.

செவ்வாய், டிசம்பர் 31, 2013

ஓரினச் சேர்க்கை அங்கீகாரமும் பெண்ணியமும் - ஒரு புதிய கோணம்!

LGBT_flag
ஓரினச்சேர்க்கையாளர் குழுமக் கொடி
முன்னேற்றம் என்பது எப்பொழுதும் படிப்படியாக ஏற்பட வேண்டும். இது தனி மனிதனுக்கு மட்டுமில்லை, சமூகத்துக்கும் பொருந்தும்!

ஓரினச் சேர்க்கை சரியா, தவறா என்பது அப்புறம். ஆனால், அதற்குச் சட்டப்படி ஏற்பிசைவு (அங்கீகாரம்) வழங்கும் அளவுக்கு நம் சமூகம் முன்னேறிவிட்டதா என்பதே என் கேள்வி.

அமெரிக்காவில் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள், ஐரோப்பாவில் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்றால், அங்கெல்லாம் தனி மனித விடுதலை அந்தளவுக்கு முன்னேறியிருக்கிறது. இங்கு...?

அகநானூறு முதலான சங்க இலக்கியங்கள், பண்டைத் தமிழினம் எந்தளவுக்குப் பாலியல் நாகரிகத்துடனும் சுதந்திரத்துடனும் திகழ்ந்தது என்பதைக் காட்டுகின்றன. ஆனால், அப்படி வாழ்ந்த இனம் இது என இன்று சொன்னால் நம்மாலேயே நம்ப முடியாது.

ஒரு புறம், நம் மக்களில் பெரும்பாலானோருக்குப் பாலியல் அறிவே முழுமையாக இல்லை.

ஆணும் பெண்ணும் காதலிக்கவே இங்கு முழுமையான சுதந்திரம் இல்லை.

மறுபுறம், காதலுக்கும் காமத்துக்குமே இன்னும் சரிவர வேறுபாடு புரியாமல் பள்ளிப் பருவத்திலேயே பிள்ளைகள் ஒன்றையொன்று இழுத்துக்கொண்டு ஓடுகின்றன! (எதிரெதிர் பாலினரோடுதான்!)

நம் பிள்ளைகளுக்கு நாம் பாலியல் கல்விக்கே இன்னும் ஏற்பாடு செய்யவில்லை. அவ்வளவு ஏன், ஆண் குழந்தைகளையும் பெண் குழந்தைகளையும் வகுப்பறையில் சேர்த்து உட்கார வைத்துப் பாடம் கற்பிக்கும் அளவுக்குக் கூட இன்னும் நம் சமூகம் முன்னேறவில்லை. பாலியல் அறிவுடன் பிள்ளைகளை வளர்க்கும் நம் பழந்தமிழ்ச் சமூக அமைப்பும் இப்பொழுது இங்கு இல்லை.

இப்படி, பாலியல்துறையில் இன்னும் இருட்டிலேயே மூழ்கிக் கிடக்கும் ஒரு சமூகத்துக்கு, அதை வெட்டவெளிச்சமாகப் பேசக்கூடிய சமூகத்தைப் பின்பற்றும் தகுதி எப்படி இருக்க முடியும்? கொஞ்சமாவது சிந்திக்க வேண்டாவா?

அதே நேரம், ‘இந்தியப் பண்பாடு எனும் பெயரால் ஓரினச் சேர்க்கைக்கான ஏற்பிசைவை எதிர்ப்பவர்கள் சரியான கேடிகள்! எதற்கெடுத்தாலும், எப்பொழுது பார்த்தாலும் இந்தியப் பண்பாடு... இந்தியப் பண்பாடு... இந்தியப் பண்பாடு! தெரியாமல்தான் கேட்கிறேன், ‘இந்தியப் பண்பாடு என ஒன்று இருக்கிறதா?

தமிழ்ப் பண்பாடு இருக்கிறது, தெலுங்குப் பண்பாடு இருக்கிறது, கன்னடப் பண்பாடு, மகாராட்டிரப் பண்பாடு, ஒரியப் பண்பாடு எனக் காசுமீரப் பண்பாடு வரை பல பண்பாடுகள் இங்கு இருக்கின்றன. இந்து, முசுலீம், கிறித்தவப் பண்பாடுகள் கூட இருப்பதாக ஒப்புக்கொள்ளலாம். ஆனால், ‘இந்தியப் பண்பாடு என ஒன்று கிடையவே கிடையாது. அப்படி ஒன்று இருப்பதாகச் சொல்வது இந்தியத் தேசிய இனங்களை ஏமாற்றும் பன்னெடுங்காலப் பச்சைப் பொய்!

