ஆம் நண்பர்களே, சூரியனையோ மாடுகளையோ அல்ல. உண்மையில் உழவர்களை வணங்கித்தான் நாம் இந்தப் பொங்கலை மட்டுமின்றி, இனி வரும் பொங்கல் திருநாட்களையும் கொண்டாட வேண்டும்! ஏன் எனக் கேட்கிறீர்களா? சொல்கிறேன்.
அந்தக் காலத்தில் வெயில், மழை போன்ற இயற்கைக் கூறுகளை நம்பி உழவுத்தொழில் செய்தோம்; அதனால் அவற்றின் மூலம் கிடைத்த விளைச்சலைச் சூரியனுக்குப் படையலிட்டு வணங்கினோம். ஆனால் இன்று நம் வேளாண்மை முழுக்க முழுக்கச் செயற்கைப் பாசன முறைகளை நம்பித்தான் இருக்கிறது. குறிப்பாக, காவிரி! அந்தக் காவிரி நீர் - காவிரி மேலாண்மை ஆணையம் - நமக்குக் கிடைக்கக் காரணம் நம் அய்யாக்கண்ணு ஐயா முதலான உழவர் பெருமக்களும் அவர்கள் நடத்திய தொடர் போராட்டங்களும்தாம்.