.

புதன், மே 18, 2016

தமிழினப் படுகொலை ஏழாம் ஆண்டு நினைவேந்தல் - செய்ய வேண்டியவை என்ன?


Tamil Genocide Remembrance

தோ இதோ என ஏழு ஆண்டுகள் முடிந்து விட்டன!
ஆம்! தமிழினப் படுகொலை நடந்து இன்றோடு ஏழு ஆண்டுகள் ஆகின்றன!

வழக்கம் போல் தமிழ் உணர்வுள்ள தோழர்களும் தலைவர்களும் இந்த ஆண்டு நினைவு நாளையும் செவ்வனே கடைப்பிடிக்க ஏற்பாடு செய்வார்கள் என நம்புகிறேன். ஆனால் அதே நேரம், இனப்படுகொலைக்கு நினைவேந்தல் மட்டுமே தனி ஈழத்தைப் பெற்றுத் தந்துவிடாது, வேறு சில இன்றியமையாக் கடமைகளும் இருக்கின்றன என்பதை இந்த எழுச்சி நாளில் பணிவன்போடு நினைவூட்ட விரும்புகிறேன்.

இன அளவில் செய்ய வேண்டியவை...

மே 18 அன்று மெழுகுத்திரி ஏற்றுவதும், நினைவஞ்சலிக் கவிதைகள் வடிப்பதும், தெருவோரச் சுவர்களில் வீர வரிகள் மின்னும் சுவரொட்டிகள் ஒட்டுவதும், சமூக வலைத்தளச் சுவர்களில் உணர்வுகளைப் பகிர்வதும் மற்றும் பிறவும் நம் தலையாய கடமைகளே! ஆனால், இவற்றோடு மட்டும் நம் கடமைகள் முடிந்து விடுவதில்லை. உண்மையில், ஈழத்துக்காகத் தன் இன்னுயிரையும் உறவுகளையும் கொடூரமாய் இழந்த நம் உறவுகளுக்கு நாம் செலுத்த வேண்டிய மரியாதை மட்டும்தான் இது. மற்றபடி, இதுவே நமக்குத் தனித் தமிழீழத் திருநாட்டைப் பெற்றுத் தந்து விடாது.

ஈழத் தமிழர்களுக்கு வெற்றி கிடைக்க வேண்டுமானால், அதை அவர்களுக்குப் பெற்றுத் தரும் அளவுக்கு நமக்கு முதலில் வலிமை தேவை! ஒற்றுமை ஒன்று மட்டுமே நமக்கு அந்த வலிமையை அளிக்க முடியும்!

ஈழத் தமிழர்களுக்காகப் போராடுகிறேன் பேர்வழி எனச் சொல்லிக் கொண்டு மே 18 அன்றும், நவம்பர் 27 அன்றும் மட்டும் போராட்டங்களிலும் பொதுக்கூட்டங்களிலும் கலந்து கொண்டுவிட்டு, மற்றபடி ஆண்டு முழுவதும் சாதி - சமயம் என நமக்குள் நாமே அடித்துக் கொண்டும், வெட்டிக் கொண்டும் திரிந்தால் நம்மை விட முட்டாள்கள் இந்த உலகில் வேறு யாரும் இருக்க முடியாது. ‘தனி ஈழம்’ எனும் உயரிய இலக்கிலிருந்து அவ்வப்பொழுது நம்மைத் திசை மாறச் செய்து கொண்டே இருக்கும் இத்தகைய பாகுபாடுகளை நாம் மறக்காத வரை நம் மூலமாக ஈழத் தமிழர்களுக்கொரு ஒரு விடியல் மலர்வதென்பது இயலவே இயலாது! தமிழர்களைப் பிரிப்பதற்காகவே அவர்கள் மீது பூசப்பட்டது சாதி அடையாளம் என்பதையும், அவரவருக்குப் பிடித்த கடவுளைத் தொழுவதற்கான ஒரு வழிமுறை மட்டுமே சமயம் என்பதையும் நாம் உளமார உணர்ந்தே தீர வேண்டும்! சாதியத்தைக் கை கழுவவும், தமிழ்ப் பண்பாட்டுக்கு எதிரான கூறுகள் எந்தச் சமயத்தில் இருந்தாலும் அவற்றைத் துணிந்து புறக்கணிக்கவும் முன்வந்தே ஆக வேண்டும்! தமிழுணர்வு இயக்கங்கள் ஈழத்துக்காகக் குரல் எழுப்புவதோடு மட்டுமில்லாமல் சாதி, சமயம் போன்றவற்றைக் கடந்து, தமிழர் அனைவரையும் ‘இன அடிப்படையில் நாம் அனைவரும் ஒன்றே’ எனும் உணர்வுநிலையை எட்டச் செய்வதற்கான சமூகக் கடமைகளை மேற்கொள்ளவும் கட்டாயம் ஆவன செய்ய வேண்டும்!

