துரத்தி வரவாண்டுகள் இல்லாமல்பட்டாம்பூச்சிகள்...பறித்துச் சூடிக் கொள்ளும்பாவாடைத் தோழிகளைக் காணாமல்வாடித் தொங்குகின்றனநந்தியாவட்டையும் செம்பருத்தியும்...பாட்டும் கூத்தும்ஆட்டமும் அமர்க்களமுமாய்அவர்களுடன் கழித்த நாட்களைஅசைபோட்டபடி நின்றிருக்கிறதுகாற்று இறங்கியபள்ளிப் பேருந்து...பொன்னாய்க் காய்ந்தஇலைகளைக் கூட உதிர்க்காமல்ஆயிரம் ஆயிரம் இலைக் கண்களால்பார்வைக்கு எட்டிய தொலைவு வரைவிழி வைத்துக் காத்திருக்கிறதுஎல்லோரையும் விடப் பெரிதானவாத மரம்...விடுமுறையில் ஒருவேளைஅவர்கள்வேடந்தாங்கல் வரக்கூடும் என்றுஅங்கே போகவழி விசாரித்துக் கொண்டிருக்கின்றனகிளிகளும் மைனாக்களும் தவிட்டுக் குருவிகளும்...பள்ளி திறக்கும்நாள்கிழமைஎதுவும் தெரியாதபள்ளிக்கூடங்களின் தோட்டத்து உயிர்களுக்குஇப்படித்தான் கழிகிறதுஒவ்வொரு விடுமுறைக் காலமும்என்பதையார் எடுத்துச் சொல்வதுவிடுமுறைக்குப் பின்பள்ளி செல்ல அழும்குழந்தைகளுக்கு...?
பதிவு பிடித்திருந்தால் கீழ்க்காணும் வாக்குப்பட்டைகள் மூலம் மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்களேன்! கூடவே, உங்கள் செம்மையான கருத்துக்களுக்கும் காத்திருக்கிறேன்! தமிழில் எழுத வசதியில்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது கீழே 'தமிழ்ப் பலகை'! தனிப்பட ஏதும் தெரிவிக்க விரும்பினால், அதற்கு அடுத்து உள்ள 'அணுக' படிவத்தைப் பயன்படுத்தலாம்!
பதிவுகளை உடனுக்குடன் பெறக் கீழ்க்காணும் பொத்தானைச் சொடுக்கி
வாட்சாப் தடத்தில் (Whatsapp Channel) இணையுங்கள்!!
03. 07. 2011 ல் எழுதிய கவிதை அருமை நண்பரே... தாமதமாக வாழ்த்தியமைக்கு காரணம் பதிவே இன்றுதானே...
பதிலளிநீக்குபாராட்டுக்கு மிக்க நன்றி ஐயா! தங்கள் வாழ்த்துதான் முதலாவதே!
நீக்குதமிழ் மணம் (க)
பதிலளிநீக்குவாக்குக்கு நன்றி ஐயா!
நீக்குஉண்மை...
பதிலளிநீக்குகூட்டுக் குடும்பம் போயே போச்சி...!
ஐயா! இது குழந்தைகள் இல்லாத பள்ளிக்கூடம் எப்படி வெறிச்சோடி இருக்கும் என்பதைக் காட்சிப்படுத்தும் பதிவுதான். கூட்டுக் குடும்பம் பற்றி நான் இதில் ஏதும் கூறவில்லை. ஆனால், "யார் எடுத்துச் சொல்வது" என்கிற வரியை நீங்கள் அந்தக் கோணத்தில் எடுத்துக் கொண்டிருப்பது வியப்பாக இருக்கிறது. நன்றி!
நீக்குஎம் துறையோடு தொடர்புடைய பதிவென்பதால் ஆழந்தொட்டு ரசிக்க முடிந்தது.
பதிலளிநீக்குமாணவர் இல்லாமல் வெறிச்சோடும் கல்விக் கூடங்கம் அவற்றின் சூழ் பொருட்கள் பற்றிய தங்களின் கவிதையின் காட்சிப்பாடு ரசனைக்குரியதாக அமைந்தது.
நன்றி.
தங்கள் குறிப்பார்ந்த பாராட்டுக்கு மிக்க நன்றி ஐயா!
நீக்கு