நான் ஒன்றும் பெரிய கீச்சர் (Tweeter) இல்லை. என் கீச்சுக்களில் (tweets) பெரும்பாலானவை இணையப் பக்கங்களின் பகிர்வுகள்தாம். இருந்தாலும், தப்பித் தவறி நானும் சில நல்ல (!) கீச்சுக்களை அவ்வப்பொழுது கீச்சி விடுவதால், அவற்றைத் தொகுத்துத் தர வேண்டும் என்று இரக்கமே இல்லாமல் ஒரு முடிவு எடுத்துவிட்டேன். என் வலைப்பூவைப் படிக்கிற குற்றத்துக்கு உங்களையெல்லாம் நான் இதுவும் செய்வேன், இதற்கு மேலும் செய்வேன் என்கிற உறுதிமொழியோடு இதோ என் கீச்சுக்களில், தேர்ந்தெடுத்த முதல் ௨௫ (இருபத்தைந்து) காலவரிசைப்படி உங்கள் பார்வைக்கு... மறுகீச்சுக்கு... உடுக்குறிக்கு!
மற்றவர்கள்
அவர்களின் தாய்மொழியில்
பேசுகிறார்கள்;
நாங்கள்
மொழிகளின் தாய்மொழியில்
பேசுகிறோம்!
— இ.பு.ஞானப்பிரகாசன் (@Gnaanapragaasan) July 8, 2011
திறமை இல்லாதவன் கூடக் கடுமையான உழைப்பினால் முன்னேறிவிட முடியும்; ஆனால் உழைக்கத் தயங்குபவன் எத்தனை திறமைகள் இருந்தாலும் முன்னேற முடியாது.
— இ.பு.ஞானப்பிரகாசன் (@Gnaanapragaasan) July 9, 2011
@vikatan டேய் நாராயணா! இந்தக் கொசுத் தொல்லை தாங்க முடியலைடா!
— இ.பு.ஞானப்பிரகாசன் (@Gnaanapragaasan) October 26, 2012
@seeyouattop @vikatan ம்க்கும்! சாதா அரசாயிருக்கும்போதே 1.50 லட்சம் பேரைக் கொன்றாகிவிட்டது. இன்னும் வல்லரசும் ஆகி விட்டால் விளங்கும்!
— இ.பு.ஞானப்பிரகாசன் (@Gnaanapragaasan) October 26, 2012
@vikatan ஆக, கட்காரி மீது தவறில்லை எனச் சொல்ல முடியாது! அப்படித்தானே?
— இ.பு.ஞானப்பிரகாசன் (@Gnaanapragaasan) October 26, 2012
@vikatan அப்படியானால் தன் 26 வயதிலேயே பெரிய கோயிலைக் கட்டியிருக்கிறார் ராஜராஜ சோழர்! இவ்ளோ சிறு வயதில் செய்யக்கூடிய சாதனையா இது!#மலைப்பு!
— இ.பு.ஞானப்பிரகாசன் (@Gnaanapragaasan) October 26, 2012
@vikatan குண்டு வாங்கிய கணக்கிலேயே ஒரு குண்டா! தணிக்கைத்துறை அடுத்த ஆட்டத்தைத் தொடக்கி வைத்து விட்டது!
— இ.பு.ஞானப்பிரகாசன் (@Gnaanapragaasan) October 26, 2012
@vikatan மவனே! ராஜராஜ சோழன் இப்போது இருந்திருந்தால் உங்களையெல்லாம் ஒரே வீச்சுதான்!
— இ.பு.ஞானப்பிரகாசன் (@Gnaanapragaasan) October 27, 2012
@vikatan எதிர்க்கட்சியைப் பணிய வைப்பதில்தான் தனக்கு எப்போதும் கவனம், மக்கள் பற்றி எந்தக் கவலையும் இல்லை என்பதை மீண்டும் நிரூபித்துவிட்டார்!
— இ.பு.ஞானப்பிரகாசன் (@Gnaanapragaasan) October 27, 2012
@vikatan சினிமாக்காரப் புத்தி போகிறதா பார்! நாடகம், கலை, கூத்து என!
— இ.பு.ஞானப்பிரகாசன் (@Gnaanapragaasan) October 28, 2012
@vikatan சட்டமன்ற உறுப்பினர் ஒருவரை இன்னொரு கட்சி இழுப்பதற்கு அவர் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் தகுதியே போதும்.
— இ.பு.ஞானப்பிரகாசன் (@Gnaanapragaasan) October 28, 2012
@vikatan ஏன், முறையே 29 ரூபாய், 20 ரூபாய் எனவே உயர்த்திக் கொள்ளுங்களேன்! மக்களால் என்னதான் செய்து விட முடியும்?
