பதிவுக்கு
வரும் கருத்துக்களைப் பரப்புவது, அதன் மூலம் வருகையாளர்கள் எண்ணிக்கையை
உயர்த்துவது ஆகியவற்றில் முகநூல் கருத்துப் பெட்டிக்கு நிகர் எதுவும் கிடையாது
என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதே நேரம், பிளாகர் கருத்துப் பெட்டியில்
இடப்படும் கருத்துக்களின் எண்ணிக்கைதான் பதிவின் முகப்பில் காட்டப்படுகிறது
என்பதாலும், கருத்துத் திரட்டிகள் (Comment aggregators), கருத்துப் பட்டியல் செயலிகள் (Recent Comments widgets) ஆகியவை கூட பிளாகர் கருத்துப் பெட்டியில் இடப்படும்
கருத்துக்களைத்தான் திரட்டுகின்றன என்பதாலும் பிளாகர் கருத்துப் பெட்டியும்
தவிர்க்க முடியாத முதன்மையைப் பெறுகிறது. அப்படிப்பட்ட பிளாகர் கருத்துப்
பெட்டியில் ஒரு புதிய மேம்பாட்டைச் செய்திருக்கிறது கூகுள்.
சில இணையத்தளங்களில் கருத்துரை இடும்பொழுது, நம் கருத்து வெளியிடப்படுவதை நாம் அறியவும், மேற்கொண்டு யாராவது அந்தப் பதிவுக்குக் கருத்து தெரிவித்தால் அதை நாம் தெரிந்து கொள்ளவும் வசதி செய்யப்பட்டிருப்பதைப் பார்த்திருப்பீர்கள். கீழ்க்காணும் படத்தில் அம்புக்குறியிட்டுக் காட்டப்பட்டிருப்பது போல.
தனது 13-ஆம் பிறந்தநாளை ஒட்டித் தனது
சேவைகளையெல்லாம் கூகுள் மேம்படுத்தி வருவதை நாம் பார்த்துக் கொண்டுதான்
வருகிறோம். அந்த வரிசையில் இப்பொழுது இந்தப் புதிய வசதியையும் அறிமுகப்படுத்தி
இருக்கிறது கூகுள்.
இனி, பிளாகர் வலைப்பூக்களில் கருத்துரை இட்டு
அனுப்பியதும் பாருங்கள்! கருத்துப் பெட்டியின் அடிப் பக்கம் ஒரு சிறு கட்டம் வரும். (பார்க்க: கீழே உள்ள படம்).