பண்பாடு என்பது முன்னோர் கடைப்பிடித்த நாகரிகம். அது முழுக்க முழுக்க இனம் சார்ந்ததாகவும், மதம் சார்ந்ததாகவும் மட்டுமே காலம் காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்திருக்கிறது. அப்படியிருக்க, பல மதங்களும், பல இனங்களும் வாழும் இந்நாட்டில் முழு நாட்டுக்கும் பொதுவான ஒரு பண்பாடு எப்படி இருக்க முடியும்? கேட்டால், இந்நாட்டின் பழமையான மதம் இந்து மதம்; எனவே இந்து மதப் பண்பாடே ‘இந்தியப் பண்பாடு என்பார்கள். அதுவும் பொய்! ஆங்கிலேயர் காலத்தில் நடத்தப்பட்ட இந்தியாவின் முதல் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்பொழுது, கிறித்தவம், இசுலாமியம், பார்சி போன்ற மதம் சார்ந்த மக்கள் தவிர மற்ற எல்லாரையும் ‘இந்துக்கள் பட்டியலிலேயே சேர்த்துக் கொள்ளும்படி, ஆங்கிலேயர்களுக்குத் தவறாக வழிகாட்டினார்கள் வெள்ளையர் அரசில் செல்வாக்கு பெற்றிருந்த அன்றைய பார்ப்பனர்கள். அதனால்தான் தமிழர், தெலுங்கர், கன்னடர், மலையாளியர் என மொத்தத் திராவிட இனமும் இந்துமயமானது. மேலோட்டமாகப் பார்க்க ஒரே மாதிரியாக இருப்பினும், கடவுளர், அவர்களை வழிபடும் முறைகள், சடங்குகள் என இந்து மதத்துக்கும் இங்குள்ள தேசிய இனங்களின் மதங்களுக்கும் எல்லா வகைகளிலும் அடிப்படையிலேயே பற்பல வேறுபாடுகள் உள்ளன. இது பற்றி அண்மைக்காலமாக விழிப்புணர்வு பெருகி வருகிறது. எனவே, ஒவ்வொரு தேசிய இனத்துக்கும் இங்கு தனித்தனி மதங்கள் இருந்திருக்கின்றன எனும்பொழுது, எல்லா இனங்களையும், எல்லா மதங்களையும் விழுங்கி ஏப்பம் விட்டு ஓர் உருவமாக வளர்ந்து நிற்கும் இந்து மதத்தை ஒரு மதம் என்றே சொல்ல முடியாது எனும்பொழுது அதன் பண்பாடுதான் இந்தியப் பண்பாடு என்பது துளியும் உண்மையில்லாதது!

சரி, மதம் போகட்டும்; மனிதத்துக்கு வருவோம்!

செவ்வாய், டிசம்பர் 17, 2013

வை.கோ பா.ஜ.க-வுடன் கூட்டணி வைப்பது சரியா? – ஓர் அலசல்!

MDMK-BJP_alliance

பாரதிய ஜனதாவுடனான தலைவர் வை.கோ அவர்களின் கூட்டணியையும், தமிழருவி மணியன் முதலான தமிழர் தலைவர்களின் இன்றைய பா.ஜ.க ஆதரவு நிலைப்பாட்டையும் விமரிசிக்கும் அனைவரிடமும் நான் கேட்க விரும்பும் ஒரே கேள்வி இதுதான். 

இதை விட்டால் வேறென்ன வழி இருக்கிறது? 

'எரிகிற கொள்ளியில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி' என்பதுதான் இன்றும் நாம் ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் முறையாக இருக்கிறது எனும்பொழுது, கூட்டணி மட்டும் புத்தர்களுடனும் காந்திகளுடனும் வைத்துக்கொள்ள வேண்டும் என நாம் எப்படி எதிர்பார்க்க முடியும்?

ஆம், பா.ஜ.க-தான் சிறந்த தேர்வு எனச் சொல்லவில்லை. மற்றவையெல்லாம் அதைவிட ஆபத்தானவை என்பதுதான் விதயமே!