— இ.பு.ஞானப்பிரகாசன் (@Gnaanapragaasan) October 28, 2012
@vikatan சோற்றுக்கில்லாமல் சாகும் மக்கள் கொண்ட ஒரு நாடு உணவுத் தானிய ஏற்றுமதியில் முதலிடம் வகிப்பதற்குப் பெயர்தான் கொடுமை!
— இ.பு.ஞானப்பிரகாசன் (@Gnaanapragaasan) October 29, 2012
@vikatan கூடி?............
— இ.பு.ஞானப்பிரகாசன் (@Gnaanapragaasan) October 29, 2012
அடிப்படை வாழ்வாதாரத்துக்கான மின்சாரம் தரக் கூட வக்கற்ற, மின்சாரம் கேட்டால் அணுஉலையைப் பரிசளிக்கிற மாநிலத்துக்கு சட்டமன்ற வைர விழா என்ன கேடு?
— இ.பு.ஞானப்பிரகாசன் (@Gnaanapragaasan) October 29, 2012
@vikatan "உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு" என்று சொல்லுங்கள்! "உயர்நீதிமன்றம் கிளை உத்தரவு" என்றால் அர்த்தம் வேறு!
— இ.பு.ஞானப்பிரகாசன் (@Gnaanapragaasan) November 2, 2012
@vikatan ஆங்கிலேயேரால் கைப்பற்றப்பட்ட தன் பகுதியைப் போரிட்டுத் திரும்பப் பெற்ற ஒரே இந்திய அரசர் வேலுநாச்சியார்! வெகு, காலங்கடந்த மரியாதை!
— இ.பு.ஞானப்பிரகாசன் (@Gnaanapragaasan) November 2, 2012
@vikatan இதெல்லாம் மக்கள் பணத்தை வீணடிக்கும் செயல். செவிலியர்களுக்கு அதைப் பயன்படுத்தத் தெரியுமா?
— இ.பு.ஞானப்பிரகாசன் (@Gnaanapragaasan) November 2, 2012
பஞ்ச் டயலாக் பேசும் ஆர்வமும் திறமையும் எல்லோருக்குள்ளும் ஒளிந்திருக்கிறது என வெள்ளைக்காரன் கண்டுபிடித்ததன் விளைவு... http://t.co/MY0ysiZX
— இ.பு.ஞானப்பிரகாசன் (@Gnaanapragaasan) November 3, 2012
@vikatan கோழி பிரியாணி சாப்பிடுவது பாவம் என நரி சொல்வது போல் இருக்கிறது!
— இ.பு.ஞானப்பிரகாசன் (@Gnaanapragaasan) November 6, 2012
@vikatan எப்படி?... ஆண்டுக் கடைசியில், இந்திய வணிகர்களுக்கு ஆன இழப்பை மொத்தமாக உங்கள் கட்சி நிதியிலிருந்து எடுத்துக் கொடுத்து விடுவீர்களா?
— இ.பு.ஞானப்பிரகாசன் (@Gnaanapragaasan) November 14, 2012
@vikatan ஓ! அதனால்தான் கருணாநிதியைத் தி.மு.க-வின் மூளை என்கிறார்களா? மூளைக்கு ஏது நரம்பு!
— இ.பு.ஞானப்பிரகாசன் (@Gnaanapragaasan) November 15, 2012
@vikatan தன் அடுத்தாண்டுச் சாதனை விளம்பரத்தில் இதையும் சேர்ப்பாரா முதல்வி?
— இ.பு.ஞானப்பிரகாசன் (@Gnaanapragaasan) November 15, 2012
பொதுவாழ்வில் இருப்பவர்களில் யாரார் நல்லவர், யாரார் கெட்டவர் என, நாயகன் கேள்வி கேட்காமலே புரிய வைத்துவிட்டது 'ஈழம்'! #வேதனை!
— இ.பு.ஞானப்பிரகாசன் (@Gnaanapragaasan) November 15, 2012
@vikatan ஓட்டப் போவது அதே பழைய ஓட்டுநர்கள்தானே?
— இ.பு.ஞானப்பிரகாசன் (@Gnaanapragaasan) November 23, 2012
❀ ❀ ❀ ❀ ❀
பதிவு பிடித்திருந்தால் கீழ்க்காணும் வாக்குப்பட்டைகள் மூலம் மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்களேன்! கூடவே, உங்கள் செம்மையான கருத்துக்களுக்கும் காத்திருக்கிறேன்! தமிழில் எழுத வசதியில்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது கீழே 'தமிழ்ப் பலகை'! தனிப்பட ஏதும் தெரிவிக்க விரும்பினால், அதற்கு அடுத்து உள்ள 'அணுக' படிவத்தைப் பயன்படுத்தலாம்!
