.

செவ்வாய், ஜனவரி 13, 2015

எங்கே ஓடுகிறாய்? (இனப்படுகொலையாளியை நோக்கிச் சில கேள்விகள்!)



Rajapaksha

எங்கே ஓடுகிறாய்?...
ஈனர்களின் தானைத் தலைவனே!
ஏன் இப்படி ஓடுகிறாய்?

இழிகுலத்துப் பெருமகனே!
எங்கே இப்படி ஓடுகிறாய்?

தமிழர் வாக்குகளால்
எதிராளி பெற்ற வெற்றியை
ஏற்க முடியாது என்றாயே,
அப்புறம் ஏன் ஓடுகிறாய்?...

அட!
அடடே!
அடேய்!
என்ன இவ்வளவு அவசரம்?
மீசையைக் கூடத் துடைக்க நேரமில்லாமல்
ஏன் இந்த அவசரம்?

தமிழர் நண்பனாய்க் காட்டிக் கொள்ள
ஆண்டு தவறாமல் பொங்கல் வைப்பாயே
அதற்காகக் கூட இரண்டு நாள் பொறுக்காமல்
எதற்கு இந்த அவசரம்?...

சொந்த மண்ணில்
எங்களை வாழவே விடாமல்
துரத்தித் துரத்தி அழித்தவனே!
இப்பொழுது யாருமே துரத்தாமல்
உன் மண்ணை விட்டு
நீ ஏன் ஓடுகிறாய்?...

எங்கள் இனத்தையே
தடம் தெரியாமல் அழிக்கத் துடித்தவனே!
உன் பிடரியில் படிந்திருக்கும்
உன் பின்னங்கால் தடத்தைக் கூட
அழிக்க நேரமில்லாமல்
எங்கே ஓடுகிறாய்?...

தனிநாடு கேட்டதற்காக
எங்கள் மீது
குண்டு மழை பொழிந்தவனே!
எந்தத் தனித் தீவு நோக்கி
நீ இன்று ஓடுகிறாய்?

இந்த நாட்டில் நாங்கள்
இரண்டாம் தரக் குடிமக்கள்தாம் என்று
உலகறிய அறிவித்தவனே!
எந்த நாட்டில்
இரண்டாம் தரக் குடிமகனாய்
வாழ்வாங்கு வாழ
நீ இப்பொழுது ஓடுகிறாய்?...

பிள்ளை, குட்டிகளோடு
நாடு நாடாய் எங்களை ஓட வைத்தவனே!
இப்பொழுது குடும்பத்தையே அழைத்துக் கொண்டு
நீ எந்த நாட்டுக்கு ஓடுகிறாய்?...

தாய்மொழியில் படித்த
ஒரே காரணத்துக்காக
எங்கள் செஞ்சோலைப் பிஞ்சுகளைக்
கொன்று குவித்தவனே!
எந்த சிங்களப் பள்ளியில்
உன் வாரிசுகளைச் சேர்க்க
அந்த நாட்டுக்கு ஓடுகிறாய்?...

ஆள் அம்பு படை பரிவாரம்
என
உலகின் எந்த மூலைக்குப் போனாலும்
அரச வாழ்வு துய்க்க
அனைத்து ஏற்பாடுகளும்
நீ செய்து கொண்டிருக்கலாம்.
ஆனால்
அந்த நாட்டைப் பொறுத்த வரை
நீ வந்தேறிதான்.

அடுத்த வேளைச் சோற்றுக்கு
அரசுப் பொட்டலத்தை நம்பியிருந்தாலும்
நாங்கள் வாழ்வது எங்கள் மண்ணில்தான்!

இதோ!
அடுத்து ஆள வேண்டியது
யாரென்பதைத்
தீர்மானிப்பவர்களாக
இன்றும் நாங்கள் இங்கே!

பிறந்து வளர்ந்த மண்ணில்
தொடர்ந்து வாழ வக்கில்லாத நீ
இனி
உலக வரைபடத்தில் எங்கே?

சிந்தித்துப் பார்!
வென்றது யார்?

இந்த வெற்றியை நாங்கள்
பெற்றிட உதவிய
உலக நாடுகளுக்கு நன்றி!

பேரழிவு ஆயுதங்கள்
எழுதிய தீர்ப்பை
மாற்றிய வல்லாயுதமான
வாக்குச்சீட்டுக்கு நன்றி!!

