கடந்த நாடாளுமன்றத் தேர்தலைப் போலவே இந்தச் சட்டமன்றத் தேர்தலுக்கும் தங்கள் தேர்தல் அறிக்கைக்கான பரிந்துரைகளை அனுப்புமாறு மக்களிடம் கேட்டிருந்தார் தி.மு.க., தலைவர்.
கடந்த முறை எழுதி அனுப்பியதற்கு அவர்களிடமிருந்து நல்ல வரவேற்பிருந்ததால் இந்த முறையும் அனைத்துத் தரப்புத் தமிழ் மக்கள் சார்பாகவும் நான் சில பரிந்துரைகளை அனுப்பியுள்ளேன். வழக்கம் போல் இதோ மக்களாகிய உங்கள் பார்வைக்கும் அவற்றை முன்வைத்துள்ளேன். இவை வெறும் பரிந்துரைகள் அல்ல, இந்திய அரசின் புதிய வேளாண் சட்டம் போன்ற வல்லாதிக்கச் சட்டங்களைத் தவிடுபொடியாக்கி மக்களைக் காப்பதற்கான அதிரடித் திட்டங்கள்! சாதியில்லாத் தமிழ்நாடு போன்ற நம் பல்லாண்டுக் காலக் கனவுகளை நனவாக்குவதற்கான கூர்மிகு வழிமுறைகள்! படித்துப் பாருங்கள்! உங்கள் ஆதரவைத் தாருங்கள்!