.

வெள்ளி, ஜனவரி 29, 2021

தில்லி உழவர் போராட்டத்தில் வன்முறை! - நாம் உணர வேண்டிய ஒரு முக்கியமான பாடம்!

violence in Delhi farmers protest
71ஆம் ஆண்டுக் குடியரசு நாளைக் குடிமக்களின் உதிரத்தைப் பன்னீராய்த் தெளித்துக் கொண்டாடியிருக்கிறது இந்தியா!

தில்லி உழவர் போராட்டத்தில் காவல்துறை நடத்திய வன்முறை வெறியாட்டத்தை வேறெப்படிச் சொல்ல முடியும்?  கேட்டால், “போராட்டத்தில் வன்முறையாளர்கள் ஊடுருவி விட்டார்கள். அவர்கள் நடத்திய வன்முறையால்தான்  காவல்துறை தாக்குதல் நடத்த வேண்டி வந்தது" என்கிறார்கள். 

காலங்காலமாக நாம் கேட்டுக் கேட்டுப் புளித்துப் போன அதே பழைய பொய்! சென்னை சல்லிக்கட்டுப் போராட்டம், தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம் என எல்லா மக்கள் போராட்டங்களின் பொழுதும் சொல்லப்பட்ட அதே... அதே... அதே... சாக்கு!

காந்திய வழிப் போராட்டங்களை ஒடுக்க இந்த காந்தி தேசம் வழக்கமாகக் கையாளும் சூழ்ச்சிதானே இது? கட்டுக் கோப்பாக நடக்கும் அறவழிப் போராட்டத்தில் வன்முறையாளர்களை ஊடுருவச் செய்து, சரியான நேரத்தில் அவர்களைக் கலவரம் செய்ய வைத்து, அவர்களை அடக்கும் சாக்கில் உண்மையான அமைதிப் போராளிகளை அடித்து நொறுக்கிப் போராட்டத்தை ஒன்றுமில்லாமல் ஆக்குவது நம் ஆட்சியாளர்களுக்குக் கைவந்த கலை.

அறவழிப் போராட்டங்களை ஒடுக்க இப்படி ஒரு வழி அன்றே வெள்ளைக்காரனுக்குத் தோன்றியிருந்தால் இன்று இந்தியன் எவனும் கோட்டையில் கொடியேற்றிக் கொண்டிருக்கவும் முடியாது; இவர்களிடம் நாம் அடிவாங்கிக் கொண்டிருக்கவும் தேவையிருக்காது! அறவழிப் போராட்டத்தை உருவாக்கிய இந்தியாதான் அதை அடக்குவது எப்படி என்பதையும் கண்டறிந்தது என்பது நம் தலைக்குனிவான பெருமை!

குடியரசு நாளை நெருக்கத்தில் வைத்துக் கொண்டு இவர்கள் போராட்டம் தொடங்கியபொழுதே தமிழர்களுக்குத் தெரியும், கடைசியில் இந்தப் போராட்டம் இப்படித்தான் முடித்து வைக்கப்படும் என்று. ஆனால் அதையும் மீறி நம்பிக்கையளிப்பதாக இருந்த ஒரே விதயம், இந்தப் போராட்டத்தின் அளவு!

உலக வரலாறே மிரளும் அளவில் ஒரேயடியாக ஒன்றரை கோடிப் பேர் திரண்டு நடத்திய பூமிப் பந்தின் பேரண்டப் பெரும் போராட்டம் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக நேற்று வரை நடைபெற்று வந்த தில்லி உழவர் போராட்டம்! இவ்வளவு பெரிய போராட்டத்தைச் சில ஆயிரம் காவல்துறையினரையோ துணைப்படையையோ வைத்துக் கொண்டு எப்படிக் கலைத்து விட முடியும் என்று நினைத்திருந்தோம். ஆனால் அரசு இயந்திரம் நினைத்தால் ஆகாதது எதுவும் இல்லை என்பது மீண்டும் அழுத்தம் திருத்தமாக இங்கே நிலைநாட்டப்பட்டிருக்கிறது.

இதன் மூலம் இந்திய அரசு நமக்கு நடத்த விரும்பும் பாடம் ஒன்றே ஒன்றுதான் - மக்கள் போராட்டங்களின் மூலம் இனி இங்கு ஒரு புல்லைக் கூடப் பிடுங்க முடியாது என்பதுதான் அது!

புரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே! இஃது ஒன்றும் பதினாறாம் லூயி காலமோ, சார் மன்னர் காலமோ, காந்தியடிகளின் காலமோ கூட இல்லை, மக்கள் புரட்சி செய்து ஆட்சியை மாற்றுவதற்கு. எப்பொழுது நாம் படைத்துறை அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் (militarial science & technology) அளவுக்கு மீறி வளர விட்டோமோ அப்பொழுதே மக்கள் திரளின் ஆற்றல் ஒன்றுமில்லாமல் போய் விட்டது.

