.

ஞாயிறு, ஜூன் 16, 2013

பண்பு முன்னேற்றம்! - மனித இனம் விரும்பாத ஒரே முன்னேற்றம்!


Character Development

முன்னேற்றத்தை விரும்பாதவர்கள் உலகில் யாருமே கிடையாது. நாம் எல்லோருமே முன்னேற்றத்தை விரும்புகிறோம். ஆனால், அதை எல்லாவற்றிலும் விரும்புகிறோமா?...

இல்லை! ஒன்றே ஒன்றில் மட்டும் நாம் ஒருபோதும் முன்னேற்றத்தை விரும்புவதில்லை. அதுதான் ‘பண்பு நலன்!

எதையுமே போதும் என நினைக்காத மனித உள்ளம், தன்னிடம் இருக்கும் நல்ல பண்புகளையும், நல்ல பழக்க வழக்கங்களையும் மட்டும் ஒருபோதும் அப்படி நினைப்பதே கிடையாது. இருப்பதே போதும், இந்த அளவுக்கு நல்லவனாக வாழ்வதே பெரிது எனத்தான் எப்பொழுதும் நினைக்கிறான் மனிதன்.

ஒப்பிடும்பொழுது கூட, “ஊர்ல அவனவன் எப்படியெப்படியோ இருக்கான். நாம எவ்வளவோ தேவலாம் என்பதுதான் எப்பொழுதுமே நம்மைப் பற்றிய நமது நினைப்பு. ஏன், நம்மை விட நல்லவர்கள் யாருமே இல்லையா? அவர்களோடு ஏன் நாம் நம்மை ஒப்பிட்டுக் கொள்ளக் கூடாது? அப்படி ஒப்பிட்டால் நாம் கெட்டவனாகி விடுவோமே! நமக்கு எப்பொழுதும், நம்மை நல்லவனாகக் காட்டிக் கொள்ளத்தான் விருப்பமே தவிர, நல்லவனாக ஆவதில் விருப்பம் இல்லை.

நேர்மை, அடக்கம், உதவும் தன்மை, விட்டுக் கொடுத்தல், சமூகச் சேவை என எத்தனையோ நற்பண்புகள் இருக்கின்றன, வாழ்வில் கடைப்பிடிக்க. ஆனால் நாமோ, நற்பண்புகளைக் கடைப்பிடிப்பதை விடக் கெட்ட பழக்கங்கள் இல்லாமல் இருந்தாலே போதும், நாம் நல்லவர்தான் என நினைத்துக் கொள்கிறோம். போதும் எனும் மனப்பான்மை நமக்கு இது ஒன்றில்தான் வாய்த்திருக்கிறது!

இந்த ஒன்றைத் தவிர, வாழ்வில் வேறு எதையாவது நாம் இப்படி ஒரு கண்ணோட்டத்தில் அணுகுகிறோமா என்றால், இல்லை!

இன்று ஆறு மாடி வீடு கட்டி ஆடி காரில் போனாலும், பத்து மாடி வீடும் பென்சு காருமாக வாழ்பவரோடுதான் நம்மை ஒப்பிட்டுக் கொள்கிறோம். இன்றைக்கு ஒரு மாநிலத்துக்கே முதல்வராக இருந்தாலும், நாளைக்குப் பிரதமர் நாற்காலியை அடைவது எப்படி என்றுதான் சிந்திக்கிறோம். அதுவும் வந்து விட்டால், அடுத்து ஒபாமா போல உலகளவிலான பெரும்புள்ளியாவது எப்பொழுது என்றுதான் ஏங்குகிறோம்.

இப்படிப் படிப்பு, பணம், பதவி, பட்டம், பெயர், புகழ் என எல்லாவற்றிலும், எப்பொழுதும் நம்மை விட மேலே இருப்பவர்களோடு மட்டுமே நம்மை ஒப்பிட்டுக் கொள்ளும் நாம் (Superior Comparison), இருப்பது போதாது இன்னும் இன்னும் வேண்டும் என விரும்பும் நாம், ‘பண்பு நலன் (Character) என வரும்பொழுது மட்டும், எப்பொழுதும் நம்மை விடக் கீழே இருப்பவர்களோடுதான் நம்மை ஒப்பிட்டுக் கொள்கிறோம் (Inferior Comparison); இருப்பதே போதும் எனத்தான் நினைக்கிறோம்.

