பதிவுக்கு
வரும் கருத்துக்களைப் பரப்புவது, அதன் மூலம் வருகையாளர்கள் எண்ணிக்கையை
உயர்த்துவது ஆகியவற்றில் முகநூல் கருத்துப் பெட்டிக்கு நிகர் எதுவும் கிடையாது
என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதே நேரம், பிளாகர் கருத்துப் பெட்டியில்
இடப்படும் கருத்துக்களின் எண்ணிக்கைதான் பதிவின் முகப்பில் காட்டப்படுகிறது
என்பதாலும், கருத்துத் திரட்டிகள் (Comment aggregators), கருத்துப் பட்டியல் செயலிகள் (Recent Comments widgets) ஆகியவை கூட பிளாகர் கருத்துப் பெட்டியில் இடப்படும்
கருத்துக்களைத்தான் திரட்டுகின்றன என்பதாலும் பிளாகர் கருத்துப் பெட்டியும்
தவிர்க்க முடியாத முதன்மையைப் பெறுகிறது. அப்படிப்பட்ட பிளாகர் கருத்துப்
பெட்டியில் ஒரு புதிய மேம்பாட்டைச் செய்திருக்கிறது கூகுள்.
சில இணையத்தளங்களில் கருத்துரை இடும்பொழுது, நம் கருத்து வெளியிடப்படுவதை நாம் அறியவும், மேற்கொண்டு யாராவது அந்தப் பதிவுக்குக் கருத்து தெரிவித்தால் அதை நாம் தெரிந்து கொள்ளவும் வசதி செய்யப்பட்டிருப்பதைப் பார்த்திருப்பீர்கள். கீழ்க்காணும் படத்தில் அம்புக்குறியிட்டுக் காட்டப்பட்டிருப்பது போல.
தனது 13-ஆம் பிறந்தநாளை ஒட்டித் தனது
சேவைகளையெல்லாம் கூகுள் மேம்படுத்தி வருவதை நாம் பார்த்துக் கொண்டுதான்
வருகிறோம். அந்த வரிசையில் இப்பொழுது இந்தப் புதிய வசதியையும் அறிமுகப்படுத்தி
இருக்கிறது கூகுள்.
இனி, பிளாகர் வலைப்பூக்களில் கருத்துரை இட்டு
அனுப்பியதும் பாருங்கள்! கருத்துப் பெட்டியின் அடிப் பக்கம் ஒரு சிறு கட்டம் வரும். (பார்க்க: கீழே உள்ள படம்).
கருத்துரையை அனுப்பியதும் இதில் ஒரு சரி (Tick) குறி
இட்டுவிடுங்கள். அதன் பின், உங்கள் கருத்து வெளியானது குறித்தும், அந்தப்
பதிவுக்குப் பிறர் தெரிவிக்கும் கருத்துக்களும் உடனுக்குடன் உங்களுக்கு மின்னஞ்சல்
வழியே தெரிவிக்கப்படும். பிடிக்காவிட்டால், உங்களுக்கு வரும் மின்னஞ்சலில் உள்ள
‘விலகல்’ (Unsubscribe)
பொத்தானை அழுத்தி மின்னஞ்சல்களை நீங்கள் நிறுத்திக் கொள்ளலாம் வழக்கம் போல்.
இந்தப் புதிய மேம்பாட்டால் பதிவர்களுக்கும் பயன்
உண்டு. எப்படியெனில், கருத்துக்களுக்காக யாரும் ஒரு
பதிவை மீண்டும் மீண்டும் வந்து பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள். ஆனால், இந்தப்
புதிய வசதியால், கருத்து வெளியிடப்பட்ட தகவல், அதற்கு ஆசிரியர் தெரிவித்த மறுமொழி,
மற்றவர்கள் தெரிவித்த பதில்கள், அந்தப் பதிவு பற்றிய மற்றவர்களின் கருத்துக்கள்
எனப் பலமுறை அந்தப் பதிவு பற்றிய மின்னஞ்சல்கள் கருத்துரையாளருக்குச் செல்லும். (அதாவது,
அவர் விலகல் பொத்தானை அழுத்தாமல் இருந்தால்). அவரும் புதிய கருத்துக்களைப்
பார்த்துவிட்டு அவற்றுக்குப் பதிலளிக்க மறுபடியும் வருவார். அப்படியே, நாம்
புதிதாக எழுதிய பதிவு கண்ணில் பட்டால் அதையும் படித்துவிட்டுச் செல்வார். ஆக, இது
ஒரு நல்ல விளம்பரமாக அமைந்து, கருத்துரைத்தவரை மறுபடியும் மறுபடியும் நம்
தளத்துக்கு வரவழைக்கும். தளத்தின் பார்வை எண்ணிக்கை உயரும். பதிவுகள் பற்றி நல்ல விவாதச்
சூழலையும் உருவாக்கும். குறிப்பாக, சர்ச்சைக்குரிய பதிவுகள், தொழில்நுட்பப்
பதிவுகள் போன்றவற்றை எழுதுபவர்களுக்கு இது நல்ல பலனளிக்கும் என நினைக்கிறேன்.
