இதோ, என் கீச்சுக்களில் (tweets), தேர்ந்தெடுத்த ௨௫ (இருபத்தைந்து) மட்டும் இரண்டாம் பாகமாக உங்கள் பார்வைக்கு... மறுகீச்சுக்கு... உடுக்குறிக்கு! இவற்றைப் படித்த பின்னும் இதன் முந்தைய பாகத்தைப் படிக்க உங்களுக்குத் துணிவு இருந்தால் செல்லுங்கள் இங்கே!
@vikatan அப்படியே ஒரு புதிய முதல்வரும் கிடைத்தால் நன்றாக இருக்கும்!
— இ.பு.ஞானப்பிரகாசன் (@Gnaanapragaasan) November 23, 2012
@vikatan கடவுள் இந்த ஒன்றில் மட்டும் மாறவே மாட்டேன்கிறது! #நல்லவர்களை விரைவில் போட்டு விடுவது, கெட்டவர்களை நெடுநாள் ஆடவிடுவது!
— இ.பு.ஞானப்பிரகாசன் (@Gnaanapragaasan) November 23, 2012
@vikatan அப்படியானால் இதுவரை ஏராளமானோர் 14 ஆண்டுகளில் விடுவிக்கப்பட்டிருக்கிறார்களே, அவர்களையெல்லாம் மீண்டும் உள்ளே போடுங்கடா பார்ப்போம்!
— இ.பு.ஞானப்பிரகாசன் (@Gnaanapragaasan) November 23, 2012
(விஸ்வரூபம்) படத்தைப் புரிந்துகொள்ளவே தனிப் புத்திசாலித்தனம் தேவை - கமல் #நீங்க அப்பவே அப்புடி, இப்ப கேக்கவா வேணும்?
— இ.பு.ஞானப்பிரகாசன் (@Gnaanapragaasan) November 23, 2012
@vikatan @vikatan இந்தச் செய்திக்கு முன் மட்டும் விகடனாரின் படத்துக்குப் பதிலாக மண்டையோட்டுப் படம் போட்டிருக்கலாம். #அபாய எச்சரிக்கை!
— இ.பு.ஞானப்பிரகாசன் (@Gnaanapragaasan) December 3, 2012
புயல் ஆந்திரா போயிடுச்சு. இனி மழை வராது என்றார் ஒருவர் நேற்றே! #கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கிட்டே இருந்து வழியனுப்பி வைத்தாற்போல!
— இ.பு.ஞானப்பிரகாசன் (@Gnaanapragaasan) December 4, 2012
@vikatan மக்களுக்குத் தோல்வி!
— இ.பு.ஞானப்பிரகாசன் (@Gnaanapragaasan) December 5, 2012
@vikatan சரி, புள்ளைய எவன் வளக்குறது?
— இ.பு.ஞானப்பிரகாசன் (@Gnaanapragaasan) December 5, 2012
@vikatan "எல்லாரும் ஜோரா ஒரு தடவ கைதட்டுங்க!" என இதற்கு மறுமொழியிட்டு உழைத்துப் பிழைக்கும் கழைக்கூத்தாடிகளை இழிவுபடுத்த விரும்பவில்லை.
— இ.பு.ஞானப்பிரகாசன் (@Gnaanapragaasan) December 10, 2012
1000000 $ ? = 21.12.2012
— இ.பு.ஞானப்பிரகாசன் (@Gnaanapragaasan) December 14, 2012
இருக்கிறது என்பதை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு, இருக்கிறது எனச் சொல்பவனுக்குத்தான் இருக்கிறது; இல்லை எனச் சொல்பவனுக்கு இல்லை!
— இ.பு.ஞானப்பிரகாசன் (@Gnaanapragaasan) January 4, 2013
@vikatan ஆம்! அவர்களுக்குத் தண்ணீர் கிடைக்க வழி செய்யக்கூட வக்கில்லாத தமிழ்நாடு அரசும், நடுவண் அரசும்தான் அவர்களைச் சாகடித்தன.
— இ.பு.ஞானப்பிரகாசன் (@Gnaanapragaasan) January 21, 2013
@vikatan ஏன், இன்னும் ஒரு இருபது இருபத்தைந்து வருஷம் பொறுமையா பார்த்திருந்துட்டு அனுப்பிச்சிருக்கலாமே? ஓ! தேர்தல் வருதில்ல!
— இ.பு.ஞானப்பிரகாசன் (@Gnaanapragaasan) January 21, 2013
ஆங்கிலேய வாழ்க்கையைக் கடைப்பிடித்தால் மட்டும் பண்பாட்டுச் சீரழிவு, ஆரியர்கள் புகுத்திய சாதியத்தைக் கடைப்பிடிப்பது மட்டும் தமிழ்ப் பண்பாடு!!!
— இ.பு.ஞானப்பிரகாசன் (@Gnaanapragaasan) January 21, 2013
வேட்டி கட்டிய தமிழர் ஒருவர் இந்தியப் பிரதமராக வேண்டும் - கமலகாசன் #வேட்டி கட்டியவனெல்லாம் தமிழனா?
— இ.பு.ஞானப்பிரகாசன் (@Gnaanapragaasan) February 1, 2013
@vikatan சாதி எப்போது அந்தஸ்தானது?
— இ.பு.ஞானப்பிரகாசன் (@Gnaanapragaasan) February 8, 2013
@vikatan எதுக்குடா இந்த மானங்கெட்ட பொழப்பு? (நன்றி: சூர்யா).