அதனால்தான், கற்காலம் முதல் தற்காலம் வரையான இந்த நீண்ட நெடிய வரலாற்றில், மக்களின் சிந்தனைத் திறன், செயல் திறன், வாழ்க்கை முறை, வசதி வாய்ப்புக்கள் என எல்லாமே வளர்ந்திருந்தும் பண்பு நலனில் மட்டும் பெரிய முன்னேற்றம் இல்லை.Computer Era Barbarians 

அடுத்தவரைத் துன்புறுத்துவது, தனக்குப் பிடித்தது அடுத்தவர் பொருளாக இருந்தாலும் அடையத் துடிப்பது, விருப்பமில்லாத பெண்ணை வலுக்கட்டாயமாக அடைய முயல்வது, பிறர் உணர்வுகளைப் பற்றிக் கவலைப்படாமல் தனக்கு வேண்டியதை நிறைவேற்றிக் கொள்வது என விலங்குத்தனமான (விலங்குகள் மன்னிக்க!) எல்லாப் பண்புகளும் இன்றும் மனிதனிடம் அப்படியே இருக்கத்தான் செய்கின்றன. காரணம், எல்லாவற்றிலும் முன்னேற்றத்தை விரும்பும் நமக்கு இதில் மட்டும் முன்னேற விருப்பமே இல்லாதிருப்பதுதான்!

இந்த உளப்போக்குதான் நம் சமூக அவலங்கள் அனைத்துக்குமே காரணம் எனச் சொன்னால் அது மிகையாகாது.

எடுத்துக்காட்டாக, அரசியலாளர்கள் கோடிக்கணக்கில் ஊழல் செய்வதோடு ஒப்பிட்டுப் பார்த்துத், தாங்கள் லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்குவதில் ஒன்றும் தவறில்லை என நினைக்கிறார்கள் அரசு அலுவலர்கள். அரசியலாளர்களும் அரசு அலுவலர்களும் இப்படிக் கோடிகளிலும் இலட்சங்களிலும் குளிப்பதைப் பார்த்து, தாங்கள் செய்யும் சிறு சிறு வரி ஏய்ப்புக்களைத் தமக்குத் தாமே நியாயப்படுத்திக் கொள்கிறார்கள் குடிமக்கள். வரி கட்டாமல் அரசையே ஏமாற்றுகிற இந்த மக்களின் பணத்தில் தான் கொஞ்சம் எடுத்துக் கொள்வதில் என்ன தவறு என நினைத்து, மக்களின் பணத்தில் ஊழலைத் தொடர்கிறார்கள் அரசியலாளர்கள்! இப்படியே சுழற்சி முறையில் இது நடந்து கொண்டே இருக்கிறது!

நம்மை விடப் பண்பில் தாழ்ந்திருப்பவர்களோடு ஒப்பிட்டுப் பார்த்து நமது வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ளும் பழக்கம் கடைசியில் எங்கே போய் முடிந்திருக்கிறது பார்த்தீர்களா நண்பர்களே?! சமூக அவலங்கள் அனைத்திற்குமே மூல முதல் காரணங்களாக விளங்கும் ஊழல், லஞ்சம், கறுப்புப் பணம் ஆகிய மூன்றுக்குமே இந்தக் ‘கீழ்நோக்கிய ஒப்பீட்டு மனப்பான்மைதான் (Inferior Comparison) ஆணிவேராகத் திகழ்கிறது!

