தமிழினத்தின் மீது காங்கிரசுக்கு இருப்பது போல் தனிப்பட்ட பகை எதுவும் பா.ஜ.க-வுக்கு இல்லை என்று நாம் நினைத்தோம். ஆகவே அவர்கள் ஆட்சிக்கு வந்தால், ஈழத் தமிழர்களுக்காகக் குரல் கொடுக்கும் அளவுக்கு முன்வராவிட்டாலும் குறைந்தது, தமிழர்கள் நாம் குரல் கொடுக்கும்பொழுது நம் குரல்வளையை நெரிக்காமலாவது இருப்பார்கள் என்று நம்பினோம். ஆனால், பா.ஜ.க-வோ காங்கிரசை விட ஒரு படி மேலே போய், அழிக்கப்பட்ட நம் மக்களுக்காக நாம் அஞ்சலி கூடச் செலுத்தக்கூடாது என்று நம்மைக் கழுத்தைப் பிடித்து சிறையில் தள்ளியது கடந்த ஆண்டு!
அதுவரையில், வெறும் நினைவுகூரல் சடங்குகளில் எனக்கு அவ்வளவாக நம்பிக்கை இருந்ததில்லை; அதனால்தான் ஒவ்வோர் ஆண்டு இனப்படுகொலை நினைவஞ்சலி நாள் பதிவிலும் அஞ்சலி செலுத்துதல் குறித்து மட்டுமில்லாமல், நம் ஈழத் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும் ஏதேனும் ஒரு திட்டத்தை முன்வைத்து எழுதுவேன்.
ஆனால், எப்பொழுது நடந்த இனப்படுகொலையை நாம் நினைவு கூர்வதே இவர்களுக்கு அச்சத்தை அளித்ததோ அப்பொழுதே புரிந்து விட்டது, நினைவேந்தல் என்பது வெறும் சடங்கு இல்லை என்று!
எப்பொழுது நாம் அந்த ஒரு மெழுகுத்திரியை ஏற்றுவது கூட இவர்களுக்குப் பொறுக்கவில்லையோ அப்பொழுதே தெரிந்து விட்டது அந்த வெப்பத்தை இவர்களால் பொறுக்க முடியவில்லை என்று!
ஏனெனில், இனப்படுகொலை நினைவு நாளில் நாம் ஏந்தும் வெளிச்சம் வெறும் சென்னைக் கடற்கரையோடு அடங்கி விடுவதில்லை; மறக்கடிக்கப்படும் அந்த மாபெரும் கொடுமை மீதான பேரொளியாய் எட்டுத் திக்கிலும் எதிரொளிக்கிறது!
ஏந்தியிருக்கும் நம் கைகளை மட்டும் அது சுடுவதில்லை, வாய்மையின் பெருநெருப்பாய் எங்கெங்கோ யார் யாருக்கோ சுடுகிறது!
காரணம், நாம் ஏற்றும் ஒவ்வொரு மெழுகுத்திரியும் தம் மக்கள் வாழ்வில் இருள் போக்கத் தம்மையே அழித்துக் கொள்ளும் விடுதலைப்புலிகளின் மறுவடிவமாய்த் திகழ்கின்றன!
அவற்றின் உச்சியில் ஒளிவிடும் ஒவ்வொரு சுடரும் ஈழ நிலப்பரப்பின் நெருப்பு வரைபடமாய்த் தகதகக்கின்றன!
கை நிறைய நாம் அள்ளித் தூவும் பூவிதழ்கள் ஒவ்வொன்றும் அந்த மண்ணெங்கும் சிதறிப் பெருகிய நம் தொப்புள் கொடி உறவுகளின் உதிரத் துளிகளாய்ப் பரவிப் படர்கின்றன!
இதற்காக நாம் அலையலையாய்க் கூடும் விதமும் இடமும் அதிகார மட்டத்தைத் தவிடு தின்ன வைத்த தைப்புரட்சிக்கு மீண்டும் கட்டியம் கூறுகின்றன!
ஆம்! நினைவேந்துதல் மட்டுமே இனப்படுகொலைக்கெதிரான நடவடிக்கை இல்லைதான்; ஆனால் அதுவும் ஒரு நடவடிக்கைதான்!
அஞ்சலி செலுத்துவதால் மட்டும் நடந்த கொடுமைக்குத் தீர்வு கிடைத்து விடாதுதான். ஆனால், தீர்வு கிடைக்க இதுவும் ஒரு வழிமுறைதான்!
