அன்பார்ந்த நண்பர்களே, உலகெங்கும் வாழும் தமிழ் நெஞ்சங்களே, ‘அகச் சிவப்புத் தமிழ்’ அன்பர்களே அனைவருக்கும் நேச வணக்கம்!
இதுவரை நான் மொத்தம் நாற்பது பதிவுகள் வெளியிட்டுள்ளேன். இன்னும் எத்தனையோ பதிவுகளும் தொடர்களும் எழுதவும் திட்டமிட்டிருந்தேன். ஆனால், அதற்குள் இப்படி ஒரு பதிவு எழுத நேருமென்று நான் கனவு கூடக் காணவில்லை. இதோ, இத்துடன் உங்கள் ‘அகச் சிவப்புத் தமிழ்’ அழிக்கப்படுகிறது!
ஆம்! துளியும் ஈவிரக்கமின்றி இந்த வலைப்பூ மொத்தமாகக் கசக்கி எறியப்படுகிறது! இத்தனை காலமாக, இந்தச் சிறுவனின் எழுத்தையும் மதித்து மாதந்தோறும் 3500 முறைக்கும் மேல் வருகை புரிந்து, தொடங்கிய ஒரே ஆண்டில் இதை வெற்றிகரமான வலைப்பூவாக்கிய உங்கள் அனைவருக்கும் என் உள்ளம் கனிந்துருகும் நன்றிகள்!
பெற்ற குழந்தையைத் தன் கரங்களாலேயே கழுத்தை நெரித்துக் கொல்ல வேண்டிய கட்டாயத்துக்கு ஆளான தந்தையின் உளநிலையோடு உங்களிடமிருந்து விடைபெறுகிறேன்! எனக்கு ஏதாவது நன்மையோ ஆறுதலோ நீங்கள் அளிக்க விரும்பினால், கனிவு கூர்ந்து ஒருபொழுதும் இதற்கான காரணத்தைக் கேட்காதிருங்கள்! அதுவே போதும்!
இந்த ஒன்றரை ஆண்டுகளில் இந்த வலைப்பூவால் தமிழுக்கோ, தமிழர்களுக்கோ, இதர மக்களுக்கோ அணுவளவாவது நன்மை ஏதேனும் விளைந்திருக்குமானால் அதுவே என் வாழ்நாள் பெரும்பேறு எனக் கருதுவேன்!
நன்றி! வணக்கம்!
படம்: நன்றி http://www.tamilulagu.com
பதிவுகளை உடனுக்குடன் பெறக் கீழ்க்காணும் பொத்தானைச் சொடுக்கி
வாட்சாப் தடத்தில் (Whatsapp Channel) இணையுங்கள்!!
அப்பிடியெல்லாம் போக விடமுடியாது:(((( எனக்கு புரியல??????
பதிலளிநீக்குஎதுவா இருந்தாலும் அது கடந்து போகும், சகோ. திரும்பவாங்க. வருவீங்க................................
வருவேன் சகோதரி! கண்டிப்பாக வருவேன்!
நீக்கு//அப்பிடியெல்லாம் போக விடமுடியாது// - உங்களுக்குத்தான் என் மீது எவ்வளவு அன்பு!! :-(((
நீக்குஅய்யா,
பதிலளிநீக்குவணக்கம்.
என்னாயிற்றெனக் கேட்காமலிருக்க முடியவில்லை.
கேட்கவும் முடியவில்லை.
நிச்சயமாய்த் தங்களைத் தொடர்வேன்.
எனதாசிரியரின் இன்னொரு வடிவாகவே தங்களைக் கண்டேன்.
அவ்வளவு எளிதில் உங்களை விட்டுவிடப் போவதில்லை என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
எனது நம்பிக்கைகள் பொய்த்ததில்லை.
நன்றி
தங்கள் வார்த்தைகள் என்னை நெகிழச் செய்கின்றன. இந்த வலைப்பூவை அழித்தாலும் நான் இணையத்தில்தான் இருப்பேன். புதிதாக வேறு வலைப்பூத் தொடங்கும் எண்ணமும் உண்டு. பார்க்கலாம் ஐயா! என்றும் உங்களுடன் தொடர்பில் இருப்பேன்.
நீக்குஎன்றும் உங்கள் அனைவருடனும் தொடர்பில் இருப்பேன்.
நீக்குபதிவுக் குழந்தையை அழிக்க வேண்டாம். தோன்றும்போது எழுதுங்கள்.
பதிலளிநீக்குநான் என்ன எழுதுவதற்குச் சரக்கில்லாமலா அழிக்கிறேன்? புரியாமல் பேசுகிறீர்களே நண்பரே!
நீக்குவருத்தமான செய்தி ஐயா!
பதிலளிநீக்குநன்றி ஐயா!
நீக்குநெகிழச் செய்யும் மேற்கண்ட கருத்துக்களும், பதிவிட்ட இந்த 24 மணி நேரத்தில் 126க்கும் மேற்பட்ட வருகைகளும் என்னை எவ்வளவு பேர் விரும்புகிறீர்கள் என்பதைக் காட்டுகிறது. உங்களுடைய இந்த ஈடிணையில்லா அன்பைத் தொடர்ந்து துய்க்க முடியாத வேதனையையும் சுமந்து கொண்டு விடைபெறுகிறேன் நன்றி! வணக்கம்!
பதிலளிநீக்குUngalin maru varugai kandu miguntha magilzchi ayya.
பதிலளிநீக்குஅய்யா,
பதிலளிநீக்குதன்முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தனைப் போலத்தான் முயற்சி செய்து கொண்டே இருந்தேன்.
தளத்தையும் முடக்கி வைத்திருந்திருப்பீர்கள் போல.
தங்களின் பல கட்டுரைகளைப் படிக்கவில்லை.
சற்றுப் பொறுமையாய் நேரம் வாய்க்கும் போது படிக்கலாம் என்று இருந்தால் ஒரே அடியாகக் காணடித்து விட்டீர்கள்.
இனி அது முடியும் .
இப்பொழுது தோன்றும் மகிழ்ச்சிக்கு அளவில்லை.
நன்றி
உங்களுக்குத்தான் என் எழுத்துக்கள் மீது எவ்வளவு ஆவல்!! நெகிழ்கிறேன்! நன்றி ஐயா!
நீக்குஆம்! இதோ நான் மீண்டும் வந்து விட்டேன். ஒரு சிக்கல் காரணமாகத் தளத்தையே அழிக்க நேர்ந்தது. ஆனால் சற்றும் எதிர்பாராத விதமாய், பெருமலையாய் எழுந்த அந்தச் சிக்கல் பனிமலையாய் மறைந்து விட்டது. அதனால் மீண்டும் தளத்தைத் தொடங்கி விட்டேன். இது பற்றிய பதிவில் உங்களையும் குறிப்பிட்டுள்ளேன், பாருங்கள்!
நன்றி! வணக்கம்!