தேசியக் கல்விக் கொள்கை தொடர்பாக அண்மையில் உரையாற்றிய நடிகர் சூர்யா அவர்கள் அதனால் ஏற்படக்கூடிய கேடுகள் பற்றிப் புள்ளிவிவரங்களுடனும் அசைக்க முடியாத வாதங்களுடனும் மிகச் சிறப்பாகப் பேசியிருந்தார். சமூக அக்கறையாளர்கள் சிலர் அவர் பேச்சிலிருந்து பத்துக் கேள்விகளை மட்டும் தொகுத்து வெளியிட்டனர்.
பா.ஜ.க-வின் பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் அவர்கள் இன்று அந்தப் பத்துக் கேள்விகளுக்கு விடைளிக்கிறேன் பேர்வழி என்று வெளியிட்ட பத்துப் படப் பதிவுகள் வெறுப்பேற்றலின் உச்சம். எல்லாவற்றையும் பார்க்க முடியவில்லை. அவ்வளவு தாங்குத்தன்மை (சகிப்புத்தன்மை) எனக்கு இல்லை. சிலவற்றுக்கு மறுமொழி அளித்தேன். ஒன்றே ஒன்றை மட்டும் படப்பதிவு செய்து வெளியிட்டுள்ளேன். அந்தப் பதிவைக் கீழே நீங்களே பாருங்கள்!
பதிவுகளை உடனுக்குடன் பெறக் கீழ்க்காணும் பொத்தானைச் சொடுக்கி
வாட்சாப் தடத்தில் (Whatsapp Channel) இணையுங்கள்!!
அந்தம்மாவின் புரிதல் அவ்வளவு தான் போல...
பதிலளிநீக்குஹாஹ்ஹா! நன்றாகச் சொன்னீர்கள் ஐயா!
நீக்குஅதே நேரம், அவருக்குப் புரிதல் குறைவெனக் கூட இதை விட்டு விட முடியாது. வேண்டுமெனவேதான் சொல்கிறார். முதல் கேள்விக்கு அவர் அளித்த விடையை நீங்கள் பார்க்க வேண்டுமே!
சூர்யா தன் உரையில் "இந்தக் கல்விக் கொள்கை குறித்துக் கருத்துரைக்க வெறும் ஒரு மாதம்தான் காலக்கெடுவா? அப்படி என்ன அவசரம்?" என்று கேட்டிருந்தார். அதற்கு இந்தம்மா சொல்கிறார், "நான்கு ஆண்டுகள் பொறுமையாக நேரம் எடுத்துக் கொண்டு பல்வேறு மட்டங்களில் கலந்துரையாடித்தான் இந்தக் கொள்கை வடிவமைக்கப்பட்டிருக்கிறது" என்று. அவர் கேட்டது எந்த அவசரத்தைப் பற்றி, இவர் சொல்வதுப் பொறுமையைப் பற்றி? உண்மையில் சூர்யா கேட்ட கேள்விகள் ஆணித்தரமானவை, சரியானவை. இவர்கள் அவற்றுக்கு விடையளிக்கவே முடியாது. அதனால் வேண்டுமெனவே புரியாதது போல் நடித்தும், கேள்வியைத் திசை திருப்பியும் மக்களைக் குழப்புகிறார்கள்.
இந்த முறையும் முதல் ஆளாக நீங்கள்தான் கருத்திட்டிருக்கிறீர்கள்! உங்கள் கருத்துக்கு நன்றி ஐயா!