அதே போல, சாதி, சமயம், கட்சி போன்றவற்றின் பெயரால் மக்கள் பிரிந்து கிடப்பதை மட்டும் குற்றம் சொல்லும் அரசியல் தலைவர்கள் திராவிடம், தமிழ் தேசியம் என அரசியல் அடிப்படையில் தாங்கள் பிரிந்து கிடப்பது அதை விட ஆபத்தானது என்பதை இனியாவது உணர முன்வர வேண்டும்! ஒற்றுமையின்மையால் தமிழர்கள் எவ்வளவெல்லாம் இழந்திருக்கிறோம், எந்த அளவுக்குச் சீரழிந்திருக்கிறோம் என்பதை முற்று முழுதாக உணர்ந்த தாங்களே இப்படிப் பிரிந்து நின்று கொண்டிருக்கையில் ஏதுமறியாப் பொதுமக்களை குற்றம் சாட்டுவது துளியேனும் நியாயமா என்பதைத் தலைவர்கள் இந்த நாளிலாவது ஒரு நிமிடம் உட்கார்ந்து சிந்தித்துப் பார்த்தல் வேண்டும்!

பன்னாட்டு அளவில் செய்ய வேண்டியவை...

‘தமிழர் இல்லாத நாடில்லை; ஆனால், தமிழர்களுக்கென ஒரு நாடில்லை’ போன்ற வரிகளெல்லாம் கேட்பதற்கு நன்றாக இருக்கலாமே ஒழிய உண்மை கிடையாது என்பதை இனிமேலாவது நாம் உணர வேண்டும்! உலகெங்கும் பல நாடுகளில் தமிழர்கள் ஆற்றல் மிக்க பதவிகளில் முன்பும் இருந்திருக்கிறார்கள்; தற்பொழுதும் இருந்து வருகிறார்கள்.

உலக நாடுகளெல்லாம் அண்ணாந்து பார்க்கக்கூடிய பேராளுமையாக விளங்கிய சிங்கப்பூர் முன்னாள் தலைமையமைச்சர் (பிரதமர்) லீ குவான் யூ எந்த அளவுக்குத் தமிழர் நலன் காப்பவராகத் திகழ்ந்தார் என்பதை இப்பொழுது அவர் இறந்த பிறகு உட்கார்ந்து கதை கதையாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். மாறாக, அவர் இருந்தபொழுது அவரை அணுகி, ஒரு நாட்டின் தலைமையமைச்சர் எனும் முறையில் அவரால் ஈழத்துக்கு என்ன செய்ய முடியும் என்று யாரும் ஆராய்ந்ததாகத் தெரியவில்லை. இது தமிழ்த் தலைவர்கள் செய்த மாபெரும் வரலாற்றுப் பிழை! இனியாவது இத்தகைய பிழையை நாம் செய்யாதிருக்க வேண்டும்!

தற்பொழுதைய நிலையைப் பொறுத்த வரை, ஈழத் தமிழினத்தைச் சேர்ந்தவரான தர்மன் சண்முகரத்தினம் அவர்கள் தற்பொழுது மலேசியாவின் துணைத் தலைமையமைச்சராகப் (துணைப் பிரதமர்) பதவி வகிக்கிறார். இன்னும் ஒரு படி மேலாக, தமிழ்நாட்டு மரபைச் சேர்ந்தவரான மோசஸ் நாகமுத்து அவர்கள் தற்பொழுது கயானா நாட்டில் தலைமையமைச்சராகவே வீற்றிருக்கிறார்.

இப்படி உலகின் எந்தெந்த நாடுகளில் தமிழர்கள் ஆட்சி அமைப்பின் உச்சப் பதவியில் இருக்கிறார்கள் என்பதைக் கண்டறிந்து, ஐ.நா-வில் அவர்களுக்குள்ள சட்டப்படியான உரிமைகளையும் செல்வாக்கையும் பயன்படுத்தித் தனி ஈழம் பிறக்க ஏதாவது செய்ய முடியுமா என ஆராய வேண்டும். அதற்கு முதலில், தமிழர்கள் மிகுதியாக உள்ள நாடுகள் அனைத்தையும் ஒருங்கிணைத்துப் பன்னாட்டு அமைப்பு ஒன்றை நிறுவ வேண்டும்! தெற்காசிய நாடுகளுக்கான ‘சார்க்’ அமைப்புப் போல, வட அட்லாந்திய ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட நாடுகளுக்கான ‘நேட்டோ’ அமைப்பைப் போல தமிழர்களுக்கான பன்னாட்டு மைய அமைப்பாக அது திகழ வேண்டும்! இதை மட்டும் செய்து விட்டால் உலகளவில் மிகப் பெரிய விதயங்களையெல்லாம் நாம் வென்றெடுக்கலாம்!

