தீர்ப்பு தவறென்று முறையிட வந்த பெண்ணுக்கு நீதியும் வழங்கி, தவறான தீர்ப்புக்கு வருந்தி மன்னன் தன் உயிரையும் விட்ட இதே கண்ணகி மண்ணில்தான் தன் மகனுக்கு அளிக்கப்பட்ட தவறான தீர்ப்புக்கு நீதி வேண்டி 30 ஆண்டுகளுக்கும் மேலாய்ப் போராடி வருகிறார் இந்த ஈகத் தாய்
எந்தச் சட்டத்தின் கீழ் அந்த வாக்குமூலம் பெறப்பட்டதோ அந்தச் சட்டமே தவறு என்று திரும்பப் பெற்றுக் கொண்டு விட்டது அரசு!...
தவறான சட்டத்தின் கீழ் கைது செய்து... பொய்யான வாக்குமூலத்தைப் பதிவு செய்து... பொருந்தாத குற்றச்சாட்டின்படி தண்டனை அளித்து... எத்தனை கொடுமைகள்!!!
இவ்வளவுக்கும் பின்னர் உச்சநீதிமன்றமே சொன்ன பிறகும் இவர்களை விடுவிக்காமல் இருப்பது கொடுமையின் உச்சம் இல்லையா?
அந்தத் தாய் கேட்பதெல்லாம் என்ன? தன் கடைசி காலத்திலாவது சில ஆண்டுகள் மகனுடன் வாழ வேண்டும் என்பதுதானே? இத்தனை கொடுமைகளுக்கும் மாற்றாக இதையாவது செய்யக்கூடாதா இந்த அரசு?
பி.கு.: முப்பது ஆண்டுகளாகத் தன் மகனின் விடுதலைக்காகப் போராடி வரும் அற்புதம் அம்மாள் அவர்களின் குரலுக்கு வலுச் சேர்க்கும் வகையில் #StandWithArputhamAmmal எனும் சிட்டையின் கீழ் இன்று மக்கள் தங்கள் ஆதரவைத் தெரிவிக்கத் தமிழர் போராட்ட அமைப்பான மே பதினேழு இயக்கம் விடுத்த அழைப்புக்காக என் சிறிய பங்கு இது! 👆
படம்: நன்றி துவிட்டர்.
தொடர்புடைய பதிவு:
பதிவுகளை உடனுக்குடன் பெறக் கீழ்க்காணும் பொத்தானைச் சொடுக்கி
வாட்சாப் தடத்தில் (Whatsapp Channel) இணையுங்கள்!!
அருமை ஐயா...
பதிலளிநீக்குமிக்க நன்றி ஐயா! எப்படிப்பட்ட பதிவுக்கும் கருத்து தெரிவிக்கும் உணர்வும் துணிவும் கொண்டவராகத் திகழ்கிறீர்கள் நீங்கள்.
நீக்குநல்ல பதிவு. ஒரு தாயின் கண்ணொட்டத்தில்!
பதிலளிநீக்குஇந்தச் சர்ச்சைக்குரிய பதிவுக்கும் மனம் திறந்து ஆதரவளித்தமைக்கு மிக்க நன்றி துளசி ஐயா / கீதா அம்மணி! கணினிச் சிக்கல் காரணமாக நான் இத்தனை நாட்களாக வலைப்பூப் பக்கம் வர முடியவில்லை. இப்பொழுதுதான் உங்கள் கருத்து கண்டேன். மிகத் தாமத வெளியீட்டுக்குப் பொறுத்தருள்க!
நீக்குஅந்த கொடுமையின் உச்சத்தால் ...கரோனாவினால் அழியட்டும் ஆணவக்காரர்களின் கொட்டம்..
பதிலளிநீக்குஇந்தச் சர்ச்சைக்குரிய பதிவுக்கு உணர்ச்சி மிகு ஆதரவளித்தமைக்கு மிக்க நன்றி தோழரே! கணினிச் சிக்கல் காரணமாக நான் இத்தனை நாட்களாக வலைப்பூப் பக்கம் வர முடியவில்லை. இப்பொழுதுதான் உங்கள் கருத்து கண்டேன். மிகத் தாமத வெளியீட்டுக்குப் பொறுத்தருள்க!
நீக்கு