ஆம்! மன்னராட்சிக் காலங்களில் மக்களிடமிருந்த ஆற்றல் கூட இன்றைய மக்களாட்சிக் காலத்தில் இல்லை. எவ்வளவு கசந்தாலும் இதுதான் உண்மை! நினைத்துப் பாருங்கள், நம்மிடம் என்ன இருக்கிறது?

நாம் அறவழியில் போராடினால் அவர்கள் தடிக்கம்புகளால் அடிக்கிறார்கள். நாம் கல்லும் கட்டையும் கொண்டு வந்தால் அவர்கள் துப்பாக்கிகளால் சுட்டுத் தள்ளுகிறார்கள். நாம் துப்பாக்கி கொண்டு வந்தால் அதை எதிர்கொள்ளக் கண்ணீர்ப் புகைக் குண்டு முதல் அணுக்குண்டு வரை எல்லாமே அவர்களிடம் இருக்கின்றன. மக்களாகிய நம்மிடம் எதுவுமே கிடையாது.

இதனால்தான் ஈழம் போன்ற நாடுகளில் நடைபெற்ற வீரப் போராட்டங்கள் முதல் இந்தியா போன்ற நாடுகளில் நடைபெறும் அமைதிப் போராட்டங்கள் வரை அனைத்தும் இறுதியில் தோல்வியையே தழுவுகின்றன.

எனவே அறவழியோ மறவழியோ எந்த வகையிலும் மக்கள் போராட்டங்களால் இனி இங்கு எதையுமே சாதித்து விட முடியாது என்பதை நாம் உணர்ந்தே தீர வேண்டும்! குறிப்பாக அரசியல் தலைவர்கள், போராளிகள் இதை உணர்ந்தாக வேண்டும்! அப்பொழுதுதான் மக்கள் போராட்டங்களுக்கு மாற்றாக இன்னொரு தீர்வுமுறையை நாம் வடிவமைக்க முடியும்.

உலகின் எல்லா நாடுகளிலும் மக்கள் தங்கள் விடுதலைப் போராட்டத்துக்கு ஆய்தவழியையே நாடியபொழுது காந்தியடிகள் மட்டும்தான் முதன்முதலாக அமைதி வழிப் போராட்டம் எனும் புதிய வடிவத்தை முன்வைத்தார். அதற்குக் காரணம், இந்திய மக்கள் எவ்வளவு பெரிய படையாகத் திரண்டு வந்தாலும் அனைவரையும் கொன்று குவிக்கும் அளவுக்குப் பெரும் ஆய்த வலிமை அன்றே இங்கிலாந்திடம் இருந்ததால்தான்.

ஆனால் அன்றைய ஆய்தங்களெல்லாம் வெறும் விளையாட்டுப் பொம்மைகள் எனச் சொல்லக்கூடிய அளவுக்குப் பன்மடங்குப் பேரழிவு ஆய்தங்கள் இன்று உலக நாடுகளிடம் - குறிப்பாக இந்தியாவிடம் - உள்ளன. அதே நேரம், எப்பேர்ப்பட்ட ஆய்தங்களையும் தோற்கடிக்கும் பேராய்தமாக காந்தியடிகள் முன்வைத்த அறவழிப் போராட்டத்தைக் காலி செய்யும் கலையிலும் இன்றைய இந்தியா திறன் வாய்ந்து விளங்குகிறது.

எனவே அன்று காந்தியடிகள் எப்படி ஆய்த வழிப் போராட்டத்துக்கு மாற்றாக அறவழிப் போராட்டம் என்று ஒரு புதிய தீர்வுமுறையை முன்வைத்தாரோ அதே போல் ஆய்த வழி - அறவழி ஆகிய இரு வகைப் போராட்டங்களும் எடுபடாத இன்றைய அரசியல் சூழலில் இவை இரண்டும் அல்லாத இன்னொரு புதிய தீர்வுமுறையை வடிவமைத்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்! 

இதைத்தான் வரலாற்றின் மாபெரும் அறப் போராட்டமான தில்லி உழவர் போராட்டத்தின் தோல்வி காவல்துறை வன்முறை நமக்கு உணர்த்தியிருக்கிறது!

உணர்வோமா நாம்?

(நான் ‘கீற்று’ இதழில் 29.01.2021 அன்று எழுதியது, திருத்தங்களுடன்)
 
பி.கு.: போராட்டம் முடிந்து விட்டதாகக் கருதி எழுதப்பட்ட கட்டுரை இது. முடியவில்லை என்று தோழர்கள் தெரிவித்ததை அடுத்துத் தவறான வரிகள் அடிக்கப்பட்டுள்ளன/திருத்தப்பட்டுள்ளன. இதற்கேற்ப தலைப்பும் மாற்றப்பட்டுள்ளது. இம்மாற்றங்கள் செய்யப்பட்ட நாள் 30.01.2021.
❀ ❀ ❀ ❀ ❀
படங்கள்: நன்றி துவிட்டர் போராளிகள்.

 பதிவுகளை உடனுக்குடன் பெறக் கீழ்க்காணும் பொத்தானைச் சொடுக்கி
வாட்சாப் தடத்தில் (Whatsapp Channel) இணையுங்கள்!!