ஒரு புறம், முள்ளிவாய்க்கால் பேரழிவை நிகழ்த்திய காங்கிரசு; மறு புறம், முள்ளிவாய்க்கால் முற்றம் இடித்த ஜெயலலிதா; இன்னொரு புறம், இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி இருக்கிறதா இல்லையா என்பது கூடத் தெரியாத இரசியா தனி ஈழத்தை எதிர்க்கிறது என்பதற்காகத் தாங்களும் தனி ஈழத்தை எதிர்க்கும் அறிவுக் கொழுந்துகளான பொதுவுடைமைத் தோழர்கள். பா.ஜ.க-வுக்குப் பதிலாக இவர்களில் யாரைத் தேர்ந்தெடுக்கச் சொல்கிறீர்கள் நண்பர்களே?

வெள்ளி, டிசம்பர் 06, 2013

மூவர் விடுதலையும் ஈழ விடுதலையும் - திறந்திருக்கும் புதிய வாசல்!



kutramatra moovar

மூன்று தூக்குக் கயிறுகளுள் ஒன்றில் இப்பொழுது பற்றியிருக்கிறது உண்மைத் தீ!

‘ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் அப்படி வாக்குமூலம் கொடுக்கவே இல்லை’ என்று 22 ஆண்டுகளுக்குப் பின் வாய் திறந்து கூறியுள்ளார், அந்த வாக்குமூலத்தைப் பெற்ற விசாரணை அலுவலர் தியாகராஜன் அவர்கள்.

‘சிவராசன் கேட்டுக்கொண்டபடி பற்றரிகளை (Batteries) வாங்கிக் கொடுத்தேன். ஆனால், அது ராஜீவ் காந்தியைக் கொல்லத்தான் என்பது எனக்குத் தெரியாது’ என்றுதான் பேரறிவாளன் வாக்குமூலம் தந்ததாகவும், ஆனால் அந்த இரண்டாவது வரியைத் (எதற்காகப் பயன்படப் போகிறது என்பது தெரியாது) தான் வாக்குமூலத்தில் பதிவு செய்யவில்லை எனவும் வெளிப்படையாகக் கூறியிருக்கிறார் அவர்! இதை நீதிமன்றத்தில் சொல்லவும் தான் ஆயத்தமாக இருப்பதாகவும் பெருந்தன்மையோடு முன்வந்திருக்கிறார்!

Thiyagarajan CBI
இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகாவது உண்மையைத் தயங்காமல், அதுவும் இவ்வளவு உறுதியாக, தெளிவாக வெளியிட முன்வந்தமைக்காக, அதிலும் நீதிமன்றத்திலும் சொல்ல ஒப்புக்கொண்டமைக்காக முன்னாள் காவல்துறைக் கண்காணிப்பாளர் திரு.தியாகராஜன் அவர்களுக்குத் தமிழ்ச் சமூகம் நன்றி உரைத்தே ஆக வேண்டும்! எனினும், இன்னும் கொஞ்சம் முன்பாகவே அவர் இதை வெளியிட்டிருக்கலாம் என்பதே அனைவரின் ஆதங்கமும். சரி, இப்பொழுதாவது சொன்னாரே என ஆறுதல்பட்டுக்கொள்ள வேண்டியதுதான்.

பெரிய சான்றுகளோ, ஐயம் திரிபற்ற உறுதிப்பாடுகளோ (Non questionable proof) இல்லாமல் எந்த ஒப்புதல் வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தியாவின் இத்தனை நீதிமன்றங்களும் இவர்களுக்குத் தூக்குத் தண்டனையை வழங்கினவோ, அந்த வாக்குமூலங்களில் ஒன்றே தவறானது என்று ஆகிவிட்ட நிலையில் இனி மற்றவர்களின் ஒப்புதல் வாக்குமூலங்களும் மறு ஆய்வுக்குரியவை என்பதில் எந்த ஐயமும் இல்லை. அதற்கு உடனடியாக ஏற்பாடு செய்யப்பட வேண்டும்! இந்த மூவரின் உயிர் காக்கச் சட்டப் போராட்டம் நடத்தி வரும் ஐயா பழ.நெடுமாறன் முதலானோர் இனியும் தாமதிக்காமல் ராஜீவ் காந்தி கொலை வழக்கை முழுமையாகத் தொடக்கத்திலிருந்து மறு விசாரணை செய்ய வேண்டி உடனடியாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க வேண்டும்! காரணம், இவர்கள் மூவரும் இந்தக் கொலை வழக்கில் சிக்க வைக்கப்பட்டிருப்பது இவர்களையும் இவர்கள் குடும்பத்தினரையும் மட்டும் பாதிக்கவில்லை; தமிழ் இனத்தையே பாதிக்கிறது!