— இ.பு.ஞானப்பிரகாசன் (@Gnaanapragaasan) February 8, 2013
@vikatan அப்புறம் எதற்குக் காவிரி நீர் கேட்கிறீர்கள்? வறட்சிதான் இல்லையே விட்டுவிட வேண்டியதுதானே?
— இ.பு.ஞானப்பிரகாசன் (@Gnaanapragaasan) February 8, 2013
கருணாநிதி அவர்களே!ஈழப் பிரச்சினை தொடர்பான ஒரு போராட்டத்தில் வென்று இன்றைய செய்திகளில் இடம்பெற்றிருக்கிறார் வைகோ#ஜெயிச்சு, ஜெயிச்சு!
— இ.பு.ஞானப்பிரகாசன் (@Gnaanapragaasan) February 8, 2013
நடத்திய கொடுஞ்செயலுக்குப் பொறுப்பேற்றுத் தீவிரவாதிகள் விடும் அறிக்கை = நடந்த அசம்பாவிதத்துக்கு வருந்தி ஆட்சியாளர்கள் தெரிவிக்கும் இரங்கல்!
— இ.பு.ஞானப்பிரகாசன் (@Gnaanapragaasan) February 12, 2013
Of course, Life is beautiful; but not for all.
— இ.பு.ஞானப்பிரகாசன் (@Gnaanapragaasan) February 19, 2013
@vikatan அதற்கு எங்களை என்ன செய்யச் சொல்கிறீர்?
— இ.பு.ஞானப்பிரகாசன் (@Gnaanapragaasan) March 18, 2013
@vikatan ஓ இதற்குப் பெயர்தான் சூடு, சுரணையோ!
— இ.பு.ஞானப்பிரகாசன் (@Gnaanapragaasan) March 25, 2013
தமிழுக்கு 'நீர்மை' என ஒரு பொருள் உண்டு! அதனால்தானோ என்னவோ, மழை பெய்தால் கவிதைகளும் ஊற்றெடுக்கின்றன!
— இ.பு.ஞானப்பிரகாசன் (@Gnaanapragaasan) June 6, 2013
ஓவியம் என்பது தூரிகையால் எழுதப்படும் கவிதை!
கவிதை என்பது தூவலால் வரையப்படும் ஓவியம்!
— இ.பு.ஞானப்பிரகாசன் (@Gnaanapragaasan) June 7, 2013
❀ ❀ ❀ ❀ ❀
பதிவு பிடித்திருந்தால் கீழ்க்காணும் வாக்குப்பட்டைகள் மூலம் மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்களேன்! கூடவே, உங்கள் செம்மையான கருத்துக்களுக்கும் காத்திருக்கிறேன்! தமிழில் எழுத வசதியில்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது கீழே 'தமிழ்ப் பலகை'! தனிப்பட ஏதும் தெரிவிக்க விரும்பினால், அதற்கு அடுத்து உள்ள 'அணுக' படிவத்தைப் பயன்படுத்தலாம்!
பதிவுகளை உடனுக்குடன் பெறக் கீழ்க்காணும் பொத்தானைச் சொடுக்கி
வாட்சாப் தடத்தில் (Whatsapp Channel) இணையுங்கள்!!
கீச்சுக் கீச்சுனு கீசிப்புட்டீங்க!!
பதிலளிநீக்குஇப்பத்தானே கொஞ்ச நாள் முன்னாடி எல்லாரும் ஜோரா கைதட்டினோம் நம்ம மாண்புமிகுச் சுற்றுலா பிரதமர் அமெரிக்காவில் பேசினார்னு. இப்படி மீண்டும் எழுந்து கை தட்டச் சொன்னால்...அட போங்கப்பா கை வலிக்குது...கால் வலிக்குது....
சரி விவசாயிகள் தற்கொலை இல்லை என்றால் கொலையா??!!!! அப்படித்தானே அர்த்தம்.
முதல் பகுதியை எப்படித் தவற விட்டோம்...இதோ செல்கிறோம்.
உங்கள் பாராட்டுக்கும் நகைச்சுவையான கருத்துக்கும் மிக்க நன்றி சகோ!
நீக்குசென்று பார்த்ததும் தான் தெரிந்தது பார்த்திருக்கின்றோம் என்று. மீண்டும் ஒரு பார்வை பார்த்துவிட்டு வந்தாயிற்று. ஹும் மறதி கர்ணகவசம் போல ஒட்டிக் கொண்டுவிட்டது சமீப காலமாக இருவருக்குமேதான்....
பதிலளிநீக்குநீங்கள் படிக்காத பதிவுகள் இன்னும் சில நூறு இருக்கின்றன. ஆனால், அவற்றை நான் இன்னும் எழுதவில்லை. :-)
நீக்குகீச்சுகள் இங்கேயும். நன்றி.
பதிலளிநீக்குஓ அப்படியா? வருகிறேன் ஐயா! அழைப்புக்கும் வருகைக்கும் நன்றி!
நீக்குஅருமையான தொகுப்பு
பதிலளிநீக்குதொடரட்டும்
கருத்து மோதலில் பங்கெடுக்க வாரும்!
http://www.ypvnpubs.com/2016/06/blog-post_27.html
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி ஐயா! கருத்து மோதலா? இதோ, உடனே வருகிறேன்! அழைப்புக்கு நன்றி!
நீக்குவாழ்க! வளர்க!! வாழ்த்துக்கள்!!!
பதிலளிநீக்குமிக்க நன்றி ஐயா!
நீக்கு