மனச்சாட்சி இல்லாத
தெய்வங்கள் முகத்தில் கரி பூசி
இந்த ஆறுதலை எங்களுக்கு வழங்கிய
மக்களாட்சிக்கு நன்றி!!!

ஐந்தாண்டுகளுக்குப் பின் உண்மையாகவே தித்திக்கும் பொங்கல் இதுதான்! உலகத் தமிழர்கள் அனைவருக்கும் உளமார்ந்த, இனிய பொங்கல் திருநாள், தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

 

❀ ❀ ❀ ❀ ❀

படம்: நன்றி thenewzportal.com, thekaf.org.


பதிவு பிடித்திருந்தால் கீழ்க்காணும் வாக்குப்பட்டைகள் மூலம் மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்களேன்! கூடவே, உங்கள் செம்மையான கருத்துக்களுக்கும் காத்திருக்கிறேன்! தமிழில் எழுத வசதியில்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது கீழே 'தமிழ்ப் பலகை'! தனிப்பட ஏதும் தெரிவிக்க விரும்பினால், தளத்தின் அடிப்பகுதியில் உள்ள 'அணுக' படிவத்தைப் பயன்படுத்தலாம்!

 பதிவுகளை உடனுக்குடன் பெறக் கீழ்க்காணும் பொத்தானைச் சொடுக்கி
வாட்சாப் தடத்தில் (Whatsapp Channel) இணையுங்கள்!!

Aga Sivappu Thamizh Whatsapp Channel

முகநூல் வழியே கருத்துரைக்க

16 கருத்துகள்:

  1. ஆஹா! அருமையான வரிகள்! மிகவும் ரசித்தோம்! தமிழர் இனம் உலகெங்கும் தழைத்தோங்க இந்த இனிய தமிழர் திருநாள் இனிக்கும் திருநாள்தான்! இந்த இனிய நாள் தமிழருக்கு வாழ்வளிக்கும் நல்ல நாளாகத் தொடங்கட்டும்.

    தங்களுக்கும் தங்களு குடும்பத்தாருக்கும், சுற்றத்தாருக்கும், எங்கள் மனமார்ந்த இனிய தமிழர்/உழவர் திருநாள் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல் ஆட்களாக வந்து பாராட்டு வழங்கிய துளசி ஐயா, கீதா அம்மணி இருவருக்கும் மிக்க நன்றி! நானும் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார், சுற்றத்தார், நண்பர்கள், தங்கள் வலைப்பூ விருந்தினர்கள் ஆகிய அனைவருக்கும் என் உளமார்ந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களைத் தனிப்படத் தெரிவித்து மகிழ்கிறேன்!

      நீக்கு
  2. அருமையாக இருந்தது
    ஆர்ப்பாட்டமாய் இருந்தது
    இதமாயும் இருந்தது
    ஈட்டியாயும் பாய்ந்தது
    உணர்ச்சி மழை பொழிந்தது
    ஊர்வலம் போல் வந்தது
    எழுச்சியாய் விழுந்தது
    ஏற்றமாய் உயர்ந்தது
    ஐம்புயனும் சிலிர்த்தது
    ஒளிவட்டம் தெரிந்தது
    ஓங்காரமாய் ஒலித்தது

    இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் நண்பா......

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆத்திசூடி பாணியில், கவிதையைக் கவிதையாலேயே பாராட்டி விட்டீர்களே! மிக்க நன்றி நண்பரே! மிகுந்த மகிழ்ச்சி!

      நானும் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார், சுற்றத்தார், நண்பர்கள், தங்கள் வலைப்பூ விருந்தினர்கள் ஆகிய அனைவருக்கும் என் உளமார்ந்த இனிய பொங்கல் திருநாள், தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தனிப்படத் தெரிவித்து மகிழ்கிறேன்!

      நீக்கு
  3. இழிகுலத்துப் கீழ் மகன்
    உயிருக்கு பயந்து ஓடுகிறான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துக்கு நன்றி நண்பரே! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார், சுற்றத்தார், நண்பர்கள், தங்கள் வலைப்பூ விருந்தினர்கள் ஆகிய அனைவருக்கும் என் உளமார்ந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களைத் தனிப்படத் தெரிவித்து மகிழ்கிறேன்!

