வானறிந்ததனைத்தும் தானறிந்த தமிழின் தங்கப் பிள்ளைகளே! அனைவருக்கும் நேச வணக்கம்!
ஓலையிலும் பாறையிலும் வடித்தும், யாழிலும் பறையிலும் இசைத்தும், மேடையிலும் திரையிலும் நடித்தும் தீராத நம் தமிழமுதை இந்த முத்தமிழையும் தாண்டி, இற்றை நாளுக்கேற்பக் கணினியிலும் கைக்கருவிகளிலும் வளர்க்கும் நான்காம் தமிழ்க் காலக்கட்டம் இது. அந்தப் புதிய தாய்த்தமிழைப் புதியதாய் நாளும் மெருகூட்டும் வலைப்பதிவுலகம் இதோ நான்காம் முறையாக ‘வலைப்பதிவர் திருவிழா’க் காண்கிறது!
இந்த முறை தமிழ்நாடு அரசின் ஒரு பிரிவான ‘தமிழ் இணையக் கல்விக்கழக’மும் வலைப்பதிவர்களோடு கைகோத்திருப்பதை வலையுலகிற்குத் தமிழ்நாடு அரசு அளித்த ஏற்பிசைவாகவே (recognition) கருதலாம்.
அதுவும் இந்த முறை ஐம்பெரும் வகைகளில் (genres) படைப்பிலக்கியப் போட்டிகள், அவற்றுள் பரிசு பெறக்கூடியவற்றை ஊகிக்கும் வாசகர் போட்டிகள் என சங்கர் படப் பாணியில் பரிசு மழை கொட்டும் பிரம்மாண்டப் பெருவிழாவாய் அரங்கேற இருக்கிறது பதிவர் திருவிழா!
இது போக, சிறந்த பதிவர்களுக்கான விருதுகள், புதிய பதிவர்களுக்கான அறிமுகங்கள், பா - ஓவியக் கண்காட்சிகள், நூல் வெளியீடுகள் என நிகழ்வுகளும் நிறைய!
தவிர, விழாவில் இந்த முறை கலந்து கொள்ளப் போகிறவர்கள் வலைப்பதிவர்கள் மட்டுமில்லை, தமிழ் இணையக் கல்விக்கழக உதவி இயக்குநர் முனைவர்.மா.தமிழ்ப்பரிதி அவர்கள், புதுக்கோட்டைக் கணினித் தமிழ்ச் சங்க நிறுவனர் முனைவர்.நா.அருள் முருகன் அவர்கள், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத் துணை வேந்தர் முனைவர் சொ.சுப்பையா அவர்கள், தமிழின் பெருமைக்குரிய இணைய அறிவுக் களஞ்சியமாம் தமிழ் விக்கிப்பீடியாவின் இந்திய விக்கி மீடியாத் திட்ட இயக்குநரும் முன்னோடி வலைப்பதிவரும் நம் நண்பருமான திருமிகு.அ.இரவிசங்கர் அவர்கள், சமகால எழுத்தாளர்களுள் தலைசிறந்த ஒருவராய்த் திகழும், எஸ்.ரா என நாமனைவரும் அன்பொழுக அழைக்கும் முனைவர்.எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் என முதன்மையான தமிழ்ப் பெருமக்களும் இன்னும் வெளியுலகத் தமிழ் சான்றோர்களுக்கே சவால் விடக்கூடிய வலையுலகப் பேரறிஞர்களும் எனத் தகைசால் தமிழர்கள் ஏராளமானோர் திரண்டு கலந்து கொள்ளும் இவ்வின்விழாவில் நீங்களும் கலந்து கொள்ளுமாறு அன்பர்கள், நண்பர்கள், சக பதிவர்கள், அகச் சிவப்புத் தமிழ் நேயர்கள் என அனைவரையும் அழைப்பிதழ் வைத்து இரு கரம் கூப்பி அகமும் முகமும் மலர அழைக்கின்றேன்!
நாள்: ௧௧-௧௦-௨௦௧௫ (11.10.2015); ஞாயிற்றுக்கிழமை.
இடம்: ஆரோக்கிய மாதா மக்கள் மன்றம்
பீ வெல் மருத்துவமனை எதிரில்,
ஆலங்குடி சாலை,
புதுக்கோட்டை.
புதுக்கோட்டை வாருங்கள்!
புது மலர்ச்சி காணுங்கள்!
என்றும் நட்புடன் உங்கள்:
❀
❀ ❀ ❀ ❀
படங்கள்: நன்றி இலால்பேட்டை சிராச், வலைப்பதிவர் விழாக் குழுவினர்.