இந்தக் கொலைப் பழி விடுதலைப்புலிகள் மீது விழுந்ததால்தான் அந்த இயக்கத்தின் மீது இந்தியா தடை போட்டது.

தங்கள் நாட்டு எல்லையைத் தாண்டி அயல்நாட்டில் இப்படி ஒரு தீவிரவாதச் செயலைச் செய்ததாகக் கூறி இந்தியா போட்ட அந்தத் தடைதான், ஒன்றுமறியாத தங்கள் அப்பாவி மக்களின் பாதுகாப்புக்காகத் தனிநாடு கோரிப் போராடிய விடுதலை இயக்கம் ஒன்றைப் பன்னாட்டுத் தீவிரவாத இயக்கமாக உருவகப்படுத்தியது.

அதைத் தொடர்ந்துதான், உலகின் மற்ற நாடுகளும் விடுதலைப்புலிகள் அமைப்பின் மீது தடை போட்டு அதைப் பன்னாட்டுத் தீவிரவாத அமைப்பாக அறிவித்தன. அதன் விளைவு, 2001ஆம் ஆண்டு இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பின், உலகின் எல்லா ஆயுதக் குழுக்களையும் ஒழித்துக் கட்ட வேண்டுமென்ற அமெரிக்காவின் முடிவுக்கு விடுதலைப்புலிகள் இயக்கமும் பலியானது; அத்தோடு சேர்ந்து நம் இனமும் அழிந்தது.

ஆக, அனைத்துக்கும் மூலக் காரணம் ராஜீவ் காந்தி கொலை! அந்த வழக்கில் மேற்கொள்ளப்பட்ட தவறான விசாரணை முறைகள்!

“அஃது எப்படி? பேரறிவாளன் ஒருவரின் வாக்குமூலம் தவறாகப் பதியப்பட்டதாலேயே இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற விடுதலைப்புலிகளின் பங்கு இல்லையென்றாகி விடுமா? விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கும் இந்தக் கொலைக்கும் தொடர்பு இல்லையென்றுதான் ஆகிவிடுமா?” எனக் கேள்வி எழலாம்.

Liberation Tigers of Tamil Eelamஇந்த ஒன்றை மட்டும் வைத்து அப்படிச் சொல்லமுடியாதுதான். ஆனால் எப்பொழுது, வழக்கில் முதன்மையாகக் குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவரின் வாக்குமூலமே தவறாகப் பதியப்பட்டிருக்கிறது என்று தெரிந்துவிட்டதோ, இனி மொத்த வழக்கையுமே மறு விசாரணைக்கு உட்படுத்துவதுதான் முறை. அதுவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர்களின் ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் தண்டனை வழங்கப்பட்டுள்ள இந்த வழக்கில் இது சிறிதும் மறுக்க முடியாதது! அப்படியொரு விசாரணை மேற்கொள்ளப்படும்பொழுது திடுக்கிடும் உண்மைகள் பல வெளிவரும் எனவும், அவற்றுள், விடுதலைப்புலிகள் இயக்கம் இந்தக் கொலையைச் செய்யவில்லை என்பதும் ஒன்றாக இருக்கும் எனவும்தான் பலரும் நம்புகிறார்கள்! அதற்கு ஏராளமான காரணங்கள் இருக்கின்றன.

ராஜீவை விடுதலைப்புலிகள் கொல்லவில்லை என்பதற்கான வாதங்கள்!