இந்த ஆராய்ச்சிகளையெல்லாம் கூட விடுங்கள். முதலில், மற்ற எல்லாவற்றிலும் முன்னேற்றத்தை விரும்பும் நாம், இந்த ஒன்றில் மட்டும் இப்படித் தலைகீழாகச் சிந்திப்பது எவ்வளவு இழிவான மனநிலை என்பதை நாம் நினைத்துப் பார்க்க வேண்டாமா? நம்மை விடத் தாழ்ந்தவரோடு ஒப்பிட்டு, அதன் மூலம் நம்மை நல்லவராகக் காட்டிக் கொள்வது என்பது எவ்வளவு கீழ்த்தரமான முயற்சி என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?

தனி மனிதர்கள் பலர் சேர்ந்ததுதான் இந்த உலகம். உலகில் ஒவ்வொரு தனிமனிதரும் நல்லவராகவும் ஒழுக்கமானவராகவும் இருந்து விட்டால் தனி ஒரு மனிதரின் சோற்றுப் பிரச்சினை முதல் உலக வெப்ப உயர்வு (Global warming) வரை எல்லாப் பிரச்சினைகளுமே தீர்ந்து விடும். அப்படி ஒரு சொர்க்க பூமியாக நாம் வாழும் இந்த உலகம் மலர வேண்டுமானால், நாம் ஒவ்வொருவரும் ‘பண்பு முன்னேற்றத்தில் (Character Development) அக்கறை செலுத்த வேண்டியது இன்றியமையாதது!

வாழ்வின் மற்ற எல்லாக் கூறுகளிலும், நம்மை விட மேலே இருப்பவர்களுடனே ஒப்பிட்டுக் கொள்வதைப் போலப் பண்பு நலனிலும் நம்மை விட மேம்பட்டவர்களோடு நம்மை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளும் பழக்கத்தை நாம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்! வாழ்வில் எல்லா வகைகளிலும் முன்னேறத் துடிக்கும் நாம், ஒழுக்கத்திலும் பண்பிலும் கூட அந்த முன்னேற்றத்தை விரும்ப வேண்டும்! பணம், வசதி, புகழ் போன்றவையெல்லாம் வாழ்வில் எவ்வளவு வந்தாலும் இன்னும் இன்னும் வேண்டும் என நினைப்பது போல், வாழும் முறையிலும் நினைக்க வேண்டும்; இவ்வளவு நற்பண்புளோடு வாழ்வது போதாது, இன்னும் இன்னும் நற்பண்புகளோடு வாழ வேண்டும் என்னும் தணியாத வேட்கை வேண்டும்!

முதன்மையான (No.1) பணக்காரராக ஆக வேண்டும் எனும் விருப்பம் தொழிலரசர்கள் எல்லாருக்கும் இருக்கிறது; முதன்மையான படைப்பாளியாக ஆக வேண்டும் எனும் விருப்பம் படைப்பாளிகள் அனைவருக்கும் இருக்கிறது; முதன்மையான சமூகத் தொண்டர் ஆக வேண்டும் எனும் விருப்பம் கூட எத்தனையோ பேருக்கு இருக்கிறது! ஆனால், முதன்மையான மனிதராக ஆக வேண்டும் எனும் விருப்பம் மட்டும் உலகில் நம் யாருக்குமே இல்லை!

அப்படி ஒரு விருப்பம் நம் ஒவ்வொருவருக்கும் வேண்டும்! எல்லாவற்றிலும் போட்டி இருப்பது போல் இதிலும் எப்பொழுது போட்டி ஏற்படுகிறதோ அப்பொழுதுதான் நாம் வாழும் உலகம் சொர்க்கமாகும்!

அப்படிப்பட்ட போட்டி மனப்பான்மையை உண்டாக்கக்கூடிய பண்பு முன்னேற்றத்தில் நாம் ஒவ்வொருவரும் அக்கறை செலுத்துவோம், இன்று முதலே... என்றென்றுமே...! 

படங்கள்: நன்றி http://www.strategicleadershipresources.com/, E-SPACE.

