அன்பு கமழ் நெஞ்சங்களே!
வட அமெரிக்காவின் மூத்த முதல் தமிழ்ச் சங்கமான நியூயார்க் தமிழ்ச் சங்கம் ‘வெள்ளிதோறும் இலக்கிய உலா’ எனும் நிகழ்ச்சியைத் தொடர்ச்சியாக நடத்தி வருகிறது. புகழ் பெற்ற தொல்லியல் ஆய்வாளரான ஆர்.பாலகிருட்டிணன், இ.ஆ.ப., அவர்கள் முதல் பார் போற்றும் எழுத்தாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சு.வெங்கடேசன் அவர்கள் வரை தமிழுலகின் சிறப்புக்குரிய பெருமக்கள் பலரும் உரையாற்றிய அந்த மேடையில் இந்தச் சிறுவனையும் அழைத்துப் பேச வைத்தது சங்கத்தினரின் பெருந்தன்மையே தவிர வேறில்லை. கடந்த 18.12.2021 அன்று நடந்த அந்த நிகழ்ச்சியில் ‘அன்றாட வாழ்வில் தமிழ்ப் பயன்பாடு’ எனும் தலைப்பில் நான் ஆற்றிய உரையை இதோ உங்கள் மேலான பார்வைக்கு முன்வைக்கிறேன், சங்கத்துக்கு என் பெயரை முன்மொழிந்த அதன் இலக்கியக் குழுத் தலைவரான நம் வலைப்பதிவர் ‘பரதேசி’ ஆல்பிரட் தியாகராசன் அவர்களுக்கும் சங்கத் தலைவர் ராம் மோகன் அவர்களுக்கும் மேனாள் சங்கத் தலைவர் அரங்கநாதன் உத்தமன் அவர்களுக்குமான நன்றியுடன்!
படம்: நன்றி நியூயார்க் தமிழ்ச் சங்கம்
பதிவுகளை உடனுக்குடன் பெறக் கீழ்க்காணும் பொத்தானைச் சொடுக்கி
வாட்சாப் தடத்தில் (Whatsapp Channel) இணையுங்கள்!!
வாழ்த்துகள் ஐயா...
பதிலளிநீக்குமிக்க நன்றி ஐயா!
நீக்குபொழிவினை முழுமையாகக் கேட்டேன். கேள்வி பதில் பகுதியைக் கேட்கவில்லை...நம் தாய்மொழியைவிட்டு நாம் அந்நியமாகச் சென்றுகொண்டிருப்பதை வேதனையோடு கூறினீர்கள். இப்போதைய உண்மை அதுதான். நம்மவர்கள் சற்றே சிறிது மாற்றிக்கொண்டு தாய்மொழியினை மதிக்கும் நிலை வரவேண்டும்.
பதிலளிநீக்குஐயா! கருத்தை வெளியிடக் காலம் தாழ்ந்ததற்குப் பொறுத்தருளக் கோருகிறேன். சிறியேனையும் மதித்து என் பொழிவைக் கேட்ட உங்கள் அன்புக்குத் தலை வணக்கம்! அன்றிரவு இது பற்றி நீங்கள் உங்கள் மேலான கருத்துக்களை என்னிடம் பேசியிலும் தெரிவித்துக் கொண்டிருந்தீர்கள். தவிர்க்க முடியாத என் அலுவல் காரணமாகப் பேச்சைப் பாதியிலேயே முடித்துக் கொள்ள வேண்டியதாகி விட்டது. பின்னர் நான் அழைக்கலாம் என்றிருந்தேன். நேரம் கிடைக்கவில்லை; நேரம் கிடைக்கையில் நினைவு வருவதில்லை. விரைவில் நான் அழைக்கிறேன் ஐயா!
நீக்கு