என் புதினத்தை வாங்க

என் புதினத்தை வாங்க
மேலே உள்ள படத்தை அழுத்துங்கள்
பதிவுகளை உடனுக்குடன் பெற

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

வாட்சாப் தடத்தில் (Channel)...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு (1) 13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (9) அஞ்சலி (21) அணு உலை (2) அம்பிகை செல்வகுமார் (1) அம்மணம் (1) அமேசான் (6) அயல்நாட்டுத் தமிழர் (1) அரசியல் (91) அழைப்பிதழ் (7) அற்புதம்மாள் (2) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (40) ஆட்சென்ஸ் (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இங்கிலாந்து (1) இசுரேல் (2) இட ஒதுக்கீடு (4) இணையம் (19) இந்தித் திணிப்பு (1) இந்தியா (25) இரசியா (1) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இலக்கணம் (3) இலங்கை (1) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (23) இனம் (46) ஈழம் (44) உக்கிரேன் (1) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (24) எழுவர் விடுதலை (1) ஐ.நா (5) ஒருங்குறி (1) கடவுள் (1) கதை (3) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (11) கலைச்சொல்லாக்கம் (1) கவிஞர் தாமரை (1) கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் (2) கவிஞர் ரேவதி (1) கவிதை (19) காங்கிரஸ் (6) காசா (2) காணொளி (4) காதல் (2) காந்தியம் (1) கார்த்திக் சுப்புராஜ் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (5) கிரந்தம் (1) கீச்சுகள் (2) குழந்தைகள் (10) குறள் (2) கூகுள் (2) கையொப்பம் (2) கோட்பாடு (9) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (16) சந்திப்பு (1) சமயம் (12) சமற்கிருதம் (2) சமூகநீதி (4) சரிதா (1) சாதி (10) சிங்களர் (1) சித்திரக்கதைகள் (1) சிவகார்த்திகேயன் (1) சிறுவர் இலக்கியம் (4) சீமான் (7) சுற்றுச்சூழல் (6) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (3) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (31) தமிழ் தேசியம் (5) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (16) தமிழர் (45) தமிழர் பெருமை (17) தமிழறிஞர் முத்துநிலவன் (1) தமிழின் சிறப்பு (3) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (2) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (5) தாலி (1) தி.மு.க (11) திரட்டிகள் (4) திராவிடம் (9) திருமுருகன் காந்தி (1) திரைப்படம் (2) திரையுலகம் (9) திறனாய்வு (1) தினகரன் (1) துருவ் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (9) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தேர்தல்-2021 (2) தொலைக்காட்சி (2) தொழில்நுட்பம் (10) தோழர் தியாகு (1) நட்பு (13) நிகழ்வுகள் (5) நிர்மலா சீதாராமன் (1) நினைவேந்தல் (10) நீட் (5) நூல்கள் (10) நூற்றாண்டு (1) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (3) பதிவர் உதவிக்குறிப்புகள் (10) பதிவுலகம் (24) பா.ம.க (2) பா.ஜ.க (30) பார்ப்பனியம் (14) பாலஸ்தீனம் (2) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (10) பீட்டா (1) புதிய வேளாண் சட்டம் (1) புறநானூறு (1) புனைவுகள் (10) பெண்ணியம் (6) பெரியார் (3) பேரறிவாளன் (2) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (5) பொதுவுடைமை (2) பொதுவுடைமைக் கட்சி (2) பொருளாதாரம் (2) பொழிவு (2) போட்டி (1) போர் (3) போராட்டம் (10) ம.ந.கூ (2) மகான் (1) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (10) மடோன் அஷ்வின் (1) மணிவண்ணன் (1) மதிப்புரை (5) மதுவிலக்கு (2) மருத்துவம் (7) மாநாடு (1) மாநாடுகள் (1) மாய இயல்பியம் (1) மாவீரர் நாள் (3) மாற்றுத்திறனாளிகள் (2) மிஷ்கின் (1) மீம்ஸ் (7) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (3) மேனகா காந்தி (1) மொழியரசியல் (2) மொழியறிவியல் (2) மோடி (11) யுவர் கோட் (1) யோகிபாபு (1) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) ராஜீவ் படுகொலை (1) வரலாறு (22) வாழ்க்கைமுறை (17) வாழ்த்து (6) வானதி சீனிவாசன் (1) விக்ரம் (1) விடுதலை (6) விடுதலைப்புலிகள் (13) விருது (1) விஜய் (1) விஜய் சேதுபதி (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (7) வை.கோ (6) வைரமுத்து (2) ழகரம் (1) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டெர்லைட் (2) ஹமாஸ் (2) ஹீலர் பாஸ்கர் (1) Bhagavath Gita (1) BJP (1) Casteism (1) Cauvery (1) Dalit (1) Genocide (3) Hindu (1) Karnataka (1) Magical Realism (1) Manisha (1) Modi (1) Notion Press (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (2) Religion (1) Scheduled Castes (1) Sexual Harassment (1) Tamilnadu (1) Tamils (1) Unicode (1) Unicode Consortium (1) UP (1) Women (1) Yogi Adityanath (1)

முகரும் வலைப்பூக்கள்