ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அம்மனுக்குக் கூழும் கருவாடும் படைத்து வழிபடும் தமிழர்கள் கிறுக்கர்களா? |
பொதுவாக, என் சொந்த வாழ்க்கைச் சோகங்களைப் பொதுப்படையாகப் பகிர்வது எனக்குப் பிடிக்காது. அப்படி ஏதும் எழுதக்கூடாது எனும் உறுதியோடுதான் இந்த வலைப்பூவையே தொடங்கினேன். ஆனால், என்னையும் இப்படி ஒரு பதிவு எழுத வைத்து விட்டது அண்மையில் நேர்ந்த ஒரு நிகழ்வு!
வெகு நாட்களுக்குப் பிறகு, கடந்த 10.08.2014 - ஞாயிறன்று உள்ளூர் குணாளம்மன் கோயிலில் கூழ் வார்க்கிறார்கள் என்று கேள்விப்பட்டு, “இதுவரை நான் கூழ் ஊற்றும்பொழுது ஒருமுறை கூடக் கோயிலுக்குப் போனதில்லை. இன்று போகப் போகிறேன்” என்று ஆவலாகக் கூறிக் கிளம்பினார். திரும்பி வந்தவர் கண்களில் நான் கண்ணீரைத்தான் பார்க்க முடிந்தது.