*********

இனியவர்களே! 
பதிவு பிடித்திருக்கிறதா? அப்படியானால் கீழ்க்காணும் வாக்குப்பட்டைகளில் ஒரு சொடுக்கு சொடுக்குங்களேன்! அப்படியே, மறவாமல் உங்கள் கருத்துக்களையும் வழங்குங்கள்! தமிழில் கருத்திட மென்பொருள் இல்லாதவர்களுக்காகக் கீழே காத்திருக்கிறது ‘தமிழ்ப் பலகை’. மற்றபடி, தனிப்பட்ட முறையில் ஏதேனும் சொல்ல விரும்பினால் e.bhu.gnaanapragaasan@gmail.com-க்குத் தட்டுங்கள் ஒரு மின்னஞ்சல்!
 

பதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...

Related Posts Plugin for WordPress, Blogger...

முகநூல் வழியே கருத்துரைக்க

0 comments:

கருத்துரையிடுக

தொடர...

மின்னஞ்சலில் தொடரப் பெட்டியில் மின்னஞ்சல் முகவரி தருக↓

அனுப்புநர்:FeedBurner

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

கூகுள்+ அகத்தில்...

முகநூல் அகத்தில்...

முகநூல் படிப்பகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

அ.தி.மு.க (6) அஞ்சலி (15) அணு உலை (2) அம்மணம் (1) அரசியல் (56) அழைப்பிதழ் (3) அன்புமணி (1) அனுபவம் (21) ஆம் ஆத்மி (1) இட ஒதுக்கீடு (3) இணையம் (16) இந்தியா (16) இராசபக்ச (2) இராமதாஸ் (1) இல்லுமினாட்டி (1) இனப்படுகொலை (10) இனம் (39) ஈழம் (31) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (2) ஊடகம் (21) ஐ.நா (4) கதை (1) கமல் (3) கருணாநிதி (9) கல்வி (6) கவிஞர் தாமரை (1) கவிதை (12) காவிரிப் பிரச்சினை (4) கீச்சுகள் (2) குழந்தைகள் (6) கையொப்பம் (2) கோட்பாடு (6) சசிகலா (1) சட்டம் (11) சமயம் (7) சமூகநீதி (4) சாதி (6) சித்திரக்கதைகள் (1) சிறுவர் இலக்கியம் (3) சீமான் (2) சுற்றுச்சூழல் (3) சுஜாதா (1) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (13) தமிழ் தேசியம் (3) தமிழ்நாடு (5) தமிழர் (23) தமிழர் பெருமை (10) தற்காப்புக் கலைகள் (1) தன்முன்னேற்றம் (8) தாலி (1) தி.மு.க (2) திரட்டிகள் (2) திராவிடம் (3) திரையுலகம் (8) தே.மு.தி.க (1) தேசியம் (11) தேர்தல் (5) தேர்தல் - 2016 (5) தொலைக்காட்சி (1) தொழில்நுட்பம் (6) தோழர் தியாகு (1) நட்பு (6) நீட் (3) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பதிவர் உதவிக்குறிப்புகள் (7) பதிவுலகம் (11) பா.ம.க (2) பா.ஜ.க (10) பார்ப்பனியம் (7) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (4) பீட்டா (1) புனைவுகள் (9) பெண்ணியம் (3) பெரியார் (2) பொங்கல் (1) பொதுவுடைமைக் கட்சி (1) போராட்டம் (4) ம.ந.கூ (2) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (9) மதுவிலக்கு (1) மருத்துவம் (4) மாற்றுத்திறனாளிகள் (1) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மேனகா காந்தி (1) மோடி (5) ரசனை (2) ரஜினி (2) ராகுல் (1) வரலாறு (14) வாழ்க்கைமுறை (7) வாழ்த்து (1) விடுதலை (3) விடுதலைப்புலிகள் (10) விருது (1) விஜய் (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (4) வை.கோ (3) ஜல்லிக்கட்டு (5) ஜெயலலிதா (14) Cauvery (1) Karnataka (1) Open Letter (1) Politics (1) Tamilnadu (1) Tamils (1)

அகமார்ந்தோர் பதிவேடு

முகரும் வலைப்பூக்கள்