இனம் காக்க
உயிர் ஈந்த
பெருந்தகைகளே!
உங்களுக்கு
நினைவொளி ஏற்றுவதில்
பிறவிப் பயன் எய்தும்
எம் இரு கைகளே!
வாழ்வாங்கு
வாழ்ந்தவர்களைக்
கடவுளாகப்
போற்றுவதுதான்
தமிழர் மதம்!
எனவே
தியாகிகள் என்பதல்ல
தெய்வங்கள் என்பதே
உங்களுக்குத்
பொருத்தமான பதம்!
உலகத்தையே
திரட்டி வந்து
உங்களைத் தோற்கடித்து விட்டதாய்
இறுமாப்பு
கொண்டிருக்கிறது சிங்களம்
உலகமே
திரண்டு வந்ததால்தான்
வெல்ல இயன்றதென
சாவிலும் நீங்கள் படைத்த வரலாறு
அவர்களுக்குப் புரிவது எங்ஙனம்!
மக்களுக்காக
உயிர் வாழ்ந்தவர்கள்
உயிர் விட்டவர்கள்
இவர்கள்தாம்
தமிழ்க்
குடும்பங்களின்
குலத் தெய்வங்கள்
அப்படியானால்
ஒட்டுமொத்த
இனத்துக்காகவும்
உயிர் விட்ட நீங்கள்
எங்கள்
இனத் தெய்வங்கள் அல்லவா?...
இனி
கார்த்திகைதோறும்
ஒளிரும் விளக்குகள்
முருகனுக்காக
மட்டுமல்ல
உங்களுக்காக
என்று தனியாய்ச்
சொல்லவா?
(நான் நவம்பர்27.நெட் இணையத்தளத்தில் 17.11.2011 அன்று எழுதியது, சில மாற்றங்களுடன்)
படம்: நன்றி உதயன்.
பதிவுகளை உடனுக்குடன் பெறக் கீழ்க்காணும் பொத்தானைச் சொடுக்கி
வாட்சாப் தடத்தில் (Whatsapp Channel) இணையுங்கள்!!
அருமை ஐயா
பதிலளிநீக்குமிக்க நன்றி கிரேசு அவர்களே! உற்றவர்களுக்காகத் தங்கள் பழக்க வழக்கங்களைக் கூட மாற்றிக் கொள்ள முன்வராத இவ்வுலகில் மற்றவர்களுக்காகத் தங்கள் உயிரையே கொடுத்த மாவீரர்களின் பெருமை சொல்லித் தீர்வதில்லை. சொல்லிக் கொண்டே இருப்போம் கடைசித் தமிழர் இருக்கும் வரை!
நீக்குவெகுநாள் கழித்து உங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி!