அமேசான் நடத்திய ‘பென் டூ பப்ளிஷ் 2019’ போட்டியில் இறுதிச் சுற்றுக்குத் தேர்வான கதைகளை ஊருக்கே தெரியும். ஆனால் அவை எப்படித் தேர்வாயின என்ற கதை தெரியுமா? இதோ தி.மு.க., எனும் மாபெரும் கட்சியின் செல்வாக்கைத் தவறாகப் பயன்படுத்தி இவர்கள் வென்ற கதையைத் தி.மு.க-காரர் ஒருவரே நாக்கைப் பிடுங்கிக் கொள்ள வைக்கும் கேள்விகளுடன் விவரித்திருக்கிறார்.
இந்தப் போட்டியில் கலந்து கொண்டு நூலை வெளியிட்ட உடனேயே இலக்கிய உலக அரசியல் தெரிந்த என் தோழியார் ஒருவர் என்னை எச்சரித்தார், "இந்தப் போட்டியில் தி.மு.க-வினரின் உள்ளடியரசியல் (lobby) அதிகம். எச்சரிக்கையாக இருங்கள்" என்று. அப்பொழுது எனக்கு அதன் தீவிரம் உரைக்கவில்லை.
எனக்குத் தெரிந்த, என் எழுத்துக்களைப் பெரிதும் விரும்பும் நண்பர் ஒருவர் தி.மு.க-வைச் சேர்ந்தவர். அவர் நான் இந்தப் போட்டியில் கலந்து கொள்வதை அறிந்து இந்தப் போட்டியில் கலந்து கொள்பவர்களின் முகநூல் குழு ஒன்றில் என்னைச் சேர்த்து விட்டார். உள்ளே போன பிறகுதான் அது முழுக்க முழுக்க தி.மு.க எழுத்தாளர்களின் குழு என்பது தெரிந்தது. என் நூலை அந்தக் குழு உறுப்பினர்களிடம் பகிர்ந்து கொண்ட நான், கைம்மாறாக அவர்களின் நூல்களையும் படித்துப் பார்த்தேன். தாங்க முடியாத அதிர்ச்சி அடைந்தேன். நூற்றுக்கணக்கில் தரக்குறியீடுகளையும் கருத்துக்களையும் பெற்ற அந்தக் குழுவினரின் பல கதைகள் உண்மையில் நன்றாகவே இல்லை. சொல்லப் போனால், கதை என்று சொல்ல அடிப்படைத் தகுதி கூட இல்லாத ஒரு கதை கூட ஏராளமான தரக்குறியீடுகளையும் கருத்துக்களையும் அள்ளியிருந்தது. அதுவும் ஆகா ஓகோ, கட்டாயம் படிக்க வேண்டிய கதை, வாழ்க்கையில் தவற விடவே கூடாத கதை எனவெல்லாம் பாராட்டுக்களுடன்.
போகப் போக, போட்டியில் முன்னணியிலிருந்த எல்லாப் படைப்புகளையும் - புகழ் பெற்ற எழுத்தாளர் லஷ்மி சரவணகுமார் அவர்களின் நூல் உட்பட - அனைத்தையும் பின்னுக்குத் தள்ளிக் குறிப்பிட்ட முகநூல் குழு உறுப்பினர்களின் நூல்கள் முன்னணிக்கு வந்தன.

அப்பொழுது கூட நான் அதை ஓரளவுக்கு மேல் தவறாக நினைக்கவில்லை. "என்ன இருந்தாலும் அவர்கள் கட்சிக்காரர்கள். அவர்கள் நட்பு வட்டம் பெரிது. ஆகவே அவர்கள் நூற்றுக்கணக்கில் தரக்குறியீடுகளையும் கருத்துக்களையும் அள்ள முடிகிறது. நம்மைப் போன்ற தனி ஆட்களால் அஃது எப்படி முடியும்?" என்றுதான் நினைத்தேன். என் நண்பர்களிடம் கூட அப்படித்தான் புலம்பினேன். அதனால்தான் இறுதிச்சுற்றுப் பட்டியல் வெளியானபொழுது கூட என் முகநூல் பதிவு, இவர்கள் செய்த வேலையால் தரக்குறைவான படைப்புகளிடம் தோற்க வேண்டியதாகி விட்டதே என்பதாக அமைந்திருந்ததே தவிர, இவர்கள் செய்தது தவறு என வெளிப்படையாகக் கண்டிக்கவில்லை. காரணம் இவர்கள் எப்படி இயங்குகிறார்கள், என்ன செய்கிறார்கள் என விவரமாகத் தெரியாததால் அது தவறுதான் என என்னால் உறுதியாக எண்ண முடியவில்லை.
ஆனால் இப்பொழுது இணையத்தில் வரும் குறிப்பிட்ட பதிவைப் படிக்கும் பொழுதுதான் தெரிகிறது, இவர்கள் எப்பேர்ப்பட்ட கீழ்த்தர வேலையில் ஈடுபட்டு இந்த வெற்றியைக் களவாடியிருக்கிறார்கள் என்று.
தி.மு.க., தலைவருக்கு முகவரியிட்டு எழுதப்பட்டிருக்கும் அந்தக் கடித வடிவிலான பதிவில், தி.மு.க., எனும் பெரிய கட்சியின் மாநிலம் தழுவிய வலையமைப்பைப் (network) பயன்படுத்தி அதில் முக்கியப் பொறுப்பில் இருப்பவர்கள் பென் டூ பப்ளிஷ் 2019 போட்டியையே அப்படியே கபளிகரம் செய்தது பற்றிச் சுளிரிடும் சொற்களால் குமுறித் தள்ளியிருக்கிறார் முகம் தெரியாத அந்த மனிதர்.
"தலைவர் அவர்களுக்கு, ஒரு பாமர தி.மு.க தொண்டன் எழுதிக் கொள்வது" என்று தொடங்கும் அவர், "அமேசான் நிறுவனம் உலக அளவில் நடத்தும் ‘பென் டூ பப்ளிஷ்’ போட்டியில், இந்தியப் பிரிவில் தமிழ், ஆங்கிலம், இந்தி என மூன்று மொழிகளில் போட்டி நடக்கிறது. முதல் பரிசு ஐந்து லட்சம், தேர்வாகும் கதைகள் அமேசான் பிரைமில் தொடராக வெளியாகும் வாய்ப்பு இருக்கிறது என்பது தாங்கள் அறிந்ததே. ஆனால் மற்ற நாடுகளிலோ, இந்தியாவின் பிற மாநிலங்களிலோ, ஓர் அரசியல் கட்சி போட்டியைக் கையகப்படுத்தியுள்ளதா என்றால், நிச்சயம் இல்லை. தமிழகத்தில் இரண்டாவது முறையாக நமது திராவிட முன்னேற்றக் கழகம் இதைச் செய்கிறது" என்று வெளிப்படையாகப் போட்டு உடைத்து விட்டார்.
"...படைப்பாளிகளாக இவர்களை நாங்கள் வரவேற்கிறோம். அதற்கான புரிதல் இருக்கிறது. ஆனால் கட்சிப் பதவிகளையோ, உறுப்பினர்களையோ வைத்துக் கூட்டம் நிகழ்த்தி, குழு சேர்ந்து, விதிகளை வளைத்து, வெற்றியை அடித்துப் பறிப்பது அறமல்ல. இவர்கள் அதைத்தான் செய்கிறார்கள். ஒரு பரிசுத் தொகைக்காகத் தமிழின் பிற எழுத்தாளர்களை ஒதுக்கி, இலக்கியவாதிகளை அவமானப்படுத்தி, மூர்க்கத்தனமான கும்பலாய் நகர்வது அழகல்ல" என்று நடுநிலை தவறாமல் குறிப்பிடும் அவர், "...தி.மு.க மட்டுமே பென் டூ பப்ளிஷ் போட்டியின் அனைத்து இடங்களையும் கைப்பற்றியிருக்கிறது. இதை எழுத்தால் கிடைத்த வெற்றியாகக் கருத முடியாது. கட்சியின் உதவியின்றி, நாம் தந்த பதவிகளின் செல்வாக்கின்றி இவர்களால் நிச்சயம் இந்த இடத்தை நினைத்துக் கூடப் பார்த்திருக்க முடியாது" என்று தெள்ளத் தெளிவாகப் பதிவு செய்திருக்கிறார்.
மேலும் "...போட்டிக்கான இளைஞரணிப் புத்தகங்களைப் பரிந்துரைத்து, திரு.உதயநிதி அவர்களே இணையப் பிரச்சாரம் செய்கிறார். இதுதான் வேதனையின் உச்சம். ஒரு நல்ல புத்தகத்தைப் பாராட்டுவது தவறா என்றால், போட்டியில் இருக்கும் புத்தகத்தைத் தலைமை பரிந்துரைப்பது அறமன்று. இது பாரபட்சம்!" என்றும் சாடுகிறார்.
அதைத் தொடர்ந்து, "மக்கள் போட்டியின் அடிப்படைப் புரிதலே சிதைக்கப்பட்டு, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர், மாவட்டச் செயலாளர், இளைஞரணி என மொத்தமாக இறங்கியதால், ஓர் எழுத்துப் போட்டியை இப்போது தேர்தலாக மாற்றியிருக்கிறோம். இளம் எழுத்தாளர்களுக்கான ஒரு மிகப் பெரிய வெளியை, வாய்ப்பை இவர்கள் அரக்கத்தனமாய்த் தட்டிப் பறித்திருக்கிறார்கள். இதனால் வரும் ஆபத்து என்னவெனில் வரும் வருடங்களில் பிற அரசியல் கட்சிகளும், ஆள் பலமும், அதிகாரமும் கொண்டவர்கள் மட்டுமே இந்தப் போட்டியில் கலந்து கொள்வார்கள். ஒரு சாமான்ய எழுத்தாளன் போட்டியை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. இந்தத் துயர வரலாற்றைத் துவங்கி வைத்தவர்கள் நிச்சயம் நாமாகத்தான் இருப்போம்" என்றும் வேதனைப்படுகிறார்.
"...நல்ல படைப்புகளுக்கான வியாபாரமும் வெளியும் என்றும் இருக்கிறது. பிறகு ஏன் மக்கள் போட்டியை ஒரு பெரும் அரசியல் கட்சி கைப்பற்ற வேண்டும்? உங்களை உயரத்தில் அமர்த்த வேண்டும் எனக் காத்திருக்கும் கைகளைத்தான் இவர்கள் உடைக்கிறார்கள். போட்டி தர்மங்களையும் அறத்தையும், கட்சிச் செல்வாக்கைப் பயன்படுத்தி நசுக்கி மிதித்து முன்னேறுகிறார்கள்" என்று மிகக் கடுமையான சொற்களால் விளாசியிருக்கிறார்.
இவ்வளவு எழுதிய அவர் இடையில் முன்னாள் தி.மு.க., தலைவர் கருணாநிதி பற்றிக் குறிப்பிடுகையில் "தலைவர் கலைஞர் இருந்திருந்தால் நிச்சயமாக இதை அனுமதித்திருக்க மாட்டார். மாற்றானுக்குப் போட்டியாக நாம் இருக்க வேண்டுமே அன்றி, நம் மக்களிடத்தில் போட்டியிடக்கூடாது என்றிருப்பார். மேலும் கட்சி எழுத்தாளர்கள் பரிசு பெறுவதற்குக் கழகத்தின் பெயரைப் பயன்படுத்த அவர் அனுமதித்திருக்கவே மாட்டார்" என்றும் கூறியுள்ளார்.
இவ்வளவு தீவிரமான கருணாநிதி விரும்பியாக இருந்து கொண்டு, அந்தக் கட்சியின் உள்ளேயே அமர்ந்தபடி அவர்களின் முறைகேட்டை நடுநிலை தவறாமல் இவ்வளவு வெளிப்படையாகவும் கடுமையாகவும் சாடிப் பொது வெளிக்குக் கொண்டு வந்திருக்கும் முகம் தெரியாத அந்த நண்பரின் பண்புநலன் போற்றுதலுக்குரியது. அவருக்கு என் நெஞ்சம் நெகிழும் நன்றி!
அவரது பதிவை முழுமையாகப் படிக்க:
ஆனால் இவ்வளவு அம்பலப்படுத்திய பிறகும் தி.மு.க-வினர் கொஞ்சமும் வெட்கமின்றி இதைச் சரி என வாதாடுகிறார்கள். இதோ கீழே உள்ள பதிவு அதற்கு ஓர் எடுத்துக்காட்டு.
ஆனால் இவ்வளவு அம்பலப்படுத்திய பிறகும் தி.மு.க-வினர் கொஞ்சமும் வெட்கமின்றி இதைச் சரி என வாதாடுகிறார்கள். இதோ கீழே உள்ள பதிவு அதற்கு ஓர் எடுத்துக்காட்டு.
அவர்கள் கூட்டம் நடத்தி அவர்கள் புத்தகத்தை தான் பிரபலம் செய்கிறார்கள்... பிறருக்கு அது வைக்காவிட்டால் அதற்கு இவர்கள் என்ன செய்ய முடியும்... கூட்டம் நடத்தி புத்தகத்தை அறிமுகம் செய்வது தமிழ் புத்தக வெளியீடு காலம் காலமாக பின்பற்றி வரும் நடைமுறைதான் இது ஒரு குற்றமா..— Baves🦌☄️🌫️🌫️ (@bavescom) January 22, 2020
அதாவது பார்ப்பனர்கள் சொல்வார்கள் இல்லையா? "நாட்டின் எல்லா உயர் பதவிகளையும் நாங்களே வகிக்கிறோம், எல்லா உயர்கல்விகளிலும் நாங்களே முதலிடத்தில் இருக்கிறோம், எல்லாக் கோயில்களிலும் நாங்களே வழிபாடு நடத்துகிறோம் என்றால் அவையெல்லாம் காலம் காலமாக எங்களுக்கு இருந்து வரும் உரிமை, தகுதி. அவை உங்களுக்கு வாய்க்காவிட்டால் அதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும்?" என்று? அதையேதான் இவர்களும் சொல்கிறார்கள்.
இதற்கு எதற்கடா கருப்புச் சட்டையுடன் திரிகிறீர்கள்? காவி கட்டிக் கொண்டே பா.ச.க-காரன் போல் திரிவதுதானே? ஏனடா, இப்படி எல்லாரும் அவரவர் செல்வாக்கை, ஆற்றலை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்றால் அப்படிச் செய்ய எங்களுக்கு மட்டும் தெரியாதா? இது என்ன பெரிய ஊரில் இல்லாத அதிசய ஆற்றலா? உன்னிடம் கட்சி என ஓர் ஆயுதம் இருக்கிறது என்றால் உடனே அதைப் பயன்படுத்திப் போட்டியில் வென்று விட்டு அதுவே சரி என வாதாடுகிறாயே! இதே போல் நான் செய்யட்டுமா? அதற்கு இந்தக் கட்சிக் கழிசடையெல்லாம் தேவையேயில்லை. ஒற்றை வரி விளம்பரம் போதும்!
"வீட்டிலிருந்தபடியே வேலை! அரை மணி நேரம் பணியாற்றினால் ரூ.1500/- ஒரு முறை மட்டுமே வாய்ப்பு" என்று சொன்னால் அவனவன் விழுந்தடித்துக் கொண்டு தொடர்பு கொள்வான். அனைவரையும் என் நூலைத் தரவிறக்கச் சொல்லி, கருத்துரையும் தரக்குறியீடும் அளித்துத் திரைச்சொட்டை (screenshot) எனக்கு அனுப்பினால் 1500 ரூபாய் தருவதாகக் கூறினால் முடிந்தது வேலை.