எனவே, வலைப்பூவில் முகநூல் கருத்துப் பெட்டி
இணைக்காமல் பிளாகர் கருத்துப் பெட்டியை மட்டுமே நம்பியிருக்கும் பதிவர்கள்,
கருத்துப் பெட்டியின் மேல் கருத்திடத் தூண்டும் வகையில் ஏதேனும் எழுதி வைப்பது, என்.சி நிரல் (nccode) வசதி சேர்ப்பது போன்றவற்றைச்
செய்து வருகையாளர்களைக் கருத்திட ஊக்குவிக்க இது சரியான நேரம்!
எச்சரிக்கை! ஏற்கெனவே,
முகநூல் கருத்துப்பெட்டியை விடப் பிளாகர் கருத்துப்பெட்டியைத்தான்
பெரும்பான்மையோர் பயன்படுத்துகிறார்கள். எனவே, இரண்டு பெட்டிகளும் வைத்திருப்பவர்கள்
இந்த ஊக்குவிப்பைச் செய்ய வேண்டாம்! அப்புறம், முகநூல் கருத்துப்பெட்டி
சீண்டுவாரின்றிப் போய்விடும்.
* பிளாகர் கருத்துப் பெட்டியில் முன்பே கூட இந்த வசதி இருந்ததாகவும், ஆனால், கருத்துரையைத் தட்டெழுதி முடித்து, வெளியிடு (Publish) பொத்தானை அழுத்துமுன் அந்தக் கட்டத்தில் குறியிட்டுவிட வேண்டுமாயிருந்ததாகவும் என் உடன் பணிபுரியும் மேல்நிலை அலுவலரும் நண்பருமான கார்த்திகைப் பாண்டியன் அவர்கள் கூறியதற்கேற்ப மேற்கண்ட வரிகள் நீக்கப்படுகின்றன. அன்னாருக்கு என் நன்றிகள்!
~~~~~~~~~~~~~~~
* பிளாகர் கருத்துப் பெட்டியில் முன்பே கூட இந்த வசதி இருந்ததாகவும், ஆனால், கருத்துரையைத் தட்டெழுதி முடித்து, வெளியிடு (Publish) பொத்தானை அழுத்துமுன் அந்தக் கட்டத்தில் குறியிட்டுவிட வேண்டுமாயிருந்ததாகவும் என் உடன் பணிபுரியும் மேல்நிலை அலுவலரும் நண்பருமான கார்த்திகைப் பாண்டியன் அவர்கள் கூறியதற்கேற்ப மேற்கண்ட வரிகள் நீக்கப்படுகின்றன. அன்னாருக்கு என் நன்றிகள்!
பதிவுகளை உடனுக்குடன் பெறக் கீழ்க்காணும் பொத்தானைச் சொடுக்கி
வாட்சாப் தடத்தில் (Whatsapp Channel) இணையுங்கள்!!
இதற்கு முன் "suscribe by email" என்று இருந்தது...
பதிலளிநீக்குவிளக்கம் பலருக்கும் பயன்தரும்... நன்றி... வாழ்த்துக்கள்...
நன்றி தனபாலன் ஐயா!
நீக்குமீண்டும் நீங்கள் கருத்திடும்படியான பதிவு எழுதியதில் மகிழ்ச்சி!
பயனுள்ள பதிவு.
பதிலளிநீக்குஉங்கள் பாராட்டுக்கு நன்றி செல்லப்பா அவர்களே! தொடர்ந்து படியுங்கள்! உங்கள் செம்மையான கருத்துக்களைப் பதியுங்கள்! மேற்கண்ட இணைப்புகள் மூலம் சமூக வலைத்தளங்கள், திரட்டிகள் ஆகியவற்றிலும் பதிவைப் பகிர்ந்து உங்களுக்குப் பிடித்த இந்தப் பதிவு மற்றவர்களையும் சென்றடைய உதவுங்கள்!
நீக்குஒரு சிறு அறிமுகம்: இ.பு.ஞானப்பிரகாசன் - பதிவுலகுக்குப் புதியவன். ‘எழுத்து எனும் போர்க்கருவி ஏந்திய ஒரு தமிழ்க்குருவி’ எனும் முழக்கத்தோடு இணைய உலகில் புகுந்திருக்கும் தீவிரத் தமிழ்ப் பற்றாளன்! அகச் சிவப்புத் தமிழ் – கடந்த ஏப்பிரல் முதல் இயங்கி வரும் வலைப்பூ. ‘அகத்தின் சிவப்பு இங்கே தமிழில் தெரியும்!’ எனும் முழக்கத்துடன் அரசியல், இலக்கியம், சமூகம் பற்றிய தனியொருவரின் எழுத்துக்களுக்காகத் தொடங்கப்பட்டுள்ள இத்தளத்தில் அவ்வப்பொழுது தொழில்நுட்பப் பதிவுகளும் பார்க்கலாம்.
பதிலளிநீக்குVisit : http://www.bloggernanban.com/2013/10/blogger-follower-widget.html
நன்றி தனபாலன் ஐயா!
நீக்கு