பதிவுகளை உடனுக்குடன் பெறக் கீழ்க்காணும் பொத்தானைச் சொடுக்கி
வாட்சாப் தடத்தில் (Whatsapp Channel) இணையுங்கள்!!
எனக்குக் தெரிந்ததெல்லாம் கிளியின் கீச்சுத்தான்.
பதிலளிநீக்குகாணாமல் வேணெதும் கத்தலாம் கற்றோர்முன்
கோணாமல் வாய்திறக்கக் கூடாதே - நாணாமல்
பேச்சுப்பேச் சென்னும் பெரும்பூனை வந்தக்கால்
கீச்சுகீச் சென்னும் கிளி ““
என்றல்லவோ படித்தது.
இந்தக் கீச்செனக்கு இப்போதுதான் தெரிந்தது.:)
இப்படி எல்லாம் இன்னொரு உலகம் இருப்பதை இன்னமும் நான் தெரிந்து கொள்ளாமல்தான் இருக்கிறேன்.
நன்றி
இப்படியெல்லாம் உலகங்கள் இருப்பது தங்களுக்குத் தெரியுமோ இல்லையோ, தங்களுக்கு என ஒரு குட்டி உலகம் இருகிறது. அதில் நானும் ஒரு (தமிழ்க்)குடிமகன். விரைவில் வாருங்கள் ஐயா! கீச்சுலகில் தாங்கள் விரல் பதிக்கும் நாளுக்காகக் காத்திருக்கிறோம்!
நீக்குயார் சொன்னது தாங்கள் பெரிய கீச்சர் இல்லையென்று......உண்மையிலே தாங்கள் பெரிய கீச்சர்.தான்.
பதிலளிநீக்குமிக்க நன்றி ஐயா! மிகவும் மகிழ்ச்சி! :-)
நீக்குகீச்சு கீச்சென்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ என்ற பாசுரத்தின் வரிகள் நினைவுக்கு வந்தது.....ஹஹ்ஹ்
பதிலளிநீக்குஆனால் நீங்கள் கீசுப்புட்டீங்கப்பா...அதுவும் முதல் கீச்சு ரொம்பவுமே அருமை! கீச்சு கீச்சுனு நல்லா கீச்சிட்டீங்க...அதே போல கொசுத் தொல்லை....
உங்கள் பாராட்டுக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா, அம்மணி! மிகவும் மகிழ்ச்சி!
நீக்குநகைச்சுவை, கிண்டல் உட்பட சில உண்மைகளும்...
பதிலளிநீக்குஐயா... வாழ்த்துக்கள்...
தங்கள் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஐயா!
நீக்குதொடரட்டும் தங்களின் கீச்சுகள் ................
பதிலளிநீக்குகண்டிப்பாக ஐயா! நன்றி!
நீக்குசமூக அக்கறை கொண்ட உங்கள் கீச்சுகளில் பகடியுடன் கசப்பான உண்மைகளும் அதிகாரத்துக்கு எதிரான சாட்டையடிகளும் இருக்கின்றன !
பதிலளிநீக்குஉங்களின் உண்மையான, தைரியமான எழுத்துப்பணி தொடர வாழ்த்துகிறேன்.
எனது புதிய பதிவு : மீண்டும் முபாரக்
http://saamaaniyan.blogspot.fr/2015/02/blog-post.html
தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள். நன்றி
நன்றி
சாமானியன்
saamaaniyan.blogspot.fr
உங்கள் பாராட்டுக்கும் விரிவான கருத்துக்கும் அன்பு நிறைந்த வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஐயா! நேரம் கிடைக்கும்பொழுது கண்டிப்பாக உங்கள் பதிவைப் படிக்க வருகிறேன்.
நீக்குஇதெல்லாம் படிச்சு,நினைச்சு நினச்சு சிரித்து கொண்டிருந்தேன் சகா:)) டாப் எது தெரியுமா ?? டாப்ல நீங்க கொடுத்திருக்க டிஸ்கி தான்:))) மேல, மேல ,மேல னு இன்னும் அதுக்குமேல எவ்ளோ இருக்கு, நீங்க கலக்குங்க:)
பதிலளிநீக்குஉங்கள் உளமார்ந்த பாராட்டுக்கு மிக்க நன்றி சகா!
நீக்கு