      நீக்கு
  4. அய்யா வணக்கம்.
    இணையத்துத் தொடர்ந்து வரவியலா வேலைப்பளு.
    தெரியாத தேவதை தேர்ந்தெடுக்கப்பட்டதால், தெரிந்த பிசாசு தன் பிறந்த இடம் தேடிப் போயிருக்குமோ?
    உண்மையில் உங்களின் கவிதைப் பொங்கல் காரப்பொங்கல்தான்!
    இருப்பினும்,
    கண்ணீரின் உப்பில் சற்றே இனிப்பின் சுவை!!!
    கவிதைகள் பொங்கட்டும்.
    நன்றி!!
    த ம கூடுதல் 1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் ஐயா! கண்ணீரின் உப்பில் இனிப்பும் தென்படக் காரணம், இது வேதனை நினைவுகளின் நெகிழ்ச்சிக் கண்ணீராக மட்டுமின்றி, நடக்கும் நிகழ்வுகளைக் கண்டு துளிர்க்கும் மகிழ்ச்சிக் கண்ணீராகவும் இருப்பதால்தான். கவித்துவம் நிறைந்த தங்கள் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் வாக்களிப்புக்கும் மிக்க நன்றி ஐயா! தங்களுக்கு நேரம் கிடைக்கும்பொழுது வாருங்கள்!

      //தெரியாத தேவதை தேர்ந்தெடுக்கப்பட்டதால், தெரிந்த பிசாசு தன் பிறந்த இடம் தேடிப் போயிருக்குமோ?// - இல்லையே! அவன் பிறந்ததே இலங்கையில்தானே! ஒருவேளை தாங்கள் பிசாசுகளின் பிறப்பிடத்தைக் குறிப்பிடுகிறீர்களோ!

      நீக்கு
  5. உணர்வுப்பூர்வமான கவிதை! அருமை! உண்மையில் தமிழர்களுக்கு இந்த பொங்கல் கட்டாயம் இனிக்கத்தான் செய்யும்! இனிய பொங்கல்நல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாராட்டுக்கு மிக்க நன்றி நண்பரே! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார், சுற்றத்தார், நண்பர்கள், தங்கள் வலைப்பூ விருந்தினர்கள் ஆகிய அனைவருக்கும் என் உளமார்ந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களைத் தனிப்படத் தெரிவித்து மகிழ்கிறேன்!

      நீக்கு
  6. Uppai thinna thanni ku divan um
    Dappu cheythavan thandanai per annum.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துரைத்தமைக்கு நன்றி! தொடர்ந்து படியுங்கள்! உங்கள் செம்மையான கருத்துக்களைப் பதியுங்கள்! மேற்கண்ட இணைப்புகள் மூலம் சமூக வலைத்தளங்கள், திரட்டிகள் ஆகியவற்றிலும் பதிவைப் பகிர்ந்து உங்களுக்குப் பிடித்த இந்தப் பதிவு மற்றவர்களையும் சென்றடைய உதவுங்கள்! நன்றி!

      நீக்கு
  7. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  8. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு


  9. வணக்கம் வலைப் பூ நண்பரே!
    எனது (புதுவைவேலு), "கவி ஒளியை" YOU TUBE ல் ஓளி ஏற்றி, ஒலிக்கச் செய்த
    'சுப்பு தாத்தா' அவர்களுக்கு அன்பு வணக்கம், மிக்க நன்றி!
    பாடலை கேட்டு மகிழ வாருங்கள் .

    இணைப்பு:

    http://youtu.be/KBsMu1m2xaE

    .www.subbuthatha72.blogspot.com

    பதிலளிநீக்கு

என் புதினத்தை வாங்க

என் புதினத்தை வாங்க
மேலே உள்ள படத்தை அழுத்துங்கள்
பதிவுகளை உடனுக்குடன் பெற

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

வாட்சாப் தடத்தில் (Channel)...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு (1) 13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (9) அஞ்சலி (21) அணு உலை (2) அம்பிகை செல்வகுமார் (1) அம்மணம் (1) அமேசான் (6) அயல்நாட்டுத் தமிழர் (1) அரசியல் (90) அழைப்பிதழ் (7) அற்புதம்மாள் (2) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (40) ஆட்சென்ஸ் (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இங்கிலாந்து (1) இசுரேல் (2) இட ஒதுக்கீடு (4) இணையம் (19) இந்தித் திணிப்பு (1) இந்தியா (25) இரசியா (1) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இலக்கணம் (3) இலங்கை (1) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (23) இனம் (46) ஈழம் (44) உக்கிரேன் (1) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (24) எழுவர் விடுதலை (1) ஐ.நா (5) ஒருங்குறி (1) கடவுள் (1) கதை (3) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (11) கலைச்சொல்லாக்கம் (1) கவிஞர் தாமரை (1) கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் (2) கவிஞர் ரேவதி (1) கவிதை (19) காங்கிரஸ் (6) காசா (2) காணொளி (4) காதல் (2) காந்தியம் (1) கார்த்திக் சுப்புராஜ் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (5) கிரந்தம் (1) கீச்சுகள் (2) குழந்தைகள் (10) குறள் (2) கூகுள் (2) கையொப்பம் (2) கோட்பாடு (9) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (16) சந்திப்பு (1) சமயம் (12) சமற்கிருதம் (2) சமூகநீதி (4) சரிதா (1) சாதி (10) சிங்களர் (1) சித்திரக்கதைகள் (1) சிவகார்த்திகேயன் (1) சிறுவர் இலக்கியம் (4) சீமான் (7) சுற்றுச்சூழல் (6) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (3) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (31) தமிழ் தேசியம் (5) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (16) தமிழர் (45) தமிழர் பெருமை (17) தமிழறிஞர் முத்துநிலவன் (1) தமிழின் சிறப்பு (3) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (2) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (5) தாலி (1) தி.மு.க (11) திரட்டிகள் (4) திராவிடம் (9) திருமுருகன் காந்தி (1) திரைப்படம் (2) திரையுலகம் (9) திறனாய்வு (1) தினகரன் (1) துருவ் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (9) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தேர்தல்-2021 (2) தொலைக்காட்சி (2) தொழில்நுட்பம் (10) தோழர் தியாகு (1) நட்பு (13) நிகழ்வுகள் (5) நிர்மலா சீதாராமன் (1) நினைவேந்தல் (10) நீட் (5) நூல்கள் (10) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (3) பதிவர் உதவிக்குறிப்புகள் (10) பதிவுலகம் (24) பா.ம.க (2) பா.ஜ.க (30) பார்ப்பனியம் (14) பாலஸ்தீனம் (2) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (9) பீட்டா (1) புதிய வேளாண் சட்டம் (1) புறநானூறு (1) புனைவுகள் (10) பெண்ணியம் (6) பெரியார் (3) பேரறிவாளன் (2) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (5) பொதுவுடைமை (1) பொதுவுடைமைக் கட்சி (1) பொருளாதாரம் (2) பொழிவு (2) போட்டி (1) போர் (3) போராட்டம் (10) ம.ந.கூ (2) மகான் (1) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (10) மடோன் அஷ்வின் (1) மணிவண்ணன் (1) மதிப்புரை (5) மதுவிலக்கு (2) மருத்துவம் (7) மாநாடு (1) மாநாடுகள் (1) மாய இயல்பியம் (1) மாவீரர் நாள் (3) மாற்றுத்திறனாளிகள் (2) மிஷ்கின் (1) மீம்ஸ் (7) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (3) மேனகா காந்தி (1) மொழியரசியல் (2) மொழியறிவியல் (2) மோடி (11) யுவர் கோட் (1) யோகிபாபு (1) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) ராஜீவ் படுகொலை (1) வரலாறு (22) வாழ்க்கைமுறை (17) வாழ்த்து (5) வானதி சீனிவாசன் (1) விக்ரம் (1) விடுதலை (6) விடுதலைப்புலிகள் (13) விருது (1) விஜய் (1) விஜய் சேதுபதி (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (7) வை.கோ (6) வைரமுத்து (2) ழகரம் (1) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டெர்லைட் (2) ஹமாஸ் (2) ஹீலர் பாஸ்கர் (1) Bhagavath Gita (1) BJP (1) Casteism (1) Cauvery (1) Dalit (1) Genocide (3) Hindu (1) Karnataka (1) Magical Realism (1) Manisha (1) Modi (1) Notion Press (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (2) Religion (1) Scheduled Castes (1) Sexual Harassment (1) Tamilnadu (1) Tamils (1) Unicode (1) Unicode Consortium (1) UP (1) Women (1) Yogi Adityanath (1)

முகரும் வலைப்பூக்கள்