ஒற்றை ஆள் நான்! வீட்டு வாசற்படியைக் கூடத் தாண்டாமல் உட்கார்ந்த இடத்திலிருந்து இதைச் செய்து காட்டவா? ஒரு மாபெரும் கட்சியின் செல்வாக்கை இத்தனை பேர் சேர்ந்து பயன்படுத்தி நீங்கள் வென்றீர்களே! உங்கள் அத்தனை பேரையும் அரை நூற்றாண்டு தாண்டிய உங்கள் மாபெரும் கட்சியையும் நான் ஒற்றை மனிதன் அடுத்த ஆண்டுப் போட்டியில் வீழ்த்திக் காட்டவா?
மிரளாதீர்கள்! அப்படிச் செய்ய மாட்டேன். ஏனெனில் நான் உங்களைப் போல் மானங்கெட்டவன் இல்லை.
இவ்வளவுக்கும் பிறகும் இந்தப் பதிவைப் படிக்கும் உங்களில் யாருக்காவது நான் சொல்வது உண்மைதானா என ஐயம் ஏற்பட்டால் அவர்களுக்காகக் கடைசியாக ஒரு தகவல்!

இப்பதிவின் தொடக்கத்தில், "கதை என்று சொல்ல அடிப்படைத் தகுதி கூட இல்லாத ஒரு கதை கூட ஏராளமான தரக்குறியீடுகளையும் கருத்துக்களையும் அள்ளியிருந்தது. அதுவும் ஆகா ஓகோ, கட்டாயம் படிக்க வேண்டிய கதை, வாழ்க்கையில் தவற விடவே கூடாத கதை எனவெல்லாம் பாராட்டுக்களைப் பெற்றிருந்தது" என்று கூறியிருந்தேன் இல்லையா? அதுவும் இப்பொழுது போட்டியின் இறுதிச்சுற்றில் இருக்கிறது.
இந்த ஒன்றை வைத்தே, இந்தப் போட்டி எந்த அழகில் நடந்திருக்கும் என்பதையும் அந்தத் தி.மு.க., தொண்டர் சொன்னது உண்மையா இல்லையா என்பதையும் நீங்களே தீர்மானித்துக் கொள்ளலாம்.
இந்த ஒன்றை வைத்தே, இந்தப் போட்டி எந்த அழகில் நடந்திருக்கும் என்பதையும் அந்தத் தி.மு.க., தொண்டர் சொன்னது உண்மையா இல்லையா என்பதையும் நீங்களே தீர்மானித்துக் கொள்ளலாம்.
❀ ❀ ❀ ❀ ❀
படம்: நன்றி அமேசான்.
பதிவின் கருத்துக்கள் சரி எனத் தோன்றினால் கீழ்க்காணும் வாக்குப்பட்டைகள் மூலம்
இதைப் பகிர்ந்து என்னைப் போல் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கு உதவுங்களேன்! கூடவே, உங்கள் செம்மையான
கருத்துக்களுக்கும் காத்திருக்கிறேன்! தனிப்பட ஏதும் தெரிவிக்க
விரும்பினால் கீழே உள்ள 'அணுக' படிவத்தைப் பயன்படுத்தலாம்!
பதிவுகளை உடனுக்குடன் பெறக் கீழ்க்காணும் பொத்தானைச் சொடுக்கி
வாட்சாப் தடத்தில் (Whatsapp Channel) இணையுங்கள்!!
என்னத்த சொல்ல ... ம்...
பதிலளிநீக்குஐயா! உங்கள் கருத்தை வெளியிட இவ்வளவு தாமதமானதற்குப் பொறுத்தருள்க! உங்களுடைய இக்கருத்தை எனக்குச் சார்பானதாகவே கருதி நான் ஆறுதலடைகிறேன். மிக்க நன்றி!
நீக்கு