குறிப்பு: வலைப்பதிவர் அல்லாதோரும் பரிசு பெறும் வகையில் வலைப்பதிவர் விழாக் குழுவினர் நடத்தும் புதுமையான பொதுப் போட்டி! முதல் பரிசு உரூபாய் பத்து ஆயிரம்!! தட்டிச் செல்ல அழுத்துங்கள் இங்கே!
பதிவுகளை உடனுக்குடன் பெறக் கீழ்க்காணும் பொத்தானைச் சொடுக்கி
வாட்சாப் தடத்தில் (Whatsapp Channel) இணையுங்கள்!!
தங்களின் பங்களிப்பிற்க்கு நன்றி நண்பரே சென்று வாருங்கள் விழா சிறக்க வாழ்த்துகள்
பதிலளிநீக்குதமிழ் மணம் 1
தங்கள் வருகைக்கும் வாக்குக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி நண்பரே!
நீக்குநன்றி...
பதிலளிநீக்குநம் தளத்தில் இணைத்தாகி விட்டது...
இணைப்பு : →பதிவர்களின் பார்வையில் "பதிவர் திருவிழா-2015"←
புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...
அன்புடன் திண்டுக்கல் தனபாலன்
மிக்க மகிழ்ச்சி! மிகவும் நன்றி!
நீக்குஅருமையான அழைப்பு ஐயா
பதிலளிநீக்குபுதுகையில் தங்களைச் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்
நன்றி
தம +1
தங்கள் பாராட்டுக்கும் வாக்குக்கும் மிக்க நன்றி ஐயா! ஆனால், என்னை எதிர்பார்க்க வேண்டா! நான் வர இயலாது. ஏமாற்றத்துக்கு வருந்துகிறேன்!
நீக்குவாழ்த்துக்கள் அய்யா! புதுக்கோட்டையில் சந்திப்போம்!
பதிலளிநீக்குமூத்த வலைப்பதிவரான தங்கள் முதல் வருகைக்கு முதலில் என் அன்பார்ந்த நல்வரவைத் தெரிவித்துக் கொள்கிறேன் ஐயா! தங்கள் வாழ்த்துக்கு நன்றி! ஆனால், பதிவர் விழாவுக்கு நான் வரக் கூடவில்லை. ஏமாற்றத்துக்கு வருந்துகிறேன்!
நீக்குஅழகாகத் தொகுத்து
பதிலளிநீக்குஅன்போடு அழைப்புத் தந்தாச்சு!
விழாச் சிறப்புற இடம்பெற வாழ்த்துகள்!
http://www.ypvnpubs.com/
தங்கள் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஐயா!
நீக்குநண்பரே! அழகு தமிழில் கொஞ்சி, பாங்குற அழைப்பு விடுத்தமை மனதை நிறைக்கின்றது! மட்டுமல்லாமல நேர்த்தியான தொகுப்பு கவர்கின்றது.
பதிலளிநீக்குசெந்தமிழில், தேன்மதுரத் தமிழில் அருமையான தொடக்கம் செவிகளில் இன்பத் தேன் வந்து பாய்ந்தது போல் ஆஹா போட வைத்தது!
ரசித்தோம் தங்கள் அழைப்பை...
தங்கள் விரிவான ரசனைமிகு பாராட்டுக்கு உளமார்ந்த நன்றி ஐயா, அம்மணி!
நீக்குவணக்கம்...
பதிலளிநீக்குதாங்களும் விமரிசனப் போட்டியில் கலந்து கொள்ளலாம்...
இணைப்பு : →இங்கே சொடுக்கவும்←
புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...
அன்புடன் திண்டுக்கல் தனபாலன்
அழைத்தமைக்கு மிக்க நன்றி ஐயா! ஆனால், நேரம் குறைவாக இருப்பதால் அவ்வளவையும் படித்து முடித்து ஒரு முடிவுக்கு வர இந்தக் கால அளவு எனக்குப் போதாது எனத் தோன்றுகிறது. மேலும், நான் உங்கள் வலைப்பூவிலேயே தெரிவித்தது போல, பதிவரல்லாத வெளியுலக மக்களுக்கும் நம் பதிவுகளைக் கொண்டு சேர்க்க மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்தப் புதுமையும் அருமையுமான முயற்சியில் பதிவர்களாகிய நாமே கலந்து கொள்வதை விட வெளியாட்கள் கலந்து கொண்டு பரிசு பெறுவதுதான் அவர்களை மீண்டும் மீண்டும் பதிவுலகுக்கு வரத் தூண்டுவதாக அமையும் என நினைக்கிறேன். இருப்பினும், என்னைத் தனிப்பட்ட முறையில் நினைவு கொண்டு அழைத்த உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி!
நீக்கு