இதுதான் தமிழர்களின் பெயர் சூட்டும் முறையா?...
இதோ, பார்க்கலாம்!...
தமிழரசர் முதல் கவியசர் வரை – ஒரு பெயரியல் அலசல்
இந்துக் கோயில்களின் பூசை முறைகளும் அவற்றில் தமிழர்களுக்கு இருக்கும் உரிமைகளும் குறித்த திடுக்கிடும் தகவல்கள்!
தீக்குளிக்கப் போகிறீர்களா? ஒரு நிமிடம்! அதற்கு முன் இதை ஒரே ஒருமுறை படித்து விடுங்கள்!
இன்றைய வாழ்வில் தமிழர்கள் தாய்மொழிக்கு அளித்துள்ள இடம் எது? - ஒரு நுட்பமான ஆராய்ச்சி!
கருணாநிதி மீது உண்மையிலேயே அக்கறையுள்ளவர்கள் தவறவிடக்கூடாத பதிவு!
முந்தைய ஆட்சிகளை விட இந்த பா.ஜ.க., ஆட்சி அப்படி என்ன கேடுகெட்டுப் போய்விட்டது? அடுக்கடுக்கான காரணங்களுடன் ஓர் இன்றியமையாத எச்சரிக்கைப் பதிவு!
மருத்துவப் பொது நுழைவுத் தேர்விலிருந்து (NEET) தமிழ்நாட்டுக்கு விலக்களிக்கும் சட்டமுன்வடிவை (bill) இயற்றி ஆளுநருக்கு அனுப்பினால் தமிழ்நாட்டு மக்களின் அந்த ஒருமித்த எதிர்பார்ப்பையும் நலன்களையும் காலில் போட்டு மிதிக்கும் விதமாய் அதைத் திருப்பி அனுப்பியிருக்கிறார் ஆளுநர். இது குறித்து அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்று முறையே அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தால் சற்றும் கூச்சமே இல்லாமல் அதைப் புறக்கணிப்பதாக அறிவிக்கிறது அ.தி.மு.க. இந்த நுழைவுத்தேர்வை ஆதரிக்கும் பா.ச.க., கூட்டத்தைப் புறக்கணிக்கிறது என்றால் அதில் பொருள் இருக்கிறது. ஆனால் இதே நுழைவுத்தேர்வுக்கு எதிராக ஆளும் தி.மு.க., அரசு சட்டப்படி என்ன நடவடிக்கை மேற்கொண்டாலும் ஆதரவளிப்பதாகச் சட்டமன்றத்தில் கூறிவிட்டு அ.தி.மு.க., இன்று இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தைப் புறக்கணிப்பது தமிழ் மக்களுக்குச் செய்யும் வடிகட்டிய இரண்டகம் (betrayal)! எனக்கு இதைப் பார்க்கும்பொழுது என்ன தோன்றுகிறது தெரியுமா? இதோ கீழே பாருங்கள்:-