ஈழத்துக்காகப் பொது வாக்கெடுப்பு நடத்தவும், இலங்கை மீது பன்னாட்டு விசாரணை கொண்டு வரவும்தான் உலக நாடுகள் தேவை. மற்றபடி, மேற்கண்ட இந்த நடவடிக்கைகளை எல்லாம் மேற்கொள்ள அவர்கள் தேவையில்லை. மே பதினேழு, இளந்தமிழகம், தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு போன்ற தமிழ் அமைப்புகளே போதும்; தமிழ்த் தலைவர்களே போதும்!

ஆக, நாம் செய்ய வேண்டியவையே இன்னும் இவ்வளவு இருக்க, அதற்குள் இங்கிலாந்தையும் அமெரிக்காவையும் இந்தியாவையும் நோக்கி நாம் கோரிக்கைகள் விடுத்துக் கொண்டிருப்பதில் என்ன பொருள் இருக்கிறது என்பதையும் நாம் எண்ணிப் பார்த்தல் வேண்டும்!

எனவே, தமிழ்ப் பற்றும் இன உணர்வும் மிக்க தமிழ்த் தோழர்களே, பேரன்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரிய இனத் தலைவர்களே, அருள் கூர்ந்து மேற்படி முயற்சிகளைக் கையிலெடுங்கள்! இனியும் வெறும் ஆர்ப்பாட்டங்களும் கருத்தரங்குகளும் நடத்திக் கொண்டிராமல் பன்னாட்டு அளவில் அரசியல் காய்நகர்த்தல்களை மேற்கொள்ள முன்வாருங்கள்!

இவை தங்கள் ஆற்றலுக்கு உட்பட்டவைதாம்! தாங்கள் நினைத்தால் முடியும்! தங்களால் மட்டும்தான் இயலும்! ஆம்! ஈழம் இன்னும் தங்கள் கைகளில்தாம் இருக்கிறது!
 
ஒன்று சேருங்கள்!
வென்று தாருங்கள்!

❀ ❀ ❀ ❀ ❀

படம்: நன்றி தமிழ் பவர்.

முந்தைய ஆண்டுகளில் இதே நாள்:

தமிழினப் படுகொலை ஆறாம் ஆண்டு நினைவேந்தலும் காத்திருக்கும் கடமைகளும்!

2014 நாடாளுமன்றத் தேர்தல் முடிவும் 5ஆம் ஆண்டு நினைவேந்தலும் - சில விளக்கங்கள், சில சிந்தனைகள், சில திட்டங்கள்!

பிறக்குமடா தமிழீழம்! பறக்குமடா புலிக்கொடி!

பதிவு பிடித்திருந்தால் கீழ்க்காணும் வாக்குப்பட்டைகள் மூலம் மற்றவர்களுடனும் பகிர்ந்து ஈழத் தமிழர்களின் கனவு நினைவேற உதவுங்களேன்! கூடவே, உங்கள் செம்மையான கருத்துக்களுக்கும் காத்திருக்கிறேன்! தமிழில் எழுத வசதியில்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது கீழே 'தமிழ்ப் பலகை'! தனிப்பட ஏதும் தெரிவிக்க விரும்பினால், அதற்கு அடுத்து உள்ள 'அணுக' படிவத்தைப் பயன்படுத்தலாம்!

 பதிவுகளை உடனுக்குடன் பெறக் கீழ்க்காணும் பொத்தானைச் சொடுக்கி
வாட்சாப் தடத்தில் (Whatsapp Channel) இணையுங்கள்!!