Aga Sivappu Thamizh Whatsapp Channel

முகநூல் வழியே கருத்துரைக்க

2 கருத்துகள்:

என் புதினத்தை வாங்க

என் புதினத்தை வாங்க
மேலே உள்ள படத்தை அழுத்துங்கள்
பதிவுகளை உடனுக்குடன் பெற

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

வாட்சாப் தடத்தில் (Channel)...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு (1) 13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (9) அஞ்சலி (21) அணு உலை (2) அம்பிகை செல்வகுமார் (1) அம்மணம் (1) அமேசான் (6) அயல்நாட்டுத் தமிழர் (1) அரசியல் (90) அழைப்பிதழ் (7) அற்புதம்மாள் (2) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (38) ஆட்சென்ஸ் (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இங்கிலாந்து (1) இசுரேல் (2) இட ஒதுக்கீடு (4) இணையம் (19) இந்தித் திணிப்பு (1) இந்தியா (25) இரசியா (1) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இலக்கணம் (3) இலங்கை (1) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (23) இனம் (46) ஈழம் (44) உக்கிரேன் (1) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (24) எழுவர் விடுதலை (1) ஐ.நா (5) ஒருங்குறி (1) கடவுள் (1) கதை (3) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (11) கலைச்சொல்லாக்கம் (1) கவிஞர் தாமரை (1) கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் (2) கவிதை (18) காங்கிரஸ் (6) காசா (2) காணொளி (4) காதல் (2) காந்தியம் (1) கார்த்திக் சுப்புராஜ் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (5) கிரந்தம் (1) கீச்சுகள் (2) குழந்தைகள் (10) குறள் (2) கூகுள் (2) கையொப்பம் (2) கோட்பாடு (9) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (16) சமயம் (12) சமற்கிருதம் (2) சமூகநீதி (4) சரிதா (1) சாதி (10) சிங்களர் (1) சித்திரக்கதைகள் (1) சிவகார்த்திகேயன் (1) சிறுவர் இலக்கியம் (4) சீமான் (7) சுற்றுச்சூழல் (6) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (3) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (30) தமிழ் தேசியம் (5) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (16) தமிழர் (45) தமிழர் பெருமை (17) தமிழின் சிறப்பு (3) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (2) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (5) தாலி (1) தி.மு.க (11) திரட்டிகள் (4) திராவிடம் (9) திருமுருகன் காந்தி (1) திரைப்படம் (2) திரையுலகம் (9) திறனாய்வு (1) தினகரன் (1) துருவ் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (9) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தேர்தல்-2021 (2) தொலைக்காட்சி (2) தொழில்நுட்பம் (10) தோழர் தியாகு (1) நட்பு (12) நிகழ்வுகள் (5) நிர்மலா சீதாராமன் (1) நினைவேந்தல் (10) நீட் (5) நூல்கள் (8) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (3) பதிவர் உதவிக்குறிப்புகள் (10) பதிவுலகம் (23) பா.ம.க (2) பா.ஜ.க (30) பார்ப்பனியம் (14) பாலஸ்தீனம் (2) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (9) பீட்டா (1) புதிய வேளாண் சட்டம் (1) புறநானூறு (1) புனைவுகள் (10) பெண்ணியம் (6) பெரியார் (3) பேரறிவாளன் (2) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (5) பொதுவுடைமை (1) பொதுவுடைமைக் கட்சி (1) பொருளாதாரம் (2) பொழிவு (2) போட்டி (1) போர் (3) போராட்டம் (10) ம.ந.கூ (2) மகான் (1) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (10) மடோன் அஷ்வின் (1) மணிவண்ணன் (1) மதிப்புரை (4) மதுவிலக்கு (2) மருத்துவம் (7) மாநாடு (1) மாநாடுகள் (1) மாய இயல்பியம் (1) மாவீரர் நாள் (3) மாற்றுத்திறனாளிகள் (2) மிஷ்கின் (1) மீம்ஸ் (7) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (3) மேனகா காந்தி (1) மொழியரசியல் (2) மொழியறிவியல் (2) மோடி (11) யுவர் கோட் (1) யோகிபாபு (1) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) ராஜீவ் படுகொலை (1) வரலாறு (22) வாழ்க்கைமுறை (17) வாழ்த்து (5) வானதி சீனிவாசன் (1) விக்ரம் (1) விடுதலை (6) விடுதலைப்புலிகள் (13) விருது (1) விஜய் (1) விஜய் சேதுபதி (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (7) வை.கோ (6) வைரமுத்து (2) ழகரம் (1) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டெர்லைட் (2) ஹமாஸ் (2) ஹீலர் பாஸ்கர் (1) Bhagavath Gita (1) BJP (1) Casteism (1) Cauvery (1) Dalit (1) Genocide (3) Hindu (1) Karnataka (1) Magical Realism (1) Manisha (1) Modi (1) Notion Press (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (2) Religion (1) Scheduled Castes (1) Sexual Harassment (1) Tamilnadu (1) Tamils (1) Unicode (1) Unicode Consortium (1) UP (1) Women (1) Yogi Adityanath (1)

முகரும் வலைப்பூக்கள்