அதுவும் “இன்றைய பா.ஜ.க-வுக்கும் அ.தி.முக-வுக்கும் அன்றைய காங்கிரசும் தி.மு.க-வுமே தேவலாம்” என மீண்டும் நம் மக்கள் சொந்தப் பிள்ளைகளின் இறைச்சி தின்று கொழுத்த விலங்குகளின் காலிலேயே விழ ஆயத்தமாகி விட்ட இன்றைய அரசியல் சூழலில், நடந்த அந்தப் பெருங்கொடூரத்தை மீளவும் நினைவூட்டும் இந்த ஒன்பதாம் ஆண்டு நினைவேந்தல் இன்றியமையாத விழிப்புணர்வுப் பொறி!
காங்கிரசோ, பா.ஜ.க-வோ, தி.மு.க-வோ, அ.தி.மு.க-வோ இந்திய தேசிய அமைப்பில் ஈழத் தமிழர்கள் குறித்த நிலைப்பாடு ஒன்றுதான் என்று பின்மண்டையிலடித்துப் புரிய வைக்கும் விதமாய்ப் போன முறை நடந்த கைது நடவடிக்கையின் இந்த முதலாம் ஆண்டு நினைவுகூரல், “காங்கிரசு எனும் ஒரு கட்சி செய்த கொடுமைக்கு இந்தியா எனும் மொத்த நாட்டின் மீதே ஏன் பழி சுமத்துகிறீர்கள்” என்று கேட்கும் ஒவ்வொருவருக்குமான விடை கூறல்!
ஆகவே தமிழ் மக்களே!
வாருங்கள் கூடுவோம் தமிழர் கடற்கரையில்!
செலுத்துவோம் அஞ்சலி தமிழர் நினைவலையில்!
படங்கள்: நன்றி ௧, ௩) மே பதினேழு இயக்கம், ௨) கண்ணோட்டம் இணைய இதழ்.
தொடர்புடைய பதிவுகள்:
✎ மாவீரர் திருநாள் – நாம் செலுத்த வேண்டிய உண்மையான அஞ்சலி இதுதான்!
✎ தமிழினப் படுகொலை எட்டாம் ஆண்டு நினைவேந்தலும் நீதிக்கான புதிய வாய்ப்பும்!
✎ தமிழினப் படுகொலை ஏழாம் ஆண்டு நினைவேந்தல் - செய்ய வேண்டியவை என்ன?
✎ தமிழினப் படுகொலை ஆறாம் ஆண்டு நினைவேந்தலும் காத்திருக்கும் கடமைகளும்!
தொடர்புடைய பதிவுகள்:
✎ மாவீரர் திருநாள் – நாம் செலுத்த வேண்டிய உண்மையான அஞ்சலி இதுதான்!
✎ தமிழினப் படுகொலை எட்டாம் ஆண்டு நினைவேந்தலும் நீதிக்கான புதிய வாய்ப்பும்!
✎ தமிழினப் படுகொலை ஏழாம் ஆண்டு நினைவேந்தல் - செய்ய வேண்டியவை என்ன?
✎ தமிழினப் படுகொலை ஆறாம் ஆண்டு நினைவேந்தலும் காத்திருக்கும் கடமைகளும்!
கீழ்க்காணும் வாக்குப்பட்டைகளைச் சொடுக்கி, இந்த நினைவேந்தல் நிகழ்வு குறித்த செய்திகள் பெருவாரியான மக்கள் பார்வைக்குச் செல்ல நீங்களும் உதவலாம்.
பதிவுகளை உடனுக்குடன் பெறக் கீழ்க்காணும் பொத்தானைச் சொடுக்கி
வாட்சாப் தடத்தில் (Whatsapp Channel) இணையுங்கள்!!
முள்ளிவாய்க்கால் மண்ணில்
பதிலளிநீக்குநானும்
செத்துப் பிழைத்தேன்...
அங்கே
இன அழிப்புத் தான்
பொதுமக்கள் தான் சாவு!
மறக்க முடியுமா மே 18!
தமிழினத்தை அழிக்க முயலும்
எந்த இனமும் வாழ இயலாதே!
ஓ! அந்த நேரம் நீங்கள் அங்கே இருந்தீர்களா! அந்தக் கொடுமையைப் பார்த்தீர்களா! தமிழ் மண்ணில் நடந்த அந்தப் பெருங்கொடுமையிலிருந்து தப்பிய வெகு சிலரில் ஒருவரா நீங்கள்! இத்தனை நாள் நான் அறியாமல் போய்விட்டேனே! தகவலுக்கு நன்றி ஐயா! என் உயிருள்ள வரை மறக்க மாட்டேன் தமிழினத்துக்கு நடந்த கொடுமையை! கடைசிச் சொட்டுக் குருதி உள்ள வரை குரல் கொடுக்கத் தவறவும் மாட்டேன்!
நீக்கு