Aga Sivappu Thamizh Whatsapp Channel

முகநூல் வழியே கருத்துரைக்க

0 comments:

கருத்துரையிடுக

என் புதினத்தை வாங்க

என் புதினத்தை வாங்க
மேலே உள்ள படத்தை அழுத்துங்கள்
பதிவுகளை உடனுக்குடன் பெற

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

வாட்சாப் தடத்தில் (Channel)...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு (1) 13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (9) அஞ்சலி (21) அணு உலை (2) அம்பிகை செல்வகுமார் (1) அம்மணம் (1) அமேசான் (6) அயல்நாட்டுத் தமிழர் (1) அரசியல் (90) அழைப்பிதழ் (7) அற்புதம்மாள் (2) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (40) ஆட்சென்ஸ் (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இங்கிலாந்து (1) இசுரேல் (2) இட ஒதுக்கீடு (4) இணையம் (19) இந்தித் திணிப்பு (1) இந்தியா (25) இரசியா (1) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இலக்கணம் (3) இலங்கை (1) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (23) இனம் (46) ஈழம் (44) உக்கிரேன் (1) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (24) எழுவர் விடுதலை (1) ஐ.நா (5) ஒருங்குறி (1) கடவுள் (1) கதை (3) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (11) கலைச்சொல்லாக்கம் (1) கவிஞர் தாமரை (1) கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் (2) கவிஞர் ரேவதி (1) கவிதை (19) காங்கிரஸ் (6) காசா (2) காணொளி (4) காதல் (2) காந்தியம் (1) கார்த்திக் சுப்புராஜ் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (5) கிரந்தம் (1) கீச்சுகள் (2) குழந்தைகள் (10) குறள் (2) கூகுள் (2) கையொப்பம் (2) கோட்பாடு (9) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (16) சந்திப்பு (1) சமயம் (12) சமற்கிருதம் (2) சமூகநீதி (4) சரிதா (1) சாதி (10) சிங்களர் (1) சித்திரக்கதைகள் (1) சிவகார்த்திகேயன் (1) சிறுவர் இலக்கியம் (4) சீமான் (7) சுற்றுச்சூழல் (6) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (3) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (31) தமிழ் தேசியம் (5) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (16) தமிழர் (45) தமிழர் பெருமை (17) தமிழறிஞர் முத்துநிலவன் (1) தமிழின் சிறப்பு (3) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (2) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (5) தாலி (1) தி.மு.க (11) திரட்டிகள் (4) திராவிடம் (9) திருமுருகன் காந்தி (1) திரைப்படம் (2) திரையுலகம் (9) திறனாய்வு (1) தினகரன் (1) துருவ் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (9) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தேர்தல்-2021 (2) தொலைக்காட்சி (2) தொழில்நுட்பம் (10) தோழர் தியாகு (1) நட்பு (13) நிகழ்வுகள் (5) நிர்மலா சீதாராமன் (1) நினைவேந்தல் (10) நீட் (5) நூல்கள் (10) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (3) பதிவர் உதவிக்குறிப்புகள் (10) பதிவுலகம் (24) பா.ம.க (2) பா.ஜ.க (30) பார்ப்பனியம் (14) பாலஸ்தீனம் (2) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (9) பீட்டா (1) புதிய வேளாண் சட்டம் (1) புறநானூறு (1) புனைவுகள் (10) பெண்ணியம் (6) பெரியார் (3) பேரறிவாளன் (2) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (5) பொதுவுடைமை (1) பொதுவுடைமைக் கட்சி (1) பொருளாதாரம் (2) பொழிவு (2) போட்டி (1) போர் (3) போராட்டம் (10) ம.ந.கூ (2) மகான் (1) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (10) மடோன் அஷ்வின் (1) மணிவண்ணன் (1) மதிப்புரை (5) மதுவிலக்கு (2) மருத்துவம் (7) மாநாடு (1) மாநாடுகள் (1) மாய இயல்பியம் (1) மாவீரர் நாள் (3) மாற்றுத்திறனாளிகள் (2) மிஷ்கின் (1) மீம்ஸ் (7) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (3) மேனகா காந்தி (1) மொழியரசியல் (2) மொழியறிவியல் (2) மோடி (11) யுவர் கோட் (1) யோகிபாபு (1) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) ராஜீவ் படுகொலை (1) வரலாறு (22) வாழ்க்கைமுறை (17) வாழ்த்து (5) வானதி சீனிவாசன் (1) விக்ரம் (1) விடுதலை (6) விடுதலைப்புலிகள் (13) விருது (1) விஜய் (1) விஜய் சேதுபதி (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (7) வை.கோ (6) வைரமுத்து (2) ழகரம் (1) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டெர்லைட் (2) ஹமாஸ் (2) ஹீலர் பாஸ்கர் (1) Bhagavath Gita (1) BJP (1) Casteism (1) Cauvery (1) Dalit (1) Genocide (3) Hindu (1) Karnataka (1) Magical Realism (1) Manisha (1) Modi (1) Notion Press (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (2) Religion (1) Scheduled Castes (1) Sexual Harassment (1) Tamilnadu (1) Tamils (1) Unicode (1) Unicode Consortium (1) UP (1) Women (1) Yogi Adityanath (1)

முகரும் வலைப்பூக்கள்