் உருவாக்கிக் கொள்ள இந்தக் குறுஞ்செயலி உதவுகிறது.
இனி நாமும் நம் கவிதைகள், மேற்கோள்கள் போன்றவற்றை அழகிய படக்கோப்புகளாக உருவாக்கி நம் பெயருடனே இணையத்தில் பகிரலாம்; வாட்சப் நிலைப்பாட்டுப் படங்களாகக் காட்சிப்படுத்தலாம். இதில் உள்ள ஒத்திசைவு (Collabaration) எனும் வசதி மூலம் நண்பர்களுடன் இணைந்து பதிவு எழுதலாம். ஒரு பதிவுக்கான தலைப்பைக் கொடுத்து அது பற்றி மற்றவர்களை எழுதத் தூண்டலாம். இதன் மூலம் மற்ற எந்த சமுக ஊடகத்தையும் விட இதில் நண்பர்களைச் சேர்த்தல் மிக எளிது. தவிர, நன்றாக எழுதும் நண்பர்களுக்கு நாம் சான்றுரை (testimonial) வழங்கி ஊக்குவிக்கும் வசதியும் உண்டு.
இப்படிப் பல்வேறு வகைகளிலும் மிகவும் புதுமையாக இருக்கிறது இந்த யுவர் கோட்! நீங்களும் பயன்படுத்திப் பாருங்கள்!
இதோ யுவர் கோட்டில் நான் எழுதிய சில கவிதைகள் இங்கே உங்கள் பார்வைக்கு! 👇
தொடர்புடைய பதிவுகள்:
✎ கோடை விடுமுறைப் பள்ளித் தோட்டங்கள்
✎ அடுத்து...?
பதிவுகளை உடனுக்குடன் பெறக் கீழ்க்காணும் பொத்தானைச் சொடுக்கி
வாட்சாப் தடத்தில் (Whatsapp Channel) இணையுங்கள்!!
அனைத்தும் அருமை...
பதிலளிநீக்குமிக்க நன்றி ஐயா! வழக்கம் போல் நீங்களே முதல்! மிக்க மகிழ்ச்சி!
நீக்குஆஹா! நீங்க எழுதுப்போது மட்டும் எப்படித்தான் செய்திகளுக்கு இவ்வளவு துல்லியமும் தெளிவும் வந்துவுடுகுறதோ!!
பதிலளிநீக்குஅப்படியா சொல்கிறீர்கள்! மிக்க நன்றி சகா!
நீக்குநீங்கள் உங்கள் யுவர் கோட் கவிதைகளைப் பதிவாக வெளியிட்டதும் நான் வேறு ஒரு பதிவு எழுத நினைத்தேன். ஆனால் பதிவுலகில் அடுத்தடுத்து இருவர் ஒரே ஊடகத்தைப் பற்றி எழுதும்பொழுது அதன் மீது மக்கள் கவனம் திரும்ப வாய்ப்புண்டு என்பதால் இதோ நானும்! :-)
அருமை.
பதிலளிநீக்குமிக்க நன்றி! அடுத்த முறை உங்கள் கருத்தைப் பெயருடன் பதிந்தால் மகிழ்வேன்.
நீக்குwhy certain gents do not have meesai. english followup? ladies
பதிலளிநீக்குஎன்ன சொல்ல வருகிறீர்கள் எனப் புரியவில்லை.
நீக்குThanks For Sharing The Amazing content. I Will also share with my
பதிலளிநீக்குfriends. Great Content thanks a lot.
positive thinking stories tamil
நன்றி! அடுத்த முறை உங்கள் கருத்தைப் பெயருடன் பதிந்தால் மகிழ்வேன்.
நீக்குஅருமை... யுவர் கோட் செல்லும் வழிமுறை தெரிந்தால் நானும் எட்டி பார்ப்பேன்...
பதிலளிநீக்குபாராட்டுக்கு நன்றி நண்பரே!
பதிலளிநீக்குயுவர்கோட் ஒரு கைப்பேசிக் குறுஞ்செயலி. நீங்கள் ஆன்டிராய்டு பயனராக இருப்பின் கூகுள் பிளேசுடோரிலும் (Google Play Store) ஆப்பிள் பயனராக இருப்பின் ஆப்சுடோரிலும் (App Store) நுழைந்து ‘Your qoute’ எனத் தேடி இந்தக் குறுஞ்செயலியைப் பதிவிறக்கிக் கொள்ளலாம். பிறகு இதைத் திறந்து உங்கள் கூகுள் கணக்கு அல்லது பேசுபுக் (facebook) கணக்கு என ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தி உள்நுழைந்து (login) கொள்ளலாம். உள்நுழைந்த பின் திரையின் அடிப்பகுதியில் ஐந்து தேர்வுகள் (options) இருக்கும். அதில் நடுவில் இருக்கும் தேர்வான + குறியீட்டைப் பயன்படுத்தி நீங்கள் உங்கள் முதல் மேற்கோளைப் (quote) பதிவிட முடியும். பயன்படுத்திப் பாருங்கள்! எளிதுதான். வாழ்த்துக்கள்!
This is very helpful information. Thanks for sharing your knowledge.electronics devices
பதிலளிநீக்குThis is very helpful information. Thanks for sharing your knowledge.electronics devices
பதிலளிநீக்குமிக்க நன்றி! ஆனால் தமிழ்த் தளமான இதில் உங்கள் பாராட்டை அடுத்த முறை தமிழில் தெரிவித்தால் இன்னும் மகிழ்ச்சியாக இருக்கும்.
நீக்கு